'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, May 17, 2014
சகோதரி ஹைலா - குறையொன்றுமில்லை
கை கால்கள் நலமாக இருந்தும் பலர் பல நாடுகளிலும் பிச்சை எடுத்தும் திருடியும் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். சவுதி அரேபியா தமாம் மாகாணத்தைச் சார்ந்த ஹைலா என்ற 16 வயது மாணவிக்கு பிறக்கும் போதே கைகள் இல்லாது குறையாக பிறந்தார். இவரின் குறையானது, எந்த மன வருத்தத்தையும் தரவில்லை. கடுமையாக பயிற்சியை மேற்கொண்டார். தனது கால்களாலேயே அனைத்து வேலைகளையும் செய்து கொள்ள பழகினார். சமையல் செய்வதிலும் இவருக்கு எந்த சிரமும் இல்லை. மக்ரோனி, கப்ஸா, போன்ற அனைத்து சவுதி உணவு பதார்த்தங்களை எந்த சிரமும் இன்றி தனது கால்களாலேயே செய்து முடிக்கிறார். தனக்கு தேவையான உணவு குடி நீர் போன்றவற்றை எவரது உதவியும் இன்றி ஒற்றைக் காலில் ஊன்றிக் கொண்டு மற்றொரு காலின் மூலமாக சாப்பிடுவது ஆச்சரியமாக இருக்கிறது.
இதனையும் தாண்டி ஓவியத்தின் மேல் இவருக்கு ஆர்வம் வந்தது. முதலில் சிறு சிறு தாள்களில் வரைந்து பழக்கப்படுத்திக் கொண்டு தற்போது துணிகளிலும் மரப் பலகைகளிலும் அநாயசமாக படங்களை வரைந்து தள்ளுகிறார். 'நான் இரண்டு கைகளை இழந்தாலும் எனது மன உறுதியை இழக்கவில்லை. எனது கால் விரல்களை அனைத்து வேலைகளுக்கும் உபயோகிக்க பழகிக் கொண்டேன். எனது குடும்பம் ஆரம்பத்திலிருந்தே எனது அனைத்து ஆர்வங்களுக்கும் உறுதுணையாக நின்றது. ஓரளவு வரைய கற்றுக் கொண்டவுடன் சிறந்த ஓவிய ஆசிரியரின் துணை கொண்டு பல அரிய ஓவியங்களை கால்களைக் கொண்டு வரையவும் கற்றுக் கொண்டேன். நான் ஒரு ஓவியனாக பரிணமிப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. கண்ணாடிக் குவளைகள், பிளாஸ்டிக் போர்டுகளில் எனது ஓவியங்கள் இன்று வந்து கொண்டிருக்கின்றன.' என்கிறார் ஹைலா.
இவரது ஓவியங்கள் தமாமில் உள்ள 'இளவரசர் சுல்தான் புனர் வாழ்வு மையத்தில்' காட்சிக்காகவும் வைக்கப்பட்டது. தலைநகர் ரியாத்திலும் இவரது படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. கால்களால் இத்தனை தத்ரூபமாக வரைய முடியுமா என்று பார்வையாளர்கள் ஆச்சரியமுடன் ஹைலாவிடம் தங்களின் பாராட்டுக்களை பகிர்ந்து கொண்டனர்.
நான்கு சகோதரிகளும் ஒரு சகோதரனும் இவருடன் கூடப்பிறந்தவர்கள். இவர் ஒருவர் மட்டுமே குறையோடு பிறந்தவர். ஆனால் அந்த குறை தனக்கும் தனது குடும்பத்துக்கும் ஒரு பாரமாக மாறி விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார் ஹைலா. மனிதன் மனது வைத்தால் 'குறையொன்றுமில்லை' என்று மேலும் முன்னேற பார்ப்பான். சகோதரி ஹைலாவை நாமும் வாழ்த்துவோம்.
தகவல் உதவி சவுதி கெஜட்
16-05-2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment