The French government says the face-covering veil undermines the basic standards required for living in a shared society and also relegates its wearers to an inferior status incompatible with French notions of equality.Under the law, any woman - French or foreign - walking on the street or in a park in France and wearing a face-concealing veil such as the niqab or burka can be stopped by police and given a fine.
France is the first country in Europe to publicly ban a form of dress some Muslims regard as a religious duty. Anyone caught breaking the law will be liable to a fine of 150 euros (£133; $217) and a citizenship course. People forcing women to wear the veil face a much larger fine and a prison sentence of up to two years. –BBC
ஒரு நாட்டில் வசிக்கும் குடிமக்கள் அந்நாட்டு சட்டத்துக்கு இடையூறு தருவதாகவோ அல்லது பிற்போக்குத் தனமாகவோ அல்லது கலாசார சீர்கேட்டுக்கு வழி வகுத்தாலோ அம்மக்களை நேர்வழிப்படுத்த சட்டம் இயற்றலாம். பிரான்சு நாட்டின் சிறுபான்மை இனமான முஸ்லிம்கள் புர்கா அணிவதில் அந்நாட்டு அரசுக்கு என்ன இடைஞ்சல் வந்து விட்டது. எதற்காக இப்படி ஒரு அவசர சட்டம்.
முஸ்லிம் பெண்கள் தங்களுக்கு கொடுமை இழைக்கப்படுகிறது என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார்களா? அல்லது அந்த பெண்கள் புர்கா அணிவதால் அரசுக்கு ஏதும் அச்சுறுத்தலா? எதுவும் கிடையாது. இஸ்லாத்தின் மீதும், அதன் வளர்ச்சியின் மீதும் பொறாமை கொண்ட ஒரு சிலரின் காழ்ப்புணர்ச்சியே இது போன்ற சட்டங்கள். இதுபோன்ற சட்டம் இயற்றுவது தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதாக ஆகாதா? இனி இதை எதிர்த்து போராட்டங்கள் வெடிக்கும். 'பார்த்தீர்களா? வன்முறை மார்க்கம்' என்று இஸ்லாத்தின் மீது களங்கத்தை உண்டு பண்ண முயற்சி நடக்கும். முடிவில் வழக்கம் போல் இஸ்லாம் இன்னும் அதிக வேகத்தில் பலரையும் சென்றடையும்.
இங்கு பிரான்சு தேசத்தின் பழைய சட்டத்தை நாம் நினைவு கூறுவது நல்லது.
பிரான்சு தேசத்தவர் 586 ஆம் ஆண்டு பெண்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்களா?இல்லையா? என ஆய்வு செய்து முடிக்க ஒரு சபையை அமைத்தனர். அந்த சபை 'பெண்கள் மனித இனத்தை சேர்ந்தவர்கள்தான். எனினும் அவர்கள் ஆண்களுக்குப் பணிவிடை செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்களென முடிவு செய்தது. 1805 ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயரின் சட்டத்தில் ஒரு கணவன் தனது மனைவியை விற்பது கூடுமென்றே இருந்துள்ளது. மனைவியின் விலை ஆறு பெனி அல்லது அரை ஷிலிங் என நிர்ணயமும் செய்யப்பட்டது.
இந்த அளவு பெண்களை இழிவு படுத்தியவர்கள் இஸ்லாத்தின் மீது தேவையில்லாமல் பாய்வதுதான் ஆச்சரியம். நிர்வாணமாக 'சன் பாத்' எடுப்பது, திருமணம் ஆகாமல் பிள்ளை பெற்றுக் கொள்வது இவர்கள் பாஷையில் பெண் நவீனத்துவம். அதுபோல் இஸ்லாமிய பெண்கள் ஏன் நடந்து கொள்வதில்லை என்ற ஆதங்கமும் இருக்கலாம்.
ஒரு பெண் எப்படி வெளியில் செல்ல வேண்டும்: எது தனக்கு பாதுகாப்பானது என்பதை தீர்மானிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட பெண். இதில் அரசு வந்து ஏன் மூக்கை நுழைக்க வேண்டும். அதிகபட்ஷமாக முகத்தையும் மூடிக் கொண்டு சில பெண்கள் செல்வார்கள். நிர்வாக வசதிக்காக அதை வேண்டுமானால் சட்டம் இயற்றி 'பெண்கள் முகத்தை திறந்திருக்க வேண்டும்' என்று சட்டம் இயற்றலாம். புர்காவுக்கே தடை என்பது கடைசியில் நிறைவேற்ற முடியாமல் சட்டம் குப்பை கூடையில்தான் சென்று உறங்கும்.
'ஆண் அல்லது பெண் ஈமான் கொண்ட நிலையில் நற்கருமங்கள் செய்தால் அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.'-குர்ஆன் 4:124
"I think everyone is free and should be allowed to wear what they want. It's a very difficult debate.
"I don't agree with the burka or niqab but I don't believe in this ban."-ப்ளோரின், 18
"This is all about politics.
"It's nothing to do with us normal French people.
"It's something the government has decided and we have no say.
"I believe in freedom of religion and this is a dangerous thing that's happening."
-Bilal chegar 25
"I'm not for the burka or the niqab but I believe in wearing what you want. This law is not needed.
"All it does is stigmatises French Muslims and is all about getting votes next year.
"The government doesn't have a program to help poor people so instead they've decided to blame Muslims.
"It only affects a minority of women and won't make any difference."
-Abdul Kareem ௩0
"If Mr Sarkozy wants to help people in the suburban areas, why not create better jobs, provide better housing.
"Removing the veil won't change anything.
"There are people who don't cover up and they're still struggling. Hardly anyone wears this.
"If anything, banning it will probably make more women wear it."
-yasmin ௨௧
டிஸ்கி:பிரான்ஸிலிருந்து வந்த செய்திகள் முழு புர்காவுக்கும் தடை இல்லை என்றும் முகத்தை மூடுவதைத்தான் சட்டம் தடுக்கிறது என்றும் தெரிந்து கொண்டேன். இதைத்தான் குர்ஆனும் சொல்கிறது. விளக்கமளித்த சகோதர சகோதரிகளுக்கு நன்றி. உண்மை செய்தியை தெரிந்து கொண்டவுடன் தலைப்பையும் மாற்றி விட்டேன்.
38 comments:
வந்துட்டேன் மக்கா...
அஸ்ஸலாமு அலைக்கும்,
சிறு விளக்கம்.
பிரான்சு அரசு தடை செய்தது முகம் மட்டும் தெரியுமாறு உடை அணியும் ஹிஜாபை அல்ல. அவர்கள் தடை செய்தது முகம் மறைக்கும் விதமாக உடையணியும் புர்கா/நிகாப் முறையைத்தான். அதானாலேயே இந்த சட்டம் முஸ்லிம்கள் மத்தியில் பெருமளவு சர்ச்சையை ஏற்படுத்தவில்லை. பிரான்சு போன்ற நாடுகளில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவது வெகு வெகு குறைவே.
இதுவே, பிரான்சு அரசு ஹிஜாபை தடை செய்திருந்தால் பிரச்சனை பூதாகரமாகி இருக்கும். உலகவில் இஸ்லாமிய அறிஞர்கள் ஒப்புக்கொள்ள கூடிய ஒரு விஷயம், ஹிஜாப் அவசியம், நிகாப் அவசியமில்லை என்பது தான். அதனாலேயே இந்த தடை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதிலும் பிரான்சு முஸ்லிம்கள் வீரியமானவர்கள். இஸ்லாத்திற்கு எதிரான ஒரு நிலையை அரசு எடுத்திருந்தால் இந்நேரம் பல போராட்டங்கள் வெடித்திருக்கும். இஸ்லாத்திற்கு எதிரான ஒன்றை அரசு செய்யவில்லை என்பதாலேயே அமைதி காக்கின்றனர்.
எனினும், புர்காவை ஆதரித்து அதனை விரும்பி அணியும் சகோதரிகள் போராடி தான் வருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று.
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஹிக் அஹமத் அ
நல்லது சுவனப்பிரியன். உங்கள் பார்வையை நீங்கள் இருக்கும் ஊரிலும் திருப்புங்கள்.மற்ற நாடுகளில் பெண்கள் அணியும் உடைகளை பொதுவில் அணியத்தடைவிதிக்கும் நாட்டைப்பற்றி ‘‘ சவுதி அரேபியா செயல்படுத்தும் காட்டுமிராண்டித்தனம்’’ என அடுத்த பதிவு எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.சுவனப்பிரியன்,
//புர்காவுக்கே தடை என்பது..//--?
புர்காவிற்கே தடையா... அல்லது முகத்தை மறைப்பதற்கு தடையா என்று சரியாக புரியவில்லை...
பிரான்ஸில் வாழ்பவர்களிடமிருந்து நடைமுறையில் என்ன நடக்கிறது என்ற தெளிவான பதிலை எதிர்பார்க்கிறேன்.
பொதுவாக... 'தன்னை மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்களே' என்ற காரணத்துக்காகவே மனிதன் ஒழுக்கமாக வாழ்கிறான்..! (இறையச்சத்துடன் உள்ளவர்கள் விதிவிலக்கு)
முன்கை, முகத்தை மறைக்காமல் காது,தலைமுடி மற்றும் கழுத்தை மறைக்கும் வகையில் ஆடை அணியும் முறை. இந்த முறை தான் உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் புருக்கா என்று வழக்கத்தில் உள்ளது.
சவூதியில் நிகாப் எனப்படும் கண்களை தவிர்த்து தலை முகம் உட்பட முழுதும் மறைத்தல் முறை. ஆப்கனில், கண்கள் இருக்கும் பகுதி மட்டும் வலை ஜன்னல் இருக்கும். ஒருவேளை இவை தடை செய்யப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
'புருகா என்ற ஆடைக்கே தடை' என்று சர்கோசி கூறியிருந்தால், அது இஸ்லாத்தின் மீதான தாக்குதல் என்று எடுத்துக்கொண்டு போராடியாக வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இதை எதிர்க்காமல் இருப்பதே நல்லது. ஏனெனில் முகத்திரை போட்டுக் கொள்ளுமாறு இஸ்லாம் பெண்களுக்கு கட்டளையிடவில்லை, அல்லவா..?
வானம்
//மற்ற நாடுகளில் பெண்கள் அணியும் உடைகளை பொதுவில் அணியத்தடைவிதிக்கும் நாட்டைப்பற்றி ‘‘ சவுதி அரேபியா செயல்படுத்தும் காட்டுமிராண்டித்தனம்’’ என அடுத்த பதிவு எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.//
சவூதி அரேபியா முழுக்க முழுக்க இஸ்லாமிய ஷரியத்தை பின் பற்றி ஆட்சி நடைபெறக் கூடிய ஒரு நாடு. இங்கு பணி புரிய வருபவர்களும் சவூதியின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டு வேலை செய்கிறோம் என்று கூறியே வருகின்றனர். அடுத்து ஒரு பெண்ணின் கவர்ச்சியான பகுதிகளை மறைத்துக் கொள்ளுவதால் அந்த பெண்ணுக்கு பாதுகாப்புதானே கிடைக்கிறது.
நமது நாட்டில் பாலியல் கொடுமைகள் நடைபெற முக்கிய காரணங்களில் ஒன்று பெண்கள் அணியும் கவர்ச்சியான ஆடைகளே! இதை மறுக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வஅலைக்கும் சலாம்! சகோ ஆஷிக்!
//இஸ்லாத்திற்கு எதிரான ஒரு நிலையை அரசு எடுத்திருந்தால் இந்நேரம் பல போராட்டங்கள் வெடித்திருக்கும். இஸ்லாத்திற்கு எதிரான ஒன்றை அரசு செய்யவில்லை என்பதாலேயே அமைதி காக்கின்றனர்.//
நீங்கள் சொல்வது போன்ற நிலைமை இருந்தால் வரவேற்கப்பட வேண்டியதே!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
வஅலைக்கும் சலாம் சகோ. முஹம்மது ஆஷிக்!
//அவ்வாறு இல்லாவிட்டால் இதை எதிர்க்காமல் இருப்பதே நல்லது. ஏனெனில் முகத்திரை போட்டுக் கொள்ளுமாறு இஸ்லாம் பெண்களுக்கு கட்டளையிடவில்லை, அல்லவா..? //
அதைத்தான் நானும் என் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன். முகத்தை மூடச் சொல்லி குர்ஆனும் கட்டளையிடவில்லை. எனவே அங்குள்ள சட்டத்தின் உண்மை நிலையை பிரான்சிலிருந்து யாரும் தகவல் சொன்னால் நல்லது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நாஞ்சில் மனோ!
//வந்துட்டேன் மக்கா...//
கருத்து தெரிவிக்கவில்லையா! ஓ.கே. வருகைக்கு நன்றி!
//ஒரு பெண் எப்படி வெளியில் செல்ல வேண்டும்: எது தனக்கு பாதுகாப்பானது என்பதை தீர்மானிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட பெண். //
நானும் இப்பொழுதுதான் செய்திகளில் கவனித்தேன். உண்மையில் ஃப்ரான்சாகட்டும், அமெரிக்காவாகட்டும் அங்குள்ள சொந்த மக்களின் கருத்தில் இதற்கெல்லாம் பிரச்சினையே இல்லை, எதிர்ப்பும் இல்லை என்பதே உண்மை. ஆயினும் எல்லா அரசுமே எந்த வகையில் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்றே நடந்து கொள்கின்றன. சுப்ஹானல்லாஹ். நீங்கள் மேலே கூறியது போல், மேஜரான ஆண் பெண் இருவருக்கும் என்ன உடுத்த வேண்டும் என்பது அவர்களின் சொந்த முடிவு. மைனரின் வாழ்க்கைக்கு தாய் தந்தையே முடிவு செய்ய அதிகாரம் உண்டு. இதில் அரசு முடிவு செய்வது முட்டாள்தனமே அன்றி வேறென்ன??
நான் பார்த்து, படித்த வரையில், ஹிஜாபுக்கு எதிராக் இந்த சட்டம் இல்லை. நிகாபுக்கு மட்டுமே. எனினும், அது அவரவர் உரிமை எனும்போது அரசின் சட்டம் வருத்தமே அளிக்கிறது!!
உதயம் பிரான்ஸிலிருந்து... இன்று முதல் (11ஏப்2011) பிரான்ஸில் அமுலுக்கு வரும் இச்சட்டம் நிகாப், மற்றும் புர்கா அணிந்து பொது இடங்களில் நடமாடுவதை தடைச் செய்கிறது. ப்ரெஞ்சு அரசின் புள்ளிவிவரப்படி இரண்டாயிரம் பேர்கள் தான் அணிகிறார்களாம்! அவர்களுக்காக ஒரு சட்டம்.
சர்கோஸி, இது இஸ்லாத்திற்கோ முஸ்லிம்களுக்கோ எதிரானது அல்ல; பெண்ணை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கவே இச்சட்டம் என்று விளக்கமளித்துள்ளார்.
நிகாப் என்பது முகத்தை முழுவது மறைத்து கண்களுக்கு ஜன்னல் வைத்திருப்பது. உதாரணம், ஆப்கானிஸ்தான். அடுத்து புர்கா என்பது அரபு நாடுகளில் காணப்படுவது. முகத்தை மறைத்து கண்களை மட்டும் வெளிப்படுத்துவது. ஹிஜாப் என்பது பரவலாக உலகம் முழுவதும் முஸ்லிம் பெண்கள் அணிவது., தலையையும் கழுத்தையும் மறைப்பது ஆனால் முகம் தெரியும்.
ஹிஜாபிற்கு தடையில்லை என்பதால் இங்குள்ள முஸ்லிம்களிடம் பெரிய எதிர்பில்லை; மேலும் இங்குள்ள முஸ்லிம்களிடம் நிகாபோ,புர்காவோ அணியும் வழக்கமும் இல்லை என்பதால் இது பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஆனால் இச்சட்டம் கொண்டு வந்தது ஒரு உள்நோக்கத்துடன் தான் என்பது உலகிற்கே தெரியும்.
அடுத்து.. பொது இடங்களில் தொழுவது தடை செய்யப்படலாம் என்று நினைக்கிறேன். அதாவது ஜும்மா தினத்தில் பள்ளிகள் நிரம்பியதும் வீதிகளில் தொழ நேரிடும். அப்போது சில மணித்துளிகள் போக்குவரத்தை மாற்றி விட்டு போலிஸ் காவலுக்கு நிற்பது பாரிஸில் வழக்கம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இனி.. பள்ளியின் உள்ளே தான் தொழ வேண்டும். ஆனால் போதுமான பள்ளிகள் இல்லையே.
சகோதரி அன்னு!
//ஆயினும் எல்லா அரசுமே எந்த வகையில் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்றே நடந்து கொள்கின்றன.//
பெரும்பாலான மாற்று மத சகோதரர்கள் முஸ்லிம் பெண்களை வலுக்கட்டாயமாக புர்கா போட வைப்பது முஸ்லிம் ஆண்களே என்ற கருத்து கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் பெண்கள் புர்காவை விரும்புவதில்லை என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். படித்த ஒரு இஸ்லாமிய பெண் அதுவும் அமெரிக்காவில் வசித்து வரும் நீங்கள் புர்காவின் நன்மையை உணர்ந்து புர்காவுக்கு ஆதரவான நிலையை எடுத்திருப்பது மாற்று மத சகோதரர்களின் ஐயத்தை தெளிய வைக்கும் என்று எண்ணுகிறேன்.
எனக்கு திருமணமான முதல் மாதம் மனைவியோடு சென்னைக்கு சுற்றுலா சென்றிருந்தோம். அன்று நான் என் மனைவியிடம் 'இது மெட்ராஸ்தானே! புரகாவை கழட்டி விடேன்' என்று ஒன்றிரண்டு முறை சொன்னேன். நான் வற்புறுத்துவதைப் பார்த்த என் மனைவி 'புர்காவோடுதான் நான் வெளியில் வருவேன். உங்களுக்கு விருப்பமில்லை என்றால் வாருங்கள் திரும்பவும் ஊருக்கு திரும்பி விடுவோம்' என்று சொன்னவுடன் நானே சிறிது அதிர்ந்து விட்டேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சகோ.ரஜின்!
//எவ்வித அதிகாரமும் இல்லாது போராடிப் போராடி தங்களது தேவைகளை நிறைவேற்றும் மக்கள் ஒரு நாட்டின் முதல் குடிமக்களல்லவே,அவர்கள் இரண்டாம் தர குடிகள் தானே..இந்திய முஸ்லீம்கள் அத்தகையவர்களா?//
அரசியல் அதிகாரம் உள்ளவர்கள்தான் முதல் குடிமகன் என்று எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்.?
உதாரணத்திற்கு பிராமணர்களை எடுத்துக் கொள்வோம். அவர்கள் எத்தனை தொகுதிகளில் எம்.எல்.ஏ வாகவும் எம்.பி யாகவும் இருக்கிறார்கள்? விரல் விட்டு எண்ணி விடலாம். முதல் குடிமகன் என்ற அந்தஸ்தில் இந்த நாட்டுக்கே எங்களை விட்டால் யார் உரிமை கொண்டாட முடியும் என்ற ரீதியில் அவர்களால் எப்படி பேச முடிகிறது? பிராமணியத்தை ஒழித்தே தீருவோம் என்று பெரும்பான்மை இந்து சகோதரர்கள் நினைத்தாலும் அவர்களால் பிராமணியத்தையும் பிராமணர்களையும் வெல்ல முடியவில்லை. காரணம் என்ன? அரசியல் வாதிகள் போடும் சட்டத்தை செயல்படுத்தக் கூடிய இடங்களில் கணிசமாக அவர்கள் அமர்ந்திருப்பதால் இன்று வரை அவர்களை அசைக்கக் கூட முடியவில்லை. கடினமாக படிக்கிறார்கள். எப்பாடுபட்டாவது அரசு உத்தியோகத்தில் நுழைந்து விடுகிறார்கள். இதே வழிமுறையில் முஸ்லிம்களும் பயனிக்க வேண்டும்.
தேர்தலில் நிற்காமலேயே ஜெயலலிதாவை தனிஇட ஒதுக்கீட்டுக்கு கமிஷன் அமைக்க சொன்னோம். அடுத்து வந்த கலைஞரிடம் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை தேர்தலில் நிற்காமலேயே பெற்றோம். இந்த தேர்தலில் 3.5 சதவீதத்தை 5 கதவீதமாக உயர்த்துவதற்கு கலைஞரை ஒத்துக் கொள்ள வைத்து முதல்வரானால் அதனை பெற்றும் காண்பிப்போம். இந்த இட ஒதுக்கீட்டினால் தமுமுகவும் இன்னும் தவ்ஹீத் ஜமாத்தை எதிர்க்கும் அனைத்து மக்களின் வாரிசுகளும் இதனால் பயன் பெறப் போகிறார்கள்.. ஏற்கெனவே பயன் பெற்றும் இருக்கிறார்கள். இதே தவ்ஹீத் ஜமாத் தேர்தலில் நின்றால் 3 எம்.எல்.ஏ சீட்டும், ஒரு எம்.பி சீட்டும் சில வாரியங்களும் கிடைத்திருக்கும். ஆனால் இட ஒதுக்கீடு கிடைத்திருக்காது.
நாமும் தேர்தலில் நிற்கும் நிலை வரும். எப்போது? தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கியதுபோல் முஸ்லிம்களுக்கும் சட்ட மன்ற, பாராளுமன்றங்களில் தனி இட ஒதுக்கீடு கிடைத்தால் அன்று நாமும் தேர்தலில் நிற்கலாம். அது வரை தவ்ஹீத் ஜமாத் எடுத்த முடிவுக்கு கட்டுப்பட்டு திமுக அணி வெற்றிபெற பாடுபடுவோம். 5 சதவீத இட ஒதுக்கீட்டுக்குப் பிறகு அடுத்த கட்டமாக பாராளுமன்ற சட்டமன்ற தொகுதிகளில் தனி இட ஒதுக்கீட்டுக்காக போராடுவோம். கோரிக்கையும் வைப்போம். முலாயம் சிங் யாதவ் தற்போது வெளிப்படையாகவே பேச ஆரம்பித்து விட்டார்.
எனவே 10 ஆம் வகுப்பு முடிந்தவுடன் பாஸ்போர்ட் எடுத்து பிள்ளைகளை வெளிநாட்டுக்கு ஏற்றி விடாமல் சொத்தை விற்றாவது பிள்ளைகளை படிக்க வைப்போம். குறைந்த சம்பளமாக இருந்தாலும் அரசு உத்தியோகத்தில் நமது வாரிசுகளை அமர வைக்க முயற்சிப்போம். இட ஒதுக்கீட்டின் பலனை அனைவரும் பெறுவோம். தற்போது கலைஞரை ஆட்சியில் அமர்த்துவதற்கு உழைப்போம். அமரக் கூடிய ஆட்சி அனைத்து மக்களையும் சிறப்போடு கொண்டு செல்லக் கூடிய ஆட்சியாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.
வணக்கம் சகோதரம்,
வரலாற்று ரீதியான ஒரு அலசலையும், இன்றைய மேற்குலகத்தின் பிடியில் உள்ள இஸ்லாம் மதம் மீதான அடக்கு முறை பற்றிய விடயங்களையும் அழகாக தொகுத்துள்ளீர்கள்.
ஒரு சிறிய வேண்டுகை, எனக்கு இஸ்லாம் மதம் தொடர்பான பரீட்சயம் குறைவு. எங்கள் பெற்ற தாய்க்கு நிகரானவை தான் மதம், மொழி. ஆதலால் தான் தங்களின் கடந்த இடுகைக்கும் நான் கருத்துக் கூறுவதைத் தவிர்த்து, படித்து விட்டுச் சென்று விட்டேன்.
ஆனாலும், என் மனதில் படும் விடயங்களை, இக் கட்டுரை தொடர்பாகப் பகிரலாம் என்று நினைக்கிறேன்.
தவறாக ஏதும் சொன்னால் மனம் கோணாது, மன்னித்து, என் கருத்துக்களைப் புரிய வைப்பீங்கள் திருத்துவீர்கள். எனும் நம்பிக்கையில் உங்களுடன் என் கருத்துக்களைச் சமர்பிக்கத் தொடங்குகிறேன்.
இதுபோன்ற சட்டம் இயற்றுவது தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதாக ஆகாதா?//
நான் அறிந்த வரையில் மேலை நாடுகளில் ஒவ்வொருவரும், தங்களது, மதம், மொழி பண்பாடுகளைப் பின்பற்ற அனுமதி உண்டு. ஆனால் இந்த நாடுகளைப் பொறுத்தளவில் அமெரிக்கா ஆகட்டும், பிரான்ஸ் ஆகட்டும் இஸ்லாமியச் சகோதர்கள் தொடர்பான சட்டங்களில் இறுக்கத்தையே காண்பிக்கின்றன.
உ+ம்.. செப் 11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க விமனா நிலையங்களை உடலை மறைத்த முழு அங்கிகளுடன் இஸ்லாம் சகோதரிகள் தாண்டக் கூடாது எனும் சட்டமும் கொண்டு வந்தார்கள்.இது பழைய கதை.
ஆனால் பிரான்ஸ் நாட்டில் இத்தகைய நிலை உருவாகியதன் பின்னணி என்ன? ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது எனக்குப் புரியாத ஒன்றாக உள்ளது சகோதரா?
சகோ. நிரூபன்!
//ஆனாலும், என் மனதில் படும் விடயங்களை, இக் கட்டுரை தொடர்பாகப் பகிரலாம் என்று நினைக்கிறேன்.
தவறாக ஏதும் சொன்னால் மனம் கோணாது, மன்னித்து, என் கருத்துக்களைப் புரிய வைப்பீங்கள் திருத்துவீர்கள். எனும் நம்பிக்கையில் உங்களுடன் என் கருத்துக்களைச் சமர்பிக்கத் தொடங்குகிறேன். //
மன்னிப்பு என்ற பெரிய வார்த்தை எல்லாம் எதற்கு நிரூபன்! உங்களின் சந்தேகங்களை தாராளமாக கேளுங்கள். கேள்வி கேட்டால்தானே தெளிவு பிறக்கும்.
மேலும் தற்போது யாழ்ப்பாணத்தில் பழைய நிலை திரும்புகிறதாகவும், கொழும்புக்கு புலம் பெயர்ந்து சென்றவர்கள் வீடுகளை விற்று விட்டு திரும்பவும் யாழ்ப்பாணத்துக்கே வருவதாகவும் கேள்விப்பட்டேன். விலைவாசிகளும் ஓரளவு மட்டுப்படுத்தப் பட்டுள்ளது என்று சில வாரம் முன்பு தாயகம் சென்று திரும்பிய சகோதரர் மகிழ்ச்சியுடன் சொன்னார். கேட்க ஆனந்தமாக இருந்தது. தடுத்து வைக்கப்படடிருக்கும் இன்னும் ஒரு சிலரும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும். நமது இலங்கை தமிழ் சகோதர சகோதரிகள் எல்லா வளமும் பெற்று வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!
சகோ. நிரூபன்!
//ஆனால் பிரான்ஸ் நாட்டில் இத்தகைய நிலை உருவாகியதன் பின்னணி என்ன? ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது எனக்குப் புரியாத ஒன்றாக உள்ளது சகோதரா?//
அரசியல்வாதிகள் சில கிரிமினல் வேலைகளையும் அவ்வப்போது செய்வார்கள். உலக பொருளாதார மந்த நிலையில் பிரான்ஸிலும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிரித்துள்ளது. மக்களின் எதிர்ப்பை சமாளிக்க புர்கா போன்ற சில விடயங்கள் பெரிதுபடுத்தப்பட்டால் மக்களின் கவனம் திசை திருப்பப்படும். நம் நாட்டிலும் இது போன்ற சமாளிப்புகள் அவ்வப்போது நடப்பதுண்டு. குடியுரிமை இல்லாமல் தங்கியிருப்பவர்களை இது போன்ற சட்டங்களை போட்டு வெளியேற்ற முயற்ச்சிக்கலாம். 'இஸ்லாம் பெண்களை கொடுமைப் படுத்துகிறது. நாங்கள் அவர்களை விடுவித்து விட்டோம்' என்று உலகுக்கு காட்டவும் இது போன்ற செயல்களில் ஈடுபடலாம். பிரான்ஸ் சகோதரர் சொன்னதுபோல் வெள்ளிக் கிழமை கூடும் அபரிமிதமான கூட்டத்தை மட்டுப்படுத்த இனி சட்டங்கள் கொண்டுவரப்படலாம். இது போல் பல காரணங்கள்.
http://payanikkumpaathai.blogspot.com/2011/04/blog-post_12.htm
இது, ஃப்ரான்ஸில் வசிக்கும் அஸ்மா, இச்சட்டம் குறித்து எழுதியுள்ள தெளிவான பதிவு. தகவலுக்காக.
பிரான்சின் முடிவு வரவேற்க தக்கது. அரபு நாடுகளில் மற்ற மதத்தவர் மீது தங்கள் சட்டங்களை திணிப்பதை விட இது ஒன்றும் மோசமானதல்ல.
//நமது நாட்டில் பாலியல் கொடுமைகள் நடைபெற முக்கிய காரணங்களில் ஒன்று பெண்கள் அணியும் கவர்ச்சியான ஆடைகளே//
குறிப்பு : பாலியல் தொழில் செய்யும் பெண்கள் முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் தான் அதிகம்.
//குறிப்பு : பாலியல் தொழில் செய்யும் பெண்கள் முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் தான் அதிகம்.//
பிரதீப்!
பொய்களை அரங்கேற்ற வேண்டாம். மற்ற நாடுகளை ஒப்பிட்டு நீங்கள் கூறும் செய்திக்கு ஆதாரத்தை தாருங்கள்.
//ஒட்டுமொத்தமாக முஸ்லீம்கள் தற்போது அரசியல் நிலைப்பாடு கொள்ளக்கூடாது.போராட வேண்டும்..எல்லாத்தையும் போராடித்தான் பெறவேண்டும்...என்றால் காயிதே மில்லத்தின் அரசியல் பிரவேசம் தவறா?அவர் இப்போதல்ல எப்போதோ அந்த முடிவுக்கு வந்து,அரசியல் கண்டு,அதில் வெற்றியும் கண்டுவிட்டாரே...//
காயிதே மில்லத் அரசியலில் வெற்றி பெற்று விட்டார் என்று எதை வைத்து சொல்கிறீர்கள். காயிதே மில்லத்தால் முஸ்லிம் சமூகம் இதுநாள் வரை அடைந்த நன்மை என்ன?
//பிராமணர்கள் அரசியலில் இல்லை என சொல்லமுடியாது சகொ...அவர்களோடு ஒப்பிட்டு பேச நாம் இன்னும் நிறைய,நிறைய வளரவேண்டி இருக்கிறது..//
பிராமணர்கள் முற்றிலுமாக அரசியலில் இல்லை என்று சொல்லவில்லை. அரசியலில் காட்டும் ஆர்வத்தை விட அரசு உத்தியோகங்களில்தான் அவர்களின் ஆர்வம் அதிகமிருக்கும்.
இந்த தேர்தலில் கலைஞரே கூட 'எனக்கு எதிராக பூணூலை உருவி விட்டுக் கொண்டு வேலை செய்கிறார்கள' என்று பிராமணர்களை பார்த்து சொன்னது சிந்திக்க வேண்டிய ஒன்று. அரசு வேலைகளுக்கு அந்த அளவு சக்தி இருக்கிறது. குஜராத்தில் அரசு வேலைகளில் முஸ்லிம்கள் குறிப்பிட்ட சதவீதத்தில் இருந்திருந்தால் மோடியே நினைத்திருந்தாலும் இந்த அளவு அழிவு முஸ்லிம்களுக்கு வந்திருக்காது.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
// எனவே அங்குள்ள சட்டத்தின் உண்மை நிலையை பிரான்சிலிருந்து யாரும் தகவல் சொன்னால் நல்லது. //
பார்க்க
http://payanikkumpaathai.blogspot.com/2011/04/blog-post_12.html
Good for France to do that.
If Saudi Arabia can say that they rule with Shariyah (sorry for the spelling), France can pass a law as they like.
Nalla irukkuyya unga niyayam.
விஷயத்தை சரியா புரிஞ்சிக்காமலே அரசியல் பண்றீங்களோன்னு தோணுது....
நண்பர்கள் கொடுத்த வலைத்தளத்தைப் பாருங்கள்.
//If Saudi Arabia can say that they rule with Shariyah (sorry for the spelling), France can pass a law as they like.
Nalla irukkuyya unga niyayam. //
Anony,
Saudi is a Islamic country and it takes all its laws from Islamic Sharee'ah. If you are not practicing or believing in Islam you need to decide whether to go there or not. Whereas France is a secular country which has so far guaranteed rights to each and every citizen from gay marriages to protection for profanity!
Being a Secular country, if France cant digest a common man's religious right, there arises this issue.
If you are a woman, you wont be allowed in Bagavathi temple of Kerala. That is how it's rule is. But if the kerala govt says no woman will be allowed in that city itself, then it becomes the issue. Hope you understand.
Every month an old man from Jehovah's witness knocks my door and supplies me free literature and magazine of their religion, but if I take Quran and start distributing like this door to door, I will be the headline of CNN tonight... do you see the niyaayam here?? Almost all those NRIs who live in US can affirm how many 'Jesus Saves' Pamphlets, Jehovah witness magazines they receive on door and thru mail box on a regular basis. But none will talk about it. But if the same thing had been done by Islamic Concerns, you all would have started talking abt niyaayam again - "NRIS ARE FORCED TO CONVERT"!!!!!!. Wont you?
MORAL:: The basic law of comparison is to compare similar things, not opposite ends!
இந்த பதிவின் தலைப்பு, உங்களைப் போன்ற சான்றோர்க்கு ஆழகானதாக படவில்லை.
kannan from abu dhabi.
http://samykannan.blogspot.com/
மதச்சுதந்திரம் உள்ள நாட்டில் இனங்கள் இடையே வெற்றுமையை உருவாக்கிறது என அரசியலில் என்னப்படுவதால் சட்டம் திருத்தப் பட்டுள்ளது ஆகவே தான் இங்கு இதுவரையில் ஆர்பாட்டங்கள் பெரியளவில் இடம் பெறவில்லை சிலவேளைகளில் விடுமுறை முடிந்து பாடசாலைகள் ஆரம்பமாகும் போது சில அமைப்புகள் இதை பெரிது படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேனும் .
கண்ணன்!
//இந்த பதிவின் தலைப்பு, உங்களைப் போன்ற சான்றோர்க்கு ஆழகானதாக படவில்லை.//
உண்மை நிலவரம் தெரியாமல் செய்தியை மேலோட்டமாக படித்து விட்டு கோபத்தில் தலைப்பு வைத்தது என் தவறுதான். தலைப்பை மாற்றி விட்டேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//இது, ஃப்ரான்ஸில் வசிக்கும் அஸ்மா, இச்சட்டம் குறித்து எழுதியுள்ள தெளிவான பதிவு. தகவலுக்காக.//
ஹூசைனம்மா, ஹைதர் அலி இருவரும் கொடுத்த சுட்டிக்கு நன்றி. சகோ.அஸ்மா மிகவும் தெளிவாக வேறு எந்த விளக்கமும் தேவைப்படாத அளவுக்கு எழுதியுள்ளார்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
திரு நேசன்!
//மதச்சுதந்திரம் உள்ள நாட்டில் இனங்கள் இடையே வெற்றுமையை உருவாக்கிறது என அரசியலில் என்னப்படுவதால் சட்டம் திருத்தப் பட்டுள்ளது ஆகவே தான் இங்கு இதுவரையில் ஆர்பாட்டங்கள் பெரியளவில் இடம் பெறவில்லை//
பிரான்சு அதிபர் எகிப்து பல்கலைக்கழகத்திலிருந்து 'இஸ்லாம் சொல்லும் புர்கா என்ன?' என்ற விளக்கத்தை கேட்டு அதன் அடிப்படையில் இந்த சட்டத்தை இயற்றியுள்ளார். முகத்தை மூடுவது அரிதாக ஒரு சிலரே! சில நிர்வாக காரணங்களுக்காக இப்படி ஒரு சட்டம் போட்டால் இதில் தவறேதும் இல்லை. ஏனெனில் இந்த சட்டம் குர்ஆனுக்கு மாற்றமானதும் இல்லை. எனவே போராட்டத்துக்கு அவசியமும் இல்லை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நல்லது சுவனப்பிரியன். உங்கள் பார்வையை நீங்கள் இருக்கும் ஊரிலும் திருப்புங்கள்.மற்ற நாடுகளில் பெண்கள் அணியும் உடைகளை பொதுவில் அணியத்தடைவிதிக்கும் நாட்டைப்பற்றி ‘‘ சவுதி அரேபியா செயல்படுத்தும் காட்டுமிராண்டித்தனம்’’ என அடுத்த பதிவு எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்
when u r accusing some one, pls look at your backyard
//நல்லது சுவனப்பிரியன். உங்கள் பார்வையை நீங்கள் இருக்கும் ஊரிலும் திருப்புங்கள்.மற்ற நாடுகளில் பெண்கள் அணியும் உடைகளை பொதுவில் அணியத்தடைவிதிக்கும் நாட்டைப்பற்றி ‘‘ சவுதி அரேபியா செயல்படுத்தும் காட்டுமிராண்டித்தனம்’’ என அடுத்த பதிவு எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்
when u r accusing some one, pls look at your backyard.////
அதுக்குதான் இருக்கவே இருக்குதுங்களே ஒரு சூப்பர் பாயிண்டு ...' 'சவூதி' ஒரு முஸ்லிம் நாடு..மதசார்பற்ற நாடு இல்ல..அங்க அவுங்க சொல்றதுதான் சட்டம்'..
நீங்களும் வேணும்னா 'பிரான்ஸ் ஒரு கிறிஸ்தவ நாடு' அப்டின்னு வெளிப்படையா சொல்லிட்டு மத்த மதக்காரவுகள அடக்குங்க..ஒடுக்குங்க...இளிச்சவாயன் கணக்கா செக்குலர்னு சொல்லிட்டு இதெல்லாம் பண்ணினா தப்புல்ல... -ஹி..ஹி .. வுட்டுடுவோமா ??
//நீங்களும் வேணும்னா 'பிரான்ஸ் ஒரு கிறிஸ்தவ நாடு' அப்டின்னு வெளிப்படையா சொல்லிட்டு மத்த மதக்காரவுகள அடக்குங்க..ஒடுக்குங்க...இளிச்சவாயன் கணக்கா செக்குலர்னு சொல்லிட்டு இதெல்லாம் பண்ணினா தப்புல்ல//
ரிப்பீட்டு ..............
குப்புற விழுந்தாலும் ஈமான்காரங்களுக்கு எப்பவுமே மீசைல மண்ணு ஒட்டுறதே இல்லை.
பிறரை குறை சொல்லியே பழகியவர்களுக்கு, அவர்களின் குறைகளை சொன்னால் ஏற்றுக்கொள்ளும் மனம் எந்த காலத்திலும் வராது. இது போன்ற சப்பைகட்டுகளை தான் சொல்ல முடியும்
//கொழும்புக்கு புலம் பெயர்ந்து சென்றவர்கள் வீடுகளை விற்று விட்டு திரும்பவும் யாழ்ப்பாணத்துக்கே வருவதாகவும் கேள்விப்பட்டேன்.//
உண்மை தான். எனது நெருங்கிய உறவினர் வாடகை வீட்டில் கொழும்பு பகுதியில்(யுத்தம் காரணமாக அல்லது தமிழீழ விடுதலை போர்!? காரணமாக) குடும்பத்தோடு வசித்தவர்.இப்போ குடும்பத்தை யாழ்ப்பாணத்துக்கு சொந்த வீட்டிற்க்கு அனுப்பிவிட்டு தான் கொழும்பில் சிறிய வாடகை அறைக்கு மாறிவிட்டார். சொந்த வீடு வைத்திருப்போர் நீங்கள் கேள்விப்பட்ட மாதிரியும் செய்கின்றனர். கொடிய போர் அற்ற அமைதியாக வாழும் சூழலை பயன்படுத்தி தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த நினைக்கும் அந்த துன்பபட்ட மக்களை முடிந்தால் உதவி செய்வது அல்லது அவர்களுக்கு மேலும் துன்பம் கொடுக்காமல் இருப்பது தான் சிறந்த உதவி.
ஜார்ஜ், குமார், ராம் உங்கள் அனைவருக்கும் சகோதரி அன்னு அவர்கள் அழகிய முறையில் விளக்கமளித்துள்ளார்கள். எனவே நான் தனியாக விளக்க வேண்டிய அவசியமில்லை. வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி.
சகோ. பலேனோவுக்கும் கருத்தைப் பதிந்தமைக்கு நன்றி.
பிரான்ஸின் பெண் உரிமை:
25 நவம்பர் பெண்கள் மீதானவன்செயல்களை எதிர்க்கும் சர்வதேச தினம் கொண்டப்பட்டது. அதனால் பிரான்சில் உள்ள சில அமைப்புக்கள் ஒண்றிணைந்து ஒரு கணக்கெடுப்பை செய்திருந்தன. ஆக்கணக்கெடுப்பின் போது தெரிய வந்த சில தகவல்கள்.பிரான்சில் நாளொன்றுக்கு குறைந்தது 200 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்றும் தினமும் 200 பெண்கள் தினமும் பல பெண்கள் யாரோ ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றும் பெரும்பாலும் யார் தம்மை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குகிறார்கள் எனத் தெரிந்திருந்தும் சட்டத்தின் முன் முறைப்பாடு செய்வதற்கு, பாதிக்கப்பட்டவர்கள் எனும் குற்ற உணர்வு காரணமாக இன்னமும் தயங்குகிறார்கள் என பெண்கள் சார்பாகவும் பெண்களின் மீது வன்முறையை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக போராடும் பாதுகாப்பு சங்கத்தின் CFCV தலைவியும் மருத்துவருமான Emmanuelle Piet கூறுகிறார். நடைபெறும் பாலியல் வல்லுறவுகளில் நாலில் மூன்று தெரிந்த ஒருவராலேயே இழைக்கப்படுகிறது என்பது தான் கொடுமையானது. ஆவ் வன்முறையை செய்பவன் தகப்பனாகவோ,மாற்றாந்தகப்பனாகவோ மாமனாகவோ, ஆசிரியனாகவோ,மருத்துவனாகவோ, முதலாளியாகவோ, வேலைகொடுப்பனாகவோ இருக்கிறான் என அவர் மேலும் தெரிவிக்கிறார்.
நாகரிகத்திற்கு பெயர் போன இந்த நாட்டில் வருடமொன்றில் 75,000தொடக்கம் 90,000 பெண்கள் இவ்வன்கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆண்களால் ஆளாக்கப்படுகிறார்கள்.ஏழு நிமிடத்திற்கு ஒரு ஓரு பெண் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறாள் கடந்த 2005 – 2006 காலப்பகுதியில் 18 – 60 வயதுடைய 130, 000 பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என OND எனும் இன்னொரு பெண்கள் பாதுகாப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. பாதிக்கப்படும் பத்துப் பெண்களில் ஒருவரே முறைப்பாடு செய்கிறார். ஆயினும் குற்றவாளிகள் ஒரு வீதம் அல்லது 2 வீதமே தண்டனை பெறுகிறார்கள் எனவும் ஆதாரத்துடன் தெரிவிக்கிறார்கள். கடந்த 2009 இல் 160 பெண்கள் கணவன்மார்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். எனவும் ஆயிரக்கணக்கான பெண்கள் அடி உதை சித்திரவதை என கணவன்களால் அனுபவிக்கிறார்கள் எனவும் பெண்கள் பாதுகாப்புச் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்வன்முறைக்கு உள்ளாகின்றவர்கள் தாமாக முன் வந்தால் தாம் சட்ட நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருப்பதாகவும் அவ் பெண்கள் அமைப்பு கூறியுள்ளது.
-நன்றி: பிரெஞ்சு மொழியிலிருந்து தேனுகா
பெண்கள் கவர்ச்சியாக உடை உடுத்துதலுக்கும் ஆண் பெண் இரு பாலாரும் சகஜமாக இணைந்து வேலை செய்தலுக்கும் ஆதரவளிக்கும் நபர்கள் மேற்கண்ட பிரச்னைகளுக்கு என்ன தீர்வை வைத்திருக்கிறார்கள்?
//பொய்களை அரங்கேற்ற வேண்டாம். மற்ற நாடுகளை ஒப்பிட்டு நீங்கள் கூறும் செய்திக்கு ஆதாரத்தை தாருங்கள்.//
சரி,நான் சொல்வதை நம்ப வேண்டாம்.சிங்கப்பூர், மலேசியாவில் உள்ள உங்கள் முஸ்லிம் நண்பர்கள் யாரவது இருந்தால் கேளுங்கள். இங்குள்ளவர்கள் பெரும்பாலும் விடுமுறையை உல்லாசமாக கழிக்க பதாம்,பிந்தாங் ,பாலி ,ஜாவா ஆகிய தீவுகளுக்கு தான் செல்வார்கள். மசாஜ் ,டிஸ்கோதே, விபச்சாரம் கொடிகட்டி பறக்கிறது, தாய்லாந்தும் இதை போன்ற நாடுதான். ஆனாலும் பாங்காக் ,புகட் தவிர மற்ற பகுதிகள் அவ்வாறு இல்லை. புள்ளி விபரம் சேகரித்து பிறகு தருகிறேன்.
Post a Comment