Followers

Saturday, August 04, 2012

ரமலானில் முதன்முறையாக எனது உம்ரா பயணம்!

முன்பு ஹஜ், உம்ரா செய்திருந்தாலும் ரமலானில் உம்ரா செய்வது இதுவே முதல் முறை. சவுதி அழைப்பு வழிகாட்டல் மையம் சார்பாக 10 பஸ்களில் கிட்டத்தட்ட 550 பேர் மெக்கா நோக்கி பயணப்பட்டோம். தமிழ், உருது, தகாலோ(பிலிப்பைன்), அரபி, போன்ற மொழியினர் அதிகம் இருந்தனர். தமிழர்களுக்காக இரண்டு பஸ்கள் ஏற்பாடு பண்ணப்பட்டிருந்தது. ஸ்ரீலங்கா மவ்லவி ரிஷ்மி தலைமையில் எங்களின் பயணம் மதியம் 4 மணிக்கு மாலை நேர தொழுகை முடிந்த கையோடு புறப்பட ஏற்பாடாகி இருந்தது. அதன்படி 25-07-2012 புதன் கிழமை அன்று குறிப்பிட்ட நேரத்தில் அனைவரும் கிளம்பினோம்.


அனைவரும் நோன்பு ஆகையால் நோன்பு திறக்க அனைத்து பொருட்களையும் பேரூந்தில் ஏற்றிக் கொண்டு கிளம்பினோம். பேரூந்திலேயே நோன்பு திறந்து கொண்டோம். அரை மணி நேரம் சென்றதற்கு பின்னால் ஒரு மசூதிக்கு பக்கத்தில் பேரூந்தை நிறுத்தி விட்டு மாலை நேர தொழுகையையும், இரவு நேர தொழுகையையும் ஒன்றாக சுருக்கி தொழுது விட்டு எங்களின் பயணத்தை தொடர்ந்தோம்.

அதிகாலை 4 மணிக்கு மெக்கா சென்றடைந்தோம். வழியிலேயே இஹ்ராம் உடை (தூய வெள்ளை உடை) யை அதன் எல்லையில் அனைவரும் அணிந்து கொண்டோம். ஹோட்டலில் ஒவ்வொருவருக்குமான அறைகள் ஒதுக்கப்பட்டது. அங்கு அவரவரின் பொருட்களை வைத்து விட்டு பஜர் தொழுகையை ஹோட்டலுக்கு எதிரே அமைந்திருந்த பின் பாஸ் மசூதியில் நிறைவேற்றி விட்டு அங்கிருந்து கஃபாவை நோக்கி செல்ல ஆரம்பித்தோம். அதிகாலை நேரத்திலேயே கட்டுக்கடங்காத கூட்டம். அதையும் சமாளித்து சிறிது சிரமத்தோடு உம்ராவை முடித்தோம். உம்ராவை முடித்த கையோடு ஹோட்டலுக்கு வந்து குளித்து விட்டு அருமையான ஒரு தூக்கத்தை போட்டோம். நோன்பு வைத்துக் கொண்டு உம்ரா செய்வது சற்று சிரமமாக இருந்தாலும் இதில் கிடைக்கும் நன்மைகளை கருத்தில் கொண்டு சிரமத்தை எவரும் ஒரு பொருட்டாக எடுப்பதில்லை.

தூங்கி முழித்து மதிய நேர தொழுகையையும் மாலை நேர தொழுகையையும் ஒரே நேரத்தில் சுருக்கி தொழுது விட்டு பிறகு கஃபா வில் நோன்பு திறக்க அனைவரும் ஆயத்தமானோம். 5:30 மணிக்கு நாங்கள் சென்றடைந்து தொழுது விட்டு ஒரு இடத்தை பிடித்து உட்கார்ந்தோம். எனக்கு எதிரில் மொராக்கோ, சிரியா, துருக்கி, பாகிஸ்தான் போன்ற நாட்டவர் அமர்ந்திருந்தனர். அவர்கள் கொண்டு வந்திருந்த சில பொருட்களை எங்களுக்கு கொடுத்தனர். நாங்கள் வாங்கி சென்றிருந்த சில பொருட்களை அவர்களுக்கு கொடுத்தோம். பரஸ்பரம் எந்த நாடு? எந்த ஊர்? என்ற கேள்விகள் கேட்டுக் கொண்டு இருந்தோம். முடிவில் ஒரு வயதானவர் எந்த நாடாக இருந்தாலும் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று மொராக்கோ நாட்டுக்காரர் சொன்னது நெகிழ்ச்சியாக இருந்தது. இத்தகைய சகோதரத்துவத்தை நாம் எங்காவது காண முடியுமா?



நம் நாட்டு சுப்பனையும் குப்பனையும் சாமி கும்பிட விடுவதில்லை. தேர் இழுக்க விடுவதில்லை. தீண்டாமை சுவரை கட்டிக் கொள்கிறோம். சத்துணவு சாப்பிடும் இடத்திலும் தலித்துகளுக்கு தனி இடத்தை ஒதுக்கி வைக்கிறோம். சில இடங்களில் தலித்துகளுக்கு தனி சீருடையையே பள்ளியில் வழங்கி 'சாதிகள் இருக்குதடி பாப்பா' என்று புது பாட்டு புனைகிறோம்.

ஆனால் எந்த ஆடம்பரமும் விளம்பரங்களும் கூட இல்லாமல் லட்சக்கணக்கான பல தேசத்து மக்கள் ஒரு இடத்தில் நோன்பு திறக்க ஏற்பாடு செய்வதென்பது அவ்வளவு இலேசான காரியம் அல்ல. இன, மொழி, வெள்ளையன், கறுப்பன், பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் ஒரே மாதிரியான விரிப்பு: எல்லோருக்கும் ஒரே மாதிரியான உணவை அளித்து சேவை செய்து வரும் அரசை உண்மையில் பாராட்டவே வேண்டும். அதுவும் லட்சக்கணக்கான மக்கள்! உணவு பாக்கெட்டுகளையும், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றை வழங்குவதில் சவுதி சிறுவர்களும் மேலும் அரபு ஆப்கான் பாகிஸ்தான் நாட்டு இளைஞர்கள் தன்னலம் கருதாது சேவையில் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறு சேவையில் உள்ளவர்களை அடையாளம் கண்டு கொள்ள தனி சீருடை கொடுக்கப்பட்டிருந்தது. சிலர் சம்பளத்துக்கும் பலர் இதில் கிடைக்கும் நன்மையை கருதி இலவசமாகவும் சேவையில் ஈடுபடுகின்றனர். சில சவுதிகள் குடும்பத்தோடு நோன்பு திறக்க கஃபாவுக்கு வந்தனர். அவர்கள் தங்கள் வீடுகளில் செய்து கொண்டு வந்திருந்த நோன்பு கஞ்சி, சமூசா, காஃபி போன்றவற்றை எங்களுக்கும் தந்தனர். நோன்பு திறக்க அதான் கூறப்பட்டது. நோன்பு திறந்த 10 வது நிமிடத்தில் அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளையும் உடனுக்குடன் அங்கிருந்தவர்கள் அப்புறப்படுத்தி தொழுகைக்கு அந்த இடத்தை தயாராக்கினர். ஐந்து நிமிடத்தில் இடம் தொழுகைக்கு தயார். நோன்பு திறந்த கையோடு இயந்திரங்களின் துணை கொண்டு தண்ணீர் விட்டு தொழும் இடங்களை கழுவி மிகவும் தூய்மையாக்கி விட்டனர். இவ்வளவு சீக்கிரம் இவ்வாறு வேலை நடப்பது இங்கு தான் பார்க்க முடியும்.

கஃபா எவ்வாறு சுத்தம் பண்ணப் படுகிறது என்பதை எனது முதல் பதிவில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

http://suvanappiriyan.blogspot.com/2012/01/blog-post.html

இலட்சக்கணக்கான பல தேசத்து மக்கள் எந்த அரவமுமின்றி அமைதியான முறையில் நோன்பு திறந்து தொழுகைக்கும் தயாராகினர். தொழுகையும் முடிந்தது. நாங்கள் அனைவரும் சிறிது காலார கடைத்தெருவக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு பிறகு இரவு தொழுகைக்காக 8:30 மணிக்கெல்லாம் திரும்பவும் கஃபாவை வந்தடைந்தோம். இடைப்பட்ட நேரத்தில் முகமது நபிக்கு முதன் முதலில் குர்ஆன் இறங்கியவுடன் பயந்து போய் தனது மனைவியிடம் 'என்னை போர்த்துவீராக...என்னை போர்த்தவீராக...' என்று சொன்ன அன்னை ஹத்தீஜா அவர்களின் வீட்டையும் அந்த இடததையும் பார்வையிட்டோம்.



இரவு தொழுகை முடிந்து விடுதிக்கு திரும்பினோம். இரவு நன்றாக உறங்கி விட்டு காலைத் தொழுகையை முடிதது விட்டு திரும்பவும் தூக்கம். வெள்ளிக் கிழமை ஜீம்ஆ தொழுகையை முடித்து விட்டு திரும்ப ரியாத் வர ஆயத்தமானோம். பேரூந்தின் வழி நெடுக தங்களின் உணர்வுகளை புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர்கள் எங்களோடு பகிர்ந்து கொண்டனர். கஃபா வை பார்த்தது எனது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி என்று ஒரு அன்பர் சந்தோஷப்பட்டார். இரவு ஒரு மணிக்கு நல்லமுறையில் வீடு வந்து சேர்ந்தோம்.

-----------------------------------------------------------------------


மதினா பள்ளியில் கடந்த 20 வருடமாக நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தனது உடல் உழைப்பை அயராது ஆற்றி வருகிறார் உம் பிலால் என்ற சவுதி பெண்மணி. தனது தகப்பனார் காலத்திலிருந்து இந்த பணியை செய்து வரும் இவர் தனது இறப்புக்கு பிறகு தனது குழந்தைகள் இந்த பணியை தொடர வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார். பெண்கள் பகுதியில் 40 மீட்டரில் ஒரு இடத்திலும் 20 மீட்டரில் மற்றொரு இடத்திலும் உணவு வகைகள் நோன்பு திறப்பிற்காக இவரது தலைமையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. தனது ஏழு வயதிலிருந்து இந்த பணியை இறைவனுக்காக செய்து வருவதாக அரப் நியூஸ் செய்தியாளரிடம் தெரிவித்தார் உம் பிலால்.

-------------------------------------------------------------------------




(சவுதி அரேபியாவின் ஹஜ் உம்ரா சம்பந்தப்பட்ட துறைகளுக்கான அமைச்சர் பந்தர் ஹஜர் புனித பயணிகளுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிடுகிறார்.)

உலகம் முழுவதிலும் இருந்து 6 மில்லியன் மக்கள் இந்த வருடம் உம்ரா பயணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர். இது வரை 4.8 மில்லியன் மக்கள் உம்ராவை முடித்துள்ளனர். இந்த தகவலை ஹஜ் உம்ரா சம்பந்தப்பட்ட துறைக்கான அமைச்சர் பந்தர் ஹஜர் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார். '2573627 மக்கள் பல்வேறு நாட்டிலிருந்தும் இந்த வருடம் ஜெத்தா அப்துல் அஜீஸ் விமான நிலையத்துக்கு வந்துள்ளனர். சென்ற திங்கட்கிழமை மட்டும் 22059 புனித பயணிகள் 125 விமானங்களில் ஜெத்தா வந்து சேர்ந்தனர். அதே நாள் 16276 புனித பயணிகள் சவுதியை விட்டு தங்கள் நாட்டுக்கு சென்றுள்ளனர். இத்தனை பயணிகளுக்குமான அனைத்து வசதிகளையும் எமது அரசு சிறப்பாக செய்துள்ளது.' என்று அமைச்சர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

“ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரீ (1782) முஸ்லிம் (2408)

இன்னொரு அறிவிப்பில் 'என்னோடு உம்ரா செய்த பாக்கியத்தை பெறுவார்' என்று நபிகள் நாயகம் அறிவித்ததாகவும் வந்துள்ளது.

_____________________________________________________________

மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு - 14



------------------------------------------

மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு - 16

19 comments:

சிராஜ் said...

சலாம் அண்ணன்....

அருமையான் அனுபவ பகிர்வு.. காபாவில் ஹஜ் அல்லது உம்ரா சென்ற அனுபவத்தை எத்தனை முறை கேட்டாலும், ஒவ்வொரு முறையும் கண் கலங்குகிறது.

இறைவா... உலக முஸ்லிம்கல், உலக மக்கள் அனைவருக்கும் ஹஜ் செய்யும் பாக்கியத்தை தந்தருள்வாயாக....

சிராஜ் said...

சவுதி அரேபியா அல்லது வளைகுடாவில் வேலை செய்பவர்களுக்கு குடும்பத்தை பிரிந்து இருப்பது, வேறு நாட்டுச் சூழல் போன்ற எத்தனையோ பின்னடைவுகள் இருந்தாலும்...

இது போன்று ஹஜ் மற்றும் உம்ரா செய்யும் வாய்ப்பு விஷயத்தில் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்....

Nizam said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரே. உங்கள் உம்ரா பயணம் அனுபவம் அருமை. அல்லாஹ் உங்களுக்கு அருள் புறிவனாக.

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//சவுதி அரேபியா அல்லது வளைகுடாவில் வேலை செய்பவர்களுக்கு குடும்பத்தை பிரிந்து இருப்பது, வேறு நாட்டுச் சூழல் போன்ற எத்தனையோ பின்னடைவுகள் இருந்தாலும்...

இது போன்று ஹஜ் மற்றும் உம்ரா செய்யும் வாய்ப்பு விஷயத்தில் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்...//

குடும்பத்தோடு தங்குவதற்கு அனைவரும் முயற்ச்சிக்க வேண்டும்.

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி

suvanappiriyan said...

சலாம் சகோ நிஜாம்!

//உங்கள் உம்ரா பயணம் அனுபவம் அருமை. அல்லாஹ் உங்களுக்கு அருள் புறிவனாக.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

Kavya says:
August 3, 2012 at 4:08 pm

தேவர்களும் பிள்ளைகளும் தலித்துக்களைத்த்டுக்கிறார்கள். நீங்களும் தடுத்தீர்கள். தலித்துகளின் ஆலயப்பிரவேசம் நடந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவில்லை. ஒரு சில பத்தாண்டுகளே ஆகியிருக்கின்றன. ஒரு பெரிய போராட்டம் பண்ணித்தான் உங்களை அடக்கமுடிந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீங்கள் மதுரை மீனாட்சி கோயிலுள் வரக்கூடாது அவர்கள் என்று தடுத்தீர்கள். உங்கள் காலடிபட்டால் மீனாட்சி கோயிலில் புனிதம் கெட்டுவிடும் என்றும் சுத்திபரிகாரம் பண்ணவேண்டுமென்றும் சொன்னீர்கள். ஆனால் நீங்களாகவே திருந்தினீர்களா? இல்லை. சட்டம்போட்டு உங்களை மிரட்ட வேண்டியதாயிற்று. சரி இப்போதாவது திருந்தினீர்களா? இல்லை. ஆகம விதிகளைக்காட்டி எங்கள் ஜாதிமட்டுமே புனிதம் என்கிறீர்கள். இதற்கு மேல் என்ன சொன்ன? பெரியார், வீரமணி, கருநாநிதி என்றெழுதிவிட்டால், எல்லாவற்றையும் மூடிவிடலாம் என்று கற்பனை பண்ணுகிறிர்கள். இங்கு படிப்பவர்கள் குழந்தைகளல்ல.

தேவர்கள், பிள்ளைகள் ‘கடவுள் சொன்னார்;ஆகம விதிகள் தடுக்கின்றன’ என்று தலித்துகளைப்ப்யமுறுத்தவில்லை. உம்மை விட பலமிக்கவர்கள் நாங்கள் எங்களுக்கு ஈடாக நீங்கள் இருக்க முயலக்கூடாதென்றுதான் தடுக்கிறார்கள். அதை உங்களால் சொல்லமுடியாது. அருவாளைத்தூக்க மாட்டீர்கள் இல்லையா? ஆனால் கடவுள் சொன்னர் என்கிறீர்க்ள்.

இந்த வேறுபாட்டைச்சுட்டிக்காட்ட நீங்கள் பார்க்க மறுக்கிறீர்களே ஏன்?

அடுத்து வருமானம் வரும் தொழிலா இல்லையா? என்பதன்று கேள்வி. ஏன் ஒரு ஜாதிக்கு மட்டும் என்பதுதான் கேள்வி.

மற்றவர்கள் வாழ்வது ஆகஸ்டு 2012. நீங்கள் வாழ்வது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன். கற்பனையாக வாழ்கிறீர்கள்.

பெரியாழ்வார் ஒரு சிறிய கோயில் குருக்கள். அக்கோயில் அருகில் நந்தவனம் வளர்த்து வடப்த்ர சாய் கோயிலுக்கு பூமாலைகள் சப்ளை பண்ணிவந்தார்.

ஆத்மா said...

அல்லாஹூத்தஆலா உங்கள் அனைவரின் உம்ராவையும் பொருந்திக் கொள்வானாக மேலும் உம்ரா செய்யக் கூடிய பாக்கியத்தை எனக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும் வழங்குவானாக....

சின்ன தொரு சந்தேகம் நோன்பு திறப்பது பாங்கு சொல்லப்பட்டவுடன் தானா...

நோன்பினை சீக்கிரமாக திறக்குமாறு சொல்லப்பட்டுள்ளேதே மக்காவில் பாங்கு சொன்னவுடன் தான் நோன்பு திறக்கிறார்களா ..? தெரியப்படுத்துங்கள் சகோ....

suvanappiriyan said...

சகோ சிட்டுக் குருவி!

//சின்ன தொரு சந்தேகம் நோன்பு திறப்பது பாங்கு சொல்லப்பட்டவுடன் தானா...

நோன்பினை சீக்கிரமாக திறக்குமாறு சொல்லப்பட்டுள்ளேதே மக்காவில் பாங்கு சொன்னவுடன் தான் நோன்பு திறக்கிறார்களா ..? தெரியப்படுத்துங்கள் சகோ...//.

”சூரியன் மறைந்து, இந்த(கிழக்கு) திசையிலிருந்து இரவு முன்னோக்கி வந்து, அந்த (மேற்கு) திசையிலிருந்து பகல் பின்னோக்கி(ப்போ)னால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்யவேண்டும்!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1954 உமர் (ரலி).

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், ‘(வாகனத்திலிருந்து) இறங்கி, (உண்பதற்கேற்ப) மாவை எனக்காகக் கரைப்பீராக!” என்று கூறினார்கள். அதற்கவர், ‘இறைத்தூதர் அவர்களே! (இன்னும் முழுமையாக மறையவில்லையே,) சூரியன்!” என்றார். மீண்டும் நபி (ஸல்) அவர்கள், ‘இறங்கி எனக்காக மாவைக் கரைப்பீராக!” என்றார்கள். அப்போதும் அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! (இன்னும் முழுமையாக மறையவில்லையே,) சூரியன்!” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘இறங்கி எனக்காக மாவைக் கரைப்பீராக!” என்று மீண்டும் கூறினார்கள். அவர் இறங்கி மாவைக் கரைத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் அருந்திவிட்டுத் தம் கையால் (கிழக்கே) சுட்டிக் காட்டினார்கள் பிறகு, ‘இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதை நீங்கள் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்யலாம்! என்றார்கள்.
புஹாரி : 1941 இப்னு அவ்ஃபா (ரலி).

இரண்டு நிமிடம் அல்லது மூன்று நிமிடம் வித்தியாசம் வரும். பல பேர் அமர்ந்திருக்கும் ஒரு சபையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அனைவரும் ஒன்றாக நோன்பு திறப்பது பரவலாக கடைபிடிக்கும் வழக்கம். தனியாக இருக்கும் போது சற்று முன்பே திறப்பதும் நபி வழியே! எனவே இதில் குழம்பிக் கொள்ளத் தேவையில்லை. சூரியன் மறைவதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

//அல்லாஹூத்தஆலா உங்கள் அனைவரின் உம்ராவையும் பொருந்திக் கொள்வானாக மேலும் உம்ரா செய்யக் கூடிய பாக்கியத்தை எனக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும் வழங்குவானாக....//

ஆமின்.

Jafarullah Ismail said...

மீண்டும் உம்ரா சென்று வந்தது போல் ஒரு திருப்தி. ஜஸாக்கல்லாஹ் கைர்.

Jafarullah Ismail said...

மீண்டும் உம்ரா சென்று வந்தது போல் ஒரு திருப்தி. ஜஸாக்கல்லாஹ் கைர்.

suvanappiriyan said...

சகோ மு. ஜபருல்லாஹ்!

//மீண்டும் உம்ரா சென்று வந்தது போல் ஒரு திருப்தி. ஜஸாக்கல்லாஹ் கைர்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

ஆசையாக ஓடிவந்தேன் அமெரிக்காவே - இப்போ
அத்தனையும் ஒடஞ்சிபோச்சே அமெரிக்காவே
பாசமான ஊரை விட்டேன் அமெரிக்காவே - இப்போ
படுறபாடு கொஞ்சமில்லே அமெரிக்காவே

காதலிச்சேன் வெள்ளைக்காரி அமெரிக்காவே - அவ
கழுத்தறுத்துப் போட்டுட்டாளே அமெரிக்காவே
வளைஞ்சி நெளிஞ்சி ஒருத்தன் வந்தான் அமெரிக்காவே - வந்து
கட்டிக்கலாம் வாரியான்னு கேட்டுட்டானே

வீடு வாங்கி செட்டில் ஆனேன் அமெரிக்காவே - அதை
வங்கிக்காரன் ஆட்டைபோட்டான் அமெரிக்காவே
காலமெல்லாம் உழைச்ச காசு அமெரிக்காவே - இப்போ
கடங்காரன் ஆயிப்புட்டேன் அமெரிக்காவே

காலையில வேலையில சேத்துக்கறான் - அந்த
ராத்திரிக்கே வேலைவிட்டு தூக்கிடறான்
வெள்ளக்காரன் மேனேஜரா இருந்துக்கரான் - நான்
மேல போனா காலவாரி விட்டுடுறான்

சேந்து படிச்ச பசங்க எல்லாம் அமெரிக்காவே - அங்க
ஜில்லா கலெக்டர் ஆயிட்டாங்க அமெரிக்காவே
சொந்த ஊரப் போல சொகம் ஏதும் இல்லே - இதை
சொல்லப் போனாக் கேட்க ஒரு நாதி இல்லே

-http://anbudanbuhari.blogspot.com/2012/08/blog-post.html

Seeni said...

mmmmm

Muruganandan M.K. said...

"நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்.." அந்த உணர்வுதான் முக்கியம்.
புனிதப் பயணம் சிறப்புடன் நடக்க வாழ்த்துகிறேன்.

suvanappiriyan said...

வாங்க டாக்டர்!

//"நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்.." அந்த உணர்வுதான் முக்கியம்.
புனிதப் பயணம் சிறப்புடன் நடக்க வாழ்த்துகிறேன்.//

பல அருமையான இடுகைகளை தமிழுலகுக்கு அளித்து வருகிறீர்கள். முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வவ்வால்!

//ஒரு அரபியை அப்படி குற்றம் கூட சாட்ட இயலாத "புனித" படுத்துதலை அந்நாட்டு சட்டம் கொடுப்பது எப்படி சரியாகும்.//

A Saudi philanthropist has donated SR 17 million to save a Saudi man from execution.

The unidentified donor contributed to a campaign to pay off the diya (blood money) to help save Sameh Al-Rowaily, who was sentenced to death for killing a Yemeni national.

A campaign to collect SR 22 million gained steam in the holy month and organizers are short of only SR 900,000.

His execution will take place unless the blood money is paid in full within a few days.
Ayed Al-Rowaily, father of Sameh, thanked all those who contributed to the campaign.

A campaign using social networking sites also contributed substantially in raising the amount, Al-Madinah Arabic daily reported.

Ayed urged philanthropists to raise the remaining SR 900,000 to facilitate his 19-year-old son’s release.

He hoped they would collect the full amount before the Aug. 16 deadline.
Relatives of the Yemeni victim earlier insisted on a diya value of SR 28 million. But after intense negotiations involving tribal chiefs in the region, they agreed to reduce the blood money to SR 22 million to be paid within nine months.

Ayed’s family could collect only SR 3 million through the sale of their family house.
The campaign to collect the blood money was launched following a passionate appeal made by Sameh’s mother through the newspaper.

Sameh has been in Sakaka prison for three years after killing the 25-year-old Yemeni national in a dispute. Sameh’s mother said in her appeal that her son had committed the murder in a fit of anger and that it was not a deliberate act.

In response to her fervent call, many people in Al-Jouf province came forward to donate money in the holy month.

In a related development, the mother of Khaled Al-Harbi, another Saudi young man on death row, expressed her deep gratitude to all those who donated generously to save him from beheading.

Members of her tribe and relatives were able to collect the SR 30 million to pay the blood money.

Khaled is her eldest son who became head of the family after her husband’s death. She specially thanked Salah Al-Harbi, a prominent figure in her tribe, for donating SR 5 million after SR 25 million was collected.
Arab News 05-08-2012

suvanappiriyan said...

sarvaghan!

//இர‌த்த‌ப் ப‌ண‌ம் கொடுக்கும் வ‌கையில் இய‌ன்ற‌வ‌ர்க‌ள் த‌ப்ப‌ இய‌லும் என்ப‌துதானே ந‌ம் குற்ற‌ச்சாட்டு.நிரூபணம் தருகிறிர்க‌ளே சகோ//

அநியாயமாக கொல்லப் பட்டவனுடைய வாரிசுகள் எங்களுக்கு பணம் வேண்டாம் அவன் கொன்றது போல் அவனையும் அரசு கொல்ல வேண்டும்' என்று சொல்லியிருந்தால் அந்த சவுதி சிறுவனின் தலையும் வெட்டப்பட்டிருக்கும்.

'தீமையின் கூலி அது போன்ற தீமையே. மன்னித்து சமாதானமாகச் செல்வோருக்கு அவரது கூலி இறைவனிடத்தில் உள்ளது. அவன் அநீதி இழைத்தோரை விரும்ப மாட்டான்..'
-குர்ஆன் 42;40

வாரிசுகள் சமாதானமாக செல்ல நினைத்தால் அதையும் மார்க்கம் அனுமதிக்கிறது. கண்ணுக்கு கண்: பல்லுக்கு பல் சட்டத்தின் மூலம் மனிதர்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்று குர்ஆன் கூறுகிறது.

இந்த சட்டத்தை சவுதி அரசு எடுத்து விட்டால் அதனால் பாதிப்பு அடைவது தொழில்களை நடத்தி வரும் வெளிநாட்டுக்காரர்தான். பிறகு அமெரிக்கா, ஆஸ்திரேலியாவைப் போல் மண்ணின் மைந்தர்கள் துப்பாக்கி சகிதம் வந்து கொன்று விட்டு பணத்தை கொள்ளையடித்து செல்வதுதான் நடக்கும். தவறான நடத்தை உடையவர்கள் எல்லா நாட்டிலுமே உள்ளார்கள். அவர்களை கட்டுப்படுத்துவது கடுமையான சட்டமே! மனித மனம் என்றுமே தவறையே அதிகம் நாடும்.

ராஜ நடராஜன் said...

இந்த பதிவுக்கு ரமலான் வாழ்த்துக்கள் சொல்வது சரியாக இருக்கும்.

மீண்டுமொரு முறை ரமலான் வாழ்த்துக்கள்.

suvanappiriyan said...

வாங்க ராஜ நடராஜன்!

//இந்த பதிவுக்கு ரமலான் வாழ்த்துக்கள் சொல்வது சரியாக இருக்கும்.

மீண்டுமொரு முறை ரமலான் வாழ்த்துக்கள். //

உங்களுக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.