சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்வி, "ராஜாத்தி அம்மாள் யார்?' அதற்கு முதல்வர் கருணாநிதி அளித்த சாதுர்யமான பதில், "என் மகள் கனிமொழியின் தாய்'. தர்மசங்கடமான ஒரு கேள்வியை எளிமையாக, சொல்வன்மையால் கருணாநிதி எதிர்கொண்ட அழகை எதிர்க்கட்சியினரும்கூட ரசிக்கவே செய்தார்கள்.
-தினமணி 01-04-2011
தினமணியில் மேற்கண்ட செய்தி தலையங்கமாக எடுத்தாளப்பட்டுள்ளது. நமது மாநிலத்தின் முதலமைச்சர்: ஒரு குடும்பத் தலைவன்: சகோ. கனிமொழியின் தந்தை: ராஜாத்தி அம்மாள் அவர்களின் கணவர்: பலகோடி தமிழ் மக்களின் தலைவராகப் போற்றப்படுபவர். இவ்வளவு சிறப்புக்குரிய ஒரு நபர் 'ராஜாத்தி அம்மாள் யார்?' என்ற கேள்விக்கு நெஞ்சை நிமிர்த்தி நேரிடையாக பதில் சொல்ல முடியவில்லை. காரணம் என்ன? இந்திய அரசலமைப்புச் சட்டம். 'ராஜாத்தி அம்மாள் என் மனைவி' எனறு சொல்லியிருந்தால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி குற்றவாளியாகிறார். ஏனெனில் ஒரு மனைவிக்கு மேல் திருமணம் செய்வது இந்து மத சட்டத்தின் படி குற்றம். இதைக் காரணமாக வைத்தே அவருடைய பதவியும் பறி போகலாம். அவர் மேல் வழக்கும் தொடரலாம். அதே நேரம் இரண்டாம் மனைவியோடு குடும்பம் நடத்துவதை அதே சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் மனைவி என்ற அந்தஸ்தை அதே சட்டம் அனுமதிக்காது.
கலைஞர் சொன்ன இந்த பதிலால் ராஜாத்தி அம்மாளும், சகோதரி கனிமொழியும் எந்த அளவு வேதனைப் பட்டிருப்பார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை. ஒரு முதலமைச்சர் குடும்பம் என்பதனால் மற்றவர்களின் ஏச்சுக்கு இவர்கள் ஆளாவதில்லை. அதே சமயம் சாதாரண குடும்பப் பெண்ணாக இருந்திருந்தால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக வேண்டியிருக்கும். சமூகத்தில் அங்கீகாரமும் கிடைக்காது. இந்த பெண்களுக்கு வாரிசுரிமையில் சொத்தில் பங்கும் கேட்க முடியாது.
இது போன்ற ஒரு சட்டம் சமூகத்தில் பல குடும்பங்களில் உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும் அல்லவா! எனக்கு தெரிந்து பல இந்து முக்கியஸ்தர்கள் ஒரு மனைவியை உலகுக்கு காட்டுவதற்கு வைத்துக் கொண்டு வேறு பெண்களை சின்ன வீடாக வைத்துக் கொள்கிறார்கள். அந்த இந்து நண்பர் முறைப்படி திருமணம் செய்ய நினைத்தாலும் இங்கு சட்டம் இடம் கொடுப்பதில்லை.
எனவே திருமணம் சம்பந்தமான 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற இந்த சட்டம் இங்கு மறைமுகமாக மீறப்படுவதைப் பார்க்கிறோம். சட்டமே 'நான் கண்டிப்பது போல் கண்டிக்கிறேன். நீ சில மந்திரங்களை மட்டும் சொல்லாமல் வேறொரு பெண்ணை சின்ன வீடாக வைத்துக் கொள். ஆனால் சட்டபூர்வ அந்தஸ்து மட்டும் கொடுத்து விடாதே' என்று இந்து நண்பர்களைப் பார்த்து சொல்கிறது. நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்ளுவது போன்ற இத்தகைய சட்டத்தினால் என்ன பயன்?
இந்துக்கள் கடவுளாக வணங்கும் முருகனுக்கு வள்ளி தெய்வானை என்று இரண்டு மனைவிகள் இல்லையா? ராமனின் தந்தை தசரதனுக்கு பல ஆயிரம் மனைவிகள் இருந்ததாக புராணங்கள் சொல்கிறதே! அதே போல்தான் கண்ணனும். எனவே பலதார மணம் என்பது நமது நாட்டிலும் காலகாலமாக இருந்து வந்திருக்கிறது என்பது இந்து புராணங்களின் மூலம் அறிந்து கொள்கிறோம்.
இனி இது சம்பந்தமாக இஸ்லாமிய சட்டங்கள் என்ன என்பதை இனி பார்ப்போம்.
'ஏசுவுக்கு பைபிளைக் கொடுத்தோம். அவரைப் பின்பற்றியோரின் உள்ளங்களில் இரக்கத்தையும் அன்பையும் ஏற்படுத்தினோம். தாமாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். அதைக் கூட பேண வேண்டிய விதத்தில் பேணவில்லை.'
-குர்ஆன் 57:27
எனவே இங்கு இறைவன் துறவறத்தைக் கண்டிக்கிறான். 'நான் கட்டளையிடாது நீங்களாகவே ஏன் துறவறத்தை மேற்கொண்டீர்கள்? அதில் கூட சரியாக நடந்து கொள்வதில்லை' என்கிறான் இறைவன். அமெரிக்காவில் புனித ஆலயங்களில் நடக்கும் பல சீர்கேடுகள் துறவறத்தாலேயே வருகிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.
'மனைவியரிடையே நீதியாக நடந்து கொள்ள நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்களால் இயலாது. எனவே முழுமையாக ஒரு பக்கமாக சாய்ந்து இன்னொருத்தியை அந்தரத்தில் தொங்க விடப்பட்டவளைப் போல் விட்டு விடாதீர்கள்.'
-குர்ஆன் 4:129
தேவை ஏற்பட்டு ஒரு மனைவிக்கு மேல் திருமணம் முடிக்க ஆசைப்பட்டால் இருவரிடமும் கூடியவரை நீதமாக நடந்து கொள்ள வேண்டும் என்று இறைவன் எச்சரிக்கிறான். இந்த பலதார மணம் என்பது ஒரு அனுமதிதான். தேவையுடையவர் இந்த சட்டத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த பலதார மணம் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப் பட்டதால் என்னென்ன நன்மைகள் மனித குலத்துக்கு கிடைக்கிறது என்பதை சகோ. பி ஜெய்னுல்லாபுதீனின் விளக்கத்திலிருந்து இனி காண்போம்.
வசனம் (4:3) நான்கு மனைவியர் வரை திருமணம் செய்ய ஆண்களுக்கு அனுமதி வழங்குகிறது. இது பெண் களுக்கு இழைக்கப்படும் அநீதி எனப் பரவலாகக் கருதப்படுகிறது. இது பற்றி சரியாக ஆய்வு செய்தால் இஸ்லாம் இவ்வாறு அனுமதித்திருப்பதன் நியாயத்தை உணர முடியும்.முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள் என்பதால் இது பெண்களுக்கு இழைக்கப் படும் அநீதி என்று கருதப்படுகிறது.
முதல் மனைவி பாதிக்கப்படுவாள் என்பது உண்மை தான்.
இன்னொரு பெண்ணை இரண்டா வதாக மணப்பதால் மட்டும் முதல் மனைவி பாதிக்கப்பட மாட்டாள். மணக்காமல் வைப்பாட்டியாக வைக்கும் போதும், கணவன் பல பெண்களிடம் விபச்சாரம் செய்யும் போதும் முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள். இன்னொரு பெண்ணை மணப்பதால் ஏற்படும் பாதிப்பை விட இது அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும். பல பெண்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் நோயைப் பெற்று முதல் மனைவிக்குப் பரிசளிக்கும் கூடுதலான பாதிப்பு இதனால் முதல் மனைவிக்கு ஏற்படுகிறது.
இரண்டாம் திருமணத்தை எதிர்ப்பவர் கள் வைப்பாட்டி வைப்பதையும், விபச்சாரத்தையும் சட்டப்பூர்வமாகத் தடுக்க வேண்டும். பலதார மணத்தை மறுக்கும் எந்த நாட்டிலும் (நமது நாடு உள்பட) விபச்சாரத்துக்கோ, வைப்பாட்டி வைத்துக் கொள்வதற்கோ தடை இல்லை. அது குற்றமாகவும் கருதப்படுவதில்லை.
பெண்ணுரிமை பாதிக்கிறது என்பது தான் பலதார மணத்தை எதிர்க்கக் காரணம் என்றால் சின்ன வீட்டையும், விபச்சாரத்தையும் சட்டப்பூர்வமான குற்றம் என்று அறிவிக்க வேண்டும்.
சின்ன வீடு வைத்துக் கொள்ளும் ஆண்களையும், விபச்சாரம் செய்யும் ஆண்களையும் தடுக்க முடியவில்லை. இன்னொருத்தியின் கணவன் என்று தெரிந்தும் அவனைக் கைக்குள் போடும் பெண்களையும் தடுக்க முடியவில்லை என்பதால் தான் ‘சட்டப்பூர்வமான மனைவி என்ற தகுதியை வழங்கி விட்டு குடும்பம் நடத்து’ என்று இஸ்லாம் கூறுகிறது.
திருமணம் ஆகாமல் பெண்கள் கர்ப்பமடைவதும், கைவிடப்படுவதும் மலேசிய இந்து சமுதாயத்தில் அதிகமாகி வருவதைக் கண்டு அங்குள்ள இந்துக் கள் பலதார மணத்தைத் தங்களுக்கும் அனுமதிக்குமாறு போராடி வருகின்றனர். (மலேசிய நண்பன் நாளிதழ் – 05.01.2002)
பலதார மணத்தை இஸ்லாம் அனுமதிப்பதற்குப் பல நியாயமான காரணங்கள் உள்ளன.
1. திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த பெண்கள் திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த ஆண்களை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளனர். ஏனெனில் பெண்கள் ஆண்களை விட சுமார் 10 வருடங்களுக்கு முன்பே திரு மணத்திற்குத் தயாராகி விடுகின்றனர்.
2. ஆண்களை விட பெண்களே மக்கள் தொகையில் அதிகமாக இருக்கிறார்கள்.
3. இறப்பு விகிதத்தில் ஆண்களை விட பெண்கள் குறைவாக இருக்கிறார்கள்.
4. போர்க் களங்களில் இளம் மனைவியரின் கணவர்கள் கணிசமான எண்ணிக்கையில் மாண்டு வருகின்றனர்.
5. பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு மண வாழ்வு கிடைக் காததால் விபச்சாரம் பெருகி வருகிறது.
6. பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்காக பெரும் தொகையை வரதட்சணையாகக் கொடுக்கும் அவலமும் அதிகரித்து வருகிறது.
7. வரதட்சணை கொடுக்க இயலாத வர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயிருடன் கொலை செய்வதும், கருவிலேயே சமாதி ஆக்குவதும் அன்றாட நிகழ்ச்சிகளாகி வருகின்றன.
8. திருமண வாழ்வைப் புறக்கணிக்கும் பிரம்மாச்சாரிகளும் ஆண்களின் பற்றாக் குறையை மேலும் அதிகரிக்கிறார்கள்.
9. பெற்றோரால் வரதட்சணை கொடுத்துத் திருமணம் செய்து தர முடியாது என்பதை உணரும் இளம் பெண்கள் தாமாகவே வாழ்வைத் தேடிக் கொள்வதாக எண்ணி ஏமாந்து கற்பிழந்து வருகின்றனர்.
10. தனக்குத் திருமணம் நடக்காது என்றெண்ணி தற்கொலை செய்யும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர்.
இது போன்ற நியாயமான காரணங்களின் அடிப்படையிலும், ஆண்கள் விபச்சாரத்தில் விழுவதைத் தடுப்பதற்காகவும் இஸ்லாம் பலதார மணத்தை அனுமதிக்கிறது.
இதனால் பல பெண்களுடன் தொடர்பு வைப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்பது தான் யதார்த்த நிலை.
ஏனெனில் திருமணம் எனும் போது பொறுப்புகளைச் சுமக்க வேண்டியிருப்ப தால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆண்கள் மட்டுமே பலதார மணத்தை நாடுவர். விபச்சாரத்திற்கோ, சின்ன வீடு வைத்துக் கொள்வதற்கோ எவ்விதப் பொறுப்பையும் சுமக்க வேண்டியதில்லை என்பதால் ஆண்கள் சீரழியும் நிலைமை தான் உருவாகும்.மேலும் இது போன்ற தகாத உறவுகள் மூலம் பாலியல் நோய்களைத் தானும் பெற்று, தனது மனைவிக்கும் பரிசளிக்கும் அவலங்களும் அதிகரிக்கும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக பலதார மணம் செய்யுமாறு இஸ்லாம் கட்டளை ஏதும் பிறப்பிக்கவில்லை. தேவையுள்ளவர்களுக்கு அனுமதி மட்டுமே வழங்கியுள்ளது.
இரண்டாம் தாரமாகவாவது ஒரு கணவன் கிடைத்தால் போதும் என்ற நிலையில் ஏராளமான பெண்கள் இருப்பது பலதார மணத்தின் நியாயத்தை உணர வைக்கிறது.
ஆணுக்கு அனுமதிப்பது போல் பெண்ணுக்கும் பலதார மணத்தை அனுமதிக்க வேண்டுமென்று சிலர் கூறுகின்றனர். இது ஏற்க முடியாத வாதமாகும்.மேலே நாம் சுட்டிக் காட்டிய காரணங்களில் எதுவும் பெண்களுக்குப் பொருந்தாது. பெண்களுக்குப் பலதார மணத்தை அனுமதித்தால் மேலே சொன்ன தீய விளைவுகள் மேலும் அதிகரிக்கும். எனவே, பெண்களுக்குப் பல கணவர்களை அனுமதிக்க நியாயமான ஒரு காரணமும் இல்லை.
மாறாகப் பெண்ணுக்கும் இந்த அனுமதி வேண்டும் என்போரின் விருப்பப்படி அனுமதிப்பதனால் விபரீ தங்களும், கேடுகளும் தான் ஏற்படும் என்பதையும் நாம் உணர வேண்டும்.
ஒரு ஆண் நூறு பெண்களுடன் ஒரு ஆண்டு தனித்து விடப்பட்டால் அந்த நூறு பெண்களும் நூறு குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும்! ஒரு பெண் நூறு ஆண்களுடன் தனித்து விடப்பட்டால் அவளால் நூறு குழந்தைகளைப் பெற முடியுமா?
ஒரு ஆணுக்குப் பல பெண்கள் மூலம் பத்துப் பிள்ளைகள் பிறந்தால் அந்தப் பத்துப் பிள்ளைகளின் தந்தை யார்? தாய் யார்? என்பதை அறிந்து கொள்ள முடியும். பல ஆண்களிடம் உறவு வைத்துள்ள ஒரு பெண் பெற்றெடுக்கும் ஒரே ஒரு பிள்ளைக்குத் தாய் யார்? என்பது தான் தெரியுமே தவிர, தந்தை யார்? என்பதை அறிந்து கொள்ள முடியாது.இந்த நிலையை விட அந்தக் குழந்தைக்கு வேறு கேவலம் எதுவுமிருக்க முடியாது. இது போல் உருவாகக் கூடிய, தகப்பன் யார் என்று தெரியாத சந்ததிகள் உள்ளம் நொறுங்கி மனோ வியாதிக்கு ஆளாவார்கள்.
ஒரு ஆண் நான்கு மனைவிகள் மூலம் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அந்த நான்கு குழந்தை களையும் பராமரிக்கும் பொறுப்பை அவன் தலையில் சுமத்தி விடலாம். அந்தக் குழந்தைகளுக்கு ஆகும் செலவுகளைக் கொடுக்குமாறு அவனை நிர்பந்திக்க முடியும். ஆனால் ஒரு பெண் நான்கு ஆண்களுடன் கூடிப் பெற்றெடுக்கும் ஒரு குழந்தைக்கு இந்த உத்திரவாதம் அளிக்க முடியுமா? ஒவ்வொருவனும் அக்குழந்தை தன்னுடையதில்லை என்று மறுத்து விட்டால் எந்தச் சான்றின் அடிப்படையில் அவன் மீது பொறுப்பைச் சுமத்த முடியும்? அதற்குரிய செலவினங்களைக் கொடுக்கு மாறு அவனை எப்படி நிர்பந்தப்படுத்த முடியும்? வளரப் போகும் அந்தக் குழந்தையின் எதிர்காலம் இருள் நிறைந்ததாக அல்லவா ஆகும்?
அது போல் ஒவ்வொருவனும் அந்தக் குழந்தை தன்னுடையது என்று உரிமை கொண்டாடினால் அந்தக் குழந்தையைக் கூறு போட்டு ஆளுக்குக் கொஞ்சம் பிரித்துக் கொடுக்க முடியுமா?
ஒருவனுக்குப் பல மனைவியர் மூலம் பல நூறு குழந்தைகள் இருந்தாலும் அவன் இறந்த பின் பல நூறு குழந்தைகளுக்கும் தந்தை இன்னார் என்று தெரிவதால் வாரிசுகள் என்ற அடிப்படையில் அவனது சொத்தில் பங்கு கேட்க முடியும்.
பல ஆண்களை மணந்தவளின் கணவர்களில் எவர் இறந்தாலும், அவளது பிள்ளைகள் தந்தையின் சொத்து என்று உரிமை கொண்டாட வழியில்லாது போகும்.
இஸ்லாம் வழங்கியுள்ள இந்த அனுமதியை சில முஸ்லிம்கள் முறைகேடாகப் பயன்படுத்துவதையும் நாம் இங்கே சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
இரண்டாம் திருமணம் செய்யக் கூடியவர்கள், முதல் மனைவிக்கு அதைத் தெரிவிக்காமல் இரகசியமாகத் திருமணம் செய்கின்றனர். முதல் மனைவிக்கு இது பற்றித் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் இவர்கள் கருதுகின்றனர்.
உண்மையில் முதல் மனைவியின் உரிமை இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் அவளுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் கண்டிப்பாக உள்ளது.
ஒரு மனைவியுடன் ஒருவன் வாழும் போது, அவனது எல்லா நாட்களையும் அவளுக்கே கொடுக்கிறான். அவளுக்கே தனது பொருளாதாரத்தையும் செலவு செய்கிறான். இந்த நிலையில் அவன் மற்றொரு திருமணம் செய்தால் முதல் மனைவிக்குக் கிடைத்து வந்த நாட்களில் பாதி நாட்கள் குறைந்து விடுகின்றன. பொருளாதாரத்திலும் பாதி பறி போகிறது.
இரண்டாம் திருமணத்தின் மூலம் முதல் மனைவி பாதிக்கப்படும் போது, அவளுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் தானாகவே ஏற்பட்டு விடுகின்றது.
‘முழு நாட்களையும் எனக்கே தருவீர்கள் என்பதற்காகத் தான் உங்களை நான் மணந்து கொண்டேன்; அதில் பாதி நாட்கள் எனக்குக் கிடைக்காது என்றால், அத்தகைய வாழ்க்கை எனக்குத் தேவையில்லை’ என்று கூட அவள் நினைக்கலாம்.
இரண்டாம் திருமணத்தைப் பற்றி அவளுக்குத் தெரிவிக்கப்படும் போது தான் மேற்கண்ட உரிமையை அவள் பெற முடியும்.
முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்தால் இரண்டாம் மனைவியும் பாதிக்கப்படு கிறாள். ஏனெனில் முதல் மனைவிக்குத் தெரியாமல் திருமணம் செய்பவர்கள், அவளுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக சரிசமமாக இரண்டு மனைவிகளிடமும் நாட்களைக் கழிக்காமல் அவ்வப்போது ஏதேனும் பொய்க் காரணங்களைக் கூறிக் கொண்டு இரண்டாம் மனைவியிடம் செல்கின்றனர்.
இதனால் இரண்டாம் மனைவிக்கு, அவளுக்குச் சேர வேண்டிய உரிமையை அவனால் கொடுக்க முடியாத நிலை ஏற்படுகின்றது.
முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்திருக்கும் நிலையில் அவன் மரணித்து விட்டால் அப்போதும் அவனது மனைவியர் பாதிக்கப்படுகின்றனர்.
கணவனின் சொத்துக்கள் தனக்கும், தனது பிள்ளைகளுக்கும் மட்டுமே உரியது என்று முதல் மனைவி நினைத்துக் கொண்டிருப்பாள். அவன் மரணித்தவுடன் இரண்டாம் மனைவியும் அவளது பிள்ளைகளும் சொத்தில் பங்கு கேட்டு வந்தால் அதனாலும் முதல் மனைவியும் அவளது பிள்ளைகளும் ஏமாற்றப்படுகிறார்கள்.
இரண்டாம் திருமணம் பற்றி முதல் மனைவியிடம் தெரிவிக்கும் போது, அவள் ஏற்றுக் கொண்டால் பிரச்சனை இல்லை. இரண்டாம் திருமணம் செய்தால் உன்னோடு வாழ மாட்டேன்’ என்ற முடிவை அவள் எடுத்தால் அதற்கான உரிமை அவளுக்கு உண்டு.
தனது கணவன் தன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்யக் கூடாது என்று ஒரு பெண் வலியுறுத்தினால் ஆண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமையை அவள் மறுத்தவளாக மாட்டாள்.
-நன்றி பி.ஜெய்னுல்லாபுதீன்.
அலீ (ரலி) அவர்களுக்குத் தமது புதல்வியை மணம் முடித்துக் கொடுக்க ஹிஷாம் பின் முகீரா என்பவர் அனுமதி கேட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அனுமதிக்க மாட்டேன்; மீண்டும் அனுமதிக்க மாட்டேன்; மீண்டும் அனுமதிக்க மாட்டேன். வேண்டுமானால் அலீ, எனது மகளை விவாகரத்துச் செய்து விட்டு, அவரது மகளை மணந்து கொள்ளட்டும்’ எனக் கூறினார்கள். (நூல்: புகாரி 5230)
மேலே எடுத்து வைத்த அத்தனை வாதங்களும் பலதார மணத்தின் அவசியத்தை உணர்த்துகின்றன. இந்த சட்டத்தை குறை கூறுபவர்கள் சின்ன வீடு, விபசாரம், பால்வினை நோய், சின்ன வீட்டில் பிறக்கும் குழந்தைகளின் மன பாதிப்பு, முதல் மனைவிக்கு குழந்தை பாக்கியம் இல்லாமை போன்ற சமூக சிக்கல்களுக்கு என்ன தீர்வை வைத்திருக்கிறார்கள் என்றும் சொல்லக் கடமைபட்டிருக்கிறார்கள்.
11 comments:
maashaa Allah bhai,
arumaiyaana vilakkangal. arumaiyaana nadaiyil pottil arainthaar pola vilakki irukkireergal. alhamthulillaah. barakallaahu fee bhai.
நம் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!
அருமையான பதிவு
நன்றி சகோ
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,
நெஞ்சில் வெறுப்பை வைத்திருப்பவர்களுக்கு என்ன எழுதினாலும்
செவிடன் காதில் ஊதப்படும் சங்குதான். எனினும் எழுதத்தான்
வேண்டும், காரணம் அறிவைத் தேடி அலைபவர்களும் இவ்
வலையுலகில் வசிக்கத்தான் செய்கிறார்கள். எனவே பதிவுகள்
அவர்களை முன்னோக்கியே இருக்கட்டும். பதிவுக்கு நன்றி.
//arumaiyaana vilakkangal. arumaiyaana nadaiyil pottil arainthaar pola vilakki irukkireergal. alhamthulillaah. barakallaahu fee bhai. //
வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி சகோ அன்னு.
//அருமையான பதிவு
நன்றி சகோ//
வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி சகோ ஹைதர் அலி.
வஅலைக்கும் சலாம்!
//அறிவைத் தேடி அலைபவர்களும் இவ்
வலையுலகில் வசிக்கத்தான் செய்கிறார்கள். எனவே பதிவுகள்
அவர்களை முன்னோக்கியே இருக்கட்டும். பதிவுக்கு நன்றி.//
ஆலோசனைக்கு நன்றி அரபுத் தமிழன்.
//அப்புறம் ஈகோ பெரிய பிரச்சினையா உருவெடுத்துக் கொண்டிருக்கு சமுதாயத்திலே. நீ என்ன சொல்லறது நான் என்ன கேட்கிறது என்பது பிரச்சினைகளை கிளரி விடுறதைத்தவிர வேறு ஒண்ணும் உருப்படியா செய்யாது.
முன்னே பெண் அடங்கிப்போவாள் என்று பாரம்பரியம் இருந்த போது பிரச்சினை ஒரு மாதிரியான தீர்வு இருந்தது. சரியான மாற்று இல்லாமல் இதை பெண் உரிமைன்னு சொல்லி ஒழிச்சாச்சு.//
'சிலரை மற்றும் சிலரை விட இறைவன் சிறப்பித்திருப்பதாலும் ஆண்கள் தமது பொருட்களை குடும்பத்திற்கு செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.'
குர்ஆன்: 4:34
ஏதோ ஒரு தரப்பு விட்டுக் கொடுத்தால்தான் சுமூக தீர்வு கிடைக்கும். பெண் விடுதலை என்று வேலைக்குச் செல்லும் பெண்கள் குடும்பம் குழந்தைகளையும் பராமரித்து தங்களுக்குத் தாங்களே சிரமங்களை அதிகப்படுத்திக் கொண்டார்கள். இதனால் குடும்பத்தில் பல பிரச்னைகள். குடும்ப வறுமையை காரணமாக வைத்து பெண்மைக்கு பாதுகாப்பும் கிடைக்கும் பட்சத்தில் அந்த பெண்கள் வேலைக்குச் செல்வதில் தவறில்லை. ஆனால் ஒட்டு மொத்த பெண்களும் வேலைக்கு கிளம்பினால் குடும்ப கட்டுக் கோப்பு கேள்விக் குறியாகும் அல்லவா? மேலை நாடுகள் இதற்கு சிறந்த உதாரணம்.
//முன்னே கடவுள் நம்பிக்கை மூட நம்பிக்கை; பகுத்தறிவுதான் சரின்னு சொல்லி சமுதாயத்தை சீர் குலைச்சாப்போலத்தான் இதுவும். கடவுள் நம்பிக்கையும் இல்லை; பகுத்தறிவும் இல்லை. தவிக்கிறோம்.//
இரண்டையும் ஒன்றாக கொண்டு செல்லும் முஸ்லிம்களை மறந்து விட்டீர்களே!
சார்வாகன்!
//நான்கு(நான்காவது) திருமணம் செய்த ஆணோ, பெண்ணோ அது எப்படி சிறந்தது என்று பதிவு எழுதினால் விவாதிக்க நலமாக இருக்கும்.ஒரு திருமணம் செய்த இஸ்லாமிய நண்பர்கள் பல திருமணத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பது ஒரு நகை முரண்.//
//ஆனால் சுவனப் பிரியன் ,பி.ஜே உட்பட 99.9% தமிழ் இஸ்லாமியர்கள் ஒரு தாரம் உடையவர்கள் ஏன் இப்படி?.99.9 % பேர் இஸ்லாமை விட ந்ன்னெறி கொண்டவர்கள் அப்ப்டித்தானே!!!!.0.1% ஆட்களுக்காக மொத்த சமுதாயமும் ஏன் பேச வேண்டும்?
அதனையும் கண்கானித்து ஒழுங்கு செய்தால்தானே நல்லது.//
சுவாரஸ்யமான கேள்வி!
நான் திருமணம் முடித்த நாளிலிருந்து இன்று வரை எனக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து அதற்கு காரணம் என் மனைவி என்று மருத்துவர் சொல்ல வேண்டும். இரண்டாவதாக என் மனைவி தாம்பத்திய உறவுக்கு உடல் ரீதியாக தகுதியில்லாதவராக இருக்க வேண்டும்.
கல்யாணம் ஆன முதல் வருடமே குழந்தை பிறந்தது. தாம்பத்திய உறவிலும் எந்த சிக்கலும் இல்லை. திருப்தியான வேலை. இறைநம்பிக்கையோடு கூடிய மனைவி மக்கள் சொந்தபந்தங்கள் என்று சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் நான் இரண்டாம் திருமணம் மூன்றாம் திருமணத்தைப் பற்றி சிந்திப்பது தவறல்லவா!
மேலே சொன்ன குறைகள் ஏதும் என் மனைவியிடத்தில் இருந்தால் நான் கண்டிப்பாக இரண்டாம் திருமணம் செய்திருப்பேன். ஏனெனில் எனது மார்க்கம் இதற்கு அனுமதி அளிக்கிறது. இதை எல்லாம் விளக்கிச் சொல்லி என் மனைவியின் சம்மதத்தோடு நான் இரண்டாம் திருமணம் முடித்திருப்பேன். அதற்க்கெல்லாம் அவசியம் இல்லாமல் செய்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்.
மேலும் குறை என்னிடம் இருப்பதாக மருத்துவர் சொன்னால் அந்த நிமிடமே என் மனைவியை பிரிந்து அவருக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைக்க முயற்ச்சிப்பேன். என்னால் அந்த பெண்ணின் வாழ்வு பாழ்படக் கூடாதல்லவா!
'கல்லானாலும் கணவன்: புல்லானாலும் புருஷன்', 'கணவனே கண் கண்ட தெய்வம்' என்பதெல்லாம் இன்று காணாமல் போய் விட்டது.
மேலும் பலதார மணம் என்பது தேவையுடையவர்களுக்கு உள்ள அனுமதிதானேயொழிய கட்டாய கடமை கிடையாது.
//ஷாரியாவில் உள்ள சில இக்காலத்திற்கு ஒவ்வாத விஷயங்களை சுட்டிக் காட்டி மாற்றுங்கள் என்றே கேட்கிறோம்.//
ஷாரியாவில் வேண்டுமானால் குர்ஆனுக்கு மாற்றமில்லாமல் சில திருத்தங்கள் கொண்டு வரலாம். ஆனால் பலதார மண அனுமதியை தடை செய்ய முடியாது. ஏனெனில் அது குர்ஆனில் உள்ள சட்டம். இறை சட்டத்தை மனிதர்கள் எப்படி மாற்ற முடியும்? விருப்பமில்லாதவர்கள் தங்கள் பெண்களை இரண்டாம் தாரமாகவோ மூன்றாம் தாரமாகவோ திருமணம் முடித்து கொடுக்காமல் தடை செய்து கொள்ளலாம். மேலும் இன்றைய விலைவாசியில் ஒரு மனைவியோடு வாழ்வதே பெரும்பாடாக இருக்கிறது. இதில் மற்ற திருமணங்களை பற்றி சிந்திக்க நேரம் ஏது?
நமது தமிழக முதல்வர் இரண்டு மனைவியோடு சந்தோஷமாக இல்லையா? நமது முன்னால் முதல்வர் இன்றும் செல்வியாக இருந்து கொண்டிருப்பதும் வருத்தப்பட வேண்டிய விஷயமல்லவா! திருமணம் முடிக்காமல் அந்தரத்தில் விட்டுச் சென்றது எம்.ஜி.ஆர் செய்த தவறல்லவா! இவை எல்லாம் இந்திய சட்டத்தில் உள்ள குளறுபடிகளே!
யாசிர்!
முதல்ல இது போல் முஸ்லிம் பெயர்களில் ஒளிந்து கொண்டு பின்னூட்டம் இடுவதை தவிருங்கண்ணா! ஏன்னா... நீங்க யாருன்னு எல்லோருக்கும் தெரியும்.
//திருவள்ளுவர் தன் குறலை கடவுள் தந்ததாகக் கூறியிருந்தால் அதுவும் இன்று புனித நூலாக்கப்பட்டிருக்கும்,அவர் உண்மையைச் சொன்னதினால் சற்று குறைவாக மதிப்பிட வைத்துவிட்டது. புளுகினால் தான் புனிதமாகும் என்று அன்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.//
'குறல்' இல்லை 'குறள்'
அவர் புளுகினாலும் இங்கு நம்புவதற்கு யாரும் தயாரில்லை. ஏனெனில் 'திங்களை பாம்பு கொண்டற்று' , 'பெய்யென பெய்யும் மழை' 'விலங்குகள் கை கூப்பி தொழும்' என்று எண்ணற்ற இடங்களில் அறிவியலுக்கு முரண்படுகிறார் வள்ளுவர். இது பற்றி விரிவாக எனது பழைய பதிவுகளை பார்வையிடவும்.
ஆனால் ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றோடு ஒப்பிட முடியாத அளவுக்கு சிறந்த தரத்தில் வைத்து பார்க்கப்பட வேண்டிய தமிழரின் நூல் திருக்குறள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இரண்டு வரிகளில் சொல்ல வந்த கருத்தை அழகாக சொல்வதும், மொழி ஆற்றலும் திருக்குறளில் மிகைத்திருக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இதுவே இறை வேதத்துக்கு தகுதியாகி விட முடியாது.
சார்வாஹன்!
//இஸ்லாமில் உள்ள நடைமுறைகளை பிற மதத்தினர்,இறை மறுப்பாளர் விமர்சனம் செய்வது குறித்து உங்கள் கருத்து என்ன?//
தாராளமாக விமரிசிக்கலாம். ஆனால் விமர்சனம் ஆக்கபூர்வமாக இருக்கவேண்டும். கேள்வி கேட்டால்தானே விளக்கம் பிறக்கும். முகமது நபியை அவரது தோழர்கள் எந்த நேரமும் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்ததால்தான் குர்ஆனுக்கு பல விளக்கங்கள் கிடைத்தது. பல யூதர்களும் கிறித்தவர்களும் சிலை வணங்கிகளும் முகமது நபியுடன் பல கேள்விகள் கேட்டுள்ளனர்.
நானும் எங்கள் ஊர் முல்லாவிடம் தர்ஹா, மற்றும் மூடப்பழக்கங்கள் சம்பந்தமாக சில கேள்விகள் சில வருடங்களுக்கு முன்பு கேட்கப் போக 'நீ பள்ளிக்கே வராதே!' என்று கோபத்தில் கத்தினார். சில வருடங்களில் அவரே அந்த பள்ளியில் நுழைய முடியாத நிலை. இன்று நான் அந்த பள்ளியில் ஐந்து நேரமும் சென்று தொழுது வருகிறேன்.:-)
'விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக!'
-குர்ஆன் 16:125
//ஏனெனில் 'திங்களை பாம்பு கொண்டற்று' , 'பெய்யென பெய்யும் மழை' 'விலங்குகள் கை கூப்பி தொழும்' என்று எண்ணற்ற இடங்களில் அறிவியலுக்கு முரண்படுகிறார் வள்ளுவர்.//
திரு. சுவனப்பிரியன், முஹம்மது அவர்கள் புராக் என்ற வித்தியாசமான விலங்கின் மீது சவாரி செய்து விண்ணிற்கு சென்று அல்லாவிடம் உலக நிலவரங்களை பேசிவிட்டு வந்தாரமே. அந்த நிகழ்ச்சி எப்படி அறிவியலுக்கு ஒத்து வருகிறது என்று விளக்க முடியுமா. முகமது எந்த பாதை வழியாக விண்ணிற்கு சென்றார் என்பது பற்றி குரானில் எங்காவது இருக்கிறதா. அந்த பாதை பற்றி குரானில் இருந்தால் ராக்கெட்டில் போயாவது மக்களும் கடவுளை பார்த்து பேசிவிட்டு வர வசதியாக இருக்குமே. மேலும் தினமும் நினைத்த நேரத்தில் எல்லாம் முகமதுவிடம் அல்லா வந்து பேசிய நிகழ்வை அறிவியல் பூர்வமாக விளக்கினால் நாங்கள் புரிந்து கொள்வோம்.
M. Jaya Prakash
Kanyakumari
Post a Comment