'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Showing posts with label கார்ட்டூன்கள். Show all posts
Showing posts with label கார்ட்டூன்கள். Show all posts
Tuesday, June 06, 2017
'நீங்க செய்யறது கொஞ்சம் கூட நல்லாயில்ல'
Monday, December 07, 2015
நமது தமிழக அரசின் நிலையை உணர்த்தும் கார்டூன்!
Wednesday, December 02, 2015
சிரியாவை உருக்குலைக்கிறது அமெரிக்கா - கார்டூன்
Monday, November 09, 2015
ஹா...ஹா... நாட்டு நடப்பை அழகாக சொல்லும் கார்ட்டூன்!
Saturday, October 24, 2015
கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கை வண்ணம்.....
Friday, July 17, 2015
அடுத்த அமெரிக்க அதிபர் நாந்தேன்! :-)
Labels:
அமெரிக்கா,
அரசியல்,
கார்ட்டூன்கள்,
நகைச்சுவை
Saturday, July 11, 2015
அஇஅதிமுக வின் சாதனைப் பட்டியல் - கார்ட்டூன்
Labels:
அரசியல்,
கார்ட்டூன்கள்,
சமூகம்,
சாராயம்,
தமிழர்கள்
Thursday, July 09, 2015
'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வில் மோடி பற்றிய கார்ட்டூன்!
Thursday, June 04, 2015
10 ரூபாய் நோட்டில் காந்தி படம் இல்லையாம் - மோடியின் சாதனை!

சில மாநிலங்களில் மாத்திரம் காந்தி படம் இல்லாத நோட்டுக்களை புழக்கத்தில் விட்டு நோட்டம் பார்க்கிறது இந்துத்வா. பலமான எதிர்ப்பு எழுந்தால் வாலை சுருட்டிக் கொண்டு படுத்து விடுவோம். எதிர்ப்பு வரவில்லை என்றால் அனைத்து ரூபாய் நோட்டுகளிலிருந்தும் காந்தியின் படத்தை எடுத்து விடுவோம். இதுதான் அவர்களின் மறைமுக அஜண்டா.....
எனவே இந்திய நலனில் அக்கறை உள்ளவர்கள் இந்துத்வாவின் இந்த குள்ள நரித் தனத்தை எதிர்த்து பலமாக குரல் எழுப்ப வேண்டும்.
Monday, February 09, 2015
ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது! வாழ்த்துக்கள்.

பெரும்பான்மை இந்துக்களின் மன ஓட்டம் இந்துத்வாவுக்கு எதிராக உள்ளதையே டெல்லி தேர்தலின் முடிவுகள் காட்டுகின்றன. இனிமேலாவது வறுமையிலும் தீண்டாமையிலும் தினம் செத்து மடியும் பெரும்பான்மை இந்துக்களை அவர்களின் உரிமைகளை பெற்றுத் தர இந்துத்வா முயலட்டும். இதை விடுத்து இஸ்லாமியரிடத்தில் தொடர்ந்து மோதல் போக்கை கடை பிடித்தால் இந்துக்களே பிஜேபியை ஒட்டு மொத்தமாக வீட்டுக்கு அனுப்புவார்கள்.
தனக்கு மிகப் பெரிய ஆதரவு இருக்கிறது என்று படம் காட்டி வந்த டெல்லி இமாமின் ஆதரவை 'வேண்டாம்' என்று திருப்பி முகத்திலடித்து இன்று அறுதி பெரும்பான்மை பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை வாழ்த்தி வரவேற்போம். இந்தியா முழுக்க இதன் தாக்கம் இனி வரும் தேர்தலிலும் ஒலிக்கட்டும். காவிகளின் கொட்டம் துடைப்பத்தால் அடக்கப்படட்டும்.
Labels:
'ஆம் ஆத்மி',
அரசியல்,
இந்தியா,
இந்துத்வா,
கார்ட்டூன்கள்,
நரேந்திர மோடி
Monday, January 26, 2015
பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர் கே லஷ்மண் மறைவு!
இந்திய கார்ட்டூன் உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த ஆர் கே லஷ்மண் நோய் வாய்பட்டதனால் திங்கட்கிழமை இறந்துள்ளார். அவருக்கு வயது 93. நமது தமிழ் பத்திரிக்கை துறையில் கார்ட்டூனிஷ்ட் மதனுக்கு எப்படி ஒரு தனி இடமோ அது போல் ஆங்கில பத்திரிக்கை உலகில் இவரது கார்ட்டூனுக்கு மிக மதிப்பிருந்தது. 'காமன் மேன்' என்ற ஒரு பாத்திரத்தை உருவாக்கி அதன் மூலம் இந்திய அரசியலையும் உலக அரசியலையும் கலக்கியவர். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் இவர் வரைந்த பல கார்ட்டூன்கள் மிக யதார்த்தமாக இருக்கும்.
1921 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்தார். இவரை பிரிந்து வாடும் இவரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
பாலிவுட் நடிகர்கள் மீது லவ் ஜிகாத் குற்றச்சாட்டு
இந்து மகா சபையின் வார இதழான ‘இந்து சபா வார்தா’ தலையங்கத்தில் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:
பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், ஆமிர்கான், சயீப் அலிகான், ஃபர்தீன் கான், இம்ரான் ஹாஷ்மி ஆகியோர் இந்துப் பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் தங்கள் மனைவிகளை நேசிப்பது உண்மை யானால், அவர்களை திரும்பவும் இந்துக்களாக மாற்றவேண்டும்.
முஸ்லிம் நடிகர்களுக்கு ஜோடியாக இந்து நடிகைகளை நடிக்கச் செய்யுமாறு திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு நிர்பந்தம் அளிக்கப்படுகிறது. முஸ்லிம் நடிகர்கள், இந்து கதாபாத்திரங்களில் இந்து நடிகைகளுடன் நடிப்பதை பார்க்கும் இந்துப் பெண்கள், முஸ்லிம் இளைஞர்களை திருமணம் செய்துகொள்வதை ஒழுக்கக் கேடாக கருதுவதில்லை. இவர்கள் தங்கள் பகுதியில் வசிக்கும் முஸ்லிம் இளைஞனை தங்கள் ஆதர்ச நாயகனாக பார்க்கத் தொடங்கி விடுகின்றனர். இந்த திரைப்படங்கள் மற்றும் நடிகர்கள் காரணமாகவே இந்துப் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களை திருமணம் செய்வதை இயல்பானதாக கருதுகின்றனர். லவ் ஜிகாத்துக்கு இந்த முஸ்லிம் நடிகர்கள் தூண்டுகோலாக இருக்கின்றனர். இவ்வாறு அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த வார இதழின் ஆசிரியர் முன்னா குமார் சிங்கை தொடர்புகொண்டு கேட்டபோது, “இந்த முஸ்லிம் நடிகர்கள் தங்கள் மனைவிகளை நேசிக்கிறார்கள் என்றால், பிறகு ஏன் தங்கள் மனைவிகளை முஸ்லிம்களாக மாறச் செய்து இஸ்லாமிய கலாச்சாரத்தை பின்பற்றச் செய்தனர்?இந்தப் பெண்கள் தங்கள் பெயருக்கு பின்னால் முஸ்லிம் குடும்பப் பெயர்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இப்பெண்கள் தங்கள் (இந்து) குடும்பப் பெயர் களையே வைத்துக்கொள்ள ஏன் அனுமதிக்க கூடாது?” என்றார்.
தமிழ் இந்து நாளிதழ்
25-01-2015
இந்து பெண்களை இதை விட அசிங்கமாக வேறு எவரும் கேவலப்படுத்த முடியாது. ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு என்பது இவர்களைப் பொறுத்த வரை சரியாக பொருந்தி போகிறது. அமீர் கானோ, ஷாருக் கானோ அல்லது சய்யீஃப் அலி கானோ இஸ்லாத்துக்கு அத்தாரிட்டி கிடையாது. இவர்கள் அனைவரும் கூத்தாடிகள். பணம் கொடுத்தால் எந்த வேஷமும் கட்ட தயங்க மாட்டார்கள். இஸ்லாத்தை பின் பற்றும் ஒருவன் நாளொரு பெண்ணோடு அரை குறை ஆடையுடன் ஆடி சமூகத்தை சீரழிப்பானா? எனவே பெயரைத் தவிர்த்து இவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஒரு கூத்தாடியை திரையில் பார்த்து, அவனது பெயரை பார்த்து மயங்கி இந்து பெண்கள் முஸ்லிம் இளைஞர்களிடம் மயங்கி விடுகின்றனர் என்ற வாதமானது இந்திய பெண்களை எவ்வளவு கேவலமாக இந்த இந்துத்வாவினர் நினைக்கின்றனர் என்பது தெளிவாகிறது. இந்து மக்கள் இந்த வாதத்தை ஒட்டு மொத்தமாக நிராகரிக்க முன் வர வேண்டும். இஸ்லாமிய இளைஞர்கள் திட்டமிட்டு இந்து பெண்களை கவர்கிறார்கள் என்று முன்பு சொன்ன குற்றசாட்டு பொய் என்பதை இதன் மூலம் அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள்.
தமிழ் திரைப்படத் துறையில் அனைவரும் ஹிந்து மத ஹீரோக்களே! இவர்கள் யாரையாவது பார்த்து முஸ்லிம் பெண்கள் இந்து மதத்துக்கு மாறுகின்றார்கள் என்று சொன்னால் பலரும் சிரிக்க மாட்டார்களா?
கூத்தாடிகளான சல்மான் கானையும், ஷாருக்கானையும், அமீர்கானையும் காட்டி எந்த முஸ்லிமும் பெருமைபட்டுக் கொள்ள மாட்டான். இவர்கள் குர்ஆனின் படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில்தான் முஸ்லிம்களுக்கு பெருமை இருக்கிறது. இஸ்லாம் பிறப்பினால் ஒருவனுக்கு வருவதில்லை. அவன் வாழ்வதின் மூலமாகத்தான் இஸ்லாமியனாக பார்க்கப்படுகிறான்.
இந்து மதத்தை பூரணமாக பின் பற்றும் ஒருவன் எவ்வாறு தந்தை பெரியாரை காட்டி பெருமைபட்டுக் கொள்ள முடியாதோ அது போல்தான் இந்த சினிமா கூத்தாடிகளான கான்களை காட்டி எந்த முஸ்லிமும் பெருமைபட்டுக் கொள்ள முடியாது.
இந்து மதத்திலுள்ள வர்ணாசிர கொள்கைகளையும், மூடப் பழக்கங்களையும் முதலில் ஒழிக்க முற்படுங்கள். மத மாற்றங்கள் தானாக குறைய ஆரம்பிக்கும்.
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.
Labels:
அரசியல்,
இந்தியா,
இந்துத்வா,
கார்ட்டூன்கள்,
சினிமா
Sunday, January 25, 2015
செண்பகமே.... செண்பகமே..... தென் பொதிகை... சந்தனமே!
Labels:
அமெரிக்கா,
அரசியல்,
கார்ட்டூன்கள்,
நகைச்சுவை
ட்விட்டரில் மோடு முட்டி :-)
"நீர்யானைக்கு ஆங்கிலத்தில் வாட்டர் எலிபண்ட்(WATER ELEPHANT) ன்னு குழந்தைக்குசொல்லி கொடுத்தது ஒரு குற்றமாயா?
பேரன்ட் மீட்டிங்ல டீச்சரமா என்மானத்தா வாங்கிருச்சு" - ட்விட்டரில் மோடு முட்டி
.JPG)
பேரன்ட் மீட்டிங்ல டீச்சரமா என்மானத்தா வாங்கிருச்சு" - ட்விட்டரில் மோடு முட்டி
Saturday, January 24, 2015
குரங்குகளை கட்டுப்படுத்துங்கள்: அமெரிக்கா கட்டளை!

டெல்லியில் அதிகமாக இருக்கும் குரங்குகளால் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இடையூறு நேரக் கூடாது என்பதற்காக, சில பகுதிகளிலிருந்து குரங்குகளை விரட்டும்படி, அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் இந்திய உள்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் இந்து நாளிதழ்
24-01-2015
இதற்கு தமிழ் இந்து நாளிதழில் வந்த பின்னூட்டங்கள்.
RAJA
குரங்குஎன்று தாழ்வாக நினைக்காதீர்கள். அது இந்தியர்களின் வாழ்வின் ஒரு அங்கமாக , ஏன் தெய்வமாக போற்றப்படுவது. அதனை அவ்வளவு சுலபமாக ஊரை விட்டு விரட்ட எந்த ஒரு உண்மையான ஹிந்துவும் ஒப்புக்கொள்ள மாட்டான் .ஒபாமாவின் இந்த வேண்டுகோள் ஹிந்துக்களையும் , எங்கள் கடவுளையும் அவமானப்படுத்துவதாக எடுத்துகொண்டு, நம்முடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும், ஹிந்துக்களின் அரசான பி ஜே பி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்
DANDY
குரங்குக்கு மாத்திரம் அல்ல எலிகளுக்கு கூட இந்தியாவில் கோயில்கள் …இவைகளுக்கு செலவளிகப்படும் பணத்தை ….வீதியில் பசியால் துடிக்கும் பிச்சைகாரர்களுக்கு கொடுக்கலாம் ...
Ramesh Sargam
இந்து அமைப்பினர் கண்டனம். குரங்கு என்று கூறாதீர்கள். பகவான் அனுமனின் வாரிசு என்று கூறுங்கள்!!
கபீர்
இராமருக்கு பாலம் கட்ட உதவியாயிருந்து என்று எழுதியுள்ளீர்களே, எப்படி விரட்ட போகின்றீர்கள்.
Srinivasan Srinivasan
யாரோ ஒரு அண்டை நாட்டுக்காரர் வருகைக்காக ஏன் நம் மூதாதையர்களை விரட்ட வேண்டும்? :)
Labels:
CARTOONS,
அமெரிக்கா,
அரசியல்,
இந்தியா,
கார்ட்டூன்கள்
Tuesday, January 20, 2015
என்னம்மா நீங்க.... இப்டி பண்றீங்களேம்மா! :-)
எதிரும் புதிருமாய் எல்லாவற்றிலும்
இருக்கும் மாமியாரும் மருமகளும்
சீரியல் பார்த்து விட்டு சோகத்தில்
ஒன்றாக மூக்கை சிந்துவதில் மட்டும்
ஒன்றிணைந்து விடுகின்றீர்களே! எப்படி?
என்னம்மா நீங்க..... இப்டி பண்றீங்களேம்மா!
Monday, January 19, 2015
THE INNOCENT WORLD MUSLIMS - அப்பாவிகளான உலக முஸ்லிம்கள்!
Labels:
CARTOONS,
ISLAM,
MUSLIMS,
இஸ்லாம்,
கார்ட்டூன்கள்
Saturday, January 17, 2015
அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ் - சிறு கதை

அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ் - சிறு கதை
கடுமையான பசியோடு ‘அம்மா…சாப்பாடு ரெடியாயிடுச்சா..’ என்று கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் ஹஸன்! ‘கொஞ்சம் இருப்பா! மழையில இந்த உரியா மட்டை நனைஞ்சு போயிடுச்சு. அடுப்பு பத்த மாட்டேங்குது. இப்போ சரி பண்ணிடறேன்” என்று சொல்லிக் கொண்டே அடுப்பில் தனது வாயால் ஊத ஆரம்பித்தார் தாய் ஆமினா. தனது தாய் அடுப்பு பத்த வைக்க படும் சிரமத்தை பார்த்துக் கொண்டே தனது பள்ளி சீருடைகளை களைய ஆரம்பித்தான் ஹஸன்.
ஹஸன் அரசு பள்ளிக் கூடத்தில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறான். வறுமையான குடும்பம. தாய் ஆமினா வீட்டு வேலை முடிந்த கையோடு அக்கம் பக்கத்தில் இருக்கும் வீடுகளில் பாத்திரங்கள் தேய்த்து கொடுப்பதும் வீடுகளை பெருக்கி கொடுப்பதுமாக மேலதிக வேலையை செய்து வந்தார்.
அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து தனது ஒரே மகனை எப்படியும் மேல் படிப்பு படிக்க வைத்து விட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு இருந்து வந்தார். தனது கணவன் பிளம்பிங் வேலைக்கு தினக் கூலியாக சென்று ஓரளவு பணம் கொண்டு வந்தாலும் வீட்டு வாடகைக்கும் சாப்பாட்டுக்குமே அது சரியாக இருந்தது. எனவே பிள்ளையின் படிப்பு குடும்ப சூழலால் வீணாகி விடக் கூடாது என்பதற்காக மேலதிக வேலைகளையும் பார்த்து வந்தார் ஆமினா!
இன்னும் வேலைக்கு போன கணவன் வரவில்லை. மணியோ இரவு எட்டாகி விட்டது. ‘தம்பி வா….உங்க வாப்பா வர நேரமாகும் போல இருக்குது. நீ பசி தாங்க மாட்டே..’ என்று சொல்லிக் கொண்டே சமைத்த சாப்பாட்டை தட்டில் எடுத்து மகனுக்கு பரிமாறினார்.
‘இன்னைக்கு என்ன லேட்டா வீட்டுக்கு வந்தே..’
‘பள்ளிக் கூடம் விட்டு கொஞ்ச நேரம் பசங்களோட விளையாடிக்கிட்டு இருந்தேம்மா’ என்று சொன்னான். மனதுக்குள் பொய் சொல்கிறோமே என்ற குறுகுறுப்பும் இருந்தது. பருப்பு சாம்பாரும் மீன் பொறியலும் வாய்க்கு ருசியாக இருக்கவே வழக்கத்தை விட சற்று அதிகமாகவே சாப்பிட்டான் ஹஸன். காலையிலும் இரவிலும் மட்டுமே வீட்டு சாப்பாடு. பள்ளிக் கூடம் உள்ள நாட்களில் மதிய உணவை அரசு போடும் சத்துணவில் சரி கட்டி விடுவான்.
‘பள்ளி கூடத்துல மத்தியானம் என்ன சாப்பாடு’
‘கோதுமை உப்புமா. அவுச்ச முட்டைம்மா’
“படிக்கிற புள்ளே! தெம்பா இருந்தாத்தான் நல்லா படிக்க முடியும் எதையும் வீணாக்காத சாப்பிடணும் தெரியுதா”
‘நான் எதையும் வீணாக்க மாட்டேன்மா..நல்லா சாப்பிட்டேன்’
மகனின் தலையை வருடியவாறு ‘சாப்பிட்டுட்டு போய் படுத்துக்கோ! காலையில தொழுகைக்கு அஞ்சு அணிக்கெல்லாம் வாப்பா எழுப்புவாறு’
‘சரிம்மா’
ரம்ஜானும் வந்தது. 30 நோன்பை பூர்த்தியாக்கிய சந்தோஷத்தில் அனைவரும் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருந்தனர். ஹஸனுக்கு புதிய சட்டையும் பேண்டும் அவனது வாப்பா வாங்கி கொடுத்திருந்தார். மதியம் வீட்டில் பிரியாணி சாப்பிட்ட வேகத்தோடு பெருநாள் கொல்லைக்கு நண்பர்களோடு செல்ல ஆயத்தமானான் ஹஸன்.
‘ஹஸன்! இந்தா 30 ரூபா. பெருநாள் கொல்லைக்கு சென்று தொட்டி ஆட.’
‘சரிம்மா..நான் போய்ட்டு வர்றேன்’
‘பார்த்து பெரிய தொட்டில்லாம் ஆடாதே! கவனம்’
தனது பள்ளி நண்பர்கள் நால்வரோடு பெருநாள் கொல்லைக்கு சென்றான் ஹஸன். பெரும் கூட்டம் கூடியிருந்தது. பெரும் பெரும் தொட்டிகள், விளையாட்டு சாமான்கள், தற்காலிக பலகார கடைகள் என்று எங்கும் ஜே ஜே என்று இருந்தது.
ஹஸன் மட்டும் ஏதோ ஒரு கடையை தேடிக் கொண்டிருந்தான். ‘டேய்…என்னடா அங்கேயும் இங்கேயும் பார்க்ககுற’
‘சமையல் சாமான் எல்லாம் போட்டு வச்சுறுக்குற கடை எங்கடா இருக்கு’
‘அதோ..அந்த பெரிய தொட்டிக்கு பக்கத்துல பார்’
நண்பர்கள் அனைவரும் அந்த கடையை நோக்கி சென்றனர்.
அந்த கடையில் சமையல் பாத்திரங்கள் முதற் கொண்டு பெரிய அடுப்புகள் வரையில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. தனது தாயார் தினம் தினம் சமைக்க கஷ்டப்படுவதை மனதில் இருத்திக் கெண்டே…’அந்த அடுப்பு எவ்ளோ பாய்’ என்று கேட்டான் ஹஸன்.
‘350 ரூபாய் தம்பி.. மண்ணெண்ணை அடுப்பு. அருமையா எரியும்’
‘கொஞ்சம் குறைச்சு குடுங்கோ’
‘சின்ன பையனா இருக்கிறே…சரி உனக்காக 300 ரூபாய் …கடைசி விலை. எடுத்துக்கோ’
பணத்தை கடைக்காரரிடம் கொடுத்து விட்டு அடுப்பை வாங்கிக் கொண்டான்.
‘டேய்..உனக்கு கிறுக்கு புடுச்சுடுச்சாடா..தொட்டி ஆட குடுத்த பணத்துல அடுப்பு வாங்குற. அதுவும் உங்க அம்மா கொடுத்தது 30 ரூபா தான். 300 ரூபா எங்கேயிருந்துடா வந்துச்சு’
பதில் பேசாமல் நேராக வீட்டுக்கு அடுப்போடு சென்றான் ஹஸன். சீக்கிரமே மகன் திரும்பி வருவதைப் பார்த்த ஆமினா ஆச்சரியத்தோடு ‘என்னடா இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க’ என்று கேட்டார். கையில் ஒரு பார்சலை பார்த்து விட்டு ‘என்ன வாங்கி வந்துறுக்குற…விளையாட்டு சாமானா’ என்று கேட்டுக் கொண்டே பேப்பரை கிழிக்க ஆரம்பித்தார். உள்ளே அழகிய அடுப்பு. ஆச்சரியத்தோடு பார்த்தவளாக ‘இது ஏது?’ என்று கேட்டார்.
‘உனக்கு தாம்மா! நான்தான் வாங்கினேன்.’
‘நீ வாங்கினியா! இது விலை அதிகம்ல…ஏது பணம்’
பதில் சொல்வில்லை ஹஸன். ஆமினாவின் முகம் சற்று மாறியது. ‘சொல்லுடா இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?’
ஹஸனின் காதை திருகினாள். ‘திருடினியா’
‘ஐயோ..இல்லம்மா…பள்ளிக் கூடம் விட்டவுடன் அருகிலேயே இருக்கும் நாயர் கடையில தினமும் இரண்டு மணி நேரம் பாத்திரங்களை கழுவுவேன். ஒரு டீ குடுத்து 15 ரூபாவும் குடுப்பாரு. அதை தினமும் சேர்த்து வச்சேன். நீ தினமும் அடுப்பு பத்த வைக்க சிரமப்படுற..கண்ணுல்லாம் ஒனக்கு எரியுது. அதனால அடுப்பு வாங்கத்தான் நான் வேலை செஞ்சேன்.’
கண் கலங்கியவளாக ‘என் ராசா..’ என்று அவனை அணைத்துக் கொண்டு…’இத ஏம்பா எங்கிட்டே முன்னாலேயே சொல்லல’ என்று விம்மினார்.
‘நான் வேலை செய்யிறத சொன்னா…நீ திட்டுவே…நாயர் கடையில போய் எனக்கு வேலை கொடுக்க வேணாம்ணு சொல்லுவே..அதான் ஒங்கிட்ட சொலலல’
தனது மகனின் அன்பையும் சமயோஜித புத்தியையும் கண்டு புளங்காகிதம் அடைந்தவளாக இறைவனுக்கு நன்றி செலுத்த தொழுகைக்கு பயன்படுத்தும் துணி விரிப்பை தேட ஆரம்பித்தார் ஆமினா….
--------------------------------------
'திண்ணை' இதழில் பிரசுரமான எனது சிறுகதை இது! அந்த இதழில் கதைக்கு வந்த பின்னூட்டங்கள்.
ஹசன் says:
December 31, 2012 at 10:00 am
மாஷா அல்லாஹ் அருமையான கதை.எதார்த்தமான எழுத்து நடை.குழந்தைகளுக்கு இது போன்ற கதைகளை சொல்வது மிக அவசியம்.அந்த மகன் கதாபாத்திரத்துக்கு தாங்கள் வைத்திருக்கும் பெயர் பொருத்தமாக உள்ளது. :-)
-------------------------------------
Sivakumar N, New Delhi says:
December 31, 2012 at 10:41 am
அருமை!!!
------------------------------------
தேமொழி says:
January 1, 2013 at 7:44 am
இது போன்ற கதைகளைப் படிப்பது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.
ஆசிரியருக்கு நன்றியும் புத்தாண்டு வாழ்த்துக்களும்.
…தேமொழி
---------------------------------
க்ருஷ்ணகுமார் says:
January 3, 2013 at 9:58 am
ஜெனாப் சுவனப்ரியன், உன்னதம்.
இதற்கு முன் தங்களுடைய இதுபோன்ற படைப்புகளை வாசித்ததில்லை. ஒரு ஆதர்ச குடும்பத்தை அழகாக காண்பித்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
-------------------------------
punaipeyaril says:
January 4, 2013 at 4:07 am
வழவழவென்று இல்லாமல் சுருக்கமான கதைக்கு பாராட்டுக்கள். ஆனால், “இறைவனுக்கு நன்றி செலுத்த ..” அப்ப பொறுப்பில்லாத புள்ளைகளை கொண்டவர்கள் இறைவனை திட்டுதல் சரி தானே….
Wednesday, January 14, 2015
இந்தியாவில் பலருக்கும் இனி பிரச்னைதான் :-)

'இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கையை கூட்ட ஒவ்வொரு இந்துவும் கட்டாயம் நான்கு குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்'
-பிஜேபி தலைவர் சாக்சி மஹாராஜ் இந்துக்களுக்கு வேண்டுகோள்.
Friday, January 09, 2015
'மீலாது நபி' - பிஜேபி கொண்டாடுகிறது!

'என்ன பாய்! பிஜேபி மீலாது நபி கொண்டாடராளே! இனி நீங்க எங்களுக்கு ஓட்டு போடுவேளா?"
'அப்படியே எங்க ஊரு பள்ளி வாசலுக்கு வந்து 'இறைவன் ஒருவனே! முஹமது நபி அந்த இறைவனின் தூதர்' என்று சொல்லி எங்களோடு தொழச் சொன்னீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்!பேஷா ஓட்டை போட்டுடலாம். என்ன சொல்றேள்'
'கொஞ்சம் இருங்கோ... நான் அப்பறமா வர்றேன்'......
Labels:
அரசியல்,
இந்தியா,
இந்துத்வா,
இஸ்லாம்,
கார்ட்டூன்கள்
Subscribe to:
Posts (Atom)









