Followers

Monday, May 19, 2014

இஸ்லாத்தை ஏற்ற இளம்பெண் 'அபரூபா' எம்.பி'யானார்!

இஸ்லாத்தை ஏற்ற இளம்பெண் 'அபரூபா' எம்.பி'யானார்!மேற்கு வங்கத்தை சேர்ந்த 'அபரூபா பொட்டார்' என்ற 28 வயது இளம்பெண், சமீபத்தில் தனது பெயரை 'ஆப்ரீன் அலி' என மாற்றிக்கொண்டு இஸ்லாத்தை தழுவிய நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். இந்த தொகுதியானது தலித்களுக்காக ஒதுக்கப்பட்ட ரிசர்வ் தொகுதியாகும். இவர் பிறப்பால் தலித் என்பதால் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

BSC பட்டதாரிப் பெண்ணான ஆப்ரீன் அலி'யின், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களில் பழைய (APARUPA PODDAAR) பெயரே இருந்தபடியால், அதே பெயரில் தேர்தலை சந்தித்தார்.

திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஹூக்ளி மாவட்டத்தில் அரம்பாக் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆப்ரீன் அலி என்ற தனது இஸ்லாமிய பெயரை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டு தேர்தலை சந்தித்தார்.

ஆரம்பாக் தொகுதியில், 7,48,764 வாக்குகளைப் பெற்ற ஆப்ரீன் அலி, சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக வேட்பாளர்களை தோற்கடித்தார்.

28 வயது ஆப்ரீன் அலி, BSC யுடன், சட்டப்படிப்பையும் படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே பழைய முஸ்லிம்களை விட புதிதாக இஸ்லாத்துக்குள் நுழைபவர்கள் இஸ்லாமிய கடமைகளை பேணுவதில் அதிக அக்கறையுடன் இருப்பார்கள். நாடாளுமன்றத்தில் இவரின் குரல் உவைசியின் குரலோடு சேர்ந்து இனி கம்பீரமாக ஒலிக்கும். சட்டம் வேறு பயின்றவர். இவரை போன்ற கல்வியாளர்கள் நாடாளுமன்றத்தை நிறைக்க வேண்டும்.

இவருடைய ஈமெயிலுக்கு சென்று உங்களின் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள்.

Aparupa Poddar (Afreen Ali)

Constituency: Arambagh

Date of Birth: 8 January 1986

Educational Qualifications: BSc, LL.B

Positions held in the past:

Vice-Chairman, Rishra Municipality.

Additional Information:

Ms. Ali has been associated with Trinamool Chhatra Parishad and is a Law Practioner.

Email: afreen@aitmc.org

5 comments:

Unknown said...

அல்ஹம்துலில்லாஹ் .... அல்லாஹ்வின் அருள் இவருக்கு கிடைத்துள்ளது இன்ஷா அல்லாஹ் இவர் தொடர்ந்து நேர்வழியில் இருக்கவும் , இவருடைய வாழ்வாதாரங்கள் பெருகி வாழ்வு நன்கு சிறக்கவும் , கஷ்டங்களிலிருந்து விடுபடவும் , முஸ்லிம் ஆகியதால் ஏற்படும் தொல்லைகளிருந்து காக்கவும் , இம்மையிலும் , மறுமையிலும் எல்லா நலன்களையும் பெற்றிடவும் மற்றும் இவரின் குடும்பத்தினர்கள் , உறவினர்கள் , நண்பர்கள் என அனைவரும் விரைவில் இஸ்லாமை ஏற்கவும் அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்

Unknown said...

அல்ஹம்துலில்லாஹ் .... அல்லாஹ்வின் அருள் இவருக்கு கிடைத்துள்ளது இன்ஷா அல்லாஹ் இவர் தொடர்ந்து நேர்வழியில் இருக்கவும் , இவருடைய வாழ்வாதாரங்கள் பெருகி வாழ்வு நன்கு சிறக்கவும் , கஷ்டங்களிலிருந்து விடுபடவும் , முஸ்லிம் ஆகியதால் ஏற்படும் தொல்லைகளிருந்து காக்கவும் , இம்மையிலும் , மறுமையிலும் எல்லா நலன்களையும் பெற்றிடவும் மற்றும் இவரின் குடும்பத்தினர்கள் , உறவினர்கள் , நண்பர்கள் என அனைவரும் விரைவில் இஸ்லாமை ஏற்கவும் அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்,


மறுப்பு பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த செய்தி குறித்து தாங்கள் source போட்டிருக்க வேண்டாமா?

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மறுப்பு பக்கத்திலிருந்து copy செய்யப்பட்ட இந்த செய்தி குறித்து தாங்கள் source போட்டிருக்க வேண்டாமா?

https://www.facebook.com/photo.php?fbid=636285166458677&set=a.300599480027249.78504.246687175418480&type=1&relevant_count=1

சுவனப் பிரியன் said...

//மறுப்பு பக்கத்திலிருந்து copy செய்யப்பட்ட இந்த செய்தி குறித்து தாங்கள் source போட்டிருக்க வேண்டாமா?//

வஅலைக்கும் சலாம். ஒருவரது பதிவை முழுக்கவும் ஒரு தளத்திலிருந்து காப்பி பேஸ்ட் செய்தால் அதனை நான் குறிப்பிடாமல் விடுவதில்லை. ஆனால் பல தளங்களிலிருந்து செய்திகளை சேகரித்து முழு செய்தியையும் நமது பாணியில் தரும் போது அனைத்தையும் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு முன் வினவு, மறுப்பு, சங்கை ரிதுவான் தளங்களிலிருந்து காப்பி பேஸ்ட் செய்தால் அவர்களின் பெயரையும் குறிப்பிட்டுள்ளேன்.இம்மையில் கிடைக்கும் லைக்குகளுக்காவும், பின்னூட்டங்களுக்காகவும் அல்ல. நான் மொழி பெயர்த்து வெளியிட்ட பல செய்திகள் பல தளங்களில் எனது பெயர் இல்லாமலேயே பவனி வருகிறது. அது பற்றி நான் அதிகம் அலட்டிக் கொள்வதுமில்லை.

மேலும் நான் செய்திகளை பதிவது மறுமையை நாடியே. எனவேதான் எனது புகைப்படத்தைக் கூட வெளியிடுவதில்லை.

வஸ்ஸலாம்.