அயோத்தி: "புனித நகரமான அயோத்தியில், பிரமாண்டமான ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும் நாளே, என் வாழ்வின் லட்சியம் நிறைவேறும் நாள்' என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறினார்.
அயோத்தியில், தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது: அயோத்தியில், பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதில், நான் உறுதியாக இருக்கிறேன். சோம்நாத் கோவிலை கட்ட காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தது போல், முந்தைய ராஜிவ் அரசும், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அயோத்தியில், கடவுள் ராமர் சிலை உள்ள இடத்தில், பிரமாண்டமான ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும் நாளே, என் பொது வாழ்வின் லட்சியம் நிறைவேறும் நாள். இந்த நாள் விரைவில் வரவேண்டும் என, அனைத்து ராம பக்தர்களும் எதிர்பார்க்கின்றனர். ராமர் கோவில் கட்டுவதற்கான, எங்களின் முயற்சிகள் தொடரும். அயோத்தியில் சிலை வைக்கப்பட்டுள்ள இடமே, ராமர் பிறந்த இடம் என, அலகாபாத் ஐகோர்ட் அளித்த தீர்ப்பில், மூன்று நீதிபதிகளும் தெரிவித்துள்ளனர். அயோத்தி பிரச்னையை தீர்க்க இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து பேச வேண்டும். ரத யாத்திரை நடத்தியதன் மூலம், நான் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டேன்.
-பத்திரிக்கை செய்தி 05-02-2012
இந்திய மக்களை எந்த அளவு கேவலப்படுத்த முடியுமோ அந்த அளவு கேவலப்படுத்துகிறார் அதவானி. ஒவ்வொரு தேர்தல் நேரங்களிலும் இவருக்கு ராம பக்தி பெருக்கெடுத்து ஓடும். ராமர் அங்குதான் பிறந்தாரா என்பதற்கு எந்த சான்றுகளும் இல்லை. தொல்பொருள் ஆய்வுகளும் அங்கு கோவிலை இடித்து விட்டு பள்ளி கட்டியதாக அறிக்கையும் தரவில்லை. இப்படி எந்த பக்கம் போனாலும் ஒரு துருப்பையும் கொடுக்காத இவர் இன்று ராமர் கோவிலை கட்டுவது எனது லட்சியம் என்று பேச ஆரம்பித்து இருக்கிறார். மோடியோடு நடக்கும் குஸ்தியில் தன்னை முன்னிறுத்துவதற்கு இன்று திரும்பவும் ராமர் அவசியப் படுகிறார். ஆட்சியில் அமர வேண்டும் என்ற வெறியில் தனது நாட்டு மக்கள் ரத்தம சிந்தினாலும் பரவாயில்லை. எனக்கு ஓட்டு வேண்டும் என்பவர்தான் அடுத்த பிரதம வேட்பாளராக பிஜேபியால் முன்னிருத்தப்படுகிறார். முன்பு அரசியல் ராஜதந்திரியாக இருந்த அத்வானி இன்று ஜோக்கராக காட்சியளிப்பதுதான் ரசிக்கத் தக்கது. உபியில் ஆட்சியை இழந்ததும் அல்லாமல் அயோத்தியிலேயே இவர்களால் வெற்றி பெற முடியவில்லை.
இந்து மக்களில் பெரும் பாலோர் இவர்களின் நாடகத்தை தற்போது நன்றாகவே உணர்ந்து வருகின்றனர். ராமருக்காக அதே அயோத்தியில் பல கோவில்கள் கவனிப்பாரற்று கிடக்க இவருக்கு இந்த இடத்தின் மீதுதான் அதீத பற்று. ஏனெனில் முஸ்லிம்களை வம்புக்கிழுக்கவும் இதன் பேரில் சில ஓட்டுகளையாவது அறுவடை செய்யவும் ராமர் துணை நிற்பார் என்பது அத்வானியின் கணிப்பு.
-------------------------------------------------------------
உபியில் நடைபெறும் தேர்தலில் தற்போது பிரியங்கா காந்தியின் பிரசாரம் பலரையும் கவர்ந்துள்ளது. தனது பாட்டி இந்திரா காந்தியின் உருவத்தை ஓரளவு பெற்றுள்ள பிரியங்கா தனது பேட்டியிலும் வெலுத்து வாங்குகிறார். ராகுலைவிட பிரியங்காவை முன்னிலைப் படுத்தினால் காங்கிரஸ் மேலும் பல இடங்களை பெறும் சாத்தியக் கூறுகள் உண்டு. சாமியார்களின் கட்சியான பிஜேபி சில இடங்களை பெறுவதையும் இவரது பிரசாரம் முறியடிக்கலாம்.
------------------------------------------------------------
அத்வானி இப்படி கோமாளியாக உளறிக் கொண்டிருக்க நமது கலைஞர் நேற்று திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசியதையும் பார்த்து விடுவோம்.
“இப்போதே, பிரதமர் பதவி ஜெயலலிதாவுக்குத் தான் என, தமிழகத்தில் பிராமணோத்தமர்கள் பேசத் தொடங்கியிருக்கின்றனர். அதற்கான வேலையை, டில்லியில் உள்ள பார்ப்பன நண்பர்கள் இப்போதே தொடங்கிவிட்டனர். நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால், பா.ஜ., வந்தால், மீண்டும் ஒரு பாபர் மசூதி தகராறு வரும் என்பதை, யாரும் மறந்துவிடக் கூடாது. அது வராமல் தடுக்க வேண்டுமேயானால், நமக்கு இருக்கிற மாற்று, வேறு வழி என்ன? இதில், தன்னலத்தை மறந்துவிட்டு, இந்தியத் திருநாட்டின் எதிர்காலத்தைத் தான் யோசிக்க வேண்டும். இந்தியாவை மதவாதிகளின் கூடாரமாக ஆக்கிவிட நான் விரும்பவில்லை. சிறுபான்மைச் சமுதாயத்தை, குஜராத் பாணியில் வேட்டையாட நான் ஒப்பமாட்டேன். அப்படிப்பட்ட சூழ்நிலையில், நான் எப்படி பா.ஜ.,வுக்கு பிரதமர் பதவிக்கான சூழ்நிலையை உருவாக்க முடியும். காங், பா.ஜ.,வை விட்டால் வேறு எந்தக் கட்சியும் பிரதமர் பதவிக்குப் பொருத்தமாக இல்லை. காங்கிரசுக்குள்ளே சண்டை எப்போது ஓயுமோ, தெரியாது. ஆனாலும், இருக்கிற கட்சிகளில், ஓரளவாவது மதவாதத்துக்கு இடம் தராத, பகுத்தறிவுக்கு இடம் தரும் கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. இதை, பொதுக்குழு முடிந்து, வீட்டுக்குச் சென்று, ஒரு வாரம் சிந்தித்து, நண்பர்களோடு கலந்து பேசினால், நீங்களே உணர்வீர்கள்.”இவ்வாறு கருணாநிதி பேசினார்.
-பத்திரிக்கை செய்தி 05-02-2012
கலைஞரே! சிறுபான்மையினர் நலனில் உங்களின் அக்கறையை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அது ஒருபுறம் இருக்கட்டும். பொதுக் குழு கூட்டத்தில் உங்கள் முன்னிலையிலேயே ஸ்டாலின் ஆட்களும் அழகிரி ஆட்களும் காரசாரமாக சண்டையிட்டுக் கொண்டதை பார்க்கவில்லையா? எப்படி இருந்த திமுக இன்று இந்த நிலையை அடைய உஙகளின் வாரிசுகளும் உங்களின் சொந்தங்களும் அதிகாரத்தில் கோலோச்சியதே முக்கிய காரணம் என்பதை மற்ந்து விட்டீர்களா? இப்பொழுது ஆளும் ஜெயலலிதாவை விட உங்கள் ஆட்சி சிறப்பாகவே இருந்தது. இருந்தும் திரும்பவும் ஜெயலலிதாவை மக்கள் தேர்ந்தெடுக்க காரணம் உங்கள் குடும்பத்தினரின் அரசியல் தலையீடே என்பதை மறுக்க முடியுமா?
உங்களுக்கு பின்னால் முறைப்படி அன்பழகனுக்குத் தானே தலைமைப் பதவி சென்றடைய வேண்டும். ஸ்டாலினுக்கும் வேண்டாம் அழகிரிக்கும் வேண்டாம் அன்பழகனிடம் சில காலம் பொறுப்பைக் கொடுத்து விட்டு நன்றாக ஓய்வெடுங்கள். அன்பழகனுக்கு கீழே இருவரும் சில காலம் பணியாற்றட்டும். அதன் பிறகு மக்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவர் தலைமைப் பதவிக்கு வரட்டும்.
இன்னும் தாமதப்படுத்தினீர்கள் என்றால் உங்கள் முன்னிலேயே அண்ணா உருவாக்கிய திமுக கரைந்து போய் விடும். அதற்கு நீங்களே காரணமாகி விட வேண்டாம்.
13 comments:
சலாம் சகோ....
#முன்பு அரசியல் ராஜதந்திரியாக இருந்த அத்வானி #
அத்வானி எப்போதும் ராஜதந்திரியாக இருந்தது இல்லை....
hm
சலாம் சகோ ஹாஜா மைதீன்!
//அத்வானி எப்போதும் ராஜதந்திரியாக இருந்தது இல்லை....//
ஆனால் சோ ராமசாமி ஒத்துக் கொள்ளமாட்டார். :-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சகோ ஷர்புதீன்!
//hm//
வருகைக்கும கருத்துக்கும் நன்றி!
அயோத்தி: "புனித நகரமான அயோத்தியில், பிரமாண்டமான ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும் நாளே, என் வாழ்வின் லட்சியம் நிறைவேறும் நாள்' என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறினார்....
இவருடைய லட்சியம் நிறைவேறுவதற்குள் !!! ...வெளியே சங்கு ஊதும் சத்தம் கேட்கிறது .......ஹா..ஹா... ஹா
//அயோத்தி: "புனித நகரமான அயோத்தியில், பிரமாண்டமான ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும் நாளே, என் வாழ்வின் லட்சியம் நிறைவேறும் நாள்' என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறினார்....
இவருடைய லட்சியம் நிறைவேறுவதற்குள் !!! ...வெளியே சங்கு ஊதும் சத்தம் கேட்கிறது .......ஹா..ஹா... ஹா//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ நாசர்!
ellaam arisiyal naadagam ivargalukku ottu mukkiyam atharkkaga makkalai muttaalaakka ninaikindraargal
surely it will be soon
IT SNOT NADAGAM WE WILL DO IT IF WE ARE WITH CLEAN MAJORITY WE HAVE DONE AN ATOMIC TEST BY THROWING SAND IN EYES OF AMERICA FOR US IT IS EASY
திரு யுவராஜ்!
//surely it will be soon//
//IT SNOT NADAGAM WE WILL DO IT IF WE ARE WITH CLEAN MAJORITY WE HAVE DONE AN ATOMIC TEST BY THROWING SAND IN EYES OF AMERICA FOR US IT IS EASY//
ராமர் கோவில் கட்டுவதெல்லாம் இருக்கடடும்! முதல்ல நம்ம நாட்டு பூர்வீக குடிகளான தாழ்த்தப்பட்ட மக்களையும், பிற்படுத்தப்பட்ட மக்களையும் கோவில்களிலாவது கொஞ்சம் சாதி வித்தியாசம் பார்க்காமல் நடத்துவீங்களா? பாபர் மசூதியை இடிக்கவும் கலவரங்களை உண்டுபண்ணவும் மட்டும் கறிவேப்பிலைப் போல் அவர்களைப் பயன் படுததுவது கொஞ்சம் ஓவராத் தெரியலையா? இன்னும் நாட்டில் பாழடைந்து கிடக்கும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் பழைய கோவில்களை எல்லாம எப்போது புணருத்தானம் பண்ணப் போகிறீர்கள்? இந்த நாடு முன்னேறுவதற்கு ஆக்கப்பூர்வமான திட்டங்களாக உங்கள் கட்சி எதை முன் வைக்கிறது? ராமர் கோவில் கட்டி விட்டால் குப்பனுக்கும் சுப்பனுக்கும் நல்வாழ்வு கிடைத்திடுமா? இதையும் உங்கள் தலைவர்களிடம் கொஞ்சம் கேட்டு சொல்றீங்களா?
//ellaam arisiyal naadagam ivargalukku ottu mukkiyam atharkkaga makkalai muttaalaakka ninaikindraargal//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ஸ்நா!
திரு நெல்லை பிரேம்குமார்!
//மேலும் இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலங்களிலும் பிற மதத்தவருக்கு அனுமதி இல்லை. இப்படி மத ரீதியாக பிறரை பாகுபடுத்தி பார்க்கும் நீங்கள் சாதி வெறியை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.//
முகமது நபி காலத்தில் கிருத்தவர்களை பள்ளிவாசலிலேயே தங்க அனுமதித்திருக்கிறார்கள். பிரார்த்தனை புரியவும் அனுமதித்த வரலாறு உண்டு. ஜனாதிபதி உமருடைய காலத்திலும் இதே போன்று பாதிரிகள் பள்ளியில் தொழுததை பார்க்கிறோம். ஒரு சில முஸ்லிம்கள் சறறு அதிகப்படியாக நடந்தால் அதற்கு இஸ்லாம் பொறுப்பாகாது.
//அதாவது விபூதி அணிந்து கொண்டோ அல்லது சிலுவை போட்டுகொண்டோ ஒருவர் சென்றால் கொலைவெறி பார்வைகளையும் சில நேரம் மிரட்டல்களையும் எதிர் கொள்ள நேரிடும். ஒரு சிறிய ஸ்டுடியோவில் உதவியாளனாக நான் வேலை பார்க்கும்போது ஒரு இஸ்லாமியர் வீட்டு திருமணத்திற்கு வீடியோ கவரேஜ் செய்ய உதவிக்கு சென்றிருந்தேன். நான் நெற்றியில் அணிந்திருந்த விபூதி பட்டையை அங்கிருந்தவர்கள் அழிக்க சொன்னார்கள்.//
இது தவறு. இஸ்லாத்தை உண்மையாக விளங்கிய முஸ்லிம்கள் இதுபோல் செய்ய மாட்டார்கள். குர்ஆனை முழுமையாக அவர்கள் விளங்காததே காரணம்.
//ஆனால் ஒரு வேற்று மதத்தை சேர்ந்தவனுக்கு நீங்கள் உங்கள் பள்ளிவாசலுக்கு நுழைய அனுமதி கொடுக்க வேண்டியதில்லை,மாறாக முஸ்லிம்கள் குடி இருக்கும் இடத்தில் அவனுக்கு வாடகைக்கு ஒரு வீடு எடுத்து கொடுக்க முடியுமா? அதற்கு அவர்கள் சம்மதிப்பார்களா?//
நான் தமிழகம் வரும் போது எங்கள் ஊருக்கு அழைத்து செல்கிறேன். 5000க்கு மேற்பட்ட வீடுகளைக் கொண்ட எங்கள் ஊரில் வெறும் 6 குடும்பங்களே இந்து குடும்பங்கள். அவர்கள் வீடுகளில் மாத்திரம் கோலம் போடுவர். இது நாள் வரை எந்த பிரச்னையும் இல்லாமல் எங்களுடன் சகோதர பாசத்துடனே பழகி வருகின்றனர். பெரும்பாலும் இதுதான் நிலைமை. நீங்கள் சொல்வது ஆச்சரியமாக உள்ளது.
nalla oru karuththu
aanaal yaarai thaan-
aatharippathu?
Post a Comment