Followers

Wednesday, January 11, 2023

திண்ணை தளத்தில் சங்கி மலர் மன்னனுடன்

 

திண்ணை தளத்தில் சங்கி மலர் மன்னனுடன் பல ஆண்டுகள் முன்பு நடந்த விவாதம்....

 

SUVANAPPIRIYAN

 6:51 pmAugust 26, 2012

திரு மலர் மன்னன்!

 

//சுவனப் பிரியரே, ஆதாரம் இல்லாமல் நான் எதையும் சொல்வதில்லை என்பதை நீங்கள் இன்னமும் உணராதது என் துரதிருஷ்டமே.//

 

நான் தேடிப் பார்த்து கிடைக்கவில்லை என்பதாலேயே உங்களிடம் ஆதாரம் கேட்டேன். உங்களிடம் அபுல்கலாம் பற்றிய செய்திக்கு ஆதாரம் இருந்தால் தருவதில் என்ன சிரமம்?

 

//ஹிந்துத்துவர்களே ஹிந்துஸ்தானத்தைப் பிரிக்க ஏற்பாடு செய்ததாகக் கொஞ்சமும் தயக்கமின்றி எழுதுகிறீர்களே? பெற்ற தாயைக் கூறு போடுவதா ஹிந்துத்துவம்? உங்கள் புரிதல் இவ்வளவு பாமரத்தனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவேயில்லை!//

 

அடுத்து ஜின்னா முஸ்லிம் லீக் தொடங்கவும் நாடு பிளவுபடவும் காரணமாக அமைந்தது எதுவென்று நினைக்கிறீர்கள்?

1917ல் ஆர்எஸ்எஸின் வீர சவர்க்கார் விடுத்த பிரகடனம் என்ன? ‘இந்தியா என்பது ஒற்றை தேசமல்ல. ஒன்று இந்து தேசம். இன்னொன்று முஸ்லிம் தேசம். இன்னும் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் சிறுபான்மையினர் என்ற அளவில் அல்லாமல் எந்தவொரு எதிர்காலமும் இல்லை

R.N.AGARWAL THE DIALOGUE BETWEEN HINDUS & MUSLIMS

இவ்வாறாக ஜின்னாவுக்கு முன்பே வீர சவர்க்கார் பாகிஸ்தானுக்கு அடித்தளம் இட்டார். இவர்களின் நோக்கத்தை புரிந்து கொண்ட ஜின்னா காங்கிரஸிலிருந்து பிரிந்து முஸ்லிம் லீக்கை ஆரம்பிக்கிறார். அப்பொழுது நடந்த அனைத்து தேர்தல்களிலும் முஸ்லிம்கள் அனைவரும் காங்கிரஸையே ஆதரித்தனர். அவர்கள் ஜின்னாவை நம்பவில்லை. ஜின்னா தேர்தலில் படுதோல்வி அடைந்தார்.

DR AYSHA JALAL – THE SOLE SPOKESMAN JINNAH, THE MUSLIM LEAGUE, AND THE DEMAND FOR PAKISTAN

முதன் முதலில் பம்பாயில் ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் முதல்வராக நரிமான் எனபவர் வர வாய்ப்பிருந்தும் அவர் ஃபார்ஸி என்பதால் பி.ஜி.கர் என்பவரை வலுக்கட்டாயமாக திணித்து முதல்வராக்கினர். இதற்கு மறைமுக வேலை செய்தவர் சர்தார் வல்லபாய் பட்டேல். ஆட்சிக்கு வர உழைத்த ஒருவரை ஓரங்கட்டி விட்டு இந்துத்வா சிந்தனை உடைய பி.ஜி.கர்ரை முதல்வராக்கியது இனப்பற்றால் அல்லவா?

பீகாரில் நடந்த மற்றொரு கவிழ்ப்பு வேலையை பார்ப்போம்: பீகார் காங்கிரஸ் என்றாலே டாக்டர் செய்யித் முஹம்மத் அவர்கள்தான் அனைவரின் ஞாபகத்திலும் வரும். அந்த அளவு காடு மேடு களுக்கெல்லாம் சென்று காங்கிரஸின் வெற்றிக்காக பாடுபட்டவர். காங்கிரஸின் பொதுக் செயலாளராகவும் இருந்தார். எனவே பீகாருக்கு வெளியிலேயும் பிரபலமாக இருந்தார். பீகாரில் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க தயாரானது. எல்லோரின் எதிர்பார்ப்பும் டாக்டர் செய்யித் அஹமத் அவர்கள்தான் முதல்வராவார் என்று கணித்தனர். ஆனால் அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. மாறாக மத்திய அமைச்சரவையில் இருந்த ஸ்ரீகிருஷ்ண சின்ஹாவும், அனுகிரஹா நாராயண சின்ஹாவும் பீகாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு முதல்வராக்க தயார் செய்யப்பட்டனர். இதை முன்னின்று நடத்தியவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத். பிறகு ஸ்ரீகிருஷ்ணா முதல்வராக்கப்பட்டு டாக்டர் செய்யித் முஹம்மத் அமைச்சராக்கப்பட்டார். இதனை நேருவிடம் புகாராக சொல்லியும் எந்த பிரயோசனமும் இல்லை. இந்த இரண்டு சம்பவங்களும் முஸ்லிம்ளிடம் பிரசாரம் செய்ய ஜின்னாவுக்கு மிக தோதுவாகப் போனது.

AZAD PAPERS AS INCERTED IN INDIA WINS FREEDOM PAGE 17,18

இதன் பிறகுதான் ஜின்னாவின் பேச்சை சில முஸ்லிம்கள் கேட்க ஆரம்பித்தனர். அதன் பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் முஸ்லிம் லீக் அமோக வெற்றி பெறுககிறது. தனக்கு பாதகமான சூழ்நிலைகளையே சாதகமாக மாற்றிக் கொள்ளும் ஜின்னா இதை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்.

கேபினட் மிஷன் பிளான் திட்டம பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். இதன்படி இந்தியாவைப் பிரிக்காமல் சிறுபான்மையினருக்கு தேவையான பாதுகாப்புகளை வழங்கிட வேண்டும். அதோடு முஸ்லிம்களின் உரிமைகளுக்கு ஒரு உத்தரவாதமும் வழங்கப்பட வேண்டும் என்று முடிவானது. இதற்கு நடுவராக ஒரு வைசிராய் இருப்பார் என்று சொல்லப்பட்டது. இதனை முஸ்லிம் லிக்கும் காங்கிரஸூம் ஒத்துக் கொண்டது. இது நடந்தது 1946. நாடு பிளவுறுவது என்பது அப்போது நிறுத்தப்பட்டது.

ஜின்னா முதற்கொண்டு அனைவரும் ஏற்றுக் கொண்ட இந்த அருமையான திட்டத்தை பம்பாய் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நேரு போட்டு உடைத்தார். காங்கிரஸ் யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை. கேபினட் மிஷன் பிளானை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொன்னது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மீண்டும் பிரிவினை கோஷங்கள் தலை தூக்கத் துவங்கின. இதைப் பற்றி அபுல் கலாம் ஆசாத் சொல்லும் போது 1946ல் காங்கிரஸ் தலைமைக்கு ஜவஹர்லால் நேருவை பரிந்துரைத்தது நான் செய்த பெருந் தவறு. மக்கள் விரும்பியதைப் போல் நானே நீடித்திருந்தால் இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறே வேறு விதமாக போயிருக்கும்

AZAD PAPERS AS INCERTED IN INDIA WINS FREEDOM PAGE 164,165,166

திரு ஜின்னா அவர்களும் அன்று மாநில சுயாட்சியையே கேட்டார். அதனை ஏற்றுக் கெண்டிருந்தால் பாகிஸ்தானே உருவாகியிருக்காது
-
கருணாநிதி
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா(3-2-1996) பக்கம் 6

‘1937ல் நடந்த தேர்தலுக்கு பின்னரும் கூட ஜின்னா தனி நாடு பற்றி சிந்திக்கவில்லை
ஹெச்.எம்.சீர்வை(THE AUTHOR OF THE BOOK “PARTITION THE LEGEND AND REALITY ) PAGE 21.

இவ்வாறு பாகிஸ்தான் உருவாக சவர்க்கர், நேரு, பட்டேல், ஜின்னா என்று பலரும் பங்கு வகிக்க இங்குள்ள முஸ்லிம்களை குறை சொல்வது என்ன நியாயம்? அடுத்து ஜின்னா ஒரு ஷியா முஸ்லிம். இஸ்லாமிய நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் மேற்கத்திய கலாசாரத்தை விரும்பும் ஒருவர். இங்குள்ள முஸ்லிம்கள் எவருமே இன்றுவரை இவரை ஒரு தேசத் தலைவராக மதிப்பதில்லை. அபுல்கலாமுக்கு இருந்த மரியாதை ஜின்னாவுக்கு அவர் வாழும் காலத்திலும் முஸ்லிம்களால் கொடுக்கப்படவில்லை. அவர் இறந்தும் அந்த மரியாதையை முஸ்லிம்கள் ஜின்னாவுக்கு கொடுக்கவில்லை.

 

1 comment:

Dr.Anburaj said...

சரி எனக்கு பாக் பிரிவினை கதையை படிக்க நேரம் கிடைக்கவில்லை.பாக்கிதான பிரித்து கொடுத்து விடடோம்.காஷ்மீரில் ஒரு யுத்தம். . .1971 ல் ஒரு யுத்தம். . .பின் பங்களாதேஷ பிரிவினை யுத்தம். . .தொடா்ந்து அலைஅலையாக வரும் பயங்கரவாத தாக்குதல்கள் . . ..கோவை குண்டு வெடிப்பு . . .கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த சிலிண்டா் குண்டு வெடிப்பு . ..குக்கா் வெடிகுண்டு வெடிப்பு. . .. இசுலாமிய தேச படையினரோடு தொடா்பு என்று. . .பயங்கரவாதம் தொடா்கிறதே ஏன் ? சர்தாா் வல்லபாய் படடேல்.. .ராஜேந்திர பிரசாத் அனைவரும் அமரா் ஆகி விட்டாா்கள்.இந்துக்களில் யாா் மீது பழி போடலாம் . ..முஹம்மதுின் போதனை அல் தக்கியா இருக்கிறதே