தருமி!
//உலகம் முட்டை மாதிரி இருக்கிறது - இதைப் பற்றி ஒன்றும் சுவனப்பிரியன் சொல்லவே இல்லையே!//
'இதன் பின்னர் பூமியை விரித்தான்'
-குர்ஆன் 79:30
'பூமியை விரித்தான்' என்ற குர்ஆனின் வசனத்தில் வரும் 'தஹாஹா' என்ற சொல் 'தஹ்வு' என்ற சொல்லின் மூலத்திலிருந்து வந்தது. இங்கு 'விரித்தல்' என்ற ரீதியில் பொருள் கொள்வதுதான் அரபு இலக்கணத்தின் படி சரியாகும். ஜாகிர் நாயக்கும் இதை ஒத்துக் கொள்கிறார்.
மேலதிக விபரமாக தனது சொந்த விளக்கமாகத்தான் 'முட்டை' வடிவிலானது என்ற கருத்தை வைக்கிறார் ஜாகிர் நாயக். இவர் ஒரு டாக்டர். அறிவியல் அறிஞர் கிடையாது. எனவே இவரது கருத்தில் தவறும் இருக்கலாம்.
'சார்பியல்' தத்துவத்தை சொன்னபோது ஐன்ஸ்டீனே தவறிழைக்கவில்லையா? 1923 இல் ஐன்ஸ்டைன் மாறாத பிரபஞ்சத்தைப் பற்றி எழுதியதைத் 'தான் செய்த மாபெரும் தவறு ' என்று ஒப்புக் கொண்டார்! அலெக்ஸாண்டர் ஃபிரைட்மன் கருத்தை ஏற்றுக் கொண்டு விரியும் பிரபஞ்சக் கோட்பாடைப் பிரதி பலிக்க, ஐன்ஸ்டைன் தன் சமன்பாடுகளைத் திருத்தி எழுதினார்!
ஆக.. ஐன்ஸ்டீனுக்குக் கூட ஆராய்ச்சியில் தவறு மனிதன் என்ற முறையில் வரலாம். ஆனால் இறை வேதத்தில் வராது.
'பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை கோள்களும் நமது பூமி உட்பட உப்பி விரிகிறது. அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு பொருள் என்று கருதக் கூடாது. அது சோப்புக் குமிழி போல உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம்'
-விஞ்ஞானி ஹப்பிள்.
இதைத்தான் இறைவனும் 'பூமியை விரித்தான்' அதாவது பூமியை விரிவாக்கம் செய்தான் என்று குர்ஆன் கூறுகிறது. விஞ்ஞானி ஹப்பிளின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதை பார்க்கவில்லையா திரு தருமி!
'பிரபஞ்சம் இருவித முடிவுகளில் சிதைந்து போகலாம்! ஒன்று குமிழிபோல் உப்பிக் கொண்டு அது தொடர்ந்து விரியலாம்! அல்லது பெரும் வெடிப்பில் [Big Bang] தோன்றிய பிரபஞ்சம், ஒரு பெரும் நெருக்கலில் [Big Crunch] மறுபடியும் நொறுங்கி முடிந்து போகலாம்! எனது யூகம், பிரபஞ்சம் பெரும் நெருக்கலில் ஒரு சமயம் அழிந்து போய்விடும் என்பது! பிரபஞ்சத்தின் பிரளய முடிவுகளை முன்னறிவித்த முனிவர்களை விட எனக்கு ஓர் பெரிய சலுகை உள்ளது! இப்போதிருந்து பத்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு எது நிகழ்ந்தாலும், என் கருத்து பிழையான தென்று நிரூபிக்கப்பட நான் உயிரோடு இருக்கப் போவதில்லை ' என்று புன்னகை புரிகிறார், ஸ்டாஃபென் ஹாக்கிங்!
//26 நபித் தோழர்கள் குர்ஆனை மனனம் செய்து உடன் எழுதியும் வைத்தார்கள். //- -சுவனப்பிரியன்
இதை நம்புவதை விட ஆச்சரியப்படத்தான் முடிகிறது. மனித எல்கைகளுக்கு அப்பால் உள்ளது!- -தருமி//
இதை நம்பமுடியவில்லையா! எங்கள் ஊரில் வருடத்திற்கு 5 அல்லது ஆறு மாணவர்கள் குர்ஆனை முழுவதும் மனனம் செய்தவர்களாக மதரஸாக்களிலிருந்து வெளியாகின்றனர். வருடா வருடம் இதற்காக பட்டமளிப்பு விழாக்களே நடைபெறும். தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட அந்த சிறுவர்களே குர்ஆன் முழுவதையும் மனனம் செய்யும் போது அபுபக்கருக்கும் உமருக்கும் உஸ்மானுக்கும் அலிக்கும் என்ன சிரமம் வந்து விடப் போகிறது.
பிறகு என்ன சார்! இனி இறைவனை ஒத்துக் கொள்ளலாமா! வழக்கம் போல இதை மறந்து விட்டு சொர்க்கம்...நித்திய கன்னிகைகள் என்று போவீர்கள். என் பின்னூட்டங்கள் ஒரு தொடர்கதையாகி விட்டது.:-( ஓ.கே இந்த விவாதங்களினால் நானும் சில விபரங்களை தெரிந்து கொள்கிறேன்.
6 comments:
//'பிரபஞ்சம் இருவித முடிவுகளில் சிதைந்து போகலாம்! ஒன்று குமிழிபோல் உப்பிக் கொண்டு அது தொடர்ந்து விரியலாம்! அல்லது பெரும் வெடிப்பில் [Big Bang] தோன்றிய பிரபஞ்சம், ஒரு பெரும் நெருக்கலில் [Big Crunch] மறுபடியும் நொறுங்கி முடிந்து போகலாம்! எனது யூகம், பிரபஞ்சம் பெரும் நெருக்கலில் ஒரு சமயம் அழிந்து போய்விடும் என்பது! பிரபஞ்சத்தின் பிரளய முடிவுகளை முன்னறிவித்த முனிவர்களை விட எனக்கு ஓர் பெரிய சலுகை உள்ளது! இப்போதிருந்து பத்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு எது நிகழ்ந்தாலும், என் கருத்து பிழையான தென்று நிரூபிக்கப்பட நான் உயிரோடு இருக்கப் போவதில்லை ' என்று புன்னகை புரிகிறார், ஸ்டாஃபென் ஹாக்கிங்!//
:))
வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நனறி சகோ.அன்னு.
'முஸ்லிம் இளம் பெண் ஸ்டவ் வெடித்து சாவு' என்று நாம் பத்திரிக்கைகளில் பார்க்க முடிகிறதா? இல்லை. இதற்கு காரணம் 'தலாக்' என்ற ஒன்றை மார்க்கத்தில் இலேசாக்கியதுதான். மற்ற மதங்களில் விவாகரத்தை சிரமமாக்கியதாலும், வாழும் வரை ஜீவனாம்சம் கொடுக்க வெண்டும் என்பதாலும், பல வருடங்கள் கோர்ட் படிக்கட்டுகளை ஏற வேண்டும் எனபதாலும் இதெற்க்கெல்லாம சிரமப்படாமல் ஸ்டவ்வை வெடிக்க வைத்தோ அல்லது வேறு முறைகளிலோ பெண்ணை கொலை செய்து விடுகிறார்கள்.
'இவ்வாறு விவாகரத்து செய்தல் இரண்டு தடவைகளே! இதன் பிறகு நல்லமுறையில் சேர்ந்து வாழலாம்.' -குர்ஆன் 2:229
எனவே இரண்டு தடவைகளில் கோபத்தில் கூறி விட்டாலும் அந்த மனைவியோடு சேர்ந்து வாழலாம்.
'தலாக், தலாக், தலாக்' என்று ஒரே நேரத்தில் மூன்று முறை சொன்னாலும் ஒரு முறை சொன்னதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது முகமது நபியின் அறிவுரை.
இந்த சட்டங்களை தவறாக உபயோகிப்பவர்களை விளக்கி அவர்களுக்கு உபதேஷம் செய்யலாம்.
'அவ்விருவருக்கிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தில் சார்பில் ஒரு நடுவரையும் அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள். அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் இறைவன் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான்.'
-குர்ஆன் 4:35
'நல்ல முறையில் விட்டு விடுங்கள். அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்க்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்.'
-குர்ஆன் 2:231
விவாகரத்தை சிரமமாக்கியதால் பெயருக்கு மனைவியை வைத்துக் கொண்டு சின்ன வீட்டோடு வாழ்ந்து வரும் பல நண்பர்களை எனக்குத் தெரியும். விவாகரத்து சுலபத்தில் கிடைக்க வேண்டும் என்பதற்காக 'என் மனைவி இன்னாரோடு கள்ள தொடர்பு வைத்துள்ளாள்' என்று நெஞ்சறிந்து பொய் சொல்லும் பலரைப் பார்த்திருக்கிறேன்.
எனவே வினவு அவர்கள் இஸ்லாமிய பெண்களின் மேல் பரிதாபப்படுவதை விட மற்ற மதங்களில் ஸ்டவ் வெடிக்காமல் இருப்பதற்கு என்ன வழி என்று ஆராய்ந்தால் நலம். மேலும் நாங்கள் வஞ்சிக்கப்படுகிறோம் என்று எந்த இஸ்லாமிய பெண்ணும் இது வரை கொடி பிடிக்கவும் இல்லை.
சரி ...இஸ்லாமிய மார்க்கத்தை நான் துறந்தால் அடுத்து என்ன வழி என்ற விளக்கத்தையும் அளிக்க வேண்டும். நீங்களும் செங்கொடியும் மற்ற தோழர்களும் கம்யூனிஸமே நிரந்தர தீர்வு என்பீர்கள். ரஷ்யாவிலும் சைனாவிலும் காலத்துக்கு ஒவ்வாத சட்டங்கள் என்று கம்யூனிசத்தை என்றோ ஓரம் கட்டி விட்டார்கள்.
நம் நாட்டில் இந்த கம்யூனிஸ்டுகள் பண்ணும் காமெடி கொஞ்ச நஞ்சமல்ல. இரண்டு சீட் அதிகம் கொடுத்து விட்டால் 'அம்மாதான் நிரந்தர முதல்வர்' என்கின்றனர். அடுத்த தேர்தலில் கலைஞர் இரண்டு சீட்டு அதிகரித்து விட்டால் 'கலைஞரைப் போல் வருமா' என்கிறார்கள்.
இந்த நிலையில் நீங்களும் செங்கொடியும் மற்ற தோழர்களும் இஸ்லாத்தை விமரிசித்து கம்யூனிஸத்தை எப்படி வளர்க்கப் போகிறீர்கள் என்று எனக்கு ஒரே கவலையாக இருக்கிறது வினவு.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.சுவனப்பிரியன்,
வழக்கம்போலவே சிறப்பான பதில்கள். 'தஹாஹா'-தன் தவறான புரிதலை டாக்டர்.ஜாகிர் நாயக் ஒத்துக்கொண்டாரா...? நல்ல விஷயம்தான்.
குர்ஆன் என்ற முழுப்புத்தகத்தை ஒரேமூச்சில் மனப்பாடம் செய்வது எவ்வளவு கஷ்டம் என்று தருமி நினைக்கிறார் போலும். ஒவ்வொரு பள்ளிவாசலிலும் தராவீஹ் தொழவைக்கும் 'ஆஃபீசாக்கள்' என்ற பெயரைக்கூட அவர் அறிந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.
மேலும் குர்ஆன் பற்றி அவர் மறந்த விஷயம்...
சுமார் 23 வருடங்கள் தமக்குத்தெரிந்த மொழியில் சிறிது சிறிதாக மனப்பாடம் செய்வதும் அப்படி மனப்பாடம் செய்ததை தொழுகையில் மீண்டும் மீண்டும் ஓதுவதும், இதனால் அனைத்தும் மறக்காமல் இருப்பதும் மனிதனுக்கு எளிதுதான் என்பது..!
உங்கள் பதிலை வினவு தளத்தில் படித்தேன் சகோ. எளிமையாக, அதே நேரத்தில் வலிமையான கேள்விகளாக சாடியிருக்கிறீர்கள். பொறுத்திருந்து பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்.
வஅலைக்கும் சலாம்!
//சுமார் 23 வருடங்கள் தமக்குத்தெரிந்த மொழியில் சிறிது சிறிதாக மனப்பாடம் செய்வதும் அப்படி மனப்பாடம் செய்ததை தொழுகையில் மீண்டும் மீண்டும் ஓதுவதும், இதனால் அனைத்தும் மறக்காமல் இருப்பதும் மனிதனுக்கு எளிதுதான் என்பது..!//
தருமி படித்து தெளிவு பெறுவார் என்று நம்புவோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment