போஸ்னியா - சரஜீவோ
செர்பிய ராணுவம் போஸ்னிய முஸ்லிம்களை கொன்று குவிக்கிறது. ஒரு இஸ்லாமிய கிராமத்தில் புகுந்த செர்பிய ராணுவம் அங்குள்ள முஸ்லிம்களை கைது செய்கிறது. கைது செய்யப்பட்ட ஒரு முஸ்லிமை நோக்கி 'உனது மகனையும் அவனது கூட்டாளிகளையும் சரணடையச் சொல்' என்று மிரட்டுகிறது. அப்போது அந்த தந்தை வேறு வழியின்றி பயத்துடன் தனது மகனை நோக்கி
'ஓ... நார்மின்! நாங்கள் செர்பியர்களிடம் சரணடைந்து விட்டோம். நீயும் உனது நண்பர்களும் ஆயுதங்களை விடுத்து இவர்களிடம் சரணடைந்து விடு. நாங்கள் இங்கு நலமாக உள்ளோம். ரொட்டித் துண்டுகளும் தருகிறார்கள். இங்கு வந்து விடு'
என்று மிரட்டி சொல்ல வைக்கப்படுகிறார். கொலைக் களத்துக்கு தனது மகனை கூவி அழைக்கும் அந்த தந்தையின் மன நிலையை எண்ணிப் பாருங்கள். ஐரோப்பாவில் ஒரு இஸ்லாமிய நாடு உருவாகி விடக் கூடாது என்று திட்டமிட்டு இன அழிப்பு செய்தனர். ஆனாலும் இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் அவர்கள் இஸ்லாத்தை விட வில்லை. அதை விட வீரியமாக கொள்கை பிடிப்போடு இன்று வாழ்ந்து வருகின்றனர்.
இந்தியாவிலிருந்து இஸ்லாத்தை முற்றாக துடைத்து விட வேண்டும் என்று தினமும் வன்முறையை கட்டவிழ்த்து விடும் சங்கிகள் போஸ்னிய வரலாற்றை சற்று படித்துப் பார்க்கட்டும்.
No comments:
Post a Comment