Thursday, February 16, 2012

முதல் சர்வதேச கலந்தாய்வு (ஹலால் உணவு)உலகின் முதல் ஹலால் உணவுக்கான சர்வதேச கலந்தாய்வு கடந்த செவ்வாய்க் கிழமை ரியாத் நகரில் இனிதே நிறைவுற்றது. இஸ்லாமிய நாடுகளுக்கு உணவு ஏற்றுமதி செய்யும் முஸ்லிம் அல்லாத நாடுகள் இஸ்லாமிய சட்டத்தை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ரியாத் கவர்னர் இளவரசர் சத்தாம் இந்த மாநாட்டை துவக்கி வைத்து கண்காட்சியையும் திறந்து வைத்தார். ஞாயிற்றுக் கிழமை தொடங்கிய இந்த கலந்தாய்வு மூன்று நாள் தொடர்ந்து நடந்து செவ்வாய்க்கிழமை நிறைவுற்றது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு சவுதி மன்னர் அப்துல்லாஹ்வின் ஏற்பாட்டில் உணவு மற்றும் மருந்து ஆணையத்தின் கீழ் நடைபெற்றது.

உணவு மற்றும் மருந்து ஆணையத்தின் தலைவர் முஹம்மது அல் கன்ஹல் தனது அறிக்கையில் முஸ்லிம் நாடுகளுக்கு இறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகள் இஸ்லாமிய வழி முறையில் அறுக்கப்பட்ட உணவுகளையே அனுப்ப வேண்டும் என்ற ஒரு ஒப்பந்தத்துக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.

மேலும் அவர் கூறும்போது 'சில நாடுகள் மின்சார அதிர்ச்சியைக் கொடுத்து உயிரினங்களை கொல்கின்றன. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். சுகாதாரமான முறையில் அறுக்கப்பட்டு(ஹலால்) அந்த பேக்கிங்களில் உரிய சீல்களும் இடப்பட வேண்டும். இத்தகைய தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள் அனைத்தையும் வேர்ல்ட் முஸ்லிம் லீக்குக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்” என்ற கோரிக்கையையும் வைத்தார்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த மாநாடு திரும்பவும் கூட்டப்படும். அந்நேரம் இந்த கமிட்டி எடுத்த நடவடிக்கைகள் மற்றும் இதனால் ஏற்பட்ட முன்னேற்றங்கள் போன்றவை அங்கு அலசப்படும். இந்த கூட்டம் சிறப்பாக நடக்க ஒத்துழைத்த மன்னர் அப்துல்லாவுக்கு இந்த கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கன்ஹல் கூறினார்.

இந்த கலந்தாய்வில் ஏழு முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இது சம்பந்தமாக அறிவியல் கட்டுரைகள் 60 இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் இஸ்லாம் கூறும் ஹலால் வழிமுறை, உணவுகளை பதப்படுத்துவது, உணவுகளை முறைப்படி அறுப்பது, இஸ்லாம் கூறும் ஹலால் உணவுகள் போன்ற அனைத்து அம்சங்களும் விரிவாக அலசப்பட்டன.கெய்ரோ பல்கலைக் கழகத்தின் ஊட்டச் சத்து பிரிவின் தலைவி மஹா எம் ஹாதி பேசும்போது 'சரியாக அறுக்கப்படாத சில உணவு வகைகளால் மார்பக புற்று நோயும் பெருங்குடல் புற்று நோயும் வரும் சாத்தியங்கள் உண்டு' என்றும் எச்சரித்தார்.

“நீங்கள் இறைச்சி சாப்பிடும் போது அதை உங்களுக்கு விற்றவர் அந்த விலங்குக்கு என்ன உணவளித்தார் என்று தெரிந்து கொள்வது நல்லது. நாம் அறுக்கப்படுவதை ஹராமா ஹலாலா என்று பார்ப்பதோடு அதற்கு முன்னால் அதற்கு தீவனமாக என்ன கொடுக்கப்படுகிறது என்பதையும் ஆராய வேண்டும். நமக்கு நம்பிக்கையான பண்ணைகளில் இருந்து உணவு வாங்குவது மேலும் சிறந்தது.” என்கிறார் ஹாதி.

ஐரோப்பிய ஆணைய வர்த்தக கழகத்தைச் சேர்ந்த போலோ லுர்சியானோ 'ஏற்றுமதி நாடுகள், நுகர்வோர், வியாபாரிகள், மார்க்க அறிஞர்கள் போன்ற அனைவரின் கூட்டு முயற்ச்சியே இந்த கோரிக்கைகளை சரியாக கொண்டு செல்ல முடியும்' என்று கூறினார். டாக்டர் ஹனி அல் ஹசாப் கூறும்போது 'முஸ்லிம் அல்லாத நாடுகளில் அங்கு எவ்வாறு விலங்குகள் அறுக்கப்படுகின்றன என்பதை கண்காணிக்க கமிட்டி நிறுவப்பட வேண்டும்' என்று கூறினார்.

-அரப் நியூஸ் 17-02-2012

-------------------------------------------------------------

உயிரினங்களை உணவாகக் கொள் ளும் முஸ்லிமல்லாதவர்கள் அவற்றைத் தண்ணீரில் மூழ்கடித்தோ, அல்லது கழுத்தை நெறித்தோ, தடியால் அடித்தோ, ஈட்டியால் குத்தியோ இன்னும் இது போன்ற வழிகளில் பிராணிகளின் உயிரைப் போக்குகின்றனர்.

ஆனால் இந்த வழிமுறைகளில் பிராணிகளைக் கொல்வதை இஸ்லாம் கண்டிக்கிறது. பிராணிகளின் குரல் வளையில் கூர்மையான கத்தி மூலம் அறுத்துத் தான் பிராணிகளைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

குரல்வளை மிக விரைவாக அறுக்கப் படுவதால் மூளையுடன் உள்ள தொடர்பு அறுந்து போகின்றது. இதனால் அப்பிராணிகளால் வலியை உணர முடியாது. இரத்தத்தை வெளியேற்று வதற்காக உடல் துடிக்கிறது; வேதனையால் அல்ல என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஜெர்மனி நாட்டில் உள்ள ஹனோவர் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வை நடத்தியவர்கள் பேராசிரியர் சூல்ட்ஜ் மற்றும் அவரது துணை ஆய்வாளர் டாக்டர் ஹாஸிம் ஆவார்கள்.

அவர்கள் செய்த பரிசோதனையின் விவரத்தையும் அதன் முடிவுகளின் விவரத்தையும் கீழே தருகின்றோம்.

1) முதலில் உணவுக்காக அறுக்கப் படும் விலங்குகள் தேர்வு செய்யப்பட்டன. 2) அறுவை சிகிச்சை செய்து அவ்விலங்குகளின் தலையில் மூளையை தொடும் படி பல பகுதிகளில் மின்னணுக் கருவிகள் பொருத்தப்பட்டன.
3) உணர்வு திரும்பியதும். முழுவது மாகக் குணமடைய பல வாரங்களுக்கு அப்படியே விடப்பட்டன.
4) அதன் பிறகு பாதி எண்ணிக்கை விலங்குகள் இஸ்லாமிய ஹலால் முறைப்படி அறுக்கப்பட்டன.
5) மறு பாதி எண்ணிக்கை விலங்கு கள் மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்டன.
6) பரிசோதனையின் போது கொல்லப் பட்ட எல்லா விலங்குகளுக்கும் ஊ.ஊ.ஏ. மற்றும் ஊ.ஈ.ஏ. பதிவு செய்யப்பட்டன. அதாவது ஊ.ஊ.ஏ. மூளையின் நிலையையும், ஊ.ஈ.ஏ. இருதய நிலையையும் படம் பிடித்துக் காட்டின.
இப்போது மேற்கண்ட பரிசோத னையின் முடிவுகளையும், அதன் விளக்கங்களையும் காண்போம். இஸ்லாமிய ஹலால் முறை:
1) இம்முறையில் விலங்குகள் அறுக்கப்பட்ட போது, முதல் மூன்று வினாடிகளுக்கு எந்த மாற்றமும் தென்படவில்லை. அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அது தொடர்ந்து நீடித்தது. விலங்குகள் அறுக்கப்படும் போது அவை வலி யினால் துன்பப்படவில்லை என்பதை இது காட்டியது.
2) மூன்று வினாடிகளுக்குப் பின் அடுத்த மூன்று வினாடிகளுக்கு விலங்குகள் ஆழ்ந்த தூக்கம் அல்லது உணர்வற்ற நிலைக்கு ஆளாகின்றன என்பதை பதிவு காட்டியது. அந்நிலை உடம்பிலிருந்து அதிகப் படியான ரத்தம் பீறிட்டு வெளியாவதால் ஏற்படுகின்றது.
3) மேற்கண்ட ஆறு வினாடிகளுக்குப் பின் பூஜ்ய நிலையைப் பதிவு செய்தது. அறுக்கப்பட்ட விலங்கு எந்த வலி அல்லது வதைக்கும் ஆளாக வில்லை என்பதை இது காட்டியது.
4) மூளையின் நிலையை பூஜ்யமாகப் பதிவு செய்த நேரத்திலும், இதயத் துடிப்பு நிற்காமல் தொடர்ந்து துடிப்பதாலும் உடலில் ஏற்படும் வலிப்பினாலும் உடலிலிருந்து முற்றிலுமாக ரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால் அந்த மாமிசம் உணவுக்கேற்ற சுகாதார நிலையை அடைகிறது.

முஸ்லிமல்லாதவர்கள் பிராணிகளைக் கொல்லும் முறை:
1) இந்த முறையில் கொல்லப்படும் விலங்குகள் உடனே நிலை குலைந்து போய் உணர்வற்ற நிலைக்குப் போகின்றன. 2) அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை ஊ.ஊ.ஏ. பதிவு காட்டியது. 3) அதே நேரத்தில் விலங்குகளின் இதயம் ஹலால் முறையில் அறுக்கப்பட்ட விலங்குகளோடு ஒப்பிடும் போது முன்னதாகவே நின்று விடுகிறது. அதனால் உடல் மிகுதியான ரத்தம் தேங்கிவிடுகிறது. ரத்தம் உறைந்த அந்த மாமிசம் உட்கொள்ளத்தக்க சுகாதார நிலையை அடையவில்லை.
மேற்கண்ட ஆய்வுகள் இஸ்லாமிய ஹலால் முறையே சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதோடு அம்முறையே மனிதாபிமான முறை என்பதையும் நிரூபித்துள்ளது.
எனவே பிராணிகளை இஸ்லாம் கூறும் முறையில் அறுத்தால் அதில் உயிரினங்களுக்கு வதை இல்லை என்பது நிரூபணமாகின்றது.

சைவம் மற்றும் அசைவம் ஆகிய இரு உணவுகளையும் ஜீரணிக்கும் வகையில் மனிதனின் குடல் அமைந்திருப்பதும் சிந்திக்கத்தக்கது.இந்த முறையில் விலங்குகளை கொல்வதை இஸ்லாம் தடுக்கிறது. ஏனெனில் இதன் முலம் ரத்தம் முழுவதும் வெளியேறுவது இங்கு நடைபெறாது. உடலில் தங்கக் கூடிய ரத்தம் சாப்பிடுபவர்களுக்கு சில அலர்ஜிகளை கொடுக்கலாம்.

மேலும் சிலர் கோணிப் பைகளில் கோழியை விட்டு இரண்டு அடி தரையில் வேகமாக அடித்து அதனை கொல்கிறார்கள். தமிழகத்தில் கூட இந்த முறை சில இடங்களில் பின் பற்றப்படுகிறது. இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு முறை. இவையும் சுகாதாரக் கேடு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அடுத்து டெல்லியில் சில ஹோட்டல்களில் பயன்படுத்தும் ஆடு மாடு போன்றவை எவ்வாறு அறுத்து கொண்டு வரப்படுகின்றன என்ற காணொளியை பார்த்தேன். அன்றிலிருந்து நமது நாட்டில் வெளியிடங்களில் மாமிசம் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்த்துக் கொண்டேன். :-)

---------------------------------------------------------------

கொலெஸ்ட்ரோல் என்பது என்ன?

கொலெஸ்ட்ரோல் (Cholestrol) என்பது வெண்மை நிறத்திலான மெழுகு போன்ற, கொழுப்பு வகையைச் சேர்ந்த ஒரு பொருளாகும். இது உடலின் வளர்சிதை மாற்றத்தில் மிகவும் அவசியமான ஒன்றாகும். இன்னும் பல்வேறு முக்கியமான ஹார்மோன்கள் (காட்டாக எஸ்ட்ரோஜென்), பித்த நீர், வைட்டமின் D போன்ற உடலின் பல்வேறு முக்கியச் செயல்பாடுகளில் பங்கு வகிக்கும் புரதச் சத்துகள் மற்றும் திரவங்களின் தயாரிப்பிற்கு மிகவும் உதவிகரமானதாகும்.

கொலெஸ்ட்ரோலை உடல் எங்கிருந்து பெறுகிறது?

கொலெஸ்ட்ரோலை நமது உடல் பொதுவாக இரண்டு விதங்களில் பெறுகிறது.

முதலாவதாக, நமது உடல் கொலெஸ்ட்ரோலைத் தன்னிலிருந்தே உற்பத்தி செய்து கொள்கிறது. நமது உடலுறுப்புகளுள் ஒன்றான கல்லீரல் நாளொன்றுக்குச் சுமார் 1000 மில்லிகிராம்கள் வரை கொலெஸ்ட்ரோலை உற்பத்தி செய்கிறது.

இரண்டாவதாக நாம் உட்கொள்ளும் உணவு வகைகளான முட்டைக் கரு, மாமிசம், கோழியிறைச்சி, பால் மற்றும் பால் தயாரிப்புகளிருந்து கொலெஸ்ட்ரோல் உற்பத்தியாகிறது.

பழங்கள் காய்கறிகள், தானியங்கள் பருப்புகள் மற்றும் விதைகள் போன்ற தாவர உணவுகளில் கொலெஸ்ட்ரோல் இல்லை.

பல்வேறு காரணிகள் இரத்தத்தில் கொலெஸ்ட்ரோல் அளவை அதிகப்படுத்துகின்றன :

- அதிக அளவிலான கொழுப்புகள் கலந்த உணவுப் பழக்கம்
- அதீத உடற்பருமன் (Obesity)
- உடல் இயக்கக் குறைவான பணிகள்
- புகைப் பழக்கம்
- மன அழுத்தங்கள்
- மதுப் பழக்கம்
- சக்கரைநோய், சிறுநீரகம் மற்றும் தைராய்டு சுரப்பி நோய்கள்
- கருத்தடை மாத்திரைகள் உட்கொள்தல்
- வயோதிகம்
- பாலியல் காரணங்கள் (பெண்கள் குழந்தை பெறும் பருவத்தில் குறைந்த கொலெஸ்ட்ரோல் அளவினைப் பெற்றிருப்பர்).
- தலைமுறை

டாக்டர். ஜெயந்தி (டயட்டீஷியன்) கூறும் போது, ‘‘சுவைகூட்டவும், மணமூட்டவும் பல வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. வீட்டில் இயற்கையான பூண்டு, இஞ்சி, மசாலா செய்து சாப்பிடுவதற்கும் வெளியில் சாப்பிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எண்ணெயை 1000சி சூடேற்றிய பிறகு திரும்பவும் அளவுக்கு மீறி சூடேற்றுவதால் அதன் உண்மைத்தன்மை மாறி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

மசாலா + கலர் பவுடர்கள் அதிகமாக சாப்பிடுவதால் உடலில் குடலை அரிக்க ஆரம்பித்துவிடும். குறிப்பாக ரோட்டோர கடைகளில் பிரியாணி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தரமற்ற பிரியாணிகளாலும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. பிரியாணிக்கு வெங்காயப் பச்சடியை தயிரோடு கலந்து சாப்பிடுவதால் ஜீரண சக்தி கிடைக்கிறது.

கத்திரிக்காயில் நார்ச்சத்து இருப்பதால் பிரியாணியிலுள்ள கொழுப்பை உடலில் சேர்க்காமல் இருக்கும். வேளா வேளைக்கு வரிந்து கட்டிக்கொண்டு உள்ளே தள்ளக்கூடாது.

ஒரு சராசரி மனிதன் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பிரியாணி சாப்பிடலாம். அதுக்குக் கூட சரியான உடற்பயிற்சி தேவை. முன்பெல்லாம் நாற்பது வயதுக்கு மேல் தான் கண் பிரச்சினை, இடுப்பு வலி, மூட்டு வலியெல்லாம் வரும். இப்போது உணவில் கெமிக்கல் இருப்பதால் 20 வயசிலேயே எல்லாப் பிரச்சினையும் வர ஆரம்பித்துவிட்டது.

எண்ணெய், மசாலாக்கள் அதிகரிப்பால் கேன்சர், உணவுக் குழாய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எல்லா கேட்டரிங் சென்டர்களிலும் உணவு தயாரிக்கும் முறைகளை (HACCP) கடைப்பிடிக்க வேண்டும். மக்களுக்கு உணவுக்கட்டுப்பாடு மற்றும் விழிப்புணர்வு தேவை’’ என்கிறார்.

இதுபற்றி சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர். எஸ்.கிருஷ்ணாவிடம் பேசினோம்.

‘‘222 ஆஃப் தி முன்சிபல் ஆக்ட்’ படி சாலையோரங்களில் எந்தவிதமான ஆக்கிரமிப்பும் இருக்கக்கூடாது. ஆனால், சாலையோரங்களில் பலர் கடைகளை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஏழை, எளிய மக்களிடம் வரவேற்பும் பெற்றுள்ளது. அதற்காக சாப்பிடுபவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிப்பதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியாது.

முக்கியமாக சுத்தமில்லாத தண்ணீரால் ஈக்கோலை, டைபாய்டு, காலரா போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். 500 எம்.எல். தண்ணீரில் ஆயிரக்கணக்கான கிருமிகள் அடங்கியிருக்கிறது. சில உணவுகளை ஃபிரிஜ்ஜில் வைத்து வெளியே வைக்கும் போது பாக்டீரியா கிருமிகளின் எண்ணிக்கை பல ஆயிரமாக அதிகரித்துவிடும்/. இதற்கு ‘Aflotosin’ விஷத்தன்மை என்பார்கள். சிலர் உணவுகளில் மாத்திரைகள் கலப்பது அதிகரித்து விட்டது.

இதனால் தலைவலி, உடம்பு வலி என பல பிரச்சினைகள் ஏற்படும். இதைத் தடுக்க ரெயில்வே ஸ்டேஷன் உணவகங்களுக்கு லைசன்ஸ் கொடுப்பது போல் சாலையோர உணவகங்களுக்கும் லைசன்ஸ் கொடுத்து முறைப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் சாலையோர உணவகங்களால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.’’

ம்... சொல்லவேண்டியதை சொல்லியாச்சு!

நன்றி:--KUMUDAM HEALTH

22 comments:

UNMAIKAL said...

.
.

சொடுக்கி இஸ்லாத்தில் பன்றி இறைச்சி ஏன் தடை செய்யப்பட்டிருக்கிறது? கேளுங்க‌ள்


சொடுக்கி பைபிளிளும் குரானிளும் பன்றி இறைச்சி உண்ணவேண்டாம் என கூறப்பட்டிருப்பது ஏன்? கேளுங்க‌ள்

சொடுக்கி பன்றி இறைச்சியுடன் கொக்கோகோலாவை கலந்தால் பன்றி இறைச்சியிலிருந்து புளுக்கள் வெளியாகுவதை காணுங்கள். கேளுங்க‌ள்

.

UNMAIKAL said...

.
.
.
சொடுக்கி
ஹலாலான உணவை உண்பதற்கு விஞ்ஞான ரீதியாக ஏதேனும் காரணம் உண்டா?
கேளுங்க‌ள்
.
.
.

சிராஜ் said...

சலாம் சகோ சுவனப்பிரியன்,

நல்ல பதிவு.

/* ம்... சொல்லவேண்டியதை சொல்லியாச்சு! */

சொல்வது மட்டுமே நமது கடமை. எடுத்துக் கொள்வதும், எடுத்து கொள்ளாததும் மற்றவர்கள் உரிமை. நீங்கள் கடமையை செவ்வனே செய்கிறீர்கள் சகோ.

Seeni said...

arabukkalin muyarchi!
makizhchi alikkirathu!
melum nalla thokuppai thanthathukku!
alla arul purivaanaaka ungalukku!

சுவனப்பிரியன் said...

சலாம் சகோ சிராஜ்!

//சொல்வது மட்டுமே நமது கடமை. எடுத்துக் கொள்வதும், எடுத்து கொள்ளாததும் மற்றவர்கள் உரிமை. நீங்கள் கடமையை செவ்வனே செய்கிறீர்கள் சகோ.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சுவனப்பிரியன் said...

சகோ சீனி!

//arabukkalin muyarchi!
makizhchi alikkirathu!
melum nalla thokuppai thanthathukku!
alla arul purivaanaaka ungalukku!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சுவனப்பிரியன் said...

பதிவு சம்பந்தமாக மேலும் பல சிறந்த சுட்டிகளைத் தந்த உண்மைகளுக்கு நன்றிகள்.

dondu(#11168674346665545885) said...

ஹலால் முறை இசுலாமியருக்கு இருப்பது போல யூதர்களுக்கு கோஷர் முறை உல்ளது. இரண்டும் ஒன்றுதானா? ஏனெனில் இரண்டுக்கும் அடிப்படை மூசா நபியின் கட்டுப்பாடுகள் என்றே நான் நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சுவனப்பிரியன் said...

திரு சாரங்க்!

//‘மனிதர்களே! உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும் உள்ளங்களில் உள்ளதற்கு நோய் நிவாரணமும் நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும் அருளும் வந்து விட்டன.’
-குர்ஆன் 10:57

என் இப்படி எல்லாம் தேவை இல்லாம பேசி மாட்டி கொல்கிறீர்கள். நபிகள் தான் மனிதானான எனக்கும் தூதராக கடவுளா அனுப்பப்பட்டவர் என்றால் நான் இன்றே தற்கொலை செய்து கொள்வேன் //

அப்படி எல்லாம் செய்து விடாதீர்கள். உங்கள் வேதங்களே முகமது நபியின் வருகையைப் பற்றி கோடிட்டுக் காட்டியுள்ளது. ஆதாரம் கேட்டால் தருகிறேன். மேலும் தற்கொலை செய்து கொள்வதை அனைத்து மதங்களும் தடுக்கின்றன.

//ஏன் பொய் சொல்லி பிழைக்கிரீர்கள். இஸ்லாம் மனித குளத்தின் மதாமா (மார்கமா)?//

நான் உழைத்து சம்பாதிக்கிறேன். பொய் சொல்லி சம்பாரிக்க எந்த தேவையுமில்லை.

//இஸ்லாம் மனித குளத்தின் மதாமா (மார்கமா)?//

மனித குளம் என்பது தினமும் கோவிலுக்கு அருகில் சென்று குளிக்கிறீர்களே அந்த குளம். நான் சொல்வது மனித குலம். ஸ்ஸ்ஸ்...யப்பா தமிழ் அறிஞர்கள் யாராவது சாரங்குக்கு பாடம் எடுங்களேன்.
சரி இனி விளக்கத்தக்கு வருவோம். இஸ்லாம் என்பது மதம் அல்ல. அது மார்க்கம். பிறப்பினால் வருவதல்ல இஸ்லாம். கருணாநிதியும் வீரமணியும் தாங்கள் இந்து இல்லை என்றாலும் இந்திய சட்டப்படி அவர்கள் இந்துக்களே! நாததிகத்தையும் ஒரு பிரிவாகவே எடுத்துக் கொள்கிறது இந்து மதம்.

ஆனால் குர்ஆன் மற்றும் அதற்கு விளக்கவுரையாக அமைந்த ஹதீதுகள் இவற்றைப் பின்பற்றி வாழ்பவனே முஸ்லிம். அதற்கு மாற்றமாக நடப்பவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுகிறான். எனவே இஸ்லாம் ஒரு மார்க்கம். மதமன்று.

//மொழி வேற்றுமை இல்லை என்றால் என் எல்லா முஸ்லிமும் அரபு மொழி பியி வைத்துக் கொல்கிறீர்கள். எனக்கு தெரிந்து கொஞ்சம் தமிழ் பெயர்கள் தான். அல்லா பிச்சை போன்று//

தாராளமாக தமிழில் பெயர் வைக்கலாம். அன்பழகன், அறிவழகன், சுவனப்பிரியன், ஆரோக்கியம், மல்லிகா, என்ற அழகிய தமிழ் பெயர்களை வைப்பதற்கு இஸ்லாம் தடை சொல்லவில்லை. ஆனால் முருகன், கணேசன், போன்ற சிலைகளையுடைய கடவுள் பெயர்களை வைக்க இஸ்லாம் தடை சொல்கிறது. அதே போல் 'அல்லா பிச்சை' என்ற பெயரும் அர்த்தம் சரியாக இருந்தாலும் பெயர்கள் சற்று உயர்வாக இருக்க வேண்டும் என்பது முகமது நபியவர்களின் கட்டளை. தன்னை இழிவுபடுத்தி வைத்துக் கொண்ட பெயரை முகமது நபி அவரது தோழருக்கு மாற்றியவரலாறு உண்டு. 'அல்லா பிச்சை' என்பதை மாற்றி 'அல்லாவின் அடிமை' என்று வைத்துக் கொள்ளலாம்.

இப்ராஹிம்(ஆப்ரஹாம்) என்ற பெயர் அரபு பெயர் அல்ல. இதை பல முஸ்லிம்களும் வைத்துள்ளனர்.

சுவனப்பிரியன் said...

திரு டோண்டு ராகவன்!

//ஹலால் முறை இசுலாமியருக்கு இருப்பது போல யூதர்களுக்கு கோஷர் முறை உல்ளது. இரண்டும் ஒன்றுதானா? ஏனெனில் இரண்டுக்கும் அடிப்படை மூசா நபியின் கட்டுப்பாடுகள் என்றே நான் நினைக்கிறேன்.//

யூதர்களின் கோஷா முறை பற்றி எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் விளக்கவும். ஆனால் மோஸேவுக்கு முன்னால் ஆப்ரஹாம் இந்த சட்டங்களை இறைவனிடமிருந்து முன்பே பெற்றிருக்கிறார். முகமது நபி, ஏசு, மோஸே,இஸமவேல் என்று பின்னால் வந்த நபிமார்கள் அனைவருக்கும் நபி ஆப்ரஹாமுடைய சட்டங்களே அடிப்படையாக அமைந்துள்ளது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

UNMAIKAL said...

.
.
சொடுக்கி பிணந்திண்ணி சாமியார்கள். தைரியமுள்ள ஆண்களுக்கு மட்டும். பாருங்கள்.


சொடுக்கி “பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்.” பாருங்கள்.

.
.
.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ சுவனப்பிரியன்,
பலரும் அறிய வேண்டிய அவசியமான பதிவு.

குருவி திருவி குழம்பு வச்சி..
கோழி அடிச்சி கொழம்பு காய்ச்சி..
கெடா வெட்டி பொங்க வச்சு..
...என்றெல்லாம் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

நான் கல்கத்தா அருகே ஒரு ஊரில் உள்ள ஹால்டியா எனும் ஊரில் உள்ள மார்க்கெட்டில் பார்த்துள்ளேன்.

சின்ன உள்ளான் போன்ற குருவியின் கழுத்தை விரலால் திருகி கொல்லுதல்.

கோழியை பெரிய தடியால் தன் தலையில் ஒரே அடியில் நச்சி.. கொடூரமாக கொல்லுதல்.

இதெல்லாம் மிருகவதை.

அங்கே இருந்த ஒன்றரை ஆண்டு காலமும் 12 ஊழியர்கள் கொண்ட எங்கள் மெஸ்ஸுக்கு கோழி வாங்க நான்தான் போவேன். நானே கூர்மையான கத்தியால் தக்பீர் சொல்லி முறைப்படி அறுப்பேன். அமைதியாக இரத்தம் வழிந்தோடிய பின்னர் இறைச்சி கடைக்காரரிடம் தருவேன்.

அங்கே இருந்த ஒன்றரை வருடமும் மட்டன் வாங்கினாலும் சாப்பிட்டதில்லை.

காரணம், ஆட்டை ஒரே வெட்டில் தலை தனி உடம்பு தனியாக ஆக்குதல்... தனியே போன தலை கத்தும் கொடூரம் காண சகிக்காது.

சுவனப்பிரியன் said...

மயில் வாகனன் on February 17, 2012 at 10:29 pm

நண்பர் சுவனப்ரியனுக்கு…

முதலில் இந்தக் கட்டுரைக்கும் (ஆர்யம் திராவிடம் இலக்கிய ஆதாரங்கள்) இப்போது நாம் எழுதிக் கொண்டிருக்கும் மறுமொழிகளுக்கும் விலக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதை உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இன்னும் இன்னும் எத்தனை நாட்கள், எத்தனை முறை எழுதினாலும் ‘நான் சொல்வதுதான் சரி’ என்று முன்பே முடிவு செய்துகொண்டுவிட்டால், பின்னர் விவாதத்தில் எந்தப் பயனும் இருக்காது.

நானாக இஸ்லாமியத் திருமறை பற்றி இந்தத் தளத்தில் எதுவும் எழுத முன்வரவில்லை. தங்கள் கூற்றுகளின் வழி, ‘இறைவன் அவரவர் மொழியிலேயே தூதர்களை அனுப்பியிருக்கிறார்’ என்று அறிந்து, ‘அவர், அந்தத் தூதர், திருமூலராகவோ திருவள்ளுவராகவோ இருக்கலாம்’ என்றெல்லாம் தாங்கள் சொல்வது கேட்டு, என் மறுமொழிகளைப் பதிவு செய்தேன்.

நபிகள் பெருமானுக்குப் பிறகு வந்த எவரும் ‘இறைத் தூதர்’ என்னும் தகுதிக்கு உரியவரல்லர் என்பது ஏற்க முடியாதது. இது மறைமுகமாக, இந்திய மண்ணில் கடந்த 1500 ஆண்டுகளுக்கு இடையில் தோன்றிய அத்தனை மகான்களையும் ஒரேயடியாக மறுக்கிறது. ‘இந்திய மொழிகளில் ஒன்றை அங்கீகரித்து அதில் ஒரு தூதுவரைக் கடைசித் தூதராக இறைவன் ஏன் அனுப்பவில்லை?’ என்கிற ஞாயமான கேள்வி ஒரு இந்தியனுக்குப் பிறப்பது தவறல்லவே?

உலக ஒற்றுமையை அரபு மொழி வழிதான் வலியுறுத்த வேண்டுமா என்ன? சமஸ்க்ரிதத்தில் சொல்லும் வேத மந்த்ரங்களால் அந்த ஒற்றுமையை வலியுறுத்தக் கூடாதா? எந்த மொழியிலும் வழிபடும் உரிமை எல்லாக் கோயில்களிலும் இருக்கின்றன. ஆனால் வேத மந்த்ரங்கள் பொதுவானவை. என்பதை நானும் ஏற்கனவே பதிவு செய்திருக்கின்றேனே..! அரபுவில் ‘அழைப்பு விடுவதை’ நான் மறுக்கவில்லை, எதிர்க்கவில்லை. அது போலவே, சமஸ்க்ரிதத்தில் அர்ச்சிப்பதையும் எவரும் எதிர்க்க, மறுக்கக் கூடாது என்பதுதான் என் நிலை.

உண்மைகள் பொதிந்திருக்கும் மந்தரத் தொகுப்புகளைப் பயன்படுத்துவதில், அந்த மொழியின் உயர்வு அல்லது பிற மொழிகளின் தாழ்வு பற்றிய பேச்சுக்கு இடமெதுவும் இல்லை. இதுதான் நோக்கம் என்று தெளிவாக்கிய பிறகும் இங்கு சிலர் ‘தமிழுக்குச் சப்பைக் கட்டுக் கட்டுகிறேன்’ என்று சொல்லிக்கொண்டு வேதத்தைப் பயன்படுத்துவோரின் ‘தாயைக் கொச்சைப் படுத்தும் அளவு’க்கு மறுமொழிகளைப் பதிவு செய்கிறார்கள் (நிச்சயம் நீங்கள் அல்ல). இந்தத் தலைப்பிலேயே அத்தகு மறுமொழிகள் இடம்பெற்றுள்ளன. பிறரின் தாயை இழிபடுத்தும் அளவுக்கு இவர்களுக்கு மொழி வெறி பிடித்திருக்கிறது.
(தாழ்வான) உணர்வுக்கு இடமளித்து, அறிவுக்கும் அன்புக்கும் புறம்பாகப் பதிவு செய்யப் படும் கருத்துக்களை இந்தத் தளமும் அப்படியே வெளியிடுவது நன்றாக இல்லை.
எப்படியோ, தேவையறிந்து, உலகில் இத்தனை மொழிகளை இறைவனே உருவாகியிருக்கிறான். ‘அனைத்து மொழிகளும் என் உடுக்கை ஒலியிலிருந்தே தோன்றியுள்ளன’ என்று சிவனாக நின்று இறைவன் அபூர்வ ராமாயணத்தில் கூறுகிறான்.
இதில் இவர்தான் தூதர், இதுவே ஒற்றுமைக்கான மொழி என்று ஒரு தூதுவரையோ ஒரு மொழியையோ எல்லோர் மீதும் திணிக்கவே முடியாது. இதனைப் பரந்த இதயமுள்ள எவரும் ஒப்புவர். எந்த நூலானாலும் அதில் காணும் நன்மைகளை ஏற்கும் அதே நேரம், ஏற்கத் தக்கதல்லாத கருத்து இருந்தால், அதை நிராகரிக்கத் துணிவது பகுத்தறிவின் வேலை.

சுவனப்பிரியன் said...

மயில் வாகனன் on February 17, 2012 at 10:29 pm
நண்பர் சுவனப்ரியனுக்கு…

இந்த Rational Thinking க்கு எங்கு இடம் இருக்கிறதோ அங்கு ஹிந்து இருக்கிறான். இந்தப் பெயர் (ஹிந்து என்கிற பெயர்), நில எல்லைகள் குறித்தும் வழங்கப் பட்டு வந்தாலும், உலகுக்கு நான் இப்போது குறிப்பிட்டுள்ள சிந்தனை பொதுவானது. பகுத்தறிந்து வாழும் எவரும், எங்கு இருந்தாலும், என்ன பெயரால் இருந்தாலும், அவர் ஹிந்துவே..!

அரபு மொழியில் ‘தொழுகை’ மற்றும் ‘அழைப்புக் கொடுப்பது’ போல், வேதத்தைச் சொல்லி இறைவனை வழிபடுவதிலும் எந்தத் தவறும் இல்லையே..! இதில் உங்களிடம் விவாதம் செய்ய என்ன இருக்கிறது என்றால், ஹிந்துக்களில் ஒரு சாரார் கிளப்பும் மொழிவழிப் பிரச்சினையை நீங்களும் உங்களின் மறுமொழி ஒன்றில் குறிப்பிட்டதால்தான் இவற்றை உங்களுக்கு எழுத நேர்கிறது.

தம் அறியாமையால் மக்கள் வேறு தெய்வங்களை (இருப்பதாகக் கருதி) வழிபட்டாலும், அவர்கள் தன்னையே (ஒரே கடவுளையே) வழிபடுவதாக இறைவன் (கண்ணனாக இருந்து) கூறியிருக்கிறார். அதாவது, ‘இருப்பது ஒரே இறைவன் தான்’ என்று கூறுகிறார். அதே நேரம், இதன் மூலம் இறைவனை ஒரே வழிமுறையில், உருவத்தில், அருவத்தில்தான் வழிபட வேண்டும் என்கிற கட்டுப்பாடு இல்லை என்பதையும் உணர்த்துகிறார். இந்தத் தெளிவான சொற்கள், இறைவனை வழிபட வேறு வேறு வழிகள்,உருவங்கள், திருநாமங்கள், அருவம்… என எல்லாவற்றையுமே அங்கீகரிக்கிறது.

இத்தகு பரந்த மனம் நிச்சயமாக இந்த உலகில் தோன்றியுள்ள அல்லது தோன்றப் போகும் எந்தச் சமயத்துக்கும் அல்லது மொழிக்கும் எதிரியே அல்ல. அது எல்லாவற்றையும் தன்னுள் கொண்டது. நிராகரிப்புக்கு இதில் இடம் இல்லை.

தங்கள் மதம் உட்பட உலகின் பிற எல்லா மதங்களும் இந்தக் கருத்தின் அங்கங்கள் என்கிற வகையில் ஒரு ஹிந்துவால் ஏற்றுக்கொள்ளப்படுமே தவிர நிராகரிக்கப்படவே படாது. எந்த வழி முறையையும் மறுக்காத இந்தச் சமயமே பல மொழிகள், பல இனங்கள்… இத்யாதி வேறுபாடுகள் கொண்ட இந்த உலகத்துக்குரிய பொதுச் சமயமாக இருக்கத் தகுதியுள்ள சமயமாகும். இப்படி ஒரு நிலை பிற மதங்களில் கிடையாது. ஏனெனில் அவை குறிப்பிடும் வழிமுறைகளைத் தவிர மற்றவற்றை அவை ஏற்பதில்லை.

இந்த உபதேசத்தையும் கடவுள் ‘கண்ணனை மட்டுமே வழிபட வேண்டும்’ என்று கூறியிருப்பதாகக் கொள்பவர்களும் உண்டு. அதையும் நாங்கள் மறுக்கவில்லை. அவன் இல்லாத இடம், செயல், பொருள், காலம், மொழி… எதுவும் இல்லை.

பேதம் நம்முடையது; அவனுடையதல்ல. பொறுமையுடன் படித்ததற்கு நன்றிகள். இன்னும் எளிமையாக எழுதிடத் தெரியவில்லை.

வாழ்க..!

சுவனப்பிரியன் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக'துஹு

இந்தியாவில் உணவுகளிற்கு ஹலால் சான்றிதழ் தருகிறார்களா? எப்படி ஹலால் உணவுகளை வேறுபடுத்தி தெரிந்து கொள்கிறீர்கள்?
சிறீலங்காவுல டொபி கூட ஹலால் பார்த்து தான் வாங்குகிறோம். ஆனால் இந்தியப் பொருட்களில் அப்படி ஹலால் குறியீடு எதுவும் இருப்பதில்லையே!
-Asfa shekha

வஅலைக்கும் சலாம்! சகோ.

வெளிநாடுகளுக்கு எற்றுமதி செய்யப்படும் இறைச்சிகளில் ஹலால் முத்திரை குத்தியே வருகிறது. எங்கள் வீடுகளில் அன்று அறுக்கப்பட்ட இறைச்சிகளையே அதுவும் எங்கள் கிராமத்தில் வாங்குவதால் இங்கு பிரச்னை இல்லை. இதில் மிக கவனமாக இருப்பது நல்லது.

சுவனப்பிரியன் said...

சலாம் சகோ ஆஷிக்!

//குருவி திருவி குழம்பு வச்சி..
கோழி அடிச்சி கொழம்பு காய்ச்சி..
கெடா வெட்டி பொங்க வச்சு..
...என்றெல்லாம் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.//

ஹா...ஹா...ஹா...

உண்மைதான். வெளியூர்களுக்கு சென்றால் நான் சைவப் பிரியனாக மாறி விடுவேன். உடலுக்கும் நல்லது. நமது மணி பர்ஸூக்கும் நல்லது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

சுவனப்பிரியன் said...

ஆனந்த விகடனின் கேள்வி
(1.2,2012): ஜெயலலிதாவையும், ஆட்சியையும் கைப்பற்றத் துடிக்கும் உங்கள் தலைமையிலான பார்ப்பன லாபியின் சதிதான் சசிகலா நீக்கம் என்று சொல் லப்படுவது பற்றி என்ன நினைக் கிறீர்கள்?

சோவின் பதில்: நீங்கள் சொல்வது போல் வைத்துக் கொண்டால் நான் அ.தி.மு.க.வைக் கைப்பற்றிவிடுவேன். அ.தி.மு.க., எம்.எல்.ஏ.கள் எல்லாம் என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து விடுவார்கள். அமைச்சர்கள், அதிகாரி கள் எல்லோரும் என் சொல்படிதான் நடப்பார்கள். இப்படியெல்லாம் நான் நம்பவேண்டும். நீங்களே சொல்லுங்கள். அவ்வளவு பெரிய மடையனா நான்?

:-)

சுவனப்பிரியன் said...

சூபர் திங்கர்!

//Also, in Muslims, there are sufi sect , wahabhi sect and Deobend sect people. 75% of Indian Musllims belongs to Sufi sect which practices somewhat peaceful methods.But, Deobend and Wahabhi are dangerous sects probagated by Gulf money. Nowadays, it gained popular among Indian Muslims because of money.//

குர்ஆனையும் அதற்கு விளக்கமாக அமைந்த முகமது நபியின் வழிமுறைகளையும் தங்களால் முடிந்த வரை பின் பற்றுபவர்கள் முஸ்லிம்கள். இதைப் பிரசாரம் பண்ணுபவர்களை நீங்கள் வஹாபிகள் என்று இனம் காணுகிறீர்கள். என்னையும் வஹாபி என்றே சொல்வீர்கள். அரபு நாட்டு பணம் எங்கு வருகிறது. யாருக்கு தருகிறாரக்ள் என்ற விபரத்தைச் சொன்னால் நானும் போய் வாங்கிக் கொள்வேன். கொஞ்சம் உதவி பண்ணுங்களேன்.

//It created all type of problem. So, Hindus come forward and help sufi sect Muslim people. It will create harmony among us.//

ஒரு பிரச்னையும் வராது. முன்பெல்லாம் இந்து முஸ்லிம் கலவரங்கள் தமிழகத்திலும் நடக்கும். வகாபியிசம் பெருகியதால் முஸ்லிம்கள் உண்மையான இஸ்லாத்தை அறிந்து கொண்டார்கள். 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியின் மூலம் இந்து மக்களும் இஸ்லாத்தின் பெருமையை உணர்ந்து வருகின்றனர். வட நாடுகளில் சூஃபியிசம் பெருகியதால் உண்மை இஸ்லாம் அவர்களை சென்றடையவில்லை. குர்ஆனை விளங்கிய ஒரு முஸ்லிம் எந்த காலத்திலும் தனது சகோதர மதத்தவனை வன்மையான எண்ணம் கொண்டு பார்க்க மாட்டான்.

வஹாபியிசம் பெருகுவதால் இந்தியாவுக்கு நன்மைதானே ஒழிய தீமை கிடையாது.

சுவனப்பிரியன் said...

நண்பர் மயில்வாகனன்!

//நபிகள் பெருமானுக்குப் பிறகு வந்த எவரும் ‘இறைத் தூதர்’ என்னும் தகுதிக்கு உரியவரல்லர் என்பது ஏற்க முடியாதது. இது மறைமுகமாக, இந்திய மண்ணில் கடந்த 1500 ஆண்டுகளுக்கு இடையில் தோன்றிய அத்தனை மகான்களையும் ஒரேயடியாக மறுக்கிறது.//

இந்திய மண்ணில் மட்டும் அல்ல உலகம் முழுமைக்குமே முகமது நபிக்கு பிறகு வேறு இறைத்தூதர் இல்லை என்கிறது இஸ்லாம். இதில் ஏன் பாரதத்தை மட்டும் தனியாக பிரிக்க வேண்டும்.

இறைத் தூதர் என்பதும் மகான்கள் என்பதும் இரு வேறாக பிரித்துப் பார்க்க வேண்டும். இரண்டையும் ஒன்றாக குழப்பியதால்தான் நம் நாட்டில் இத்தனை குழப்பமே! இறைத் தூதர் என்பவர் இறைவனால் நியமிக்கப்படுவதும் இறைவனிடமிருந்து மனிதர்களின் நல்வாழ்வுக்காக இறைச் செய்தியை கொண்டு வருபவருமாவார். முகமது நபிக்கு பின் வந்த அபுபக்கர், உமர், உதுமான் போன்ற மிகச் சிறந்த அறிஞர்களை முஸ்லிம்கள் யாரும் இறைத் தூதர் என்று சொல்வதில்லை. மகான்கள், ஜனாதிபதிகள் என்றுதான் கூறுகின்றனர். முகமது நபி காலத்துக்கு முன்பு பல தூதர்கள் இந்தியாவுக்கும் வந்ததை குர்ஆனும் மறுக்கவில்லை.

//‘இந்திய மொழிகளில் ஒன்றை அங்கீகரித்து அதில் ஒரு தூதுவரைக் கடைசித் தூதராக இறைவன் ஏன் அனுப்பவில்லை?’ என்கிற ஞாயமான கேள்வி ஒரு இந்தியனுக்குப் பிறப்பது தவறல்லவே?//

இப்படி ஒவ்வொரு தேசத்தவனும் நினைத்தால் உலக ஒற்றுமை எப்படி வரும்? உலக மாந்தர் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வர உலக மொழி ஏதாவது ஒன்றிலிருந்துதான் கொடுக்க முடியும். நாட்டு ஒற்றுமைக்காக வங்காள மொழியான ஜனகனமனவுக்கு இந்த வாதத்தை நீங்கள் வைப்பதில்லை.

//உலக ஒற்றுமையை அரபு மொழி வழிதான் வலியுறுத்த வேண்டுமா என்ன? சமஸ்க்ரிதத்தில் சொல்லும் வேத மந்த்ரங்களால் அந்த ஒற்றுமையை வலியுறுத்தக் கூடாதா?//

தாராளமாக செய்யலாம். அதை இறைவன் அல்லவா முடிவு செய்ய வேண்டும்! குர்ஆன் இறங்கிய காலத்தில் அரபு நாடுகள் அராஜகத்தின் உச்சத்தில் இருந்தது. எனவே அந்த மொழியில் ஒரு தூதரையும் வேதத்தையும் தர இறைவன் முடிவு செய்தான். அதே அராஜகம் அந்த நேரத்தில் நமது நாட்டில் இருந்திருந்தால் கடைசி தூதர் நமது மொழியிலேயே வந்திருப்பார். எனவே இங்கு மொழிக்கு முக்கியத்துவம் இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.

//இதுதான் நோக்கம் என்று தெளிவாக்கிய பிறகும் இங்கு சிலர் ‘தமிழுக்குச் சப்பைக் கட்டுக் கட்டுகிறேன்’ என்று சொல்லிக்கொண்டு வேதத்தைப் பயன்படுத்துவோரின் ‘தாயைக் கொச்சைப் படுத்தும் அளவு’க்கு மறுமொழிகளைப் பதிவு செய்கிறார்கள் (நிச்சயம் நீங்கள் அல்ல). இந்தத் தலைப்பிலேயே அத்தகு மறுமொழிகள் இடம்பெற்றுள்ளன. பிறரின் தாயை இழிபடுத்தும் அளவுக்கு இவர்களுக்கு மொழி வெறி பிடித்திருக்கிறது.//

இது தவறு. மொழிப் பற்று இருக்கலாம். மொழி வெறி இருக்கக் கூடாது. சரியான வாதத்தை வைத்திருக்கிறீர்கள். உங்கள் கருத்தோடு முற்றிலும் உடன்படுகிறேன்.

//தம் அறியாமையால் மக்கள் வேறு தெய்வங்களை (இருப்பதாகக் கருதி) வழிபட்டாலும், அவர்கள் தன்னையே (ஒரே கடவுளையே) வழிபடுவதாக இறைவன் (கண்ணனாக இருந்து) கூறியிருக்கிறார். அதாவது, ‘இருப்பது ஒரே இறைவன் தான்’ என்று கூறுகிறார்.//

இதைத்தான் நானும் சொல்ல வந்தேன். கண்ணியமான முறையில் விவாதித்த உங்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்.

சுவனப்பிரியன் said...

திரு சூப்பர் திங்கர்!

//Ibrahim is Arabic name of prophet Abrahim which is mentioned in Bible.//

தவறான புரிதல். அப்ரஹாம் பாலஸ்தீனை தாயகமாக கொண்டவர். அந்த நேரத்தில் அங்கு அரபி பேசப்படவில்லை. சவுதி அரேபியாவின் பூர்வீக மொழி அரபி அல்ல என்பது பலருக்கு புதிய செய்தியாக இருக்கும்.

அரபு மொழியின் பூர்வீகம் ஏமன் நாடாகும. ஆப்ரஹாமின் மகன் இஸ்மாயில் ஏமனிலிருந்து வந்த ஒரு அரபு கூட்டத்தின் மகளை திருமணம் முடிக்கிறார். அன்றிலிருந்து அரபி மொழியை கற்கவும் ஆரம்பிக்கிறார். இந்த கால கட்டத்தில்தான் சவுதி அரேபியாவுக்கு அரபி மொழி அறிமுகமாகிறது. அவர்களின் வழித்தோன்றல்கள்தான் சவுதியில் அரபி மொழியை பரப்புகின்றனர். காலப்போக்கில் சவுதியின் பூர்வீக மொழிபோய் அந்த இடத்தில் அரபி அமர்ந்து கொண்டது.

அன்றைய சவுதி மக்களுக்கு எந்த மொழி வியாபாரத்துக்கு உகந்ததாக இருந்ததோ அந்த மொழியான அரபியை சுவீகரித்துக் கொண்டார்கள். காலத்துக்கு ஏற்றவாறு மாறிக் கொண்டார்கள். இந்த தளத்தில் கூட தமிழா சமஸ்கிரதமா என்ற விவாதம் சூடு பரக்கிறது. இது தேவையே இல்லை. தற்போதய வாழ்வாதாரத்துக்கு எது முக்கியமோ அதை எடுத்துக் கொண்டு எல்லாமே இறைவன் படைத்த மொழிதான் என்ற பொதுப் புத்திக்கு வந்து விட்டால் சிக்கல் ஏது?

ஜெய்லானி said...

சலாம் சகோ :-) யோசிக்க வைக்கும் பதிவு ,

வெளியே போனா இந்த மாதிரி ஏதாவது லொல்லு வருமுன்னு நினைச்சே நான் சாம்பாரை தவிர வேறு எதுவும் யூஸ் செய்வது இல்லை ...ரசத்துல கூட ஏதோ மிக்ஸ் இருக்காம் ..!!! :-))))

சுவனப்பிரியன் said...

சலாம் சகோ ஜெய்லானி!

//வெளியே போனா இந்த மாதிரி ஏதாவது லொல்லு வருமுன்னு நினைச்சே நான் சாம்பாரை தவிர வேறு எதுவும் யூஸ் செய்வது இல்லை ...ரசத்துல கூட ஏதோ மிக்ஸ் இருக்காம் ..!!! :-))))//

உண்மைதான். வீட்டிற்க்கு வந்து தான் அசைவம் அதுவரை சைவம்தான் இந்தியாவில். :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ