Followers

Tuesday, January 29, 2013

குவைத்தில் கேரளா இளைஞர் மன்னிப்பின் பேரில் விடுதலை!


குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கேரளா இளைஞர் மன்னிப்பின் பேரில் விடுதலை!

குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இந்தியாவின் கேரளா மாநில இளைஞர் ஒருவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில் அவர் நாடு திரும்பியுள்ளார்.

சவூதி அரேபியாவில் அண்மையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் மேற்படி கேரளா இளைஞருக்கு குவைத் சட்டம் மன்னிப்பு வழங்கியுள்ளது.

குவைத்தில் மரணதருவாயிலிருந்த 32 வயதான சசி என்பவரே இவ்வாறு மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குவைத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த சசி, தன்னோடு பணிபுரிந்த சுரேஷ் என்பவரை கத்தியால் குத்திவிட அவர் மரணமாகியுள்ளார். இந்நிலையில், கொலைக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சசிக்கு குவைத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.

கிரிக்கெட் போட்டியொன்று தொடர்பான சர்ச்சையில் ஏற்பட்ட கைகலப்பே இந்த மரணத்தை ஏற்படுத்தியதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்தது. இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்ற போது சசிக்கு 26 வயதாகும்.

கிரிக்கெட்டில் தனது அறிவை பறி கொடுத்துக கொண்டிருக்கும் இந்த அறிவிலிகள் விளையாட்டை ஏன் இந்த அளவு சீரியஸாக எடுத்துக் கொள்கிறார்களோ தெரியவில்லை.

இந்நிலையில், சசிக்கு மரண தண்டனை விதித்த குவைத் நீதிமன்றம், மரணமானவரின் மனைவி மன்னிப்பு வழங்கினால் மட்டுமே சசியை மரண தண்டனையிலிருந்து விடுவிக்க முடியும் என்றும் குறிப்பிட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் தெரியவந்ததை அடுத்து கேரளாவின் எதிர்க்கட்சியிலிருந்த உம்மன் சாண்டி, சசியைக் காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டார்.

குவைத்திலிருந்த தனது நண்பர்களைத் தொடர்புகொண்ட உம்மன் சாண்டி, அவர்கள் மூலம் 10 இலட்சம் ரூபா நிதியைத் திரட்டினார். அத்துடன், ஆந்திர மாநில முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியும் 5 இலட்சம் ரூபாவினை வழங்கினார்.

இவ்வாறு திரட்டப்பட்ட நிதி, சம்பவத்தின் போது உயிரிழந்த சுரேஷின் மனைவியிடம் கையளிக்கப்பட்ட நிலையில், சசிக்கு மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், சசி மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இருப்பினும் அவருக்கான சிறைத்தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டியிருந்தது.

அந்த சிறைத்தண்டனை முடிந்த நிலையில் அவர் இம்மாதம் விடுதலையானார். நாடு திரும்பிய அவர் ஆலப்புளாவில் உள்ள தனது குடும்பத்தினருடன் இணைந்துகொண்டார்.

அத்துடன், தனது விடுதலைக்காகப் போராடிய கேரளாவின் அப்போதைய எதிர்க்கட்சி உறுப்பினரும் தற்போதைய கேரள முதலமைச்சருமான உம்மன் சாண்டியையும் அவர் கடந்த புதன்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

நன்றி கூறுவதற்காக சசி, தனது வீட்டுக்கு வருகை தந்துள்ளார் என்று கேள்வியுற்றதும் முதலமைச்சர் , தனது கூட்டத்தையும் விரைவில் முடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அவமுதலமைச்சரைக் கண்டதும் ஓடிப்போய் அவரை ஆரத்தழுவிக்கொண்ட சசி கண்ணீர் விட்டு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். ‘உங்களது முயற்சியினால்தான் நான் இன்று உயிரோடு உள்ளேன்’ என்றும் கூறி முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார் சசி.

ஒரு சிறந்த முதலமைச்சருக்குரிய எளிமையும் பண்பும் அடக்கமும் ஒன்றாக அமைந்தவராக உம்மண் சாண்டி நமக்கு காட்சியளிக்கிறார். ம்...ம்...நாம் பெரு மூச்சு விட்டுக் கொள்ள வேண்டியதுதான் :-)

தகவல் உதவி: நல்ல நண்பன்

http://www.indiansinkuwait.com/ShowArticle.aspx?ID=21849&SECTION=0

முன்பு ரிசானா இஸ்லாமியராக இருந்தும் பாதிககப்பட்ட குடும்பத்தினர் மன்னிக்காததால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டார். சசி இஸ்லாமிய மதத்தை சேராதவராக இருந்தாலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் இறந்தவரின் மனைவி மன்னித்ததால் இன்று மரண தண்டனையிலிருந்து விடுதலையாகி உள்ளதை பார்க்கிறோம். எந்த ஒரு சம்பவத்திலுமே நஷ்டமடைந்தவரின் குடும்பத்தவரின் மன்னிப்பைத்தான் இஸ்லாம் முக்கியமாக பார்க்கிறது. ஏனெனில் அவர்களுக்குத்தான் அந்த இழப்பின் உண்மையான வலி தெரியும். நமது நாட்டில் ஐந்து வருடம் ரப்பர் ஸ்டாம்பாக தனது கடமையை கழிக்கும் ஜனாதிபதிக்கு மரண தண்டனையை நீக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டது சரிதானா என்பதை இங்கு சிந்திக்க கடமை பட்டுள்ளோம்.

-----------------------------------------------------------------

இது ஒரு புறம் இருக்க டெல்லியில் பாலியல் பலாத்காரத்தால் கொல்லப்பட்ட அந்த மருத்துவக் கல்லுரி மாணவியின் தந்தை இன்று பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியைப் பார்ப்போம்.

டில்லியில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட, மருத்துவ மாணவியின் தந்தை கூறியதாவது:என் மகளை, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தவர்களில் ஒருவன், மைனர் என, சிறார் நீதி வாரியம் அறிவித்துள்ளது. இதனால், குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டு மட்டுமே, அவனுக்கு தண்டனை கிடைக்கும்.கோர்ட்டின் இந்த அறிவிப்பு, துரதிருஷ்டவசமானது. அந்த நபர், வயதில் சிறுவனாக இருந்தாலும், மிக கொடிய குற்றத்தை செய்துள் ளான். வயதை அடிப்படையாக வைத்து, அவனுக்கு கருணை காட்டக் கூடாது. அதிகபட்ச தண்டனையாக, அவனுக்கு, தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.

தூக்கு தண்டனைக்கு குறைந்து, அவனுக்கு, வேறு எந்த தண்டனை கொடுத்தாலும், அதை எதிர்ப்போம். இந்த வழக்கில் தொடர்புடைய, மற்ற குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படுகிறதோ, அதே தண்டனையைத் தான், இவனுக்கும் கொடுக்க வேண்டும்.சிறார் நீதி வாரிய உத்தரவை எதிர்த்து, விரைவில், மேல் முறையீடு செய்யவுள்ளோம். இதற்காக, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம். சிறார் வயது வரம்பை குறைக்க, சட்ட திருத்தம் செய்ய வேண்டும். இதற்கு மத்திய அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளிச் சான்றிதழில் குறிப்பிட்ட பிறந்த தேதியின் அடிப்படையில், அவனை, மைனராக, சிறார் கோர்ட் அறிவித்துள்ளது. பள்ளிச் சான்றிதழில், மோசடி செய்ய, வாய்ப்புள்ளது அல்லவா?இவ்வாறு அவர் கூறினார்.

18 வயதானவன்தான் மேஜரானவன் என்று முடிவு செய்தது யார்? மகளை இழந்த இந்த தந்தையின் கேள்விக்கு யாரால் பதில் சொல்ல முடியும்?

இஸ்லாமிய சட்டத்தின்படி குழந்தை பெறும் பக்குவத்தை ஒரு ஆணோ பெண்ணோ அடைந்து விட்டால் அவர்கள் மேஜருக்கான தகுதி வந்து விடுவதாக இஸ்லாம் கூறுகிறது. எனவே தான் 10 வயது தாண்டி விட்டால் உங்கள் குழந்தைகளின் படுக்கையை உங்களிடமிருந்து அப்புறப் படுத்துங்கள் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. ஆனால் நமது நாடோ 18 வயதானவன்தான் மேஜரானவன் என்ற சட்டத்தை எழுதி வைத்துக் கொண்டு இந்த தந்தையின் கேள்விக்கு பதில் தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்கிறது. மனிதர்கள் இயற்றிய சட்டங்களில் எங்கெல்லாம் குளறுபடிகள் வருகின்றது என்பதற்கு இந்த வழக்கும் ஒரு சிறந்த உதாரணம்.

----------------------------------------------------------கமலின் சமீபத்திய பேட்டி....


21 comments:

viyasan said...

///இவ்வாறு திரட்டப்பட்ட நிதி, சம்பவத்தின் போது உயிரிழந்த சுரேஷின் மனைவியிடம் கையளிக்கப்பட்ட நிலையில், சசிக்கு மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ///
அப்ப‌டியானால் இஸ்லாத்தின் சாரியா ச‌ட்ட‌த்தின்ப‌டி ப‌ண‌முள்ள‌வ‌ன் எந்த‌க் கொலையையும் செய்துவிட்டுப் பண‌த்தைக் கொடுத்துத் த‌ப்பிக் கொள்ள‌லாம். ப‌ண‌மென்றால் பிண‌மும் வாய்திற‌க்கும் என்பார்க‌ள். ம‌னைவியும், குடும்ப‌மும் ம‌ட்டும் என்ன‌ விதி விலக்கா? இதை விட‌ குற்றம் செய்த‌வ‌ர்க‌ள், அதுவும் ச‌வூதி அரேபியாவில் போன்று மொழிபெய‌ர்ப்பாள‌ர் கூட‌ இல்லாம‌ல் தீர்ப்பு வ‌ழ‌ங்கி க‌ழுத்தை வெட்டும் காட்டுமிராண்டித்த‌ன‌த்தை விட‌, ப‌க்க‌ச்சார்பில்லாம‌ல் வ‌ழ‌க்கை ந‌ட‌த்தி, ஒருவ‌ன் கோடீஸ்வ‌ர‌னாக‌ இருந்தால் கூட‌ ச‌ட்ட‌த்தின் முன்னால் யாவ‌ரையும் ச‌ம‌மாக‌ ந‌ட‌த்தி, செய்த‌ குற்ற‌த்துக்குத் த‌ண்ட‌னை அனுப‌விக்க‌ச் செய்யும் மேலைநாட்டுச் ச‌ட்ட‌ங்க‌ள் எவ்வ‌ள‌வோ மேல். பாலைவ‌ன‌த்தில் நாடோடிக‌ளாக‌ வாழ்ந்த‌ அரேபிய‌ர்க‌ளின் குடும்பங்க‌ளில் யாராவ‌து கொல்ல‌ப்ப‌ட்டால், அவ‌ன‌து உழைப்பை, ஈடுசெய்ய‌ ந‌ட்ட‌ஈடு கொடுத்து அந்த‌க் குடும்ப‌த்துக்கு உத‌வுவ‌த‌ற்காக‌ ந‌டைமுறைப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ இப்ப‌டியான‌ அரேபிய‌க் நாடோடிக‌ளின் க‌லாச்சார‌ வ‌ழ‌க்கு முறைக‌ளை எதற்காக‌ உல‌கில் ப‌ழ‌மையான‌, நாக‌ரீகம‌டைந்த‌ இன‌ங்க‌ளிலொன்றாகிய‌ த‌மிழின‌த்தில் பிற‌ந்து இஸ்லாமிய‌ர்க‌ளாக‌ மாறிய‌ த‌மிழ் முஸ்லீம்க‌ள் க‌டைப்பிடிக்க‌ வேண்டும் அல்ல‌து எத‌ற்காக‌ அதை நியாய‌ப்ப‌டுத்த‌ முனைகிறார்க‌ள் என்ப‌து தான் புரியாத‌ புதிராக‌ இருக்கிற‌து.

Seeni said...

mmm..

nalla pakirvu..!

Anonymous said...

Good post

நாகூர் மீரான் said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்

அருமையா சொன்னீங்க சகோ.!,அவன் இன்னும் மூன்று மாதத்தில் சிறார் சீர்திருத்த பள்ளியில் இருந்து வெளி வந்துவிடுவானாம்.இது கேள்விப்பட்டு மற்ற யூத்ஸ் எல்லாம் என்ன நினைப்பாங்க..? நமக்கு இன்னும் இவ்வளவு காலம் தான் இருக்கு (18 வயசு முடிய )..நாம என்ன தப்பு செஞ்சாலும் யாராலும் ஒன்னும் பண்ண முடியாது.அதனால அனுபவிக்க வேண்டியது எல்லாம் சீக்கிரம் அனுபவிப்போம்..!

" hurry up, hurry up "

இவர்கள் குற்றத்தை தடுக்கிறார்களா.? உற்சாக பானமூட்டுகிறார்களா..?

UNMAIKAL said...

PART 1. சிறுவனுக்கு தண்டனை வழங்கலாமா?

இதுதான் தற்போது நமது நாட்டில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ள பரபரப்பான செய்தி. ஆம்!

டெல்லியில் ஓடும் பேருந்தில் வைத்து மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஈடுபட்ட 6 காமக்கொடூரர்கள் குறித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டிய காவல்துறை 5 பேர் மீது மட்டும்தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

6வது நபராக உள்ள குற்றவாளிக்கு 17வயதுதான் ஆகியுள்ளது என்பதால் அவன் சிறுவன் என்ற அந்தஸ்தில் இருப்பதாகவும்,

சிறுவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சட்டத்தில் இடமில்லை என்றும், அவனை சிறைக்கு அனுப்புவதற்கும் சட்டத்தில் இடமில்லை என்றும்,

வாயில் விரல் வைத்தால் கூட கடிக்கத் தெரியாத அந்த பச்சிளம் குழந்தையை(?) சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு படிக்க அனுப்ப வேண்டும் என்றும் சட்டம் இருப்பதால்,

அவனை பாலர் பள்ளிக்குத்தான் அனுப்ப வேண்டும் என்றும் சட்டம் பேசி வருகின்றனர்.

அந்த பச்சிளம் குழந்தைக்கு(?) தண்டனை வழங்கலாமா? கூடாதா? என்ற கேள்விதான் தற்போது நமது நாட்டில் முக்கியமான விவாதமாக நடந்து வருகின்றது.

கற்பழித்து காமக் கொடூரச்செயல் செய்த சிறுவன்(?) 5மாதத்தில் விடுதலையாம்:

டெல்லியில் ஓடும் பஸ்சில் பிசியோதெரப்பி மாணவியை மிகக் கொடூரமாக தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் 17வயது நிரம்பிய சிறுவன்(?) என்று சொல்லப்படக்கூடியவன்தான் மாணவியை மிகவும் மோசமாக தாக்கியவன் மற்றும் இரண்டு முறை பலாத்காரம் செய்தவன் என்றும் போலீஸார் கூறுகிறார்கள்.

இவனால்தான் அப்பெண் படுகாயமடைந்தார், பின்னர் உயிரிழந்தார்.

ஆனால் இவனுக்கு 17 வயதுதான் ஆகிறது என்பதால் இவனை மற்ற கோர்ட்டுகளில் விசாரிப்பது போல விசாரிக்க முடியாது.

மாறாக, சிறார் நீதிமன்றத்தில்தான் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த முடியும்.

மேலும் இவனை சிறையிலும் அடைக்க முடியாது.

சிறார் சீர்திருத்தப் பள்ளியில்தான் சேர்க்க முடியும்.

மேலும், இந்த சிறுவன் பெரும் தண்டனையிலிருந்து எளிதாக தப்பி விடும் அளவுக்கு சட்டம் இவனுக்குச் சாதகமாக உள்ளது

குற்றம் இழைத்தபோது இந்த சிறுவனுக்கு வயது 17 என்பதால் இவனுக்கு கடும் தண்டனை கிடைக்காது.

இந்த குற்றச்சாட்டு உண்மையாகுமேயானால் அதிகபட்சம் 3 வருடம்தான் அவனுக்கு தண்டனை கிடைக்கும்.

3 வருட தண்டனையைக் கூட இவன் சிறையில் கழிக்க முடியாது.

மாறாக சிறார் சீர்திருத்தப் பள்ளியில்தான் சேர்ப்பார்கள். அங்கு தண்டனை கிடையாது, மாறாக போதனைதான் தருவார்கள். - இவனுக்கு 18 வயதாக இன்னும் சில மாதங்களே உள்ளன.

இவனுக்கு இன்னும் 5 மாதத்தில் 18 வயது பூர்த்தியாகிவிடும்.
18 வயதை எட்டி விட்டால் யாரையும் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் வைக்க முடியாது.

விடுவித்து விட வேண்டும். –

அப்படி விடுவிக்கப்பட்ட பின்னர் இவனை சிறைக்கு மாற்றலாமா என்றால் அதுவும் முடியாது.

காரணம், சிறார் குற்ற சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவரை வழக்கமான சிறைக்கு மாற்ற முடியாது, மாற்றக் கூடாது.

அது சட்டவிரோதமாகும்.


பாலியல் பலாத்காரத்திலும், கடும் தாக்குதலிலும் ஈடுபட்டு மாணவியின் உயிர் போகக் காரணமான இந்த சிறுவன்(?) தற்போது பெரிய அளவிலான தண்டனை எதிலும் சிக்காமல் தப்பி விடும் வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்

முட்டிய பின்பு குனியும் அவலம்

பாலியல் வன்கொடுமை புரிந்ததில் முதல் ஆளாக தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கொடூரனுக்கு 5 மாதங்களில் விடுதலையளிக்கக்கூடிய அளவிற்கு சட்டத்தில் ஓட்டை இருப்பதை நினைத்து தற்போது அனைத்து தரப்பு மக்களும், அதிகாரிகளும் கைகளைப் பிசைந்து கொண்டு நிற்கின்றனர்.மேற்கண்ட அவல நிலைக்கு காரணம் 18வயது யாருக்கு பூர்த்தியாகின்றதோ அவர்கள்தான் பெரியவர்கள் என்றும், 18 வயது பூர்த்தியாகதவர்கள் அனைவரும் குழந்தைகள் என்றும் நமது நாட்டில் அற்புதமான(?) சட்டத்தை இயற்றி வைத்துள்ளனர்.

CONTINUED …..

UNMAIKAL said...

PART 2. சிறுவனுக்கு தண்டனை வழங்கலாமா?

இஸ்லாம் கூறும் தீர்வு தான் இறுதியான தீர்வு


ஒரு பெண்ணை கொடூரமானமுறையில் கற்பழித்து நாசக்கேடாக்கி, கொலை செய்த ஒருவன் சிறுவனா அல்லது பெரியவனா என்று இவர்கள் ஆய்வு செய்து கொண்டுள்ளார்களாம்.

அவன் சிறுவன்தானா என்பதை உறுதி செய்ய அவனுக்கு எலும்பு சோதனை செய்யப் போகின்றார்களாம்.

சோதிக்கப்பட வேண்டியது எலும்பா? மூளையா?:

ஒரு பெண்ணை கற்பழித்து காமக்கொடூர செயலை செய்தவனை 18வயது பூர்த்தியாகாத ஒரே காரணத்திற்காக சிறுவன் என்று சொல்வார்களேயானால் சோதனை செய்யப்பட வேண்டியது அவனது எலும்புகள் அல்ல; இவர்களது மூளைதான்.

இவர்களுக்கு மூளை என்ற ஒன்று உள்ளதா என்று இவர்களை சோதித்துப் பார்க்க வேண்டியதுதான் காலத்தின் கட்டாயம் என்பதும் தற்போது நமக்கு தெரிய வருகின்றது.


இந்த அளவுக்கு காமவெறியாட்டம் ஆடிய ஒருவனை சிறுவன் என்று சொல்வது எப்படி? இது சரியா?

என்று அனைவரது உள்ளமும் உறுத்தியிருப்பதால்தான் தற்போது இந்த சட்டம் தவறான சட்டம் என்பதை மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் உணரத்துவங்கியுள்ளன.

உள்துறை அமைச்சர் தலைமையில் கூட்டப்பட்ட கூட்டம்

18 வயது நிறைவடையாதவர்கள் குற்றம் செய்தால் மைனர் என்ற காரணம் கூறி தப்பிவிடுகின்றனர்.
இந்த பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பது என்பது குறித்தும்,

பெண்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை மற்றும் அதிகபட்ச தண்டனை ஆகியவை குறித்தும் ஆலோசனை செய்வதற்காக கடந்த ஜனவரி 4அன்று உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தலைமையில் அனைத்து மாநில டி.ஜி.பிக்கள் மற்றும் தலைமைச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது


18வயது பூர்த்தியானால்தான் மேஜர்; அதற்கு கீழுள்ளவர்கள் சிறுகுழந்தைகள் என்ற சட்டம் கிறுக்குத்தனமான சட்டம் என்பதை அனைத்து டி.ஜி.பி.க்களும், அனைத்து மாநில தலைமைச் செயலர்களும் ஒப்புக் கொண்டனர்.

எனவே இனிமேல் 16 வயதானாலே மேஜராக கருதி குற்ற வழக்கில் தண்டனை அளிக்க வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனை அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் ஒருமித்த கருத்தோடு ஏற்றுக்கொண்டுள்ளனர்.


இவ்வளவு பிரச்சனைகள் வந்த பிறகு நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து இப்போது மைனர் வயதை குறைப்பதுதான் இதற்கான தீர்வு என்று முடிவு எட்டப்பட்டுள்ளது.

ஆனால் இவர்கள் தற்போது எடுத்துள்ள இந்த முடிவு சரியானதுதானா என்று நாம் ஆய்வு செய்வோமேயானால் அதிலும் இவர்கள் தவறிழைக்கத்தான் செய்கின்றார்கள்.

மைனர் வயதை 16ஆக குறைத்தாலும் 15 வயது பையன் இந்த சேட்டையை செய்யமாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்?.

தமிழகத்தில் தன்னிடம் ட்யூசன் படிக்க வந்த15வயதே நிரம்பிய ஒரு மாணவனை குமுதா என்றஆசிரியை உல்லாசம் அனுபவிக்க டெல்லிக்குஅழைத்துச் சென்று போலீசாரிடத்தில் கையும்களவுமாக பிடிபட்ட சம்பவங்கள் இவர்களுக்குத்தெரியுமா? தெரியாதா?.

ஆசிரியையோடுவிபச்சாரம் செய்து உல்லாசம் அனுபவித்த அந்தமாணவனையும் சிறுகுழந்தை என்று சொல்லப்போகின்றார்களா?

அதுபோல ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம்கோமட்டி பள்ளியைச் சேர்ந்த ரம்யா என்ற ஆசிரியைஅதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவன்நாகேஷ் என்ற 15 வயதே ஆன மாணவனைக் காதலித்துஅவனைக் கூட்டிக் கொண்டு வீட்டை விட்டுவெளியேறி கல்யாணமும் செய்து கொண்டசம்பவத்தால் ஆந்திரா மாநிலமே பரபரப்பானதுஇவர்களுக்குத் தெரியாதா?

அல்லது இவர்கள்இந்தியா அல்லாத வேறு நாட்டில்வசிக்கின்றார்களா?

இதைவிட மோசமாக அமெரிக்காவில் அமன்டாசோடலோ என்ற 36 வயது நிரம்பிய ஆசிரியைடெக்ஸாஸில் உள்ள பெஸ்கார் கன்ட்ரி பகுதியில்உள்ள பள்ளியில் படித்த 14 வயது மாணவன்ஒருவனுடன் உறவு வைத்ததன் விளைவாக கர்ப்பமானகாரணத்தால் கைது செய்யப்பட்டு தற்போதுசிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தை இவர்கள்பத்திரிக்கைகளில் படிக்கவில்லையா?

அல்லது இவர்கள் பூமி அல்லாத வேறு கிரகத்தில்வசிக்கின்றார்களா?

CONTINUED...

UNMAIKAL said...

PART 3. சிறுவனுக்கு தண்டனை வழங்கலாமா?

இஸ்லாம் கூறும் தீர்வு தான் இறுதியான தீர்வு


ஆண்களின் நிலை இதுவென்றால் பெண்களின்நிலையை சொல்லவே வேண்டாம்.

இராமநாதபுரத்தில் பள்ளிக்கூடத்தில் பிள்ளைபெற்ற 8ஆம் வகுப்பு மாணவி. ஆசிரியர்கள்அதிர்ச்சி

என்று நாள்தோறும் வெளியாகும்இதுபோன்ற செய்திகள் இவர்களது கண்களில்படவில்லையா?

ஆக, இந்தப் பிரச்சனைக்கு மைனர் வயதை 16ஆகக்குறைத்து எந்தப் புண்ணியமும் இல்லை.

மாறாக மைனர் யார்? மேஜர் யார்? என்பதற்கான சரியானஅளவுகோலை இவர்கள் கையில் எடுத்துசட்டமியற்றினால்தான் இந்தப் பிரச்சனைக்குசரியான நிரந்தரத்தீர்வு கிடைக்கும்.

இந்தவிஷயத்திலும் வல்ல இறைவன் வழங்கிய இஸ்லாமியமார்க்கம் நமக்கு அழகான வழிகாட்டுதலைகூறுகிறது

இஸ்லாம் சொல்லக்கூடிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பூப்பெய்து பருவ வயதை அடைந்த 15, 16 வயது பெண்களுக்கு முஸ்லிம்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் அடிப்படையில் திருமண ஏற்பாடுகளைச் செய்த போது,

அநியாயக்கார அதிகாரிகள் சிறுகுழந்தைக்கு ஏன் திருமணம் முடித்து வைக்கின்றீர்கள் என்று முஸ்லிம்களின் விஷயத்தில் மூக்கை நுழைத்து அடாவடி செய்தனர்.

சிறுகுழந்தை எப்படி பூப்பெய்யும்?

சிறுகுழந்தைக்கு எப்படி குழந்தை பிறக்கும்? என்றசாதாரண அறிவுகூட இல்லாமல் இவர்கள் நடந்தனர்.

ஆனால் தற்போது 16 வயதில் கற்பழிப்பு செய்தவன் எப்படி சிறுகுழந்தையாக இருக்க முடியும் என்று இவர்களே கேள்வியெழுப்புகின்றனர்.

அத்தகைய நிலையை வல்ல ரஹ்மான் அவர்களுக்கு இப்போது ஏற்படுத்தியுள்ளான். இந்திய அரசியல் சாசன சட்டத்தையும் மதிக்காமல், முஸ்லிம்களது திருமணத்தில் மூக்கை நுழைத்து ஆட்டம்போட்ட இவர்களை மேஜராகும் வயது வரம்பை குறைக்க வேண்டும் என்று வல்ல இறைவன் அவர்களது வாயாலேயே சொல்ல வைத்துள்ளான்

பருவ வயதை அடைவதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்:

மைனர் வயது என்பது, 16 அல்லது 15 வயது என்று ஏதாவது சட்டதிட்டங்களைப்போட்டு அதில் குழம்பிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் இஸ்லாம் சொல்லக்கூடிய வழிமுறைகளை இவர்கள் கடைபிடிப்பார்களேயானால் எந்த குழப்பமும் வராது

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்கள் பருவமடைந்து விட்டார்களா? என்பதைத்தான் நாம் கவனிக்க வேண்டுமே ஒழிய வயது ஒரு பிரச்சனை இல்லை என்பதுதான் இஸ்லாம் சொல்லக்கூடிய அழகான தீர்வு.

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்கள் பருவமடைந்து விட்டார்களேயானால் அவர்கள் மேஜர் என்றும்,

பருவமடையாவிட்டால் மைனர் என்றும் அழகான கோட்டை இஸ்லாம் போட்டுக்காட்டுகின்றது.

அந்த அடிப்படையில் நாம் சட்டங்களை வகுத்தால் சிறுகுழந்தை கற்பழிக்குமா? அவன் குழந்தையா? அவனுக்கு எலும்பு மஜ்ஜையில் சோதனை செய்ய வேண்டுமா? என்ற குழப்பமெல்லாம் வராது.

மாறாக அவன் பருவமடைந்திருந்தால் அவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.

பருவமடையாத சிறுவனால் இது போன்ற சேட்டைகளை செய்ய இயலாது எனும்போது அதுவே அந்தப் பிரச்சனையில் தீர்வு காண எளிய வழியாக அமைந்துவிடும்.

எனவே மத்திய அரசு ஆழமாக யோசித்து, முழுமையாக ஆய்வு செய்து இஸ்லாம் சொல்லக்கூடிய இந்த சட்டத்தின் அடிப்படையில் சட்டமியற்றுமேயானால், இதுபோன்ற குழப்பங்கள் தவிர்க்கப்படும்.

இந்தப் பிரச்சனைக்கும் இஸ்லாம் கூறும் தீர்வின் பக்கம்தான் மக்கள் வரவேண்டியுள்ளது.

இஸ்லாம் கூறும் தீர்வுதான் இறுதியான தீர்வு என்பதையும், அதுதான் சரியான உறுதியான தீர்வு என்பதையும் மக்கள் சன்னஞ்சன்னமாக விளங்கி வருகின்றார்கள்.

காரணம் என்னவென்றால் இது இறைவனுடைய மார்க்கம் என்பதால், படைத்த இறைவனுக்குத்தான் தெரியும் மனிதன் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு சரியானதாக இருக்கும் என்பது.

இந்த நிகழ்வுகளும் இஸ்லாம் இறைவனின் மார்க்கம்தான் என்பதை உண்மைப்படுத்துகின்றன.


SOURCE:http://onlinepj.com/islathai_unmaipatuthum_natunatapukal/islam-kurum-therve-iruthiyanathu/

UNMAIKAL said...

பள்ளி சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அபுதாபி இளவரசர்!

Posted by: Siva Published: Wednesday, January 30, 2013, 10:45 [IST]

துபாய்: பள்ளிக்கு வெளியே செய்வதறியாது தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர் வரும் வரை அவருக்கு துணையாக அபுதாபி இளவரசர் ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.

அபுதாபியின் இளவரசரும், ராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது ஒரு பள்ளிக்கு வெளியே சிறுமி ஒருவர் தொலைந்தது போன்று தனியாக நின்று கொண்டிருந்திருக்கிறார்.

இதைப் பார்த்த இளவரசர் காரை நிறுத்துமாறு கூறி தனது உதவியாளருடன் அந்த சிறுமி அருகே சென்று நீ ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்டார்.

அதற்கு சிறுமி, தனது தந்தை வந்து அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் இன்னும் வரவில்லை, அதனால் தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

சிறுமியை தனது காரில் வீட்டில் இறக்கிவிடுவதாக இளவரசர் தெரிவித்தார்.

அதற்கு சிறுமியோ முன் பின் தெரியாதவர்களுடன் பேசக் கூடாது என்று தனது தந்தை தெரிவித்துள்ளதாக கூறினார்.

உடனே உதவியாளர் அச்சிறுமியிடம் இவர் யாரோ அல்ல அபுதாபியின் இளவரசர் என்று கூறினார்.

அதற்கு சிறுமி, அது எனக்குத் தெரியும்.

ஆனால் பழக்கமில்லாதவர்களுடன் செல்லக் கூடாது என்று என் தந்தை கூறியுள்ளார் என்றார்.

இதைக் கேட்ட இளவரசர் சிரித்துவிட்டார்.

சிறுமியின் தந்தை வரும்வரை அவருக்கு துணையாக சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.

சொடுக்கி >>>>> படம் காண்க.

இளவரசர் சாலையோரத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்த மக்கள் ஆச்சரியப்பட்டனர்.

நம் ஊர் 'சாக்கடை கமிஷன்' கவுன்சிலர்களாவது இதைச் செய்வார்களா?

Read more at: http://tamil.oneindia.in/news/2013/01/30/world-abu-dhabi-crown-prince-sits-roadside-with-lost-girl-168847.html

சுவனப் பிரியன் said...

திரு வியாசன்!

//இப்ப‌டியான‌ அரேபிய‌க் நாடோடிக‌ளின் க‌லாச்சார‌ வ‌ழ‌க்கு முறைக‌ளை எதற்காக‌ உல‌கில் ப‌ழ‌மையான‌, நாக‌ரீகம‌டைந்த‌ இன‌ங்க‌ளிலொன்றாகிய‌ த‌மிழின‌த்தில் பிற‌ந்து இஸ்லாமிய‌ர்க‌ளாக‌ மாறிய‌ த‌மிழ் முஸ்லீம்க‌ள் க‌டைப்பிடிக்க‌ வேண்டும் அல்ல‌து எத‌ற்காக‌ அதை நியாய‌ப்ப‌டுத்த‌ முனைகிறார்க‌ள் என்ப‌து தான் புரியாத‌ புதிராக‌ இருக்கிற‌து.//

நாடோடிகளான அரபுகளின் சட்டம் என்று நிங்கள் சொல்கிறீர்கள். ஆனால் மேலே நான் குறிப்பிட்டிருக்கும் இரண்டு நிகழ்வுகளும் இஸ்லாமிய சட்டத்தை நோக்கியே செல்வதை பார்க்கவில்லை. நாடோடி அரபுகளின் சட்டங்கள் தமிழகத்துக்கும் நமது இந்தியாவுக்கும் இன்றும் பொருந்தி வருகிறதே அது எவ்வாறு என்று நீங்கள் சிந்திக்கவில்லையா?

சுவனப் பிரியன் said...

சலாம் சகோ நாகூர் மீரான்!

//அருமையா சொன்னீங்க சகோ.!,அவன் இன்னும் மூன்று மாதத்தில் சிறார் சீர்திருத்த பள்ளியில் இருந்து வெளி வந்துவிடுவானாம்.இது கேள்விப்பட்டு மற்ற யூத்ஸ் எல்லாம் என்ன நினைப்பாங்க..? நமக்கு இன்னும் இவ்வளவு காலம் தான் இருக்கு (18 வயசு முடிய )..நாம என்ன தப்பு செஞ்சாலும் யாராலும் ஒன்னும் பண்ண முடியாது.அதனால அனுபவிக்க வேண்டியது எல்லாம் சீக்கிரம் அனுபவிப்போம்..!//

இறை கட்டளைகளே எக்காலத்துக்கும் ஏற்றது என்பது மேலும் உறுதியாகிறது.

சுவனப் பிரியன் said...

சகோ உண்மைகள்!

//துபாய்: பள்ளிக்கு வெளியே செய்வதறியாது தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர் வரும் வரை அவருக்கு துணையாக அபுதாபி இளவரசர் ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் சாலையோரத்தில் அமர்ந்திருந்தார். //

அருமையான நிகழ்வை பகிர்ந்தமைக்கு நன்றி!

Anonymous said...

சாட்சியங்களையும், பிரதிவாதிகளையும் மிரட்டியோ, காசுக் கொடுத்தோ வாங்கிவிட்டால் கொலை செய்தால் கூட தப்பிக்கலாம். ஹைய்யா ஜாலி என்ன ஒரு அருமையான திட்டம் .. ! ஐ லைக் இட் ... !

Anonymous said...

//அதிகபட்ச தண்டனையாக, அவனுக்கு, தூக்கு தண்டனை வழங்க வேண்டும்//

ஏன் தூக்கு தண்டனை வழங்க வேண்டும், அவன் அந்த பெண்ணின் குடும்பத்துக்கு சில பல கேடி.. ச்சா. கோடியை வழங்கி விடுதலை அடையலாமே... !

//எனவே தான் 10 வயது தாண்டி விட்டால் உங்கள் குழந்தைகளின் படுக்கையை உங்களிடமிருந்து அப்புறப் படுத்துங்கள் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. //

ஆனால் 9 வயதிலேயே ஆயிசாவோடு ஜல்ஜா பண்ணிய மத நிறுவனருக்கு மட்டும் விதி விலக்கு அப்படித் தானே !

//நமது நாடோ 18 வயதானவன்தான் மேஜரானவன் என்ற சட்டத்தை எழுதி வைத்துக் கொண்டு இந்த தந்தையின் கேள்விக்கு பதில் தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்கிறது.//

அப்போது உங்கள் வீட்டு பிள்ளைகளை பத்து வயதிலேயே மணம் முடித்துக் கொடுக்கவும் தயாராக உள்ளீர்கள், சரி தானே .. !

// மனிதர்கள் இயற்றிய சட்டங்களில் எங்கெல்லாம் குளறுபடிகள் வருகின்றது என்பதற்கு இந்த வழக்கும் ஒரு சிறந்த உதாரணம்.//

ஓ ! அதனாலே தான், நீங்கள் யாரும் இந்த நாட்டுச் சட்டத்தை மதிப்பதில்லை .. அப்படித்தானே .. !

சுவனப் பிரியன் said...

//சாட்சியங்களையும், பிரதிவாதிகளையும் மிரட்டியோ, காசுக் கொடுத்தோ வாங்கிவிட்டால் கொலை செய்தால் கூட தப்பிக்கலாம். ஹைய்யா ஜாலி என்ன ஒரு அருமையான திட்டம் .. ! ஐ லைக் இட் ... !//

அப்படி எங்கு சொல்லப்பட்டிருக்கிறது? கற்பனைகளை அவிழ்த்து விட வேண்டாம.

//ஆனால் 9 வயதிலேயே ஆயிசாவோடு ஜல்ஜா பண்ணிய மத நிறுவனருக்கு மட்டும் விதி விலக்கு அப்படித் தானே ! //

9 வயதில் திருமண பேச்சு நடைபெற்று பூப்பெய்தியவுடன் தான் நபிகளின் வீட்டுக்கு வந்ததாக வரலாறு பதியப்பட்டிருக்கிறது. தெரிந்து கொண்டு எதையும் பகிரவும்.

//அப்போது உங்கள் வீட்டு பிள்ளைகளை பத்து வயதிலேயே மணம் முடித்துக் கொடுக்கவும் தயாராக உள்ளீர்கள், சரி தானே .. ! //

அப்படி சொன்னது யார்? திருமண வயதை அடைந்தவுடன் 25 லோ 30 லோ திருமணம் செய்து வைப்போம். ஆனால் உங்களைப் போல் பொஃகேக்களில் பைங்கிளிகளை தேடச் சொல்லி அனுப்ப மாட்டோம். :-)

//ஓ ! அதனாலே தான், நீங்கள் யாரும் இந்த நாட்டுச் சட்டத்தை மதிப்பதில்லை .. அப்படித்தானே .. !//

எனக்கு கருத்து தெரிந்து 5000 குடும்பங்கள் வசிக்கும் எங்கள் கிராமத்தில் இது வரை போலீஸ் வந்தது பாஸபோர்ட் விசாரணைக்காக மட்டும் தான். அருகில் தலித்கள் எங்களால் மிக பாதுகாப்பாக உள்ளார்கள். அந்த அளவு சட்டத்தை மதிப்பவர்கள் நாங்கள். இதை நடுநிலையாளர்களும் அறிவர்.

சுவனப் பிரியன் said...

திரு மலர் மன்னன்!

//ஹிந்துஸ்தானத்தில் முகமதியர்கள் கொடுமைகளை சகித்துக் கொண்டு வாழத்தான் வேண்டுமா? குஜராத் குஜராத் என்று கூவியபோதும் அங்கிருந்து எந்த முகமதியரும் பாகிஸ்தானில் தஞ்சமடையப் போகாததன் மர்மம் என்ன? பாகிஸ்தான் எல்லையில் உள்ளதுதானே பாகிஸ்தான்?//

அதற்கு பெயர்தான் நாட்டுப் பற்று. உங்கள் ஆட்களோ அமெரிக்கா சிடிசனுக்கு ஏங்குபவர்களாகத்தான் உள்ளார்கள். இந்த நாட்டு வரிப்பணத்தில் பட்டங்களை வாங்கிக் கொண்டு அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆகி விடுகிறீர்கள். இந்திய பிரிவினையின் போதே போகாதவர்கள் நாங்கள். பாரதம் எங்கள் மண். எங்களின் உயிரும் இந்த மண்ணிலேதான் போகும். மோடியைப் போன்று இன்னும் 10 முதல்வர்கள் வந்தாலும் இஸ்லாமிய வாசத்தை பாரதத்திலிருந்து எடுத்து விட முடியாது.

அடுத்து தலித்களை பார்ப்போம். நீங்கள் அவர்களை ஒழுங்காக நடத்தினால் அவர்கள் ஏன் இஸ்லாத்தை நோக்கி ஓட வேண்டும். இன்றும் பூணூலின் பெருமைகளை பேசிக் கொண்டுதானே பலரின் காலம் ஓடுகிறது? நீங்கள் பண்ணும் வர்ணாசிரம கொடுமை தாங்க முடியாமல் அவன் கண் முன் தெரியும் விடுதலையை நோக்கி ஓடுகிறான். இதில் என்ன தவறு?

சுவனப் பிரியன் said...

திரு க்ருஷ்ணகுமார்!

//ஜெனாப் சுவனப்ரியன், பாக்கி ஸ்தான் (Baqi Sthan) மட்டும் என்ன அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சூடான், எகிப்து, சிரியா, ஈரான், ஈராக், லெபனான், பாங்க்ளாதேஷ் – இதெல்லாம் என்ன சுபிக்ஷத்தை நோக்கியா சென்று கொண்டிருக்கின்றன.//

இந்த நாடுகள் எல்லாம் ஒரு காலத்தில் மிக அமைதியாகவே இருந்தன. பெட்ரோல் காசுக்காகவும் கனிம வளங்களை கொள்ளை அடிக்கவும் அமெரிக்காவும் இஸ்ரேலும் பிரிட்டனும் கூட்டு சதி செய்து அந்த நாடுகளின் அமைதியை அழித்து வருகின்றன. கூடிய விரைவில் நிலைமை சீரடையலாம்

//சவூதியும் வெகு தூரத்தில் இல்லை இந்த லிஸ்டில் இருந்து.//

கெடுவான: கேடு நினைப்பான் என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது. அமெரிக்கா கேட்கும் எலும்புத் துண்டுகளை அவ்வப்போது சவுதி வீசி விடுவதால் வாலை ஆட்டிக் கொண்டு அமெரிக்கா சேவகனாகவே இருக்கும். சவுதிக்கு ஒரு பாதகமும் இல்லை கவலை வேண்டாம்.

//அதற்கு வழி வஹாபிய இஸ்லாத்திலிருந்து மீண்டு ஸூஃபி இஸ்லாத்துக்குத் திரும்புவது. ஆனால் வினாச காலே விபரீத புத்தி என்ற சான்றோர் வாக்கு என்றும் பொய்யாகாதே.//

25 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் குண்டு வெடிப்புகளும் கலவரங்களும் நடந்து வந்தன. வஹாபியம் 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' என்ற பெயரில் ஒரு சிறந்த அமைப்பாக மாறி பல லட்சக்கணக்கான இளைஞர்களை உறுப்பினராக்கி இன்று பல பொது நல சேவைகளை செய்து வருகிறது. இரத்ததானத்தில் தமிழகத்தில் வருடா வருடம் முதல் இடத்தை பெறுகிறது. வட்டியில்லா கடன் மாற்று மதத்தவர்களுக்கும் கொடுக்கிறது. இந்து முஸ்லிம் ஒற்றுமையை 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழமெங்கும் செயல்படுத்துகிறது. எனவே வஹாபியத்தால் சமூகத்துக்கு நன்மையே.

இதில் லவலேசமும் உண்மை என்பது எங்காவது இருக்கிறது?////

தமிழகத்திலும் கேரளாவிலும வெளி நாட்டு சம்பாத்தியத்தால் ஓரளவு முஸ்லிம்கள் வளமுடனே உள்ளனர். நான் ஒட்டு மொத்த இந்தியாவில் முஸ்லிம்களின நிலையை சொன்னேன். தற்போதுதான் படிப்பில் ஓரளவு ஆர்வம் செலுத்கின்றனர் முஸ்லிம்கள். இன்னும் 10 ஆண்டுகளில் மிகச் சிறந்த மறுமலர்ச்சி இந்திய முஸ்லிம்களுக்கு உண்டு. நீங்களும் நானும் பார்க்கத்தான் போகிறோம்

//மேல் விஷாரத்தில் இஸ்லாமியர்கள் ஹிந்துக்களை விரட்டியடித்தது போதாது என்று கீழ் விஷாரத்தையும் கபளீகரம் செய்ய விழைகையில் தங்களை தனி தெஹ்சிலாக அறிவிக்க கீழ் விஷாரத்தினர் ந்யாயாலயத்தில் போராட வேண்டியிருந்தது.//

அரசு வேலை பார்க்கும் இந்துக்கள் கிராமங்களில் உள்ள வீடுகளை விற்று விட்டு சென்னையில் சொந்த வீடு வாங்கி பலர் குடியேறி விடுகின்றனர். அல்லது அமெரிக்கா போய் செட்டிலாகி விடுகின்றனர். அதனால் விலைக்கு வரும் வீட்டை யாருமே வாங்கத்தானே செய்வர். இதில் என்ன தவறு கண்டீர்கள்? எல்லோரும் இந்தியரே என்ற பக்குவத்துக்கு வாருங்கள் நண்பரே!..

viyasan said...

///நாடோடி அரபுகளின் சட்டங்கள் தமிழகத்துக்கும் நமது இந்தியாவுக்கும் இன்றும் பொருந்தி வருகிறதே அது எவ்வாறு என்று நீங்கள் சிந்திக்கவில்லையா?///
நாடோடிக் காட்ட‌ர‌பிக‌ளின் ச‌ட்ட‌ங்க‌ள் இந்தியாவுக்கும் த‌மிழ்நாட்டுக்கும் பொருந்துமென்று வாதாடும் த‌மிழ்முஸ்லீம் அரேபிய‌ விசுவாசிக‌ளை நினைக்க‌ச் சிரிப்புத்தான் வ‌ருகிற‌து. உதார‌ண‌மாக‌ இல்லாத‌ பொல்லாத‌ எல்லாவ‌ற்றுக்கும் த‌மிழ்நாட்டில் முஸ்லீம்க‌ள் ஆர்ப்பாட்ட‌ம் செய்ய‌லாம், ஆனால் ச‌வூதியில் அர‌சை எதிர்த்து ஆர்ப்பாட்ட‌ம் செய்ய‌வே முடியாது.காட்டுமிராண்டித்த‌ன‌மாக‌க் கையைக் காலை ம‌ட்டும‌ல்ல‌ க‌ழுத்தையும் வெட்டும் ச‌வூதி அரேபியாவிலும் க‌ற்ப‌ழிப்புக‌ளும், கொலைக‌ளும் ந‌ட‌க்கின்ற‌ன‌. அவை வெளியுல‌குக்குப் பெரிய‌ள‌வில் தெரிய‌வ‌ராமைக்குக் கார‌ண‌ம் அங்கு ப‌த்திரிகைச் சுதந்திர‌ம் இல்லாத‌தால் தான். அது ம‌ட்டும‌ன்றி க‌ற்ப‌ழிப்பு ந‌ட‌ந்ததை நிரூபிப்ப‌தற்கு ஆண்க‌ள் சாட்சி சொல்ல‌ வேண்டும். க‌ற்ப‌ழிக்க‌ப்பட்ட‌ பெண்ணே க‌ல்லால் அடிக்க‌ப்ப‌ட்டும் கொல்ல‌ப்ப‌ட‌லாம். அந்த‌ப் பய‌த்தினால் தான் பெண்க‌ள் தன்னைக் க‌ற்ப‌ழித்த‌வ‌ர்க‌ளைக் குற்றம் சாட்ட‌ முன்வ‌ருவ‌தில்லை. ஒக்ரோப‌ர் 2012 இல் ஒரு எகிப்திய‌ப் பெண் ச‌வூதி அரேபியாவில் ப‌ல‌பேரால் 5 நாட்க‌ள் க‌ற்ப‌ழிக்க‌ப்ப‌ட்டார். ஒருசில‌ சிறுவ‌ர்க‌ள் செய்யும் குற்ற‌ங்க‌ளுக்காக‌, வ‌ய‌து குறைந்த‌ சிறுவ‌ர்க‌ள் அனைவ‌ரையும் வ‌ள‌ர்ந்த‌வ‌ர்க‌ளுக்கு அளிக்கும் த‌ண்ட‌னையை அளிக்கும் இஸ்லாமிய‌ ச‌ட்ட‌ங்க‌ள் நாடோடி அரேபிய‌ர்க‌ளுக்கு வேண்டுமானால் பொருந்தும், நாக‌ரீக‌மடைந்த‌, ம‌னித‌வுரிமைக‌ளை ம‌திக்கின்ற‌ நாடுக‌ளுக்குப் பொருந்தாது. இஸ்லாமிய‌ சாரியா ச‌ட்ட‌த்தில் த‌ன்னின‌ச்சேர்க்கையாள‌ர்க‌ளுக்கு ம‌ர‌ண‌தண்ட‌னை அளிக்க‌ப்ப‌டும் ஆனால் ச‌வூதி அரேபியாவின் த‌லைந‌க‌ரான‌ றியாத்தை த‌ன்னின‌ச்சேர்க்கையாள‌ர்க‌ளின் த‌லைந‌கர‌ம், ஒரு அழ‌கான‌ ஆண் கூட‌த் த‌னிமையில் போக‌முடியாதென்ப‌தைப் ப‌ற்றி ப‌ல‌ க‌ட்டுரைக‌ளும், புத்த‌க‌ங்க‌ளும் கூட‌ வெளிவ‌ந்துள்ளன‌. சுவ‌ன‌ப்பிரிய‌ன் அவ‌ர்க‌ள் விரும்பினால் நான் அவ‌ற்றை என‌து வ‌லைப்ப‌திவில் ப‌திவு செய்கிறேன். :)

viyasan said...

///பள்ளி சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அபுதாபி இளவரசர்! ///
15 வ‌ய‌துச் சிறுமியை 90 வ‌யதுக்கிழ‌வ‌ன் ச‌ட்ட‌பூர்வமாக‌, ம‌த‌ அங்கீகார‌த்துட‌ன் ம‌ண‌ம் செய்யும் நாட்டில் சிறுமியின் பாதுகாப்பை நினைத்து இளவ‌ர‌ச‌ர் ப‌ய‌ப்ப‌ட்ட‌து ஆச்ச‌ரிய‌ம‌ல்ல‌. சாரியா ச‌ட்ட‌ம் ந‌டைமுறையிலுள்ள‌ நாட்டில் அந்த‌ நாட்டின் இள‌வ‌ர‌ச‌ர் ஒரு சிறுமியின் பாதுகாப்புக்காக‌ துணை நின்றார் என்றால் சாரியா ச‌ட்ட‌ங்க‌ளில் அந்த‌ இள‌வ‌ர‌ச‌ருக்கும் ந‌ம்பிக்கையில்லை, அந்த‌ச் ச‌ட்ட‌ங்க‌ளால் நாட்டில் குற்ற‌ங்க‌ள் குறைய‌வில்லை என்ப‌து தான் க‌ருத்தாகும். ஒரு சின்ன‌ஞ்சிறு சிறுமி கூட‌ சில‌ ம‌ணித்தியால‌ங்க‌ள் த‌னிமையில் காத்திருக்க‌ முடியாத‌ள‌வுக்கு சாரியா த‌ண்ட‌னைக‌ள் அங்கு வேலை செய்ய‌வில்லை என்ப‌தைத் தான் அது காட்டுகிற‌தே த‌விர‌ இதில் பெருமைப்ப‌ட்ட‌ ஒன்றும் கிடையாது.

http://www.parentdish.co.uk/2013/01/08/90-year-old-man-to-sue-parents-of-his-15-year-old-bride-after-she-leaves-him/

UNMAIKAL said...

// viyasan said...
///பள்ளி சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அபுதாபி இளவரசர்! ///

15 வ‌ய‌துச் சிறுமியை 90 வ‌யதுக்கிழ‌வ‌ன் ச‌ட்ட‌பூர்வமாக‌, ம‌த‌ அங்கீகார‌த்துட‌ன் ம‌ண‌ம் செய்யும் நாட்டில் சிறுமியின் பாதுகாப்பை நினைத்து இளவ‌ர‌ச‌ர் ப‌ய‌ப்ப‌ட்ட‌து ஆச்ச‌ரிய‌ம‌ல்ல‌. சாரியா ச‌ட்ட‌ம் ந‌டைமுறையிலுள்ள‌ நாட்டில் அந்த‌ நாட்டின் இள‌வ‌ர‌ச‌ர் ஒரு சிறுமியின் பாதுகாப்புக்காக‌ துணை நின்றார் என்றால் சாரியா ச‌ட்ட‌ங்க‌ளில் அந்த‌ இள‌வ‌ர‌ச‌ருக்கும் ந‌ம்பிக்கையில்லை, அந்த‌ச் ச‌ட்ட‌ங்க‌ளால் நாட்டில் குற்ற‌ங்க‌ள் குறைய‌வில்லை என்ப‌து தான் க‌ருத்தாகும். ஒரு சின்ன‌ஞ்சிறு சிறுமி கூட‌ சில‌ ம‌ணித்தியால‌ங்க‌ள் த‌னிமையில் காத்திருக்க‌ முடியாத‌ள‌வுக்கு சாரியா த‌ண்ட‌னைக‌ள் அங்கு வேலை செய்ய‌வில்லை என்ப‌தைத் தான் அது காட்டுகிற‌தே த‌விர‌ இதில் பெருமைப்ப‌ட்ட‌ ஒன்றும் கிடையாது. //


அன்றாடம் நம் இந்தியாவில் அனுதினமும் நூற்றுக் கணக்கில் நூற்றாண்டுகளாக அயராது நடந்து கொண்டிருக்கும் மறைக்கப்படும் நிகழ்வுகளில் வெளிக்கு வந்த பல்லாயிரங்களில் சில துளிகள் மட்டும் கீழே.


இந்தூரில், 14 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
http://www.dailythanthi.com/taxonomy/term/17726

13 வயது சிறுமி கற்பழிப்பு: 'கட்டப் பஞ்சாயத்து' செய்த டெல்லி போலீசாருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
http://www.maalaimalar.com/2013/01/22054651/Rs-25-K-fine-scapped-to-Delhi.html


மும்பையிலுள்ள பிரபலமான பள்ளியில் படித்துவரும் 4 வயது சிறுமி வழக்கம் போல் பள்ளி பேருந்தில் வீடு திரும்புகையில், 35 வயதான பேருந்தில் நடத்துனரால் கற்பழிக்கபட்டார்.

http://tamil.webdunia.com/newsworld/news/national/1301/19/1130119018_1.htm


திண்டுக்கல் அருகே அய்யம்பாளையத்தில் 6 வயது சிறுமியை கற்பழித்துக் கொலை செய்த காமக்கொடூரனை போலீசார் கைது செய்தனர்

5-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த வாலிபர் கைது.

தென்காசி அருகே சிறுமியை சீரழித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

http://tamil.oneindia.in/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81


கொலை செய்வதற்கு முன் சிறுமி முஷ்கினை கற்பழித்த கயவர்கள்

கோவை ரங்கே கெளடர் வீதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் ஜெயின்-சங்கீதா தம்பதியின் மகள் முஷ்கின். 11 வயது சிறுமி.

இரு கயவர்களும், முஷ்கினையும், ரித்திக்கையும் கொலை செய்வதற்கு முன்பு, முஷ்கினை பலவந்தப்படுத்தி கற்பழித்துள்ளனர் என்பது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இறுதி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அனைவரும் கொடூர கொலைகாரர்களை விசாரணையே இல்லாமல் தூக்கில் போட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டபடி வந்தனர். ஜெயின் சமூகத்தவர்கள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர், பல்வேறு அமைப்பினர், பள்ளி மாணவ, மாணவியர் என ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர்.

Read more at: http://tamil.oneindia.in/news/2010/11/01/coimbatore-boy-girl-murder-rape.html

ஒரத்தநாடு அருகே 9 வயது சிறுமி கற்பழிப்பு: பக்கத்து வீட்டுக்காரர் மீது புகார்

காயத்ரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 9) 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி மாலை சிறுமி காயத்ரியை வீட்டுக்கு அழைத்து ரவிச்சந்திரன் பலவந்தமாக கற்பழித்துள்ளார்.

http://www.maalaimalar.com/2012/10/30164120/young-women-torcher-near-orath.html


பீகார்: 6 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த வாலிபருக்கு தூக்கு தண்டனை

பீகார் மாநிலம், ராக்ஹோபூர் கிராமத்தைச் சேர்ந்தவன் இண்டல் குமார் சர்மா என்கிற இந்திரா தாக்கூர் (வயது 30). கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ந் தேதி, தனது வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டின் 6 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அங்கு அவளை கற்பழித்து, கழுத்தை நெரித்து கொலை செய்தான்.

http://www.maalaimalar.com/2013/01/24020132/Bihar-youth-gets-death-sentenc.html


கோவாவில் உள்ள வாஸ்கோவில் இருக்கும் பள்ளி ஒன்றில் 2ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி நேற்று பள்ளி நேரத்தின்போது கழிவறைக்கு சென்றார். தலைமை ஆசிரியையின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள கழிவறையில் வைத்து அந்த சிறுமியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கற்பழித்துள்ளார்.
http://viyapu.com/news_detail.php?cid=11232

சிறுமி கற்பழிப்பை வேடிக்கை பார்த்த திருப்பதி வெங்கட்!

http://www.vinavu.com/2011/06/09/child-raped/

Adien Ramanuja Dasan said...

கொலையுண்டவரின் மனைவி இந்தியர். அதனால் சசி தப்பித்தார். ஒரு வேலை கொலையுண்டவர் மனைவி மத்திய கிழக்கு பெண்ணாக இருந்திருந்தால் சசியின் துண்டிக்கப்பட்ட தலை மண்ணில் புரண்டிருக்கும்.

Adien Ramanuja Dasan said...

கொலையுண்டவரின் மனைவி இந்தியர். அதனால் சசி தப்பித்தார். ஒரு வேலை கொலையுண்டவர் மனைவி மத்திய கிழக்கு பெண்ணாக இருந்திருந்தால் சசியின் துண்டிக்கப்பட்ட தலை மண்ணில் புரண்டிருக்கும்.