Followers

Friday, August 31, 2012

20 மணி நேரம் ஒருவரால் நோன்பிருக்க முடியுமா?

பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள இந்தியா போன்ற நாடுகளில் 12 மணி நேரம் பகலும் 12 மணி நேரம் இரவும் மாறி மாறி வருகிறது. எனவே இங்குள்ள முஸ்லிம்கள் வைகறையிலிருந்து தோராயமாக 5.30 to 6 லிருந்து சூரியன் மறையும் நேரமான 6.30 மணி வரை உண்ணாமல் பருகாமல் நோன்பிருக்கின்றனர். இது ஒரு சராசரி மனிதனுக்கு சிரமத்தை கொடுக்காது. வழக்கமாக சாதாரண நாட்களில் உள்ளதைப் போல் மேற் கொண்டு ஐந்து மணி நேரமோ ஆறு மணி நேரமோ பசித்திருப்பது பெரிதாக தெரியாது. அதிலும் குளிர்காலமாக இருந்தால் சவுதியில் உள்ளவர்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் நோன்பை முடித்து விடுவர். தற்போது கோடைக் காலம் ஆகையால் சிறிது களைப்பை அனைவருமே உணருகிறோம்.



இதே போல் வட துருவம் தென் துருவம் போன்ற பிரதேசங்களில் பின்லாந்து, ஸ்வீடன் போன்ற நாடுகள் வருகின்றன. இங்கு கோடை காலங்களில் இரவு என்பது 2 மணி அல்லது மூன்று மணி நேரம் தான் வரும். இது போன்ற நாட்களில் பகல் பொழுதானது 20 மணி நேரம் இந் நாடுகளில் வரும். தற்போது இஸ்லாம் இது போன்ற நாடுகளில் பரவி வருவதால் தற்போதய முஸ்லிம்களுக்கு அந்த நாட்டு சூரிய உதயத்தின் படி அந்த மக்கள் எவ்வாறு நோன்பு பிடிப்பர்? என்ற கேள்வி நமக்கு எழும். இது ஒரு சிக்கலான பிரச்னைதான்.



இஸ்லாமிக் லீக் ஸ்வீடனின் தலைவரான உமர் முஸ்தஃபா கூறும்போது 'தற்போது 350000 முஸ்லிம்கள் ஸ்வீடனில் வாழ்கின்றனர். தற்போது கோடைகாலத்தில் ரமலான் வருவதால் நீண்ட நேரம் நோன்பு வைக்கும் சிரமத்தில் நாங்கள் இருக்கிறோம். இது பற்றி உலக அறிஞர்கள் பல கருத்துக்ளை முன் வைத்துள்ளனர். இன்னும் விவாதம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது' என்றார்.


(தங்களது இஸ்லாமிய நிகழ்வுகளையும் பொழுது போக்குகளையும் நிறைவேற்றும் பின்லாந்து முஸ்லிம்கள்)

மசூத் என்ற இளைஞர் கூறும் போது 'இதில் எனக்கு பிரச்னை ஒன்றும் இல்லை. நீண்ட நேரம் நோன்பிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது" என்கிறார்.



ஆறு வருடங்களுக்கு முன்பு நபிஸா யாஸ்மின் பங்களாதேஷிலிருந்து பின்லாந்துக்கு தனது கணவர் இரண்டு குழந்தைகளோடு இடம் பெயர்ந்தார். இவர் பின்லாந்தில் ஆராய்ச்சி துறையில் பணி புரிந்து வருகிறார். 'பங்களாதேஷில் 12 மணி நேரமே நோன்பிருப்பேன். பின்லாந்து வந்த புதிதில் 20 மணி நேரம் நோன்பிருந்திருக்கிறேன். தற்போது சில அறிஞர்களின் சொல்படி மெக்கா நேரத்தை அனுசரித்து நோன்பு பிடித்து வருகிறேன். ஆனால் இதை இறைவன் ஏற்றுக் கொள்வானா என்று அச்சமாக உள்ளது' என்கிறார் நபிஸா.
எகிப்து அறிஞர்கள் ஒரு நாள் என்பது அதிகபட்சம் 18 மணி நேரம்தான். இதனால் இங்குள்ள முஸ்லிம்கள் மெக்கா அல்லது மதினா நேரத்தையோ அல்லது அருகில் உள்ள முஸ்லிம் நாடுகளின் நேரங்களையோ பின் பற்றினால் தவறில்லை என்கின்றனர்.



சவுதி மார்க்க அறிஞர்களோ ஒருவர் தங்கியிருக்கும் அந்த நாட்டின் நேரத்தையே பின் பற்ற சட்டம் உள்ளதாக அறிவுறுத்துகின்றனர். முகமது நபி காலத்தில் இந்த நாடுகளில் முஸ்லிம்கள் இருந்ததில்லை. எனவே நபி அவர்களிடமிருந்து நேரிடையான செய்தியை நம்மால் பெற முடியாது. மற்ற சட்டங்களின் துணை கொண்டு தான் இதற்கு தீர்வு காண முடியும்.

'உங்களில் நோயாளியாகவோ பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். இறைவன் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாட மாட்டான்.'

-குர்ஆன் 2:185


இந்த வசனத்தின் மூலம் மனிதர்களுக்கு எளிதானதையே இறைவன் நாடுகிறான். மனிதனை சிரமப்படுத்த இறைவன் விரும்பவிலலை. ஒருவர் நன்கு திடகாத்திரமாக இருந்து நோன்பு வைத்துக் கொண்டு வேலையும் செய்து விட முடியும் என்று நினைப்பாரானால் அவர் நோன்பு வைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. 20 மணி நேரம் என்னால் நோன்பு வைத்து விட முடியும் என்று அவர் உள் மனது சொன்னால் வைத்துக் கொள்ளலாம். ஆனால் சிலரின் உடல் நிலை பலஹீனமாக இருக்கும். மருத்துவர் '20 மணி நோன்பு பிடித்தால் உடல் நிலை மோசமாகும்' என்று அறிவுறித்தினால் அப்படிப்பட்டவர் குர்ஆனின் கட்டளைப்படி பகல் குறைவாக வரும் நாட்களில் அந்த நோன்பை வைத்து பூர்த்தி செய்யலாம். அதிலும் சிரமம் இருக்கிறது என்று அவர் எண்ணினால் ஒரு ஏழைக்கு ஒரு நாள் முழுக்க சாப்பாட்டுக்கு என்ன செலவாகுமோ அதனை கொடுத்து அவரது நோன்பிற்கான பரிகாரமாக வைத்துக் கொள்ளலாம். அல்லது சில அறிஞர்களின் சொற்படி மெக்கா நேரத்தை அனுசரித்தோ அல்லது பக்கத்து நாடுகளின் நேரத்தை அனுசரித்தோ நோன்பு பிடிக்கலாம். இங்கு இறைவன் மனிதனின் இறை அச்சத்தைத்தான் பார்க்கிறான்..

'வைகறை எனும் வெள்ளைக் கயிறு இரவு எனும் கறுப்புக் கயிற்றிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள் பருகுங்கள். பின்னர் இரவு வரை நோன்மை முழுமைப்படுத்துங்கள். '

-குர்ஆன் 2:187


மேற் கண்ட இந்த வசனம் எந்த நாட்டில் நாம் தங்கியிருக்கிறோமோ அந்த நாட்டின் சூரிய உதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் கணக்கில் எடுத்து நமது நோன்பை பூர்த்தியாக்க சொல்கிறது. நம் வசதிக்காக வேறு நாடுகளின் சூரிய அஸ்தமனத்தை கணக்கில் எடுக்கலாமா என்பது ஆராய்ச்சியில் தற்போது உள்ளது. எந்த வணக்கமும் ஒரு மனிதன் சராசரியாக நிறைவேற்றும் முகமாக இருக்க வேண்டும். ஏனெனில் நோன்பையும் வைத்துக் கொண்டு அவன் தனது வயிற்றுக்காகவும் தனது குடும்பத்தின் உறுப்பினர்களுக்காகவும் உழைக்கும் கட்டாயத்தில் இருக்கிறான். இந்த நிலையில் குர்ஆன் கொடுக்கும் சலுகைகளை ஒரு மனிதன் பயன்படுத்திக் கொள்வதில் எந்த தவறும் இல்லை.

ஒரு முறை ஒரு நபித் தோழர் மசூதியின் உள்ளே வராமல் வெயிலில் நின்று தொழுது கெண்டிருந்தார். இதை கவனித்து விட்ட நபிகள் நாயகம் 'உள்ளே இடமிருக்க ஏன் அவ்வாறு வெயிலில் நின்று தொழுகிறார்?' என்று கேட்கலானார். உடன் தோழர்கள் 'வெயிலில் நின்று தொழுதால் இறைவனை அதிகம் நெருங்கலாம் என்ற எண்ணத்தில் அவ்வாறு தொழுகிறார்' என்று பதிலளித்தனர். 'அவரை உள்ளே அழைப்பீராக! இறைவன் மனிதனுக்கு இலகுவானதையே விரும்புகிறான்' என்று அந்த மனிதரை கண்டிக்கிறார் நபிகள் நாயகம். இதன் மூலம் உடலை வருத்தி அதிகக் கஷ்டப்பட்டு பிரார்த்தனை செய்ய இஸ்லாம் கட்டளையிட வில்லை.

இது போன்ற சட்டங்களின் மூலம் வட துருவம் தென் துருவம் போன்ற பிரதேசங்களில் வாழும் பலஹீனமானவர் நோன்பை குளிர்காலத்தில் வைத்தோ அதுவும் முடியாதவர் ஒரு ஏழைக்கு உணவளித்தோ தனது கடமையை பூர்த்தி செய்து கொள்ளலாம். உடல் வலிமை உடையவர்கள் 20 மணி நேரம் கூட பசித்திருந்து தங்களின் நோன்பு கடமையை நிறைவேற்றிக் கொள்ளலாம். இது சம்பந்தப்பட்டவரின் உடல் நிலையையும் மன வலிவையும் பொறுத்தது...

இறைவனே அறிந்தவன்






35 comments:

UNMAIKAL said...

FATWA ON FASTING IN NORTH POLE REGIONS

Translation from Arabic to English
An extract from a Fatwa no. 575/2010-11-21 by Al-Azhar Al-Sharif

In the name of Allah, Most Gracious, Most Merciful


We believe that Muslims living near to the North and South poles and what is close to them; in which the days are long and nights short; have two choices when it comes to fasting Ramadan:

- Either to abide by the timings of the countries in which the Islamic legislations appeared and in which day and night hours are in moderation (Mecca and Medina).

That is, to fast the same number of hours as these two cities.

-Or to calculate the hours of fasting in the closest country, in which day and night hours are in moderation;

and in which the wisdom of Allah Almighty’s decree of Prayers and Fasting is maintained without resulting in too much exhaustion or fatigue.

As it might not be easy to calculate the closest country to Sweden that maintains this status,

we are more inclined towards proposing that Muslims who live in Sweden and other countries with the same situation,

to fast the exact number of hours that Muslims fast in Mecca and Medina.

Taking into factor, that their fasting starts at the time of Fadjr in their location [Sweden, etc.], without taking into account their day and night hours, nor having to wait for sunset or nightfall to stop fasting.

We reached this conclusion in accordance with what scholars pursue when it comes to estimating the timings of Prayers and Fasting and following the orders of Allah and His guidance in the Holy Quran,

as Allah in His mercy says: {Allah intends for you ease and does not intend for you hardship and [wants] for you to complete the period and to glorify Allah for that [to] which He has guided you; and perhaps you will be grateful.} (Surat Albaqarah 2: 185).

Allah Almighty also says: {Allah does not charge a soul except [with that within] its capacity.} (Surat Albaqarah 2: 286).

Allah Almighty knows best.

Members of the Fatwa committee

1- Sheikh / Ashour Al-Wakil (Signature)

2- Sheikh /Mohammad Mohammad Awis (Signature)

3- Sheikh / Gamal Abd Al-Samih (Signature)

4- Sheikh / Al-Sayed Al-Kasas (Signature)

Secretary of the committee
Said Amer (Signature)

Seal:* Al-Azhar Al-Sharif
Islamic research complex

The Fatwa committee

SOURCE: http://mission-alnoor.org/Admin/asp/Mailed_details.asp?M_ID=821
==================================

Land of the midnight sun: the day is more than 20 hours long during summer in northern Finland
Ramadan fasting dilemma when sun never sets


Practising Muslims across the world are observing Ramadan.

For one month, they are fasting between first light and sunset.

But what do Muslims do in a town where the sun never really goes down?

The town of Rovaniemi in Finland lies in a land of extremes.

At 66 degrees north it straddles the Arctic Circle in Finnish Lapland.

During midwinter it is cloaked in total darkness.

But in the summer it is bathed in daylight.

Dr Abdul Mannan - a local Imam and president of the Islam Society of Northern Finland - says there are two schools of thought.

"The Egyptian scholars say that if the days are long - more than 18 hours - then you can follow the Mecca time or Medina time, or the nearest Muslim country time," says Dr Mannan.

"The other (point of view) from the Saudi scholars says whatever the day is - long or short - you have to follow the local time."

Dr Mannan says the majority of Muslims in northern Finland observe either Mecca's fasting hours or Turkish time because it is the nearest Muslim country to Finland.


http://www.bbc.co.uk/news/magazine-19199411

suvanappiriyan said...

உயிரின் மதிப்பை உணராதவர்கள்:

மேட்டூர் : சேலம் மாவட்டம் தாரமங்கலம் பேரூராட்சி கவுன்சிலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் பேரூராட்சியின் 3வது வார்டு அ.தி.மு.க.,கவுன்சிலராக இருப்பவர் ராஜவேலு (33). இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி இன்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாரமங்கலம் போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

--------------------------

முசிறி: முசிறியில் உள்ள எம்.ஐ.டி., பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.முசிறி அந்தரப்பட்டி ரோட்டில் ஆசாரி தெருவில் வசிப்பவர் கணேசன், 45. இவர் மரவேலை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் கார்த்திக், 18. முசிறி அருகே உள்ள எம்.ஐ.டி., பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார்.நடந்து முடிந்த தேர்வில் மதிப்பெண் குறைவாக வாங்கியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கார்த்திக் சம்பவத்தன்று இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி, எஸ்.ஐ., பழனியாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

-Dinamalar 1-09-2012

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//Translation from Arabic to English
An extract from a Fatwa no. 575/2010-11-21 by Al-Azhar Al-Sharif

In the name of Allah, Most Gracious, Most Merciful//

பதிவுக்கு தொடர்புடைய மார்க்க தீர்ப்பின் சுட்டியை வழங்கியமைக்கு நன்றி.

Unknown said...

சகோ. சுவனப்பிரியன், முஸ்லிம்கள் வைகறையிலிருந்து சூரியன் மறையத் துவங்குவது வரை நோன்பு நோற்பர்; சூரிய உதயத்திலிருந்து அல்ல.

Unknown said...

சகோ. சுவனப்பிரியன், முஸ்லிம்கள் வைகறையிலிருந்து சூரியன் மறையத் துவங்குவது வரை நோன்பு நோற்பர்; சூரிய உதயத்திலிருந்து அல்ல.

ஃபெய்ஸல்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பரியன்,
நீங்கள் பகிர்ந்து இருக்கும் கிறாஃப் அருமையான விளக்கத்தை தரும்.

சிரமம ஒன்றும் இல்லை என்போர்... இவ்வருடம் 20 மணிநேரம் நோன்பு வைக்கிறார்கள் எனில்... இன்ஷாஅல்லாஹ் சுமார் 16 வருஷம் கழித்து 4 மணி நேரம் மட்டுமே இவர்கள் நோன்பு வைப்பார்கள்..!

இப்போது 20 மணி நேரம் என்பது சிரமமாக உள்ளவர்கள், இவ்வருடம் 12 மணி நேரம் என கணக்கிடுவார்கள் எனில், அப்போதும் 12 மணி நேரம் என கணக்கிடுவார்கள்..!

நீங்கள் பகிர்ந்துள்ள இறைவசனம் அருமை. இறைவன் நமக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை அல்ல..!

suvanappiriyan said...

சகோ ஃபெய்ஸல்!

//சகோ. சுவனப்பிரியன், முஸ்லிம்கள் வைகறையிலிருந்து சூரியன் மறையத் துவங்குவது வரை நோன்பு நோற்பர்; சூரிய உதயத்திலிருந்து அல்ல.

ஃபெய்ஸல்//

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திருத்தி விட்டேன்.

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//சிரமம ஒன்றும் இல்லை என்போர்... இவ்வருடம் 20 மணிநேரம் நோன்பு வைக்கிறார்கள் எனில்... இன்ஷாஅல்லாஹ் சுமார் 16 வருஷம் கழித்து 4 மணி நேரம் மட்டுமே இவர்கள் நோன்பு வைப்பார்கள்..!//

ஓ......இப்படி ஒரு ஏற்பாடும் உள்ளதா? ஆக இந்த வருடம் சிரமப்பட்டு 20 மணி நேரம் நோன்பு பிடித்தவர்கள் பிற காலங்களில் நம்மை விட இலகுவாக 4 மணி அல்லது 5 மணி நேரமே நோன்பு வைக்கும் நிலை ஏற்படும். இப்பொழுது சிரமத்தை ஏற்பவர்கள் பிற்காலங்களில் மிக இலகுவாக நோன்பு பிடிப்பர்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

ராஜ நடராஜன் said...

சகோ.சுவனப்பிரியன்!கால நேரம் எவ்வளவு என்பதை விட மனதின் உறுதியே உபவாசத்தின் அடிப்படை என்லாம்.சில கோரிக்கைகளுக்காக உணவு,நீர் அருந்தாமல் தொடர்ந்து உண்ணாவிரதமிருக்கிறார்கள்.உடன் பணிபுரியும் நண்பர் புகைபிடிப்பவர்.ஆனால் உபவாச காலத்தில் புகைபிடிப்பதை உபவாச நேரம் வரை தவிர்க்கிறார்.டெல்லியிலிருந்து தமிழகம் ரயிலில் வரும் போது அனைவரும் உணவருந்தியும் கூட அமைதியாக இருந்து உபவாச காலம் முடிந்து உணவருந்தினார்.இந்தியாவில் பெரும்பாலும் இஸ்லாமிய உபவாசம் இப்படித்தான் கடைப்பிடிக்கப்படுகிறது.எனவே இதுவே சிறந்த உபவாசம் எனலாம்.

ஒரு வேளை உணவுடன் 20 மணி நேர உபவாசம் சாத்தியமே!

இந்த பதிவு சகோ.இக்பால் செல்வனுக்கு எதிர் பதிவா:)

சிராஜ் said...

சலாம் அண்ணன்...

விளக்கமான பதிவு.... இது போன்று வழக்கத்துக்கு மாற்றமான சூரிய உதயம், அஸ்தமனம் இருக்கும் ஊர்களில் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல தெளிவை தரும் பதிவு இது...

எனக்கும் இந்த விஷத்தில் தெளிவை தந்தது உன்கள் பதிவும் சிட்டிசனின் பின்னூட்டமும்....

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

///ஓ......இப்படி ஒரு ஏற்பாடும் உள்ளதா? ///

ஆமாம் சகோ.சுவனப்பரியன்,

ஒருவர் 32 வருஷம் வாழ்ந்து ஒவ்வொரு ரமளானிலும் நோன்பு வைத்தால்... அவர் இரண்டு சீசன்களையும் பார்த்து விடுவார்..!
காரணாம் நோன்பு சந்திர சுற்று காலண்டரில் அமைவதால்..!

நான் அஞ்சு வயசில் நோன்பு வைக்க ஆரம்பிக்கும் போது... கோடை..! அந்த ஆகஸ்ட் மாசம் நோன்பு 14 hrs..! ஒரே ஒரு நோன்புதான் வைத்தேன்..!

பதினாறு வருஷம் கழித்து... ஜனவரியில் சில சிறுவர்கள் 12 hrs க்கே திணறிய போது... சொல்வேன்...

"நாங்கல்லாம்.... ஒங்க வயசிலே அந்த காலத்திலே....14 hrs.. வச்சிருக்கோம் தெரியும்லே..." :-))

ஒருவேளை நோன்பு ஹஜ் எல்லாம்... சூரிய சுற்றில் மட்டும் அமைந்து இருந்திருந்தால்... தீர்வு சொல்வதில், ஏகப்பட்ட குழப்பம் வந்து இருக்கும்..!

இஸ்லாம் ஓர்.... இறை மார்க்கம்...!

அதில் நமது அறியாமையினால் அன்றி, எக்குழப்பமும் வர வாய்ப்பு இல்லை..!

NKS.ஹாஜா மைதீன் said...

சலாம் சகோ....

இந்த தகவல்கள் எனக்கு புதிதாக இருக்கின்றன...ஆனாலும் இறைவன் நன்கறிந்தவன்...

suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!

//ஒரு வேளை உணவுடன் 20 மணி நேர உபவாசம் சாத்தியமே!

இந்த பதிவு சகோ.இக்பால் செல்வனுக்கு எதிர் பதிவா:)//

மனதில் உறுதி இருந்தால் 20 மணி நேர உணவு சராசரி மனிதனுக்கு சாத்தியமே! முடியாதவர்கள் அதற்குரிய பரிகாரங்களை செய்து விட்டால் தீர்ந்தது பிரச்னை.

மற்றபடி தற்போது இக்பால் செல்வன் கம்ப ராமாயண ஆராய்ச்சியில் தற்போது இருக்கிறார். பல குழப்பங்களை அதில் சந்திப்பார். ஆனால் அந்த பதிவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையே!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//விளக்கமான பதிவு.... இது போன்று வழக்கத்துக்கு மாற்றமான சூரிய உதயம், அஸ்தமனம் இருக்கும் ஊர்களில் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல தெளிவை தரும் பதிவு இது...

எனக்கும் இந்த விஷத்தில் தெளிவை தந்தது உன்கள் பதிவும் சிட்டிசனின் பின்னூட்டமும்....//

எனக்கும் இந்த பதிவு எழுதப் போய் பல புதிய சட்டங்கள் தெரிய வந்தது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ ஹாஜா மைதீன்!

//சலாம் சகோ....

இந்த தகவல்கள் எனக்கு புதிதாக இருக்கின்றன...ஆனாலும் இறைவன் நன்கறிந்தவன்...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! இறைவன் நன்கறிந்தவன்.

ராவணன் said...

நோன்பு எதற்கு?

உலகில் முக்கால்வாசி மக்கள் நோன்பு இருப்பதில்லையே?

உங்கள் அல்லா கூறியதாக சிலர் கூறுவதை நம்பும் கூமுட்டைகளை ஒன்றும் செய்யமுடியாது.

பன்னிக்கறி சாப்பிட்டால் சீனர்களைப் போல் உங்கள் இனத்தின் மூளையும் சுறுசுறுப்பாக இருக்கும்.

suvanappiriyan said...

ராவணன்!

//உங்கள் அல்லா கூறியதாக சிலர் கூறுவதை நம்பும் கூமுட்டைகளை ஒன்றும் செய்யமுடியாது.//

இந்த இருபதாம் நூற்றாண்டிலும் கூமுட்டைகளாக இருப்பது யார்? என்பதை இந்த இரண்டு காணொளிகளையும் பார்த்து தெளிவு பெறவும். :-)

http://www.youtube.com/watch?v=9HCg5TSis0M&feature=related

http://www.youtube.com/watch?v=PqkC7afcmxo


Anonymous said...

கோவை: ""இந்தியா பொருளாதாரத்தில், வளர்ச்சி அடைந்த நாடாக இருப்பதை விட, மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடாக இருக்க வேண்டும்'' என, தமிழக திட்ட குழு உறுப்பினர் பாலகுருசாமி பேசினார்.

கோவை, எஸ்.என்.ஆர்., கலை அறிவியல் கல்லூரி வெள்ளி விழா, கல்லூரி அரங்கில் நடந்தது.

இதில், சிறப்பு விருந்தினர் தமிழக திட்ட குழு உறுப்பினர் பாலகுருசாமி பேசியதாவது:
இந்தியா பொருளாதாரத்தில், வளர்ந்து வரும் நாடாக இருக்கலாம். ஆனால், சமூக அடிப்படையில், இன்னும் வளர வில்லை. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு, பொருளாதாரம் மட்டும் போதாது. சமூக வளர்ச்சியும் முக்கியம்.வரும் 2020ல், இந்தியா வல்லரசாகிவிடும் என்பது அப்துல்கலாமின் நம்பிக்கை. ஆனால், அதற்கான சாத்தியம் இல்லை. பல்கலைக்கழகங்கள் உட்பட அரசின் அனைத்து துறையிலும், லஞ்சம் நிறைந்து இருக்கிறது. இங்கு, படித்தவர்கள் செய்யும் குற்றங்கள்தான் அதிகம்.சுதந்திரம் பெற்று, 66 ஆண்டுகள் ஆகியும் ஏழ்மையும், வறுமையும் குறைய வில்லை. ஒரு வேளை உணவுக்குக்கூட உத்திரவாதம் இல்லாத மக்களும், உள்ளனர். இன்றைக்கு, இந்தியாவில் 25 சதவீதம் பேர் குடிசைகளிலும், 15 சதவீதம் பேர் ரோட்டோரங்களிலும் வாழ்கின்றனர். இன்னும் தீண்டாமை ஒழியவில்லை.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில், பதிவு செய்துவிட்டு, வேலைக்கு காத்திருப்போர், 75 லட்சம் பேர். இதில்,மூன்று லட்சம் பேர் இன்ஜீனியர்கள். இந்நிலையில், 2020ல் இந்தியா வல்லரசாகும் என்று சொன்னால், அது எப்படி சாத்தியமாகும்.படித்த இளைஞர்கள், இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். அதற்கான அறிவும், ஆற்றலும் உங்களிடம் உள்ளது. நல்ல மனிதர்களை உருவாக்குவதுதான், கல்வி நிறுவனங்களின் நோக்கம். இவ்வாறு, பாலகுருசாமி பேசினார்.

Anonymous said...

சிக்கல் தான் ! முகம்மதுவுக்கு ஸ்வீடன் பற்றி எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்திருந்தால் எதாவது ஸ்பெசல் வாய்ப்பளித்திருபபார்.

2015-யில் ரமதான் மாதத்தில் பல வடதுருவ பகுதிகளில் 24 மணிநேரம் பகலாக இருக்கப் போகின்றது .. என்னப் பண்ணலாம் சொல்லுங்க ?

அந்த ஒரு ஆண்டு மட்டும் நோன்பு வைப்பதை நிறுத்திவிடலாம் தானே !!!

suvanappiriyan said...

//2015-யில் ரமதான் மாதத்தில் பல வடதுருவ பகுதிகளில் 24 மணிநேரம் பகலாக இருக்கப் போகின்றது .. என்னப் பண்ணலாம் சொல்லுங்க ?

அந்த ஒரு ஆண்டு மட்டும் நோன்பு வைப்பதை நிறுத்திவிடலாம் தானே !!!//

ஹி...ஹி....அதற்குதான் குர்ஆன் அழகிய வழி காட்டுகிறதே! 20 மணி நேரத்துக்கு மேல் நோன்பு பிடிக்க சக்தி உள்ளவர்கள் வைக்கலாம். முடியாதவர்கள் பகல் பொழுது குறைவாக உள்ள ஆண்டுகளில் பிடித்து சரி செய்யலாம். அதுவும் முடியாதவர்கள் ஏழைகளுக்கு உணவளித்து தங்கள் கடமையை முடித்துக் கொள்ளலாம். இவ்வளவு மாற்று ஏற்பாடுகள் இருந்தாலும் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு சிரமப்பட்டாவது நோன்பு வைத்து விடும் பல இளைஞர்கள் இன்றும் ஸ்வீடனில் உள்ளனர். எனவே எந்த வகையிலும் குழப்பம் இல்லை.

எதற்குமே அழகிய வழி காட்டும் குர்ஆன் இதற்கு மட்டும் வழி காட்டாதா என்ன?

Anonymous said...

Kavya says:
August 30, 2012 at 4:45 am

நான் மலர்மன்னனின் கருத்துடன் ஒத்துப்போகவில்லையென்பது மட்டுமன்றி, அக்கருத்து சிந்தனையில் தோய்ந்நதெழா மேற்போக்கான கருத்தாகும் என்றும் சொல்கிறேன். மதங்கள் இருவகையாக அனுஷ்டிக்கப்படும். இதை நான் அடிக்கடி திண்ணையில் விளக்கியிருக்கிறேன். 1. கூட்டமாக 2. தனிமனிதனாக.

இருவகைகளுக்கும் சேர்த்தே மதங்களைத் தோற்றுவித்தோர் மனதில் கொண்டார். முதல் வகையினாலேயே உலகில் கோடானுகோடி பிரச்சினைகள்; கொலைகள்; தீராப்பகைகள். இரண்டாவது வகையினாலே மதம் சிறக்கிறது: நல்லவர்கள்; இறைப்புனிதர்கள் (ஸெயிண்ட்ஸ்) பெயர் தெரியா தனிமனிதர்கள்.

இரண்டாம் வகை மதத்தைச்சார்ந்தவரல்ல மலர்மன்னன். அவர் கூட்டு மதத்தையே பிரச்சாரம் பண்ணி, அதிலிர்ந்து எழும் அரசியலைப் பேணும் கட்டுரைகளையும் பின்னூட்டத்தையும் இங்கு வைக்கிறார். அவர் எழதப்போகும் நூலகளும் கூட்டு மதத்தையே போற்றும். மாறாக தனிமதத்தைப் பேணினால் அவர் ஒரு நல்ல சாமியாராகிவிடுவார். அவர் எழுத்துக்களில் கோபமும் குரோதமும் இரா. ஒருவரைத் தூக்கி இன்னொருவரைத் தாக்கு எழுதும்போக்கு காணாமல் போகும்.

இப்போது அவர் இங்கிட்ட கருத்துக்கு வருவோம். மதவழிக்கல்வி கிடைக்கப்பெற்றால், மனிதர்கள் அல்லது சமூகம் ஒட்டு மொத்தமாக மாறிவிடும் எனபது முற்றிலும் தவறு என்பதை நம் அன்றாடம் காணும் வாழ்க்கை காட்டுகிறது. கோயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. அறுபத்துமூவர் திருவிழாவுக்கு சாலையே அடைக்கப்படுகிறது. கருமாரி அம்மன் கோயிலில் புத்தாண்டுக்கு உள்ளுழையவே முடியாது. வடபழனியிலும் அதே. வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்தில் சீட் கிடைக்காது. அங்கு தங்கவும் இடம் கிடைக்காது. தெற்குமாசிவீதி தர்கா விழாவுக்கு நான்கு தெருக்கள் அடைக்கப்படும். முசுலீம்களைவிட இந்துக்கள் கூட்டம் அடைத்துவிடுமாதலால்.

ஆனால், சிறைகளில் குற்றவாளிகள் எண்ணிக்கை எப்போதுமே அதிகம். அவர்கள் இம்மூன்று மதங்களிலிருந்தும் வருகிறார்கள். திருடன் பிள்ளையாருக்கும் காணிக்கை போடுகிறான். கொள்ளைலாபம் சம்பாதித்த பணக்காரன் திருப்பதியில் போய் கொட்டி புண்ணியத்தை விலைக்கு வாங்கப்பார்க்கிறான். கொலையும் கொள்ளையும் ஏமாற்றுக்களுக்கும் எத்தி எத்தி வாழ்தலும் மதக்கலவரங்களையும் சாதிக்கலவரங்களையும் உருவாக்கி உயிர்க்கொலைகள் புரிதல்களும் இந்த ஆத்திர்கர்களால் கனஜோராக நடாத்தப்பட்டு வருகின்றன. நாத்திர்கள் எண்ணிக்கை சொற்பம். பூந்தமல்லி ஜெயிலில் எத்தனை கைதிகள் நாத்திகர்கள் என்று கணக்கெடுத்தால் தெரியும். உட‌னே அவ‌ர்க‌ளெல்லாம் போலி ஆத்திக‌ர்க‌ள் என்று வாதிட்டால், அப்போது உண்மை ஆத்திக‌ர்க‌ள் என்று ஒருவ‌ன் கூட‌ தேறுவ‌து அபூர்வ‌மே.

ஆக‌ விவேகான‌ந்த‌ர் சொன்ன‌தைக் குழ‌ந்தைக‌ளுக்குச் சொல்லிக்கொடுத்தால், விஜ‌ய்யையோ, அஜித்தையையோ ‘கடவுள் அவ‌தார‌ம்’ என்று பெரிய‌வ‌னான‌தும் த‌ட்டி போர்டு வைத்து, முத‌ற்காட்சியில் குடித்துவ‌ந்து கும்மாள‌ம் போட‌மாட்டான் என்று சொல்வ‌து அப‌த்த‌மான‌ க‌ற்ப‌னை. ம‌த‌த்தால் ம‌னித‌னை மாற்ற‌முடியும் என்ப‌து இன்று நிறைவேறாம‌ற்போன‌ ஒரு முய‌ற்சி. ஆசைப்ப‌டுவ‌தில் த‌வ‌றில்லை. என‌வே ம‌த‌த்தை நிறுவியோர் ஆசைப்ப‌ட்டு ந‌ம்மிட‌மே விட்டுவிட்டார். ந‌ம்மை நிர்ப‌ந்திக்க‌முடியாது. கேட்ப‌வ‌ர் கேட்க‌ட்டும். பார்ப்ப‌வ‌ர் பார்க்க‌ட்டுமென்று விட்டார். Those who have ears to hear, let them hear; those who have eyest to see, let them see.

இந்த‌ ஏசுவைப்போல‌, ம‌ஹ‌ம‌து ந‌பியைப்போல‌, புத்த‌ரைப்போல‌, அல்ல‌து இந்துக்க‌ட‌வுளைப்போல‌, நாம் விட்டுவிட்டு வேடிக்கைப்பார்க்க‌ முடியாது. என‌வெ ச‌ட்ட‌ம் போட்டு உள்ளே த‌ள்ளுகிறோம். ச‌ட்ட‌த்தால் ம‌ட்டுமே கலாச்சார‌ சீர‌ழிவுக‌ளைத் தாற்காலிக‌மாக‌ த‌டுக்க‌முடியும். உருவாவ‌தையையோ, நில‌கொள்வ‌தையோ ந‌ம்மாலும் த‌டுக்க‌முடியாது. மேற்சொன்ன‌ ம‌த‌ஸ்தாப‌ர்க‌ளாலும் முடியாது. விவேகான‌ந்த‌ரால் முடியுமா ம‌ல‌ர்ம‌ன்ன‌ன்?

அஜீம்பாஷா said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
அருமையான தகவல்கள் தந்தமைக்கு நன்றி. gulf newsல் ரமதான் தொடங்குவதற்கு முன்பு அரபு நாடுகளில் இந்த வருடம் 15 மணி நேரம் நோன்பு பிடிக்க வேண்டும் என்ற போது இதுதான் நீண்ட நோன்பு என்று நினைத்தேன், ஆனால் இன்று உங்கள் பதிவை படித்த பிறகுதான் swedenல் 20 மணி நேரம் நோன்பு என்று தெரிந்து கொண்டேன். எல்லாம் வல்ல இறைவன் எல்லார்க்கும் நன்மையை தருவானாக. ஆமின்

suvanappiriyan said...

சலாம் சகோ அஜீம் பாஸா!

//அருமையான தகவல்கள் தந்தமைக்கு நன்றி. gulf newsல் ரமதான் தொடங்குவதற்கு முன்பு அரபு நாடுகளில் இந்த வருடம் 15 மணி நேரம் நோன்பு பிடிக்க வேண்டும் என்ற போது இதுதான் நீண்ட நோன்பு என்று நினைத்தேன், ஆனால் இன்று உங்கள் பதிவை படித்த பிறகுதான் swedenல் 20 மணி நேரம் நோன்பு என்று தெரிந்து கொண்டேன். எல்லாம் வல்ல இறைவன் எல்லார்க்கும் நன்மையை தருவானாக. ஆமின் //

மனதில் உறுதி இருந்தால் 20 மணி என்ன? 24 மணி நேரம் கூட நம்மால் நோன்பிருக்க முடியும். காலை நேரங்களில் சிலர் மறதியாக தூங்கி விடுவதுண்டு. அவ்வாறு காலையில் எழுந்திருப்பவர் எதுவும் சாப்பிடாமலேயே சாதாரணமாக நோன்பு வைப்பதை பார்த்திருப்போம். இதற்கு விடி சஹர் என்று பேச்சு வாக்கில் சொல்வோம். இதன்படி பார்த்தால் விடி சஹர் வைக்கும் பலர் 20 மணி நேரம் நம் தமிழ் நாட்டிலேயே நோன்பு வைப்பவர்களைப் பார்த்துள்ளோம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

k.rahman said...

//சிரமம ஒன்றும் இல்லை என்போர்... இவ்வருடம் 20 மணிநேரம் நோன்பு வைக்கிறார்கள் எனில்... இன்ஷாஅல்லாஹ் சுமார் 16 வருஷம் கழித்து 4 மணி நேரம் மட்டுமே இவர்கள் நோன்பு வைப்பார்கள்..!//

அது எப்படி முடியும்? அதாவது இரவுகளே அதிகமாக இருக்கும் என்று சொல்கிறீர்களா? சற்று விளக்க முடியுமா?

ஹுஸைனம்மா said...

//இஸ்லாமிய வருடம் என்பது சந்திரனை அடிப்படையாகக் கொண்டது என்பதால், காலநிலை ஒவ்வொரு மாதத்திற்கும் வருடாவருடம் வேறுபடும். அதாவது சூரியனை அடிப்படையாக கொண்ட ஆங்கில வருடத்தில் டிஸம்பர் என்றால் எல்லா வருடமும் (இந்தியா, வளைகுடா நாடுகளில்) குளிர்தான். ஆனால், சந்திர வருடத்தில் அப்படியல்ல. சுழற்சி முறையில் எல்லா மாதங்களுமே வெயில், பனி, குளிர் என்று எல்லா காலநிலைகளிலும் வரும். ..... அதாவது சராசரியாக 33 வருடங்கள் தொடர்ந்து நோன்பு வைக்கும் ஒருவர், கடுங்குளிரிலும் நோன்பு வைத்திருப்பார்; சுடும் வெயிலிலும் நோற்றிருப்பார்!!//

இது என் பதிவொன்றில் நான் எழுதியது#வெளம்பரம்!! :-)))))

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ! இந்த வருடம் நாங்களும் (ஃபிரான்ஸில்) 19 மணி நேரத்துக்கு மேல் நோன்பு வைத்தோம். அல்ஹம்துலில்லாஹ், எந்த கஷ்டமும் இல்லை. 5 வயது குழந்தைகள் உட்பட 'நோன்பு வைத்தே தீருவேன்' என அடம்பிடித்து வைத்தார்கள் :) அடுத்த வருஷம் 20 மணி நேரம் அல்லது 5, 10 நிமிடங்கள் கூடுதலாகவே வைக்கும்படி இருக்கும், இன்ஷா அல்லாஹ்!

நாங்கள் இங்கு வந்த புதிதில் 10 மணி நேரம் மட்டுமே நோன்பு. ஸஹர் செய்துவிட்டு ரெஸ்ட் நேரங்கள் போக வெறும் 5, 6 மணி நேரங்களே நோன்பு வைத்த மாதிரி இருக்கும் :) பகல் கம்மியாக இருந்ததால் சீக்கிரமே நோன்பு திறக்கும் நேரம் வந்துவிடும்.

கோவி.கண்ணன் said...

சோமாலியா இஸ்லாமிய பெரும்பான்மை நாடு, அதில் 20 - 30 நாள்கள் கூட ஆண்டு முழுவதும் சிறியவர் பெரியவர் சிறு குழந்தைகள் கூட நோன்பு இருக்காங்களே.

http://www.saatchi-gallery.co.uk/imgs/artists/lamsfub_ulrich/ulrich_lamsfub_somalia1.jpg

அடுத்த வேளை பசிக்கு உணவு இருப்பது உறுதி என்றால் யார் வேண்டுமானாலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நோம்பு இருக்கலாம்.

அண்டார்டிக்கா மற்றும் வடதுருவத்தில் மசூதிகள் இல்லையா ? அங்கெல்லாம் ஆண்டுக்கு ஆறுமாசம் பகல் :)

suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//சோமாலியா இஸ்லாமிய பெரும்பான்மை நாடு, அதில் 20 - 30 நாள்கள் கூட ஆண்டு முழுவதும் சிறியவர் பெரியவர் சிறு குழந்தைகள் கூட நோன்பு இருக்காங்களே.//

//அடுத்த வேளை பசிக்கு உணவு இருப்பது உறுதி என்றால் யார் வேண்டுமானாலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நோம்பு இருக்கலாம்.//

'உங்கள் செல்வங்களிலும் உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும், இணை கற்பித்தோரிடமிருந்தும் சங்கடம் தரும் சொற்களைச் செவியுறுவீர்கள்.நீங்கள் சகித்துக் கொண்டு இறைவனை அஞ்சினால் இது உறுதி மிக்க காரியங்களில் அடங்கும்'
குர்ஆன் 3:186

வறுமை என்பது மனிதர்களை சோதிப்பதற்காக இறைவன் தருவது. மறுமையில் அவர்களுக்கு அனைத்து சுகங்களும் தரப்படும். அதுதானே நிரந்தர உலகம்.

சகோ அஸ்மாவின் பின்னூட்டத்தை பாருங்கள். 20 மணி நேரம் நோன்பு எந்த களைப்பும் ஏற்படுவதில்லையாம். சிறு குழந்தைகள் கூட ஆர்வமிகுதியில் வைக்கிறார்கள். இந்த சுகங்களை எல்லாம் அனுபவித்துப் பார்த்தாலே விளங்கும்.

//அண்டார்டிக்கா மற்றும் வடதுருவத்தில் மசூதிகள் இல்லையா ? அங்கெல்லாம் ஆண்டுக்கு ஆறுமாசம் பகல் :)//

அங்கு முஸ்லிம்கள் உருவாகும் பட்சத்தில் அதற்கான சட்டங்களை குர்ஆனிலிருந்தே அறிஞர்களால் எடுக்க முடியும். ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழ வேண்டும் என்ற கட்டளைப்படி அவர்கள் நேரங்களை அந்நாட்டு சீதோஷ்ண நிலைக்கு தக்கவாறு மாற்றிக் கொள்வார்கள்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ அஸ்மா!

உங்களின் பதிவுகளை தற்போது அதிகம் காண முடிவதில்லையே!

//இந்த வருடம் நாங்களும் (ஃபிரான்ஸில்) 19 மணி நேரத்துக்கு மேல் நோன்பு வைத்தோம். அல்ஹம்துலில்லாஹ், எந்த கஷ்டமும் இல்லை. 5 வயது குழந்தைகள் உட்பட 'நோன்பு வைத்தே தீருவேன்' என அடம்பிடித்து வைத்தார்கள் :) அடுத்த வருஷம் 20 மணி நேரம் அல்லது 5, 10 நிமிடங்கள் கூடுதலாகவே வைக்கும்படி இருக்கும், இன்ஷா அல்லாஹ்!//

குழந்தைகள் கூட நோன்பு வைத்தது அறிந்து மகிழ்ச்சி. வரும்காலங்களிலும் எந்த சிரமும் இன்றி இறை கட்டளையை பூர்த்தி செய்ய இறைவன் தகுந்த உடல் ஆரோக்கியத்தை தந்தருள்வானாக!

suvanappiriyan said...

சகோ ஹூசைனம்மா!

//இது என் பதிவொன்றில் நான் எழுதியது#வெளம்பரம்!! :-)))))//

உங்களின் இந்த பின்னூட்டம் சகோ ரஹ்மானுக்கு விளக்கமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ ரஹ்மான்!

//அது எப்படி முடியும்? அதாவது இரவுகளே அதிகமாக இருக்கும் என்று சொல்கிறீர்களா? சற்று விளக்க முடியுமா?//

உங்கள் கேள்விக்கு விடை நான் கொடுத்த மேப்பிலும், சகோ ஹூசைனம்மாவின் பின்னூட்டத்திலும் இருக்கிறது என்று நினைக்கிறேன். பார்த்து தெளிவு பெறுங்கள்.

Anonymous said...

"..வறுமை என்பது மனிதர்களை சோதிப்பதற்காக இறைவன் தருவது. மறுமையில் அவர்களுக்கு அனைத்து சுகங்களும் தரப்படும்...'

அப்போ ஏன் சாத்தான் நாடு அமெரிக்காவிடம் காசுக்கும், உணவுக்கும் கையேந்த வேண்டும்? வறுமைக்குடும்பத்துக்கு அடுத்த பிறப்பில் எல்லாம் ஓ.கே ஆகிவிடும் எனச் சொல்ல வேண்டியது தானே?
முஸ்லிம் நாடுகள் தமது பணத்தை அமெரிக்காவில் முதலீடு செய்து லாபத்துக்கு மேல் லாபம் எடுக்க நம்மட முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவிடம் தானியத்துக்கு கையேந்த வேண்டி இருக்கு. கேட்டால் அடுத்த பிறவியில் ஓ.கே ஆகிடுமாம்!

Nizam said...

கோவி.கண்ணன் said...

//அண்டார்டிக்கா மற்றும் வடதுருவத்தில் மசூதிகள் இல்லையா ? அங்கெல்லாம் ஆண்டுக்கு ஆறுமாசம் பகல் :)//

சகோ. சூரியனை வைத்து கனிக்க முடியாவில்லை எனில் சந்திரனை வைத்து கனித்து நோன்பின் நாட்களை கடைபிடிப்போம். ஒரு வேலை ஆறுமாத இரவாக இருக்கு மெனில் சூரியனை வைத்து கனித்து நோன்பின் நாட்களை கடைபிடிப்போம்.

Peer Mohamed said...

சலாம் ,
இந்த வருடம் இங்கே (அமெரிக்கா) கூட கோடைக் காலம் என்பதால் பகல் நேரம் அதிகம். காலை 4 .20 க்கு தொடங்கி இரவு 8 .30 வரை கூட சில நாட்கள் நோன்பு நோற்றோம். முதல் இரண்டு நாட்கள் சென்ற பிறகு எந்த சிரமமும் தெரியவில்லை...அல்ஹம்துலில்லாஹ்..

கோவி அண்ணன் வட துருவப் பகுதிகள் பற்றி கேட்டார் அல்லவா. அங்கும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள் .பள்ளிவாசல்களும் இருக்கிறது. சூரியனையும் சந்திரனையும் கணக்கிட்டு தொழுகை மற்றும் பிற இபாதத்களை அமைத்துக்கொள்கிறார்கள்.

Anonymous said...

"...அங்கு முஸ்லிம்கள் உருவாகும் பட்சத்தில் அதற்கான சட்டங்களை குர்ஆனிலிருந்தே அறிஞர்களால் எடுக்க முடியும். "

ஆம் முஸ்லிம்கள் ‘உருவாகுர்கள்”
அமெரிக்காக்காரன் (உலக சைத்தான்) அந்த குளிர் ஊர்களுக்குச் சென்று உயிரைவிட்டு உழைத்து மனிதன் வாழ ஏற்ற வசதிகளைச் செய்வான். பின்னர் தனது உறவினர்களை அழைத்துக்கொள்வான். அங்கு சில கடைகளை கட்டுவான். அதில் வேலை செய்ய ஆட்களை அழைப்பான். ஆட்களை சரச்செய்வதற்கு கிழமைக்கு $1000 சம்பளம் கொடுப்பான். அப்போ எகிப்து, சிரியா, ஈரான், ஈராக், சொமாலியா, சூடான் போன்ற நாடுகளைத் தாயகமாய் கொண்டோர் அங்கே போவார்கள். சிறிது நாட்கலைல் சொந்தமாக கடை வைப்பார்கள். வெள்ளைக்காரனுக்கு இஸ்லாமில் எவையெல்லாம் ‘விலக்கப்பட்டதோ’ அவற்றை மற்றவர்களுக்கு விற்பனை செய்வார்கள். பன்றி இறைச்சி சாண்ட்விச், பியர், விஸ்கி, பாலியல் டி.வி.டி....
பின்னர் ஒரு மசூதி கட்டிக்கொள்ளலாம் என அனுமதி கேட்பார்கள். மத சுதந்திரம் உள்ளதால் அனுமதி கிடைக்கும். ...அப்படியாக இஸ்லாம் ‘உருவாகும்’!!!!!