Followers

Friday, June 03, 2011

கார் ஓட்ட அனுமதியும் எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட இஸ்லாமிய பெண்ணும்!


ஒரு வழியாக சூரா கவுன்சில் பெண்கள் கார் ஓட்டுவது சம்பந்தமான பிரச்னையை விவாதத்துக்கு எடுத்துக் கொண்டுள்ளது. சவுதிநாட்டு ஆண்கள், பெண்கள், கல்லூரி மாணவர்கள், வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் பலரின் எழுத்துப் பூர்வ வேண்டுகோளை ஏற்று அரசு இந்த ஆணையை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இன்னும் ஓரிரு வாரத்தில் இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படலாம்.

'பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு இஸ்லாம் ஒரு தடை அல்ல. பல வெளிநாட்டு ஓட்டுனர்களின் எதிர்காலத்தையும், பெண்களின் பாதுகாப்பையும்தான் தான் பிரதான காரணமாக அரசு எடுத்துக் கொண்டது. நாட்டு மக்களின் பலரின் விருப்பம் பெண்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற ரீதியில் இருப்பதால் அரசு இதை நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளது.' என்கிறார் பத்திரிக்கையாளர் அப்துல்லா அப்துல் சத்தார்.

பிளாக்கர், பத்திரிக்கை துறை, யூட்யூப் போன்ற செய்தி ஊடகங்களின் தொடர்ந்த அழுத்தத்தினால் அரசு பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்க முன் வந்துள்ளது. இந்த விஷயத்தில் காட்டமாக பதிவிட்ட கோவி கண்ணனும், இக்பால் செல்வனும் தற்போது சற்று நார்மலுக்கு வருவார்கள். எப்படியோ இந்த சட்டத்தினால் புதிய பிரச்னைகள் ஏதும் எழாமல் பெண்களின் முன்னேற்றம் அமைய வேண்டும் என்று பிரார்த்திப்போமாக!

எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் அராபிய பெண்மணி!

அமீரகததில் வாழ்ந்து வரும் பாலஸ்தீன பெண்மணியான சூசான் அல்ஹூபி எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் அராபியப் பெண் என்ற பெருமையை தட்டிச் சென்றார்.

'உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை தொட்டதை எனது நாட்டு மக்களுக்கும் மொத்த அரபுல பெண்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். அதோடு இந்த பிராந்தியத்தியத்தில் அமைதியை கொண்டுவர பாடுபடும் இளைஞர்கள் வயோதிகர்களுக்கும் இந்த பயணம் சமர்ப்பணம் என்கிறார் சூசான் அல் ஹூபி.

'எனது கனவு நனவானதை என் வாழ்நாளில் மறக்க முடியாது. இடது பக்கம் நேபாளின் மலைகளும், வலது பக்கம் சீனாவின் மலைப்பகுதிகளும் மேலிருந்து பார்த்தது மிகவும் பரவசத்தை ஏற்படுத்தியது. எங்கள் குழுவிலிருந்து மிக மிக தொலைவில் அத்தனை மலைகளையும் ஒருங்கே பார்தத்து எனது வாழ்நாளில் மறக்க முடியாது. நான் மலை ஏறும் போது உலகுக்கு ஒரு செய்தியை கூறினேன். அது அமைதியை நோக்கி பாலஸ்தீனம் சென்று கொண்டிருக்கிறது என்பது.' என்று சொன்னதாக பாலஸ்தீன செய்தி ஸ்தாபனமான வஃபா கோடிட்டுக் காட்டியது.

வரலாற்றில் பொறிக்கப்பட்ட இந்த பயணத்தை சவுதியில் உள்ள பாலஸ்தீன மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

'எங்களுக்கு இந்த செய்தி மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. ஆக்கிரமிப்பில் அலைக்கழிக்கப்படும் நாங்கள் சிறந்த பாடங்களை கற்றுக் கொண்டுள்ளோம். இன்றைய முக்கிய செய்தியாக எங்கள் நாட்டு பெண் சாதனை படைத்ததை தொலைக்காட்சியில் பார்த்து பரவசமடைந்தோம்' என்கிறார் யூசுப் சஹாதா. இவர் ஜெத்தாவில் வசித்து வரும் பாலஸ்தீன மக்கள் தொடர்பு அதிகாரியாவார்.

இவர் மேலும் கூறுகிறார் 'பாலஸ்தீனியர்களான நாங்கள் கஷ்டமான சூழ்நிலைகளிலிருந்து பல படிப்பினைகளைப் பெற்றுள்ளோம். ஆக்கிரமிக்கப்பட்ட எங்கள் நாட்டினால் பல சிரமங்களையும் வெல்ல பழகிக் கொண்டுள்ளோம். சிரமங்களை எதிர் கொள்ள ரொம்பவும் பழகி விட்டோம்.' என்கிறார் யூசுஃப்.

எமாத் அத்வான்- கிங்க் பஹத் யுனிவர்ஸிடியில் பெட்ரோலியத் துறை மாணவன் ' அல்ஹூபியின் சாதனையானது பாலஸ்தீனியர்களுக்கு மட்டுமல்ல எங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபடும் அனைத்து நாட்டு மக்களுக்கும் சொந்தமான சாதனை இது. என் நாடு எங்களிடம் இருந்து திருடப்பட்டுள்ளது. எனது சொந்த ஊரான ஹெப்ரானை இன்று இழந்திருக்கிறேன். இதை எல்லாம் வென்றே தீருவோம்' என்கிறார்.

அல் ஹூபி எவரெஸ்ட் சிகரத்தை எட்ட 51 நாட்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார். மே 21 ந் தேதி காலையில் இவரது முயற்சி பூர்த்தியானது. இந்த பயணத்தில் வெற்றி பெற சுமார் இரண்டு வருடம் இடை விடாத பயிற்ச்சியை எடுத்துக் கொண்டுள்ளார் இந்தப் பெண். இது வரை இந்த சிகரத்தை பல நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் ஏறி சாதனைப் படைத்துள்ளார்கள்.

அல் ஹீபி இதற்கு முன்னால் ஐரோப்பாவின் உயர்ந்த சிகரமான எல்பரஸையும் கடந்த முதல் அராபிய பெண் ஆவார். அடுத்து ஆப்ரிக்காவில் உள்ள கிளிமஞ்சரோ(எந்திரன் ஞாபகம் வருகிறதோ) மலையின் மிக உயரிய சிகரத்தையும் கடந்த முதல் அராபிய பெண்மணியும் இவரே ஆவார். இவர் மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துவோம்.

ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்னால் யூதர்கள் தங்களுக்கு வாழ்ந்திட ஓர் இடம் வேண்டும் என வேண்டினர்.

பின்னர் பிரிட்டன், அமெரிக்கா, ஆகிய வல்லரசுகளுக்குப் பின்னால் பதுங்கினர்.

இந்த வல்லரசுகளின் உதவியோடு குள்ளநரித் தனமாக பாலஸ்தீனில் நுழைந்தனர்.

பாலஸ்தீனின் சொந்த குடி மக்களாகிய பாலஸ்தீனர்களை அங்கே இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விரட்டினார்கள். அத்தனை அடக்கு முறைகளையும் கட்டவிழ்த்து விட்டார்கள்.

ஆண்டுகள் நகர்ந்தன. நிலைமை தலைகீழாக மாறியது. இப்போது பாலஸ்தீனர்கள் தங்களுக்கு வாழ இடம் தாருங்கள் என கேட்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

நியாய உணர்வுடையவர்களின் உணர்வுகள், முயற்சிகள் ஒன்றுபடுத்தப்பட்டாலன்றி இந்தக் கொடுமைகளை களைந்திட இயலாது.

'உங்களிடம் போருக்கு வருவோருடன் இறைவனின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள். வரம்பு மீறாதீர்கள்! இறைவன் வரம்பு மீறியோரை நேசிக்கமாட்டான்'

-குர்ஆன் 2:190

14 comments:

ஷர்புதீன் said...

உங்கள் வலைப்பூவின் டெம்ப்ளட் எனது ரசனைக்குரியதாக இருக்கிறது., இந்த மாதிரியான சிம்பிள் அண்ட் நீட் டெம்ப்ளட் எனக்கு ரெம்ப பிடிக்கும்., நன்றாக எழுதும் சிலரது வலைபூகளில் கூட அவர்களது டெம்ப்ளட் கச்சாமூச்சா என்று இருப்பதால் படித்தவுடன் ஓடிவந்துவிடுவேன் . ஹி ஹி

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.சுவனப்பிரியன்...

///ஒரு வழியாக சூரா கவுன்சில் பெண்கள் கார் ஓட்டுவது சம்பந்தமான பிரச்னையை விவாதத்துக்கு எடுத்துக் கொண்டுள்ளது.///
---அல்ஹம்துலில்லாஹ்...!

மிக மிக நல்ல முடிவு...! வரவேற்கிறேன்..!

பெண்கள் தனியாக கார் ஒட்டுவதன் மூலம்... பல டாக்சி ஓட்டுனர்களால் தனியாக செல்லும் பெண்களுக்கான ஆபத்துக்கள், வீட்டு டிரைவர் மஹரம் பாவங்கள், சில அரைவேக்காட்டு பதிவர்களின் சைக்கிள் கேப்பில் கப்பல் ஓட்டும் இஸ்லாமிய எதிர்ப்பு கூத்துக்கள்...

என எல்லாத்திலும் இருந்து நமக்கு விடுதலை. அப்பாடா....!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

///எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் அராபிய பெண்மணி!///

---மாஷாஅல்லாஹ்...!

மப்ரூக்..! மப்ரூக்..!

வாஞ்சையுன் வாஞ்ஜூர். said...

//ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்னால் யூதர்கள் தங்களுக்கு வாழ்ந்திட ஓர் இடம் வேண்டும் என வேண்டினர்.பின்னர் பிரிட்டன், அமெரிக்கா, ஆகிய வல்லரசுகளுக்குப் பின்னால் பதுங்கினர்.இந்த வல்லரசுகளின் உதவியோடு குள்ளநரித் தனமாக பாலஸ்தீனில் நுழைந்தனர்.//

முஹம்மது நபி ரசூல் (ஸல்) அவர்கள் காலம் தொடங்கி ஆரம்பமான யூதர்களின் நய வஞ்சகங்கள் , பின்னால் யூதர்கள் முஸ்லீம்களால் எப்படியெல்லாம் ஆதரிக்கப்பட்டார்கள், நாடற்று அகதிகளாக ஐரோஈப்பாவில் வாழ்ந்த காலத்தில் எப்படி ஐரோப்பியர்களால் யூதர்கள் கொத்து கொத்தாக வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டார்கள்,

யூதர்கள் எவ்வாறெல்லாம் சூழ்ச்சிகளின் மூலம் ஐரோப்பியர்களை கைக்கொண்டு, பாலஸ்தீனியர்களின் நிலங்களை அபகரித்து கொண்டு, சூழ்ச்சி அராஜகத்தால் இஸ்ரேலை உருவாக்கி, யூதர்கள் பாலஸ்தினியர்களை இன்று வரை கொன்று குவித்து கொண்டிருக்கிறார்கள் ?
என்ற அரிய விபரமான தக‌வல்களை

பா. ராகவன் அவர்கள்
" நிலமெல்லாம் ரத்தம் " என்ற நூலில் எழுதி

"குமுதம் ரிப்போர்ட்டர் " ல் தொடராக வெளியிடப்பட்ட
100 பகுதிகளை 50 பதிவுகளாக
தரப்பட்டிருப்பதை

தயவு செய்து கீழே தரப்பட்டுள்ள சுட்டியை சொடுக்கி படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதுடன் ஏனைய முஸ்லீம் சகோதரர்களையும் படிக்க ஆவன செய்யுங்கள் .

வாசகர்கள் அறிந்திராத விஷய களஞ்சியம். சலிப்படையாமல் படித்து வருவீர்களேயானால் போக போக இதுவரை நாம் ஏன் இதை படிக்கவில்லை என்ற எண்ணம் உங்களுக்கு திண்ணமாக மேலோங்கும்


சுட்டி : >>> 1-2. நிலமெல்லாம் ரத்தம்- முஹம்மது நபி (ஸல்), யூதர்கள், பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு. <<<


வாஞ்சையுன் வாஞ்ஜூர்.

..

suvanappiriyan said...

//உங்கள் வலைப்பூவின் டெம்ப்ளட் எனது ரசனைக்குரியதாக இருக்கிறது., இந்த மாதிரியான சிம்பிள் அண்ட் நீட் டெம்ப்ளட் எனக்கு ரெம்ப பிடிக்கும்., நன்றாக எழுதும் சிலரது வலைபூகளில் கூட அவர்களது டெம்ப்ளட் கச்சாமூச்சா என்று இருப்பதால் படித்தவுடன் ஓடிவந்துவிடுவேன் . ஹி ஹி//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ. ஷர்புதீன்! பழைய எண்ணங்களை எல்லாம் தூரமாக வைத்து விட்டு உளப்பூர்வமாக குர்ஆனை அணுகுங்கள். பல தெளிவுகள் கிடைக்கும்.

உங்களின் நலன் விரும்பும் சகோதரன்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ.ஆஷிக்!

//பெண்கள் தனியாக கார் ஒட்டுவதன் மூலம்... பல டாக்சி ஓட்டுனர்களால் தனியாக செல்லும் பெண்களுக்கான ஆபத்துக்கள், வீட்டு டிரைவர் மஹரம் பாவங்கள், சில அரைவேக்காட்டு பதிவர்களின் சைக்கிள் கேப்பில் கப்பல் ஓட்டும் இஸ்லாமிய எதிர்ப்பு கூத்துக்கள்...

என எல்லாத்திலும் இருந்து நமக்கு விடுதலை. அப்பாடா....!//

என்ன அவ்வளவு ஈஸியா சொல்லிட்டீங்க! சொர்க்கத்து கன்னிகைகள், ஹிஜாப், பலதார மணம் என்று வேறு சப்ஜெட்டுக்கு உடன் தாவி விடுவார்கள். இது ஒரு தொடர்கதை....

//---மாஷாஅல்லாஹ்...!

மப்ரூக்..! மப்ரூக்..!//
இந்த மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைத்து சொந்த நாட்டில் குடியேற கூடவே பிரார்த்திப்போம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ. வாஞ்சூரார்!

//தயவு செய்து கீழே தரப்பட்டுள்ள சுட்டியை சொடுக்கி படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதுடன் ஏனைய முஸ்லீம் சகோதரர்களையும் படிக்க ஆவன செய்யுங்கள் . //

கொடுமைகளில் எல்லாம் பெருங்கொடுமை சொந்த நாட்டிலேயே அகதிகளாக காலம் தள்ளுவதுதான். பா.ராகவன் அவர்களின் சுட்டியை தந்ததற்கு நன்றி. பலருக்கும் உதவியாக இருக்கும்.

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ்..அல்லாஹு அக்பர்...அல்லாஹு அக்பர்.

அருமையான செய்திகளை பகிர்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..மிக்க மகிழ்ச்சி.

உலகின் மிகப்பெரிய பெண்கள் பல்கலைகழகத்தை பற்றி நீங்கள் எழுதிய போது சிலருக்கு உடம்பு சரி இல்லை. டைப் அடிக்க கை வரமுடியாத அளவு உடம்பு வலி. அதனால் தான் இந்த பக்கம் அவர்களால் வர முடியவில்லை. சோ அவர்களை தவறாக நினைக்க வேண்டாம்.

பாலஸ்தீனியர்களின் நிலம் திரும்ப கிடைக்க வல்ல இறைவனை வேண்டியவனாய்...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

ஷர்புதீன் said...

//வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ. ஷர்புதீன்! பழைய எண்ணங்களை எல்லாம் தூரமாக வைத்து விட்டு உளப்பூர்வமாக குர்ஆனை அணுகுங்கள். பல தெளிவுகள் கிடைக்கும். //

ஹ ஹ ஹ ஹ., இந்த மாதம் முழுவதும் எனது இடுகைகளை (மொக்கை தவிர்த்து ) தவிர்த்து படித்து வாருங்கள்., இன்சா அல்லாஹ் ஒரு நாள் நிறைய நிறைய. பேசலாம்.,( சிரிப்பு கிண்டலுக்காக அல்ல., எதற்கு என்பதை இன்சா அல்லாஹ் பின்னாளில் நீங்களே அறிந்துகொள்வீர்கள்.)

saarvaakan said...

வணக்கம் நண்பரே!!!!!!!!
//பிளாக்கர், பத்திரிக்கை துறை, யூட்யூப் போன்ற செய்தி ஊடகங்களின் தொடர்ந்த அழுத்தத்தினால் அரசு பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்க முன் வந்துள்ளது.//
நல்ல விஷயம்தான்.காலத்திற்கு ஒத்துவராத எந்த விஷயமும் மக்களால் மாற்றியமைக்கப் படும் என்பது உண்மையாகிறது.சவுதி இன்னும் பல விஷயங்களில் மாற்றப்ப்படும்.
___________
//அமீரகததில் வாழ்ந்து வரும் பாலஸ்தீன பெண்மணியான சூசான் அல்ஹூபி எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் அராபியப் பெண் என்ற பெருமையை தட்டிச் சென்றார்//
வாழ்த்துககள்.பெயரை வைத்து பாலஸ்தீன முஸ்லிம்/கிறித்தவர் என்று கண்டறிய முடியாது.முஸ்லிம் பெண்ணாக இருந்தால் அதிக பாராட்டுகள்.
சவுதி பெண்கள் இவர் போல் செயற்கறிய செயல் செய்ய வேண்டும்.
________________
பாலஸ்தீனர்களின் பிரச்சினை

பாலஸ்தீனர்கள் அறிவு,உழைப்பு,மதச்சார்பின்மை போன்ற விஷயங்களில் தமிழக தமிழர்கள் போன்றிருப்பவர்கள்.பாலஸ்தீன பிரச்சினை கூட தமிழீழ பிரச்சினை,குர்திஸ்தன் போன்றதுதான்.
இருட் பிரச்சினைகளிலும் ஆக்கிரமிப்பாளர்கள் ஒற்றுமையாக தெளிவாக இருப்பதும்,ஆக்கிரமிக்கப் படுபவர்கள் பல பிரிவுகளாக ச‌ண்டையிடுவதும், அண்டை நாடுகளின் துரோகம் என்று பன் முகம் கொண்ட பிரசினைகள்.
பாலஸ்தீனத்தின் துரோகிகள் யார் என்பது நிலவெல்லாம் இரத்தம் தொடர் படித்தால் புரியும்.பாலஸ்தீனர்கள் அனைவரும் இஸ்லாமல்லாத வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்த ஆக்கிரமிப்பு நடந்திருக்கும். அப்போது குர்திஸ்தான் பிரச்சினையில் ஆக்கிரமிப்பாலர்களும்,ஆக்கிரமிக்கப் படுபவர்களும் ஒரே மதமாக(இஸ்லாம்) இருப்பதால் அதனை யாரும் பெரிது படுத்துவது இல்லை.
___________________

'உங்களிடம் போருக்கு வருவோருடன் இறைவனின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள். வரம்பு மீறாதீர்கள்! இறைவன் வரம்பு மீறியோரை நேசிக்கமாட்டான்'

-குர்ஆன் 2:190

மேலே சொன்ன வசனத்தை பிரச்சினைக்கு தீர்வாக குறிப்பிடுகிறீர்கள் என்றால் போர் என்பதை இஸ்ரேலின் மீதான ஜனநாயக ரீதியான உலக நாடுகளின் அழுத்தம் என்று பொருள் கொள்வது பொருத்தம்.பலஸ்தீனர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது.அவர்களுக்கு தீர்வாக எதனை குறிப்பிடிகிறீர்கள்?

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்!

//உலகின் மிகப்பெரிய பெண்கள் பல்கலைகழகத்தை பற்றி நீங்கள் எழுதிய போது சிலருக்கு உடம்பு சரி இல்லை. டைப் அடிக்க கை வரமுடியாத அளவு உடம்பு வலி. அதனால் தான் இந்த பக்கம் அவர்களால் வர முடியவில்லை.//

உலகில் எல்லா மதங்களின் வேதங்களும் இறை செய்தியோடு மனித செய்திகளையும் கலந்து அதன் தனித் தன்மையை இழக்க வைத்து விட்டனர். இஸ்லாம் மட்டுமே அதன் தனித் தன்மையை இழக்காமல் இன்று வரை உள்ளது. மேலும் வர்ணாசிரமத்துக்கு பெரும் சவாலாக இருப்பது இஸ்லாம் மட்டுமே! எனவே எப்படியும் இஸலாத்தையும் அந்த குழுமத்தில் சேர்த்து விட பல முயற்ச்சிகள், பலரால் எடுக்கப்படுகிறது.

// சோ அவர்களை தவறாக நினைக்க வேண்டாம். //

So….. அவர்களை தவறாக நினைக்க வேண்டாம்.

என்று நீங்கள் எழுதியதை நான் முதலில் சோ.ராமசாமி என்று விளங்கி விட்டேன். :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ. ஆஷிக்!

suvanappiriyan said...

திரு சார்வாகன்!

//மேலே சொன்ன வசனத்தை பிரச்சினைக்கு தீர்வாக குறிப்பிடுகிறீர்கள் என்றால் போர் என்பதை இஸ்ரேலின் மீதான ஜனநாயக ரீதியான உலக நாடுகளின் அழுத்தம் என்று பொருள் கொள்வது பொருத்தம்.பலஸ்தீனர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது.அவர்களுக்கு தீர்வாக எதனை குறிப்பிடிகிறீர்கள்?//

குடியேறிய இஸ்ரேலியரை வேறு எங்கும் நாடு கடத்த முடியாது. ஏனெனில் வேறு எந்த நாடுகளும் ஏற்றுக் கொள்ளாது. எனவே தற்போது இஸ்ரேலியர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளை அவர்களுக்குரியதாக அங்கீகரித்து விட்டு, இஸரேல் சமீபமாக ஆக்கிரமித்த காஸா போன்ற பகுதிகளிலிருந்து இஸரேலியர்களை முழுவதுமாக வெளியேற்ற வேண்டும். அங்கு புதிதாக கட்டப்பட்ட யூத குடியிருப்புகளை அப்புறப்படுத்தி அங்கு வெளிநாடுகளில் வசிக்கும் பாலஸ்தீனர்களை குடியமர்த்த வேண்டும். இதற்கு இஸ்ரேல் ஒத்துவராத பட்சத்தில் நடுநிலை நாடுகள் நான் குறிப்பிட்ட குர்ஆனின் வசனத்தின் படி பலத்தைப் பிரயோகித்து இஸ்ரேலை ஒடுக்க வேண்டும். இஸ்ரேலையும் பாலஸ்தீனையும் அறியும் முகமாக பெரும் சுவர் எழுப்பப்பட வேண்டும். நிரந்தர தீர்வு ஏற்பட இது ஒன்றே வழி.

தற்போது சவூதி அரேபிய மத்தியஸ்தராக இருக்க இஸ்ரேல் ஒத்துக் கொண்டுள்ளதாக இன்றைய செய்தியில் பார்த்தேன். அமெரிக்க அதிபரும் தனது ஆட்சி காலத்தில் ஒரு நிரந்தர தீர்வை எட்ட வேண்டும் என்ற உறுதியில் உள்ளார். எந்த வகையிலாது நாடற்று சுற்றித் திரியும் அந்த மக்களுக்கு ஒரு விடிவு கிடைத்தால் சரி.

//பாலஸ்தீனர்கள் அறிவு,உழைப்பு,மதச்சார்பின்மை போன்ற விஷயங்களில் தமிழக தமிழர்கள் போன்றிருப்பவர்கள்.//

ஆம்! ஓரளவு நமது பிராமணர்களை ஒத்திருப்பார்கள். படிப்பதிலும், டேபிள் சேர் வேலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதிலும் சாயலிலும் பிராமணர்களைப் போலவே இருக்கும். இதனால்தானோ என்னவோ அரபுகளிலேயே பலர் பாலஸ்தீனர்களை சற்று வித்தியாசமாக பார்ப்பது.!

suvanappiriyan said...

//நண்பர் சுவன பிரியன்,
நண்பர் இக்பாலின் வினாக்கள்.

1.குரானில் முகமதுவை விட இயேசுவின் செயல்களாக கூறப்படும் விஷயங்கள் சிறப்பானவை போல இருக்கின்றன.

2.முகமது குறைவான இடங்களிலேயே குறிப்பிட படுகிறார்.[ இருவரையும் விட இப்ராஹிம் அதிகமாக குறிப்பிட படுகிறார் என்பது வேறு விஷயம்].

இது ஏன் என்பதுதான்.எனக்கும் சில ஐயங்கள் இருக்கின்றன.அதை பிறகு கேட்கிறேன்.//

முகமது நபி தனது கற்பனையில் இந்த குர்ஆனை இயற்றியிருந்தால் ஏசு நாதரை சிறப்பித்துக் கூறும் அனைத்து வசனங்களையும் மறைத்திருப்பார். ஒரு சராசரி மனிதன் இதைத்தான் செய்வார். இதைவிட அதிகமாக முகமது நபியையே கண்டிக்கும் பல வசனங்கள் குர்ஆனில் உண்டு. இவை எல்லாம் குர்ஆன் முகமது நபியால் இயற்றப்படவில்லை. உங்களையும் என்னையும் படைத்த அந்த ஏக இறைவனின் வார்த்தைகள் தான் என்று கட்டியம் கூறிக் கொண்டிருக்கின்றன. இக்பால் செல்வன் கேட்ட கேள்விகளுக்கு எனது பழைய பதிவுகளில் நிறைய பதில் உண்டு. எனவேதான் நான் அதைத் தொடாமல் ராபினின் கேள்விகளுக்கு பதிலளித்தேன்.

'முகம்மதே! அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம், அல்லது அவர்களைத் தண்டிக்காமல் விடலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்.'
-குர்ஆன்: 3:128

'முஹம்மதே! நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது'
-குர்ஆன்: 28:56

'தன்னிடம் அந்த குருடர் வந்ததற்காக இவர்(முகமது நபி) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார்'
-குர்ஆன் 80:1

Anonymous said...

மாற்றங்கள் நல்லதாகவும் , எந்த உருவிலும் வந்தாலும் நான் வரவேற்கின்றேன்.. அனைவரும் வரவேற்க வேண்டும் என்றே விரும்புகின்றேன்.. பகிர்வுக்கு மிக்க நன்றிகள்