Followers

Monday, January 09, 2023

படித்ததில் பிடித்தது.

 

படித்ததில் பிடித்தது.

 

 

என் மகனுக்கு முஹம்மத் என்று பெயர் வைத்ததை அறிந்த இடதுசாரி என்று தன்னை அழைத்துக்கொள்ளும் நண்பர் ஒருவர், ஏங்க தமிழில் எல்லாம் பெயர் வைக்க மாட்டீர்களா என்றார். இல்லைங்க, எனக்கு மிகவும் பிடித்த, நான் பின்பற்றும் தலைவர், மனிதர் முஹம்மது நபிதான். எனவே அவரது பெயரை எனக்கு ஆண் குழந்தை பிறந்தால் முறையான உச்சரிப்போடு வைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே விரும்பினேன் என்று சொன்னேன்.

 

 

ஏன், தமிழ்நாட்டில் எல்லாம் தலைவர்கள் இல்லையா? அரேபியாவில் இருந்துதான் ஒருவரை தலைவராக ஏற்க வேண்டுமா? என்றார். நான் அப்போது மார்க்ஸ், ஸ்டாலின், லெனின் போன்ற அயல்நாட்டு கம்யூனிஸ்டு தலைவர்கள் பெயர்களை தோழர்கள் வைக்கிறார்களே? அதுபற்றிய உங்கள் புரிதல் என்ன? என்று கேட்டேன்.

 

 

அவர்களும் முஹம்மதும் ஒன்றா? என்று விதண்டாவாதம் செய்தார். நிச்சயம் ஒன்றில்லை. முஹம்மது நபி அவர்கள் பேசிய சித்தாந்தம் வேறு. ஓரிறைக்கொள்கையை பரப்பினார். மனிதனுக்கு வாழ்வியலை கற்றுக்கொடுத்தார். மது, சூது, விபச்சாரத்துக்கு எதிராக இருந்தார். அடிமைகளுக்கு சுதந்திரம் கொடுத்தார். பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அடித்து நொறுக்கினார். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகள் பற்றி பேசினார் என்று பேசியபோது, இடைமறித்த அவர் ஏங்க மதப்பிரச்சாரம் செய்றீங்க.. இப்படிதான் மதமாற்றம் செய்வீங்களா? என்று கேட்டார்.

 

 

ஒரு தலைவரை பற்றி தவறான புரிதலில் நீங்கள் கேள்வி எழுப்பும்போது விளக்கம் கொடுக்க முயன்றேன். விளக்காவிட்டால் பதில் இல்லையா? என்று கேலி செய்வீர்கள். விதண்டாவாத மனநிலையிலிருந்து வெளியே வந்து ஆரோக்கியமான கருத்து பரிமாற்றத்தை வைத்திடுங்கள். தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த மார்க்ஸ், லெனின் போன்ற தலைவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. நான் அவர்களை பற்றி படித்துள்ளேன்.

 

 

எனவே நீங்களும் முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள். சந்தேகம் இருந்தால் கேளுங்கள். மார்க்கம் கடந்து அவரது நற்குணங்கள், கருத்தியல்கள், அரசியல் எல்லாம் உங்களை கவரும் என்றேன். ஒரு ஏளனமான சிரிப்போடு என்னை கடந்து சென்றார். வலதுசாரிகளை விட்டுவிடுங்கள். இடதுசாரிகள் பெரும்பாலானோர் முஹம்மது நபியை படிக்காமலேயே அவரை விமர்சன கண்ணோட்டத்துடன் அணுகிறார்கள்.

 

 

அவரை படித்தால் உங்களுக்கு புரிதல் ஏற்படலாம். முஹம்மது நபி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த தோழர் பேரா.அருணன் எழுதிய அழகிய பதிவை பார்த்ததும் இக்கருத்தை பதிவு செய்ய விரும்பினேன்.

 

1 comment:

Dr.Anburaj said...

முஹம்மதுவை முழுமையாக படிக்காதது தான் நல்லது. படித்தால் கடுமையாக விமா்சனம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.சாயம் வெளுத்து விடும்.