எப்பா "டைரக்டர் நவீன்"
...
அந்த பெண் என்ன சொன்னார் என்று
பார்க்க மாட்டியா? இல்ல உனக்கு அறிவு இருக்கா இல்லையா ?எப்படி நீயெல்லாம் டைரக்டர்
ஆனே? இப்ப தான் சில டைரக்டர்களுக்கு அறிவு இல்லை என்பது தெரிகிறது.
இஸ்லாத்தைப் பொறுத்தவரையில்
ஆண் பெண் இருபாலருக்கும் சில கட்டுப்பாடுகள் நெறிமுறைகள் விதிமுறைகள் எல்லாம் மார்க்கம்
வகுத்து வழங்கி உள்ளது. அதை ஒருபோதும் அவர்கள் மீறக்கூடாது என்பது இஸ்லாத்தின் கட்டளை!
ஆனால் இந்தப் பெண் அந்த கட்டுப்பாடுகளை
மீறியது மட்டுமல்லாமல் அந்த குறிப்பிட்ட நடிகரை நான் வணங்கும் கடவுள் என்றும் சொல்லிவிட்டாள்!
(நவூதுபில்லாஹ்)
அல்லாஹ்வை மட்டுமே ஒரு முஸ்லிம்
கடவுளாக ஏற்று வணங்கி வழிபட வேண்டும் என்பது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை. அதை ஒரு
முஸ்லிம் மீறும் பட்சத்தில் அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவனாக கணிக்கப்படுகின்றான்!
ஆகவே சமூக ஊடகத்தில் இந்த
பெண்ணின் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதை புரிந்து கொண்ட அந்தப் பெண் தான்
செய்த தவறை உணர்ந்து இறைவனிடம் மன்னிப்பு கோரி நான் மீண்டும் விட்டேன் என்று ஒரு வீடியோ
பதிவிட்டிருந்தார். சம்பவம் அத்தோடு முடிந்து விட்டது!
இஸ்லாத்தின் மீது பழி சுமத்த
என்ன வழி கிடைக்கும் என்று காத்திருக்கும் சில காவி, கருப்பு, சிகப்பு, சங்கிகள் இந்த சம்பவத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி
‘’பார்த்தீர்களா... அந்தப்
பெண்ணை மிரட்டி உருட்டி பயமுறுத்தி பணிய வைத்திருக்கிறார்கள்! இஸ்லாத்தில் பெண்ணுரிமை
இல்லை அங்கே ஆணாதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது’’ என்றெல்லாம் பொய்யான பிரச்சாரம்
செய்து பதிவுகள் இடுகிறார்கள். அதில் ஒன்றைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள்!
இது வன்மையாக கண்டிக்கதக்கதாகும்.
வாட்ஸ்அப் பகிர்வு
No comments:
Post a Comment