Followers

Saturday, February 27, 2016

ஏ ஆர் ரஹ்மானின் 'சன்சைன் ஆர்கெஸ்ட்ரா'



இசைத் துறை என்பது முன்பெல்லாம் பார்பனர்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட துறையாக இருந்தது. ஆனால் நீங்கள் மேலே பார்க்கும் அந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் பார்பனர்கள் அல்ல. ஏழை எளிய தாய் தந்தையருக்கு பிறந்த பல சாதிகள் மதங்களை கொண்ட குழந்தைகள் அவர்கள். தையல் கடைகாரர், பிளாட்பாரத்தில் இட்லி டீ விற்பவர், என்று ஒவ்வொருவராக பொறுக்கி எடுத்து 25 சிறுவர்களை ஏ ஆர் ரஹ்மான் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த குழுவுக்கு வெளி நாட்டிலிருந்தெல்லாம் இசைக் கலைஞர்களை அழைத்து வந்து பயிற்சி கொடுக்க வைத்துள்ளார். தற்போது இவர்களுக்கு ஆசானாக ஸ்ரீநிவாச மூர்த்தி சார் பணி புரிந்து வருகிறார்.

இன்னும் சில ஆண்டுகளில் இந்த குழந்தைகள் இசைத் துறையில் உலக அளவில் பேசப்படுவர். நூறு ஏழைக்கு தினமும் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று பிச்சை போடுவதை விட ஒரு ஏழையின் வருங்காலத்துக்கு நாம் ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்தால் அதுதான் சிறந்த தர்மம். இதனை ரஹ்மான் சரியாக உணர்ந்ததால்தான் இத்தகைய ஒரு ஏற்பாட்டை உருவாக்கியுள்ளார். இஸ்லாம் ஜகாத் என்ற ஏழை வரியை ஏற்படுத்தியதும் ஒரு மனிதன் சுய மரியாதையாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

'நபியே! எதை இறைவழியில் செலவு செய்ய வேண்டும் என்று உம்மிடம் கேட்கிறார்கள். உங்கள் தேவைக்குப் போக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் என்று கூறுவீராக'

(குர்ஆன் - 2:219)

'தேவைக்குப் போக மீதமுள்ளதை தர்மம் செய்வதே சிறந்ததாகும்' என்ற நபிமொழியும் இங்கு கவனிக்கத் தக்கது.

(புஹாரி 1426)

'பைத்துல் மால்' எனும் பொது நிதி ஒன்றை ஊர்தோறும் நாம் உருவாக்கி ஜகாத் பணத்தை உரியவரிடமிருந்து திரட்டி ஒரு அமைப்பு முறையாக ஏழைகளுக்கு வாழ்வாதாரத்திற்கு பயன்படும் வகையில், அவர்களும் அடுத்தடுத்த ஆண்டுகளில் மற்றவர்களுக்கு ஜகாத் கொடுக்கும் வகையில் வினியோகிப்பதையே இஸ்லாம் விரும்புகிறது. இதனை இஸ்லாமியர்கள் கைவிட்டதன் விளைவே ஏழைகள் பள்ளிவாசலில் பொருளுக்காக காத்திருக்கின்றனர். தற்போது ஊருக்கு ஊர் பைத்துல்மால் உண்டாக்கப்படுகிறது. அதற்கு நாம் நம்மாலான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.

----------------------------

மனிதனுக்கு தொண்டு செய்து இறைவனை அடைதல்!

'இறைவனின் தூதரே! சில நல்லறங்களை நான் செய்ய இயலாது போனால் என்ன செய்வது?' என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் 'உன்னால் மற்றவர்களுக்குத் தீங்கு ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள். அது உனக்கு நீயே செய்து கொள்ளும் நல்லறமாகும்' என்றார்கள்.

அறிவிப்பவர்: நபித் தோழர் அபூதர்
ஆதார நூல்கள் புகாரி 2518, முஸ்லிம் 119




2 comments:

Dr.Anburaj said...


இந்துக்களுக்கு சுவாமி விவேகானந்தா் இட்ட கட்டளை

பிறாமணா்களின் நல்ல பழக்க வழக்கங்களை முன் உதாரணமாகக் கொண்டு பிற்பட்ட தலீத் இந்துக்கள் தங்களின் சமய பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

Dr.Anburaj said...



சங்கீதம்தான் இசுலாத்திற்கு விரோதி எனறு வியாக்யானம் செய்யப்படுகிறது. பின் ரஹ்மானின் தொண்டு குறித்து தங்களுக்கு என்ன மகிழ்ச்சி ?