Followers

Tuesday, August 07, 2012

சவுதி கௌரவ பிச்சை எடுத்து பார்த்திருக்கிறீர்களா?

சவுதி அரசானது சில மாதங்களுக்கு முன்பு வேலையில்லா இளைஞர்கள் அனைவரும் தங்களின் அடையாள அட்டையை காட்டி 1500 ரியால் உதவி தொகை பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை விடுத்தது. அவர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும் வரை இந்த உதவித் தொகை கிடைத்துக் கொண்டிருக்கும். இதனால் பல இளைஞர்கள் பயனடைந்தனர். சவுதி நாட்டவருக்கு அரசு தரப்பிலேயே நிறைய வேலைகள் காத்துக் கொண்டிருக்கிறது. என்னதான் வாய்ப்புகள் இருந்தாலும் சிலருக்கு உழைக்காமல் சாப்பிட வேண்டும் என்ற குறிக்கோளில் வாழ்பவர்களை நாம் ஒன்றும் செய்ய இயலாது. சில சவுதி இளைஞர்கள் மக்களின் ஈகை குணத்தை எவ்வாறு தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதை இந்த காணொளி நமக்கு விளக்குகிறது.

இந்த இளைஞர் முதலில் தனது உடையை அழுக்காக்கிக் கொள்கிறார். அதன் பிறகு தொழுகைக்கு பள்ளிக்குச் செல்கிறார். தொழுகை முடிந்தவுடன் எழுந்து 'அஸ்ஸலாமு அலைக்கும்! எனது தகப்பனார் கிட்னி பெயிலரில் மருத்துவ மனையில் கிடக்கிறார். என்னிடம் போதிய பணம் இல்லை. உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்' அல்லது 'எனக்கு இருதய நோய் உள்ளது. என்னால் வேலை செய்ய முடியாது. உங்களால் இயன்ற உதவிகளை செய்வீர்களாக' இப்படி இடத்துக்கு தக்கவாறு இவர் கோரிக்கை வைத்து பள்ளியின் வாசலில் அமர்ந்து கொணடால் சில நிமிடங்களிலேயே ஓரளவு பணம் சேர்த்து விடலாம். இவ்வாறு இநத சவுதிக்கு அரை மணி நேரத்தில் கிடைத்த தொகை 165 ரியால். இவ்வாறு இவர் ஐந்து நேரமும் ஒவ்வொரு பள்ளியாக ஏறி இறங்கினால் ஒரு மாதத்துக்கு 25000 ரியாலை எந்த சிரமமுமின்றி சம்பாதித்து விடலாம். தற்போது சில இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் கூட இவ்வாறு ஏதாவது காரணத்தை சொல்லி பள்ளிகளில் பிச்சை எடுப்பதை பார்க்கிறோம். இது அரசால் தடை செய்யப்பட்டது. பலரும் பரிதாபப் பட்டு அரசிடம் புகார் அளிப்பதில்லை.

இன்னும் ஒரு பிச்சை எடுக்கும் முறையானது சிக்னல்களில் ஆரம்பமாகிறது. ஒவ்வொரு சிக்னலிலும் நீங்கள் நின்று ஒரு ரியால் இரண்டு ரியாலாக சேமித்தால் ஒரு மணி நேரத்தில் 150 ரியாலை சம்பாதித்து விடலாம். இதையும் காணொளியில் பார்க்கலாம்.



மூன்றாவது முறையாக காட்டப்படுவது பெட்ரோல் நிரப்பும் இடங்களில். 'பெட்ரோல் தீர்ந்து விட்டது. பணம் எடுக்க மறந்து விட்டேன். உங்கள் செல் நம்பரை கொடுத்தால் பணத்தை அனுப்பி விடுகிறேன்.' என்று கௌரவமாக சொல்லி பணத்தை வாங்கும் முறையானது நூதனமாக தெரியும். இந்த முறையிலும் பிச்சை எடுப்பதை நாம் பரவலாக பார்க்கலாம். இவ்வாறு சிலர் பொய் சொல்லி பிச்சை எடுப்பதால் உண்மையிலேயே பாதிக்கப்படும் பலர் அல்லலுக்கு உள்ளாகின்றனர்.

இவ்வாறு சிறுக சிறுக பலருக்கும் நீங்கள் பிச்சை கொடுப்பதால் அவர்களை ஊக்ககுவிக்கிறீர்கள். எனவே அரசு சார்ந்த பல நிறுவனங்கள் முறையாக வசூலித்து பல வறிய நாடுகளுக்கும் உள் நாட்டிலேயே தேவையுடையவர்களுக்கும் அளிக்கிறது. அத்தகைய இடங்களை தேடிச் சென்று உங்களின் தர்மங்களை செலுத்துங்கள் என்று இந்த காணொளி சவுதி நாட்டவரை கேட்டுக் கொள்கிறது. இந்த காணொளி நம் நாட்டுக்கும் பொருந்தும்.

-------------------------------------------------------

பிச்சை எடுப்பதில்தான் எத்தனை ரகம். எத்தனை நடிப்பு. சிலர் பிச்சை எடுப்பதற்காக குழந்தைகளை ஊனமாகக் கூட ஆக்குகிறார்களாம். பாலா தனது 'நான் கடவுள்' படத்தில் மிக அழகாக இந்த காட்சிகளை தத்ரூபமாக எடுத்திருப்பார்.



-------------------------------------------------------

முந்தய அடிமைகள் இன்றும் பிச்சைத் தொழிலைத் தொடர்கிறார்களா?

முன்பு அடிமைகள் சவுதியில் கணக்கற்று இருந்தனர். இவர்களை சுதந்திரம் பெற்றவர்களாக மாற்றுவதற்கு இஸ்லாம் சொன்ன வழிமுறைகளைப் பார்ப்போம்.

• ஒருவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விட்டு அதை முறித்தாலோ அல்லது நோன்பை முறித்தாலோ இது போன்ற குற்றங்களுக்குப் பரிகாரமாக வசதியுள்ளவர்கள் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்று இஸ்லாம் ஆணையிட்டது.
(பார்க்க திருக்குர்ஆன் 2:177, 4:92, 5:89, 9:60, 58:3, 90:13)

• ஒப்பந்த அடிப்படையில் அடிமைகள் விடுதலை யாவதற்கும் இஸ்லாம் ஏற்பாடு செய்தது. உன்னை நான் விடுதலை செய்கிறேன். நீ உழைத்து சிறிது சிறிதாக எனது கடனை அடைக்க வேண்டும் என்று எஜமானர்கள் அடிமைகளிடம் உடன்படிக்கை செய்து விடுக்க ஆர்வமூட்டினார்கள்.
(பார்க்க திருக்குர்ஆன் 24:33)

• யாரேனும் அடிமையை விடுதலை செய்தால் அந்த அடிமை பிற்காலத்தில் சம்பாதிப்பவைகளுக்கு அவனது எஜமான் வாரிசாவார் என்று சட்டம் கொண்டு வந்து அடிமைகளை விடுவிக்க இஸ்லாம் தூண்டியது.
(பார்க்க புகாரி 456, 1493, 2155, 2156, 2168, 2169, 2561, 2562, 2563, 2564, 2565, 2578, 2717, 2726, 2729, 2735, 5097, 5279, 5284, 5430, 6717, 6751, 6752, 6754, 6757, 6759)

இன்னும் சில இடங்களில் அரபுகளுக்கு கல்வி பயிற்றுக் கொடுத்தால் நீங்கள் அடிமை முறையிலிருந்து விடுபடலாம் என்ற ரீதியிலும் பல அடிமைகள் விடுவிக்கப்பட்டனர்.
இஸ்லாம் வந்த ஆரம்ப காலங்களில் அடிமை வியாபாரம் கொடி கட்டி பறந்தது. முகமது நபி தான் கொண்டு வந்த மார்க்கத்தின் மூலம் மேற்சொன்ன சட்டங்களை கடமையாக்கி அவரது வாழ்நாளிலேயே அடிமைகள் அற்ற சமூகத்தை உருவாக்கி விட்டு சென்றார். ஆனால் அன்று விடுதலையான இவர்களில் இன்னும் சிலர் பிச்சை எடுப்பதையே தங்கள் குறிக்கோளாக கொண்டுள்ளனர். அரசு இவர்களுக்காக பல திட்டங்களை போட்டாலும் இவர்கள் உழைக்க முற்படுவதில்லை. பலர் படித்து சிறந்த உத்தியோகத்தில் இருந்தாலும் இது போன்ற ஒரு சிலர்களால் ஆப்ரிக்க சமூகத்துக்கே சமூகத்தில் கெட்ட பெயர் ஏற்படுகிறது.



பொதுவாக பல மதங்களும் ஏழைகளுக்கு உதவுவதை வலியுறுத்துகின்றன. அதிலும் குறிப்பாக இஸ்லாத்தில் சற்று அதிகமாகவே வலியுறுத்தப்பட்டுள்ளது. நோன்பு தொழுகை போன்ற வணக்கங்களை உடல் நிலை சரியில்லாது யாராவது விட்டால் அதற்கு பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க சொல்லி இஸ்லாம் கட்டளையிடுகிறது. அதே போல் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட சில காரியங்களை சிலர் செய்து விட்டால் அதற்கு பரிகாரமாக 30 ஏழைகளுக்கு உணவளி: 40 ஏழைகளுக்கு உணவளி என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. சில நேரங்களில் சவுதியில் சாப்பாடு கொடுக்க ஏழைகளை தேடிச் செல்வோரும் உண்டு.

வயது முதிர்ச்சி, கை கால்களில் ஊனம், சொந்தங்கள் கை விட்டு விடுதல் போன்ற காரணங்களால் பிச்சை எடுக்க சிலர் தொடங்கி விடுகின்றனர். இவர்களைப் பற்றி பிரச்னையில்லை.

ஆனால் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ள நபர்களும் இதை ஒரு தொழிலாக நடத்த ஆரம்பித்து விடுகின்றனர். தங்களின் இயலாமையை எடுத்துச் சொல்வதற்காக பல பொய்களையும் இவர்கள் சொல்லத் தயங்குவதில்லை. இதனால் உண்மையாக பிச்சை எடுக்கும் தகுதியுடையவர்களுக்கு சிரமத்தையும் கொடுக்கிறார்கள்.

நாம் பிச்சை போடும்போது ஒரு ரூபாய் ஐந்து ரூபாய் என்று 1000, 2000 என்று மாற்றி வைத்துக் கொண்டு வரிசையாக போட்டுக் கொண்டு செல்கிறோம்.

இப்படி செய்வதால் நாம் பிச்சைக்காரர்களை இன்னும் ஊக்குவிக்கிறோம். 100 பேருக்கு சில்லறைகளாக கொடுக்கும் பணத்தை ஒருவரை தேர்ந்தடுத்து கொடுத்தால் அவர் பிச்சை தொழிலை விடுவதற்கு வாய்ப்பாக அமையும். ஒரு தள்ளு வண்டியோ, ஒரு பிளாட்பார கடையோ அமைத்து கொடுத்து 'இனி பிச்சை எடுப்பதை நான் பார்த்தால் நான் கொடுத்த பணத்தை திரும்ப தந்துவிட வேண்டும்' என்ற உறுதி மொழியோடு தர வேண்டும். இப்படி செய்வதற்கு எல்லோரும் முன் வந்தால் வெகு சீக்கிரத்தில் பிச்சைக்காரர்களை ஒழித்து விடலாம். ஆனால் நம் அரசாங்கமோ மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்கி அவர்களை மேலும் சோம்பேறி ஆக்குகிறது. கொடுக்கும் இலவசங்களும் உரியவர்களை சேராமல் வட்டம் மாவட்டம் பாதியை சாப்பிட்டு மீதியை சம்பந்தப்பட்டவர்களிடம் சேர்ப்பிக்கும் அவலத்தையும் பார்த்து வருகிறோம்.

மனிதனுக்கு சுயமரியாதை அவசியம். சுயமரியாதையை விற்று இப்படி தகுதியில்லாதவர்கள் பிச்சை எடுப்பவர்களை இஸ்லாமும் தடுக்கிறது. பிச்சை எடுத்தல் சம்பந்தமாக இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதனை பின் வரும் நபிமொழிகளில் பார்ப்போம்.


"ஒரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில் அவன் தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள எச்செல்வத்தையும் பெற்றிருக்க மாட்டான்; பிறரும் அவனுடைய நிலையை அறிந்து தர்மம் செய்ய மாட்டார்கள், தானும் வலியச் சென்று கேட்கமாட்டான்." (இத்தகையவனே உண்மையான ஏழையாவான்) (புஹாரி-1479)

இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள், மிம்பர் (வெள்ளிக்கிழமை ஜும்மா அன்று சொற்பொழிவு மேடை) மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, ‘உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும்; உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியதும்; தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியதும்” என்றும் கூறினார்கள். (புஹாரி-1429)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் : "என் உயிர் யாருடைய கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவர் தம் கயிற்றை எடுத்துக் கொண்டு விறகு வெட்டி (கட்டி) அதைத் தம் முதுகில் சுமந்து (விற்று)சம்பாதிப்பது, ஒருவனிடம் வந்து யாசிப்பதை விடச் சிறந்ததாகும். அவன் யாசிப்பவருக்கு கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்." (புஹாரி-1470)

ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார். நான், நபி(ஸல்) அவர்களிடம் (பொருளுதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, "ஹகீமே! நிச்சயமாக இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படும்; இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறவருக்கு அதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது" எனக் கூறினார்கள்.

நான், இறைத்தூதர் அவர்களே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீது ஆணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன் எனக் கூறினேன்.

அபுபக்கர்(ரலி) (ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். பிறகு உமர்(ரலி) (தம் ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர்(ரலி), ‘முஸ்லிம் சமுதாயமே! தம் உரிமையைப்பெறுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற மறுக்கிறார். இதற்கு நீங்கள் சாட்சி!’ எனக் கூறினார். ஹகீம் நபி(ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என ஸயீத் இப்னு அல் முஸய்யப் கூறுகிறார். (புஹாரி-1472)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் "தேவைக்கு அதிகமாக மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான்…" (புஹாரி-1474)

சிலர் நபி(ஸல்) அவர்களிடம் யாசித்தார்கள். நபி(ஸல்) அவர்களும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். பிறகும் நபியவர்களிடம் அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். பிறகும் அவர்கள் கேட்க, நபி(ஸல்) அவர்கள் மீண்டும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். இவ்வாறு நபி(ஸல்) அவர்களிடம் இருந்தது அனைத்தும் தீர்ந்து போன பின் "என்னிடமுள்ள செல்வதை நான் உங்களுக்குத் தராமல் பதுக்கி வைக்கவே மாட்டேன். ஆயினும் யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறானோ அவனை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான்; யார் பிறரிடம் தேவையற்றவனாக இருக்கிறானோ அல்லாஹ் அவனைத் தேவையற்றவனாக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறானோ அவனை அல்லாஹ் பொறுமையாளனாக ஆக்குவான்; மேலும், பொறுமையை விடச்சிறந்த, விசாலமான அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை" என்றார்கள். (புஹாரி-1469)

எனவே இந்த நபி மொழிகள் எல்லாம் பொய் சொல்லி பிச்சை எடுப்பது எவ்வளவு பாவம் என்பதை உணர்த்துகிறது. உழைத்து சம்பாதிப்பதையே இஸ்லாம் வலியுறுத்துகிறது. அப்படிப்பட்ட நன் மக்களாக உங்களையும் என்னையும் இறைவன் ஆக்கி அருள் புரிவானாக!


ஏழை வரி என்ற இந்த ஜகாத்தைப் பற்றி சகோதரி ஹூசைனம்மா ஒரு அழகிய பதிவை சில நாட்களுக்கு முன்பு இடுகையாக்கியிருந்தார். மேலதிக விபரத்துக்கு இதனையும் பாருங்கள். வறுமையை ஒழிக்க என்ன அழகிய ஒரு திட்டம் என்பது நமக்கு விளங்கும்.

-------------------------------------------------------------------

மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு - 16

17 comments:

suvanappiriyan said...

மதுரன்!

//உங்கள் மதத்தை பற்றி
மட்டுமே எழுதிக்கொண்டிருந்தபோது நாங்கள் எதிர்த்தோமா? எப்போது சுவனப்பிரியன் மற்ற மதங்களை
கேவலப்படுத்தி எழுத ஆரம்பித்தாரோ அப்போதுதான் நாங்களும் எதிர்க்க ஆரம்பித்தோம். இதையே ஒரு ஹிந்து
வேறு மதங்களை தாக்கி எழுதினாலும் அவரை எதிர்த்திருப்போம். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்?//

சரியான காமெடி மதுரன்! இந்து மதத்தையோ, இந்து மத தெய்வங்களையோ நான் எங்கு கேவலப்படுத்தினேன். நீங்கள் இஸ்லாமிய நடைமுறையை கேவலப்படுத்தும் போது உங்களிடம் இவ்வாறு இல்லையா என்று சில மேற்கோள்களை மட்டுமே காட்டியுள்ளேன்.

நான் இணையத்தில் எழுத ஆரம்பித்ததே நேசகுமாரின் எழுத்துக்குளைப் பாரத்துதான். எந்த அளவு பொய்களை இஸ்லாத்தின் மேல் ஏற்ற வேண்டுமோ அந்த அளவு தனது குரூர எழுத்துக்களால் கேவலப்படுத்தினார். 6, 7 வருடங்களுக்கு முன்னால் இந்த அளவு இணையத்தில் எழுத இஸ்லாமிய பதிவர்களும் இல்லை. அன்று நேசகுமார், ம்யூஸ், டோண்டு ராகவன், அரவிந்தன் நீலகண்டன் போனறோர்கள் இஸ்லாத்தை தொடாமல் இருந்திருந்தால் நான் தமிழ் இணையத்தின் பக்கமே வந்திருக்க மாட்டேன். வந்திருந்தாலும் சினிமா விமரிசினங்களும் இளையராஜாவையும் ரஹ்மானையும் பற்றி மட்டுமே பதிவுகள் எழுதிக் கொண்டிருந்திருப்பேன். என்னை இஸ்லாத்தை மேலும் ஆழமாக படித்து ஒரு சிறந்த நிலைக்கு என்னை உயர்த்தியது மேற் சொன்னவர்களின் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகளே. அது உண்மைதானா என்று ஆராய போய்த்தான் இன்று நான் ஒரு அழகிய வாழ்வு முறையை பெற்றுக் கொண்டுள்ளேன். அதற்காக இஸ்லாமிய எதிர்ப்பு பதிவாளர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Unknown said...

இங்கு அமீரகத்தில் ஷார்ஜாவில் ஒரு பாகிஸ்தானிய பிச்சைக்காரனை போலீஸ் பிடித்தது. அப்போது அவரிடம் 30000 திர்ஹம்கள் (நான்கு இலட்ச இந்திய ரூபாய்களுக்கு மேல்) இருந்தன.

பைத்துல் மாலின் அவசியம் உணரப்பட வேண்டியது.

ராஜ நடராஜன் said...

நீங்க சொல்லும் பிச்சை எடுக்கும் நுட்பம் சவுதியில் அதிகமாக இருக்கும் போல தெரியுதே!இங்கேயும் பெண்கள் சிலர் பிச்சை எடுப்பதுண்டு.முக்கியமாக ரமலான் மாதத்தில் ஈகையின் காரணமாக அதிகம் தென்பட்டன.இப்பொழுது குறைவாகவே காணப்படுகின்றது.

தெருவை சுத்தப்படுத்தும் வேலையோடு சிக்னல் அருகில் பெங்களாதேசிகள் காலை கூட்ட நெரிசல் நேரத்தில் நின்று காரில் உட்கார்ந்திருப்பவர்கள் தரும் பணத்தை பெற்றுக்கொள்கிறார்கள்.

உடல் ஊனமுற்றவர்களுக்கும்,அனாதைகளுக்கும் அரேபிய அரசுகள் காட்டும் அக்கறை பாராட்டுக்குரியது.

ராஜ நடராஜன் said...

மதுரன் என்ன சொன்னார் என்பதை முழுவதுமாக வெளியிடலாமே!உங்கள் பதில் சார்ந்து மட்டும் கருத்து சொன்னால் யார் சொல்வது சரியென புரிதல் இல்லாமல் போகுமென நினைக்கின்றேன்.

Anonymous said...

20% அவர்கள் எப்போதாவது பிச்சை எடுப்பதை அனுமதித்துள்ளார்களா ?

ராஜ நடராஜன் said...

//6, 7 வருடங்களுக்கு முன்னால் இந்த அளவு இணையத்தில் எழுத இஸ்லாமிய பதிவர்களும் இல்லை. அன்று நேசகுமார், ம்யூஸ், டோண்டு ராகவன், அரவிந்தன் நீலகண்டன் போனறோர்கள் இஸ்லாத்தை தொடாமல் இருந்திருந்தால் நான் தமிழ் இணையத்தின் பக்கமே வந்திருக்க மாட்டேன்.//

சகோ.சுவனப்பிரியன்!நேசகுமார்,டோண்டு ராகவன் காலம் தொட்டு தொடர்கிறீர்களா!இஸ்லாமிய பதிவர்கள் இல்லாத முந்தைய ஆட்டம் எப்படி மோசமாக இருந்ததோ அதே அளவுக்கு இஸ்லாமிய பதிவர்கள் ஆடவந்த பின்பும் ஆட்டம் சுத்த மோசமாக இருந்தது என்பதும் இப்ப கொஞ்சம் கடிவாளம் போட்டபின் பரவாயில்லை என்பது எனது கணிப்பு.

suvanappiriyan said...

சகோ சுல்தான்!

//இங்கு அமீரகத்தில் ஷார்ஜாவில் ஒரு பாகிஸ்தானிய பிச்சைக்காரனை போலீஸ் பிடித்தது. அப்போது அவரிடம் 30000 திர்ஹம்கள் (நான்கு இலட்ச இந்திய ரூபாய்களுக்கு மேல்) இருந்தன.

பைத்துல் மாலின் அவசியம் உணரப்பட வேண்டியது.//

தற்போது பைத்துல் மால் ஒவ்வொரு ஊரிலும் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட துவங்கியுள்ளது. இது மேலும் விரிவுபடுத்தப்பட்டால் இன்னும் 20 வருடத்தில் 100 சதவீத்ம் கல்வியறிவு பெற்ற மக்களாக நம் மக்களை மாற்றி விடலாம். இதற்கு செல்வந்தர்கள் மனது வைக்க வேண்டும்.

suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!

//சகோ.சுவனப்பிரியன்!நேசகுமார்,டோண்டு ராகவன் காலம் தொட்டு தொடர்கிறீர்களா!இஸ்லாமிய பதிவர்கள் இல்லாத முந்தைய ஆட்டம் எப்படி மோசமாக இருந்ததோ அதே அளவுக்கு இஸ்லாமிய பதிவர்கள் ஆடவந்த பின்பும் ஆட்டம் சுத்த மோசமாக இருந்தது என்பதும் இப்ப கொஞ்சம் கடிவாளம் போட்டபின் பரவாயில்லை என்பது எனது கணிப்பு.//

முன்பு பதில் சொல்ல இஸ்லாமிய பதிவர்கள் அதிகம் இல்லை. எனவே ஒருபக்கம் மட்டுமே பார்க்கப்பட்டு வந்தது. தற்போது அவர்கள் வைத்த அத்தனை கேள்விகளுக்கும் ஆக்கபூர்வமான பதில்களை தந்து வருகிறோம். நேசகுமாரே ஒரு முறை இஸ்லாத்தை விமரிசிக்க போய் எனது வாழ்விலும் இஸ்லாம் புக ஆரம்பித்து விட்டது என்று சொல்லி விமரிசனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டார். தற்போது அவரது எழுத்துக்களையே காண முடிவதில்லை.

//தெருவை சுத்தப்படுத்தும் வேலையோடு சிக்னல் அருகில் பெங்களாதேசிகள் காலை கூட்ட நெரிசல் நேரத்தில் நின்று காரில் உட்கார்ந்திருப்பவர்கள் தரும் பணத்தை பெற்றுக்கொள்கிறார்கள்.//

குறைவான சம்பளத்தில் வேலை செய்யும் நபர்களுக்கு அரபுகளாக விருப்பப்பட்டு கொடுக்கும் அன்பளிப்புகளை வாங்குவதை அரசும் தடை செய்வதில்லை. பொய் சொல்லி இதை ஒரு தொழிலாக மாற்றுவதை சவுதி அரசு குற்றமாக பார்க்கிறது. பலரை கைது செய்து அழைத்தும் செல்கிறது. சில காலங்களில் விடுதலையானவுடன் பழைய படி தொழில் ஆரம்பமாகி விடுகிறது.

suvanappiriyan said...

' சட்ட மேதை பாபா சாகேப் அம்பேத்கர், இமானுவல் சேகர‌ன் சிலைகள் உடைப்பு சமூக மோதலை உருவாக்கும் உள்நோக்கம் கொண்டது'' என்ாறு நாம் தமிழர் கட்சி‌த் தலைவ‌ர் ‌‌சீமா‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இன் று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறி்‌க்கை‌யி‌ல், மதுரை மாவட்டம் அவனியாபுரத்தை அடுத்துள்ள பெருங்குடியில் சட்ட மேதை பாபா சாகேப் அம்பேத்கர் மற்றும் இமானுவல் சேகரன் ஆகியோரின் சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருப்பதை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட சிலை உடைப்பு சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக முற்றிலுமாக இல்லாத நிலையில், இப்போது மீண்டும் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடந்திருப்பது தமிழர்களிடையே சாதியின் அடிப்படையில் மோதலை மூட்டிவிடும் திட்டமிட்ட உள்நோக்கம் கொண்ட செயலாகும். இச்சம்பவத்திற்குக் காரணமான, சாதிய வெறியையும், சாதிய அரசியலையும் காப்பாற்றிக்கொள்ளும் சக்திகளை அடையாளம் கண்டு, நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

தமிழினம் பல்வேறு வழிகளில் ஒட்டுமொத்தமாக வஞ்சிக்கப்பட்டுவரும் அரசியல் சூழலில், ஒரினமாக நின்று பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய தமிழர் சமூகத்தை உள்ளிருந்தே பலவீனப்படுத்தும் நடவடிக்கையே இந்தச் சிலை உடைப்புகளாகும். இதனை தமிழர்கள் சரியாக புரிந்துகொண்டு, இப்படிப்பட்ட சதி செயல்களில் ஈடுபடும் சாதி வெறியர்களை இனம் கண்டு புறந்தள்ள வேண்டும்.

தமிழினத்தின் விடுதலையை, உரிமைகளை வென்றெடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து தமிழர் எனும் ஏக உணர்வோடு நமது மக்கள் பேரெழுச்சியுடன் ஒன்று திரண்டுவரும் தருணத்தில், அதனை உடைக்க இப்படிப்பட்ட சம்பவங்களை ஏற்படுத்துகிறார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது. இதனை இன உணர்வோடு தமிழர்கள் ஒன்றுபட்டு வேரறுக்க வேண்டும்.

நாம் மதித்துப் போற்றும் தலைவர்களின் சிலைகளை சமூக விரோத சக்திகள் இப்படிப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் சிதைப்பதையும், அதன் மூலம் சமூக அமைதியை கெடுப்பதையும் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு தடுத்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

நம்மால் நன்றியுடன் போற்றப்படும் தலைவர்களின் சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதுடன், தலைவர்களின் சிலைகள் அனைத்தையும், பொதுமக்கள் பயன்படுத்தும் பூங்காக்களில் நிறுவி, அதன் மூலம் அவைகள் எப்போதும் பொதுமக்களின் பார்வையிலும், காவல் துறையின் பாதுகாப்பிலும் இருக்குமாறு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்கறு ‌சீமா‌ன் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1208/08/1120808022_1.htm

Anonymous said...

Kavya says:
August 8, 2012 at 1:00 pm

வர்ணாசிரம தர்மப்படி சமயத் தத்துவங்களையும் ஆன்மிக விஷயங்களையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பிராமண வர்ணத்திற்கு இருப்பதால் அர்ச்சகராகப் பொறுப்பு ஏற்கும் கடமையை இவை பிராமண வர்ணத்திற்கு அளிக்கின்றன. ஆனால் பிறப்பின் அடிபடையினால் அல்லாமல் குண கர்ம விசேஷத்தின்படி அமையும் பிராமண வர்ணத்திடம் அர்ச்சகப் பொறுப்பு ஒப்படைக்கப்படுகீறது. எனவேதான் அர்ச்ச்கர் என்கிற ஒரு தனிப் பிரிவு ஏற்பட்டு அது பரம்பரை பரம்பரையாகத் தொடர்கிறது. அர்ச்சகர் எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்கிற கட்டுப்பாடுகளும் மிகக் கடுமையாக விதிக்கப்பட்டுள்ளன. அந்தக் கடமைகளிருந்து தவறும் அல்லது அவற்றை மீறத் துணியும் அர்ச்சகரை அர்ச்சகர் பொறுப்பிலிருந்து தூக்கி எறியவும் ஆகம விதி உள்ளது. இப்படி அர்ச்ச்கரை நீக்க்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட்ட ஆலயத்தின் அறங்காவலர் குழுவிற்கு உண்டு.
எப்படி முறை தவறும் பாதிரிமார்கள் கிறிஸ்தவ மதத்திலும், முத்தலிப்புகள் முகமதிய மதத்திலும் இருக்கிறார்களோ அதே போல் ஹிந்து சமய ஆலயங்களின் அர்ச்சகர்களிலும் முறை தவறும் அர்ச்சகர்கள் சிலர் இருப்பார்கள்தான். அவர்கள் மீது ஆலய அறங் காவலர் குழுவே நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் கங்கையே சூதகமானால் எங்கு போய் நீராடுவது என்று கேட்க வேண்டிய நிலையில்தான் பல அறங் காவலர் குழுக்கள் உள்ளன. இதற்குக் காரணம் அறங்காவலர் நியமனம் அரசின் அதிகாரங்களில் ஒன்றாக இருக்க அனுமதித்து விட்டதுதான். அதற்கு முன் முறை தவறும் அறங் காவலரை ஊரே கூடி நீக்கும் வாய்ப்பு இருந்தது. அந்த வாய்ப்பு சரியாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டதா என்பது வேறு விஷயம்.

பிராமண வர்ணம் என்றால் இன்றைய காலத்தில் எவர்?
சமயத்தத்துவங்களயும் ஆன்மிக விசயங்களையும் அவர்களுக்கு மட்டுமே பார்த்துக்கொள்ளும் பொறுப்பு ஏன் கொடுக்கப்பட்டது? சரி, அன்று கொடுக்கப்பட்டது என்றாலும், இன்றும் ஏன்?
பிறப்பின் அடிப்படையின் இல்லாமல் குண கர்ம விசேசங்களையுடையவன் இவன்; எனவே இவந்தான் அர்ச்சகராகத் தகுதியுடையோன் என்று எப்படி கண்டுபிடிக்கமுடியும்?
இன்று அப்ப‌டி க‌ண்டுபிடித்துத்தான் அர்ச்ச‌க‌ரார்க‌ளாகிறா?
அப்ப்டியே க‌ண்டிபிடித்தாலும் எப்ப‌டி அது ஒரே ஜாதியில் ம‌ட்டுமே தென்ப‌டுகிற‌து?
அற‌ங்காவ‌ல‌ர் குழுவுக்குத் தெரிந்தால்தான் அர்ச்ச்க‌ர் வில‌க்க‌ப்ப‌டுவார். திருப்ப‌ர‌ங்குன்ற‌த்தில் பெண் ச‌க‌வாச‌த்தில் பிடிப‌ட்டு வில‌க்கப்ப‌ட்ட‌ அர்ச்ச‌க‌ர் மொட்டைக்க‌டுதாசியினாலே பிடிப‌ட்டார். அவ‌ர் ப‌ல‌நாட்க‌ள் அப்பெண்ணுட‌ன் உற‌வில் இருன்தார். அவ‌ர் எப்ப‌டி தேர்ன்தெடுக்க‌ப்ப‌ட்டார் அவ்வ‌ள‌வு பெரிய‌ கோயிலில். குண‌க‌ர்ம‌ விசேச‌ங்க‌ளினாலா?
ஒரே ஒரு ச‌ம்ப‌வ‌ம் என்று காயை ந‌க‌ர்த்தி விட‌ முடியாது. அச்ச‌ம்ப‌வ‌ம் எப்ப‌டி நிக‌ழாம‌ல் செய்வ‌து? குண‌க‌ர்ம‌விசேச‌ங்க‌ளைக்க‌ண்டிபிடிக்க‌முடியாது ம‌ல‌ர்ம‌ன்ன‌ன். அது ஒரு வேக் டேர்ம்.

suvanappiriyan said...

நிகழ்வுகள்!

//நான் கடந்த சில மாதங்களாக சுவனப்பிரியனின் பதிவுகளை படித்த பின், அப்படி என்ன தான் இருக்கிறது இந்து மதத்தில்? என்ற ஆர்வம் சாதாரணமாக தொடக்கி தீவிரமாக பற்றிக்கொண்டது.//

ஏதாவது ஒரு வகையில் இந்து மதத்தில் ஆர்வம் வந்து வேதங்களை எல்லாம் படிக்க ஆரம்பித்து விட்டால் மூலக் கொள்கையான 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற இடத்தில் வந்து நிற்பீர்கள். அதைத்தானே இஸ்லாமும் சொல்கிறது.

//ஆனாலும் என் ஊகத்தின்படி 'பாலாரும் தேனாறும் ஓடும்' சவூதி அரேபியாவிலே 'மதம் சார் நிறுவன கட்டமைப்பிலே' ஊழியம் பெறும் ஒரு உயர்மட்ட அதிகாரியாக/ ஊழியனாக இருக்க வேண்டும். ஏனெனில் இருபத்தி நான்கு மணி நேரமும் மதத்தை பற்றி மட்டும் சிந்தித்து/செயற்ப்படுத்திக்கொண்டு இருந்தால் சாப்பாட்டுக்கு எங்கே போவது? குடும்பம் நடத்த என்ன வழி//

எனக்கு அரசு மதம் சார்பாக எந்த வேலையும் தரவில்லை. நான் முன்பே கூறியிருக்கிறேன். நான் ஒரு தனியார் கம்பெனியில் கணிணி பிரிவில் வேலை செய்து வருகிறேன். அலுவலக நேரமான 8 மணி நேரத்தில் 4 மணி நேரத்தில் எனது வேலைகள் முடிந்து விடும். மற்ற நான்கு மணி நேரத்தில் இது போன்று பதிவுகள் பக்கம் வருவேன். எனது ஆர்வத்தை பார்த்து எனது பாஸ்(சவுதி) தனியாக கணிணியும், பிரிண்டரும், ஸ்கேனரும் கொடுத்து அலுவலகத்தில் இதற்கென தனி இடத்தையே ஒதுக்கி கொடுத்துள்ளார். எனவே மனைவி மக்களுக்காக சம்பாதித்து விட்டு இறப்புக்கு பிறகு உள்ள நீண்ட நெடிய பயணத்துக்கு உதவியாக இருக்குமே என்று தான் இநத பணி. இதற்கு எந்த பண உதவியும் கிடைப்பதில்லை. அப்படி கொடுத்தாலும் வாங்கிக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை.


மதுரன்!

//இன்னும் சிறிது நேரத்தில் அண்ணன் தனது Xyz என்ற போலி ப்ரோபைலில் வந்து ஒரு கமெண்ட் போட்டு கள நிலவரங்களை அறிவார்..//

சுவனப்பிரியன் என்ற இந்த ஒரு ஐடியை தவிர வேறு எதுவும் இல்லை. வேறு யாருடைய கருத்தையோ என் கருத்தாக்குவுது நகைப்புக்குரியது.

நிருபன்!

//தன்னுடைய பதிவுக்கு தானே அனானிமஸ் கமெண்ட் அடித்து சுய சொறிதல் செய்வது சுவனத்தின் இயல்பான குணங்களுள் ஒன்று!

மற்றையது..அனானிமஸ் கமெண்ட் அடித்து தன் பின்னே பலர் இருக்கிறார்கள் என பந்தா காட்டி சுயசொறிதல் செய்வதும் இவரின் இயல்பு!//

வேறொரு தளத்தில் நடக்கும் சிறப்பான பின்னூட்டங்களை குறிப்பாக தங்கமணி, காவ்யா, கிருஷ்ணகுமார், ஸ்மிதா போன்றவர்களின் எழுத்தை மறு மதிப்பாக பதியும் போது அதனை அனானி ஆப்ஷனில் வெளியிடுவேன். ஏனெனில் அது என்னுடைய கருத்து என்று தவறாக மற்றவர்கள் விளங்கி விடக் கூடாது என்பதற்காக. மற்றபடி எனக்கு நானே வேறு பெயர்களில் பின்னூட்டம் போடக் கூடிய அளவில் எனது வலைப்பூ இல்லை என்பதை நீங்களும் அறிவீர்கள்.

//சம்பவம் - “ பள்ளிவாசலுக்குள் புகுந்த பௌத்த பிக்குகள, முஸ்லிம்களை தொழ விடாமல் துன்புறுத்துகின்றனர்! எங்கும் ஒரே ஆரவாரம்! அடிதடி! சில முஸ்லிம்கள் தாக்கப்பட்டு, காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றனர்”

பத்திரிகை நிரூபர் - “ அங்க என்ன நடக்குதுங்க?”

சுவனப்பிரியன் - “சும்மா பேசிக்கிட்டு இருக்கோம் மாமா”//

எந்த வழியிலாவது பவுத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பிரச்னை வர வேண்டும் என்று உங்கள் உள் மனது சொல்வது எனக்கு நன்றாக தெரிகிறது. அப்படி எல்லாம் வராது கவலைப்பட வெண்டாம. இன்னும் சில ஆண்டுகளில் சிங்களவர்களோடு தமிழ் இந்துக்களை இணைக்கும் பாலமாக தமிழ் முஸ்லிம்கள் செயல்படுவார்கள். அதுவரை கொஞ்சம் பொறுத்திருக்கவும். அதுவரை சீமான், வைகோ, கலைஞர், நெடுமாறன் செய்யும் காமெடிகளை எல்லாம் ரசித்து பார்த்துக் கொண்டிருக்கவும்.

.

suvanappiriyan said...

இக்பால் செல்வன்!

//ஒருவரின் மூளை எப்பக்கம் சார்ந்து இயங்க வேண்டும் என்பதை பெரும்பாலும் தீர்மானிப்பது ஹார்மோன்களும், ஜீன்களுமே ஆகும். இப்படியாக மூளையின் எப்பக்கத்தினை ஒரு தனி மனிதர் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பது ஒருவர் பிறக்கும் முன்னரே, அதாவது சிசுவாக இருக்கும் போது தீர்மானிக்கப்பட்டு விடும். அதே போல ஒல்சன் மேலும் கூறியது என்னவெனில், ஒருவரின் மூளைப் பயன்ப்பாடும், அதனோடு கூடிய பாலியல் நாட்டமும் பிறக்கும் முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிடுவதால் அவை பிற்காலங்களில் மாற்றக் கூடிய ஒன்றில்லை என்பதையும் கூறினார். //

1695. உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (40 நாள்களில் அட்டை – போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகிறது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்க என்னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு நாள் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா, நற்பேறுடையதா என்பதையும் (நான் விதித்தபடி) எழுது” என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான், உங்களில் ஒருவர் (நற்) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ளும். அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து விடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்து விடுவார்,) ஒருவர் (தீய) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரேயொரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக் கொள்ளும். அதனால் அவர் செர்க்கவாசிகளின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்)என்று கூறினார்கள்.
புஹாரி : 3208 அறிவிப்பவர் நபித் தோழர் இப்னு மஸ்ஊத்

'நாடியோரைக் கண்ணியப் படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய்: நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.'
-குர்ஆன் 3:26

suvanappiriyan said...

சகோ சார்வாகன்!

//நீங்கள் தனிப்பட்ட வாழ்வில் கடைப்பிடிக்காத, மத புத்தகங்களில் உள்ள‌ ஒரு செயலையாவது இக்காலத்துக்கு ஏற்ற விடயம் இல்லை என ஒத்துக் கொள்ளும் மன்நிலை உண்டா?//

எந்த சட்டம் இநத காலத்துக்கு அல்லது இந்த நாட்டுக்கு பொருந்தாதது என்று சொல்ல வருகிறீர்கள். அப்படி ஏதாவது ஒரு வசனத்தை நீங்கள் காட்டுங்கள்.

காஃபிர்கள் மேலான ஜிஸ்யா வரியை நியாயப் படுத்துகிறீர்கள்!,//
திருட்டுக்கு கை வெட்டு என்கிறீர்கள்,குற்ரம் செயாத்வர் என்ற நம்பிக்கையினால் ,தெரிந்தவர் என்றதும் காசு வசூல் செய்து கொடுத்து கட்டை பஞ்சாயத்து பேசி முடிக்கிறீர்!//

. முஸ்லிம்களிடம் ஜகாத் என்ற பெயரில் கட்டாய வசூல் செய்து அதை அரசு செலவீனங்களுக்கு பயன் படுத்தும் போது அதே ஆட்சியின் கீழ் வரும் மற்ற மதத்தவர் தங்கள் பங்காக ஜிஸியா தருவது எவ்வாறு தவறாகும். முஸ்லிம்களிடம் வாங்காமல் ஹிந்துக்களிடம் மட்டும் வரி வாங்கினால் உங்கள் வாதத்தில் நியாயம் உண்டு.

ஒருவன் திருட்டுக் குற்றத்தில் அகப்பட்டால் அதற்கு சாட்சிகள் வேண்டும். சாட்சிகள் இல்லாமல் சந்தேகத்தில் பிடிக்கும் ஒருவரின் கையை வெட்டமுடியாது. கமருதீன் விவகாரம் சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் அப்பாவி என்று நன்கு தெரிந்தவுடன் தான் அவரை வெளியில் எடுக்கும் முயற்சியில் பலரும் இறங்கினர். பணம் பறி கொடுத்தவர் மன்னிக்கும் பட்சத்தில் தண்டனையில் இருந்து அவருக்கு விளக்கும் அளிக்கப்படுகிறது. எனவே இதில் அப்பாவிகள் பாதிக்கப்படும் சாத்தியங்கள் இல்லை.

//இது அரசியல் அழுத்தம் மூலமாகவே மட்டுமே வரும். ஒருவேளை அரபு நாடுகள் அப்படிக் செய்கிறார்கள் என்றால் வரவேற்போம்.அரசியலமைப்பு சட்டத்தில் அனைவருக்கும் சம உரிமை ,குறைந்த பட்சம் சுய ஆட்சி என்பதை அவர்கள் வலியுறுத்துவது போல் தெரியவில்லையே//

அரபு நாடுகள் தங்களின் பங்களிப்பை வழங்கி இலங்கையின் இனப்பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டால் அதனையும் வரவேற்போம். இதற்கு இந்தியாவின் உத்தரவும் வேண்டும்.

suvanappiriyan said...

சண்டிகர் : சண்டிகர் மாநிலத்தில் நிகழ்ந்த சம்சவ்தா எக்ஸ்பிரஸ் தீவிபத்து குறித்த வழக்கு விசாரணையில் 2-வது குற்றப்பத்திரிகை நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. என தேசிய புலனாய்வு மையத்தின் வக்கீல் ஆர்.‌கே.ஹண்டா தெரிவித்துள்ளார். ஹரியாணா மாநிலம் தீவனா ரயில்நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சம்சவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடி குண்டு வெடித்து தீப்பிடித்தது. இச்சம்பவத்தில் ஏராளமான ‌பாகிஸ்தானியர்கள் உயிரிழந்தனர். இவ்விபத்து குறித்து ஹரியாணா மாநில போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இருப்பினும் விசாரணையில்எவ்வித முன்னேற்றமும் ஏற்படாதாதல் வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிடம் கடந்த 2010-ம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து முதல் கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இவ் வழக்கில் தொடர்புடையதாக கமல்சவுகான் மற்றும் அமீத் சவுகான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக லோகேஷ்சர்மா, ராஜேந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அமித் மற்றும் ராஜேந்திரா நீதிமன்ற காவலில் இருந்து தப்பிவிட்ட நிலையில் இரணடாம் கட்ட குறப்பத்திரகை நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதாக வக்கீல் ஹண்டா தெரிவித்துள்ளார்.
-Dinamalar
09-08-2012

suvanappiriyan said...

அன்புள்ள திரு மலர் மன்னன்!

// என் அன்பார்ந்த் ஸ்ரீ சுவனப்ரியன்,

முகமதிய மதம் என்பது உங்கள் மனதைப் புண்படுதுகிறது என்றால் அன்பு கூர்ந்து உறுதி செய்யுங்கள். நீங்கள் குறுப்பிட்வாறே இனி எழுதுகிறேன். ஏனெனில் எவர் மனதையும் புண்படுத்தி மகிழும் குரூர சுபாவம் எனக்கு இல்லை.//

முகமதிய மதம் என்று பலரும் வழக்கமாக பயன்படுத்தி விடுகின்றனர். முகமது நபி மனிதர்களுக்குரிய சட்டங்களை இறைவனிடமிருந்து வாங்கித் தந்திருக்கிறார் எனபது இஸ்லாததின் நம்பிக்கை. இதற்கு முன்பு ஆதமிலிருந்து ஏசுநாதர்வரை எந்த செய்தியை இறைவனிடமிருந்து கொண்டு வந்தார்களோ அதே செய்தியைத்தான் முகமது நபியும் கொண்டு வந்திருக்கிறார். இது இறைவனை வணங்குவதற்குரிய வழி. எனவே இதனை மதம் என்று கூறாமல் இஸ்லாமிய மார்க்கம் என்று கூறுவதே குர்ஆனின சொல்படி சரியாகும்.

முத்தவல்லி என்ற வார்த்தைக்கு தலைவர், பாதுகாவலர் என்ற பொருள்களை கொள்ளலாம். பள்ளியை நிர்வகித்து அதன் வரவு செலவுகளை பராமரிப்பவரை முத்தவல்லி என்று அழைப்பர்.

இந்த வயதிலும் அயராது பக்கம் பக்கமாக பதில்களை தந்து கொண்டிருக்கும் உங்களின் உழைப்பு வியக்க வைக்கிறது.

suvanappiriyan said...

சார்வாகன்!

//1.சுவ‌ன‌ப் பிரிய‌ரே அந்த‌ வ‌ச‌ன‌த்தில் ஏன் பாதி ம‌றைத்து விள்க்க‌ப்ப‌ட்ட‌து?[பாதி இங்கே மீதி பாதி எங்கே!!!] மீதிபாதியில் ஏதேனும் சர்ச்‌சைக்குறிய‌ விட‌ய‌ம் உண்டா? அது இக்காலத்துக்கும் பொருந்துமா? இது ந‌டைமுறையில் உள்ள‌தா? எங்கு????????//

அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள். நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை போதுமாக்கிக் கொள்ளுங்கள். இதுவே நீங்கள் வரம்பு மீறாதிருக்க நெருக்கமான வழி.

-குர்ஆன் 4:3

இதுதான் நீங்கள் குறிப்பிடும் குர்ஆன் வசனம். இதில் என்ன பிரச்னை உங்களுக்கு? அடிமைப் பெண்கள் இன்று இல்லை. எனவே இந்த சட்டத்தை தற்போது எப்படி பயன்படுத்துவது என்று நீங்கள் கேட்கலாம். ஒரு ஊரில் திருட்டே நடக்கவில்லை. எனவே திருடு சம்பந்தமாக வரும் வசனங்களை அந்த ஊரில் பயன்படுத்த முடியாத நிலை உண்டாகும். உடனே நீங்கள் 'பார்த்தீர்களா? குர்ஆன் வசனம் எக்காலத்துக்கும் பொருந்தாது ' என்று யாராவது கேட்டால் இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்?

SELECTED ME said...

திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!