Followers

Sunday, August 26, 2012

ஒன்றுபட்ட இந்தியாவை துண்டாடியது யார்?



//சுவனப் பிரியரே, ஆதாரம் இல்லாமல் நான் எதையும் சொல்வதில்லை என்பதை நீங்கள் இன்னமும் உணராதது என் துரதிருஷ்டமே.//- மலர்மன்னன்!

நான் தேடிப் பார்த்து கிடைக்கவில்லை என்பதாலேயே உங்களிடம் ஆதாரம் கேட்டேன். உங்களிடம் "கொஞ்சம் பொறுமையாக இருந்தால் முழு ஹிந்துஸ்தானமே கைக்கு வந்துவிடும், மக்கள் தொகையைப் பெருக்குவோம் அதுவே போதும்" என்று அபுல்கலாம் பற்றிய செய்திக்கு ஆதாரம் இருந்தால் தருவதில் என்ன சிரமம்? இல்லை தவறுதலாக சொன்னேன் என்று ஒத்துக் கொள்ளுங்கள்.



//ஹிந்துத்துவர்களே ஹிந்துஸ்தானத்தைப் பிரிக்க ஏற்பாடு செய்ததாகக் கொஞ்சமும் தயக்கமின்றி எழுதுகிறீர்களே? பெற்ற தாயைக் கூறு போடுவதா ஹிந்துத்துவம்? உங்கள் புரிதல் இவ்வளவு பாமரத்தனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவேயில்லை!//

ஜின்னா முஸ்லிம் லீக் தொடங்க வும் நாடு பிளவுபடவும் காரணமாக அமைந்தது எதுவென்று நினைக்கிறீர்கள்?

1917ல் ஆர்எஸ்எஸின் வீர சவர்க்கார் விடுத்த பிரகடனம் என்ன? 'இந்தியா என்பது ஒற்றை தேசமல்ல. ஒன்று இந்து தேசம். இன்னொன்று முஸ்லிம் தேசம். இன்னும் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் சிறுபான்மையினர் என்ற அளவில் அல்லாமல் எந்தவொரு எதிர்காலமும் இல்லை'

)R.N.AGARWAL THE DIALOGUE BETWEEN HINDUS & MUSLIMS

இவ்வாறாக ஜின்னாவுக்கு முன்பே வீர சவர்க்கார் பாகிஸ்தானுக்கு அடித்தளம் இட்டார். இவர்களின் நோக்கத்தை புரிந்து கொண்ட ஜின்னா காங்கிரஸிலிருந்து பிரிந்து முஸ்லிம் லீக்கை ஆரம்பிக்கிறார். அப்பொழுது நடந்த அனைத்து தேர்தல்களிலும் முஸ்லிம்கள் அனைவரும் காங்கிரஸையே ஆதரித்தனர். அவர்கள் ஜின்னாவை நம்பவில்லை. ஜின்னா தேர்தலில் படுதோல்வி அடைந்தார்.

DR AYSHA JALAL – THE SOLE SPOKESMAN JINNAH, THE MUSLIM LEAGUE, AND THE DEMAND FOR PAKISTAN

முதன் முதலில் பம்பாயில் ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் முதல்வராக நரிமான் எனபவர் வர வாய்ப்பிருந்தும் அவர் ஃபார்ஸி என்பதால் பி.ஜி.கர் என்பவரை வலுக்கட்டாயமாக திணித்து முதல்வராக்கினர். இதற்கு மறைமுக வேலை செய்தவர் சர்தார் வல்லபாய் பட்டேல். ஆட்சிக்கு வர உழைத்த ஒருவரை ஓரங்கட்டி விட்டு இந்துத்வா சிந்தனை உடைய பி.ஜி.கர்ரை முதல்வராக்கியது இனப்பற்றால் அல்லவா?

பீகாரில் நடந்த மற்றொரு கவிழ்ப்பு வேலையை பார்ப்போம்: பீகார் காங்கிரஸ் என்றாலே டாக்டர் செய்யித் முஹம்மத் அவர்கள்தான் அனைவரின் ஞாபகத்திலும் வரும். அந்த அளவு காடு மேடு களுக்கெல்லாம் சென்று காங்கிரஸின் வெற்றிக்காக பாடுபட்டவர். காங்கிரஸின் பொதுக் செயலாளராகவும் இருந்தார். எனவே பீகாருக்கு வெளியிலேயும் பிரபலமாக இருந்தார். பீகாரில் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க தயாரானது. எல்லோரின் எதிர்பார்ப்பும் டாக்டர் செய்யித் அஹமத் அவர்கள்தான் முதல்வராவார் என்று கணித்தனர். ஆனால் அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. மாறாக மத்திய அமைச்சரவையில் இருந்த ஸ்ரீகிருஷ்ண சின்ஹாவும், அனுகிரஹா நாராயண சின்ஹாவும் பீகாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு முதல்வராக்க தயார் செய்யப்பட்டனர். இதை முன்னின்று நடத்தியவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத். பிறகு ஸ்ரீகிருஷ்ணா முதல்வராக்கப்பட்டு டாக்டர் செய்யித் முஹம்மத் அமைச்சராக்கப்பட்டார். இதனை நேருவிடம் புகாராக சொல்லியும் எந்த பிரயோசனமும் இல்லை. இந்த இரண்டு சம்பவங்களும் முஸ்லிம்ளிடம் பிரசாரம் செய்ய ஜின்னாவுக்கு மிக தோதுவாகப் போனது.

AZAD PAPERS AS INCERTED IN INDIA WINS FREEDOM PAGE 17,18

இதன் பிறகுதான் ஜின்னாவின் பேச்சை சில முஸ்லிம்கள் கேட்க ஆரம்பித்தனர். அதன் பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் முஸ்லிம் லீக் அமோக வெற்றி பெறுககிறது. தனக்கு பாதகமான சூழ்நிலைகளையே சாதகமாக மாற்றிக் கொள்ளும் ஜின்னா இதை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்.

கேபினட் மிஷன் பிளான் திட்டம பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். இதன்படி இந்தியாவைப் பிரிக்காமல் சிறுபான்மையினருக்கு தேவையான பாதுகாப்புகளை வழங்கிட வேண்டும். அதோடு முஸ்லிம்களின் உரிமைகளுக்கு ஒரு உத்தரவாதமும் வழங்கப்பட வேண்டும் என்று முடிவானது. இதற்கு நடுவராக ஒரு வைசிராய் இருப்பார் என்று சொல்லப்பட்டது. இதனை முஸ்லிம் லிக்கும் காங்கிரஸூம் ஒத்துக் கொண்டது. இது நடந்தது 1946. நாடு பிளவுறுவது என்பது அப்போது நிறுத்தப்பட்டது.

ஜின்னா முதற்கொண்டு அனைவரும் ஏற்றுக் கொண்ட இந்த அருமையான திட்டத்தை பம்பாய் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நேரு போட்டு உடைத்தார். 'காங்கிரஸ் யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை. கேபினட் மிஷன் பிளானை ஏற்றுக் கொள்ள முடியாது ' என்று சொன்னது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மீண்டும் பிரிவினை கோஷங்கள் தலை தூக்கத் துவங்கின. இதைப் பற்றி அபுல் கலாம் ஆசாத் சொல்லும் போது '1946ல் காங்கிரஸ் தலைமைக்கு ஜவஹர்லால் நேருவை பரிந்துரைத்தது நான் செய்த பெருந் தவறு. மக்கள் விரும்பியதைப் போல் நானே நீடித்திருந்தால் இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறே வேறு விதமாக போயிருக்கும்'

AZAD PAPERS AS INCERTED IN INDIA WINS FREEDOM PAGE 164,165,166

----------------------------------

'திரு ஜின்னா அவர்களும் அன்று மாநில சுயாட்சியையே கேட்டார். அதனை ஏற்றுக் கெண்டிருந்தால் பாகிஸ்தானே உருவாகியிருக்காது'
-கருணாநிதி

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா(3-2-1996) பக்கம் 6

----------------------------------

'1937ல் நடந்த தேர்தலுக்கு பின்னரும் கூட ஜின்னா தனி நாடு பற்றி சிந்திக்கவில்லை'

ஹெச்.எம்.சீர்வை(THE AUTHOR OF THE BOOK "PARTITION THE LEGEND AND REALITY ) PAGE 21.

இவ்வாறு பாகிஸ்தான் உருவாக சவர்க்கர், நேரு, பட்டேல், ஜின்னா என்று பலரும் பங்கு வகிக்க இங்குள்ள முஸ்லிம்களை குறை சொல்வது என்ன நியாயம்? அடுத்து ஜின்னா ஒரு ஷியா முஸ்லிம். இஸ்லாமிய நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் மேற்கத்திய கலாசாரத்தை விரும்பும் ஒருவர். இங்குள்ள முஸ்லிம்கள் எவருமே இன்றுவரை இவரை ஒரு தேசத் தலைவராக மதிப்பதில்லை. அபுல்கலாமுக்கு இருந்த மரியாதை ஜின்னாவுக்கு அவர் வாழும் காலத்திலும் முஸ்லிம்களால் கொடுக்கப்படவில்லை. அவர் இறந்தும் அந்த மரியாதையை முஸ்லிம்கள் ஜின்னாவுக்கு கொடுக்கவில்லை.

//ஜின்னாவை பகடைக்காயாக அல்ல, துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தியவர்கள் ஆங்கிலேயே ஏகாதிபத்தியம்! ஜின்னா ஒன்றும் வாயில் விரலை வைத்தால் கடிக்கத் தெரியாதவர் அல்ல! சமயத்தை சரியாகப் பயன் படுத்திக்கொண்டவர்! முஸ்லிம்களை மயக்க திடீர் எனத் தலைக்குத் தொப்பியும் உடம்புக்கு ஷேர்வானி பைஜாமாவும் என வேடம் தரித்துக் கொண்டவர்!//

உங்கள் வார்த்தைகளை அப்படியே ஒத்துக் கொள்கிறேன். வெள்ளையர்களின் சூழ்சசியும் சேர்ந்து ஜின்னாவை நன்றாக பலரும் பயன் படுத்திக் கொண்டனர். அவருக்கு இந்திய முஸ்லிம்களை பற்றிய கவலை கிஞ்சிற்றும் இல்லை. ரத்த ஆறு ஓடினாலும் பரவாயில்லை. தான் ஒரு நாட்டை ஆள வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கியிருந்தது. இதில் நேருவும் ஜின்னாவுக்கு சளைத்தவர் அல்ல. இரண்டு பேரின் குடுமி பிடியால் பல ஆயிரக் கணக்கான மக்கள் ரத்தம் சிந்தியதுதான் மிச்சம்.

//என்னுடைய முதுமையில் இப்படிப் படுத்தலாமா? என்ன தான் காபிரான கிழவனாயினும் உங்களின் பாட்டனே அல்லவா நானும்?//

ஐயோ ......நான் உங்களை சிரமப்படுத்த விரும்பவில்லை சார். எனது தாத்தாவின் ஸ்தானத்தில் உங்களை வைத்துள்ளேன் ... ..... காஃபிர் என்றால் ஏதோ மரியாதை குறைவான வார்த்தை என்றே பலரும் நினைக்கின்றனர். காஃபிர் என்ற வார்த்தைக்கு 'இறை மறுப்பாளர்' என்ற பொருள் வரும். நீங்கள் இறைவனை ஏற்றுக் கொண்டவர்தானே! மற்றபடி இந்த கேள்விகளை கேட்டது எல்லாம் ஸ்மிதா! அவர் கேட்டு விட்டு பதில் தராது நகர்ந்து கொண்டார். அவர் சார்பில் நீங்கள் பதில் அளித்துக் கொண்டுள்ளீர்கள்.

//ராஜாஜிக்கு ரொம்பத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்! அவர் என்றுமே ஒரு பாப்புலர் தலைவராக இருந்ததில்லை! காங்கிரஸ் அவர் பேச்சைக் கேட்டதே இல்லை!//

காங்கிரஸ் சார்பாக மத்தியிலும் மாநிலத்திலும் பல உயர் பதவிகளை வகித்து சட்டத்தை செயல்படுத்தியரை பாப்புலர் தலைவராக இருந்ததில்லை என்று எப்படி சொல்கிறீர்கள்? இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தலைவரே நாட்டு பிரிவினையை பேசும் போது நாம் பேசினால் என்ன என்ற தைரியத்தை ஜின்னாவுக்கு கொடுத்தே ராஜாஜியின் நிலைப்பாடுதான் என்பதை எவரும் மறுக்க முடியாது..

டிஸ்கி: அறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் என்று மூன்று முதல்வர்களோடும் நெருங்கி பழகி பெயர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு பழகிய பழம் பெரும் பதிவர் மலர் மன்னன் என்பதை அறியத் தருகிறேன். சிறந்த அறிவாளி. ஆனால் இன்றும் இந்துத்வாவை விடாது பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதுதான் இவரிடம் உள்ள பெரும் குறையே!

அடுத்து பதிவர் மாநாடு எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைந்திருந்ததை நேரலையில் பார்த்தேன். இதற்காக உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொது நல சேவையிலும் இந்த பதிவர் உலகம் கால்பதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் இங்கு வைக்கிறேன்.

47 comments:

suvanappiriyan said...

இஷ்டதெய்வ வழிபாட்டை, புத்தர் இடைவிடாமல் நிந்தித்து வந்தார். அதன் விளைவாக விக்கிரங்கள் பாரதத்தில் நுழைவு பெற்றன. வேதங்களுக்கு உருவங்களைப் பற்றித் தெரியாது. படைப்பாளனாகவும் நண்பனாகவும் இருந்த கடவுள் தத்துவத்தை இழந்த போது அதற்கு எதிர்ச்செயலாக மகான்களான ஆசான்களின் உருவங்களைச் சமைக்கத் துவங்கினார்கள். புத்தரே விக்கிரகமாக ஆக்கப்பட்டார். அப்படியே அவரை லட்சக்கணக்கான மக்கள் வழிபடுகிறார்கள். பலாத்காரமான சீர்திருத்த முயற்சிகள் உண்மையான சீர்திருத்தத்தை முட்டுக்கட்டையிட்டுத் தடுப்பதில் வந்து முடிகின்றன.
சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு: ஏகநாத் ரானடே தமிழில்: ஆர்.கோபாலன்

ராஜ நடராஜன் said...

சகோ.சுவனப்பிரியன்!யார் என்ன சொல்றாங்கன்னு தெரியாமல் பின்னூட்டத்தில்தான் பதில் சொல்லிகிட்டிருந்தீங்க!இப்ப பதிவுமா!

மலர் மன்னன் என்ன சொன்னார் என்பது தெரியாமல் உங்களுக்கு வேண்டியதை மட்டும் வெட்டி ஒட்டுறீங்களே!

எடிட்டிங் சரியில்லை:)

Anonymous said...

//அறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் என்று மூன்று முதல்வர்களோடும் நெருங்கி பழகி பெயர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு பழகிய பழம் பெரும் பதிவர் மலர் மன்னன் என்பதை அறியத் தருகிறேன். சிறந்த அறிவாளி. ஆனால் இன்றும் இந்துத்வாவை விடாது பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதுதான் இவரிடம் உள்ள பெரும் குறையே! //

சுவனப்பிரியன் நல்ல சிந்தனையாளராக இருக்கிறார். நல்ல பல கருத்துகளை எழுதுகிறார். பலதரப்பட்ட விசயங்களை பற்றியும் எழுதும் நல்ல அறிவாளி. ஆனால் இன்னும் எதற்கெடுத்தாலும் இஸ்லாம் இஸ்லாம் என்று வஹாபியிசத்தை பிடித்து தொங்கி கொண்டு இருப்பது தான் இவரிடம் உள்ள பெரும் குறையே. அதை விரைவில் தூக்கி எறிவார் என்று நம்புவோம் .

suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!

//மலர் மன்னன் என்ன சொன்னார் என்பது தெரியாமல் உங்களுக்கு வேண்டியதை மட்டும் வெட்டி ஒட்டுறீங்களே!//

மலர் மன்னன் கொடுத்த பதிலும் அதற்கு நான் கேட்ட கேள்வியும் தெளிவாக கொடுத்துள்ளேனே! படிக்கும் யாருக்கும் குழப்பம் வரக் கூடாது என்பதற்காகத்தான் அவரது பதிவை தனியாக காட்டியிருக்கிறேன். இதில் எது விளங்கவில்லை என்கிறீர்கள்? அவரின் முழு பதிலையும் கொடுத்தால் பதிவு நீளமாகி சளிப்பு அடைந்து விடுவர். எனவேதான் சுருக்கி தந்தேன்.

suvanappiriyan said...

சகோ அனானி!

//சுவனப்பிரியன் நல்ல சிந்தனையாளராக இருக்கிறார். நல்ல பல கருத்துகளை எழுதுகிறார். பலதரப்பட்ட விசயங்களை பற்றியும் எழுதும் நல்ல அறிவாளி. ஆனால் இன்னும் எதற்கெடுத்தாலும் இஸ்லாம் இஸ்லாம் என்று வஹாபியிசத்தை பிடித்து தொங்கி கொண்டு இருப்பது தான் இவரிடம் உள்ள பெரும் குறையே. அதை விரைவில் தூக்கி எறிவார் என்று நம்புவோம் .//

நான் இஸ்லாத்தையும் அதன் வஹாபிய சிந்தனைகளையும் பின் பற்றுவதால் நாட்டுப் பற்றுக்கோ, மாற்று மதத்தவரோடு நண்பராக இருப்பதற்கோ, அல்லது எனது குடும்பத்தை நடத்திச் செல்வதற்கோ எந்த வகையில் தடையாக இருக்கிறது என்பதை சொன்னால் நான் தெரிந்து கொள்வேன்.

அல்லது இந்த இஸ்லாமும் அதன் வஹாபிய நடைமுறைகளை தவிர்த்து உலகில் வேறு எந்த வழிமுறை மனிதன் சிறப்பாக வாழ வழி சொல்கிறது என்பதை சொன்னால் நான் பரிசீலிக்க ஏதுவாக இருக்கும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Unknown said...

நல்ல தகவல்கள் கொண்ட பகிர்வு... பிரிவின்மைக்கு இருவருமே காரணம் என்பது என் கருத்து... ஆனால் அந்த பிரிவின்மை இரு நாடுகளுக்கும் நிம்மதியை இது வரை வழங்கவில்லை...

என் பதிவில் "தூக்கு கயிறு வேண்டாம்"

ராஜ நடராஜன் said...

சகோ.சுவனப்பிரியன்!இந்திய பாகிஸ்தான் வரலாற்று பொது உண்மைகள் யாவரும் அறிந்ததே என்ற போதிலும் மலர்மன்னன் எதன் அடிப்படையில் அவரது கருத்தை முன் வைக்கிறார் என்பது தெரிந்தால்தான் நீங்கள் சொல்லும் கோணம் சரியானதா அல்லது மலர்மன்னன் சொல்வதுதான் சரியென்று கருத்து சொல்ல முடியும்.சுட்டியைக் கொடுத்து விட்டால் கூகிளண்ணன் கொண்டு போய் விட்டு விடுகிறார்.எத்தனை மேய்கிறோம் மலர்மன்னனையும் மேய மாட்டோமா என்ன?

மாற்றுக்கருத்தென்றாலும் கூட நீங்கள் பொறுமையாக பதில் சொல்கிறீர்கள் என்பதற்காகத்தான் உங்களுடன் கலந்துரையாடல் செய்கிறேன்.நன்றி.

Nellai Premkumar said...

// நான் இஸ்லாத்தையும் அதன் வஹாபிய சிந்தனைகளையும் பின் பற்றுவதால் நாட்டுப் பற்றுக்கோ, மாற்று மதத்தவரோடு நண்பராக இருப்பதற்கோ, அல்லது எனது குடும்பத்தை நடத்திச் செல்வதற்கோ எந்த வகையில் தடையாக இருக்கிறது என்பதை சொன்னால் நான் தெரிந்து கொள்வேன். //

அது போலவே மலர் மன்னன் அவர்களோ அல்லது மற்ற இந்துக்களோ இந்துத்துவ கொள்கைகளை பின்பற்றுவது அவர்களது நாட்டு பற்றுக்கோ மாற்று மதத்தவரோடு நண்பராக இருப்பதற்கோ, அல்லது அவர்களது குடும்பத்தை நடத்திச் செல்வதற்கோ எந்த வகையில் தடையாக இருக்கிறது என்று கூறினால் நாங்கள் தெரிந்து கொள்கிறோம். என்ன காரணத்திற்காக அவர் அவரது கொள்கையை விட வேண்டும் என்று விளக்க முடியுமா.

//அல்லது இந்த இஸ்லாமும் அதன் வஹாபிய நடைமுறைகளை தவிர்த்து உலகில் வேறு எந்த வழிமுறை மனிதன் சிறப்பாக வாழ வழி சொல்கிறது என்பதை சொன்னால் நான் பரிசீலிக்க ஏதுவாக இருக்கு//

நிறைய இருக்கிறது, இந்துத்துவ கொள்கை இருக்கிறது அதை பின்பற்றுங்களேன், கிறிஸ்தவ கொள்கை இருக்கிறது, பௌத்தம் இருக்கிறது, சமணம் இருக்கிறது இன்னும் பல இருக்கிறது. எந்த மத கொள்கை மனிதன் கெட்டு போக வேண்டும் என்று சொல்கிறது என்று சொல்லுங்களேன். எந்த சமய கொள்கை மனிதனுக்கு அழிவு பாதை கட்டுகிறது என்று சொல்லுங்களேன். பிற சமய கொள்கைகளை பின்பற்றுபவர்கள் சிறப்பாக வாழவில்லையா. எந்த வகையில் நீங்கள் உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள், எந்த வகையில் மற்றவர்கள் தாழ்ந்து போய்விட்டார்கள். மனைவியை கை நீட்டி அடிக்கலாம் என்று கூறும் கொள்கையை இன்னொரு மதத்தில் இருந்து காட்டுங்களேன். 'என் மனைவியை நான் எனது மார்க்க கொள்கை படி அடிப்பேன்' என்று வெளிப்படையாக சொல்லும் துணிவு உங்களிடம் இருக்கிறதா. அவரவருக்கு அவரவர் கொள்கை, மதம், மார்க்கம் எல்லாமே உயர்ந்தது தான். உங்களுடையது சிறந்தது என்று சொல்லும் உரிமை உங்களுக்கு இருக்கலாம். உங்களுடையது மட்டுமே சிறந்தது அதையே எல்லாரும் பின்பற்ற வேண்டும், அதற்காக நான் தாவா செய்வேன். அதை பார்த்துவிட்டு எல்லாரும் தங்களுடையதை பொத்திக்கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது தவறு.

R.Puratchimani said...

ஐயா சுவனப்பிரியன் :),

நீங்களும் ஆசிக்கும் எப்பொழுது வரலாற்றை திரிப்பதை விடுவீர்களோ தெரியவில்லை. இதை தெரிந்தே செய்கிறீர்களா இல்லை வரலாறு தெரியவில்லையா என எனக்கு தெரியவில்லை.
எனக்கு நேரமின்மையாலும் சில நேரங்களில் விருப்பமின்மையாலும் பின்னூட்டம் கூட நான் இடுவதில்லை.

உங்கள் மீது ஏற்பட்ட ஒரு இரக்கத்தினாலும் உங்கள் தளத்தை படிப்பதையும் படித்தாலும் பின்னூட்டம் இடுவதையும் தவிர்த்தேன்..

இந்திய பிரிவினைக்கு முக்கிய காரணம் மதம் தான்.
இந்துக்களும் இசுலாமியர்களும் ஒன்றாக வாழமுடியாது என்ற சிந்தனைதான் பிரிவினைக்கு வித்திட்டது.

பிரிவினைக்கான விதையை முதலில் விதைத்தவர்
சர் சையத் அகமது கான் எனும் இசுலாமியர் தான்.

முதலில் அவர் இந்து இசுலாமியர் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர்தான். பிறகு அரசியல் காரணங்களினால் அவர் இந்திய பிரிவினைக்கான விதையை தூவுகிறார்.
//.Maulana Hali, in his book Hayat-e-Javed, writes "One day as Sir Syed was discussing educational affairs of Muslims with Mr Shakespeare, the then Commissioner of Banaras. Mr Shakespeare looked surprised and asked him, ‘This is the first time when I have heard you talking specifically about Muslims. Before this you used to talk about the welfare of the common Indians.'" He then told him, "Now I am convinced the two communities will not put their hearts in any venture together. This is nothing [it is just the beginning], in the coming times an ever increasing hatred and animosity appears on the horizon simply because of those who are regarded as educated. Those who will be around will witness it." Therefore in Pakistan, he is hailed as the father of Two Nation Theory and one of the founding fathers of Pakistan with Allama Iqbal andMuhammad Ali Jinnah//

http://en.wikipedia.org/wiki/Sir_Syed_Ahmed_Khan

வரலாற்றை சரியாக பாரபட்சமின்றி ஆய்வு செய்ய வேண்டுகிறேன். நான் கூறுவதே உண்மை என்று வாதிடமாட்டேன். நீங்கள் கூறியதை விட இவரின் நிகழ்வு காலத்தால் முந்தையது. இதற்கு முன்பு ஏதேனும் நிகழ்வை நீங்கள் அறிந்தால் கூறுங்கள்.புதிய உண்மையான் வரலாற்றை இணைந்து எழுதுவோம்.
நன்றி :)

suvanappiriyan said...

திரு பிரேம் குமார்!

//அது போலவே மலர் மன்னன் அவர்களோ அல்லது மற்ற இந்துக்களோ இந்துத்துவ கொள்கைகளை பின்பற்றுவது அவர்களது நாட்டு பற்றுக்கோ மாற்று மதத்தவரோடு நண்பராக இருப்பதற்கோ, அல்லது அவர்களது குடும்பத்தை நடத்திச் செல்வதற்கோ எந்த வகையில் தடையாக இருக்கிறது என்று கூறினால் நாங்கள் தெரிந்து கொள்கிறோம். என்ன காரணத்திற்காக அவர் அவரது கொள்கையை விட வேண்டும் என்று விளக்க முடியுமா. //

கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார் போன்றோர் இறைப்பணியை செய்ததை நாம் மறந்து விட முடியாது. அதை இந்திய நாட்டு எந்த முஸ்லிமும் தவறாக எண்ண மட்டான். மாறாக மரியாதையே செய்வான். ஆனால் ராமகோபாலன், அத்வானி, நரேந்திர மோடி போன்ற நபர்கள் செய்யும் ஆன்மீகப் பணி என்ன என்பது நான் சொல்லாமலே உங்களுக்கு புரிந்திருக்கும். இவர்களுக்கு அமைதி தேவையில்லை. பாபரி மசூதி, கோத்ரா போன்ற பிரச்னைகளை கையிலெடுத்து இந்த நாட்டில் ரத்த வெள்ளம் ஓட வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள். இவர்களின் நோக்கம் நேர்மையாக இருந்திருந்தால் நாட்டில் உள்ள எத்தனையோ பாழடைந்த கோவில்களை சீர்படுத்தியிருக்கலாம். அவை அனைத்தும் இன்று கஞ்சா அடிப்பதற்கும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாற விட்டிருக்க மாட்டார்கள். எந்த அதாரமும் இல்லாமல் புராதன மசூதியை இடித்து அங்குதான் ராமர் பிறந்தார் என்ற கற்பனையை மக்கள் மத்தியில் விதைத்து ரத்த ஆறு ஓட விடுவதுதான் இந்து தர்மமா? இதைத்தான் தவறு என்கிறோம். எனவே இஸ்லாமியரின் வஹாபியத்துக்கும் இந்துக்களின் இந்துத்வாவுக்கும் நிறைய நியை வித்தியாசம் உள்ளதை மறந்து விடாதீர்கள்.

//நிறைய இருக்கிறது, இந்துத்துவ கொள்கை இருக்கிறது அதை பின்பற்றுங்களேன்,//

எதை வர்ணாசிரமத்தையா? வேதம் படித்தால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற சொல்வதையா? நெற்றியில் பிறந்தவன் பிராமண் என்றும், தொடையில் பிறந்தவன் சூத்திரன் என்றும் எழுதி வைத்துள்ளதையா? முதலில் இந்துக்களிலேயே 80 சதவீதமான பேர் இந்துத்வாவை முhரமாக்கி விட்டனரே! முதலில் அவர்களிடம் இதை சொல்லிப் பாருங்கள். அழகான பதிலைக் கொடுப்பார்கள்.

suvanappiriyan said...

சகோ ஸ்மிதா!

//Kandahar, Afghanistan: Fifteen men and two women were found beheaded in Afghanistan’s southern Helmand province on Monday, punishment meted out by Taliban insurgents for a mixed-sex party with music and dancing, officials said.
The bodies were found in a house near the Musa Qala district, about 75 km (46 miles) north of the provincial capital Lashkar Gah, said district governor Nimatullah, who only goes by one name.//

தாலிபான்கள் பெயரால் நடத்தப்படும் அனேக கொலைகள் குண்டுவெடிப்புகளுக்கு அமெரிக்க படைகளே காரணம் என்று தாலிபான் தலைவர் முல்லா உமர் கொடுத்த பெருநாள் செய்தியை படித்து பாருங்கள். 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' எனபதை உணர்ந்து கொள்வீர்கள்.


5. The invaders not only have faced defeat in political, economical and military fronts but, at the moral front too, the public of the world have come around that the invaders do not know any human values. They have no warfare ethics; violate human rights and honor; they commit blasphemy against holy things; desecrate the corpses of the martyrs; perpetrate morally offensive acts against children and adolescents; raid houses at night and brutally kill women, old men and children similar to the gruesome incidents of Zangawat and Sajawand. They bombard villages, houses, cities, mosques, religious seminaries, schools, processions of funeral services and ceremonies of felicities. This is in a time that the invaders brazenly speak of human rights and humanity.

7. During the past eleven years, the enemy tried its best to mobilize the Afghans in its favor by dent of its media. Praise be to Allah, they have failed (in their goal). This is because of the existing ground realities that the people and all the world can see. Thereby, their wicked conspiracies were foiled and the so- called independent media outfits which are, in fact, affiliated with their espionage agencies, have been exposed. Their exaggerated hypes and propaganda ultimately harmed their own reputation. Now they have no credibility in the eyes of the people. The public of the world look at their every report to be no more than a mere rumor, propaganda or a conspiracy against the Mujahideen. The people know that these media outlets hide the losses of those who provide them funds and portray the losses of Mujahideen several times more than what they are and are tight-lipped about the Mujahideen’s victories.

8. The enemy tried to flare up chaos among the people through their cunning intelligence networks by capitalizing on the perversity and ignorance of a few young men. They wanted to face people with the same chaotic situation that gripped them in the 90s, following the ouster of the communist government. Praise be to Allah, this wicked conspiracy has failed while being at its earlier stages. Seeing their abhorrent activities, the people became more closer to the Mujahideen and more watchful about the covert conspiracies of the enemy.
முழு செய்தியையும் தமிழில் படிக்க....

http://suvanappiriyan.blogspot.com/2012/08/blog-post_23.html

Nasar said...

@ சகோ நெல்லை பிரேம்குமார்
உங்க கேள்வியை சு.பிரியனிடம் கேட்பதைவிட , உங்க ஊரில் என்னைப் போன்று இஸ்லாத்தை தன வாழ்வியலாக(மதம் மாறிய) ஏற்றுக்கொண்ட படித்த சகோக்கள் நெல்லையில் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களிடம் நேரிடையாக கேட்டு தெளிவு பெறுங்கள்..இப்பதிவின் வாயிலாக நான் இந்து மதத்தைப்பற்றி சொன்னால்,இணய தொடர்பிலுள்ள பல மாற்று மத நண்பர்களின் மனம் நோகும்..இந்நாள் அப்துல்லாஹ்(முன்னாள் பெரியார் தாசன்) அவர்களிடம் கேளுங்க அவர் மெத்த படித்தவர், யாருடைய vatpuratthalum இல்லாமல் தன சுய புத்தியினால் இஸ்லாத்துக்கு வந்தவர் அவரிடம் கேட்டால் இன்னும் அதிகமாக தெளிவு பெறலாம்.. " லகும் தீனுக்கும் வலியத்தீன் "

suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!

//சகோ.சுவனப்பிரியன்!இந்திய பாகிஸ்தான் வரலாற்று பொது உண்மைகள் யாவரும் அறிந்ததே என்ற போதிலும் மலர்மன்னன் எதன் அடிப்படையில் அவரது கருத்தை முன் வைக்கிறார் என்பது தெரிந்தால்தான் நீங்கள் சொல்லும் கோணம் சரியானதா அல்லது மலர்மன்னன் சொல்வதுதான் சரியென்று கருத்து சொல்ல முடியும்.சுட்டியைக் கொடுத்து விட்டால் கூகிளண்ணன் கொண்டு போய் விட்டு விடுகிறார்.எத்தனை மேய்கிறோம் மலர்மன்னனையும் மேய மாட்டோமா என்ன?//

நாம் வரலாறுகளில் இந்திய சுதந்திரத்தைப் படித்தது 90 சதவீதம் ஒரு பக்க சார்பானது. நாடு பிளவுண்ட சமயத்தில் இதை பெரிது படுத்தினால் முஸ்லிம்கள் மேலும் சிரமத்திற்க்குள்ளாக்கப் படுவர் என்பதாலேயே அமைதி காத்தனர். தற்போது அபுல் கலாம் ஆசாத்தின் மறைக்கப்பட்ட புத்தகம் 30 ஆண்டுகளுக்கு பிறகு பல உண்மைகளை கூறுகிறது. அதை படித்து பாருங்கள் நமது நாட்டின் மறைக்கப்படட பக்கத்தை.

நானும் மலர் மன்னனும் விவாதிக்ககும் தளம் கீழே கொடுத்துள்ளேன். அதையும் முடிந்தால் பார்வையிடுங்கள்.

http://puthu.thinnai.com/?p=13832#comment-8780

Anonymous said...

Kavya says:
August 27, 2012 at 8:39 am

//நானும் மொத்த தென்னாட்டு முஸ்லிம்களும் இடம் பெயர்ந்ததாகச் சொல்லவில்லையே! அப்படிப் பார்த்தால் வடக்கிலிருந்தும் எல்லா முஸ்லிம்களும் போய்விடவில்லை. இங்கேயே பத்திரமாக இருந்து கொண்டார்கள். அவர்களுக்கு காந்தி-நேருவின் பாதுகாப்பு இருந்தது. பாகிஸ்தானில் இருந்த ஹிந்துக்களுக்குத்தான் அத்தகைய வாய்ப்பு இல்லை. அதனால்தான் இன்று அங்கு ஹிந்துகக்ளின் சதவீதம் இரண்டு கூட இல்லை. அவர்களிலும் மிகப் பெரும்பான்மையினர் தோட்டி வேலை செய்வதற்காகப் பிடித்து வைத்துக்கொள்ளப் பட்டிருக்கிறார்கள். //

The above was a quote from Malarmannan.

மொத்த தென்னாட்டு முசுலீம்களும் இடம் பெயரவில்லையென்று இப்போது சொல்கிறீர்கள். முதலில் எழுதியதைப்படித்த போது தென்னாட்டு முசுலீகளும் வடநாட்டவரைப்போல நகர்ந்தார்கள் அதிக அளவில் என்றுதான் புரிதல் வரும்.

இப்போது வடக்கிலிருந்தும் எல்லா முசுலீம்களும் போகவில்லை என்றெழுதுகிறீர்கள்.
குழப்பம்.

சுவனப்பிரியன் கருத்தே ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது: வடக்கிலிருந்து பெருமளவிலும் தென்னாட்டலிருந்து சிலருமே சென்றார்கள்.

சென்றார்கள் என்பது மாப்ளா மலையாளிகளுக்கு அவ்வளவு ஒத்துவராது. ஏனெனில் கராய்ச்சியில் பீடி சுற்றும் தொழிலில் அவர்கள் சுதந்திரத்துக்கு முன்பே ஈடுபட்டிருந்தார்கள் குடும்பம்குடும்பங்களாக. சுதந்திரத்துக்குப்பின் அவர்கள் இந்தியாவுக்கு வரவில்லை. காரணம் அவர்கள் ஏற்கனவே முசுலீம்கள்.

சுதந்திரத்து முன், கராய்ச்சி இந்தியாதான் இல்லையா மலர்மன்னன்? ஏனெனின், அத்வானி இந்தியாவில் பிறந்தாரென்னும்போது மலையாளிகள் மட்டும் இந்தியாவில் பிறக்கவில்லையா? அத்வானிக்கு ஒரு ரூல், ம‌லையாளிக‌ளுக்கு இன்னொன்றா?

இந்துக்களை மட்டும் தோட்டி வேலைக்கு பயன்படுத்தவில்லை. ஏராளமான முஹாஜீர் எனப்படும் இந்திய முசுலீகள் கராய்ச்சியில் வாழ்கிறார்கள். அவர்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்கள் பெண்களும் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள் பாகிஸ்தானை ஆதிநாடாகக்கொண்டோரால்.

ஆக, இங்கு இன ஏற்றத்தாழ்வுக்கு இந்திய முசுலிம்களும், பாகிஸ்தானை ஆதிநாடாகக்கொண்ட இந்துக்களும் ஆளாக்கப்படுகிறார்கள்.

இந்த உண்மை நைசாக மறைக்கப்படுகிறது மலர்மன்னனால்.

இந்தியர்கள் எங்கு சென்றாலும் அங்குள்ள மக்களால் கீழாகத்தான் மதிக்கப்படுகின்றார்கள். தென்னிந்தியரின் நிலை வடமாநிலங்களில் என்ன? குறிப்பாக தில்லியில்? தங்களை விட மட்டமானவர்கள் இவர்கள் என்று பேச்சிலும் வழக்கிலும் காட்டுகிறார்கள் இந்திக்காரர்கள். ரேசிசம் என்பது ஒவ்வொரு இந்தியனின் குருதியில் ஊறியிருக்கிறது என்றார் ஒரு நார்த் ஈஸ்டு முதலமைச்சர்.

மேலை நாடுகளில் வெள்ளைக்காரன் இந்தியர்களைத்தீண்டத்தகாதவர்களாகப்பார்த்த போது, காந்தி என்ன சொன்னார் தெரியுமா? ‘வேண்டும் இந்தியருக்கு. தலித்துகளைத் தீண்டத்தகாதவராக நடத்தினாரே! இப்போது அவ்வுணர்வு எப்படியிருக்கும் எனப்புரியட்டும் இவர்களுக்கு!!” என்றார்.

suvanappiriyan said...

புரட்சி மணி!

//உங்கள் மீது ஏற்பட்ட ஒரு இரக்கத்தினாலும் உங்கள் தளத்தை படிப்பதையும் படித்தாலும் பின்னூட்டம் இடுவதையும் தவிர்த்தேன்..//

ஏதோ இரக்கப்பட்டு பெரிய மனசு பண்ணி விட்டுருங்க என்னைய......பாவம் நான் பொழச்சு போய்க்கிறேன்.:-)))))

//முதலில் அவர் இந்து இசுலாமியர் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர்தான். பிறகு அரசியல் காரணங்களினால் அவர் இந்திய பிரிவினைக்கான விதையை தூவுகிறார். //

அதைத்தானே இந்த பதிவிலும் சொல்லியிருக்கிறேன். முதலில் பாகிஸ்தானாக பிரிய வேண்டும் என்று விரும்பிய பல முஸ்லிம்களும் ஆரம்பத்தில் இந்தியா ஒன்றாக இருக்கவே விரும்பினர். சவர்க்கர், பட்டேல், திலகர், ராஜரிஜ போன்ற இந்துத்வ தலைவர்களின் ஒருதலைப்பட்டசமான சில முடிவுகளை பார்த்துதான் தனி நாடு என்ற நிலைக்கே தள்ளப்படுகின்றனர். நான் சொன்னதைத்தானே நீங்களும் சொல்கிறீர்கள்?

இதில் என்னை வேறு போனால் போகுது என்று பெருந்தன்மையாக விட்டுச் சொல்வதாக வேறு பயமுறுத்துகிறீர்கள். பார்த்துங்க....நான் ரொம்ப பலஹீனமானவன். :-(

suvanappiriyan said...

சகோ நாசர்!

//உங்க கேள்வியை சு.பிரியனிடம் கேட்பதைவிட , உங்க ஊரில் என்னைப் போன்று இஸ்லாத்தை தன வாழ்வியலாக(மதம் மாறிய) ஏற்றுக்கொண்ட படித்த சகோக்கள் நெல்லையில் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களிடம் நேரிடையாக கேட்டு தெளிவு பெறுங்கள்..இப்பதிவின் வாயிலாக நான் இந்து மதத்தைப்பற்றி சொன்னால்,இணய தொடர்பிலுள்ள பல மாற்று மத நண்பர்களின் மனம் நோகும்..இந்நாள் அப்துல்லாஹ்(முன்னாள் பெரியார் தாசன்) அவர்களிடம் கேளுங்க அவர் மெத்த படித்தவர், யாருடைய vatpuratthalum இல்லாமல் தன சுய புத்தியினால் இஸ்லாத்துக்கு வந்தவர் அவரிடம் கேட்டால் இன்னும் அதிகமாக தெளிவு பெறலாம்.. " லகும் தீனுக்கும் வலியத்தீன் " //

உங்கள் பதிலால் சகோ சமாதானமடைந்திருப்பார் என்றே எண்ணுகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ ஸ்மிதா!

//Piriyan,
Firts you said that no muslim from kerala & T.N went to pakistan. Now U say that some might have gone.
Why this confusion?
As regards rajaji, malarmannan has given a very detailed explaination.//

உங்கள் சார்பாக மலர்மன்னன் பதில் அளித்தது போல் என் சார்பாக காவ்யா மிக அழகாக பதில் அளித்துள்ளார். நான் சொல்வதை விட உங்கள் மதத்தை சேர்ந்த காவ்யா சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். படித்து தெளிவு பெறுங்கள்.

//U do not have an answer as to why muslims refuse to join the national mainstream & refuse to accept a common civil code.//

ஹா...ஹா...பொது சிவில் சட்டம் என்ற குரலானது முஸ்லிம்களையும் இந்து மத சட்டத்துக்குள் ஒன்றாக்கி கிறித்தவ, சீக்கிய, பவுத்த மதங்களை எவ்வாறு விழுங்கினீர்களோ அதுபோன்ற சூழ்ச்சி வலை என்பதை அறியாதவர்கள் அல்ல முஸ்லிம்கள். இன்று இந்துத்வா வாதிகள் என்ன சொல்கிறார்கள்? 'எங்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதில் பிரச்னை? அவர்கள் இந்திய கலாசாரத்தை ஏற்றுக் கொண்டால் அவர்களை எதிர்ப்பதை நாங்கள் நிறுத்திக் கொள்கிறோம்' என்றுதானே சொல்கின்றனர்.

அதாவது நீங்கள் மக்காவுக்கு செல்லலாம். அல்லாவை வணங்கிக கொள்ளலாம். அதோடு முருகனையும் வணங்க வெண்டும். பிள்ளையாரையும் வணங்க வேண்டும். கன்னி மேரியையும் வணங்கிக் கொள்ள வேண்டும். பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். தேர் இழுக்க வேண்டும். நாகூர் தர்ஹாவையும் கொண்டாட வேண்டும். திருமண சட்டங்கள் ஒன்றாக்க வேண்டும். பிராமணர்களாகிய நாங்கள் உயர்ந்த சாதியாக இருப்போம். முஸ்லிம்களாகிய நீங்கள் நாடார், தேவர், கிறித்தவர், சீக்கியர் போன்று அடுத்த சாதியில் வர வேண்டும். இவற்றை எல்லாம் முஸ்லிம்கள் ஒத்துக் கொண்டால் இந்துத்வாவாதிகளான எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை' இதுதானே நீங்கள் வைக்கும் பொது சிவில் சட்டம். அதாவது நேரிடையாக சொன்னால் உண்மை வெளிப்பட்டு விடும். எனவே மறைமுகமாக அனைவருக்கும் பொது சட்டம் என்ற ஒன்றை கொண்டு வந்து முஸ்லிம்களை வர்ணாசிரமக் குழியில் தள்ளப் பார்க்கிறீர்கள். இந்திய சிவில் சட்டம் என்பது வர்ணாசிரமத்தின் மறு பதிப்பு தானே! குர்ஆனை பின் பற்றும் எந்த முஸ்லிமும் தனது திருமணம் சொத்து பிரிப்பு போன்ற சிவில் சட்டங்களில் கை வைக்க ஒத்துக் கொள்ள மாட்டான். கிரிமினல் சட்டங்கள் இன்றும் எல்லோருக்கும் பொதுவாகவே உள்ளது. அதை முஸ்லிம்கள் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் சிவில் சட்டங்களில் முஸ்லிம்களின் தனியார் உரிமைகளில் தலையிடுவதை எந்த முஸலிமும் ஒத்துக் கொள்ள மாட்டார்.

இவ்வாறு மதங்களுக்கு தனி சட்டம் வைத்து 50 வருடங்களுக்கு மேலாகிறது. இதனால் இந்தியாவின் ஒற்றுமைக்கு என்ன பாதிப்பு வந்து விட்டது? இது வரை இந்திய சட்டத்தை 50 முறைக்கு மேல் திருத்தி விட்டீர்கள். இனி வரும் காலங்களிலும் திருத்தப் போகிறீர்கள்.

ஆனால் முஸ்லிம்களின் தனியார் சட்டம் என்பது இறைவனால் முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்டது. 1400 வருடங்களாக ஒரு இடம் கூட மாற்றமில்லாமல் அனைத்துலக முஸ்லிம்களும் பின் பற்றி வருகின்றனர். எந்த சட்ட சிக்கலும் இது வரை வந்ததில்லை. எந்த முஸ்லிம் நாட்டிலும் வந்ததில்லை. இனியும் வராது.

எனது வக்கீலான இந்து நண்பன் குர்ஆனின் பாகப்பிரிவினை சட்டங்களை முதன் முதலாக படித்து விட்டு அசந்து போய் விட்டான். படிப்பறிவில்லாத ஒரு நாட்டுப் புற அரபி எவ்வாறு இவ்வளவு அழகிய சட்டத்தை கொடுக்க முடிந்தது என்று இன்றும் வியந்து வருகிறான். எனவே வருடம் ஒரு முறை சட்டங்களை மாற்றும் உங்களுக்கு சிவில் சட்டம் ஒத்து வரலாம். விவாகரத்து பிரச்னையில் சமீபத்தில் கூட பெரும் பிரச்னை இந்து சட்டத்தில் உண்டானதை அறியலாம். இவ்வாறான ஒரு குழப்ப நிலை முஸ்லிம்களுக்கு என்றும் வந்ததில்லை.



சார்வாகன் said...

சகோ சுவனப்பிரியன் ,

இந்த கேள்விக்கு இருபுறமும் தங்கள் அரசியல்,பொருளாதர நலன் சார் பெரும் புள்ளிகள் என்றாலும் அவர்கள் பின் சென்ற சாமான்யர்களும் காரணமே.
பிரிந்தது பற்றி நமக்கு வருத்தம் இல்லை.பிரிக்கும் போது கொஞ்சம் பொறுப்பாக மெதுவாக பிரித்து இருந்தால் பல இலட்சம் உயிர்கள் பலி ஆகாமல் இருந்து இருக்கும்.

******************************

நான் கேட்பதெல்லாம் ஒரே கேள்விதான்

பிரிந்து சென்ற பாகிஸ்தான்,வங்க தேசம் நன்றாக இருக்கிறதா?


இதற்கு மார்க்கத்தை சரியாக பின்பற்றாததால் அழிகிறார்கள் என்று சொல்வீர்கள்.

நான் சொல்வது இரு நாடுகளும் அழிவதன் காரணம்அழிவதே ஹி ஹி உங்களுக்கு புரியும்!

உங்களின் கருத்தின்படி இருநாடுகளிலும் சரியாக மார்க்கம் அறிந்தவர் இல்லை.இவர்களுக்கு உதவுவது தமிழ் பதிவர்களிலேயே சிறந்த மார்க்க மேதையான சுவனப் பிரியனின் கடமை!!!

நீங்கள் முல்லா ஓமருக்கு தலிபான்களிலும் தமிழ் அறிந்த நம்பிக்கையாளர் இருக்கலாம் என்று அறிந்து,முல்லா&தமிழ் தலிபான்களை வழி நடத்த கடிதம் எழுதியது போல் உருது பதிவுகள் எழுதி ஏன் பாகிஸ்தான் ஐ சரியாக நீங்கள் வழி நடத்தக் கூடாது?

உருது தெரியும் என நினைக்கிறேன்.ஒரு வேளை இல்லை எனில் எழுத ஒரு பாகிஸ்தானியை பிடியுங்கள்!!. திருத்துங்கள் பாகிஸ்தானை!!!

சவுதியில் ஏதேனும் வங்காளி நம்பிக்கையாளரை பிடித்து வங்காளி பதிவுகள் எழுதினால். உங்கள் பதிவுகளை படித்து இரு நாடும் சரியான மார்க்கத்தில் வந்து என்ன ஆகிறார்கள் என்று பார்க்க்லாம்!!!

அப்படி திருந்தி இரு நாடுகளும் காஃபிர்களின் நாடான இந்தியாவை விட சிறப்பாகி விட்டால் நீங்கள் காஃபிர்களுக்கு தாவா செய்வதில் பொருள் இருக்கும்!!!

இன்னும் கூட பி.ஜே & கோ உடன் அங்கேயே திருத்த சென்று [நாடு கடத்தவில்லை சகோ!!.சும்மா கொஞ்ச நாளைக்கு] அங்குள்ள மதவாதிகளை திருத்துங்கள். ஒருவேளை வெற்றியுடன் திரும்பி வந்தால் "மார்க்கம் காக்கும் மாமனிதன்" என பட்டம் வழங்க நான் தயார்!!!!!!!!!!!!!

முதலில் பயிற்சி அவசியம் என்பதால் பாகிஸ்தான்,வங்க தேசம் எப்படி இருக்க வேண்டும் என ஒரு விருப்ப பதிவு தமிழில் சேம்பிள் இடவும் பணிவுடன் வேண்டுகிறேன்.

அதற்கு நானும் எதிர்பதிவு போட்டு இன்னும் பல கருத்துகளை அறிவோம்!!!
அப்புறம் உருது&பெங்காளி மொழிப் பதிவுகள், இரு நாடுகளுக்கும் பயணம் என்று நீங்கள் பெரிய ஆள் ஆகி விடலாம்.

பாவம் சகோ நீங்கள் .இந்த த‌மிழில் தமிழ்மண்த்தில் எழுதி காஃபிர்களுக்கு கிச்சு கிச்சு மூட்டியதை தவிர ஒன்றும் பயன் இல்லையே சகோ


ஆகவே நல்ல வாய்ப்பை தவற விடாதீர்.

பாகிஸ்தான்,வங்க தேசத்தின் முன்னேற்றம் உங்கள் பதிவில்!!!!!!!!!!


தங்கள் நலம் நாடும்

காஃபிர் சகோதரன்

சார்வாகன்

suvanappiriyan said...

சகோ சார்வகன்!

//இந்த கேள்விக்கு இருபுறமும் தங்கள் அரசியல்,பொருளாதர நலன் சார் பெரும் புள்ளிகள் என்றாலும் அவர்கள் பின் சென்ற சாமான்யர்களும் காரணமே.
பிரிந்தது பற்றி நமக்கு வருத்தம் இல்லை.பிரிக்கும் போது கொஞ்சம் பொறுப்பாக மெதுவாக பிரித்து இருந்தால் பல இலட்சம் உயிர்கள் பலி ஆகாமல் இருந்து இருக்கும்.//

ராஜாஜி, படேல், சாவர்கர் விரும்பியது போல் நீங்களும் நாடு துண்டானதை விரும்புவதில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் ஒன்றாக இருந்திருந்தால் முஸ்லிம்கள் பெரும்பான்மை சமூகமாக மாறி விடுவார்கள். அரசியல் அதிகார மையங்களில் அவர்களை அமர வைக்க வேண்டி வரும் என்ற தொலை நோக்கு பார்வை உங்களுக்கும் வருவதில் எனக்கு ஆச்சரியம் இல்லை.

//நான் கேட்பதெல்லாம் ஒரே கேள்விதான்

பிரிந்து சென்ற பாகிஸ்தான்,வங்க தேசம் நன்றாக இருக்கிறதா?//

அவர்களை பிரிந்து போகச் சொல்லி இங்குள்ள முஸ்லிம்கள் யாரும் அவர்களை கேட்டுக் கொள்ளவில்லை. அவர்கள் தலையில் அவர்களே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டனர்.

பிரிந்து போகும் போது ஒரு இஸ்லாமிய தலைமையை கொண்டு சென்றிருந்தாலும் கொஞ்சமாவது ஒப்பேத்தியிருக்கலாம். இஸ்லாமிய வாடை கொஞ்சமும் இல்லாத மேற்கத்திய நாகரிகத்தை விரும்பும் ஜின்னாவை தலைவராகக் கொண்டது அடுத்த தவறு. இங்குள்ள முஸ்லிம்கள் எக்கேடு கெட்டாவது போகட்டும். எங்களுக்கு ஒரு நாடு கிடைத்தால் போகும் என்று சுயநலத்தோடு நடந்து கொண்டார்கள். இங்கிருந்து சென்ற சில முஸ்லிம்களை முஹாஜிர்கள் என்று அந்நியனைப் போல பார்க்க ஆரம்பித்தனர். இப்படி அடுக்கடுக்காக இஸ்லாத்துக்கும் நமது நாட்டுக்கும் விரோதமாகவே எப்போதும் நடந்து வரும் இந்த நாடுகளில் எவ்வாறு இறைவன் அமைதியைக் கொடுப்பான்.?

//உருது தெரியும் என நினைக்கிறேன்.ஒரு வேளை இல்லை எனில் எழுத ஒரு பாகிஸ்தானியை பிடியுங்கள்!!. திருத்துங்கள் பாகிஸ்தானை!!!//

உருது பேசுவேன். வாக்குவாதங்கள் செய்யும் அளவுக்கு தேர்ச்சி பெற்றுள்ளேன். சவுதியில் இத்தனை வருடம் இருந்ததில் இந்த நன்மையும் ஒன்று. ஆனால் எழுத தெரியாது.

//அப்படி திருந்தி இரு நாடுகளும் காஃபிர்களின் நாடான இந்தியாவை விட சிறப்பாகி விட்டால் நீங்கள் காஃபிர்களுக்கு தாவா செய்வதில் பொருள் இருக்கும்!!!//

இந்தியாவை காஃபிர்களின் நாடு என்று எப்படி சொல்லப் போயிற்று? பிராமணர்கள், வன்னியர்கள், நாடார்கள், தேவர்கள், அரிஜனங்கள், சீக்கியர்கள், கிறித்தவர்கள், நாத்திகர்கள், ஃபார்சிகள், பவுத்தர்கள், பழங்குடி இன மக்கள், முஸ்லிம்கள் இவர்கள் அனைவரையும் கணக்கெடுத்து பார்த்தால் முஸ்லிம்களே பெரும்பான்மையாக இருப்பர். வெள்ளைக்காரன் கணக்கெடுப்பதற்காக இந்த சாதிகள் அனைத்தையும் ஒன்றாக்கி இந்து என்ற குடையின் கீழ் கொண்டு வந்தான். உங்கள் பாசையில் சொல்லப் போனால் இஸ்லாமிய நாடு என்று கூட சொல்லலாம். ஆனால் நான் அப்படி சொல்ல மாட்டேன். 'வேற்றுமையில் ஒற்றுமை காணும்' தேசமாக எனது தாய் நாடு திகழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.

பல வளங்களையும் பெற்று அனைத்து மக்களையும் சகோதரர்களாக பாவித்து உலகே வியக்கும் வண்ணம் ஒரு அழகிய இந்தியாவை காணவே ஆசைப்படுகிறேன்.

//இன்னும் கூட பி.ஜே & கோ உடன் அங்கேயே திருத்த சென்று [நாடு கடத்தவில்லை சகோ!!.சும்மா கொஞ்ச நாளைக்கு] அங்குள்ள மதவாதிகளை திருத்துங்கள். ஒருவேளை வெற்றியுடன் திரும்பி வந்தால் "மார்க்கம் காக்கும் மாமனிதன்" என பட்டம் வழங்க நான் தயார்!!!!!!!!!!!!!//

அங்கெல்லாம் செல்ல வேண்டியதில்லை. ஆன்லைன் பிஜே உலக மொழிகள் அனைத்திலும் தற்போது ஒலி, ஒளி பரப்பாகிக் கொண்டுள்ளது. பிஜேயின் அனைத்து சிடிக்களும் உருது மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இன்று தமிழகத்தில் தவ்ஹீத் புரட்சி ஏற்பட இணைய தளமும், மற்றும் சிடிக்களும் முக்கிய காரணம். தற்போது வட நாடுகளில் பிஜே யின் கேசட்டுகள் பரவலாக செல்கிறது. இனி பாகிஸ்தானுக்கும் பங்களாதேசுக்கும் சென்றால் நீங்கள் சொல்லும் மாற்றம் இறைவன் நடினால் வரலாம்.

//பாவம் சகோ நீங்கள் .இந்த த‌மிழில் தமிழ்மண்த்தில் எழுதி காஃபிர்களுக்கு கிச்சு கிச்சு மூட்டியதை தவிர ஒன்றும் பயன் இல்லையே சகோ//

பயன் இருக்கிறதா இல்லையா என்பதை இன்னும் சில ஆண்டுகளில் நீங்களே தெரிந்து கொள்வீர்கள் இறைவன் நாடினால்.

உங்கள் நலம் நாடும்
சுவனப்பிரியன்.

Anonymous said...

இந்தப் பதிவு தேவையற்றது என நினைக்கின்றேன். இனி மேல் பாகிஸ்தானையும் - இந்தியாவையும் இணைக்கவா முடியும் சொல்லுங்கள் .. காலம் கடந்துவிட்டன. இன்றைய நிலையில் பாகிஸ்தான் - இந்தியா சமூகமாக இருப்பதே சரியானது .. பாகிஸ்தான் சீனாவுக்கு ஜல்லியடிப்பதும், இந்தியா அமெரிக்காவுக்கு ஜல்லியடிப்பதும், பாகிஸ்தான் தீவிரவாதங்களை வளர்த்துவிட்டு இந்தியா உட்பட உலகம் எல்லாம் குண்டுகளை வைப்பதும், புரளிகளைக் கிளப்பி அசாம், மியன்மாரில் கலவரங்களை செய்வதையும், தாலிபான்களுக்கு அடைக்கலம் கொடுப்பதையும் நிறுத்த வேண்டும்.

இந்தியா முஸ்லிம் விரோதங்களைக் கைவிட்டு இந்திய முஸ்லிம்களின் வாழ்வாதரங்களை பெருக்க, கல்வி முன்னேற்றம் ஏற்பட உழைக்க வேண்டும். தமது பாதுகாப்பை உறுதி செய்ய திறம் பெற வேண்டும்.

இந்தியாவும் - பாகிஸ்தானும் காஸ்மீரில் இருந்து வெளியேறி அந்த மக்களுக்கு என ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தி மக்கள் தரும் தீர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும் ... !!!

இவை எல்லாம் நடக்க எதாவது செய்யுங்களேன். இந்த பழம் கதைகளைக் கேட்டு கேட்டு புளித்துப் போய்விட்டது. ஹே ராம் ! படத்தோடு இது போய் தொலையட்டும் ... !!!

கோவி.கண்ணன் said...

உங்க கோஷ்டி பாகிஸ்தான், பங்களாதேஷ் என இரண்டு "முஸ்லிம்" நாடுகள் உருவாகியதை பெருமையாகப் பேசி, இந்தியாவும் விரைவில் அவ்வாறு ஆகவேண்டும் என்று எழுதுகிறீர்கள், பின்னர் துண்டாடியதைப் பற்றியெல்லாம் பேசுகிறீர்கள், முன்னுக்கு பின் முரணாக எழுத உங்களால் தான் முடியும்.

suvanappiriyan said...

தங்கமணி!

//அதன் பின்னால் நடந்த தேர்தலில் சென்னை மாகாண முஸ்லீம்கள் பெருவாரியாக வாக்களித்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக போராடிய முஸ்லீம் லீகுக்கு வாக்களித்தனர். சென்னை தேர்தலில் 1946இல் காங்கிரஸ் 163 இடங்களை பெற்றது.இரண்டாவதாக வந்த கட்சி பாகிஸ்தான் ஆதரவு முஸ்லீம் லீக். பெற்ற இடங்கள் 28
அன்றைய சென்னை மாகாண முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்று சொல்வது இமாலய பொய்.//

........இதனை நேருவிடம் புகாராக சொல்லியும் எந்த பிரயோசனமும் இல்லை. இந்த இரண்டு சம்பவங்களும் முஸ்லிம்ளிடம் பிரசாரம் செய்ய ஜின்னாவுக்கு மிக தோதுவாகப் போனது.
AZAD PAPERS AS INCERTED IN INDIA WINS FREEDOM PAGE 17,18
இதன் பிறகுதான் ஜின்னாவின் பேச்சை சில முஸ்லிம்கள் கேட்க ஆரம்பித்தனர். அதன் பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் முஸ்லிம் லீக் அமோக வெற்றி பெறுககிறது. தனக்கு பாதகமான சூழ்நிலைகளையே சாதகமாக மாற்றிக் கொள்ளும் ஜின்னா இதை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்……..

முதலில் ஜின்னாவை ஆதரிக்காத முஸ்லிம்கள் காங்கிரஸாரின் இந்து சார்பு நிலையை தெரிந்து கொண்டு அதன் பிறகுதான் முஸ்லிம் லீக்குக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்று நான் கூறியதை படிக்கவில்லையா தங்கமணி!

இது போன்ற தேர்தல்களில் பாகிஸ்தான் பிரிவினைக்காகத்தான் சென்னை முஸ்லிம்கள் ஓட்டளித்து வெற்றி பெற வைத்தார்கள் என்று நீங்கள் சொல்வது உண்மையாக இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அடுத்த வருடம் பாகிஸ்தான் பிரிந்த போது சென்னை மாகாண முஸ்லிம்கள் ஏன் பாகிஸ்தானுக்கு செல்லவில்லை என்பதற்கும் உங்களின் பதில் என்ன? இப்பொழுது யார் இமாலய பொய்யை சொலகின்றனர் என்பது தெரிகிறதல்லவா?

suvanappiriyan said...

இக்பால் செல்வன்!

//இந்தப் பதிவு தேவையற்றது என நினைக்கின்றேன். இனி மேல் பாகிஸ்தானையும் - இந்தியாவையும் இணைக்கவா முடியும் சொல்லுங்கள் ..//

அனைத்து மக்களாலும் தேசிய தலைவராகப் பார்க்கப்பட்ட அபுல் கலாம் ஆசாத்தைப் பற்றி ஒரு அவதூறை மலர் மன்னன் அவர்கள் வெளியிட்டதால்தான் இந்த பதிவு எழுதவே முயற்சித்தேன். இதற்கு பதிலளிக்காமல் இருந்தால் அவர் வைத்த குற்றச்சாட்டு உண்மையாகி விடும் இல்லையா? ஆதாரம் கேட்டவுடன் அவர் தந்த பதில் என்ன?

//மேலும் அபுல் கலாம் ஆசாத் கோப்பைத் தேடி எடுக்க அவகாசம் இல்லை. அதில் கவனம் செலுத்தினால் இப்போது முழு ஈடுபாட்டுடன் எழுதி வரும் நூலில் தொய்வு விழுந்துவிடும். எனக்கு உதவியாளர் வைத்துக்கொண்டு கோப்புகள் புத்தகங்களை ஒழுங்கு செய்ய வசதி இல்லை. அவர்களாக முடிந்த போது வந்து உதவி செய்பவர்களே உள்ளனர். அவர்களும் சில முக்கியமான புத்தகங்களையும் கோப்புகளையும் இட மாற்றம் செய்துவிட்டுப் போய்விடுகிறார் கள்!// - மலர் மன்னன்!

இதுதான் அவரிடமிருந்து வந்த பதில். ஆக அபுல் கலாம் பற்றி சொன்னதற்கு தற்போது அவரிடம் ஆதாரம் இல்லை. இதுதான் இந்த பதிவின் மூலம் விளைந்த பயன்.

//பாகிஸ்தான் சீனாவுக்கு ஜல்லியடிப்பதும், இந்தியா அமெரிக்காவுக்கு ஜல்லியடிப்பதும், பாகிஸ்தான் தீவிரவாதங்களை வளர்த்துவிட்டு இந்தியா உட்பட உலகம் எல்லாம் குண்டுகளை வைப்பதும், புரளிகளைக் கிளப்பி அசாம், மியன்மாரில் கலவரங்களை செய்வதையும், தாலிபான்களுக்கு அடைக்கலம் கொடுப்பதையும் நிறுத்த வேண்டும்.//

இதற்கெல்லாம் மூல காரணமாக செயல்படுவது அமெரிக்கா என்பதை வசதியாக மறைத்து விட்டு பேசுகிறீர்களே! நீங்கள் மறைத்தாலும் மக்களுக்கு தெரிந்தே இருக்கிறது. :-(

//இந்தியா முஸ்லிம் விரோதங்களைக் கைவிட்டு இந்திய முஸ்லிம்களின் வாழ்வாதரங்களை பெருக்க, கல்வி முன்னேற்றம் ஏற்பட உழைக்க வேண்டும். தமது பாதுகாப்பை உறுதி செய்ய திறம் பெற வேண்டும்.//

உங்கள் வார்த்தைகளை வழி மொழிகிறேன்.

//இந்தியாவும் - பாகிஸ்தானும் காஸ்மீரில் இருந்து வெளியேறி அந்த மக்களுக்கு என ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தி மக்கள் தரும் தீர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும் ... !!!//

உங்கள் வார்த்தைகளை இங்கும் வழி மொழிகிறேன். அந்த மக்களின் விருப்பம் எதுவோ அதன்படி ஐநா மேற்பார்வையில் நேரு கொடுத்த வாக்குறுதிபடி தேர்தல் நடத்தப்படுவதே நிரந்தர தீர்வாக அமையும். அல்லது அங்குள்ள ராணுவத்தை முற்றிலுமாக விலக்கி அந்த மக்களின் நம்பிக்கையை பெற இந்தியா முயற்சிக்க வேண்டும். அதற்கு முன்னால் எல்லையை முழுவதுமாக கண்காணிக்க வேண்டும..

//இவை எல்லாம் நடக்க எதாவது செய்யுங்களேன். இந்த பழம் கதைகளைக் கேட்டு கேட்டு புளித்துப் போய்விட்டது. ஹே ராம் ! படத்தோடு இது போய் தொலையட்டும் ... !!!//

இந்து மதத்தின் கீழ் வரும் உங்களைப் போன்ற பெரும்பான்மை சமூகத்தவர் இந்த பிரச்னையை அரசுக்கு கொண்டு போனாலே ஒரு தீர்வு சீக்கிரம் கிடைக்கும். நாங்கள் சொன்னால் அதற்கு மத சாயம் பூச பலரும் தயாராக இருப்பதை நீங்களும் அறிவீர்கள். இதற்கு ஒரு முடிவு கண்டால் காஷ்மீரில் ராணுவத்துக்காக நாம் பண்ணும் செலவுகளை வறுமையை போக்க திருப்பி விடலாம்.


suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//உங்க கோஷ்டி பாகிஸ்தான், பங்களாதேஷ் என இரண்டு "முஸ்லிம்" நாடுகள் உருவாகியதை பெருமையாகப் பேசி, இந்தியாவும் விரைவில் அவ்வாறு ஆகவேண்டும் என்று எழுதுகிறீர்கள், பின்னர் துண்டாடியதைப் பற்றியெல்லாம் பேசுகிறீர்கள், முன்னுக்கு பின் முரணாக எழுத உங்களால் தான் முடியும்.//

இரண்டு நாடுகளும் உருவானதற்காக பெருமைபட்டு நான் என்று பதிவு எழுதினேன்? ஆதாரம் தர முடியுமா? இந்திய முஸ்லிமகள் இந்த அளவு வசை சொற்களை இத்தனை ஆண்டுகள் சுமந்ததே ஷியா பிரிவை சேர்ந்த மேற்கத்திய கலாசாரத்தில் மூழ்கி திளைத்த ஜின்னா எடுத்த தவறான முடிவுகளே! அவருக்கு ஆதரவாக செயல்பட்ட இந்துத்வ தலைவர்களும் ராஜாஜியும், படடேலும், ராஜேந்திர பிரசாத்தும், திலகரும் என்றல்லவா இன்று வரை சொல்லி வருகிறேன். ஒன்றுபட்ட இந்தியாவாக இருந்திருந்தால் இன்று வல்லரசாக மாறியிருப்போம் வெள்ளைக்காரன் பண்ணிய சூழ்ச்சிக்கு சில இந்துக்களும் சில முஸ்லிம்களும் அன்று பகடைக்காய்களாக பயன்படுத்தப்பட்டனர் என்பதுதான் எனது வாதமே!

ராஜ நடராஜன் said...

பின்னூட்டங்களை மேய்ந்ததில் சில கண்ணில் பட்டன.

1.அனானி! அத்வானி பாகிஸ்தானிலிருந்து இந்தியா குடியேறிய இப்பொழுது இந்தியர்.

2.சகோ.சுவனப்பிரியன்!அதென்ன எல்லா இந்துக்களையும் சாதி வாரியாக பிரிக்கிறீர்கள்.முஸ்லீம்களை மட்டும் ஒரே குடையில் கொண்டு வருகிறீர்கள்?இதில் வேறு ஐரோப்பாவும்,அமெரிக்காவும் இஸ்லாமிய நாடுகளாகி விடுமென்ற பிரச்சாரம் வேறு:)ஒரு வேளை ஐரோப்பாவின் சம மனித உரிமைகள் காரணமாகவும்,குடியேறிய மக்கள்தொகையின் அடிப்படையில் இஸ்லாமிய தேசமாகிப் போய் விடுமென்று கனவு கண்டாலும் அமெரிக்கா வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது மாதிரி வலிக்காமலே ஊசி போடுவான்.இன்னும் காத்திருங்கள்.

சுட்டி கொடுத்ததற்கு நன்றி.

இக்பால் செல்வன்!இந்தியாவும்,பாகிஸ்தானும் ஒன்றாக இணைய வேண்டிய அவசியமில்லை.தூங்கி எழுந்து ஒப்புக்கு சப்பாணியாக நாடுகள் சேராத அணிகள் மாதிரி சார்க் என்ற அமைப்பும் கூட இயங்குகிறது.அதனைக் கூட தமது நலன்களுக்கு சரியாக நட்புறவோடு உபயோகிப்பதில்லை.எனக்குத் தெரிந்து வாஜ்பாய்,முஷ்ரப் கைகுலுக்கிக் கொண்டது,இந்திய மாம்பழங்களில் வெரைட்டி இருந்தாலும் சுவையும்,இனிப்பு அதிகமான பாகிஸ்தான் மாம்பழ பரிமாறல்,இங்கும் அங்குமாக சில வர்த்தக தொடர்புகள்(வெங்காயம் நமக்கு கிடைக்கவில்லையென்றால் இறக்குமதி போன்றவை),ஓடாத ரயிலை ஓடவிட்டது போன்ற நட்பு ரீதியான தொடர்புகளுக்கும் அப்பால் பாகிஸ்தானின் மக்கள் வாழ்வை நிர்ணயிப்பது ஐ.எஸ்.ஐ சார்ந்த ராணுவ நிர்வாகமும்,இஸ்லாமிய அடிப்படை வாதமும்,மதராஸா சார்ந்த மத கல்வி முறையும்.

பம்பாய் தொடர் குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்த ஆர்.எஸ்.எஸ்,பஜ்ரங்க் தள் இன்ன பிற இந்துத்வா சக்திகள் உயிர் பெற்று உசுப்பி விடும் சக்தி பெற்றவையாகவும்,பாபர் குண்டு வெடிப்பு,மறுபடியும் பம்பாய் தாஜ்மகால்,விக்டோரியா டெர்மினல் தாக்குதல் போன்ற பெரும் வடுக்கள் இருக்கின்றன.பாகிஸ்தானுக்கு பெங்களாதேஷை இந்தியா பிரித்ததன் நியாயமான கோபங்கள் இருக்கின்றன.

இவற்றையெல்லாம் கடந்து தெற்காசிய வளர்ச்சிக்கும்,இந்திய,பாகிஸ்தான் நட்புறவுக்கும் பாகிஸ்தான் துருக்கி மாதிரியான இஸ்லாமிய நாடாக மாறலாம்.அல்லது ராணுவ அதிகாரங்களை குறைத்து ஜனநாயக அரசியலுக்கு முக்கியத்துவம் தராத வரை பாகிஸ்தானுக்கு விமோச்சனமில்லை.என்னதான் இந்தியாவின் ஒரு ஏவுகணைக்கு மறு பரிசோதனை பாகிஸ்தான் செய்தாலும் இந்தியாவுடன் பொருளாதார ரீதியாக போட்டி போட இயலாது.

பாகிஸ்தான் மட்டுமே அமெரிக்காவுடன் நீண்ட நட்பு நாடாக இருந்தது.இப்பொழுதும் இருக்கிறது.இந்தியாவுடனான அமெரிக்க உறவு 9/11 பின்பு ஏற்பட்ட மாற்றங்கள்.9/11 கால கட்டத்திலேயே வாஜ்பாய் அமெரிக்காவை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்தும் கூட ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தானையே நம்பியது.பொருளாதார உதவிகளும் செய்தது.இப்பொழுதும் பாகிஸ்தானை தாங்கிப் பிடித்துக்கொண்டிருப்பது அமெரிக்க உதவியே.ஆனால் ஜனநாயக ரீதியாக செயல்படும் ஒரு சில கட்சிகளை விட மதவாத கட்சிகளும்,ஐ.எஸ்,ஐ,ராணுவம் வலிமை வாய்ந்தது என்பதுதான் பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு சவாலான விசயமாக இருக்கிறது.

பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் குறித்த பக்க சார்பில்லாத ஆங்கில ஆவணப்படங்கள் நிறைய கிடைக்கின்றன!பாருங்கள்.நம் சகோக்களின் கனவுகள் மாதிரி இல்லாமல் அமெரிக்கா நலன் சார்ந்த கனவுகள் நீண்டு கிடக்கின்றன.

R.Puratchimani said...

ஐயா சுவனம்,

//அதைத்தானே இந்த பதிவிலும் சொல்லியிருக்கிறேன். முதலில் பாகிஸ்தானாக பிரிய வேண்டும் என்று விரும்பிய பல முஸ்லிம்களும் ஆரம்பத்தில் இந்தியா ஒன்றாக இருக்கவே விரும்பினர். சவர்க்கர், பட்டேல், திலகர், ராஜரிஜ போன்ற இந்துத்வ தலைவர்களின் ஒருதலைப்பட்டசமான சில முடிவுகளை பார்த்துதான் தனி நாடு என்ற நிலைக்கே தள்ளப்படுகின்றனர். நான் சொன்னதைத்தானே நீங்களும் சொல்கிறீர்கள்?//

இதைத்தான் அரைகுறையாக ஆய்வு செய்யாமல் புரிந்து கொள்வது என்பது.

அகமது கான், நீங்கள் கூறும் தலைவர்கள் தலை எடுப்பதற்கு முன்பே தனி இசுலாமிய நாடு வேண்டும் என்ற கோரிக்கையை தூவிவிட்டு இறந்துவிட்டார். அவர் வாழ்ந்த காலம் (October 17, 1817 – March 27, 1898). பின்பு எப்படி இவர்களை நீங்கள் காரணம் கூறுகின்றீர்கள் இது அறிவுடமையா? முதலில் பிரிவினையை பற்றி பேசியது யார் இசுலாமியர் தானே?
கொஞ்சம் ஆய்வு செய்துவிட்டு எழுதுங்கள் ஒன்னும் அவசரம் இல்லை.

ராஜ நடராஜன் said...

//இந்திய முஸ்லிமகள் இந்த அளவு வசை சொற்களை இத்தனை ஆண்டுகள் சுமந்ததே ஷியா பிரிவை சேர்ந்த மேற்கத்திய கலாசாரத்தில் மூழ்கி திளைத்த ஜின்னா எடுத்த தவறான முடிவுகளே! //

சகோ.சுவனப்பிரியன்!இருங்க உங்களை பாகிஸ்தான் ராணுவத்திடம் புடிச்சுக் கொடுக்கிறேன்:)

ஜின்னா மாதிரியான மேற்கத்திய கலாச்சாரத்தை பாகிஸ்தான் பின்பற்றியிருந்தாலும் கூட ஓரளவுக்கு தேறியிருக்கும்.நம்மிடம் இன்னும் காலனிய குணங்கள் இருக்கின்றன.பாகிஸ்தானின் எலைட் பிரிவுகள் தவிர மேற்கத்திய கலாச்சார எச்சங்கள் சராசரி மக்களிடம் இல்லையென்ற கர்வமும் மத அடிப்படை குணங்கள் மட்டுமே பாகிஸ்தானுக்கு பெருமை.

கோவி.கண்ணன் said...

//ஒன்றுபட்ட இந்தியாவாக இருந்திருந்தால் இன்று வல்லரசாக மாறியிருப்போம் //

வல்லரசு ஆகவில்லை என்று யார் அழுதார்கள் ? ஊழலற்ற நல்லரசாக இருக்க வேண்டும் என்று தான் பலரும் புலம்புகிறார்கள்.

பாகி, பங்களா பிரிந்ததால் இந்தியாவிற்கு நட்டமில்லை, பங்களா கள்ளக் குடியேறிகளாக இந்தியாவில் வசிக்கின்றனர், பாகி பண மதிப்பு இந்திய பண மதிப்பைவிட பாதி, இவர்களை சேர்த்துக் கொண்டு இருப்பது இந்தியாவிற்கு எந்தப் பலனும் தராது. அவர்களுடையை பொருளாதரங்கள் பின் தங்கியதற்கு அவர்களின் அடிப்படைவாதங்கள் தான் காரணம், உங்களிடம் பணம் இருந்தால் அவர்கள் நாட்டிற்கு உதவி தொகை அனுப்பி வையுங்கள், ஆனால் அவர்களை நினைத்து இந்தியா வல்லரசு ஆகி இருக்கும் என்றெல்லாம் புலம்பாதீர்கள்.

உங்க புலம்பலுக்கும் அகண்ட இந்தியா கனவு காணும் ஆர் எஸ் எஸ் வகையறா கனவுக்கும் மத அடிப்படைகளைத் தாண்டி வேறொன்றும் இல்லை.

இந்தியா இஸ்லாமிய நாடு ஆகும் நாள் தொலைவில் இல்லை, இன்ஷா அல்லா என்றெல்லாம் உங்கள் சகாக்கள் எழுதியது எனக்கு நினைவில் இருக்கிறது, குப்பையெல்லாம் கிளறி ஆதாரம் காட்ட எனக்கு தேவை இல்லை.

suvanappiriyan said...

//வல்லரசு ஆகவில்லை என்று யார் அழுதார்கள் ? ஊழலற்ற நல்லரசாக இருக்க வேண்டும் என்று தான் பலரும் புலம்புகிறார்கள்//

கருத்தை வழி மொழிகிறேன்.

//பாகி, பங்களா பிரிந்ததால் இந்தியாவிற்கு நட்டமில்லை, பங்களா கள்ளக் குடியேறிகளாக இந்தியாவில் வசிக்கின்றனர்,//

திரும்பவும் இணைக்க சொல்லவில்லை. அடுத்து பங்களாதேஷிகளின் கள்ள குடியேற்றம் தடுக்கப்பட வேண்டியதில் மாற்றுக் கருத்தில்லை. எல்லையில் வேலி அமைப்பதில் மெத்தனமாக நமது அரசு இருப்பது கண்டிக்க தக்கதே!

suvanappiriyan said...

சகோ ராஜநடராஜன்!

//2.சகோ.சுவனப்பிரியன்!அதென்ன எல்லா இந்துக்களையும் சாதி வாரியாக ிரிக்கிறீர்கள்.முஸ்லீம்களை மட்டும் ஒரே குடையில் கொண்டு வருகிறீர்கள்?//

குலம் கோத்திரம் என்பதை சாதிகளாகவும் அவற்றில் ஏற்ற தாழ்வுகளையும் இந்து மத ஸ்மிருதிகள் காலம் காலமாக ஏற்படுத்தி வந்துள்ளதை மறுக்க மாட்டீர்கள். இன்றும் கூட ஒரே மதமாக அரசு சொன்னாலும் பிரமணர்களுக்கும் மற்ற சாதிகளுக்கும் கலாசாரத்திலேயே கும்பிடும் க்வுளிலிருந்தே வித்தியாசம் ஆரம்பமாகி விடுகிறது. சுடலைமாட சாமியை வணங்கிய பிராமணர்கள் உண்டா? இன்றும் தேர் இழுப்பதில் ஒவ்வொரு வருடமும் வெட்டு குத்துகள் பல கிராமங்களில் நடந்து வருகிறதா இல்லையா? வன்னியர்களுக்கு ஒரு சாமி, தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒரு சாமி, இடைப்பட்ட தேவர், செட்டியார், மூப்பனார் போன்ற சாதிகளுக்கு தனி பழக்க வழக்கங்கள். இவை எல்லாம் இந்து என்ற ஒன்றின் கீழ் வந்தாலும் தண்ணீரும் எண்ணையும் போல பிரிந்தே உள்ளதை நீங்கள் அறிவீர்கள். இது வருத்தப்பட வேண்டிய விஷயமே. திரவம் என்ற வகையில் தண்ணீரும் எண்ணெயும் எவ்வாறு வருகிறதோ அது போல தான் இந்து மதத்தில் உள்ள சாதி வித்தியாசங்களும். இந்து மதத்தில் பிரச்னை இல்லை என்றால் ஏன் எனது முன்னோர்கள் சில தலைமுறைகளுக்கு முன்னால் அரபு நாட்டிலிருந்து வந்த இஸ்லாமை தழுவ வேண்டும்?

//ஜின்னா மாதிரியான மேற்கத்திய கலாச்சாரத்தை பாகிஸ்தான் பின்பற்றியிருந்தாலும் கூட ஓரளவுக்கு தேறியிருக்கும்.நம்மிடம் இன்னும் காலனிய குணங்கள் இருக்கின்றன.பாகிஸ்தானின் எலைட் பிரிவுகள் தவிர மேற்கத்திய கலாச்சார எச்சங்கள் சராசரி மக்களிடம் இல்லையென்ற கர்வமும் மத அடிப்படை குணங்கள் மட்டுமே பாகிஸ்தானுக்கு பெருமை.//

சவுதி போன்று இஸ்லாத்தின் அடிப்படையை வைத்து மேற்கத்திய அறிவியல் முன்னேற்றங்களையும் பயன்படுத்தி முன்னுக்கு வருவதை யார் தடுத்தது?



ஷர்புதீன் said...

கலைஞர் டிவி- ஜெயா டிவி செய்திகளில் செய்திகள் எப்படி தொகுக்கப்படும் என்று யாராலும் சுலபமாக யூகிக்கப்படும், அது போலவே தான் இது போன்ற தலைப்புகளில் வரும் உங்களின் பதிவுகளும்.,

அதாவது நீங்கள் எழுதுவது எல்லாம் சப்பை கட்டு என்பதல்ல இதன் அர்த்தம், வசமாகும் விஷயத்தை மட்டும் வசபடுத்துவது என்று கூட பொருள் கொள்ளலாம்.

கோவி கண்ணன், இக்பால் செல்வன் போன்றவர்கள் கூட இதையே தான் செய்வதாக நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் said...

குலம் கோத்திரம் என்பதை சாதிகளாகவும் அவற்றில் ஏற்ற தாழ்வுகளையும் இந்து மத ஸ்மிருதிகள் காலம் காலமாக ஏற்படுத்தி வந்துள்ளதை மறுக்க மாட்டீர்கள்.

///

குரானிலும் அப்படித்தானே இருக்கு, ஓ - இது மனிதர்கள் வரையறுத்ததால் அப்படியா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்

உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; 49:13

இதுக்கு எனக்கு ப்ராக்கெட் போட்ட பெரிய விளக்கம் தேவை.

:)

கோவி.கண்ணன் said...

//இன்றும் தேர் இழுப்பதில் ஒவ்வொரு வருடமும் வெட்டு குத்துகள் பல கிராமங்களில் நடந்து வருகிறதா இல்லையா? //

இரண்டு தரப்பு அடித்துக் கொள்வது தான் பிரச்சனை என்றால் பக்கத்து பாகிஸ்தானில் மசூதிக்குள் குண்டு வெடிப்பது மாதம் ஒருநாளாவது நடக்கும் செயல்.

பாவம் சார் ரொம்பவும் குழம்பிப் பேய் இருக்கிங்க, நாங்களெல்லாம் பார்பனரை பார்பனர் என்று எழுதும் பொழுது நீங்க ரொம்பவும் மரியாதைக் கொடுத்து பிராமணர் என்றே எழுதிவருகிறீர்கள், உங்களுக்கு பிராமணர் ஆகும் விருப்பம் இருந்தால் டோண்டு இராகவனிடம் சொல்லி மாட்டுவிடச் சொல்கிறேன்.

கோவி.கண்ணன் said...

சவுதி போன்று இஸ்லாத்தின் அடிப்படையை வைத்து மேற்கத்திய அறிவியல் முன்னேற்றங்களையும் பயன்படுத்தி முன்னுக்கு வருவதை யார் தடுத்தது? //

பெட்ரோல் பணம் கொழிக்கும் வரை எதுவும் செய்யலாம், பாகி, பங்களாவிடம் இல்லை அதனால் அடிப்படைவாதத்தை மட்டுமே ஆயுதமாக வைத்திருக்கிறார்கள்,

வவ்வால் said...

திரு.சு.பி.சுவாமிகள்,

// வன்னியர்களுக்கு ஒரு சாமி, தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒரு சாமி, இடைப்பட்ட தேவர், செட்டியார், மூப்பனார் போன்ற சாதிகளுக்கு தனி பழக்க வழக்கங்கள். இவை எல்லாம் இந்து என்ற ஒன்றின் கீழ் வந்தாலும் தண்ணீரும் எண்ணையும் போல பிரிந்தே உள்ளதை நீங்கள் அறிவீர்கள். இது வருத்தப்பட வேண்டிய விஷயமே. திரவம் என்ற வகையில் தண்ணீரும் எண்ணெயும் எவ்வாறு வருகிறதோ அது போல தான் இந்து மதத்தில் உள்ள சாதி வித்தியாசங்களும்.//

நீங்கள் சொன்னது போல இருக்கிறது சண்டையும் உண்டு,

அதே போல இஸ்லாமியர்களிடையே எத்தனை பிரிவு ,அதில் அவர்களிடையே சண்டை ,கொலை என்பதையும் சொல்லுங்களேன், கீழ சில பிரிவுகள்,இவங்க, ஒருத்தருக்குள்ள ஒருத்தர் கல்யாணம் கூட செய்வதில்லை :-))

அப்போ இஸ்லாமியர்கள்னு சொல்லிக்கிற எண்ணிக்கை ரொம்ப குறைவு தான் :-))

சன்னி,

ஷியா,

வஹாஃபி,

சலாபி,

சுலைமானி,

யெமானி,

இஸ்மாயிலி,

மஹ்தி,

நிசாரி,

இத்னாஷாரி,

சைதித்,

சூஃபி,

அஹ்மதியா ,

இன்னும் கூட நிறைய இருக்கு தேடினா கிடைக்கும் :-))

Anonymous said...

after jasmine revolution in LIBYA sufi shrines are systematically destroyed. in INDIA sufism is the back bone for hindu muslim unity. both hindus and some sects of muslims consider all darghs sacred. if wahabism and salfism gains ground what is the fate of sufism in secular india.Even the sauds now want some common meeting ground between sunnis and shias (read, Iran)

Anonymous said...

even during 800 years of muslim rule in most parts of INDIA, THE ECONOMY AND AGRICULTURE FLOURISHED IN INDIA. INDIA WAS WAY AHEAD OF ENGLAND AND EUROPEAN NATIONS. BUT INDUSTRIAL REVOLUTION IN EUROPE AFTER FALL OF ISTANBUL TO TURKS., AND ENGLISH RULE DESTROYED INDIAN INDUSTRY, TRADE, COMMERCE, AND MAINLY AGRICULTURE, IN SHORT BRITISH RULE DESTROYED INDIAN PROSPERITY AND NOT THE ENTIRE MUSLIM RULERS DOMINATION. HISTORY BOOKS MUST HIGHLIGHT THIS WITH STASTICS AVAILABLE IN ARCHIVES AND EARLY AUTHENTIS HISTORY WRITINGS

Anonymous said...

even during 800 years of muslim rule in most parts of INDIA, THE ECONOMY AND AGRICULTURE FLOURISHED IN INDIA. INDIA WAS WAY AHEAD OF ENGLAND AND EUROPEAN NATIONS. BUT INDUSTRIAL REVOLUTION IN EUROPE AFTER FALL OF ISTANBUL TO TURKS., AND ENGLISH RULE DESTROYED INDIAN INDUSTRY, TRADE, COMMERCE, AND MAINLY AGRICULTURE, IN SHORT BRITISH RULE DESTROYED INDIAN PROSPERITY AND NOT THE ENTIRE MUSLIM RULERS DOMINATION. HISTORY BOOKS MUST HIGHLIGHT THIS WITH STASTICS AVAILABLE IN ARCHIVES AND EARLY AUTHENTIS HISTORY WRITINGS

suvanappiriyan said...

வவ்வால்!

//அதே போல இஸ்லாமியர்களிடையே எத்தனை பிரிவு ,அதில் அவர்களிடையே சண்டை ,கொலை என்பதையும் சொல்லுங்களேன், கீழ சில பிரிவுகள்,இவங்க, ஒருத்தருக்குள்ள ஒருத்தர் கல்யாணம் கூட செய்வதில்லை :-))//

ஒரு சில பிரிவுகள் இருந்தாலும் வேதம் ஏற்றத் தாழ்வை கற்பிக்கவில்லை. ஆனால் இந்து மத ஸ்மிருதிகள் பக்காவாக சாதி பாகுபாடுகளை திணிப்பதால்தான் வேறுபாடுகள் அதிகரித்து செல்கிறது. கோவில் வரை தீண்டாமை வர அதுதான் காரணம். இஸ்லாத்தில் என்னதான் வேறுபாடு காட்டினாலும் இறைவனை வணங்கும் போது தீண்டாமையை யாரும் கடைபிடிப்பதில்லை. ஏனெனில் வேதம் தீண்டாமையை வெறுக்கிறது.

வவ்வால் said...

திரு.சு.பி.சுவாமிகள்,

முதலில் இஸ்லாம் என்பது ஒன்றாக இருக்கு இந்துமதத்தில் தான் எத்தனைப்பிரிவினை என்றீர்கள், இப்போ அதில் இருக்கும் பிரிவினையை சுட்டியதும் ,ஹி...ஹி பிரிவு இருக்கு ஆனால் தீண்டாமை இல்லை என்கிறீர்கள்,

இப்போ தீண்டாமைக்கு ஆதாரம் கொடுத்தால் ...ஹி...ஹி நான் இந்தப்பதிவே போடவில்லை, நான் எப்போ சொன்னேன் என்பீர்களா?

செய்தியைப்படியுங்கள்:

"காந்தகார்: ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில், இசையுடன் கூடிய, விருந்தில் பங்கேற்ற, இரண்டு பெண்கள் உட்பட 17 பேரை, தலிபான்கள், தலையைத் துண்டித்து கொடூரமாகக் கொன்றனர்.ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் வசிக்கும், பழங்குடி இனத்தவர் பாரம்பரிய நடனமாடுவது வழக்கம். பொது இடத்தில் ஆணும், பெண்ணும் இணைந்து ஆடும் இந்த நடனத்துக்கு, தலிபான் பயங்கரவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 1996 முதல் 2001 வரை ஆப்கனில், தலிபான்கள் ஆட்சி நடந்தபோது, இவ்வகை நடனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.அதிபராக ஹமீது கர்சாய் பொறுப்பேற்றதும், மீண்டும் இந்த நடனங்கள் பிரபலமாயின. இருப்பினும், தலிபான்கள் தொடர்ந்து, இந்த நடனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஹெல்மண்ட் மாகாணத்தில், தலிபான்கள் ஆதிக்கம் நிறைந்த, முசா குவாலா மற்றும் கஜகி மாவட்டங்களின் எல்லையில் உள்ள, ஜமிந்தாவர் கிராமத்தில், சமீபத்தில் பழங்குடியினர் இசையுடன் கூடிய, விருந்து நடத்தியுள்ளனர்.ஆத்திரமடைந்த தலிபான்கள், விருந்தில் பங்கேற்று நடனமாடிய இரண்டு பெண்கள் உட்பட, 17 பேரின் தலையைத் துண்டித்து கொலை செய்தனர்."

அதாவது பழங்குடியின இஸ்லாமியர்களின் பழக்க வழக்கத்தினை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதும் வருணாசிரமம் போன்றதே.

நாம் அனைத்துவகை வருணாசிரமம், தீண்டாமை, அடக்குமுறைகளை எதிர்க்கிறோம்,ஆனால் நீங்களோ இன்னொரு வருணாசிரம முறையில் வாழ்ந்துக்கொண்டு மற்றவற்றை குறை கூறுகிறீர்கள், அதாவது கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறிகிறீர்கள் :-))

பகுத்தறிவாளர்களாகியா நாங்கள் சொல்வது அனைத்து வகை மக்களுக்கும், நீங்கள் சொல்வது உங்கள் மார்க்கத்தினை உயர்த்தி தற்பெருமை பேசவே.

Anonymous said...

வவ்வால் நீங்க பகுத்தறிவாதியா? நல்லா ஜோக் பண்ணறீங்களே.ஒன்றை பற்றி நாம் விவாதம் பண்ணும்போது அதை பகுத்து அறிந்து அதன் பிறகு கருத்துக்களை வெளியிட வேண்டும்.நான் எதையும் படிக்க மாட்டேன் ஆனால் நான் பகுத்தரிவாதின்னு சொன்னா எப்பூடி.........உங்கள் பின்னூட்டங்கள் எல்லாம் அப்படித்தான் உள்ளது.யாராவது உங்களை கேள்வி கேட்டால் அதற்க்கு பதில் சொல்லாமல் உங்கள் தளத்தில் எல்லாரும் கூடி கும்மி அடிப்பீர்கள்.மற்றவை பிறகு.
kalam.

suvanappiriyan said...

வவ்வால்!

//அதாவது பழங்குடியின இஸ்லாமியர்களின் பழக்க வழக்கத்தினை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதும் வருணாசிரமம் போன்றதே.//

பழங்குடியோ புது குடியோ ஆணும் பெண்ணும் திருமணம் ஆகாமல் பொதுவில் ஆடி பாடுவதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. இவ்வாறு நவீனம் என்ற பெயரில் நம் நாட்டில் கற்பை இழந்த பெண்கள் செய்து கொள்ளும் தற்கொலைகளை கணக்கில் எடுங்கள். இதை விட அதிகமாக இருக்கும். இவ்வாறு ஒரு சிலருக்கு தண்டனை கொடுப்பதால் பெண்மை பாதுகாப்படைகிறது. அடுத்து தாலிபான்கள் பெயரில் அமெரிக்கர்களே அதிக அட்டூழியங்களைச் செய்கிறார்கள் என்று முல்லா உமர் கொடுத்த செய்தியை பாருங்கள்.

7. During the past eleven years, the enemy tried its best to mobilize the Afghans in its favor by dent of its media. Praise be to Allah, they have failed (in their goal). This is because of the existing ground realities that the people and all the world can see. Thereby, their wicked conspiracies were foiled and the so- called independent media outfits which are, in fact, affiliated with their espionage agencies, have been exposed. Their exaggerated hypes and propaganda ultimately harmed their own reputation. Now they have no credibility in the eyes of the people. The public of the world look at their every report to be no more than a mere rumor, propaganda or a conspiracy against the Mujahideen. The people know that these media outlets hide the losses of those who provide them funds and portray the losses of Mujahideen several times more than what they are and are tight-lipped about the Mujahideen’s victories.

8. The enemy tried to flare up chaos among the people through their cunning intelligence networks by capitalizing on the perversity and ignorance of a few young men. They wanted to face people with the same chaotic situation that gripped them in the 90s, following the ouster of the communist government. Praise be to Allah, this wicked conspiracy has failed while being at its earlier stages. Seeing their abhorrent activities, the people became more closer to the Mujahideen and more watchful about the covert conspiracies of the enemy.
முழு செய்தியையும் தமிழில் படிக்க….

http://suvanappiriyan.blogspot.com/2012/08/blog-post_23.html

suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; 49:13

இதுக்கு எனக்கு ப்ராக்கெட் போட்ட பெரிய விளக்கம் தேவை.//

'இன, சாதி, வெறியின் பக்கம் அழைக்கக் கூடியவனும் அதற்காககப் போராடக் கூடியவனும் அதன் பேரில் கோபிக்கக் கூடியவனும் நம்மைச் சார்ந்தவனல்ல' என்று நபி அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: முஸ்லிம்.

அடைப்புக்குறி இல்லாத விளக்கம். :-)

suvanappiriyan said...

வவ்வால்!

//முதலில் இஸ்லாம் என்பது ஒன்றாக இருக்கு இந்துமதத்தில் தான் எத்தனைப்பிரிவினை என்றீர்கள், இப்போ அதில் இருக்கும் பிரிவினையை சுட்டியதும் ,ஹி...ஹி பிரிவு இருக்கு ஆனால் தீண்டாமை இல்லை என்கிறீர்கள்,

இப்போ தீண்டாமைக்கு ஆதாரம் கொடுத்தால் ...ஹி...ஹி நான் இந்தப்பதிவே போடவில்லை, நான் எப்போ சொன்னேன் என்பீர்களா?//

இஸ்லாத்தில் பிரிவுகள் இருக்கிறது என்று நான் எங்கு சொன்னேன். அவை எல்லாம் அறியாத முஸ்லிம்கள் தாங்களாக ஏற்படுத்திக் கொண்டது. நீங்கள் குறிப்பிட்ட அததனை சாதிகளையும் குர்ஆனிலோ நபி மொழிகளிலோ தேடிப் பாருங்கள். எந்த பெயரும் கிடைக்காது. இவை அனைத்தும் முகமது நபிக்கு பின்னால் மக்களால் உண்டாக்கப்பட்டது. இதற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை.

ஆனால் ஹிந்து மத வேதங்களிலிருந்தே தீண்டாமைக் கருத்தை என்னால் எடுத்து தர முடியும். இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. மேலே கோவி கண்ணனுக்கு கொடுத்த நபி மொழியையும் பாருங்கள்.

Anonymous said...

@ வவ்வால் எதன் அடிப்படையில் தாங்கள் பகுத்தறிவாதின்னு சொல்றீங்க ... [TASMAC] அடிச்சுட்டு, ஆஹா...ஓஹோ னு உடல் நலத்தை பாதிக்கும் "மல்லையாவின் " புகழ் படுவதுதான் பகுத்தறிவா ???? இடத்துக்கு தகுந்த மாதிரி வேஷம் கட்டாதீங்க.... சகோ வருண் உங்களை தீண்டத்த்காதவர்னு சொன்னது சரியாகத்தான் இருக்கு..சிங்கையில உங்கள மாதிரித்தான் ,அவரு நாத்திக முகமுடி போட்ட மதவாதி....நீங்க தி.க.முகமுடி போட்ட " தண்ணி பார்ட்டி " on ஒன்றுபட்ட இந்தியாவை துண்டாடியது யார்?

வவ்வால் said...

திரு.சு.பி.சுவாமிகள்,

//இஸ்லாத்தில் பிரிவுகள் இருக்கிறது என்று நான் எங்கு சொன்னேன். அவை எல்லாம் அறியாத முஸ்லிம்கள் தாங்களாக ஏற்படுத்திக் கொண்டது. //

அப்படியானால் அவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது, ஆப்ரிக்கா,யேமன்,இரான், இராக் ,இந்தியா என பல தேசங்களிலும் இவர்கள் தான் அதிகம்,

அயொத்துல்லா/ , இத்னாஷாரி இஸ்லாம் தான் இரானின் தேசிய மதமாகவும் இருக்கும்,

எனவே நீங்கள் சொல்லும் இஸ்லாம் உலகில் ரொம்ப குறைவாகவே பரவி இருக்கு அப்புறம் எப்படி உலகம் முழுக்க பரவும் சொல்லுறிங்க :-))

//இவை அனைத்தும் முகமது நபிக்கு பின்னால் மக்களால் உண்டாக்கப்பட்டது. இதற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை.//

வகாபியிசமும் பின்னாளில் உருவானது என்பதால் அதுவும் இஸ்லாம் இல்லை என ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி! :-))

முல்லா ஓமர் மிக ந்ல்லவர் என உங்களுக்கு மட்டும் தெரிந்துள்ளது :-))

ஏதேனும் ஆப்கானில் படுகொலை நடந்தால் அது அமெரிக்காவின் வேலை என சொல்லி தப்பிவிடலாம்.

இந்தியாவிலும் இந்துத்வா இல்லை அது வெளிநாட்டு சதி என சொல்லிவிடுவார்கள் :-))

எப்படியோ எல்லா மதமும் ஒழிந்தால் சரி தான் ;-))

சிலுக்குவார்பேட்டை சிங்காரி said...

////ஜின்னா மாதிரியான மேற்கத்திய கலாச்சாரத்தை பாகிஸ்தான் பின்பற்றியிருந்தாலும் கூட ஓரளவுக்கு தேறியிருக்கும்.நம்மிடம் இன்னும் காலனிய குணங்கள் இருக்கின்றன.பாகிஸ்தானின் எலைட் பிரிவுகள் தவிர மேற்கத்திய கலாச்சார எச்சங்கள் சராசரி மக்களிடம் இல்லையென்ற கர்வமும் மத அடிப்படை குணங்கள் மட்டுமே பாகிஸ்தானுக்கு பெருமை.//

சவுதி போன்று இஸ்லாத்தின் அடிப்படையை வைத்து மேற்கத்திய அறிவியல் முன்னேற்றங்களையும் பயன்படுத்தி முன்னுக்கு வருவதை யார் தடுத்தது? //

நிச்சயமாக இந்தியா, இந்தியர்கள், இந்துக்கள், இந்துத்துவ்வாதிகள், RSS இல்லை.

மேலும் இதை நீங்கள் பாகிஸ்தானியரிடமல்லவா கேட்கவேண்டும்?