Followers

Sunday, August 12, 2012

கழனி எல்லாம் காஞ்சு போச்சு....



கழனி எல்லாம் காஞ்சு போச்சு....

பாதம் ரெண்டும் வெடிச்சுப் போச்சு....

வயல்களெல்லாம் மனைகளாச்சு- அதனால்

மகசூலும் இங்கு கொறஞ்சு போச்சு......

மரத்தை எல்லாம் வெட்டியாச்சு.....

மழை வருவதையும் இங்கு நிறுத்தியாச்சு....

பாரம் இழுத்து கெடச்ச காசு இன்று....

டாஸ்மார்க்கில் போயே போச்சு......

வெந்த வயிறு காஞ்சு கெடக்கு- இதில்

வெட்கம் என்ன வேண்டிக் கெடக்கு....

கல்குவாரி, ஆற்று மணல், ஸ்பெக்ட்ரம்

ஊழல் என்று பார்த்து பார்த்து எங்கள்

கண்கள் ரெண்டும் பூத்துப் போச்சு....

அரசியல்வாதி, ஆன்மீகவாதி, நாத்திகவாதி

பணக்காரன், சினிமாக் காரன் என்று

எந்த இனமும் எங்களை இன்று வரை

ஏய்ப்பதில் ஒன்றாகி விடுவதைப் பார்த்து

என் பாழும் வயிறு பற்றி எரிகிறது....

பற்றி எரியும் என் வயிறை குளிரூட்ட......

வழி இருந்தால் கொஞ்சம் சொல்லிக் கொடு.....

வழி சொல்ல வகை இருந்தும்...

அம்மா ஓய்வெடுப்பதோ கொட நாட்டில்........

எனவேதான் கேட்கிறேன் உன்னிடம்....

வழி இருந்தால் கொஞ்சம் சொல்லிக் கொடு...

-சுவனப்பிரியன்



-----------------------------------------------------------

மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு – 19









11 comments:

அம்பாளடியாள் said...

இது நாளை வரும் எம் சந்ததியினரின் தலைஎழுத்து என்றாகி விட்டது :( :( மிகவும் வேதனைக்குரிய விசயம்.
பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி .

suvanappiriyan said...

திரு அம்பாளடியாள்!

//இது நாளை வரும் எம் சந்ததியினரின் தலைஎழுத்து என்றாகி விட்டது :( :( மிகவும் வேதனைக்குரிய விசயம்.
பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி .//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

மலர்மன்னன் says:
August 11, 2012 at 3:23 pm

//இதில் ரேஸிஸம் எங்கே வந்தது? — அய்யர்கள் மட்டுமே பூஜாரிகள் என்பது ரேஸிசம் இல்லாமல் பிறகென்ன…புனைப் பெயரில்//
ரேஸிஸம் என்றால் என்ன? அய்யர் என்பது ஒரு ரேஸா?
’வேளாளர்கள் தம்முள் நுண்ணறிவாற் சிறந்தாரை அறிவுநூல் ஓதுதற்கும் திருக்கோயில்களிற் கடவுள் வழிபாடு ஆற்றுவதற்கும் ஒரு வகுப்பினரப் பிரித்து வைத்தார்கள். இவர்களே தமிழ் நாட்டு அந்தணராவார். இவர்தம்மை இக்காலத்தார் ஆதிசைவர் என்றுங் குருக்கள், பட்டர், நம்பியார் என்றும் அழைப்பர்’ என்று மறைமலை அடிகள் ’வேளாளர் நாகரிகம்’ என்ற தமது நூலில் குறிப்பிடுகிறார் (பக்கம் 19 வ.உ.சி. நூலகம் சென்னை 600 014). அதாவது அர்ச்சர்கள் வேளாளர்களில் ஒரு பிரிவினர் என்கிறார். இன்னொரு இடத்தில் வேளாளரே சமஸ்க்ருதத்தில் பல நூல்கள் இயற்றினர் என்றும் கூறுகின்றார். இதை ஏற்பாரும் உள்ளனர், மறுப்பாரும் உள்ளனர் (முக்கியமாக கோபாலையர் ஒப்புக்கொள்ள மாட்டார்! புதுச்சேரி ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிடியூட்டில் பணீயாற்றிய மறைந்த ஸ்ரீ கோபாலையர் என்னை நன்கு அறிந்திருந்தார்!). என்ன செய்யலாம் சொல்லுங்கள். எனவேதான் நான் சொல்வது மண்டையைக் குழப்பிக்கொள்ளாமல் ஸ்டேட்ஸ்கோ வாக இருந்துவிட்டுப் போகட்டும் என்பதே. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இந்த விஷயம் காத்திருக்கிறது. நாமும் காத்திருப்போம். மற்றபடி எனக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றியெல்லாம் நான் விமர்சிக்க வேண்டும் என்று ஏன் வற்புறுத்துகிறீர்கள்? எந்த மடத்துடனும் எந்தக் கோயிலுடனும் எனக்குத் தொடர்பில்லை. நான் புலனாய்வுப் பத்திரிகை நிருபனும் அல்ல. இதைப்பற்றி வேண்டுமானால் தனியாக விவாதிக்கலாம். இங்கு தொடர்பில்லாத பின்னூட்டங்கள் மேலும் மேலும் வளர வேண்டுமா? அர்ச்சகர் விவகாரம், அது தொடர்பான அவசரச் சட்டம், அதன் இன்றைய நிலை ஆகிய இக்கட்டுரை தொடர்பான விஷயங்களூக்கு மட்டுமே இனி பதில் அளிப்பேன்.
அன்புடன்,
மலர்மன்னன்

-------------------------------

Kavya says:
August 12, 2012 at 7:15 am

ரேசிசம் என்ற சொல் ஆங்கிலம். அது ஐரோப்பியர்களிடையே புழங்கும் பொருளை அப்படியே இங்கெடுத்தாளப்பட்வில்லை.
என்னதான் எவர் சொன்னாலும், எழுதினாலும், இங்கே பலர் போட்ட பின்னூட்டங்களும் ஒரு ஜாதியினர் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் எதிர்த்துவருவதாலும், அந்த ஒரு ஜாதிக்கே பரம்பரைபரம்பரையாக இத்தொழில் போய்ச்சேருவதாலும், ஒரு ஜாதிக்கொரு நீதி என்ற அசிங்கமான் கோட்பாட்டிற்குள் கீழ் வருகிற்து எல்லாமே இங்கே.
அப்படியில்லையென்றால் ஏன் மற்றவரும் அர்ச்சகராகலாமென்பது எதிர்க்கபப‌டுகிறது?
திருப்பரங்குன்றத்தில் ஒரு தலித்து அர்ச்சகராக முடியுமா? அல்லது இன்றைய சைவப்பிள்ளை ஆக முடிய்மா? தேவரோ, முதலியாரோ ஆக முடியுமா? மற்ற கோயில்களில் இருக்கிறார்கள் என்று பேசாதீர்கள். திருப்பரங்குன்ற்த்தில், சிரிரங்கத்த்தில் பழனியில் திருத்தணியில்….ஆக முடியுமா? மறக்காமல் நினைவில் கொள்க. அந்த தலித்து, அந்த தேவர், அந்த பிள்ளை, அந்த முதலியார் எவ்வளவுதான் ஆன்மிக நெறியில் நின்றாலும் அவர் வேண்டாம். ஆனால் தேவ்நாதன் இலகுவாக அர்ச்ச்காரகலாம். பெண்ணிடம் சல்லாபித்து குருக்கள் ஆகலாம். எனவேதான் ஒரு ஜாதிக்கொரு நீதி. தராதரத்தை பரிசோதிக்காமல், ஆளை ஜாதிக்காக கோயிலுள் இறக்குகிறீர்கள். இதுவே ரேசிசம் என்ற சொல்லால் சுட்டிக்காட்டப்படுகிறது.
இது நம் கண்ணால் காணும் காட்சி. பொய்யா?
மறைமலை எழதிய சங்ககால வரலாறு நமக்குத்தேவையில்லை. மலர்மன்னன்.

VANJOOR said...

Saudi Arabia gives $62 million in aid to Myanmar Muslims

RIYADH (REUTERS) - Saudi Arabia's King Abdullah has ordered US$50 million (S$62.2 million) in aid be sent to a Muslim minority in Myanmar which a human rights group said has been targeted by the authorities since sectarian riots in June.

A report on the Saudi state news agency said the Rohingya community had been "exposed to many violations of human rights including ethnic cleansing, murder, rape and forced displacement".

"King Abdullah ... has ordered that assistance of the amount of US$50 million be provided to the Rohingya Muslim citizens in Myanmar," said the report which was carried by Saudi media on Sunday.

It did not say who was to blame for the abuses.

However, Human Rights Watch said on Aug 1 that the Rohingyas had suffered mass arrests, killings and rapes at the hands of the Myanmar security forces
.

The minority had borne the brunt of a crackdown after days of arson and machete attacks in June by both Buddhists and Rohingyas in Rakhine state, the monitoring group said.

.

VANJOOR said...

பஸ் பயணிகளின் தீராத சோகம்!

பஸ் கட்டணத்தைத் தமிழக அரசு சீரமைத்த பின்னர், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் நஷ்டத்திலிருந்து கட்டாயம் மீளத் தொடங்கியிருக்கும்.

இருப்பினும், பயணிகளின் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.

விபத்துகள், ஆபத்துகளில் சிக்கும் பயணிகளுக்கு உதவிட பஸ்களில் முதலுதவிப் பெட்டி வைக்கப்பட வேண்டும் என்பது அரசு ஆணை. இருப்பினும், பெரும்பாலான பஸ்களில் முதலுதவிப் பெட்டிகள் அறவே இல்லை.

பஸ்களில் குடிநீர் பிடித்து வைக்கப்படுவதில்லை; பயணிகள் பஸ் நிலைய வளாகக் கடைகளில் சில மடங்கு கூடுதல் விலைக்கு விற்கப்படும் குடிநீர் போத்தல்களையும், குளிர்பானங்களையும் வாங்கி அருந்தநேர்கிறது.

பஸ்களில் உள்ள இருக்கைகளில் 2 பேர் வசதியாக அமர்ந்து பயணிக்க முடியாமல் குறுகலாக இருக்கிறது.

3 மணி நேரத்துக்குப் பிறகு அமரமுடியாதபடி இருக்கை சூடேறி "மூலாதாரத்தையே' பொசுக்குகிறது.

பக்கத்தில் இருக்கும் கண்ணாடியும் ரப்பர் பீடிங்கும் ஊடலில் ஈடுபட்டு, அவசரத்துக்கு திறக்கவோ மூடவோ முடியாமல் மனைவிமார்கள் முன்னிலையில் கணவன்மார்களைத் தலைகுனிய வைக்கிறது.

பஸ்களின் தரைப் பகுதியில் பலகைகள் பெயர்ந்தும் ஆணிகள் நீட்டிக்கொண்டும் பயணிகளையும் அவர்களுடைய லக்கேஜுகளையும் பதம் பார்க்கின்றன.

சில பஸ்களில் புட்ஃபோர்டுகள் என்று அழைக்கப்படும் படிகள் சரிந்தும் உடைந்தும் பக்கவாட்டுத் தகரம் கிழிந்தும் காணப்படுகின்றன.

இவை பயணிகளின் வேட்டி, சட்டைகளை மட்டும் அல்லாமல் கை, கால்களையும் கிழிக்கின்றன.

தொலைதூரப் பயணங்களில் பயணிகள் நல்ல உணவுக்காக அல்லல்படுகின்றனர்.

அரசியல் செல்வாக்கு மிக்கப் பிரமுகர்களால் நடத்தப்படும் உணவகங்களில், அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளின் கட்டாயத்தின்பேரில், பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.

தரமும் இல்லாமல் விலையும் கூடுதலாக இருக்கும் இந்த உணவகங்களுக்கு மக்களைக் கொண்டுபோய்த் தள்ளும் சேவையை எந்த ஆட்சி வந்தாலும் தவறாமல் செய்கின்றனர் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள்.

பயணிகள் சங்கம் மூலம் நீதிமன்றங்களில் பொதுநல வழக்கு தொடுத்தால்தான் இதற்கு விடிவுகாலம் பிறக்கும் என்று தோன்றுகிறது.

போக்குவரத்துத்துறை செயலாளரோ போக்குவரத்து அமைச்சரோ இந்தக் கொள்ளையைத் தடுத்து நிறுத்துவார்கள் என்று தோன்றவில்லை.

போக்குவரத்துக் கழகமே ஹோட்டல் நடத்தலாம் என்று யோசனை கூறலாம் என்றால் அந்தச் சாப்பாடு, சிற்றுண்டிகளும் 3 விதமாகப் பிரிக்கப்பட்டு ""சாதாரணம்'', ""சொகுசு'', ""வயிற்றில் நில்லாதது'' என்று தயாரித்துவிடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது.

பஸ் சேவையை ஒழுங்காக நடத்தினாலே போதும்.

பஸ்களில் டயர் பஞ்சர் ஏற்பட்டால்கூட அதை சரி செய்யத் தேவையான கருவிகள் பஸ்களில் வைக்கப்படுவதில்லை.

பழுதுகள் பெரியதாக இருந்தால் பல மணிநேர தவம்தான்!

அருகேயுள்ள பணிமனைகளில் இருந்து பழுதுகளை நீக்க ஊழியர்கள் வரும் வரை, பயணிகள் கொளுத்தும் வெயிலிலோ, கொட்டும் மழையிலோ பரிதவிக்க வேண்டும்.

பயணிகளை வேறு பஸ்களில் ஏற்றிவிட ஊழியர்கள் நிறுத்தினால், பல பஸ்கள் நிற்பதில்லை.

கோட்டம் வேறு, மண்டலம் வேறு என்று காரணம் கூறப்படுகிறது.

எல்லாமே தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பஸ்கள்தானே?

இதில், ஏன் ஜாதிப்பிரிவினை?

பழைய பஸ்களுக்கு வண்ணச் சாயம் பூசப்பட்டு, புதிய பஸ்களாகவே வலம் வருகின்றன.

இவற்றைச் சீரமைப்பதிலோ, அன்றாடம் பராமரிப்பதிலோ நிர்வாகம் சரிவர அக்கறை காட்டுவதில்லை.

தனியார் பஸ் உரிமையாளர்கள் தங்களது பஸ்களைப் பராமரிக்கும் அளவுக்கு, அரசு நிர்வாகமும் மாற வேண்டும்.

அதுகூட வேண்டாம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநில அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு இணையாகவாவது சேவை இருக்கலாம் அல்லவா?

சென்னையிலிருந்து பெங்களூருக்கு தமிழக அரசு விரைவு பஸ்களிலும் கர்நாடக பஸ்களிலும் பயணிப்பவர்களைக் கேட்டால் தர வித்தியாசம் குறித்துச் சொல்வார்கள்.


தமிழகத்தின் தொலைதூர பஸ்களில், பயணிகள் பார்ப்பதற்காகத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டன.

ஆனால், சரியாகப் பராமரிக்கப்படாததால் பல பஸ்களில் இயங்காமல், காட்சிப் பொருளாகவே உள்ளன.

சில பஸ்களில் எழுதப்பட்டிருக்கும் அந்தந்த பணிமனைகளின் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.

பஸ் நிலைய வளாகங்களில் சுகாதாரமற்ற நிலையில் உள்ள கழிவறைகளில் பயணிகள் சிறுநீர் கழிக்கக் கூட அல்லல்படும் நிலையுள்ளது.


source ;தினமணி.

THAKAVAL: mugavai abbas

suvanappiriyan said...

வாஞ்சூர் பாய்!

//பஸ் பயணிகளின் தீராத சோகம்!//

சுட்டிக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வவ்வால்!

//ஒரே நகைச்சுவை தான் போங்க, சு.பிக்கு இதெல்லாம் புரிய இன்னும் 35-45 ஆண்டு ஆகும்,ஏன் எனில் அப்போது அரேபியாவில் எண்ணை காலியாகி இருக்கும் :-))//

என்னைக் கேட்டால் இந்த எண்ணெய் வளம் தீர்ந்தால் நல்லது என்பேன். பணம் அதிகமாக குவிவதால்தான் சில அநாச்சாரங்கள் நம்மை மீறி குடி கொண்டு விடுகிறது. முகமது நபி காலத்திய இஸ்லாமிய எழுச்சி ஏற்பட அரபுகளிடம் பொருளாதாரம் குறைய வேண்டும். அது நடந்தால் நல்லதே!

அடுத்து நீங்களும் சார்வாகனும் சவுதியை பற்றி அநியாயத்துக்கு கவலை படுவதை விடுத்து ஸ்ரீரங்கம் கோவிலும் சிதம்பரம் கோவிலும் அர்ச்சகர்களாக ஒரு தலித்தை நியமிக்க முயற்ச்சிப்பீர்களா? இந்த மண்ணின் மைந்தன் சூத்திரன் என்று ஓரம் கட்டப்பட்டு சேரிகளில் புரண்டு கொண்டிருக்கிறானே அதைப் பற்றி ஏதாவது பதிவுகள் எழுதி புரட்சிக்கு வித்திடக் கூடாதா? அப்படி ஏதும் நடந்து விட்டால் என் ஓட்டு உங்கள் இருவருக்குதான். :-)

Anonymous said...

paandiyan says:
August 11, 2012 at 11:20 am

//இந்துக்கள் பலவகை.//
I like this comedy. after vadivel, thinnai can promote so many vadivel to cini industry

---------------------------

Kavya says:
August 12, 2012 at 6:50 am

ஆடிக்கு அம்மனுக்குக் கூழ் ஊற்றி, கருவாட்டுசமையல் படைப்பவரும்
பெரியபாளையத்துக்கு யாத்திரை சென்று அங்கு மட்டன் குழம்பு சமைத்து வணங்குபவரும்
கருப்பசாமிக்கு அருவாளும் சாராயமும் வைத்து வணங்கும் மதுரை மக்களும்
சக்கிலியன் மதுரை வீரனைக் குலதெய்வமாக வழிபடும் தேனி மாவட்ட மக்களும் (பல தேவமார் குடும்பங்களுக்கு அவந்தான் குலதெய்வம் எனபது வியப்பான செய்தி!).
அதே சமயம்,
இவையனத்தையும் செய்யாதவர்கள் மட்டுமல்லாமல், இத்தெயவங்களை
வணங்காத நீங்களும் இந்துக்கள்தான்.

ஆனால் இருவகையல்ல, பலவகை இந்துக்கள்.

இல்லை நாங்களும் வணங்குவோமென்று வாதத்துக்கு ஜோடித்தீர்களேயானால்
சிவனை வணங்காத சிரிவைணவர்களும், சிவனை வணங்கும் மற்றவர்களும்
இந்துக்கள்தான். ஆனால் இருவகையான இந்துக்கள். அவ்ர்கள் வந்து இல்லை…இல்லை நான்கள் சிவனையும் திருமாலையும் ஒன்றாக வண்ங்குவோம் என்று சொலல்மாட்டார்கள். கோமதிநாராயணன் என்று சங்கரன்கோயிலில் உண்டு. அது சிரிவைண்வார்களால் ஏற்றுக்கொள்ள்ப்பட்டதன்று. சைவர்களால் ஜோடிக்கப்பட்ட தெய்வம். அல்லது பொது இந்துக்களால். அக்காலத்தில் சைவ வைணவ சண்டையிருந்தது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் நாயக்க மன்னனால் ஜோடிக்கப்பட்ட கற்ப்னை. அதே காரணத்தால்.

வடிவேலு காமெடி இப்படியிருக்காது. சொலலப்பட்ட உண்மைகளை எதிர்நோக்க அஞ்சி ஏதோவொன்றைச் சொல்லிவிட்டு மறைப்பதுதான் அவர் காமெடி வகை. பின்னர் மக்களிடம் உதைபடுவார். ஆனால் அந்நகைச்சுவையில் ஒரு கருத்தை நமக்குச்சொல்கிறார். உண்மையைத் தனக்கு வசதியாக மாற்றிக்கொண்டு திரிபவன் கடைசியில் அமபலப்படுத்தடுவான் எனபதே.

இபோது சொல்லுங்கள்: ஆர் அந்த காமெடியை இங்கே செய்கிறார்கள்.?

சொல்லுங்கள். வைதீக மதத்தவரான உங்களுக்கும் அம்மனுக்கு கருவாடு படையல் வைக்கும் மற்றவர்களும்
ஒரே வகையான இந்துக்களா?

வேறுபாடுகள் இந்துமதத்தினை அழித்துவிடா. அவை நன்கு வளர்க்கும்.
மலர்மன்னன் போன்ற தீவிர இந்துக்கள் பயப்படலாம். சாதா இந்துக்களாகிய (நாங்கள் பயப்பட மாட்டோம்.

வேறுபாடுகள் வாழ்க ! பல்லாண்டு வாழ்க!

Anonymous said...

Brother S.P.,

///முகமது நபி காலத்திய இஸ்லாமிய எழுச்சி ஏற்பட அரபுகளிடம் பொருளாதாரம் குறைய வேண்டும். அது நடந்தால் நல்லதே!///


சமூகத்திற்கு பக்ரு ஏற்படுவதை நபி (ஸல்) அவர்களே விரும்பவில்லை.

தாங்கள் ஒரு நாட்டு மக்களுக்கு பக்ரு ஏற்பட்டால் நல்லது என்று சொல்லுவது, நபி (ஸல்) அவர்கள் கூற்றுக்கு முரணாக இருக்கிறதே!

- ismath

VANJOOR said...

அஸ்ஸாம் மக்களுக்கு நிவாரணம்! ரிஹாப் சாதனை!

அஸ்ஸாமில் போடோக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே நிகழ்ந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் 149 அகதிகள் முகாம்களிலும் ரிஹாப் தன்னார்வ சேவைத் தொண்டர்களின் துயர் துடைப்பு பணிகள் தொடர்கின்றன.

ரிஹாப் இந்தியா பவுண்டேசன் பொதுச் செயலாளரும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினருமான ஒ.எம்.அப்துல் ஸலாம் முகாம்களில் நடைபெறும் துயர் துடைப்பு பணிகளுக்கு தலைமை தாங்கி வழி நடத்தி வருகிறார்.

தினமும் 150 ரிஹாப் தொண்டர்கள் சேவை களத்தில் பணியாற்றி வருகின்றனர்.

முதல் கட்டமாக உணவு, துணிகள், மருந்து ஆகியவற்றை முகாம்களுக்கு கொண்டு சேர்ப்பதே தங்களுடைய பணி என்று ஒ.எம்.அப்துல் ஸலாம் கூறுகிறார்.

அத்துடன் அகதி முகாம்களில் தங்கியிருப்போர் தங்களுடைய கிராமங்களுக்கு திரும்பிச் செல்லவும், அவர்களுடைய மறுவாழ்வுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்வோம் என அவர் தெரிவித்தார்.

சேதமடைந்த வீடுகளை புனரமைப்பது, தற்காலிக ஷெல்டர்களை அமைப்பது ஆகிய பணிகளை ரிஹாப் தன்னார்வ சேவைத் தொண்டர்கள் செய்து வருகின்றனர்.

காணாமல் போனவர்கள், மரணம், வன்முறை, வீடு சேதம், இதர அத்துமீறல்கள் ஆகியவற்றில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வழக்கறிஞர்கள் அடங்கிய சட்ட உதவிக்குழு, மருத்துவ சேவைக்கு டாக்டர்கள், பார்மஸிஸ்டுகள், லேப் டெக்னீசியன்கள் ஆகியோரின் சேவையையும் ரிஹாப் அளித்து வருகிறது.

இங்கு சொடுக்கி >>>
ரிஹாப் இந்தியா பவுண்டேசன்!
<<< விடியோ காணவும்

ரிஹாப் இந்தியா பவுண்டேசனுக்கு உங்கள் உதவிகளை செய்திட நினைக்கும் நல்ல உள்ளங்கள் அதை எப்படி அனுப்புவது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் puthiyathenral@gmail.com க்கு தொடர்பு கொள்ளவும்.


SOURCE: http://www.sinthikkavum.net/

சசிகலா said...

வாக்களிக்கும் முன் நினைத்தள் நலம்.