Followers

Wednesday, April 13, 2011

ராசிபுரம் மக்களும் தின மலரும்!

ராசிபுரம்: மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக, 100 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து வரும் இந்து, முஸ்லிம் சந்தன பூச்சு நிகழ்ச்சி, குருசாமிபாளையத்தில் கோலாகலமாக நடந்தது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம், சிவசுப்ரமணியர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 10ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கியது. 11ம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. ஸ்வாமிக்கு தினமும் அபிஷேக ஆராதனையும், ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த, 19ம் தேதி ஸ்வாமிக்கு திருக்கல்யாணமும், திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, முக்கிய வீதி வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. தொடர்ந்து, தொன்று தொட்டு நடந்து வரும் இந்து, முஸ்லிம் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. குருசாமிபாளையத்தில், கைத்தறி நெசவு முக்கிய தொழிலாக விளங்குகிறது. அப்பகுதியில், கைத்தறிக்கு அச்சு கட்டி கொடுக்கும் தொழிலை முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் செய்து வந்தனர். கடந்த, 100 ஆண்டுகளுக்கு முன் பிளேக் நோயால் இவ்வூர் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், முஸ்லிம் மதத்தினர் சிலர் ஊருக்கு பொதுவான இடத்தில் சென்டா மரம் என்று அழைக்கப்படும் புளியமரத்தின் கீழ், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு "பாத்தியா ஓதி' பொட்டுக் கடலையும், நாட்டு சர்க்கரையும் வழங்கினர். அதை தொடர்ந்து நோய் குணமானதாக கூறப்படுகிறது. இந்த முறை தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. மேலும், மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாகவும், முஸ்லிம் மதத்தினருக்கு மரியாதை செய்யப்பட்டது. பங்குனி உத்திரத் தேர்த்திருவிழாவுக்கு ஒரு வாரத்திற்கு முன், ஊர் பெரிய தனக்காரர் கேசவமூர்த்தி தலைமையில், ராசிபுரம் அச்சு கட்டித்தெரு கிழக்கு பள்ளி வாசலுக்கு, தேங்காய் பழத்தட்டுடன் சென்று விழாவுக்கு அழைப்பர். முஸ்லிம் மதத்தினரும் விழாவில் பங்கேற்று, வீடு தோறும் சந்தனம் பூசுவார்கள். அந்நிகழ்ச்சி நேற்று நடந்தது,

சிவசுப்ரமணியர் கோவிலில் இருந்து கிழக்கு தெரு பள்ளி வாசல் நிர்வாகி ஹனிபா தலைமையில், அப்துல் அஜிஸ், கவுன்சிலர் காதர்பாஷா உள்ளிட்டவர்கள், குருசாமிபாளையம் வந்தனர். சிவசுப்ரமணியர் கோவிலில் இருந்து, வெள்ளைக்கொடி ஏந்திச் சென்று வீடுகள் தோறும் சுவர்களில் சந்தனத்தை பூசினர். தொடர்ந்து, பாவடி மைதானத்தில் உள்ள சென்டா மரத்தில் (புளிய மரம்) வெள்ளைக் கொடி ஏற்றினர். அப்போது ஊர் பெரியதனக்காரர் கேசவமூர்த்தி கைகளில், பள்ளி வாசல் ஹனிபா சந்தனம் பூசினார். அவருக்கு கேசவமூர்த்தி சந்தனம் பூசினார். ஒருவருக்கு ஒருவர் மாலைகள் மாற்றி கொண்டனர். தொடர்ந்து "பாத்தியா ஓதி' முஸ்லிம்கள் நாட்டு சர்க்கரையும், பொட்டுக் கடலையும் வழங்கினர். நிகழ்ச்சியில், முஸ்லிம் மதத்தினர், நெசவாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இது, 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து வருவதால், உலக அமைதி, மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

-நன்றி தின மலர்.

//தவ்ஹீத் காரர்கள் கவனிக்கவும். இந்து முஸ்லீம் ஒற்றுமையை யாராலும் கெடுக்க முடியாது! பாத்தியா இருவரையும் ஒன்று சேர்த்து வைக்கட்டும்!...//- -இந்த இடுகைக்கு தினமலரில் வந்த பின்னூட்டம்.

திரு ஆருர் ரங்!

இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு ஏதோ தவ்ஹீத் வாதிகள் எதிரி போல பின்னூட்டம் அளித்திருக்கிறீர்கள்.

ஒரு மதத்தின் அடையாளங்களை மற்ற மதத்தினர் பின்பற்றுவதுதான் மத நல்லிணக்கத்துக்கு அடையாளம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. கடவுள் மறுப்பில் இருக்கும் நமது முதல்வர் ஒவ்வொரு ரமலானிலும் நோன்பு கஞ்சி குடிப்பது முஸ்லிமகளின் ஓட்டுக்களை குறி வைத்துதானே ஒழிய இஸ்லாமிய மார்க்கத்தில் ஏற்பட்ட பற்றினால் அல்ல. அது போல்தான் ஜெயலலிதா தர்ஹாக்களுக்கு சென்று வணங்குவதும்.

"எவர் (முஸ்லிமல்லாத) உடன்படிக்கை செய்து கொண்டிருக்கின்ற ஒருவருக்கு அநீதியிழைக்கின்றாரோ அல்லது அவரின் உரிமையை குறைக்கின்றாரோ அலலது அவரது சக்திக்கு மேல் அவருக்கு பொறுப்புக்களை சுமத்துகின்றாரோ அல்லது அவரின் மனவிருப்பின்றி அவரிடம் இருந்து ஏதேனுமொன்றை பெறுகின்றாரோ அவருக்கு எதிராக மறுமையில் நான் வாதிடுபவனாக இருப்பேன்". (ஆதாரம்: அபூதாவூத்)

• "எவர் உடன்படிக்கை செய்து வாழும் ஒரு முஸ்லிமல்லாத ஒருவரைக் கொலை செய்கிறாரோ அவர் சுவனத்தின் வாடையைக் கூட நுகரமாட்டார்". (ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி)

• "எவர் முஸ்லிமல்லாத சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை இம்சிக்கின்றாரோ நான் அவரது எதிரியாவேன். நான் எவரது எதிரியாக இருக்கின்றேனோ மறுமையில் அவருக்கெதிராக வாதிடுபவனாக இருப்பேன்". (ஆதாரம்: தாரீகு பக்தாத் அல்கதீபுல் பக்தாதி)

இங்கு நான் குறிப்பிட்டுள்ள முகமது நபியின் வார்த்தைகள் மாற்று மதத்தவருக்கு அதுவும் சிறுபான்மையினருக்கு எந்த அளவு உரிமைகள் கொடுக்கச் சொல்கிறது என்பது விளங்கும். அடுத்து இஸ்லாத்தில் உள்ள தவறான புரிதல்களை இந்துக்கள் உணர வேண்டும் என்பதற்காகவே 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியை ஒவ்வொரு ஊரிலும் தவ்ஹீத் ஜமாத் நடத்தி வருவதை நீங்களும் அறிவீர்கள்.

மேலும் இஸ்லாத்தையும் இந்து மதத்தையும் உளப்பூர்வமாக பின் பற்றக் கூடிய எந்த நபரும் கலவரங்களில் ஈடுபட மாட்டார்கள். இது போன்ற கலவரங்கள் நடப்பது மதங்களில் உள்ள ஒரு சில சுயநலக்காரர்களால் திட்டம் போட்டு நடத்தப்படுவது. இதை இரு மதத்தவரும் தற்போது நன்கு உணர்ந்து வருகின்றனர்.

எனவே ஒரு மதத்தவர் மற்றொரு மதத்தவரின் சமய சடங்குகளை செய்வதுதான் மத நல்லிணக்கத்துக்கு அடையாளம் என்பது தவறான புரிதல். அப்படி செய்வது சம்பந்தப்பட்டவரை ஏமாற்றுவதாகத்தான் அர்த்தம். எந்த ஒரு இதயத்திலும் இரண்டு மூன்று கொள்கைகள் இருக்க முடியாது.

அவரவர் மதக் கோட்பாடுகளை அவரவர் பின்பற்றுவோம். பொரி கடலை பாத்திஹா போன்று இஸ்லாமியர் செய்யும் மூடப்பழக்கங்களையும் எதிர்ப்போம். புளிய மரத்துக் கீழ் நின்று கொண்டு பாத்திஹா ஓதி பொரி கடலை கொடுப்பதாலெல்லாம் நோய் நீங்காது. நோய்களை கொடுப்பதும் அதற்கு நிவாரணம் அளிப்பதும் இறைவன் புரத்திலிருந்து வருவதாகத்தான் இஸ்லாமிய நம்பிக்கை. இந்து நண்பர்களோடு சகோதர பாசத்தோடு என்றும் போல் பழகுவோம். அனைவரும் சேர்ந்து நமது இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம்.

-இது தினமலர் வாசகர் கடிதத்துக்கு நான் அனுப்பிய பின்னூட்டம். தினமலர் எனது கருத்தை வெளியிடாது என்றுதான் நினைத்தேன். ஆச்சரியமாக மறுநாளே வெளியிட்டு விட்டது. சில நேரங்களில் நியாயமாகவும் நடந்து கொள்ளும் தினமலர் எனபதற்கு இரு ஒரு எடுத்துக்காட்டு.

'எம்மதமும் சமம்மதம்', 'எல்லோரும் எல்லா கடவுளையும் வணங்க வேண்டும்' என்பது ஏதோ ஒரு சிறந்த கொள்கை என்பதுபோல் பரப்பப்படுகிறது. ஒரு மதத்தின் தனித்தனமையும் அதன் கொளகைகளும் வீழ்வதற்கு இது தான் முதல்படி. ஏனெனில் நமது முன்னோர்கள் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கையில் இருந்தவர்கள்தான். கலாசார படை எடுப்பு நிகழ அந்த மதம் இந்த மதம் என்று எல்லாவற்றையும் ஒன்றாக குழப்பியதால்தான் இந்து மதம் அதன் உண்மை முகத்தை இழந்து நிற்கிறது. ரிக்,யஜூர்,சாம,அதர்வண வேதங்களை நீங்கள் படித்தால் தற்போதுள்ள இந்து மத கொள்கைகளுக்கும், இந்த வேதங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதே நிலைதான் கிறித்தவ மதத்துக்கும். தாழ்த்தப்பட்ட மக்கள் கிறித்தவ மதத்துக்கு மாறினாலும் அங்கும் இதே தீண்டாமைப் பேய் வந்து ஆட்டுவதற்கு காரணம் பல மத சடங்குகளையும் உள்வாங்கிக் கொண்டதுதான்.

இந்து மதம் தழைப்பதற்காக விவேகானந்தர் பாடுபட்டார். சமீபகாலங்களில் கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார், மறைந்த காஞ்சிப் பெரியவர் போன்றோரையும் இந்து மதம் தழைக்க பாடுபட்டவர்களில் குறிப்பிட்டு சொல்லலாம். இவர்களால் ஆன்மீகம் வளரும். நாமும் வரவேற்போம்.

அதே நேரம் 'இதே இந்து மதம் வளர நாங்களும் பாடுபடுகிறோம்' என்று கூறும் அத்வானி, மோடி, ராமகோபாலன் போன்றோர்களையும் இங்கு நினைத்து பார்க்கிறோம். இவர்களின் உண்மையான எண்ணம் இந்து மதத்தின் வளர்ச்சி கிடையாது. இந்து மதத்தை சீர்திருத்துவதற்கு பதில் 'இஸ்லாமியர்கள் இந்திய கலாசாரத்தை ஏற்றுக் கொண்டால்: எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை' என்பதுதான் அவர்கள் வைக்கும் வாதம். 'நீ முஸ்லிமாகவே இருந்து கொள்: பெயரையும் அரபியில் வைத்துக் கொள்: அல்லாவை கும்பிடும்போது அதோடு சேர்த்து முருகனையும், வெங்கடாஜலபதியையும் இன்ன பிற கடவுளையும் கும்பிட வேண்டும். வர்ணாசிரம கொள்கையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.' என்கின்றனர் இந்துத்துவவாதிகள். இதைத்தான் தினமலரும் நாசூக்காக சொல்கிறது.

நான் முன்பே குறிப்பிட்டது போல் எந்த ஒரு உண்மையான இறை பக்தனும் மற்றொரு இறை பக்தனை நிந்திக்கவோ சிரமம் தரவோ விரும்ப மாட்டான். எந்த ஒரு மதமும் அப்படி ஒரு கொள்கையை கொண்டிருக்கவில்லை. இன்று ஓரளவு குர்ஆன் ஹதீஸின் படி தங்களது வாழ்வை அமைத்துக் கொண்டிருக்கும் 'தவ்ஹீத் ஜமாத்' என்ற இஸ்லாமிய அமைப்பு மனித நேய பணிகளில் சிறந்து விளங்குவதைப் பார்க்கிறோம். தமிழகத்திலேயே ரத்ததானம் வழங்குவதில் பல ஆண்டுகளாக முன்னணியில் உள்ளது இந்த அமைப்பு. இதனால் பலன் பெறுவது பெரும்பான்மையான இந்து சகோதரர்கள்தான். அதேபோல் சுனாமி,புயல்,வெள்ளம் என்று எந்த பேரிடர் வந்தாலும் முதலில் ஓடி வந்து சாதி மதம் பார்க்காமல் உதவி செய்வதும் இந்த அமைப்புதான். அதே போல் இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை களையும் பொருட்டு 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியை ஒவ்வொரு ஊரிலும் நடத்தி வருவதும் இந்த அமைப்புதான். இந்து கிறித்தவ சகோதரர்கள் சில நேரங்களில் கிண்டலாக கேள்விகள் கேட்டாலும் அதற்கெல்லாம் கோபப் படாமல் பொறுமையாக விளக்கம் அளித்துக் கொண்டிருப்பதும் இந்த அமைப்புதான்.

இது போன்று இன்னும் பல அமைப்புகள் இருந்தாலும் இந்த அமைப்பை நான் குறிப்பிடக் காரணம் இருக்கிறது. இந்த அமைப்பிடம் எந்த பொதுசேவை மனித நேய பணிகளை நீங்கள் கேட்டாலும் உடன் வந்து பிரதிபலன் பார்க்காமல் உழைப்பார்கள். ஆனால் இறை வணக்கம் என்று வந்து விட்டால் யாரிடமும் எந்த சமரசத்துக்கும் செல்லமாட்டார்கள். இதுதான் சிறந்த நிலை. ஒருவரிடம் அன்பாக இருப்பது மற்ற மதத்தவரை மதிப்பது என்பதையும் அதற்காக மற்ற மத கலாசாரத்தை என் மதத்திலும் புகுத்தலாம் என்ற நினைப்பையும் ஒன்றாக போட்டு குழப்பிக் கொள்வதால்தான் இது போன்ற சிக்கல்கள் வருகின்றன.

எனவே அனைத்து மத சட்டங்களையும் படிப்போம். அவரவர் மதத்தில் உள்ள மூடப்பழக்கங்களை ஒழிக்க பாடுபடுவோம். அவ்வாறு எடுத்துச் சொல்லும் போது மென்மையான அணுகு முறையை கடைபிடிப்போம். வளமுள்ள பாரதத்தை அனைவரும் ஒன்று சேர்ந்து உருவாக்குவோம்.

29 comments:

சக்தி கல்வி மையம் said...

விழிப்புணர்வு பதிவு ...

Anisha Yunus said...

//அதே நேரம் 'இதே இந்து மதம் வளர நாங்களும் பாடுபடுகிறோம்' என்று கூறும் அத்வானி, மோடி, ராமகோபாலன் போன்றோர்களையும் இங்கு நினைத்து பார்க்கிறோம். இவர்களின் உண்மையான எண்ணம் இந்து மதத்தின் வளர்ச்சி கிடையாது. இந்து மதத்தை சீர்திருத்துவதற்கு பதில் 'இஸ்லாமியர்கள் இந்திய கலாசாரத்தை ஏற்றுக் கொண்டால்: எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை' என்பதுதான் அவர்கள் வைக்கும் வாதம். 'நீ முஸ்லிமாகவே இருந்து கொள்: பெயரையும் அரபியில் வைத்துக் கொள்: அல்லாவை கும்பிடும்போது அதோடு சேர்த்து முருகனையும், வெங்கடாஜலபதியையும் இன்ன பிற கடவுளையும் கும்பிட வேண்டும். வர்ணாசிரம கொள்கையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.' என்கின்றனர் இந்துத்துவவாதிகள். இதைத்தான் தினமலரும் நாசூக்காக சொல்கிறது.//

சரியாக சொன்னீர்கள் சகோ. இது எப்படியென்றால், நபி (ஸல்) அவர்களின் காலத்தில், குறைஷிகள் வந்து, நீர் எங்கள் தெய்வங்களை மாதத்தில் ஒரு தடவையாவது வணங்கிக் கொள் நாங்கள் அல்லாஹ்வையும் வணங்குகிறோம் என்றார்களே அது போலுள்ளது. இணக்கம் என்பது வாழ்வியல் நடைமுறைகளில் இருக்க வேண்டுமே தவிர மதத்தின் கொள்கைகளில் இல்லை.

படித்ததோடு நிக்காமல் தினமலருக்கு பதிலும் எழுதியது வரவேற்க தக்கது. மாஷா அல்லாஹ்.

வ ஸலாம்.

suvanappiriyan said...

//விழிப்புணர்வு பதிவு ...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கருன்.

suvanappiriyan said...

சகோ. அன்னு!

//இணக்கம் என்பது வாழ்வியல் நடைமுறைகளில் இருக்க வேண்டுமே தவிர மதத்தின் கொள்கைகளில் இல்லை.//

முழு பதிவின் விளக்கத்தையும் இரண்டு வரிகளில் சொல்லி விட்டீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மிக நல்லதொறு விளக்கம். சிறப்பாக எழுதியுள்ளீர்கள் சகோ.சுவனப்பிரியன். நன்றி.


ஒரு கொள்கையினர் இன்னொரு கொள்கையினரை பார்த்து தம் கொள்கையையும் அவர்களின் கொள்கையுடன் கலந்து கொண்டால்... தானும் அதேபோல் செய்வதாக கூறினால்... அங்கே அந்த இரண்டு கொள்கைகளும் செத்துப்போய்... வேறு ஒரு புதிய கொள்கை அல்லவா பிறக்கும்..!?

தம் கொள்கையில் தனித்துவமும், சரியான பிடிப்பும், நம்பிக்கையும் இருப்போர், இப்படி முன்மொழிய மாட்டார். இவர் தம் சரியான கொள்கையில் கலப்படத்தை என்றுமே அனுமதியார். இதற்குப்பெயர் "கொள்கைப்பற்று".

அது, எதிர் கொள்கையில் உள்ளவர் தம் கொள்கைக்கு வந்து தம்முடன் இணைய வேண்டும் என்று ஆவலுடன் அவரை அரவணைக்க எதிர்நோக்கும். இது கொள்கைவெறி அல்ல.

'கொள்கைவெறி' என்பது, எதிர் கொள்கையை பின்பற்றுபவரை விரோதியாக பார்க்க வைக்கும். அவருள் தம் சத்திய பிரச்சாரம் மூலம் மனமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பதில், அவரையும் அவரின் கொள்கையையும் முற்றிலும் அழிக்க நினைக்கும். இதுதான் இன்றுள்ள அனைத்து பிரச்சினைக்கும் காரணம்.

அதேநேரம், இந்த பிரச்சினையை ஒழிக்கவேண்டி, "எனக்கென்று எந்த கொள்கையும் இல்லை" என்று ஒரு கொள்கை வைத்திருந்தால் அது பகுத்தறிவு அல்ல..!

(( குறிப்பு:

இங்கே 'கொள்கை' என்பதற்கு முன் கடவுள், மத, அமைப்பு, கட்சி, பொருளாதார, கல்வி, ஆட்சி அதிகார... என்று எதை போட்டுக்கொண்டும் புரிந்து கொள்க.))

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ.ஆஷிக்!

//'கொள்கைவெறி' என்பது, எதிர் கொள்கையை பின்பற்றுபவரை விரோதியாக பார்க்க வைக்கும். அவருள் தம் சத்திய பிரச்சாரம் மூலம் மனமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பதில், அவரையும் அவரின் கொள்கையையும் முற்றிலும் அழிக்க நினைக்கும். இதுதான் இன்றுள்ள அனைத்து பிரச்சினைக்கும் காரணம்.//

இது போன்ற சிறு வித்தியாசங்களை புரிந்து கொள்ளாததால்தான் பல பிரச்னைகளுக்கும் காரணம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Anisha Yunus said...

//ஒரு கொள்கையினர் இன்னொரு கொள்கையினரை பார்த்து தம் கொள்கையையும் அவர்களின் கொள்கையுடன் கலந்து கொண்டால்... தானும் அதேபோல் செய்வதாக கூறினால்... அங்கே அந்த இரண்டு கொள்கைகளும் செத்துப்போய்... வேறு ஒரு புதிய கொள்கை அல்லவா பிறக்கும்..!?//

முஹம்மது ஆஷிக் பாய்,
சரியாக சொன்னீர்கள். பஹாய் மதமும், தீனுல் இலாஹியும் இப்படித்தானே விளைந்தன.

இங்கே ஒமஹாவிலும் இண்டர் கல்சுரல் அமைப்பு என்னும் ஒர் அமைப்பை நடத்தும் ஓர் யூத பெண்மணியும், கிருத்துவ மற்றும் நேம்சேக் முஸ்லிம்களையும் சேர்த்துக் கொண்டு ஒரே ஆலயம் கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்கு மற்ற தரப்பை விடுங்கள், லட்ச லட்சமாய் டாலர்களில் சம்பாதித்து, வீட்டின் காம்பவுண்டுக்குள்ளே சிறு ஏரியையும் (உண்மை!!) வைத்து சொகுசாய் வாழும் அரபி மற்றும் பாகிஸ்தானி முஸ்லிம்களும் மிக உடந்தை என்பது தான் வேதனை. அந்த கட்டிடத்தில் எல்லோரும் தொழுது கொள்ளலாமாம். எம்மதமும் சம்மதத்திற்கு உதாரணமாய் இருக்குமாம். நாங்களும் ஒவ்வோர் ஜும்மாவிலும் இதன் ஆபத்தை சொல்லிக்கொண்டுதான் உள்ளோம்.. என்ன செய்ய... அல்லாஹ் விட்ட வழி. சட்டபூர்வ அனுமதி அதற்கு உள்ளது. நாம் போராட ஆரம்பித்தால் இன்னும் அதிக அளவில் பிரபலம் ஆகிவிடும் என்றே அஞ்சுகிறோம். து’ஆ செய்யவும்!!

Anonymous said...

head - I win; tail - you lose. இது தானே இஸ்லாமியர்கள் சுற்றி வளைத்துச் சொல்ல வருவது?

அனுசரித்துப் போகும் மாற்று மதங்களை நீங்களும் அனுசரித்துப் போகாத வரை இஸ்லாம் அல்லாத மதங்களை இறுகிய நிலைக்குத் தள்ளுகிறீர்கள்.

செக்குலரிசம் என்பது நீங்கள் சிறுபான்மையாக இருக்கும் இடங்களிலெல்லாம் தூக்கிப் பிடிக்கிறீர்கள். சவூதியோ, பாகிஸ்தானோ இஸ்லாமிய எமிரேட் ஆகிவிடுகிறது.

பாக்கில் சிறுபாண்மையினர் கொல்லப்பட்டும், துரத்தப்பட்டும், கடுமையான மதச்சட்டங்களினாலும் ஒழிக்கப்படுகிறார்கள்.

இந்நிலை தங்களின் மக்களுக்கும் நேரக்கூடாது என்ற கவலை மற்ற நாடுகளுக்கு உண்டு.

இப்போக்கினால் இன்று மதச்சாற்பற்று இருக்கும் இந்தியா, பிரான்ஸ் போன்ற (முறையே) இந்து, கிறித்துவப் பெரும்பாண்மை உள்ள நாடுகள் தங்கள் பெரும்பாண்மை மத கோட்பாடுகளைத் தூக்கிப் பிடிக்க எண்ணும்/முயலும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

suvanappiriyan said...

சார்வாகன்!

மேலும் ஆச்சரியமான சில தகவல்கள் கிடைக்கலாம்!

suvanappiriyan said...

//இப்போக்கினால் இன்று மதச்சாற்பற்று இருக்கும் இந்தியா, பிரான்ஸ் போன்ற (முறையே) இந்து, கிறித்துவப் பெரும்பாண்மை உள்ள நாடுகள் தங்கள் பெரும்பாண்மை மத கோட்பாடுகளைத் தூக்கிப் பிடிக்க எண்ணும்/முயலும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.//

இந்து மதமும் கிறித்தவ மதமும் அந்தந்த மதத்தவர்களால் அதிகம் கடைபிடிக்கப்பட்டால் அதனால் இஸ்லாத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்து மதம் வளர்சசி அடைந்தால் வர்ணாசிரமம் தழைத்தோங்கும். பிராமணர்களை தவிர மற்ற யாவரும் சூத்திரர்கள் என்ற பெயரோடு உலா வர வேண்டி வரும். இதை எல்லாம் இந்து மக்களே விரும்ப மாட்டார்கள்.

//பாக்கில் சிறுபாண்மையினர் கொல்லப்பட்டும், துரத்தப்பட்டும், கடுமையான மதச்சட்டங்களினாலும் ஒழிக்கப்படுகிறார்கள். //

இஸ்லாமிய சட்டம் தெரியாத ஒரு சில மடையர்கள் எப்போதாவது அரிதாக செய்யும் ஒரு செயலை சுட்டிக்காட்டுகிறீர்கள். இது போன்ற செயல்களை இஸ்லாம் வன்மையாக கணடிக்கிறது. அந்த மக்களுக்கு உண்மையான குர்ஆன் வசனங்களை கொண்டு செல்ல வேண்டும்.

இதே போன்ற கொடுமைகள் அத்வானி, மோடி, ராமகோபாலன் போன்றோர்களால் முஸ்லிம்களுக்கு அவ்வப்போது இழைக்கப்படுவதையும் வசதியாக மறந்து விடுகிறீர்கள்.

Anisha Yunus said...

//செக்குலரிசம் என்பது நீங்கள் சிறுபான்மையாக இருக்கும் இடங்களிலெல்லாம் தூக்கிப் பிடிக்கிறீர்கள். சவூதியோ, பாகிஸ்தானோ இஸ்லாமிய எமிரேட் ஆகிவிடுகிறது.//

சரி அனானி, செக்குலர் கொடி என்றே வைத்துக் கொள்ளுங்கள். கீழ் வருவதில் எதெல்லாம் செக்குலர் இல்லை என்று சொல்லுங்கள்.

2003இல் பெங்களூரின் சுற்றுப்புறத்தில் திட்டமிட்டு மாடு வாங்குபவர்களைப் போல வேடமிட்டு மாட்டை விற்க வந்த தந்தையையும் மகனையும் ஆடையில்லாமல் வீதிகளில் ஓட ஓட விரட்டி அடித்து கொன்றார்களே அதுவும் செக்குலரை காக்கத்தானே???

மாடு தின்றால் செக்குலரிசத்திற்கு எதிர்ப்பு என்று கூறுகிறீர்கள். ஆனால் முஸ்லிம் மெஜாரிட்டி மிக்க இந்தியாவில் பன்றிக்கறி சக்கை போடு போடுகிறது,எந்த முஸ்லிமும் கேட்கவில்லையே எங்களின் மார்க்கத்திற்கு இடைஞ்சலாய் இருக்கிறதென்று? அமுல் முதற்கொண்டு நீல்கிரீஸ் பொருட்கள் வரை ‘ஹலால்’ அடையாளம் இடப்பட வேண்டும், உள்ளிருக்கும் எல்லா பொருட்களைப் பற்றியும் அட்டவணை இட வேண்டும் என்ற மனுவும் எந்த landfill-லில் கிடக்கிறதோ... இதில் செக்குலரிசத்தை சகிப்பது யார்?? யாரால் இயலவில்லை??

சுத்த சைவம் என்று கூறிவிட்டு தாங்கள் தின்னும் பண்டத்தை அழகுபடுத்தும் ‘வரக்’கிற்காக அனுதினமும் எத்தனை மாடுகளை கொல்லும் ஜெயின் சமூகத்தை யாரும் எதுவும் சொல்வதில்லையே ஏன்??

காயல் பட்டினத்திலிருந்து காஷ்மீர் வரை ஜனவரி ஆரம்பித்தால் ஐயப்பன் பாடல்களிலிருந்து, தீபாவளி முடிந்த பின்பும் காதைக் கிழிக்கும் சினிமாப்பாடல்களை கோவில்களிலும் நகர் மன்றங்களிலும் 24x7 ஓட விடுகிறீர்கள். ஆனால் ட்ரம்ஸ் இல்லாமல், குன்னக்குடியை துணைக்கழைக்காமல் ஒலிபெருக்கியில் கூறப்படும் தொழுகை அழைப்பு / பாங்கு எங்கள் குழந்தைகளின் படிப்பையும் தூக்கத்தையும் கெடுத்து வாழ்க்கையில் முன்னேற விடாமல் தடுக்கிறதென்று பள்ளிவாசல்களில் ஓதப்படும் பாங்கை தடை செய்ய சொல்லி 2010இல் கோர்ட்டுக்கு போகிறீர்கள்.

நான் படித்தது ஒரு கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தில் அங்கே வெள்ளியானால் நாங்கள் ப்ரேயர் படிப்பது பள்ளியினுள் உள்ள தேவாலயத்தில். அன்றைக்கு லேட்டாக வரும் மாணவியர் அப்பம் சாப்பிட வேண்டும் என்பதும் un official rule. இதையே நியூ காலேஜிலோ, க்ரெசெண்ட் கல்லூரியிலோ செய்தால்... யோசியுங்கள்.
இன்னும் சொல்லலாம். ஆனால்...தயவு செய்து தாங்கள் இதற்கு முன் படித்த / கேள்விப்பட்ட இஸ்லாத்தைப் பற்றிய எல்லா தகவல்களையும் ஒதுக்கிவிட்டு, திறந்த மனதுடன் இஸ்லாத்தை அணுகிப் பாருங்கள். சகிப்பதுவும், அதனாலேயே உயிரையும், உரிமையையும் விடுவது யாரென்று புரியும். நன்றி..!!

Anonymous said...

ayyayyo. arambichitaingappa.

suvanappiriyan said...

சகோ. அன்னு!

//நான் படித்தது ஒரு கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தில் அங்கே வெள்ளியானால் நாங்கள் ப்ரேயர் படிப்பது பள்ளியினுள் உள்ள தேவாலயத்தில். அன்றைக்கு லேட்டாக வரும் மாணவியர் அப்பம் சாப்பிட வேண்டும் என்பதும் un official rule. இதையே நியூ காலேஜிலோ, க்ரெசெண்ட் கல்லூரியிலோ செய்தால்... யோசியுங்கள்.
இன்னும் சொல்லலாம். ஆனால்...தயவு செய்து தாங்கள் இதற்கு முன் படித்த / கேள்விப்பட்ட இஸ்லாத்தைப் பற்றிய எல்லா தகவல்களையும் ஒதுக்கிவிட்டு, திறந்த மனதுடன் இஸ்லாத்தை அணுகிப் பாருங்கள். சகிப்பதுவும், அதனாலேயே உயிரையும், உரிமையையும் விடுவது யாரென்று புரியும். நன்றி..!!//

உங்களின் ஒவ்வொரு வரிகளும் அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். மிக்ச் சிறந்த அறிவுரை. நன்றி சகோ.

Anonymous said...

//இந்து மதம் வளர்சசி அடைந்தால் வர்ணாசிரமம் தழைத்தோங்கும். பிராமணர்களை தவிர மற்ற யாவரும் சூத்திரர்கள் என்ற பெயரோடு உலா வர வேண்டி வரும். இதை எல்லாம் இந்து மக்களே விரும்ப மாட்டார்கள். //

என் மதத்தைப் பற்றி எவனும் பேசக்கூடாது. மற்ற மதத்தை நான் விமர்சிப்பேன் என்பது என்ன நியாயம்?

இஸ்லாமைப் பற்றிப் பேசும்போது பொங்கியெழும் நீங்கள் மற்ற மதத்தை விமர்சிக்காதீர்கள். அதை அந்த மதத்துக்காரர்கள் புறந்தள்ளுவார்கள்.

Anonymous said...

//இந்து மதம் வளர்சசி அடைந்தால் வர்ணாசிரமம் தழைத்தோங்கும். பிராமணர்களை தவிர மற்ற யாவரும் சூத்திரர்கள் என்ற பெயரோடு உலா வர வேண்டி வரும். இதை எல்லாம் இந்து மக்களே விரும்ப மாட்டார்கள்.//

அந்த மதம் எக்கேடு கெட்டுப் போனால் உங்களுக்கு என்ன சார்? இந்து மதம் கெட்டுச்சோ, நாசமாப் போச்சோ அதை அவுங்க பாத்துக்கறாங்க.

நீங்க உங்க மத முன்னேற்றமோ, சீரமைப்போ, விழிப்புணர்ச்சியோ எதுவாகிலும் அதில் கவனத்தை செலுத்துங்களேன்.

எந்த மதமும் தன்னிடமுள்ள குறைகளுக்கு பதிலில்லாதபோது எடுக்கும் ஆயுதம் 'நீ மட்டும் யோக்கியமா?' என்னும் கேள்வி.

இதுக்கு அந்த மதத்துக்காரனின் பதில், 'எங்க ஏரியா. உள்ள வராதே!'.

இந்த விதண்டாவாதம் முடிவிலாது தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

suvanappiriyan said...

அருள்!

ராஜபக்ஷேக்கு எதிராக நான் வாக்களித்துள்ளேன். அதே நேரம் விடுதலைபுலிகளை நான் ஆதரிக்கவும் இல்லை.

Anonymous said...

**
//பாக்கில் சிறுபாண்மையினர் கொல்லப்பட்டும், துரத்தப்பட்டும், கடுமையான மதச்சட்டங்களினாலும் ஒழிக்கப்படுகிறார்கள். //

இஸ்லாமிய சட்டம் தெரியாத ஒரு சில மடையர்கள் எப்போதாவது அரிதாக செய்யும் ஒரு செயலை சுட்டிக்காட்டுகிறீர்கள். இது போன்ற செயல்களை இஸ்லாம் வன்மையாக கணடிக்கிறது. அந்த மக்களுக்கு உண்மையான குர்ஆன் வசனங்களை கொண்டு செல்ல வேண்டும்.
**

இல்லை. அங்கு 70-80 களிலிருந்து பாடநூல் மாற்றங்கள் சிறுபாண்மை மதங்களைப் பற்றி தாழ்ந்த எண்ணத்தையே மாணவர்கள் மனதில் புகுத்தி வந்துள்ளது.

பாக்கிஸ்தான் விடுதலை அடைந்ததிலிருந்து அந்நாட்டின் சிறுபாண்மை மதத்தவர்களின் எண்ணிக்கை (சதவிகிதமும்) குறைந்து கொண்டே வந்திருக்கிறது. தயவு செய்து அவர்களெல்லாம் இஸ்லாமை மனமுவந்து தழுவிக் கொண்டார்கள் என்று சொல்லிவிடாதீர்கள்.

இதன் தொடர்ச்சியாகத்தான் சமீபத்தில் அந்நாட்டின் சிறுபாண்மை நல அமைச்சர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாக்கிஸ்தான் உருவானபோது சிறுபாண்மையினர் தொடர்பாக திரு.ஜின்னா அளித்த உறுதிமொழி என்னவாயிற்று?

இதைத்தான் பாக்கிஸ்தான் ஒரு பரிபூரண இஸ்லாமிய எமிரேட்டாக மாறி வருகிறது என்கிறேன்.

இச்செயல்களை ஒரு சிலரின் தவறான போக்கு என்று பூசி மெழுகிவிட முடியாது.

>>இது போன்ற செயல்களை இஸ்லாம் வன்மையாக கணடிக்கிறது.<<

ஏங்க, மோடி, ஆர்.எஸ்.எஸ் கோஷ்டிகளின் செயல்களையுந்தான் பெரும்பாலான இந்து மதத்தினர் கண்டிக்கிறாங்க. அப்புறம் ஏன் புலம்புறீங்க?

Anonymous said...

>> சரி அனானி, செக்குலர் கொடி என்றே வைத்துக் கொள்ளுங்கள். கீழ் வருவதில் எதெல்லாம் செக்குலர் இல்லை என்று சொல்லுங்கள்.<<

நான் இந்த நாட்டை செக்யுலர் என்றெல்லாம் நினைக்கவில்லை. இது ஒரு நீக்குப் போக்கான, மென்மையான இந்து (என்று சொல்லப்படும்)மதத்தைப் பெரும்பாண்மையாகக் கொண்ட நாடு. அவ்வளவே.

செக்யுலர் என்பது அரசாங்கம் எம்மதத்தையும் (strictly) சாராமலிருப்பது.

அனைத்து மதத்தையும் அரவணைத்து செல்வது என்பது இந்தியர்கள் தமது வசதிக்கேற்ப ஏற்படுத்திக் கொண்ட விளக்கம்.

பிரச்சினையே எந்த மதத்தை எவ்வளவு அரவணைப்பது என்பதில்தான். There is no common standard. No one can agree on a consensus.

Anonymous said...

//2003இல் பெங்களூரின் சுற்றுப்புறத்தில் திட்டமிட்டு மாடு வாங்குபவர்களைப் போல வேடமிட்டு மாட்டை விற்க வந்த தந்தையையும் மகனையும் ஆடையில்லாமல் வீதிகளில் ஓட ஓட விரட்டி அடித்து கொன்றார்களே அதுவும் செக்குலரை காக்கத்தானே???
//

இல்லை.

//
மாடு தின்றால் செக்குலரிசத்திற்கு எதிர்ப்பு என்று கூறுகிறீர்கள்.
//

இல்லை. உங்களுக்குப் பிடித்திருந்தால் எந்தப் பிராணியையும் நீங்கள் உண்ணுங்கள்.

// ஆனால் முஸ்லிம் மெஜாரிட்டி மிக்க இந்தியாவில் பன்றிக்கறி சக்கை போடு போடுகிறது,
//

இல்லைங்க, மொத்த மக்கள்தொகை சதவிகித த்தில் முஸ்லிம்கள் ஏறக்குறைய 18 சதவிகிதம்தான்.

//எந்த முஸ்லிமும் கேட்கவில்லையே எங்களின் மார்க்கத்திற்கு இடைஞ்சலாய் இருக்கிறதென்று?
//

விருப்பமிருப்பவர்கள் பன்றிக்கறி உண்பதில் உங்களுக்கென்ன பிரச்சினை?

பன்றிக்கறியை நீங்களும் உண்ண வேண்டும் என்றை கட்டாயப்படுத்தினால் அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

நான் விரும்புவதைத்தான் நீயும் உண்ண வேண்டுமென்பது எதிர்க்கப்பட வேண்டிய மத எதேச்சதிகாரம்.

போல்டில் உள்ளவற்றை இந்தியாவில், பிரானஸில், அமெரிக்காவில் யாரும் தைரியமாகச் சொல்லலாம்.

அதை சவூதியிலோ, பாக்கிஸ்தானிலோ, ஆஃப்கானிலோ சொல்ல முடியாது என்பதுதான் வித்தியாசம்.

எனக்குப் பிடித்திருந்தாலும் கூர்க் பண்டிக்கறியை சவூதியில் உண்ண முடியுமோ?

//அமுல் முதற்கொண்டு நீல்கிரீஸ் பொருட்கள் வரை ‘ஹலால்’ அடையாளம் இடப்பட வேண்டும், உள்ளிருக்கும் எல்லா பொருட்களைப் பற்றியும் அட்டவணை இட வேண்டும் என்ற மனுவும் எந்த landfill-லில் கிடக்கிறதோ... இதில் செக்குலரிசத்தை சகிப்பது யார்?? யாரால் இயலவில்லை??
//

Honestly, பெரும்பாண்மைக்கு, அரசுக்கு அது ஒரு பொருட்டே கிடையாது. ஹலால் பற்றிய அறிவும், அக்கறையும் கிடையாது.

அதே சமயத்தில் ஹலால் அடையாளம் இடப்படுவதை யாரும் தடுக்கவும் கிடையாது.

குறிப்பிடத்தக்க அளவு ஹலால் பொருட்களுக்கு மார்க்கட் உருவானால் யாரும் கேட்காமலே, அரசின் தயவின்றி ஹலால் குறியீடு சந்தைக்கு வரும்.

ஆமாம், இதையெல்லாம், இஸ்லாமிய வணிகர்கள் ஏன் முன்னெடுத்துச் செல்லத் தயங்குகிறார்கள்?

## சுத்த சைவம் என்று கூறிவிட்டு தாங்கள் தின்னும் பண்டத்தை அழகுபடுத்தும் ‘வரக்’கிற்காக அனுதினமும் எத்தனை மாடுகளை கொல்லும் ஜெயின் சமூகத்தை யாரும் எதுவும் சொல்வதில்லையே ஏன்??
##

ஹா..ஹா..!
நான் மாட்டைக் கொல்ல மாட்டேன். யாராவது மாட்டைக் கொன்று பழி பாவத்தை (?) ஏற்றுக் கொள்ளும் நிலையில், மாட்டைக் கொல்வதினால் எனக்கு பயன் உண்டானால், எனக்கு ஆட்சேபணையில்லை என்பது நீக்குப் போக்கான கொள்கைங்க.

என் புரிதலில் ஜெயினர்கள் புலால் உண்பதில்லை. அதற்காக சில தீவிர நம்பிக்கையுடைய இந்துக்கள் அளவுக்கு மற்றவர் மாட்டைக் கொல்வதை எதிர்ப்பதாக நான் அறியவில்லை.

## காயல் பட்டினத்திலிருந்து காஷ்மீர் வரை ஜனவரி ஆரம்பித்தால் ஐயப்பன் பாடல்களிலிருந்து, தீபாவளி முடிந்த பின்பும் காதைக் கிழிக்கும் சினிமாப்பாடல்களை கோவில்களிலும் நகர் மன்றங்களிலும் 24x7 ஓட விடுகிறீர்கள். ஆனால் ட்ரம்ஸ் இல்லாமல், குன்னக்குடியை துணைக்கழைக்காமல் ஒலிபெருக்கியில் கூறப்படும் தொழுகை அழைப்பு / பாங்கு எங்கள் குழந்தைகளின் படிப்பையும் தூக்கத்தையும் கெடுத்து வாழ்க்கையில் முன்னேற விடாமல் தடுக்கிறதென்று பள்ளிவாசல்களில் ஓதப்படும் பாங்கை தடை செய்ய சொல்லி 2010இல் கோர்ட்டுக்கு போகிறீர்கள்.
##

இந்துக் கோயில் பாட்டுச் சத்தமும், மசூதிகளின் அழைப்புச் சத்தம் இரண்டுமே தேவையில்லாதவை. இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டியவை.

வேறொண்ணுமில்லை. இவை யாவும் நீ பெரியவனா, நான் பெரியவனா என்ற போட்டியில் முழக்கப்படுபவை.

இரண்டு தொந்தரவுகளையும் சகித்துக் கொள்வது செக்யுலரிசம் அல்ல. இரண்டையும் தடை செய்வதே செக்யுலரிசம்.

@@
நான் படித்தது ஒரு கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தில் அங்கே வெள்ளியானால் நாங்கள் ப்ரேயர் படிப்பது பள்ளியினுள் உள்ள தேவாலயத்தில். அன்றைக்கு லேட்டாக வரும் மாணவியர் அப்பம் சாப்பிட வேண்டும் என்பதும் un official rule. இதையே நியூ காலேஜிலோ, க்ரெசெண்ட் கல்லூரியிலோ செய்தால்... யோசியுங்கள்.
இன்னும் சொல்லலாம். ஆனால்...தயவு செய்து தாங்கள் இதற்கு முன் படித்த / கேள்விப்பட்ட இஸ்லாத்தைப் பற்றிய எல்லா தகவல்களையும் ஒதுக்கிவிட்டு, திறந்த மனதுடன் இஸ்லாத்தை அணுகிப் பாருங்கள். சகிப்பதுவும், அதனாலேயே உயிரையும், உரிமையையும் விடுவது யாரென்று புரியும். நன்றி..!!
@@

நான் படித்த பள்ளியிலும் catechism வகுப்பு தொடங்கினார்கள். அவ்வருடம் இந்து முண்ணனியினர் பள்ளி நிர்வாகத்தை அணுகி ரக்ஷாபந்தன் கயிறு கட்ட அனுமதி கேட்டார்கள். அத்துடன் மாற்று மத மாணவர்கள் catechism வகுப்புக்கு செல்வதிலிருந்து விலக்கு கிடைத்தது.

Anonymous said...

**
எனவே ஒரு மதத்தவர் மற்றொரு மதத்தவரின் சமய சடங்குகளை செய்வதுதான் மத நல்லிணக்கத்துக்கு அடையாளம் என்பது தவறான புரிதல். அப்படி செய்வது சம்பந்தப்பட்டவரை ஏமாற்றுவதாகத்தான் அர்த்தம். எந்த ஒரு இதயத்திலும் இரண்டு மூன்று கொள்கைகள் இருக்க முடியாது.

அவரவர் மதக் கோட்பாடுகளை அவரவர் பின்பற்றுவோம். பொரி கடலை பாத்திஹா போன்று இஸ்லாமியர் செய்யும் மூடப்பழக்கங்களையும் எதிர்ப்போம். புளிய மரத்துக் கீழ் நின்று கொண்டு பாத்திஹா ஓதி பொரி கடலை கொடுப்பதாலெல்லாம் நோய் நீங்காது. நோய்களை கொடுப்பதும் அதற்கு நிவாரணம் அளிப்பதும் இறைவன் புரத்திலிருந்து வருவதாகத்தான் இஸ்லாமிய நம்பிக்கை. இந்து நண்பர்களோடு சகோதர பாசத்தோடு என்றும் போல் பழகுவோம். அனைவரும் சேர்ந்து நமது இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம்
**

குருசாமிபாளையத்தில் இந்துக்களும், முஸ்லிம்களும் அவர்களுக்குத் தெரிந்த இணக்கப் போக்கை கடைபிடித்து வருகிறார்கள்.

உங்களின் மேற்சொன்ன கொள்கைகளை அவ்வூர் இஸ்லாமியரிடம் பரப்பி விடாதீர்கள். இதற்கு பதிலடியாக இந்துக்களிடம் வெறுப்பை வளர்ப்பதற்கும் ஆட்கள் காத்துக் கொண்டிரிக்கிறார்கள்.

Anonymous said...

//புளிய மரத்துக் கீழ் நின்று கொண்டு பாத்திஹா ஓதி பொரி கடலை கொடுப்பதாலெல்லாம் நோய் நீங்காது. நோய்களை கொடுப்பதும் அதற்கு நிவாரணம் அளிப்பதும் இறைவன் புரத்திலிருந்து வருவதாகத்தான் இஸ்லாமிய நம்பிக்கை.//

உங்களுக்கு காய்ச்சல், தலைவலி வந்தா அலோபதி டாக்டரிடம் போவீங்களா இல்ல இறைவன் கொடுத்தது அவரே குணப்படுத்துவார்ன்னு சும்மா இருப்பீங்களா?

மாற்று மதத்தைச் சார்ந்த ஏக இறைவனும் (நீங்கள் சொல்லிக் கொள்வது) தங்களுக்கு வரமளிப்பார்/வாழ்வளிப்பார் என்று நம்புகிறது ஏகப்பட்ட இறைகளை வைத்திருக்கும் இன்னொரு மதம்.

அந்த நெகிழ்வையும், நீக்குப் போக்கையும் இஸ்லாம்/இஸ்லாமியர் புரிந்து கொள்வார்களா?

Anonymous said...

**
அதே நேரம் 'இதே இந்து மதம் வளர நாங்களும் பாடுபடுகிறோம்' என்று கூறும் அத்வானி, மோடி, ராமகோபாலன் போன்றோர்களையும் இங்கு நினைத்து பார்க்கிறோம். இவர்களின் உண்மையான எண்ணம் இந்து மதத்தின் வளர்ச்சி கிடையாது. இந்து மதத்தை சீர்திருத்துவதற்கு பதில் 'இஸ்லாமியர்கள் இந்திய கலாசாரத்தை ஏற்றுக் கொண்டால்: எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை' என்பதுதான் அவர்கள் வைக்கும் வாதம். 'நீ முஸ்லிமாகவே இருந்து கொள்: பெயரையும் அரபியில் வைத்துக் கொள்: அல்லாவை கும்பிடும்போது அதோடு சேர்த்து முருகனையும், வெங்கடாஜலபதியையும் இன்ன பிற கடவுளையும் கும்பிட வேண்டும். வர்ணாசிரம கொள்கையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.' என்கின்றனர் இந்துத்துவவாதிகள். இதைத்தான் தினமலரும் நாசூக்காக சொல்கிறது
**

தினமலரின் செய்தியில்(மட்டும்) எந்தத் தவறும் எனக்குத் தெரியவில்லை.

பயப்படாதீங்க... முகம்மது நபி திருமாலின் 10ஆவது அவதாரம். அவர் சொல்லும் கடவுள் இந்துக் கடவுள் தான்னு இஸ்லாமை மதத்தை ஆட்டைய போட்டிற மாட்டாங்க.

suvanappiriyan said...

//உங்களுக்கு காய்ச்சல், தலைவலி வந்தா அலோபதி டாக்டரிடம் போவீங்களா இல்ல இறைவன் கொடுத்தது அவரே குணப்படுத்துவார்ன்னு சும்மா இருப்பீங்களா?//

டாக்டரிடமும் போவேன். இறைவன் மீதும் நம்பிக்கை வைப்பேன். ஏனெனில் டாக்டரிடம் செல்வதை இஸ்லாம் தடுக்கவில்லை.

//மாற்று மதத்தைச் சார்ந்த ஏக இறைவனும் (நீங்கள் சொல்லிக் கொள்வது) தங்களுக்கு வரமளிப்பார்/வாழ்வளிப்பார் என்று நம்புகிறது ஏகப்பட்ட இறைகளை வைத்திருக்கும் இன்னொரு மதம். //

ஏகப்பட்ட இறைகள் என்பது இந்த மத வேதங்களுக்கே எதிரானது என்பதை விளக்கி இன்று ஒரு பதிவிட்டிருக்கிறேன். பார்த்து கருத்தைச் சொல்லுங்கள்.

Anonymous said...

++
"எவர் (முஸ்லிமல்லாத) உடன்படிக்கை செய்து கொண்டிருக்கின்ற ஒருவருக்கு அநீதியிழைக்கின்றாரோ அல்லது அவரின் உரிமையை குறைக்கின்றாரோ அலலது அவரது சக்திக்கு மேல் அவருக்கு பொறுப்புக்களை சுமத்துகின்றாரோ அல்லது அவரின் மனவிருப்பின்றி அவரிடம் இருந்து ஏதேனுமொன்றை பெறுகின்றாரோ அவருக்கு எதிராக மறுமையில் நான் வாதிடுபவனாக இருப்பேன்". (ஆதாரம்: அபூதாவூத்)

• "எவர் உடன்படிக்கை செய்து வாழும் ஒரு முஸ்லிமல்லாத ஒருவரைக் கொலை செய்கிறாரோ அவர் சுவனத்தின் வாடையைக் கூட நுகரமாட்டார்". (ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி)

• "எவர் முஸ்லிமல்லாத சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை இம்சிக்கின்றாரோ நான் அவரது எதிரியாவேன். நான் எவரது எதிரியாக இருக்கின்றேனோ மறுமையில் அவருக்கெதிராக வாதிடுபவனாக இருப்பேன்". (ஆதாரம்: தாரீகு பக்தாத் – அல்கதீபுல் பக்தாதி)


இங்கு நான் குறிப்பிட்டுள்ள முகமது நபியின் வார்த்தைகள் மாற்று மதத்தவருக்கு அதுவும் சிறுபான்மையினருக்கு எந்த அளவு உரிமைகள் கொடுக்கச் சொல்கிறது என்பது விளங்கும்.
++

அதெல்லாம் இருக்கட்டும்ங்க. இஸ்லாம் சிறுபாண்மையா இருக்கும் நாட்டில் எப்படி நடந்துக்கணும்னு முகம்மது நபி ஏதாச்சும் சொன்னாரா?

Anisha Yunus said...

Anony,

Though I can, insha Allah answer in a more detailed way, I think this is not the right platform. If you can email me, I can divert you to my brothers who have analyzed, observed and researched Islam before they entered into its fold. I welcome you for a healthy discussion. There is no compulsion still, it is your wish.

For, the details on how to deal with the government where Muslims are minority, I would like you to read the history of Islam which started as a Meccan minority itself. I can give you a link, which is a transcript of Imam Anwar Awlaki on this regard. Pl click - http://www.kalamullah.com/Books/Lessons%20from%20Companions.pdf

(remember the doc is mainly for muslims, on how to live in a muslim minority society. So the addressee is a muslim, supposedly!)

Hope you would ponder about the invitation for a healthy discussion with my brethren in Islam.

Peace..!

suvanappiriyan said...

தொடர்ந்து விளக்கமளித்து வருவதற்கு நன்றி சகோ. அன்னு. இறைவன் உங்கள் பொது அறிவை மேலும் விசாலமாக்குவானாக!

தமிழன் said...

@Anony,

முஸ்லீம்கள் பெரும்பாண்மையாக உள்ள நாட்டில் . கிறிஸ்துவரோ, யூதர்களோ இருந்தால் , அவர்கள் Jizya கொடுக்கவேண்டும். அதுவே ஹிந்துவாக இருந்தால் அவர்கள் முஸ்லிமாக மாறவேண்டும் அல்லது கொல்லப்படுவார்கள்! It is very simple .

தமிழன் said...

@Anony

Read this,

http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=2566&Itemid=64

"(and feel themselves subdued.), disgraced, humiliated and belittled. Therefore, Muslims are not allowed to honor the people of Dhimmah or elevate them above Muslims, for they are miserable, disgraced and humiliated. Muslim recorded from Abu Hurayrah that the Prophet said,"

” We will not prevent any Muslim from resting in our churches whether they come by day or night, and we will open the doors ﴿of our houses of worship﴾ for the wayfarer and passerby. Those Muslims who come as guests, will enjoy boarding and food for three days.” அன்னு , இந்த மாதிரி நாங்கள் சட்டம் போட்டு , “உங்கள் வீட்டில் வந்து தங்கவா”

@சுவனப்பிரியன் . நண்பா , வேறு எதாவது ஆதாரம் வேண்டுமா?

தமிழன் said...

மேலும் - :0 -இது அந்த காலத்தில் போரின் போது என்று சொல்லாதீர்கள்.

”“Abu Bakr As-Siddiq used this and other honorable Ayat as proof for fighting those who refrained from paying the Zakah. These Ayat allowed fighting people unless, and until, they embrace Islam and implement its rulings and obligations.------

(I have been commanded to fight the people until they testify that there is no deity worthy of worship except Allah and that Muhammad is the Messenger of Allah, establish the prayer and pay the Zakah.) ””
இந்த ஐயாத் , இன்றைக்கும் பொருந்தும்.


http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=2581&Itemid=64


(and besiege them, and lie in wait for them in each and every ambush), do not wait until you find them. Rather, seek and besiege them in their areas and forts, gather intelligence about them in the various roads and fairways so that what is made wide looks ever smaller to them. This way, they will have no choice, but to die or embrace Islam,

﴿فَإِن تَابُواْ وَأَقَامُواْ الصَّلَوةَ وَءاتَوُاْ الزَّكَوةَ فَخَلُّواْ سَبِيلَهُمْ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ﴾

(But if they repent and perform the Salah, and give the Zakah, then leave their way free. Verily, Allah is Oft-Forgiving, Most Merciful.) Abu Bakr As-Siddiq used this and other honorable Ayat as proof for fighting those who refrained from paying the Zakah. These Ayat allowed fighting people unless, and until, they embrace Islam and implement its rulings and obligations. Allah mentioned the most important aspects of Islam here, including what is less important. Surely, the highest elements of Islam after the Two Testimonials, are the prayer, which is the right of Allah, the Exalted and Ever High, then the Zakah, which benefits the poor and needy. These are the most honorable acts that creatures perform, and this is why Allah often mentions the prayer and Zakah together. In the Two Sahihs, it is recorded that Ibn `Umar said that the Messenger of Allah said,

«أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاة»

(I have been commanded to fight the people until they testify that there is no deity worthy of worship except Allah and that Muhammad is the Messenger of Allah, establish the prayer and pay the Zakah.) This honorable Ayah (9:5) was called the Ayah of the Sword, about which Ad-Dahhak bin Muzahim said, "It abrogated every agreement of peace between the Prophet and any idolator, every treaty, and every term.'' Al-`Awfi said that Ibn `Abbas commented: "No idolator had any more treaty or promise of safety ever since Surah Bara'ah was revealed. The four months, in addition to, all peace treaties conducted before Bara'ah was revealed and announced had ended by the tenth of the month of Rabi` Al-Akhir.''