Followers

Saturday, May 11, 2019

சத்தியம் தொலைக்காட்சியின் வித்தியாசமான பேட்டி....

சத்தியம் தொலைக்காட்சியின் வித்தியாசமான பேட்டி....
தஞ்சை மாவட்டம் நீடூரைச் சேர்ந்த சாதிக் பாட்சா என்பவர் பட்டதாரி. வர்மக் கலையும் அறிந்தவர். கிராண்ட் மாஸ்டராக இருந்து பலருக்கு கற்றும் கொடுக்கிறார். ஆனால் தோற்றத்தில் ஐஎஸ்ஐஎஸ் ஆட்களின் உடையில் இருப்பதால் அரசு இவரை கைது செய்து விசாரித்தது. ஆனால் இவருக்கும் ஐஎஸ் அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விடுவித்துள்ளது. ஆனால் பல முறை விசாரணை என்று அலைக்கழித்துள்ளது. பாஸ்போர்டையும் முடக்கி வைத்துள்ளது.
என்ஐஏ, மற்றும் ஐபி அதிகாரிகள் இவரை தொடர்பு கொண்டு....
'சாதிக் பாய்... நீங்கள் நிரபராதிதான். விடுவித்து விடுகிறோம். பாஸ்போர்டையும் தந்து விடுகிறோம். எங்களுக்காக ஒரு வேலை செய்ய வேண்டும்'
'என்ன வேலை?'
'மாடரேட் ஆஃப் இந்தியா' என்று இது போல் ஒரு கட்சி ஆரம்பித்து அரசுக்கு எதிராக போரிட வேண்டும். கட்சி நடத்த 200 கோடி ரூபாய் தருகிறோம். முன் பணமாக 20 கோடி தருகிறோம். அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டங்களை முன் எடுக்க வேண்டும். செய்வீர்களா?'
என்று கேட்டுள்ளனர். இவை அனைத்தையும் சாதிக் பாட்சா இந்த வீடியோவில் சொல்கிறார். சவுக்கத் என்ற ரா ஏஜண்ட் தொடர்பு கொண்டதாகவும் அஜய், ராமன் போன்ற அதிகாரிகளின் பெயர்களையும் சொல்கிறார். சிசிடிவி கேமராவில் இவை அனைத்தும் பதிவாகியுள்ளதாகவும் சொல்கிறார். மத்திய அரசுக்கு ஏன் இந்த ஈன புத்தி?
அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பை உருவாக்கி இஸ்லாத்தை எப்படி களங்கப்படுத்துகிறதோ அது போல் சாதிக்கை வைத்து காரியமாற்ற முனைப்பு காட்டுகிறது மோடியின் பாசிச அரசு. இலங்கையிலும் ஒரு சில இஸ்லாமியர்கள் இவ்வாறுதான் வழி கெடுக்கப்பட்டு தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றப்பட்டனர். அதே ஃபார்முலாவை தமிழகத்திலும் செயல்படுத்த மோடி அரசு முயற்சிக்கிறது. உண்மையான தேசபக்தி கொண்ட எவனாவது இக்காரியத்தை செய்வானா? சாதிக் மறுத்து விட்டார். அதனால் அவரை இன்றும் தொந்தரவு செய்து வருகின்றனர். மொசாத்தும் ராவும் ஆர்எஸ்எஸூம் இணைந்து இந்தியாவில் இஸ்லாமியருக்கு பல பின்னடைவுகளை ஏற்படுத்த திரை மறைவு வேலைகளை செய்து வருவது இதன் மூலம் உறுதியாகிறது. இஸ்லாமிய இளைஞர்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய கால கட்டம் இது.
இந்த வீடியோவில் சாதிக்கோடு ஒரு விஷயத்தில் முரண்படுகிறேன்.
'இஸ்லாமிய ஆட்சியை நிறுவதற்காக பாடுபடுவதாக இந்த வீடியோவில் சொல்கிறார். சில நபி மொழிகளை தவறாக விளங்கிக் கொள்வதால் வரும் நிலைப்பாடு இது. இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவது நமது வேலையே அல்ல. மஹதி அலைஹிஸ்ஸலாமும், நபி ஈஸா அலைஹிஸ்ஸலாமும் வரும் போது நடக்கப் போகும் மாற்றங்களை நம் வாழ்வோடு ஒப்பீடு செய்து குழப்பிக் கொள்ளக் கூடாது. இஸ்லாம் கூறும் நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்வோம். விரும்பினவர் எடுத்துக் கொள்ளட்டும். விரும்பாதவரை இறைவன் நேர் வழிப்படுத்த பிரார்த்திப்போம். இதுதான் நமது நிலைப்பாடாக இருக்க வேண்டும்.
பல மதங்கள், பல இனத்தவர் வாழும் நாட்டில் 'நான் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ உழைக்கிறேன்' என்று கூறுவது பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தும். 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' நிகழ்ச்சியின் மூலம் பல இந்து மக்கள் மீடியாக்களின் இஸ்லாமிய விரோத போக்கை கண்டு கொண்டனர். இது போன்ற முயற்சியே போதுமானது. சாதிக்குக்கு நெருக்கமான நண்பர்கள் இதனை எல்லாம் அவருக்கு எடுத்துச் சொல்வார்களாக!
நபிகள் நாயகம் மிக இலகுவான மார்க்கத்தையே கொண்டு வந்தனர். சாதிக் போன்றவர்கள் அதனை கடினமாக்கி பலரையும் முகம் சுழிக்க வைத்து விட வேண்டாம். அவர் மேல் உள்ள அக்கறையினால்தான் இதனை சொல்கிறோம்.

1 comment:

ஆனந்தி வேல் said...

பல மதங்கள், பல இனத்தவர் வாழும் நாட்டில் 'நான் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ உழைக்கிறேன்' என்று கூறுவது பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தும்.
-------------------------------
பாக்கிஸ்தானிலும் பங்களாதேஷ்யிலும் ஆப்கானிஸதானத்திிலும் இந்துக்கள் இனபடுகொலை காபீர் படுகொலை செய்து அழிக்கப்பட்ட கதையை அறிந்தவர்களுக்கு இவரது அறிவிப்பு கொலை நடுக்கத்தையே அளிக்கும்.ஆனால் இந்துக்கள் இந்த அரேபிய காடையர்களின் சவாலை எதிா் கொள்ளததயாராகிவிடடார்கள். அரேபிய காடையர்கள் வேர் வேரடி மண்ணோடு அழிக்கப்டும் காலம் கண்ணுக்கு தெரிகின்றது. 50 இந்திய ராணுவத்தினா் பலியானதற்கு பதிலடியாக எத்தனை அரேபிய மத காடையர்கள் காலியானார்கள் ? இதுபோல் உள்நாட்டிலும் நடக்கும்.எச்சரிக்கை. சாதிக் பேட்டி சுவனப்பிரியனுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது போல் இருக்கின்றது. எகிப்து நாட்டை நாசம் செய்த அரேபிய மன்னன் உமா்ரை முன் உதாரணமாகக் கொண்டவன் பயங்கரவாதியாகத்தான் இருப்பான் என்பதில் சந்தேகம் இல்லை.