Followers

Monday, August 20, 2012

கீழக்கரை குப்பையும் அரிஜனத் தெருக்களின் அவலமும்!



ஓரளவு வசதியான இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட ஊர் கீழக்கரை. வீடுகளெல்லாம் ஓரளவு நேர்த்தியாக கட்டப்பட்டு இருந்தாலும் குப்பைகளை அகற்றும் வழி தெரியாமல் இன்று முழி பிதுங்கி நிற்கிறது அந்த கிராமம். ஓரளவு படித்தவர்களும் நிறைந்த இந்த ஊர் குப்பைகளை அகற்றுவதற்கு அரசை நாடுவதும் அவர்கள் 'நீங்கள் எல்லாம் வசதியானவர்களாச்சே! நீங்களே பார்த்துக் கொள்ளக் கூடாதா' என்று கோரிக்கைகளை அலட்சியப் படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

ஒரு சாதாரண குப்பை விஷயம் மக்கள் மற்றும் அரசின் அலட்சிய போக்கால் இந்த கிராமத்தை பெரும்பாடு படுத்துகிறது. இதனால் இந்த ஊர் மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற பல நோய்கள் மிக இலகுவாக தொற்றிக் கொள்கிறது. நமது அரசாங்கத்தின் மெத்தனப் போக்கு நாம் அறியாதது அல்ல. அதிலும் பெரும்பான்மை முஸ்லிம்கள் உள்ள ஊர் என்றால் கேட்கவே வேண்டாம். அரசு உதவிகள் எதுவும் கிடைக்காமல் அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை செவ்வனே செய்து வருவார்கள். அவ்வாறு இருக்கையில் கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டின் உரிமையாளரும் மனது வைத்தால் ஒரு நாளில் தீர்ந்து விடக் கூடிய பிரச்னை இது. ஆனால் ஒரு திருமணத்தை பல லட்சம் செலவு செய்து வீணடிக்கும் சமூகம், ஒரு சுன்னத்(முன் தோல் அகற்றுதல்) தனது பையனுக்கு செய்வதற்காக ஊரை கூட்டி விருந்து வைத்து வீண் பகட்டு காட்டும் சமூகம், தனது மகள் பூப்பெய்வதை பத்திரிக்கை அடித்து அதையும் விருந்தாக்கி மகிழும் சமூகம், இறந்த தாயோ தகப்பனோ வீட்டில் கிடக்க மார்க்கம் தடுத்த விருந்தை ஆக்கி அனைவரையும் அழைக்கும் சமூகம் தனது கிராமத்தின் சுகாதாரப் பிரச்னைக்கு அரசை கைகாட்டி விட்டு ஒதுங்கிக் கொள்வதை நினைத்தால் வேதனைப்படாமல் இருக்க முடியுமா?



எங்கள் ஊரிலும் இது போன்ற பிரச்னை அவ்வப்போது வருவதுண்டு. குடமுருட்டி ஆறு, அரசலாறு போன்ற ஆறுகள் எங்கள் ஊரை சுற்றி ஓடுவதால் அதன் கரைகளில் பள்ளம் தோண்டி குப்பைகளை துப்புறவு தொழிலாளர்கள் கொட்டுவார்கள். அது சில நாட்களில் மக்கி விடும். அதுவரை வேறு கரையோரத்தை நாடுவார்கள். ஆனால் இதைவிட கீழக்கரையில் ஆரம்பிக்க இருக்கும் பிளாஸ்டிக் கழிவு தொழிற்சாலைகள் போன்று எங்கள் ஊரிலும் ஆரம்பிப்பது நிரந்தர தீர்வாக அமையும். இதை ஒவ்வொரு கிராமத்திலும் அமுல்படுத்த வேண்டும். சில இடங்களில் குப்பைகளைக் கொண்டு மின்சாரமே தயாரிக்கிறார்களாம்.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நாளில் ஒரு நடுத்தர பிளாஸ்டிக் வாளி அளவு குப்பைகள சேரும். இதனை எங்கள் ஊரில் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு திண்ணையில் வைத்து விடுவர்.காலையில் வரும் குப்பை வண்டியில் வரும் துப்புறவு தொழிலாளர்கள் ஒரு வாளி விடாமல் குப்பைகளை அள்ளிக் கொண்டு வாளியை வைத்து விட்டு சென்று விடுவர்.

மேலும் எங்கள் கிராமத்தில் அதிகமான வீடுகளில் வீட்டின் பரப்பளவை ஒத்த கொல்லையும் இருக்கும். கொல்லையின் கடைசி பகுதியில் எரு குண்டு என்ற ஒன்று இருக்கும். எங்கள் வீட்டில் பிளாஸ்டிக் கழிவுகளையும் மக்கிப் போகக் கூடிய கழிவுகளையும் எப்போதும் பிரித்தே சேர்ப்போம். இதனால் பிளாஸ்டிக் கழிவுகள் திண்ணைக்கு சென்று விடும். அதனை கார்பரேஷன் வண்டி வந்து எடுத்து சென்று விடும். மக்கிப் போகக் கூடிய கழிவுகளை கொல்லையில் உள்ள எரு குண்டில் போட்டு விடுவோம். ஆறு மாதத்துக்கு பிறகு அது நிரம்பியவுடன் அதனை மூடி விட்டு அதற்கு அருகிலேயே ஆட்களை வைத்து வேறொரு எரு குழி தோண்டச் செய்வோம். இதனால் போடப்பட்ட மீன், கோழி, ஆடு போன்றவற்றின் கழிவுகள் மற்ற வகையான குப்பைகள் மக்கிப் போய் சிறந்த உரமாகி விடுகிறது. நமது மண்ணுக்கு பிளாஸ்டிக்கைத் தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் சுலபத்தில் மக்கச் செய்து விடும் தன்மை உள்ளது.. சில வீடுகளில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் உடைந்த பிளாஸ்டிக் சாமான்கள் அனைத்தையும் சுத்தப்படுத்தி பழைய விலைக்கு விற்பவர்களும் உள்ளனர். இதனால் இந்த பிளாஸ்டிக்குகள் இடத்தை அடைக்காமல் மறு சுழற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. இதற்காக ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில் அரை மணி நேரம் இது போன்ற சுகாதாரத்துக்கு செலவு செய்தால் வீடும் நன்றாக இருக்கும் நாடும் நன்றாக இருக்கும்.


சில கிராம பஞ்சாயத்துகளில் அந்த நிர்வாகமே பழைய பிளாஸ்டிக்குகளை விலைக்கு எடுத்துக் கொள்வதாக பத்திரிக்கைகளில் படித்தேன். இதுவும் ஒரு சிறந்த வழி. பிளாஸ்டிக் அதிகம் சேகரித்து தரும் வீட்டுக்கு சில பரிசுகளை கூட கிராம நிர்வாகம் அறிவித்தால் பலன் இன்னும் அதிகரிக்கும். இதனால் பலர் மறைமுக வேலையும் பெறுவர். அல்லது பிளாஸ்டிக் பொருட்கள் பயன் படுத்துவதை அரசு தடை செய்ய வேண்டும்.

மற்றுமொரு சுகாதார பிரச்னை:

அதே போல் எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டு குடும்பம் சற்று வறியது. அவர்கள் வீட்டில் கழிவறை கட்டாமல் அவர்கள் கொல்லையில் தங்களது இயற்கை தேவைகளை நிறைவேற்றி வந்தனர். ஒரு முறை பக்கத்து வீட்டு நண்பரை(எனது வயதை ஒத்தவர்) அழைத்து 'ஒரு வீட்டுக்கு கழிவறை மிக அவசியம். உங்கள் வீட்டு பெண்கள் இவ்வாறு திறந்த வெளியில் செல்வது அசிங்கமா இல்லையா? சுகாதாரத்துக்கும் எவ்வளவு கேடு தெரியுமா?' என்று சொன்னேன். 'உண்மைதான். ஆனால் நாங்கள் மண்ணைப் போட்டு மூடி விடுவோம். இருந்தாலும் சரி செய்து விடுகிறேன்' என்று பதில் சொன்னவர் அதைப்பற்றி கண்டு கொள்ளவே இல்லை.

இரண்டு வாரம் பொறுத்த நான் பிறகு அவரை கூப்பிட்டு, 'நீங்கள் கட்டவில்லை என்றால் நான் எனது செலவில் கட்டி விடுகிறேன். இலவசமாக வைத்துக் கொண்டாலும் சரி. அல்லது கடனாக எடுத்துக் கொண்டாலும் சரி. இன்னும் இரண்டு நாளில் உங்கள் கொல்லையில் நான் வேலையை ஆரம்பிக்கப் போகிறேன்' என்று ஒரு போடு போட்டேன். இதனால் மிரண்டு போன அவர் எங்கெங்கேயோ பணத்தை தோது பண்ணி மறு நாளே கழிவறையை அவரது சொந்த செலவிலேயே கட்டிக் கொண்டார். அவருக்கு நன்றி சொல்லிக் கொண்டு 'நான் வேண்டு மென்றால் பணம் தரட்டுமா?' என்று கேட்டேன். 'நன்றி வேண்டாம். என் மனைவி தனது புறத்திலிருந்து பணம் கொண்டு வந்து வேலையை முடிக்க சொன்னார். "எவ்வளவோ வீண் செலவுகள் செய்கிறோம். தற்போது கழிவறையின் அவசியத்தை உணர்ந்து கொண்டேன்'(சுயமரியாதை தமிழன்!) என்றார் :-). அப்பாடி அண்டை வீட்டில் ஒரு சண்டை இல்லாமல் பிரச்னை சுமூகமாக முடிந்தது.

மற்றொரு சோகமான செய்தி. எங்கள் ஊரின் முடிவில் ரயிலடி சமீபமாக அரிஜனங்களின் காலனி உள்ளது. இங்கு அரசாங்கம் தனது செலவில் பொது கழிப்பறை கட்டிக் கொடுத்துள்ளது. ஆனால் இந்த மக்கள் தங்கள் தெருக்களிலும் ரெயில்வே தண்டவாள ஓரங்களிலும் தங்கள் இயற்கை தேவைகளை தீர்த்துக் கொள்கின்றனர். அரிஜனத் தெருவை கடந்து சென்றால் மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும். எங்கள் வீடுகளில் பெண்கள் சிறுவர்களை ஏதாவது வேலை சொல்லும் போது 'ரயிலடி வழியாக போகாதே! அசிங்கமாக இருக்கும். தூரமாக இருந்தாலும் சந்திக்கட்டை(சந்தை) சுற்றிக் கொண்டு போ' என்று கட்டளை இடுவதை சர்வசாதாரணமாக பார்க்கலாம். தற்போது படித்த மக்கள் நிறைய அரிஜன தெருவில் உருவானாலும் நிலைமை இன்றும் அப்படியேத்தான் உள்ளது. இந்த மக்கள் பக்கத்தில் இருக்கும் எங்கள் கிராமத்தை பார்த்தும் ஏன் திருந்த மாட்டேன் என்கிறார்களோ தெரியவில்லை. இவ்வளவுக்கும் எங்கள் கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் வீட்டு வேலை செய்பவர்கள் இந்த அரிசன மக்களே. தினமும் எங்களின் வாழ்வை பார்த்தும் அந்த பக்கம் சென்றவுடன் பழைய நிலைக்கு மாறி விடும் விநோதத்தை என்னவென்பது?
________________________________________________________

சுற்றுச் சூழல் பொறியாளர் ரமேஷ் கூறுவதை கேட்போம்:

புதுச்சேரி : பிளாஸ்டிக் குப்பைகள் இவ்வுலகில் மட்கி மறைய குறைந்தபட்சம் 200 ஆண்டுகள் பிடிக்கிறது என சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் பேசினார். தட்டாஞ்சாவடி வேளாண் கருத்தரங்கக் கூடத்தில் வேளாண்துறை மாநில நில நீர் பிரிவு சார்பில் நுண்ணாய்வு நீர் உபயோகம், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமை வேளாண் இயக்குனர் சத்தியசீலன் துவக்கி வைத்தார். என்.சி.சி., அதிகாரி ஆனந்த், நீர் சேமிப்பு குறித்து பேசினார். விழாவில் சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் பேசியதாவது:

உயிரினங்கள் இவ்வுலகில் வாழ தண்ணீர் தான் உயிர்நாடி. அவற்றை அதிக அளவில் பயன்படுத்தினால், நிலத்தடி நீர் மட்டம் படுபாதாளத்திற்கு சென்றுவிடும். ஆகவே தண்ணீரை முறையாக திட்டுமிட்டு பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண் டும். நிலத்தடி நீரை அள வுக்கு அதிகமாக எடுப்பதால், கடல் உட்புகுந்து விடும். குப்பை கூளங்கள், டெங்கு, மலேரியா என 10க்கும் மேற்பட்ட நோய்களுக்கு பிறப்பிடமாக இருக்கின்றன. பிளாஸ்டிக் குப்பைகளை குறைந்த வெப்பநிலையில் எரிக்கும் போது அதிலிருந்து டையாக்சின் நச்சு வாயு வெளிவருகிறது. இது தான் உலகிலேயே உயிரை பறிக்கும் மிகக்கொடிய நச்சு வாயுவாகும்.ஒருநாளைக்கு 33 ஆயிரம் லிட்டர் மாசுபட்ட காற்றை சுவாசிக்கிறோம். சாக்கடைகளில் போடப்படும் பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுநீரை வழிந்தோடாமல் செய்கின்றன. இதனால் கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. பிளாஸ்டிக் குப்பைகள் இம்மண்ணில் மட்கி மறைந்து போக, குறைந்தபட்சம் 200 ஆண்டுகள் பிடிக்கிறது. 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துகிறோம். இதற்கு பதிலாக, துணிப்பைகளை பயன்படுத்த பொதுமக்கள் பழகிக்கொள்ள வேண்டும். பூமியின் உயிர் துடிப்பை இறுக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என ஒவ்வொருவரும் சபதம் ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். வேளாண் பொறியியல் துணை இயக்குனர் வெங்கட்ராமன் நன்றி கூறினார்.

--------------------------------------------------------

ஒரு மனிதன் திட்டமிட்டு செயலாற்றினால் எதிலும் வெற்றி பெற முடியும் என்பதற்கு ரஃபீக் சொல்லும் சில வழிமுறைகளை கடைபிடிப்போம்.








22 comments:

எனது கவிதைகள்... said...

பயனுள்ள தகவல்கள். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

உண்மைவிரும்பி.
மும்பை.

ஸாதிகா said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ சுவனப்பிரியன்.//கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டின் உரிமையாளரும் மனது வைத்தால் ஒரு நாளில் தீர்ந்து விடக் கூடிய பிரச்னை இது.//இது எழுதுவதற்கும் சொல்வதற்கும் வேண்டுமானால் சுலபமாக இருக்கும் ஆனால் சாத்தியபடுவது மிகக்கடினம் சகோ.

http://keelakaraitimes.blogspot.in/2012/04/blog-post_22.html இந்த சுட்டியைப்பாருங்கள்.இது ஒரு சிறு உதாரணம்.

கீழை நகரின் சுகாதரக்கேட்டுக்கு அரசாங்கம்,அரசாங்க ஊழியர்கள், பொதுமக்கள் அனைவருமே காரணம் என்பதுதான் உண்மை.நோய்கள் பரப்பும் வியாதிகள் உயிரிழப்பு எதனையும் கவனத்தில் கொள்ளாமல் உள்ள அரசாங்கத்தின் மெத்தனப்போக்கு,கல்லா கட்ட நினைக்கும் அரசு ஊழியர்கள்,தங்கள் சுற்றுப்புறத்தை தாங்கள்தான் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்ற அக்கரை இல்லாத சில பல ஜனங்கள்..இத்யாதி இத்யாதி..இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

மக்கும் குப்பைகளையும் மக்காத குப்பைகளையும் தனித்தனி கூடைகளில் போட்டு வைத்தாலும் மக்காத குப்பை நிறைந்த அந்தக்கூடைகளை எடுத்து செல்லாத நகராட்சி ஊழியர்கள்.கேட்டால் எங்களுக்கு இது எடுக்க உத்தரவு இல்லை என்று கூறும் அலட்சியமனோ பாவம்..இன்னொரு கொடுமை என்றால் நகராட்சி ஊழியர்கள் குப்பையை எடுக்க வந்த நிமிடத்தில் தெருவைப்பார்த்தால் ரத்தம் கொதித்துப்போகும்..மக்காத குப்பைகளை தெருவிலேயே விசிறி அடித்து துவம்சம் செய்து விட்டு போய் இருப்பார்கள்.குப்பை வண்டி வந்து சென்ற பிறகு தெருவைக்காண சகிக்காது.

//ஒரு திருமணத்தை பல லட்சம் செலவு செய்து வீணடிக்கும் சமூகம், ஒரு சுன்னத்(முன் தோல் அகற்றுதல்) தனது பையனுக்கு செய்வதற்காக ஊரை கூட்டி விருந்து வைத்து வீண் பகட்டு காட்டும் சமூகம், தனது மகள் பூப்பெய்வதை பத்திரிக்கை அடித்து அதையும் விருந்தாக்கி மகிழும் சமூகம், இறந்த தாயோ தகப்பனோ வீட்டில் கிடக்க மார்க்கம் தடுத்த விருந்தை ஆக்கி அனைவரையும் அழைக்கும் சமூகம்//இதெல்லாம் இப்பொழுது அருகி வருவது உண்மை சகோ.

ஆடம்பரத்திருமணங்கள் அவ்வப்பொழுது நடந்து வந்தாலும் கூடவே அதே திருமண மேடையில் ஏழை குமர்களுக்கும் அவர்கள் செலவில் திருமணம் முடித்து வைக்கும் நல்ல காரியங்களையும் இவ்வூர் மக்கள் செய்யத்தவறுவதில்லை என்ற உண்மையை இங்கு நான் சொல்லிக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

//கிராமத்தின் சுகாதாரப் பிரச்னைக்கு அரசை கைகாட்டி விட்டு ஒதுங்கிக் கொள்வதை நினைத்தால் வேதனைப்படாமல் இருக்க முடியுமா?//இந்நிலை உண்மை அல்ல சகோ.கீழக்கரை வெல்பேர் அஸோசியேசன் என்ற ஒரு சேவைத்தொண்டு நிறுவனத்தை நிறுவி பல வகையில் பணியாற்றி வருகின்றனர்.வீட்டுக்கு வீடு தரமான குப்பை வாளிகளும் கூடவே குப்பை வாளிகளுக்கு மாட்டுவதற்கு பிளாஸ்டிக் கவர்களும் விநியோகித்தனர்.குப்பை வாளிகளை வேறெதற்கும் உபயோகப்படுத்திவிடகூடாது என்ற எண்ணத்தில் அடியில் துவாரங்கள்போட்டு புத்திசாலித்தனமாக இலவசமாக விநியோகித்தனர்.ஆனால் சில மக்கள் பிளாஸ்டிக் ஒட்டுபவரிடம் கொடுத்து அடியில் உள்ள துவாரத்தை அடைத்து அரிசி நீர் சேமித்து வைக்க உபயோகித்து ஒத்துழைக்காமல் இருக்கும் பொழுது என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்?

//எங்கள் கிராமத்தில் அதிகமான வீடுகளில் வீட்டின் பரப்பளவை ஒத்த கொல்லையும் இருக்கும். // இதற்கு சான்சே இல்லை சகோ.ஒரு கோல் என்று அளவிடப்படும் 70 சதுர அடி நிலத்தின் மதிப்பு ஊருக்குள் 3,3.5 லட்சம் வரை விற்பனை ஆகும் பொழுது கொல்லை புரத்தை நினைத்துக்கூட பார்க்க இயலாது.:)

தங்கள் பார்வைக்காக

1.http://keelakaraitimes.blogspot.in/2012/07/blog-post_7607.html

2.http://keelakaraitimes.blogspot.in/2012/05/blog-post_04.html

3.http://keelakaraitimes.blogspot.in/2012/04/blog-post_30.html

4.http://keelakaraitimes.blogspot.in/2012/02/blog-post_03.html

5.http://keelakaraitimes.blogspot.in/2012/01/blog-post_1947.html





கோவி.கண்ணன் said...

//மற்றொரு சோகமான செய்தி. எங்கள் ஊரின் முடிவில் ரயிலடி சமீபமாக அரிஜனங்களின் காலனி உள்ளது. இங்கு அரசாங்கம் தனது செலவில் பொது கழிப்பறை கட்டிக் கொடுத்துள்ளது. //

கழிவறை கட்டிவிட்டால் மட்டும் போதுமா ? தண்ணீர் வசதி ? சொம்பு எடுத்துக் கொண்டு போக முடியுமா ? கழிவறையில் தண்ணீர் இருப்பதை உறுதிபடுத்திவிட்டு தான் எழுதுகிறீர்களா ?

பேருந்து நிலையங்களில் கூட பொதுக்கழிவறைகளில் தண்ணீருக்கு அல்லாடும் பொழுது, கிராமத்தில் கழிவறைக்கு தண்ணீர் வசதிகள் எங்கிருந்து கிடைக்கும் ? அதை பராமரிக்க ஆட்களை ஏற்பாடு செய்திருக்கிறதா அரசு ? முழு விவரம் எழுதிவிட்டு பிறகு அவர்கள் ஏன் கழிவறையைப் பயன்படுத்துவதில்லை என்று எழுதலாமே.

//அரிஜனத் தெருவை கடந்து சென்றால் மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும். //

மூக்குபிடிப்பு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி, எங்க ஊரில் இஸ்லாமியத் தெருவிற்குள் நுழைந்தால் பிரியாணி முதல் மீன் வரை கலந்து ஒருமாதிரி நெடி அடிக்கும், இஸ்லாமியர்களின் வீட்டுக்குள் சென்றாலும் அதே வாடை தான் அடிக்கும்.

//இந்த மக்கள் பக்கத்தில் இருக்கும் எங்கள் கிராமத்தை பார்த்தும் ஏன் திருந்த மாட்டேன் என்கிறார்களோ தெரியவில்லை. இவ்வளவுக்கும் எங்கள் கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் வீட்டு வேலை //

நாகூர் ரயில்வே ஸ்டேசனில் இருந்து நாகை நோக்கி நடந்து சென்றால் சாதிமத வேறுபாடு இன்றி தண்டவாளப்பாதைகள் கழிவறையானதைப் பார்க்க முடியும். ஒருமக்கள் கழிவறையைப் பயன்படுத்துகிறார்களா ? இல்லையா என்பதெல்லாம் அவர்களுக்கு கிடைக்கும் வசதிச் சூழலைப் பொறுத்தது. சும்மா ஒருசாரரைப் பார்த்துவிட்டு உங்களைப் பார்த்துவிட்டு உதாரணம் எழுதக் கூடாது.

suvanappiriyan said...

கோவிக் கண்ணன்!

//கழிவறை கட்டிவிட்டால் மட்டும் போதுமா ? தண்ணீர் வசதி ? சொம்பு எடுத்துக் கொண்டு போக முடியுமா ? கழிவறையில் தண்ணீர் இருப்பதை உறுதிபடுத்திவிட்டு தான் எழுதுகிறீர்களா ?//

கை பம்பிலிருந்தே தண்ணீர் எந்த சிரமும் இன்றி கிடைக்கக் கூடிய கிரமமாக்கும் எங்கள் கிராமம். அரசு செலவில் டேங்க் கட்டி தண்ணீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள மக்கள் தினமும் 450 லிருந்து 500, 600 என்று தினக் கூலி பெற்று ஓரளவு வசதியாகவே உள்ளனர். என்ன...பாதிப் பணம் டாஸ்மார்க் கடைக்கு கொடுத்து விட்டு அவர்கள் கிராமத்தில் மாலை நேரங்களில் தரையிலும் தெருவிலும் உருண்டு கொண்டு கிடப்பதை பார்க்கலாம்.

//மூக்குபிடிப்பு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி, எங்க ஊரில் இஸ்லாமியத் தெருவிற்குள் நுழைந்தால் பிரியாணி முதல் மீன் வரை கலந்து ஒருமாதிரி நெடி அடிக்கும், இஸ்லாமியர்களின் வீட்டுக்குள் சென்றாலும் அதே வாடை தான் அடிக்கும்.//

பிரியாணி வாடையும் மனித கழிவுகளின் வாடையும் உங்களுக்கு ஒன்றாகத் தெரிகிறதா?

//நாகூர் ரயில்வே ஸ்டேசனில் இருந்து நாகை நோக்கி நடந்து சென்றால் சாதிமத வேறுபாடு இன்றி தண்டவாளப்பாதைகள் கழிவறையானதைப் பார்க்க முடியும். ஒருமக்கள் கழிவறையைப் பயன்படுத்துகிறார்களா ? இல்லையா என்பதெல்லாம் அவர்களுக்கு கிடைக்கும் வசதிச் சூழலைப் பொறுத்தது. சும்மா ஒருசாரரைப் பார்த்துவிட்டு உங்களைப் பார்த்துவிட்டு உதாரணம் எழுதக் கூடாது.//

சிலருக்கு வசதிகள் இருந்தும் கழிவறை கட்டமாட்டேன். திறந்த வெளியில்தான் செல்வேன் என்பது சுற்றுச் சூழலுக்கு எவ்வளவு கேடு என்பதை விளக்குவதே எனது நோக்கம். இந்த தவறை யார் செய்தாலும் குற்றமே!



suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஸாதிகா!

//கீழை நகரின் சுகாதரக்கேட்டுக்கு அரசாங்கம்,அரசாங்க ஊழியர்கள், பொதுமக்கள் அனைவருமே காரணம் என்பதுதான் உண்மை.நோய்கள் பரப்பும் வியாதிகள் உயிரிழப்பு எதனையும் கவனத்தில் கொள்ளாமல் உள்ள அரசாங்கத்தின் மெத்தனப்போக்கு,கல்லா கட்ட நினைக்கும் அரசு ஊழியர்கள்,தங்கள் சுற்றுப்புறத்தை தாங்கள்தான் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்ற அக்கரை இல்லாத சில பல ஜனங்கள்..இத்யாதி இத்யாதி..இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.//

நான் அரசையும் பொது மக்களையும் சேர்த்தே இந்த விவகாரத்தில் குறை காண்கிறேன். முதலில் நமக்கு தேவை சுகாதாரம். அதை அரசு நிறைவேற்றும் வரை காத்திருக்காமல் நம்மால் முடிந்த உதவிகளையும் இந்த விஷயத்தில் செய்வதற்கு முயற்ச்சிக்க வேண்டும். சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால் நோய் பரவ நாமே வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறோம் இல்லையா?

//மக்கும் குப்பைகளையும் மக்காத குப்பைகளையும் தனித்தனி கூடைகளில் போட்டு வைத்தாலும் மக்காத குப்பை நிறைந்த அந்தக்கூடைகளை எடுத்து செல்லாத நகராட்சி ஊழியர்கள்.கேட்டால் எங்களுக்கு இது எடுக்க உத்தரவு இல்லை என்று கூறும் அலட்சியமனோ பாவம்..இன்னொரு கொடுமை என்றால் நகராட்சி ஊழியர்கள் குப்பையை எடுக்க வந்த நிமிடத்தில் தெருவைப்பார்த்தால் ரத்தம் கொதித்துப்போகும்..மக்காத குப்பைகளை தெருவிலேயே விசிறி அடித்து துவம்சம் செய்து விட்டு போய் இருப்பார்கள்.குப்பை வண்டி வந்து சென்ற பிறகு தெருவைக்காண சகிக்காது.//

இந்த வகையில் எங்கள் ஊர் துப்புறவு தொழிலாளர்களை பாராட்டவே வேண்டும். இவ்வளவு மோசமாக நடந்து கொள்வதில்லை. இதற்கு கிராம பஞ்சாயத்து தலைவர்களின் மெத்தன போக்கே காரணம். அவரும் உங்கள் ஊர்க் காரராகத்தானே இருப்பார்.

//ஆனால் சில மக்கள் பிளாஸ்டிக் ஒட்டுபவரிடம் கொடுத்து அடியில் உள்ள துவாரத்தை அடைத்து அரிசி நீர் சேமித்து வைக்க உபயோகித்து ஒத்துழைக்காமல் இருக்கும் பொழுது என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்?//

இந்த போக்குதான் மாற வேண்டும் என்கிறேன். சுகாதாரத்துக்கு இஸ்லாம் எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை அறியாதவர்கள் அல்ல நாம்? ஐந்து வேளை தொழுவது மட்டும் கடமை அல்ல. சுற்றுச் சூழலை சுகாதாரமாக வைத்துக் கொள்வதும் நமது கடமை என்ற உணர்வு மக்களிடம் வர வேண்டும். 'சுத்தம் இறை நம்பிக்கையில் பாதி' என்று அழகிய வழி முறையை இஸ்லாம் கற்றுத் தர அதற்குரிய முக்கியத்துவத்தை நாம் அதிகம் பேர் தருவதில்லை என்பது வேதனை கலந்த உண்மை. இதற்காக கமிட்டிகளை நிறுவி வீடு வீடாக சென்று பிரசாரம் பண்ண வேண்டும்.

//இதற்கு சான்சே இல்லை சகோ.ஒரு கோல் என்று அளவிடப்படும் 70 சதுர அடி நிலத்தின் மதிப்பு ஊருக்குள் 3,3.5 லட்சம் வரை விற்பனை ஆகும் பொழுது கொல்லை புரத்தை நினைத்துக்கூட பார்க்க இயலாது.:)//

உண்மைதான். தற்போது எங்கள் ஊரில் புதிதாக கட்டப்படும் பல வீடுகளுக்கு கொல்லை என்பதே கிடையாது. அதையும் மனை போட்டு விற்று விடுகிறார்கள். :-)

கீழக்கரை வெளியில் வந்திருக்கிறது. வெளியில் வராத பல கிராமங்கள் தமிழகம் தோறும் உள்ளன. ஒட்டு மொத்த மக்களின் ஈடுபாடு இங்கு வரவேண்டும் என்பதே என் அவா...

suvanappiriyan said...

திரு எனது கவிதைகள்!

//பயனுள்ள தகவல்கள். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

உண்மைவிரும்பி.
மும்பை.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

1983 -இல் காசி விசுவநாதர் கோயில் திருட்டுப்பற்றி பிரபலமாகப் பேசப்பட்டது.

காசி விஸ்வநாதர் கோவிலில் திருட்டு, சிவலிங்கம் பதிக்கப்பட்ட அடித்தளத்தில் உள்ள 2 கிலோ தங்கம் சுரண்டி எடுக்கப்பட்டுவிட்டது. திருடர்கள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு பிடிபட்டார்கள். மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டனர். டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீஸ் பல்பீங்சிங்பேடி கோவிலின் உள்ளே இருப்பவர்கள் உதவி இல்லாமல் வெளியிலிருந்து வந்து திருட முடியாது என்று கூறுகிறார்.

திவாரி என்ற பார்ப்பனர் கோவிலில் ஒரு மகன்ட். மகன்ட் என்றால் தர்மகர்த்தா. இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் வெளிவந்தவர். கோவிலின் கர்ப்பக்கிரக கதவின் பூட்டு உடைக்கப்படாமலே திறக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னால் இரண்டு மிகப்பெரிய இரும்பு கதவுகள் உள்ளன. அவைகள் திறந்தே வைக்கப்பட்டிருக்கிறது. இரவு முழுவதும் காவல் காக்க வேண்டிய பார்ப்பன இரண்டு அர்ச்சகர்கள் இரவு தூங்கிவிட்டதாக கூறுகிறார்கள். எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?

-http://viduthalaidaily.blogspot.com/2012/08/blog-post_8355.html

வவ்வால் said...

திரு.சுபி.சுவாமிகள்,

தாங்கள் படிப்படியாக வருணாசிரமப்பாதைக்கு சென்று கொண்டிருப்பதாகவே படுகிறது.

அரிஜனத்தெருக்களின் அவலம் என்கிறீர்கள், உங்கள் கிராமம் என்கிறீர்கள்,அப்போது ஏன் அவர்கள் தனியாக இருக்கிறார்கள், எல்லாம் ஒன்றாக இருக்க உங்கள் வேதம் தடை சொல்கிறதா?

மேலும் ஒரு நாளுக்கு 500-600 ரூ சம்பளம் கொடுத்து வேலைக்கு வைப்பதாகவும் சொல்கிறீர்கள் , அப்படியானால் உங்கள் மக்கள்(அதாவது மக்கள்) வீட்டு வேலை செய்ய ஒரு நாளைக்கு 500-600 கொடுக்கிறார்களா? அப்போ எல்லாம் கீழக்கரையில் பெரும்பணக்காரர்கள் தான் ;-))

கீழக்கரை போன்ற ஒரு ஊரில் தினக்கூலி வேலை செய்தால் 200 ரூக்கு மேல் ஈட்ட முடியுமா? முடியுமெனில் கீழக்கரை தான் இந்தியாவின் பொருளாதார தலைநகரம் எனப்பெருமையாக நானும் மகிழ்வேன் :-))


அப்புறம் எப்போ இருந்து கழிவறை எல்லாம் இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கு, கழிந்து விட்டு மண்ணால் மூடிவிடவும், நீர் இல்லை எனில் கல்லைக்கொண்டு துடைத்துக்கொள்ளவும் சொல்லி இருப்பதாக நீங்களே சொன்னதாக நினைவு :-))

அரேபிய நிலம்,நீரியல் வளத்தின் படி மக்கள் தினமும் குளிக்க மாட்டார்கள் என்பதால் தான் தொழுகைக்கு முன்னர் கை,கால் ,முகம் என முழங்கை வரை அலம்பிக்கொண்டு,தலையை தண்ணீரால் லேசாக தொடைத்துக்கொள்ளும் செல்லும் ஏற்பாடே உருவானது.

இந்துத்வாக்கள் கூட குளிக்க முடியாத போது தலையில் மூன்று முறை தண்ணீர் தெளித்துக்கொண்டால் குளித்தது போல என சப்பைக்கட்டு கட்டுவார்கள் :-))


நீங்கள் சொல்லும் பொது சுகாதாரம் அனைவருக்கும் தேவை என்பதை நானும் ஆதரிக்கிறேன், ஆனால் உங்கள் கட்டுரையில் ஒளிந்திருக்கும் இன்னொரு கூறினை வெளிப்படுத்தவே இதெல்லாம் சொன்னேன்.

அக்கூறு மதவெறி என்னும் நிலைத்தாண்டி ஜாதி வெறி என்ற நிலைக்கு உங்களைக்கொண்டு போயிருக்கிறது, ஏன் கீழக்கரையில் இஸ்லாமியர் மற்றும் அரிஜனங்கள் தவிர்த்து யாரும் இல்லையா? அவர்கள் நிலை என்ன?

இதெல்லாம் சொன்னால் என்னைக்கெட்டவன் என சொல்வீர்கள், அதற்கு எல்லாம் வருத்தப்படும் நிலையில் நான் இல்லை, இன்னும் சொல்லப்போனால் சொர்கம் செல்ல உங்களுக்கும் எனக்கும் போட்டி வருமானால் எனக்கே முதலில் கதவு திறக்கும், ஆனால் அவ்வாசல் எனக்கு வேண்டாம் நீங்களே சென்று அனுபவியுங்கள் :-))

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//அரிஜனத்தெருக்களின் அவலம் என்கிறீர்கள், உங்கள் கிராமம் என்கிறீர்கள்,அப்போது ஏன் அவர்கள் தனியாக இருக்கிறார்கள், எல்லாம் ஒன்றாக இருக்க உங்கள் வேதம் தடை சொல்கிறதா?//

வேதம் எல்லாம் தடை சொல்லவில்லை. 'பக்கத்து வீட்டு யூதருக்கு சாப்பாடு கொடுத்து விட்டாயா?' என்று தனது மனைவியிடம் ஒரு நபித்தோழர் கேட்டதை வரலாறுகளில் பார்க்கிறோம். பொதுவாகவே தங்கள் மதத்தவர்கள் வாழும் இடங்களில் வீடு கட்டிக் கொள்ளவே அனைவரும் விரும்புவோம். அதன்படியே ஒரே கிராமத்தில் இரு பிரிவாக பிரிந்து வாழ்கின்றனர்.

//மேலும் ஒரு நாளுக்கு 500-600 ரூ சம்பளம் கொடுத்து வேலைக்கு வைப்பதாகவும் சொல்கிறீர்கள் , அப்படியானால் உங்கள் மக்கள்(அதாவது மக்கள்) வீட்டு வேலை செய்ய ஒரு நாளைக்கு 500-600 கொடுக்கிறார்களா? அப்போ எல்லாம் கீழக்கரையில் பெரும்பணக்காரர்கள் தான் ;-))

கீழக்கரை போன்ற ஒரு ஊரில் தினக்கூலி வேலை செய்தால் 200 ரூக்கு மேல் ஈட்ட முடியுமா? முடியுமெனில் கீழக்கரை தான் இந்தியாவின் பொருளாதார தலைநகரம் எனப்பெருமையாக நானும் மகிழ்வேன் :-))//

நான் சொன்னது கொத்தனார், ஆசாரி, பிளம்பர், இரும்பு கதவுகள் செய்பவர் போன்றவர்களை சொல்கிறேன். அரிஜனத் தெருவிலிருந்து தற்போது ஓரிருவர் இந்த வேலைகளையும் செய்கின்றனர். கூலி ஆள் 250 லிருந்து 300 வரை சம்பாதிக்கிறார். வெளியூர்களிலிருந்து வேலை செய்து விட்டு மாலை நேரத்தில் பஸ் அல்லது ரயில் ஏறும் பல தொழிலாளர்களைப் பார்க்கலாம். அடுத்து கீழக்கரை எனது ஊர் அல்ல.

//அப்புறம் எப்போ இருந்து கழிவறை எல்லாம் இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கு, கழிந்து விட்டு மண்ணால் மூடிவிடவும், நீர் இல்லை எனில் கல்லைக்கொண்டு துடைத்துக்கொள்ளவும் சொல்லி இருப்பதாக நீங்களே சொன்னதாக நினைவு :-))//

நான் சொன்னது தண்ணீர் கிடைக்காத போது. தற்போது தண்ணீர் அந்த அளவு தட்டுப்பாடு ஒன்றும் இல்லையே!

//அரேபிய நிலம்,நீரியல் வளத்தின் படி மக்கள் தினமும் குளிக்க மாட்டார்கள் என்பதால் தான் தொழுகைக்கு முன்னர் கை,கால் ,முகம் என முழங்கை வரை அலம்பிக்கொண்டு,தலையை தண்ணீரால் லேசாக தொடைத்துக்கொள்ளும் செல்லும் ஏற்பாடே உருவானது.//

தொழுகைக்கு பள்ளிக்கு வரும்போது அருகில் நிற்பவர் முகம் சுழிக்காமல் இருக்க சுத்தமாக வரச் சொல்கிறது இஸ்லாம். இதன் மூலம் தினமும் குளித்தாலும் உடலிலிருந்து வியர்வை நாற்றம், மற்றும் வாய் நாற்றம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து தினமும் குளிக்கச் சொல்லி ஏன் சொல்லவில்லை என்ற கேள்வி வரும். இந்த இஸ்லாமானது உலக மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டி வந்தது. ஆர்டிக் பிரதேசத்திலும் அண்டார்டிக் பிரதேசத்திலும் மற்றும் குளிர் பிரதேசங்களில் வாழ்பவர் தினமும் குளிக்க வேண்டும் என்ற சட்டம் போட்டால் குளிரில் விறைத்து இறந்தே போய் விடுவார். எனவே தான் உடலிலிருந்து வியர்வை வய் நாற்றம் நாற்றம் வராமல் பார்த்துக் கொள்ள இஸ்லாம் சொல்கிறது.

//அக்கூறு மதவெறி என்னும் நிலைத்தாண்டி ஜாதி வெறி என்ற நிலைக்கு உங்களைக்கொண்டு போயிருக்கிறது, ஏன் கீழக்கரையில் இஸ்லாமியர் மற்றும் அரிஜனங்கள் தவிர்த்து யாரும் இல்லையா? அவர்கள் நிலை என்ன? //

எங்கள் ஊரில் செட்டியார்களும், ஞாயக்கர்களும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழ்கின்றனர். பெரும்பான்மை மக்கள் செய்யும் தவறுகள் தான் வெளியில் தெரிகிறது என்பதாலேயே இரண்டு சமூகத்தையும் சுட்டிக் காட்டினேன்.


suvanappiriyan said...

கீழக்கரை சாலை தெரு பகுதியில் சுமார்200 மீட்டர் அளவிலான சாலையை கீழக்கரையில் முதல்முறையாக "இன்டர்லாக் பிளாக்ஸ்' கற்கள் பதித்து சாலை அமைக்க நகராட்சியுடன் இணைந்து செயல்பட ரோட்டரி சங்கம் முன் வந்துள்ளது.இதுகுறித்து நடைபெற்ற ஆலோசனையில் நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா,ரோட்டரி சங்க தலைவர் ஆசார்,கவுன்சிலர் சித்தீக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இதில் 200 மீட்டருக்கு இண்டர்லாக் பிளாக்ஸ் சாலைக்கான செலவில் 60 சதவீத தொகையை நகராட்சியும் மீதி40 சதவீத செலவை ரோட்டரி சங்கம் சார்பில் அதன் ஆசாத் ஏற்று கொள்வாதாக முடிவெடுக்கப்பட்டது விரைவில் இதற்கான திட்ட மதிப்பீடு உள்ளிட்ட பணிகளிகள் நிறைவு செய்யப்பட்டு முறைபடியான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா தெரிவித்தார்.

இது குறித்து ரோட்டரி சங்க தலைவர் ஆசாத் கூறியதாவது,


கீழக்கரையில் மேடு, பள்ளம் ,மணல் நிறைந்த சாலையில், மழைநீர், கழிவுநீர் தேங்கி, தார் சாலை விரைவில் சேதமடைகிறது. புதிதாக போடப்படும் சாலையின் ஆயுட் காலம் சட்டப்படி ஐந்து ஆண்டுகள் என்ற நிலையில்,நகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் போடப்படும் தார் சாலைகள். ஓரிரு ஆண்டுகளில் சேதமடைந்து விடுகின்றன. சம்மந்தப்பட்ட துறைகளின் சார்பில் மீண்டும் பல லட்சம் ரூபாய் சாலை பணிக்கு ஒதுக்கப்படுகிறது. எனவே அரசின் கணிசமான தொகை வீணாகிறது.

எனவே இதை தவிர்ப்பதற்கு கீழக்கரையில் முதல் முயற்சியாக "இன்டர்லாக் பிளாக்ஸ்' கற்கள் பதித்து சாலையை பணியை தொடங்கலாம் என முயற்சியில் இறங்கியுள்ளோம். "இன்டர்லாக் பிளாக்ஸ்' கற்களின் ஆயுட்காலம் குறைந்தது 10 ஆண்டுகள்; மழைநீர் கற்களின் மீது பட்டாலும் சாலை சேதமடையாது.இந்த சாலை அமைப்பதற்கான செலவில் 40 சதவீத தொகையை ரோட்டரி சங்கம் சார்பில் நாங்கள் ஏற்றுகொள்ள இருக்கிறோம் என்றார்.

-http://keelakaraitimes.blogspot.in/2012/08/blog-post_16.html

ஸாதிகா said...

சுத்தம் இறை நம்பிக்கையில் பாதி' என்று அழகிய வழி முறையை இஸ்லாம் கற்றுத் தர அதற்குரிய முக்கியத்துவத்தை நாம் அதிகம் பேர் தருவதில்லை என்பது வேதனை கலந்த உண்மை. இதற்காக கமிட்டிகளை நிறுவி வீடு வீடாக சென்று பிரசாரம் பண்ண வேண்டும்.////
இதனையும் சுட்டிப்பாருங்கள் .

suvanappiriyan said...

//இதனையும் சுட்டிப்பாருங்கள் .//

பார்த்தேன். மிகச் சிறந்த முயற்சி. நான் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் கீழக்கரைக்கு மட்டும் அல்ல. மற்ற முஸ்லிம் கிராமங்களும் ஏன் ஒட்டு மொத்த தமிழக கிராமங்களும் சுகாதாரத்தைப் பேணுவதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. எனவே இந்த பதிவானது ஒட்டு மொத்த தமிழகத்துக்குமானது சகோதரி. வருகைக்கும் சிறந்த சுட்டிகளை தந்தமைக்கும் நன்றி.

வவ்வால் said...

திரு.சுபி,

கீழக்கரை உங்கள் கிராமம் இல்லை எனில் ஏன் இந்தப்பதிவு.இப்பதிவு முழுக்க அவ்வூரில் வசிப்பவரின் கருத்தினைப்போல ஏன் சொல்ல வேண்டும் , நீங்கள் கீழக்கரை குப்பை பிரச்சினையை சொல்ல வருகிறீர்களா, இல்லை உங்கள் ஊரில் அரிஜனங்களின் சுகாதாரமின்மையை சொல்ல வருகிறீர்களா?

கீழக்கரையில் குப்பையை கொட்டுபவர்கள் யார்? முசல்மான்கள் தானே ?

நீங்கள் பதிவிற்கு வைத்திருக்கும் தலைப்பிற்கே உங்களை கைது செய்ய இந்திய சட்டத்தில் இடமுண்டு அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

இரண்டாவது நான் சம்பளத்தினை குறிப்பிட்டு சொன்னதும் ,பதிவில் திருத்திவிட்டீர்கள்.

//இவ்வளவுக்கும் எங்கள் கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் வீட்டு வேலை செய்பவர்கள் இந்த அரிசன மக்களே. தினமும் எங்களின் வாழ்வை பார்த்தும் அந்த பக்கம் சென்றவுடன் பழைய நிலைக்கு மாறி விடும் விநோதத்தை என்னவென்பது?//

உங்கள் வாழ்வைப்பார்த்து என்ன திருந்த வேண்டும், அவர்கள் வாழ்வைப்பார்த்து ஒரு ஆண் ஒரு பெண்ணை மட்டும் கட்டிக்கொள்ள கற்றுக்கொள்ளுங்களேன்!

வாயால் தலாக் சொல்லாமல் கோர்ட்டில் முறையிட்டு விவாகரத்து பெற்றுக்கொள்ளுங்களேன் ,

மேலும் விவசாயம் செய்ய கற்றுக்கொள்ளுங்களேன்,

இதெல்லாம் சொன்னால் செய்வீர்களா?

உங்களின்ப்பதிவுகள் இந்துத்வாக்களின் பதிவு போல ஆகிக்கொண்டிருக்கிறது , நாளைக்கே நீங்கள் தான் மதுரை "இளைய ஆதீனம்" அல்லது அடுத்த சங்கராச்சாரியார் எனப்பதிவு போட்டாலும் போடுவீர்கள் :-)

suvanappiriyan said...


//நீங்கள் கீழக்கரை குப்பை பிரச்சினையை சொல்ல வருகிறீர்களா, இல்லை உங்கள் ஊரில் அரிஜனங்களின் சுகாதாரமின்மையை சொல்ல வருகிறீர்களா?//

இரண்டையுமே சொல்ல வருகிறேன்.

//கீழக்கரையில் குப்பையை கொட்டுபவர்கள் யார்? முசல்மான்கள் தானே ?

நீங்கள் பதிவிற்கு வைத்திருக்கும் தலைப்பிற்கே உங்களை கைது செய்ய இந்திய சட்டத்தில் இடமுண்டு அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.//

ஹா...ஹா..இந்திய சட்டத்தினை காட்டி என்னை பயமுறுத்தும் அளவுக்கு என் பதிவில் அப்படி என்ன இருக்கிறது. அப்படி கைது செய்வதாக இருந்தால் நமது தேசப்பிதா காந்தியைத்தான் முதலில் கைது செய்ய வேண்டி வரும். இந்த பெயரை வைத்தது அவர்தான். நிறைய ஹாஸ்யமாக பின்னுட்டமிடுகிறீர்கள் வவ்வால். அதெப்படி :-)

//உங்கள் வாழ்வைப்பார்த்து என்ன திருந்த வேண்டும், அவர்கள் வாழ்வைப்பார்த்து ஒரு ஆண் ஒரு பெண்ணை மட்டும் கட்டிக்கொள்ள கற்றுக்கொள்ளுங்களேன்!

வாயால் தலாக் சொல்லாமல் கோர்ட்டில் முறையிட்டு விவாகரத்து பெற்றுக்கொள்ளுங்களேன் ,

மேலும் விவசாயம் செய்ய கற்றுக்கொள்ளுங்களேன்,//

மசூதியில் ஆண்டானும் அடிமையும் தோளோடு தோள் உரசி நிற்கிறார்களே! குறைந்தபட்டசம் இதையாவது நீங்கள் நடைமுறைபடுத்திப் பார்க்கக் கூடாதா? ம்ஊஹூம்......அது மட்டும் என்னால் முடியாது என்கிறீர்களா? :-(

மறற சமூகங்களை விட முஸ்லிம்களிடம் விவாகரத்து குறைவாகவே உள்ளது. உங்கள் சமூகத்தில் விவாகரத்தை மட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

அடுத்து எங்கள் வீட்டு கொல்லையில் அனைத்து வேலைகளையும் செய்வது நான்தான். உடலுக்கும் மனதுக்கும் பணத்துக்கும் ஆரோக்கியம் அல்லவா? வயல் வேலை செய்தால் அவனை தீண்டதகாதவன் என்று ஒதுக்கும் பழக்கம் இஸ்லாத்தில் இல்லை. உங்கள் சமூகத்தில் இந்த இழி நிலையை மாற்ற முயற்சி செய்யுங்கள்.

//உங்களின்ப்பதிவுகள் இந்துத்வாக்களின் பதிவு போல ஆகிக்கொண்டிருக்கிறது , நாளைக்கே நீங்கள் தான் மதுரை "இளைய ஆதீனம்" அல்லது அடுத்த சங்கராச்சாரியார் எனப்பதிவு போட்டாலும் போடுவீர்கள் :-)//

நித்தியையே நீங்கள் எல்லாம் தேர்வு செய்திருக்கும் போது நான் ஆதினமாக மாறக் கூடாதா? நான் அவ்வாறு வந்தால் அனைத்து மூடப்பழக்கங்களையும் ஒழிக்க பாடுபடுவேன். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற ரீதியில் சட்டங்களை மாற்றி அமைப்பேன். ஒரு கடவுள் கொள்கைக்கு வந்ததால் சாதிகளை இதன் மூலம் ஒழிக்க முயற்சிப்பேன். என்னை ரெகமண்ட் செய்து பதவியில் அமர்த்தினால் உங்களுக்கு ஆதினத்துக்கு அடுத்த பொறுப்பை தருவேன். இதற்கெல்லாம் சம்மதமா? :-)

ஆஷா பர்வீன் said...

அருமையான பதிவு சகோ...வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்
.நான் கீழக்கரைக்கு செல்லும் போதெல்லாம் என் நட்பு வட்டாரங்களிடம் வருத்தப்பட்டு விட்டு தான் வருவேன்....
தன் கையே தனக்கு உதவி என்று அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் என்ன என்று......
பூனைக்கு மணி கட்டுவது யார்? என பொறுத்திருந்து பார்ப்போம்.....

suvanappiriyan said...

சகோ ஆஷா ஃபர்வீன்!

//அருமையான பதிவு சகோ...வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்
.நான் கீழக்கரைக்கு செல்லும் போதெல்லாம் என் நட்பு வட்டாரங்களிடம் வருத்தப்பட்டு விட்டு தான் வருவேன்....
தன் கையே தனக்கு உதவி என்று அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் என்ன என்று......
பூனைக்கு மணி கட்டுவது யார்? என பொறுத்திருந்து பார்ப்போம்..... //

தற்போது துப்புரவு பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதாக நினைக்கிறேன். இது தொடர்ந்து சுகாதாரம் நம் கிராமங்களை அடைய முயற்சிப்போம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Barari said...

விழிப்புணர்வு மிக்க சிறந்த பதிவு வாழ்த்துக்கள்.உங்கள் பதிவை படித்துவிட்டு பின்னூட்டங்களை பார்வையிடுவதற்கு முன் என் மனதில் தோன்றியது இந்த பதிவின் நோக்கத்தை திசை திருப்ப ஒருவர் நிச்சயம் வருவார் என்று தோன்றியது என்ன ஆச்சரியம் வந்தே விட்டார் அவருடன் ஒரு சட்ட மேதையும் சேர்ந்து வந்து விட்டார்.வன்கொடுமை சட்டத்தை பிரயோகிக்க மேலவலவுக்கும் .தின்னியத்திர்க்கும் செல்லுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்

கோவி.கண்ணன் said...

//மசூதியில் ஆண்டானும் அடிமையும் தோளோடு தோள் உரசி நிற்கிறார்களே! //

:)

இடப்பற்றாக் குறையா ? தலையில் இருக்கும் கர்சிப் கூட சிறு சத்தம் வந்தாலும் போது மூக்கைப் பிடித்துக் கொள்ளத் தானே.

நல்லா உரசினார்கள் போங்க, உங்க குழுதானே கைக் கொடுத்தால் கூட எய்ட்ஸ் பரவும் என்று கிளப்பிவிடுவது, தோளோடு தோள் சேர்ந்தால் வியாதி கியாதி ஒட்டிக் கொள்ளாதா ?

suvanappiriyan said...

//இடப்பற்றாக் குறையா ? தலையில் இருக்கும் கர்சிப் கூட சிறு சத்தம் வந்தாலும் போது மூக்கைப் பிடித்துக் கொள்ளத் தானே.//

இடப்பற்றாக்குறை அல்ல. மனிதர்கள் மனதில் மனப் பற்றாக்குறை வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த நெருக்கம். என்னதான் பூசி மெழுகினாலும் இஸ்லாமியர்களிடத்தில் உள்ள சகோதர பாசம் மற்ற மதங்களில் காணக் கிடைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணமே இந்த தொழுகை முறைதான். பல கோடிகளுக்கு அதிபதியான சவுதிகள் பலர் ஒதுங்கி செல்லும் பங்காளிகளை(யூனிஃபார்மில் இருக்கும் துப்புறவு தொழிலாளிகள்) தன் பக்கத்தில் இழுத்து வைத்துக் கொள்வார்கள். தொழுகையில் இருவருக்கு இடையில் இடைவெளி விட்டால் அவர்களின் தொழுகை முழுமை பெறாது. எனவே தனக்கு விருப்பமில்லா விட்டாலும் பல சவுதிகள் தொழுகை முழுமை பெற வேண்டி தோளோடு தோள் ஒட்டி நிற்பர். சில நாட்களுக்குப பிறகு இது சாதாரண நிகழ்வாக மாறி விடும்.

//நல்லா உரசினார்கள் போங்க, உங்க குழுதானே கைக் கொடுத்தால் கூட எய்ட்ஸ் பரவும் என்று கிளப்பிவிடுவது, தோளோடு தோள் சேர்ந்தால் வியாதி கியாதி ஒட்டிக் கொள்ளாதா ?//

ஹா..ஹா....யாருங்க சொன்னது. கொஞ்சம் ஆதாரம் இருந்தால் கொடுங்களேன்.

மடத்துக்குளம் கொடத்துக்கள்ளு said...

//பல கோடிகளுக்கு அதிபதியான சவுதிகள் பலர் ஒதுங்கி செல்லும் பங்காளிகளை(யூனிஃபார்மில் இருக்கும் துப்புறவு தொழிலாளிகள்) தன் பக்கத்தில் இழுத்து வைத்துக் கொள்வார்கள். //

தொழுகை முடிந்த பின்னர் பணக்கார சவூதி துப்புறவு தொழிலாளிய தன்னோட காரில் வீட்டுக்கு அழைத்துச் சென்று தன் சொத்தைப் பகிர்ந்து கொடுப்பாரா?

ஙங்கையன் said...

//தொழுகைக்கு பள்ளிக்கு வரும்போது அருகில் நிற்பவர் முகம் சுழிக்காமல் இருக்க சுத்தமாக வரச் சொல்கிறது இஸ்லாம். இதன் மூலம் தினமும் குளித்தாலும் உடலிலிருந்து வியர்வை நாற்றம், மற்றும் வாய் நாற்றம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். //

உளு மேட்டர்ல அக்குள் வியர்வை நாற்றம் பற்றி ஏதுமில்லையே?

அப்புறம் உளு ஆனதுக்கப்பறம் காத்து பிரியாம தடுப்பது எப்படி?

ஷர்புதீன் said...

இது குறித்து சாதிகா அவர்களிடம் பேசி கொண்டிருந்தேன் பதிவர் சந்திப்ப்பில், அவரால் உங்களது இந்த இடுகையை படிக்க சொன்னார்கள்

கயல்பட்டினத்து சுகாதாரத்தை பெருமையாக் எழுதலாம் என்பது சதவீதம் சுத்தம்., மனது வைத்தால் சிங்கப்பூராகலாம்