Followers

Monday, May 19, 2014

எனக்கு ஹிஜாப் தான் முக்கியம்- முர்ஷிதா நஸ்ரின்



எனக்கு ஹிஜாப் தான் முக்கியம் : முர்ஷிதா நஸ்ரின்....!!

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தை சேர்ந்தவர் ஹாஜா அலாவுதீன். இவருடைய மகள் முர்ஷிதா நஸ்ரின்.

இவர் திருவாரூரிலுள்ள GRM பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மாவட்டத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார்.

மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவியை கௌரவிக்கும் நோக்கில் பள்ளி நிர்வாகம் மீடியாவுக்கு அழைப்பு விடுத்தது.

மீடியா முன்னிலையில் வருவதாக இருந்தால் நிகாபை கழட்ட சொல்வார்கள். எனக்கு என்னுடைய கண்ணியம் தான் முதலில் முக்கியம்.உலகில் கிடைக்கும் பெயர் புகழ் எதுவும் தேவையில்லை, அல்லாஹ்விடமிருந்து நற்பெயர் கிடைத்தாலே போதுமானது என்று மீடியா முன்னால் தோன்றுவதை முழுமையாக மறுத்துள்ளார்.

அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் அந்த மாணவிக்கு சான்றிதல் வழங்கி கௌரவித்தார். முகம் மட்டும் திறந்து சபையில் வருவதற்கு குர்ஆன் தடை சொல்லவில்லை. மேலதிகமாக பல ஆண்களுக்கு முன்னால் தனது முகத்தைக் காட்ட இந்த சகோதரி விரும்பவில்லை. இது இவரின் சொந்த விருப்பமாக பார்க்கப்பட வேண்டும்.

புர்கா அணிவதால் பெண்களின் முன்னேற்றத்துக்கு தடை ஏற்படுகிறது என்று சொல்பவர்கள் இந்த சகோதரியின் முன்னேற்றத்தை பார்த்து தங்கள் கருத்தை மாற்றிக் கொள்வார்களாக! மீடியாக்களின் முன்னால் வர துடிக்கும் பெண்களின் மத்தியில் இவரது இஸ்லாமிய பற்று நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

நம்முடைய அன்பு சகோதரி முர்ஷிதா நஸ்ரின் 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் விபரம்

தமிழ் 192, ஆங்கிலம் 188, பொருளியல் 200, வணிகவியல் 200, கணக்குப்பதிவியல் 200, வணிக கணிதம் 197, மொத்தம் 1177

மாவட்டத்தில் முதலிடம் பிடித்த அன்பு சகோதரி மாநில அளவிலும் முதலிடம் பிடித்து, தேசிய அளவிலும் முதலிடம் பிடித்து இம்மையில் பல்வேறு சாதனைகள் புரிந்து, மறுமையில் அல்லாஹ்வுடைய திருப்தியை அடைந்து ஈருலகிலும் வெற்றிபெறுமாறு இறைவனிடம் இருகரம் ஏந்தி துஆ செய்கிறோம்.


--------------------------------------------------------------------

இனி மற்றொரு மாணவி....



முர்ஷிதா நஸ்ரின், (1,025 மதிப்பெண்கள் - அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கம்பம்): ''எங்கப்பா டீக்கடை வெச்சுருக்கார். வீட்டுல மொத்தம் நாலு குழந்தைங்க. நான் ரெண்டாவது பொண்ணு. தினமும் வீட்டு வேலையெல்லாம் முடிச்சுட்டுத்தான் ஸ்கூலுக்குப் போவேன். அதுலயும் பொதுத்தேர்வு சமயம், ஆபரேஷன் பண்ணி படுத்த படுக்கை ஆயிட்டாங்க அம்மா. அவங்களையும், அப்பா, அண்ணன், தம்பி, தங்கச்சியையும், வீட்டையும் கவனிச்சுக்கிட்டே பரீட்சை எழுதினேன். 'நல்லா படிக்கிற புள்ளைய, இப்படி கஷ்டப்படுத்துறோமே'னு எங்கம்மா வருத்தப்படுவாங்க. இருந்தாலும் அவங்களுக்கும் வேற வழி இல்லையே!

இத்தனை நெருக்கடிக்கு நடுவுலயும் எங்க ஸ்கூல்ல செகண்ட் மார்க் எடுத்திருக்கேன். பாடத்தை மனசுல ஏத்துறதுக்கு முன்ன, எங்க குடும்ப கஷ்டத்தை மனசுல ஏத்தினதுதான் முக்கிய காரணம்! இதுவரைக்கும் டியூஷன் போனதே இல்ல. அதுக்கு வசதி இல்லைங்கிறது ஒரு பக்கமிருந்தாலும், அதுல எனக்கு நம்பிக்கையும் இல்ல. ராத்திரி, பகல் பார்க்காம படிச்சாலும், பவர் கட் ரொம்பவே படுத்திருச்சு. மெழுகுவத்தி வெளிச்சம்தான் கைகொடுத் துச்சு. என் வகுப்பாசிரியர் கிருஷ்ணகுமார் சார், இன் ஜினீயர் கனவை விதைச்சது, எனக்கு பெரிய உந்து சக்தியா இருந்துச்சு.


நன்றி விகடன், சங்கை ரிதுவான்

---------------------------------------------------------------------------



விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் கிராமத்தில் தச்சு வேலை செய்து வருபவர் முருகேசன் (45). இவருக்கு கிருத்திகா, சரண்யா என்ற இரு மகள்களும், சந்திரபிரகாஷ் என்ற மகனும் உள்ளனர். இவர்களது இரு மகள்களும் ஒரு ஆண்டு வயது வித்தியாசத்தில் இருந்தாலும் இருவரும் ஒரே வகுப்பில் கம்மாபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் +2 பொதுத்தேர்வு எழுதி இருவரும் பள்ளியின் முதல் (930) மற்றும் இரண்டாம் (928) மதிப்பெண் எடுத்திருந்தனர்.

முருகேசன் ஒரு நீரிழிவு மற்றும் இதய நோயாளி. மேலும் கலைஞர் வீடுகட்டும் திட்டத்தில் அரசிடம் ரூ 70,000 பெற்று கொண்டு மேலும் ரூ 2 லட்சம் கடனாக வாங்கி வீட்டை கட்டி முடித்துள்ளார். குடும்ப பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, “பெரிய மகளுக்கு திருமணம் செய்து விட்டு , ஒரு மகளை படிக்க வைக்கலாம் இருவரையும் படிக்க வைப்பது இப்போதுள்ள சூழலில் முடியாத காரியம்” என தனது மனைவி ராஜலட்சுமியிடம் பேசிக் கொண்டிருந்த்தை கேட்டு மனமுடைந்த சகோதரிகள் பெற்றோர்கள் வெளியில் சென்றிருந்த நேரம் பார்த்து ஒரே துப்பட்டாவில் இரு முனைகளிலும் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த செய்தி அப்பகுதி மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியது. செய்தி அறிந்த மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தலைவர் குணசேகரன், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் தலைவர் வை. வெங்கடேசன் மற்றும் வீரகாந்தி, செல்வகுமார், செல்வம், குமார் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.

இது பற்றி சகோதரிகளின் தந்தையிடம் கேட்ட பொழுது “எம்பொண்ணுங்க பத்தாம் கிளாஸ் ஸ்கூல் பஸ்ட் 455 மார்க் எடுத்து எல்லாரும் பாராட்டுனாங்க. இப்ப 12-ம் வகுப்புலயும் ஸ்கூல் பஸ்ட் சொன்னவுடனே ரொம்ப சந்தோஷப்பட்டோம். நானும் என் சம்சாரமும் தான் இதை பற்றி பேசிகிட்டிருந்தோம். இதை காதுல கேட்டுருந்த என் பொண்ணுங்க இப்படி பண்ணிக்கிடுச்சிங்க ஒரு பொண்ணு கட்டி குடுத்தாலும் ஒரு பொண்ண நல்லா படிக்க வைச்சிருப்பேன். ரெண்டும் இப்படி பண்ணிடுச்சிங்க” என கலங்கினார்.

எதிர்வீட்டில் வசிக்கும் வணிகவியல் இளங்கலை (B.Com) பட்டதாரியான செந்தில் “அந்த பிள்ளைங்களோடவே படிப்பும் பொறந்த மாதிரி, எப்பவும் படிப்பு படிப்புனே இருக்குங்க. வெளில வர்ற வேலையை கிடையாது. சமூகத்தை பற்றி சரியான புரிதல் இல்லாம இப்படி பண்ணிடிச்சிங்க” என கூறினார்.

அம்மாணவிகள் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் G.சுப்பிரமணியன் அவர்களிடம் விசாரித்த போது “இரண்டு பொண்ணுங்களும் போட்டி போட்டு படிக்குங்க. ஆனால் +2 ரிசல்ட் வந்த 3-ம் நாளே இப்படி பண்ணிக்குங்கன்னு எதிர்பாக்கலே. அரசாங்கம் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் நிறைய கவுன்சிலிங் கொடுக்கனும். அப்பதான் இது மாதிரி தற்கொலை எல்லாம் முடிவுக்கு வரும்” என்று கூறினார்.

நன்றாக படிக்கும் இது போன்ற பெண்கள் தற்கொலையை நாடுவது ஆச்சரியமாக உள்ளது. ஒட்டு மொத்த மாணவ மாணவிகளுக்கும் ரிசல்ட் வருவதற்கு ஒரு வாரம் முன்பு அரசு செலவில் மன நல மருத்துவரைக் கொண்டு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இது பொன்ற தற்கொலைகள் அதிகரித்தவண்ணமே உள்ளன. குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். 1,000க்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள் கூட, எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என, தற்கொலை செய்து கொள்ளும் சூழல் உருவாகி உள்ளது.கடந்த 2012 - 13ம் கல்வியாண்டு, தேர்வு முடிவு வெளியிட்ட பின், தமிழகத்தில், 18 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால், 2013 - 14ம் ஆண்டில், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான, ஒரு வாரத்தில், 30 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில், தான் எதிர்பார்த்த, அதிக மதிப்பெண்ணை, தன் மகன் எடுக்கவில்லை என, தந்தை தற்கொலை செய்து கொண்டதும் நிகழ்ந்துள்ளது.

இஸ்லாத்தை ஏற்ற இளம்பெண் 'அபரூபா' எம்.பி'யானார்!

இஸ்லாத்தை ஏற்ற இளம்பெண் 'அபரூபா' எம்.பி'யானார்!



மேற்கு வங்கத்தை சேர்ந்த 'அபரூபா பொட்டார்' என்ற 28 வயது இளம்பெண், சமீபத்தில் தனது பெயரை 'ஆப்ரீன் அலி' என மாற்றிக்கொண்டு இஸ்லாத்தை தழுவிய நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். இந்த தொகுதியானது தலித்களுக்காக ஒதுக்கப்பட்ட ரிசர்வ் தொகுதியாகும். இவர் பிறப்பால் தலித் என்பதால் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

BSC பட்டதாரிப் பெண்ணான ஆப்ரீன் அலி'யின், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களில் பழைய (APARUPA PODDAAR) பெயரே இருந்தபடியால், அதே பெயரில் தேர்தலை சந்தித்தார்.

திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஹூக்ளி மாவட்டத்தில் அரம்பாக் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆப்ரீன் அலி என்ற தனது இஸ்லாமிய பெயரை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டு தேர்தலை சந்தித்தார்.

ஆரம்பாக் தொகுதியில், 7,48,764 வாக்குகளைப் பெற்ற ஆப்ரீன் அலி, சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக வேட்பாளர்களை தோற்கடித்தார்.

28 வயது ஆப்ரீன் அலி, BSC யுடன், சட்டப்படிப்பையும் படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே பழைய முஸ்லிம்களை விட புதிதாக இஸ்லாத்துக்குள் நுழைபவர்கள் இஸ்லாமிய கடமைகளை பேணுவதில் அதிக அக்கறையுடன் இருப்பார்கள். நாடாளுமன்றத்தில் இவரின் குரல் உவைசியின் குரலோடு சேர்ந்து இனி கம்பீரமாக ஒலிக்கும். சட்டம் வேறு பயின்றவர். இவரை போன்ற கல்வியாளர்கள் நாடாளுமன்றத்தை நிறைக்க வேண்டும்.

இவருடைய ஈமெயிலுக்கு சென்று உங்களின் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள்.

Aparupa Poddar (Afreen Ali)

Constituency: Arambagh

Date of Birth: 8 January 1986

Educational Qualifications: BSc, LL.B

Positions held in the past:

Vice-Chairman, Rishra Municipality.

Additional Information:

Ms. Ali has been associated with Trinamool Chhatra Parishad and is a Law Practioner.

Email: afreen@aitmc.org

Sunday, May 18, 2014

மெக்காவை பார்த்து அதிசயித்த விண்வெளி வீரர்கள்!



(புகைப்படத்தில் இருப்பது இளவரசர் சுல்தான் பின் சல்மான் மற்றும் அனடோலி இவானிஷின்)

ரஷ்யாவின் விண்வெளி வீரர்கள் 'இளவரசர் சல்மான் அறிவியல் ஆய்வகத்துக்கு' வருகை புரிந்திருந்தனர். விண்வெளி வீரர்களுக்கான அமைப்பாக செயல்படும் (ASE) என்ற அமைப்பின் 25 ஆவது அமர்வுக்கு இந்த விண்வெளி வீரர்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களின் பெயர்கள் முறையே அனடோலி இவானிஷின் (Anatoly Ivanishin), Andrey Borisenko, Alexander Samokutyaev, Anton Shkaplerov, Boris Meshcherykov (உச்சரிப்புக்கு சற்று சிரமப்பட வேண்டியிருக்கும் :-))

அனடோலி இவானிஷின்(Anatoly Ivanishin) என்ற ரஷ்ய விண்வெளி வீரர் அங்குள்ள மாணவர்களோடு பேசும் போது 'நாங்கள் விண்வெளியில் பயணிக்கும் போது கால நிலை சிறப்பாக இருக்கும் நேரங்களில் பூமியை படம் பிடிப்பது உண்டு. அவ்வாறு நாங்கள் படம் பிடிக்கும் அமெரிக்கா, பிரான்ஸ், ஐரோப்பாவின் சில இடங்களையும் படம் பிடிக்க முயற்ச்சித்தோம். லென்ஸ் அந்த அளவு பவர் இல்லாததால் எங்களால் துல்லியமாக எடுக்க முடியவில்லை. சில மணிகளுக்கு பிறகு வளைகுடாவின் பக்கம் எங்கள் பார்வையை செலுத்தினோம். ஆச்சரியமாக அப்போது இரண்டு இடங்கள் மட்டும் மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. இது எனக்கு அதிசயமாகவும் தெரிந்தது. அந்த இரண்டு இடங்களையும் வைத்து மேலும் பல புகைப்படங்களையும் எடுத்தோம். அதன் பிறகு பல ஆய்வுகளுக்கு பிறகு அந்த இரண்டு இடங்கள் மெக்கா, மற்றும் மதினா என்ற இடங்கள் என்பதை அறிந்து நான் ஆச்சரியப்பட்டு போனேன். உலகின் மற்ற பாகங்களில் இந்த மாற்றத்தை நாங்கள் காணக் கூடியதாக இல்லை. இது எனக்கு ஒரு நெகிழ்ச்சியான அனுபவம்" என்றார்.

PSSO என்ற அமைப்பானது சவுதி அரசால் லாப நோக்கமற்று நடத்தப்படும் ஒரு அமைப்பாகும். இதன் மூலம் மக்களுக்கு அறிவியலின் முக்கியத்துவத்தையும், விண்வெளியின் பல புதிர்களை விடுவித்து மக்களுக்கு அதன் அறிவை சேர்ப்பிக்கும் ஒரு அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக இளவரசர் சுல்தான் பின் சல்மான் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் மதினா நகரத்து மேயர் பேசும் போது 'நீங்கள் ரஷ்ய தேசத்தவராக இருக்கலாம். ஆனால் உலக மக்களுக்கு விண்வெளி வீரர்களான நீங்கள் பொதுவானவர்கள். அது போல் நானும் சவுதிக்கு மட்டும் சொந்தமானவல்ல. உலக மக்களுக்கு பொதுவானவன். நாம் அனைவரும் இந்த உலக மக்களுக்கு சேவையாற்ற படைக்கப்பட்டுள்ளோம். 700 மில்லியன் உலக மக்களில் உங்களைப் போன்ற ஒரு சில விண்வெளி வீரர்களுக்கே விண்வெளிப் பயணம் சாத்தியமானது. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.

இளவரசர் சுல்தான் இந்த அமைப்பு சிறப்பாக செயல்பட மிகவும் உதவிகரமாக இருக்கிறார். இந்த அமைப்பு ஆரம்பித்த போதும் இந்த வீரர்கள் சவுதி வந்திருந்தனர். தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் வந்துள்ளனர். இவர்களின் தொடர்பானது சவுதி இளைஞர்களின் விண்வெளி ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

மதினா நகரத்தின் தோற்றத்தை நீங்கள் எனக்கு விளக்கிய போது மெய் சிலிர்த்து போனேன். நீங்கள் உங்கள் கண்களால் மட்டுமே பார்க்கிறீர்கள். நான் அதோடு எனது இதயத்திலும் அந்த நிகழ்வை உள் வாங்கிக் கொண்டேன். மனித வாழ்வின் பல அரிய தத்துவங்களை நீங்கள் அனைவரும் மேலும் ஆய்வு செய்ய வேண்டும். தொலை தொடர்பு சாதனங்களை இதற்கு அதிகம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். உலகில் உள்ள எத்தனையோ நகரங்கள் இதை விட அதிக ஒளி வெள்ளத்தில் மதிக்கிறது. ஆனால் குர்ஆனில் இறைவன் இந்த இரண்டு நகரங்களையும் புனித நகரங்களாக அறிவிக்கிறான். அத்தகைய புனித நகரங்கள் ஒளி வெள்ளத்தில் இந்த விண்வெளி வீரர்களுக்கு காட்சியளித்தது ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல. அதே போன்ற குர்ஆனின் உண்மை ஒளியை இந்த வீரர்களுக்கும், உலகின் பல கோடி மக்களுக்கும் அவர்களின் இதயத்தில் வல்ல இறைவன் ஏற்றுவானாக!' என்ற பிரார்த்தனையோடு முடித்தார்.

தகவல் உதவி
அரப் நியூஸ்
18-05-2014

'எல் பிஜான்' என்ற மற்றொரு வளைகுடா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியையும் ஆங்கிலத்தில் தருகிறேன்.

Mecca and Medina are two bright cities on earth. There were Russian cosmonaut, Anatoly Ivanichen, who in an interview with the newspaper "El Bejan" UAE has discovered the phenomenon in question. During the interview Ivanichen among other things, said: "We tried to get pictures from space of some cities that are known for their brightness, such as Paris, some areas of Europe and North America, but the images were unclear when caught . Later, we decided that the ship crew co drejtonim to the Arabian Peninsula to see if it would be possible to assure other view from space. I was surprised when we saw two completely lit cities, images of which are clearly distinguished. Once we determine the country and had taken pictures of money in order to make their control, our surprise grew even more when we learned that carried pictures belonged exactly Mecca and Medina. " "The area on which we focused our lenses of high quality had not yet reached the sunlight, but despite this, we managed to take some photos that were very clear and their views were very beautiful," quoted be expressed in following his story for the newspaper Russian scientist, Anatoly Ivanichen.



--------------------------------------------------------

'ஏ பக்தர்களே! கடற்கரை அருகிலிருக்கும் தருகாபன் மனிதனுடையது அல்ல. அங்கு நீ வழிபாடு பண்ணுவாயாக! அது நீ சொர்க்கம் செல்ல பரிந்துரை செய்யும்.'
-ரிக் வேதம்: 10:155:3


நலந்த விஷால் ஷப்த்சாகர் அகராதியானது தருகாபன் என்பதற்கு வனாந்திரத்திலுள்ள புண்ணியஸ்தலம் என்று பொருள் கூறுகிறது. பாலைவனத்திலுள்ள இறை இல்லம் கஃபாவைத்தான் இங்கு குறிப்பிடப்படுகிறது. பவிஸ்ய புராணமும் இதே கருத்தையே கொடுக்கிறது. இந்து மத வேதங்களும் ஏக இறைவனையே வழிபட சொல்கிறது.

பொது சிவில் சட்டம் வந்தால் என்ன நஷ்டம்.?- ரங்கநாதன்!

திரு ரங்கநாதன்!

//சுவனப்ரியன் அவர்களுக்கு பொது சிவில் சட்டம் வந்தால் என்ன நஷ்டம்.?//

நமது நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த 60 ஆண்டுகளில் சிவில் சட்டங்கள் மதங்களுக்குள் வேறுபடுவதை வைத்து என்ன பிரச்னையை இந்த நாடு சந்தித்து விட்டது? கிரிமினல் சட்டங்களை பொறுத்த வரை அனைவருக்கும் பொது சட்டமே. திருமண சம்பந்தம், பாகப்பிரிவினை, மத சடங்குகள் இதில் மட்டும்தான் அவரவர் மத சட்டங்களை பின் பற்ற நமது நாட்டு சிவில் சட்டம் அனுமதிக்கிறது. பல மதங்களை உடைய நமது நாட்டுக்கு இந்த சட்டம் மிக அவசியம்.இதனால் கலவரமோ, அரசுக்கு வருவாய் இழப்போ ஏதும் வந்துள்ளதா?

கிரிமினல் சட்டங்களை பொறுத்த வரை அது ஒரு மதத்தோடு முடிந்து விடுவதில்லை. உதாரணத்திற்கு ஒரு முஸ்லிம் ஒரு இந்துவை கொடுக்கல் வாங்கலில் கொல்லலாம். அதே போல் ஒரு இந்து மற்றொரு முஸ்லிமையும் கொடுக்கல் வாங்கலில் கொல்லலாம். இங்கு இரு மதங்கள் சம்பந்தப்படுவதால் பொது சட்டம் தேவைப்படுகிறது. எனவே தான் நமது சட்டத்தை வகுத்தவர்கள் கிரிமினல் சட்டங்களுக்கு அனைத்து மதத்தவரையும் உள்ளாக்கியிருக்கிறார்கள். ஆனால் சிவில் சட்டம் மற்ற மதத்தோடு சம்பந்தப்படுவதில்லை. திருமணமோ பாகப்பிரிவினையோ மத சடங்குகளோ மற்ற மதத்தவரை பாதிப்பதில்லை. எனவே தான் அவரவர் மத கோட்பாடுகளுக்கொப்ப சிவில் சட்டங்களை வகுத்துள்ளனர்.

இனி பொது சிவில் சட்டம் வந்தால் என்னவெல்லாம் அரங்கேறும் என்பதற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்.

அல்லாஹ்வையும் வணங்கிக் கொள், அருகில் ராமனையும் கிருஷ்ணனையும் வைத்துக் கொள். குர்ஆனையும் படி: அதோடு ராமாயணத்தையும் படி: அதன் கருத்துக்களை உள் வாங்கி அதற்கு மதிப்பு கொடு. திருமண ஒப்பந்தம், சொத்து பாகப்பிரிவினை, போன்ற அனைத்திலும் பார்பனிய சட்டங்களை முஸ்லிம்களாகிய நீ பின்பற்று: எவ்வாறு சமணத்தையும் பவுத்தத்தையும் இந்து மதத்தின் ஒரு பிரிவாக மாற்றினோமோ அதுபோல் இஸ்லாமும் கிறித்தவமும் இந்து மதத்தின் ஒரு பிரிவாக அதாவது இந்திய கலாசாரத்தை ஏற்றுக் கொண்ட மதங்களாக மாறிவிட வேண்டும். இதை நோக்கித்தான் பொது சிவில் சட்டம் செல்கிறது.

இதற்கு இந்து பிற்படுத்தப்பட்ட மக்களே முதலில் எதிர்க்க ஆரம்பிப்பார்கள். ஏனெனில் இந்துக்களில் பலர் இறந்த உடலை எரிக்கிறார்கள்: சிலர் புதைக்கிறார்கள்: பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் சாதி வழக்கத்திற்கு ஒப்ப பல கடவுள்களை வணங்குகின்றனர். பார்பனர்கள் ராமன், கிருஷ்ணன், போன்ற உயர் ரக கடவுள்களை மட்டுமே வணங்குவர். சுடலை மாடன், போன்ற கிராமிய கடவுள்களை பார்பனர்கள் கடவுளாக மதிப்பதில்லை. தங்கள் கோவில்களில் அதற்கு இடமும் தர மாட்டார்கள். ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களின் கோவில்களில் ராமனும், கிருஷ்ணனும் தெய்வங்களாக வீற்றிருக்கும். பொது சிவில் சட்டத்தில் அரசு எதனை கடவுளாக்க வேண்டும், எப்படி வழிபட வேண்டும், எப்படி திருமணம் செய்ய வெண்டும் என்பது வரை சட்டங்களாக்கி அதனை பொதுவாக்கி விடுவர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது இந்து பிற்படுத்தப்பட்ட மக்களே! கிராமிய கோவில்களில் ஆடு, கோழி, மாடு போன்றவற்றை பொது சிவில் சட்டத்தில் பலி கொடுக்க முடியாது. பார்பனர்களுக்கு காளை மாடு, பசு மாடு போன்றவை தெய்வங்கள். எனவே அதனை பலி கொடுப்பதற்கும் உணவுக்காக அறுப்பதற்கும் தடை விதிக்கப்படும்.

நாட்டின் முக்கால் வாசிப்பேர் வறுமையல் உழன்று கொண்டிருக்கும் போது அதனை போக்க நமது அரசு முயற்சிக்க வேண்டும். பொது சிவில் சட்டம் அவனது வறுமையை எந்த வகையில் போக்கி விடும் என்று நினைக்கிறீர்கள்.?

Saturday, May 17, 2014

சகோதரி ஹைலா - குறையொன்றுமில்லை



கை கால்கள் நலமாக இருந்தும் பலர் பல நாடுகளிலும் பிச்சை எடுத்தும் திருடியும் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். சவுதி அரேபியா தமாம் மாகாணத்தைச் சார்ந்த ஹைலா என்ற 16 வயது மாணவிக்கு பிறக்கும் போதே கைகள் இல்லாது குறையாக பிறந்தார். இவரின் குறையானது, எந்த மன வருத்தத்தையும் தரவில்லை. கடுமையாக பயிற்சியை மேற்கொண்டார். தனது கால்களாலேயே அனைத்து வேலைகளையும் செய்து கொள்ள பழகினார். சமையல் செய்வதிலும் இவருக்கு எந்த சிரமும் இல்லை. மக்ரோனி, கப்ஸா, போன்ற அனைத்து சவுதி உணவு பதார்த்தங்களை எந்த சிரமும் இன்றி தனது கால்களாலேயே செய்து முடிக்கிறார். தனக்கு தேவையான உணவு குடி நீர் போன்றவற்றை எவரது உதவியும் இன்றி ஒற்றைக் காலில் ஊன்றிக் கொண்டு மற்றொரு காலின் மூலமாக சாப்பிடுவது ஆச்சரியமாக இருக்கிறது.

இதனையும் தாண்டி ஓவியத்தின் மேல் இவருக்கு ஆர்வம் வந்தது. முதலில் சிறு சிறு தாள்களில் வரைந்து பழக்கப்படுத்திக் கொண்டு தற்போது துணிகளிலும் மரப் பலகைகளிலும் அநாயசமாக படங்களை வரைந்து தள்ளுகிறார். 'நான் இரண்டு கைகளை இழந்தாலும் எனது மன உறுதியை இழக்கவில்லை. எனது கால் விரல்களை அனைத்து வேலைகளுக்கும் உபயோகிக்க பழகிக் கொண்டேன். எனது குடும்பம் ஆரம்பத்திலிருந்தே எனது அனைத்து ஆர்வங்களுக்கும் உறுதுணையாக நின்றது. ஓரளவு வரைய கற்றுக் கொண்டவுடன் சிறந்த ஓவிய ஆசிரியரின் துணை கொண்டு பல அரிய ஓவியங்களை கால்களைக் கொண்டு வரையவும் கற்றுக் கொண்டேன். நான் ஒரு ஓவியனாக பரிணமிப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. கண்ணாடிக் குவளைகள், பிளாஸ்டிக் போர்டுகளில் எனது ஓவியங்கள் இன்று வந்து கொண்டிருக்கின்றன.' என்கிறார் ஹைலா.

இவரது ஓவியங்கள் தமாமில் உள்ள 'இளவரசர் சுல்தான் புனர் வாழ்வு மையத்தில்' காட்சிக்காகவும் வைக்கப்பட்டது. தலைநகர் ரியாத்திலும் இவரது படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. கால்களால் இத்தனை தத்ரூபமாக வரைய முடியுமா என்று பார்வையாளர்கள் ஆச்சரியமுடன் ஹைலாவிடம் தங்களின் பாராட்டுக்களை பகிர்ந்து கொண்டனர்.

நான்கு சகோதரிகளும் ஒரு சகோதரனும் இவருடன் கூடப்பிறந்தவர்கள். இவர் ஒருவர் மட்டுமே குறையோடு பிறந்தவர். ஆனால் அந்த குறை தனக்கும் தனது குடும்பத்துக்கும் ஒரு பாரமாக மாறி விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார் ஹைலா. மனிதன் மனது வைத்தால் 'குறையொன்றுமில்லை' என்று மேலும் முன்னேற பார்ப்பான். சகோதரி ஹைலாவை நாமும் வாழ்த்துவோம்.

தகவல் உதவி சவுதி கெஜட்
16-05-2014