Followers

Sunday, May 12, 2019

`ரத்தம் கொடுக்க ரமலான் நோன்பை முறித்த இளைஞர்!’ - குவியும் பாராட்டுகள்

`ரத்தம் கொடுக்க ரமலான் நோன்பை முறித்த இளைஞர்!’ - குவியும் பாராட்டுகள்
ரமலான் தொடங்குவதற்கு ஒருமாதம் முன்பு, இஸ்லாமியர்கள் நோன்பு (விரதம்) வைப்பது வழக்கம். தண்ணீர்கூட அருந்தாமல், அவர்கள் நோன்பைக் கடைப்பிடிப்பர். இதேபோலத்தான், நோன்பிலிருந்துள்ளார் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பனுல்லா அஹமத். இவர், அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உதவியாளராகப் பணியாற்றிவருகிறார். இவரது நண்பர் தபாஷ் பகதி. இருவரும் ஒரே அறையில் உள்ளார்கள். தபாஷும் அதே மருத்துவமனையில் டெக்னீஷியனாகப் பணியாற்றிவருகிறார். இவர், அப்பகுதியில் உள்ள தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, ரத்ததானம் உள்ளிட்ட சமூக சேவைகளில் ஈடுபட்டுவருகிறார்.
இந்நிலையில், கௌஹாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ரஞ்சன் கோகாய் என்பவருக்கு ரத்தம் தேவைப்பட்டது. இந்தத் தகவல், தபாஷ் பகதிக்கு போன்கால் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் இருவரும் `டீம் ஹியூமானிடி’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் உறுப்பினராக உள்ளனர். 2 யூனிட் ரத்தம் வேண்டும் என்ற தகவல் கிடைக்க, தபாஷ் பல்வேறு இடங்களில், பல்வேறு நபர்களிடம் கேட்டுள்ளார். ஆனால், ரத்தம் கிடைக்கவில்லை. இதைத் தன் அறைத்தோழன் பனுல்லாவிடம் கூற அவர், ரத்தம் தர முன்வந்துள்ளார். `நீ நோன்பு இருக்கிறாய்; எதுவுமே சாப்பிடாத நிலையில் ரத்தம் கொடுக்க வேண்டாம்’ என தபாஷ் கூறியுள்ளார். ஆனால், பனுல்லா இதை ஏற்கவில்லை. சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்குச் சென்று, நோயாளிக்கு தன் ரத்தத்தைக் கொடுத்துள்ளார்.
``எனக்கு ரத்த தானம் தொடர்பாக போன்கால் ஒன்று வந்தது. அதில், நோயாளி ஒருவருக்கு கட்டி அறுவைசிகிச்சை நடத்த அவருக்கு, பி பாஸிட்டிவ் ரத்தம் தேவைப்படுகிறது. நாங்கள் பலரிடம் கேட்டோம். ஆனால், எங்கேயும் கிடைக்கவில்லை என்றனர். நல்லவேளை, என் நண்பன் ரத்தத்தை தானமாக வழங்கினான். நோன்பிருக்கும் நிலையிலும் அவன் ரத்தம் வழங்கியது பெருமையாக உள்ளது” என்றார்.
``என் நண்பன், பி பாஸிட்டிவ் ரத்தம் உள்ளவர்கள் யாராவது இருக்கிறார்களா... என்று கேட்டுக்கொண்டிருந்தான். நான் என் மதத்தைச் சேர்ந்தவர்களிடம் ஆலோசித்தேன். நான் ரத்த தானம் செய்ய முடியும். ஆனால் உடல்நலம் சரியில்லாமல் போகலாம். அதனால் விரதம் வீணாகிவிடும் என்றனர். அப்போது நான், என் விரதத்தைக் கலைத்துவிட்டு ரத்தம் கொடுக்க முடிவுசெய்தேன். மனித வாழ்க்கையும், மனிதநேயமும்தான் அனைத்துக்கும் மேல். நான் ரத்த தானம் செய்ய முடிவெடுத்தபோது, எனக்கு இரண்டாவது எண்ணமே இல்லை. ரத்தம் கொடுக்க வேண்டும் அவ்வளவுதான். உடல் ரீதியாகப் பொருந்தும் அனைவருக்கும் ரத்தத்தை தானம் செய்ய வேண்டும். ரத்தத்தை தானம்செய்வது கடவுளுக்கு சிறந்த சேவையாகும். இந்த உணர்வு சிறப்பாக உள்ளது” என்று பனுல்லா கூறியுள்ளார்.
ரத்தம் பெற்றுக்கொண்ட நோயாளிகள் தரப்பில், ``இஸ்லாமியர்கள் இருக்கும் நோன்பை முறித்துவிட்டு, பனுல்லா ரத்ததானம் செய்துள்ளது நெகிழ்ச்சியாக உள்ளது’ என்றனர்.
Thanks to
Vikatan
12-05-2019



1 comment:

ஆனந்தி வேல் said...

முஸ்லீம்களின் பெயா் நாடுகளின் பெயா் நாசவேலை உள்நாட்டுப் போா் மற்றும் பயங்கரவாத செயல்களில் அதிக எண்ணிக்கையில் சர்வதேச அளவில் நாறுகின்றது. ஏதோ இப்படியும் சில செய்திகள் இருப்பது படிக்க நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்.ஆனால் இதுபோல ஆயிரம் இந்து இளைஞா்கள் செய்து வருகின்றார்கள்.வலது கொடுப்பது இடதுகை அறியாமல் செய்யும் தர்மம போல் நடககின்றது என்பதை மறக்க வேண்டாம்.