Followers

Friday, April 22, 2011

பாதிக்கப்பட்ட கணவர்கள்

லக்னோ : உத்திரப்பிரதேச மாநிலம், பஸ்தி மாவட்டதைச் சேர்ந்த ஆண்கள் சிலர், தங்களை, மனைவி கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

உத்திரப்பிரதேச மாநிலம், பஸ்தி மாவட்டதைச் சேர்ந்த பனிரெண்டுக்கும் மேற்பட்ட ஆண்கள், தங்கள் மனைவியிடமிருந்து, தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, போலீசாரை அணுகியுள்ளனர். கடந்த ஜனவரி, பிப்ரவரியில் மட்டும், அம்மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், மனைவி கொடுமைப்படுத்துவதாக, எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த புகார்கள் மீது, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்களுக்கு ஆதரவாக சில சட்டங்கள் இருப்பது போல, ஆண்களின் பாதுகாப்புக்கும், தனி சட்டங்கள் கொண்டு வரவேண்டும் என, மனைவிகளால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிலர், போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட கணவர்கள் கூறியதாவது:எங்களுக்கு மனைவிகளால் ஏற்பட்டுள்ள கொடுமைகளை வெளியே சொன்னால், அது சிரிப்புக்கு இடமாகி விடும். எனினும், அந்த கொடுமைகளிலிருந்து தப்ப, போலீஸ் பாதுகாப்பை கேட்பதைத் தவிர, எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த புகார்கள் தொடர்பாக, விசாரணை நடத்திவரும் போலீசார் கூறியதாவது: இரு தரப்பினரையும் அழைத்து, அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கிறோம். அது சாத்தியப்படாது என்று தெரியும் விவகாரங்களில் மட்டும், சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். சில வழக்குகள், விசாரணையில் இருக்கின்றன. இவ்வாறு போலீசார் கூறினர்.

-நன்றி தினமலர்

பாவம் சம்பந்தப்பட்ட கணவர்கள். இனி கணவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. :- )

No comments: