Followers

Friday, April 22, 2011

நாத்திகமா? பல தெய்வ வழிபாடா? ஏக இறைவனா?

சமஸ்கிரதமும் பண்டைய தமிழும் கலந்து வருவதால் படித்து புரிந்து கொள்ள சற்று சிரமமாக இருக்கும். எனது சொந்த பாணியில் எழுதினால் கருத்து சில இடங்களில் சிதைய வாய்ப்புண்டு என்பதால் கட்டுரையாளரின் மொழி பெயர்ப்பை அப்படியே தருகிறேன்.



சுருதி ஸூக்தி மாலா அல்லது

சதுர் வேத தாத்பர்ய ஸங்க்ரஹம்
பெயர் விளக்கம்

சுருதி வேதங்களின், ஸூக்தி நல்ல அழகிய, அதாவது உண்மைப் பொருளை விளக்கும் வாக்கியங்களாகிய மலர்களின், மாலா-மாலை. இஃது பரமேச்வரனுக்கு ஸ்துதி ரூபமாய் ஸம்ர்ப்பிக்கப்படும் வாடாமலர் மாலை. ஸாதாரண மலர்களில் மாலை கொஞ்சம் நேரம் அல்லது ஒரு நாளானபின் வாடிவிடும். இந்த ஸ்துதி மாலையின் மலர்கள் ஒரு நாளும் வாடா.

சுலோகம் 7

நாநீச்வரம் பவிதுமர்ஹதி விச்வமேதத்
பஹ்வீச்வரம் ச நிதரா மயதா ப்ரமாணம் |
தல்லோக வேத விதிதேச்வர ! வர்ஜனேன
கோயம் ப்ரம : கதிசிதீச்வரமன்ய மாஹு: ||
 
யஜமானனை வேலைக்காரன் நமஸ்கரிப்பது வழக்கம். அது தான் ஈச்வர ப்ருத்யந்நியாய மெனப்படும்.

ஈச்வரபதம் வேதபுராணங்களில் பரமேச்வரனையே குறிப்பதாக யோக ரூட பதமென்பது முன்சொல்லியபடி தீர்மானிக்கப்பட்டிருப்பதால், ப்ருத்ய ஸ்தானீயர்களானவர்களால் செய்யப்படும் நமஸ்காரம் பரமசிவனைத்தான் சேரும் என்பது ஈச்வரசப்தார்த்ததைக் கொண்டு நிச்சயிக்கப்பட்டது. அதனால் உலகுக்கு ஈச்வரன் கிடையாது என்ற நிரீச்வரவாதமும், பல கடவுள்கள் இருக்கிறார்கள் என்ற பஹ்வீச்வரவாதமும், சிவபெருமானைத்தவிர வேறு கடவுள் உண்டு என்ற அ ன்யேச்வரவாதமும், இம்மூன்றும் ஸரியல்லவென்பதை இந்த 7வது ச்லோகத்தால் கூறுகிறார்.

பதவுரை

ஏதத் இந்த, விச்வம் ப்ரபஞ்சம் (உலகம்) அனீச்வரம் முழு முதற்கடவுள் இல்லாமல், பவிதும் உண்டாவதற்கோ, இருப்பதற்கோ, நார்ஹதி தகுந்ததில்லை, பஹ்வீச்வரம்-ச - பல கடவுள்களை உடைத்தாயிருப்பதும், நிதராம் ந முற்றிலும் தகுந்ததில்லை. அயதா ப்ரமாணம் தத் பெரிய மாளிகை, கோபுரங்களில் பலபேர் கர்த்தாவாகக் காணப்படுவதால் ஒப்புக் கொள்ளலாம். ப்ரமாணமில்லாததால், உலகுக்குப் பல கர்த்தாக்களை அங்கீகரிக்க முடியாது. லோக வேத விதிதேச்வர வர்ஜனேன புராணங்களிலும், வேதங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ள ஈச்வரனான நீலகண்டன், சந்திரசேகரனைத் தள்ளிவிட்டு, கதி சித் சிலர், அன்யம் மற்று பிரம்மாவை, விஷ்ணுவை அனீச்வரனை ஈச்வரனல்லாதவர்களை, ஈச்வரம் ஜகத்கர்த்தாவாக, ஆஹு: - சொல்லுகிறார்கள், அவர்கள் மூடர்கள். கோயம் ப்ரம: - ஏன் இந்த மயக்கம்? வேத புராணங்கள் தெளிவாகத் தெரிவிக்கும் போதுகூட, ஏன் இந்த மயக்கம் அவர்களுக்கு?

விசேஷ வுரை

கன்று வளர்ச்சிக்காகப் பால் சுரப்பது போல, அசேதனமாகிய உஅலகம். ஜீவாதியர் சுகத்திற்காக சேதனன் இல்லாமல் உண்டாகவோ, சேஷ்டிக்கவோ முடியாது. பால் சேதனனாகிய பசுவின் உதவியால் சுரக்கிறது. அயஸ் காந்தமும் இரும்பை சேதனனால் சமீபத்தில் வைக்கப்பட்ட பிறகுதான் இழுக்கிறது. ஆதலால், அசேதன உலகுக்கு சேதனன் ஈச்வரன் இருந்தே ஆகவேண்டும். அவன் ஒருவன் ஸர்வ சக்தனாக ஒப்புக் கொள்ளப்படுவது லாகவ ந்யாயத்தால். ச்ருதியும்,

       தத் விஜிஞாஸஸ்வம்
       தஸ்மாத் ஸப்தார்ச்சிஷ; ஸமிதஸ் ஸப்தஜிஹ்வ:
       த்யாவா ப்ருதிவீ ஜனயந் தேவ ஏக:

என்ற விடங்களில், ஏகவசனத்தாலும், ஏகபதத்தாலும் ஓர் காரணம் என்கிறது. ச்வேதாச்வதரம், சிவரகஸ்யாகமம், வாயவீய ஸம்ஹிதை, லிங்கபுராணம்,காளிகா கண்டம், பத்ம புராணம், மகாபாரதம் சாந்திபர்வம் ஆனுசாஸனிகபர்வம், ஸ்காந்தம் முதலிய கிரந்தங்களில் ப்ரம்மாவை வலது பக்கத்திலிருந்தும், விஷ்ணுவை இடது பக்கத்திலிருந்தும், நான்கு வேதங்களையும் நான்கு முகங்களிலிருந்தும் படைத்துப் பரமேச்வரன் உலகத்தை நடத்துவதாகவும், யுக முடிவில் அழிப்பதாகவும் கூறப்பட்டிருப்பதால் கார்யகோடியில் சேர்ந்த பிரம்மா, விஷ்ணு தேவதைகள் உலகின் காரணமாகவோ, ஈச்வரனாகவோ இருக்கமுடியாதது பற்றி, அன்யேச்வர வாதமும், ப்ரமையால் ஏற்பட்டதுதான், என்பது தாத்பர்யம்.

        ஹிரண்ய கர்ப்ப: ஸமவர்த்ததாக்ரே
        அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்தஸ் ஸர்வம் ப்ரவர்த்ததே

என்ற ப்ரமாணங்கள் விச்வாமித்ரர் உலகில் சிலவற்றைப் படைத்தது போல், பிரம்மா விஷ்ணுக்களும் சிலவற்றைப் படைத்தவர் ஆவார்கள். அப்படைத்தலும் பரமேச்வரன் அருளால்தான் என்பது தாத்பர்யம். ஆனதால், மற்ற ப்ரமாணங்களோடு விரோதமாகதவை.

--------------------------------------------------------------------------

தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

அதாவது தனக்கு உவமை இல்லாத ஏக இறைவனை வணங்கினால்தான் மனக்கவலை இல்லாதிருக்க முடியும் என்று திருவள்ளுவர் கூறுகின்றார்..

அசலன், அனாதி, ஆதி, ஏகன்

இதோ இந்து மதத்தின் மூலத்தில் கடவுள் கொள்கை எப்படி என்று பாருங்கள்..

நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்சம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொணன்று சொல்லும் மந்திரமேதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவங்கள் கறிச்சுவை அறியுமோ?
ஓசை பெற்ற கல்லை உடைத்து உருக்கி நீர் செய்கிறீர்
வாசலில் பதித்த கல்லை மழுங்கவும் மிதிக்கிறீர்
பூசை பெற்ற கல்லிலே பூவும் நீரும் சாற்றுகிறீர்.
ஈசனுக்குகந்த கல்லு இரண்டு கல்லுமல்லவே..
(-
சிவ வாக்கிய சுவாமிகள்)
----------------------------------------------------------------------
ஒன்றே குலம் ஒருவனே தேவன் -திருமூலர்.

அசலன், அனாதி, ஆதி, ஏகன் என இந்துப் புராணம் இறைவனை ஏகத்துவப் பெயர்களால் அழைத்தாலும் எங்குமே அனேக மக்கள் சிலை வைத்து இறைவனுக்கு இணை கற்பித்து விடுகின்றனர். ஆளுக்கொரு தெய்வம் ஏற்படுத்தி கல்லையெல்லாம் கடவுளாக்கி பல பிரிவுகளாகப் பிரிந்து சிதறி விட்டனர்.


பூர்வீக வேதங்களில் இஸ்லாத்தைப் பற்றி..

அல்லோ ஜியேஷ்டம் பரமம் பூர்ணம் பிராமணம்
அல்லாம் அல்லா றஸூலா மஹாமத ரக பரஸ்ய
ஸ்பஸூரஸம் ஹாரினீ ஹூம் ஹரீம் அல்லோ றஸூல
மஹா மதரக பரஸ்ய அல்லோ அல்லா இல்லல்லெ தி இல்லல்லா
(-
அல்லோப நிஸத்.)

பொருள் : இறைவன் முதன்மையானவன். அவன் முழுமை பெற்றவன். அகிலம் அனைத்தும் அவனுக்கு உரியதாம். சிவனின் பதவியில் நிலை பெற்றிருக்கும் முஹம்மது இறையோனின் திருத்தூதராக இருக்கும்.

'அல்லோப நிஷத்' யாரால் எழுதப்பட்டது? என்ற விபரம் எனக்கு தெரியவில்லை. 'இஸ்லாம் கல்வி' இணைய தளத்திலிருந்து இதை எடுத்தேன். இது ஆதாரபூர்வமான நூல்தானா? என்ற விபரங்களை விபரம் தெரிந்தவர்கள் வசன எண்களோடு தெரிவித்தால் நலமாக இருக்கும்.

'ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு தூதர் உள்ளார்.'-குர்ஆன் 10:47

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்துக்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.'- குர்ஆன் 14:4

மேற்கண்ட வசனங்களின் மூலம் உலகில் உள்ள மூல மொழிகள் அனைத்துக்கும் இறைத் தூதர்களும், இறை வேதமும் வந்துள்ளதை தெரிந்து கொள்ளலாம்.

'இது முந்தய வேதங்களிலும், ஆப்ரஹாம், மோசேயுடைய வேதங்களிலும் உள்ளது'- குர்ஆன் 87:18,19

ஆப்ரஹாம், மோசே காலத்துக்கும் முன்பு உள்ள வேதங்கள் பழமையான இந்து மத வேதங்கள். அந்த வேதங்களிலும் குர்ஆனை ஒத்த வசனங்கள் உள்ளதை குர்ஆனே சுட்டிக் காட்டுகிறது.

9 comments:

வலையுகம் said...

சகோ சுவனப்பிரியன்

//அதாவது தனக்கு உவமை இல்லாத ஏக இறைவனை வணங்கினால்தான் மனக்கவலை இல்லாதிருக்க முடியும் என்று திருவள்ளுவர் கூறுகின்றார்..//

இவ்வளவு தெளிவாகசொல்லியிருக்கார

இப்போது தான் தெரிந்துக் கொண்டேன்

பகிர்வுக்கு நன்றி சகோ

suvanappiriyan said...

சகோ. ஹைதர் அலி!

ஒரு நண்பர் ஏக தெய்வ வணக்கத்துக்கு இந்து மதத்திலிருந்து ஆதாரம் தர முடியுமா? என்று போன பதிவில் கேட்டிருந்தார். அது சம்பந்தமாக இணையத்தில் தேடும் போதுதான் “அதனால் உலகுக்கு ஈச்வரன் கிடையாது என்ற நிரீச்வரவாதமும், பல கடவுள்கள் இருக்கிறார்கள் என்ற ‘பஹ்வீச்வர’ வாதமும், சிவபெருமானைத்தவிர வேறு கடவுள் உண்டு என்ற ‘அ ன்யேச்வர’ வாதமும், இம்மூன்றும் ஸரியல்லவென்பதை” என்ற வசனம் என் கண்ணில் பட்டது. அவருக்காகவே இந்த பதிவை இட்டேன்.

“திராவிடர்களின் கடவுளெனவும், சைவர்களின் தலைவனாகவும் வழிபடக்கூடிய கடவுள் வடிவமே சிவன்.”

“முதல்வனும் என்றும், மூவரும் அவனே என்றும், மூவரும் அறியாதவர் என்னும் மிக பெரிய தத்துவத்தை சைவ சித்தாந்தம் கூறுகிறது. சிவனை வழிபட்டோர்கள் உமா தேவி, உருத்திரன், திருமால், பிரம்மன், பிள்ளையார், முருகன், தேவர் முதல் இராவணன் வரை. எல்லோரும் அவன் அடிமை. சிவன் உருவாய் (நடராசன்), அருவுருவாய் (சிவலிங்கம்), அல்லுருவாய் நமக்குக் காட்சி அளிக்கிறார். சிவனுக்குப் பிறப்பு இறப்பு இல்லை. இருவினையும் இல்லை,” -விக்கி பீடியா

இங்கு சிவ பெருமான் என்பது ஏக இறைவனையே குறிக்கிறது.


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Asalamsmt said...

Thanks for your information and good luck brother.


regards
asalamone

suvanappiriyan said...

வாங்க அசலமோன்!

சௌகரியமா? பஹ்ரைனில் அனைவரும் நலமா? நீண்ட நாட்களாக இணைய பக்கம் காணவில்லையே!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

திருமூலர் அருளிய திருமந்திரம்

உபதேசம் 1-112
5.
சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே. 5

6.
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே. 6

7.
முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன்
பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே. 7

15.
ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந்துஆர்ந்துஇருந் தான்அருள்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே. 15

28.
இணங்கிநின் றான் எங்கும் ஆகிநின் றானும்
பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்
உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே. 28

31.
மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே. 31

36.
அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே. 36

39.
வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெரு மான்என்றுஇறைஞ்சியும்
ஆத்தம் செய் தீசன் அருள்பெற லாமே. 39

44.
போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே. 44

45.
விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவ னாமே. 45

இந்த பாடல்கள் எல்லாம் ஏக இறைவனையே போற்றுகின்றன. தற்போது புழக்கத்தில் இருக்கும் தெய்வங்களின் பெயர்களோ, சிலை வணக்கத்துக்கு ஆதரவாகவோ இந்த வாக்கியங்கள் அமையவில்லை என்பதை சிந்தித்துணரலாம்.

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சகோதரர் சுவனப்பிரியன்.,
பலமுறை உங்கள் ஆக்கங்கள் படித்திருக்கிறேன்., மீண்டும் ஒரு நற்பதிவு உங்களிடமிருந்து., ,
ஏனைய மதங்களிலும் ஓரிறைக்கொள்கை நிலைப்பாடு குறித்து மிகத்தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் அதுவும் மூலாதார நூல்களின் ஆதாரத்தோடு., இச்செய்தி சேகரிப்பிற்காக எத்தனை மெனக்கெட்டிருப்பீர்கள் என்பது கட்டுரையே படிக்கும் போதே தெரிகிறது., எனினும் மந்திரங்களை எல்லோரும் எளிதாக அறிய அவற்றை வேறு வண்ணத்தில் வித்தியாசப் படுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் ஜஸாகல்லாஹ் கைரன். தொடரட்டும் இச்சீரியப் பணி., அதற்கு அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக..!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ.குலாம்!

// எனினும் மந்திரங்களை எல்லோரும் எளிதாக அறிய அவற்றை வேறு வண்ணத்தில் வித்தியாசப் படுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் //

எல்லோருக்கும் எளிதில் விளங்கக் கூடிய மந்திரங்களையே உதாரணமாக கொடுத்துள்ளேன். இருந்தும் அடுத்த முறை விளக்கும் போது மேலதிக விளக்கங்களையும் தருகிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Anonymous said...

//'அல்லோப நிஷத்' யாரால் எழுதப்பட்டது? என்ற விபரம் எனக்கு தெரியவில்லை. //

அல்லோ ஜியேஸ்டம் பரமம் பூர்ணம் பிரஷ்மாண்டம் அல்லாம்
அல்லோ அல்லாம் ஆதல்லா பூக மேகம் அல்லா பூகணி வாதகம்
அல்லா பஞ்ஞென ஹுதா ஹிறுத்தவா
அல்லா சூரிய சந்திர ஸர்வ திவ்வியாம இந்திராய
பூர்வம் மாயா பரமந்த ரிஷா
அல்லா பித்ததிவ்விய அந்தரிஷம் விசுவரூபம்
இல்லாம் கபர இல்லாம் இல்லல்தீ இல்லல்லா
ஓம் அல்லா இல்லல்லா அனாகிஸ் வரூபா
அத்தர் வணா சியாமா ஹும் ஹிரிம் ஜனான பகன
ஸித்தான ஜலசாரன் அதிர்டம்
குருகுரு புடஸபரஸட ஸமஹாரனீ
ஹூம் ஹிரீம் அல்லா ரசூல மஹமத சுபரஸ்
அல்லா அல்லா இல்லல்லலேதி இல்லல்லா

- அல்லோப நிஷத் (அதர்வன வேதம்) 1:10

Ramprabu said...

அல்லோப நிஷத் இதனுடைய தமிழ் பொருள் கிடைக்குமா