Followers

Sunday, February 12, 2012

உயிரைப் பற்றி சில அதிசயத்தக்க செய்திகள்!

'முஹம்மதே! உயிரைப் பற்றி அவர்கள் உன்னிடம் கேட்கின்றனர். 'உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்' என்று கூறுவீராக.'
-குர்ஆன் 17:85


குர்ஆன் கூறும் இந்த வசனம் நம்மை வியப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறது. குர்ஆனின் பல வசனங்கள் உலகில் உள்ள அனைத்து படைப்புகளைப் பற்றியும் சிந்திக்கச் சொல்கிறது. விண்வெளி பயணம் மனிதர்கள் ஆகிய நீங்கள் செய்ய முடியும். இன்னும் பல அறிவியல் முன்னேற்றங்களைக் கண்டாலும் உயிரைப் பற்றி உங்களால் ஒரு முடிவுக்கு வர முடியாது என்று அடித்து சொல்கிறது குர்ஆன். 'மனிதனே நீ குறைவாகவே அறிவு கொடுக்கப்பட்டிருக்கிறாய். உயிரின் சூட்சுமத்தை உன்னால் அறிந்து கொள்ள முடியாது' என்று கூறுகிறது.

உயிரைப் பற்றி சில யூதர்கள் முகமது நபியிடம் கேட்டபோது என்ன நடந்தது என்பதை பின் வரும் புஹாரி ஹதீஸ் நமக்கு விளக்குகிறது.

பேரீச்ச மட்டை ஒன்றைக் கையில் ஊன்றியவர்களாக, நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் மக்கள் சஞ்சாரம் இல்லாத ஒரு பாழ் வெளியில் சென்றபோது அவர்களுடன் நானும் சென்று கொண்டிருந்தேன். அப்போது யூதர்களின் குழு ஒன்றை அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் 'ரூஹை (உயிர்) பற்றி அவரிடம் கேளுங்கள்' என்றார். அவர்களின் இன்னொருவர் 'அவரிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்கள்; உங்களுக்குப் பிடிக்காத எதையும் அவர் சொல்லப் போவதில்லை' என்றார். அவர்களில் மற்றொருவரோ, '(இல்லை!) இறைவன் மீது ஆணையாக நாம் (அதைப் பற்றி) அவரிடம் கேட்டே விடுவோம்' என்றார். (முடிவில்) அவர்களில் ஒருவர் எழுந்து, 'அபுல் காஸிம் அவர்களே! உயிர் என்றால் என்ன? என்று கேட்டார். உடனே நபி அவர்கள் மெளனமானார்கள். 'அவர்களுக்கு இறைவனிடமிருந்து இப்போது செய்தி அறிவிக்கப்படுகிறது' என்று என்னுடைய மனதிற்குள் நினைத்தபடி நான் நின்று கொண்டிருந்தேன். (இறைச் செய்தி வரும்போது ஏற்படும் சிரமம் விலகும் வரை பொறுத்திருந்தேன்)) அவர்கள் தெளிவடைந்தபோது '(நபியே!) உம்மிடம் அவர்கள் ரூஹைப் பற்றிக் கேட்டார்கள். ரூஹு என்பது என் இறைவனுடைய கட்டளையைச் சார்ந்ததாகும். ஞானத்தில் (மிகக்) குறைந்த அளவே தவிர அவர்கள் கொடுக்கப்படவில்லை என்று நீர் (பதில்) கூறும்!' (திருக்குர்ஆன் 17:85) என்று (திருக்குர்ஆன் வசனத்தை) கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

-ஸஹீஹூல் புகாரி 125
Volume :1 Book :3


இந்த நபி மொழியை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். முகமது நபி ஏற்கெனவெ தயார் செய்திருந்து திட்டமிட்டு சொன்ன பதிலும் கிடையாது இது. தனது தோழர்களோடு நடந்து செல்லும் பொது எதேச்சையாக யூதர்கள் எதிரில் தென்பட அவர்கள் முகமது நபியிடம் தங்களது சந்தேகத்தைக் கேட்கின்றனர். யூதர்கள் கேட்ட கேள்விக்கு அவர்களால் சுயமாக பதில் சொல்ல முடியவில்லை. சிறிது நேரம் மௌனமாகிறார்கள். ஏனெனில் இது போன்ற அறிவு பூர்வமான விஷயங்களை அந்த அரபு மக்கள் அதிகம் விளங்கியிருக்கவில்லை. பிறகு இறைச் செய்தி வருகிறது. அந்த நேரத்தில் முகமது நபிக்குள் ஏற்படும் மாற்றத்தை நபித் தோழர் கவனிக்கிறார். அன்று இறங்கிய இந்த வசனம் இன்று வரை விஞ்ஞானிகளால் ஒரு தீர்வைக் காண முடியவில்லை.

பல சினிமாக்களில் இறந்தவுடன் அந்த உடலிலிருந்து ஒரு ஆவி பிரிவது போலவும் பிறகு அந்த ஆவி வேறொரு உடலில் புகுந்து கொண்டு 'லக லக லக லக லக' என்று புரியாத மொழியில் பேசுவதை பார்த்து நம் தமிழன் வாய் பிளந்து உட்கார்ந்திருப்பது எல்லாம் அறிவியலுக்கு சாததியம் இல்லை. அதே போல் பேய் பிசாசு குட்டி சாத்தான் என்று சொல்லி நாகூரிலும், ஏர்வாடியிலும், வேளாங்கண்ணியிலும் மனநோயாளிகள் புரள்வதை அறிவியலும் ஒத்துக் கொள்வதில்லை இஸ்லாமும் ஒத்துக் கொள்வதில்லை.

ஏதோ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரவர் கற்பனைக்கு ஒரு வரையறையை உயிருக்கு வைத்திருக்கிறார்கள்.

இனி உலக வழக்கில் உயிரைப் பற்றி நாம் வைத்திருக்கும் இலக்கணத்தை வரிசையாக பார்ப்போம்.

1.உடம்பு உயிர் எடுத்ததோ? உயிர் உடம்பு எடுத்ததோ?
உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது?
உருத் தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே?
கருத் தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே?


நம் முன்னோர்களான சிவ வாக்கியர் கூட இந்த உயிரின் சூட்சுமத்தை விளங்காமல் அதனையே பாடலாக எழுதி வைத்து சென்றும் விட்டார்.

2. -உயிருக்கு விக்கி பீடியா தரும் தகவல்

உலக மதங்கள் பலவற்றில் உயிர் என்பது, உயிரினம் ஒன்றின் "பொருள் தன்மை" அற்ற பகுதியைக் குறிக்கும். ஆன்மா, ஆவி போன்ற வேறு பல பெயர்களாலும் குறிப்பிடப்படும் இதிலேயே சிந்தனை, ஆளுமை முதலியன அடங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. இறையியலில், பொதுவாக உயிர் ஒரு உயிரினத்தின் இறப்பிற்குப் பின்னரும் தொடர்ந்து இருப்பதாக நம்பப்படுகிறது. சில மதங்கள், உயிர்கள் இறைவனால் படைக்கப்பட்டன என்கின்றன. வேறு சில மதங்களில் உயிர் எவராலும் படைக்கப்படாத நிலையானவற்றுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இறப்பின் போது உடலை விட்டு நீங்கும் உயிர் இன்னொரு உடல் எடுத்து உலகில் மீண்டும் பிறக்கின்றது என்கின்றன மறுபிறவியில் நம்பிக்கை கொண்ட சில மதங்கள். உடல் உயிர்களுக்கான தற்காலிகத் தங்குமிடம் என்றும், இறுதியில் இறைவனைச் சென்றடைவதற்கான செயல்களில் ஈடுபடுவதற்காக உயிர்களுக்கு இறைவன் உடலைக் கொடுக்கிறான் என்பதும் சில மதங்களின் கொள்கை.
உலகிலுள்ள பொருள்களைக் கிடைபொருள், கிளர்பொருள் என அறிவியல் உலகம் பகுத்துக் காண்கிறது.

உயிர் உள்ள பொருளை அறிவியல் கிளர்பொருள் Organism என்கிறது.
இது தூண்டினால் துலங்கும் response to stimuli.
இனப்பெருக்கம் செய்யும் reproduce.
வளர்ந்து மறையும் grow and develope.
தனித்துவம் கொள்ளும் Homeostasis.
இதனைத் தமிழர் மால் என்றனர். மால் என்றால் ஆசை. எல்லா உயிருக்கும் ஆசை உண்டு. பிற்காலத்தில் இதனைச் சத்தி என்றனர். சத்துள்ள பொருள் சத்தி. உடலில் சத்து இருந்தால் இயங்கும். இயங்குவது சக்தி.

உயிர் இல்லாமல் சும்மா கிடக்கும் பொருளைக் கிடைபொருள் Inorganism என்கிறோம். இதுதான் மெய். இதனைத் தமிழர் சிவம் என்றனர்.
விலங்கு, செடி, காளான், வைகல் என்பன உயிரின வகைகள். (such as animal, plant, fungus, or micro-organism), virus)

------------------------------------------------------------

3.டாக்டர் ஹமீத்கான் கருவியலைப் பற்றியும் உயிரைப் பற்றியும் கூறும் தகவலைப் பார்ப்போம்.

நாத்திகத்தைத் தகர்க்கும் கருவியல் கண்டுபிடிப்பு:

பேரண்டத்திற்கு ஒரு ஆரம்பம் இருந்துள்ளது என்பதை சென்ற நூற்றாண்டு வரை அறிவியல் உலகம் எவ்வாறு அறியாமல் இருந்ததோ அவ்வாறே கரு வளர்ச்சி தொடர்பான அறிவியலிலும் போதிய விபரங்களை அறிவியலாளர்கள் அறிந்திருக்கவில்லை. இதன் காரணமாக நாத்திக விளக்கத்தில் ஏதோ நியாயம் இருப்பது போன்று மத நம்பிக்கையற்றவரிடம் ஒரு பிரம்மையை நாத்திகத்தால் ஏற்படுத்தி இருக்க முடியும்.

ஆனால் சென்ற நூற்றாண்டின் இறுதியில் கருவியல் துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் கருவுற்ற முட்டையானது உயிருள்ளதன்று. அது உயிரற்ற பிண்டம் என்ற உண்மையை வெளிப்படுத்தி நாத்திகச் சித்தாந்தத்தைத் தகர்க்கும் மற்றொரு அறிவியல் உண்மையாக வெளிப்பட்டது.

உலகின் முதலாவது சோதனைக் குழாய் குழந்தை பிறந்த கதை பெரும்பாலோர் மறந்திருக்க மாட்டார்கள். ஆயினும் மூன்று வருடம் கழித்து அவளுக்கு ஒரு சகோதரி பிறந்த வரலாறு அதிகமானோர் அறியவில்லை எனத் தோன்றுகிறது. அது ஒரு சுவாரசியமான வரலாறு.

முதல் சோதனைக் குழாய் குழந்தையைப் பெற்றெடுத்த இங்கிலாந்து தேசத்து பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த 'ப்ரவ்ன்' தம்பதியினருக்கு மூன்று வருடங்கள் கழித்து மற்றொரு குழந்தை வேண்டும் என ஆசை பிறக்கவே அவர்கள் முதலில் அணுகிய மருத்துவக் கழகத்தை மீண்டும் அணுகி தங்களது ஆசையைத் தெரிவித்தனர்.

அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட விஞ்ஞானிகள் அவர்களிடம் மீண்டும் விந்தணுவையும் கரு முட்டையையும் எடுக்காமலேயே 'ப்ரவுன்' தம்பதியரின் இரண்டாவது குழந்தையைச் சோதனைக் குழாயில் நட்டு வளர்த்து பிறகு திருமதி ப்ரவுனின் கருவறைக்கு மாற்றி மற்றொரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும்படிச் செய்தார்கள்.

விந்தனுவும் கரு முட்டையும் எடுக்காமல் குழந்தையை உருவாக்க எப்படிச் சாத்தியமாயிற்று? இக்கதையை எடுத்துக் கூறி அதற்கு விளக்கம் தரும் இந்தியரான டாக்டர் ஹமீத்கான் (இவர் இலண்டன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவரும் அமெரிக்காவின் அறிவியல் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் இருப்பவர்) ப்ரவுன் தம்பதியினர் முதல் குழந்தைக்காக மருத்துவ உதவி நாடியபோதே அவர்களிடமிருந்து விந்தணு மற்றும் கரு முட்டைகளை எடுத்து அவைகளை இணையச் செய்து கருவுற்ற முட்டைகளாக ஆக்கி வைத்திருந்தவைகளில் சில மிச்சம் இருந்ததாகவும் அவற்றுள் ஒன்றை எடுத்தே இரண்டாவது குழந்தையை உருவாக்கியதாகவும் கூறுகிறார்.

இங்கு இயல்பாக எழும் கேள்வி உலகில் உள்ள எந்த உயிரையாவது இவ்வளவு காலம் இறந்து போகாமல் பதப்படுத்தி வைக்க முடியுமா? என்பதாகும்.

இந்த நிகழ்ச்சி கருவுற்ற முட்டை மக்கள் நினைப்பது போன்று உயிருள்ள பொருள் இல்லை என்றும் அது உயிரற்ற பொருளே என்றும் காட்டுவதாகக் கூறுகிறார் டாக்டர் ஹமீத் கான்.

கருவுற்ற முட்டை உயிரற்றது என்பதை நிரூபிக்கக் கூடிய சோதனை ஒன்றையும் அவர் கூறுகிறார். ஒரு புழுவையும் அப்புழுவின் கருவுற்ற முட்டையையும் தனித் தனியாக வேறு வேறு குழாயில் வைத்து அவைகளை மைனஸ் எழுபது டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலையில் வைத்திருந்து பிறகு சிறிது நேரம் கழித்துப் புழுவை எடுத்துப் பார்த்தால் அப்புழு இறந்து போயிருக்கும். ஆயினும் அதன் கருவுற்ற முட்டையை எவ்வளவு நாள் வேண்டுமானாலும் வைத்திருந்து அதன் பிறகு அதிலிருந்து உயிருள்ள புழுவை உருவாக்க முடியும் எனக் கூறுகிறார் டாக்டர் ஹமீத்கான்.

டாக்டர் ஹமீத்கான் கூறும் இந்த விளக்கத்திலிருந்து உயிரினங்களைத் தோற்றுவிக்கும் அவைகளின் கருவுற்ற முட்டை உயிரற்ற பிண்டமே என்பதை தெளிவாக விளங்குகிறோம். கருவில் வளரும் குழந்தையின் உயிர் தொடக்கத்திலேயே அதனிடம் இருக்கும் ஒன்றில்லை என்பதும் கருவறையில் அது வளரும்போது மற்றொரு விதத்தில் பெற்றுக் கொள்வதே என்பதும் தெளிவாகும்.

இதை இன்னமும் விளங்கிக் கொள்ளச் சிரமமப்படும் நாத்திக நண்பர்கள் மிகக் குறைந்தபட்சம் ப்ரவுன் தம்பதியினரின் இரண்டாவது குழந்தைக்கு உயிர் வந்ததைப் பற்றி மட்டுமாவது சற்று சிந்திக்க வேண்டும்.

உலகிலுள்ள எந்த உயிரினத்தையும் சற்றைக்கெல்லாம் கொன்றுவிடும் மைனஸ் எழுபது டிகிரி சென்டிகிரேடு எனும் தாழ்ந்த வெப்பநிலையில் மூன்று வருடம் உயிரற்ற பிண்டமாக தங்கியிருந்து அதன் பிறகு தோற்றமெடுக்கத் தொடங்கிய அக் குழந்தைக்கு உயிர் கிடைத்ததா இல்லையா என்பதையும் உயிர் கிடைத்தது என்றால் அந்த உயிர் எப்படி வந்தது என்பதையும் பற்றி மட்டுமாவது காய்தல் உவத்தல் இன்றி சிந்திப்பது மிகவும் நன்று. சிந்திப்பார்களா!

“நீங்கள் எப்படி இறைவனை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.”
-குர்ஆன் 2:28

அதே போல் விதைகளை நாம் ஆராய்ந்து பார்த்தாலும் அங்கும் நமக்கு ஆச்சரியமே மிஞ்சுகிறது. எத்தனையோ மாதங்கள் விதைகளை பத்திரப் படுத்தி வெளியில் வைக்கிறோம். காய்ந்த அந்த விதை கிட்டத்தட்ட இறந்த நிலைக்கே சென்று விடுகிறது. என்ன ஆச்சரியம் அந்த விதையை பல மாதங்கள் கழித்து மண்ணில் போட்டு சிறிது தண்ணீரையும் விட்டால் அதற்கு உயிர் வந்து பெரும் மரமாகி கிளையாகி காயாகி கனியாகிறதே? இது எவ்வாறு?

10:31. “உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.
-குர்ஆன் 10:31


http://www.ethirkkural.com/2010/08/synthetic-cell.html

இடையில் நம்ம விஞ்ஞானிகள் செயற்கையாக ஒரு உயிரை உண்டாக்கி கடவுளின் தேவை இல்லாமல் ஆக்கி விட்டோம் என்று தமாஷ் பண்ணினார்கள். அது எவ்வளவு பெரிய போலியான வாதம் என்பதை சகோதரர் ஆஷிக் அவரது பதிவில் அழகாக விளக்கியிருக்கிறார்.

-------------------------------------------------------------

இந்துமதத்தின் ரிக்வேதம் ஆத்மா பிரிந்து சென்று தோன்றிய இடமான பரமாத்மாவுடன் இரண்டரக்கலந்துவிடுகிறது என்று கூறுகிறது. அதே சமயம் மறு பிறவியை சில இந்து நண்பர்கள் நம்புகின்றனர். அது அறிவியல்பூர்வமாக சாத்தியமில்லை என்கின்றனர் அறிவியலார். ஆனால் மறுபிறவி என்ற நம்பிக்கையை வைத்து நமது தொலைக்காடசிகள் தற்காலங்களில் நிறைய காசு பார்க்கும் கொடுமையும் நடந்து வருகிறது.


மறுபிறவி பற்றி சுஜாதா (கற்றதும் பெற்றதும்)

“எனக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை. ஆனால், எதற்கும் ஒரு செட் பனியன், அண்டர்வேர் எடுத்துச் செல்லப்போகிறேன்”

என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது — உங்களுக்கு மறுபிறவியில் நம்பிக்கை உண்டா ? இதன் கிளையாக ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா ?அது உடலில் எங்கு இருக்கிறது ? சாவை வெல்ல முடியுமா ? நாம் சாசுவதமாக வாழ முடியுமா என்பவை அந்தக் கேள்வியின் பல வடிவங்கள். நாற்பது வயசுக்குப்புறம் பலர் மனத்தை இது குடைகிறது. இதற்கெல்லாம் பதில் தரும் விதத்தில், Immortality பற்றி ஒரு விஸ்தாரமான கட்டுரை சமயம் கிடைக்குபோது நிச்சயம் எழுதுகிறேன். அதைப்பற்றி எனக்கு தெளிவான கருத்துக்கள் உள்ளன. இப்போதைக்கு Edward Young என்பவரின் ‘Night Thoughts on Life , Death and Immortality ‘ என்னும் கட்டுரையிலிருந்து ஒரு மேற்கோள் கொடுக்கிறேன் –

“நீங்கள் சாசுவதமாக வாழ முடியும் என்பதை ஏன் சந்தேகிக்கிறீர்கள்? நீங்கள் உயிர் வாழ்வதே ஒரு அதிசயம் அல்லவா, வியப்பல்லவா ? உயிரெனும் அற்புதத்தைக் கொடுத்தவனால் அதன் முடிவை ரத்து செய்ய முடியாதா ? இதில் என்ன அதிசயம் !”

கேள்வி: மனித வாழ்க்கையில் இன்னமும் புரியாத புதிராகத் தோன்றுவது எது?

சுஜாதாவின் பதில்: மரணத்துக்குப்பின் என்ன என்பதை அறிந்து கொள்ள மரணம் சம்பவிக்க வேண்டியிருக்கிறதே அதுதான்.

கேள்வி: எல்லாவற்றிற்கும் ஒரு Saturation point இருப்பது போல் விஞ்ஞான வளர்ச்சிக்கும் உண்டா?

சுஜாதாவின் பதில்:உண்டு. உயிரின் ரகசியமும் மரணத்துக்குப் பின் என்ன என்பதும் தெரியும் போது விஞ்ஞானம் முற்று பெறும்.

சுஜாதா விஞ்ஞானம் முற்று பெறும் என்று சொல்லி சென்று விட்டார்.ஆனால் முற்று பெறாது. உயிரின் உண்மையை அறிய அன்றும் நமது பேரன்களின் காலத்திலும் ஆராய்ச்சிகள் நடைபெறும். கடைசி வரையில் உயிரின் உண்மையை அறியாமலேயே பூமியில் வாழும் மனித குலமும் அழியத் தொடங்கும்.

இந்த தளத்தில் சென்று மேலும் சில விபரங்களை பெற்றுக் கொள்ளுங்கள்.
http://www.quran-m.com/firas/en1/index.php?option=com_content&view=article&id=437:quran-punches-hole-in-atheism-the-dreams&catid=35:universe&Itemid=91

உயிர் என்றால் என்ன? அது கருப்பா சிவப்பா? மூளையின் செயல்பாட்டில் உந்தப்படுவதுதான் உயிரா? அல்லது காதலன் காதலியிடம் 'என் உயிரையே உனக்காக தருகிறேன்' என்று பொய்யுரைக்கும் போது காதலியும் நம்பி விடுகிறாளே அதுதான் உயிரா? ஆத்மா ஒரு உடலை விட்டு பிரிகிறதே அதை உயிர் என்று சொல்லலாமா? உயிர்களின் அடிப்படை அமினோ அமிலமாகும். இது புரதங்களுடன் ஒரு குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் இணையும்போது இயக்கமுள்ள உயிருள்ளதாக மாறுகிறது. இதனை ஒருசெல் உயிரி என்கிறோம். இந்த ஒரு செல் உயிரி புறச்சூழ்நிலையிலிருந்து உணவைப்பெற்று வளர்கின்றன. வளர்ச்சிபெற்ற இந்த ஒரு செல் உயிரி தன்னைத்தானே இரண்டாக பிரித்துக்கொண்டு இனப்பெருக்கம் செய்து பல்கிப் பெருகின்றன. ஒரு செல் உயிரி காலப்போக்கில் புறத்தாக்குதல்களால் பல செல் உயிரிகளாக ஊர்வன, பறப்பன, நடப்பன என்று பரிணாமம் அடைந்தன என்று அறிஞர்கள் கூறுகின்றனரே அதுதான் உயிரா? இதயத்தில் லப்டப் லப்டப் லப்டப் என்று சதா வந்து கொண்டிருக்கும் அந்த சப்தம்தான் உயிரா? என்று மனிதன் மூளையை கசக்கி ஒரு முடிவை இனி வரும்காலத்திலும் எடுக்க முடியாது. ஏனெனில் அதை புரிந்து கொள்ளும் அறிவு மனிதனுக்கு கொடுக்கப்பட வில்லை.

'முஹம்மதே! உயிரைப் பற்றி அவர்கள் உன்னிடம் கேட்கின்றனர். 'உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்' என்று கூறுவீராக.'
-குர்ஆன் 17:85


தகவல் உதவிக்கு நன்றி:

விக்கி பீடியா, ஆன்லைன் பிஜே, விகடன்

29 comments:

VANJOOR said...

.
.
.

சொடுக்கி >>>>>
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அடித்தாலும் அழக்கூடாத சமுதாயமாக,

சமூக, பொருளாதார, கல்வி நிலையில் தாழ்த்தப்ப‌ட்ட மக்களை விட மோசமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

கண்ணீரில் முஸ்லீம் சமூகம். பிப்ரவரி 14 போராட்டம். ஏன்?
<<<<<< கேளுங்க‌ள்.
.
.
.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
வழக்கம்போலவே சிந்தனைய தூண்டும் கேள்விகளுடன் விளக்கமான பதிவு.

ஆனால், ஒரு விஷயத்தில் குழப்பம்.

///டாக்டர் ஹமீத்கான் கூறும் இந்த விளக்கத்திலிருந்து உயிரினங்களைத் தோற்றுவிக்கும் அவைகளின் கருவுற்ற முட்டை உயிரற்ற பிண்டமே என்பதை தெளிவாக விளங்குகிறோம்.///

---எனக்கு இது சுத்தமாக புரியவில்லை சகோ.சுவனப்பிரியன்.

அதெப்படி, உயிருள்ள இரண்டு சேர்ந்த பின்னர் செத்த பிண்டம் ஆக முடியும்..?

ஆனால், அறிவியல் சொல்கிறது...
கருவுற்ற முட்டை உயிருள்ளது என்று..! அதோடு கருவுற்ற நாளிலிருந்து உயிர் உண்டாகிறது என்று.... இந்த சுட்டியில் ஆதாரத்துடன்.
http://academic.wsc.edu/mathsci/hammer_m/life.htm


ஆனால்,
இந்த மனித முட்டை கருவருவதற்கு முன்னர்...

ஓவத்திலிருந்து வெளியே வந்த கருவுறாத முட்டை ஒரு நாள் வரை அங்கே 'உயிர் வாழ்கிறது' என்று படித்து இருக்கிறேன்.

இந்த ஒரு நாள் வாழ்வியல் நேரத்துக்குள்,

யுடரசில், பெல்லோபியன் ட்யூபில், ஓவரி வாசல் வரைகூட கிட்டத்தட்ட அரை அடி அல்லது முக்கால் அடி தூரம் 'நீந்தி நீந்தி' வந்த ஸ்பேர்ம்... அங்கே உயிருள்ள முட்டை இருந்தால்...
அதனை 'துளைத்து' கருவுற்ற முட்டையாய் ஆக்கும் இந்த ஸ்பேர்ம் 'உயிர் வாழ்வது' பெண்ணுக்குள் அதிகபட்சம் ஐந்து நாள் என்றும் படித்து இருக்கிறேன்.
http://www.babymed.com/info/sperm-life-how-long-do-sperm-live

எனில்,
அறிவியல் படி உயிர் ஆரம்பம் எது..?
எங்கிருந்து..?

NKS.ஹாஜா மைதீன் said...

சலாம் சகோ...


சிந்தனையை தூண்டும் அருமயான பதிவு....நன்றி

suvanappiriyan said...

சலாம்! சகோ ஆஷிக்!

//அதெப்படி, உயிருள்ள இரண்டு சேர்ந்த பின்னர் செத்த பிண்டம் ஆக முடியும்..?

ஆனால், அறிவியல் சொல்கிறது...
கருவுற்ற முட்டை உயிருள்ளது என்று..! அதோடு கருவுற்ற நாளிலிருந்து உயிர் உண்டாகிறது என்று.... இந்த சுட்டியில் ஆதாரத்துடன்.//

ஸபேர்ம் உயிருள்ள முட்டை இருந்தால் அதனை துளைதது கருவுற்ற முட்டையாக மாற்றுகிறது. அதன் பிறகு இந்த கருவற்ற முட்டை வளர்ச்சி அடையும் போது சில காலம் வெறும் பிண்டமாகவே உள்ளது. அதன் பிறகுதான் அதற்குள் உயிர் வருவதாக ஹமீத்கான் கூறுகிறார். நீங்கள் சொல்லும் உயிர் கருவுறுவதற்கு முன் உள்ள நிலை. கருவற்ற பின் அது வெறும் பிண்டமாகவே இருப்பதாகத்தான் இவரது ஆராய்ச்சி சொல்கிறது. அதையும் பரிசோதித்து முடிவையும் அறிவித்துள்ளார். இந்த உயிர் என்ற சமாசாரத்தை இதுவரை அறிவியலும் அருதியிட்டு உறுதியாக கூறாத பட்சத்தில் அறிவியல் துணை கொண்டு நம்மால் எப்படி ஒரு முடிவுக்கு வர முடியும்? ஒருக்கால் நீங்கள் சொல்வது உண்மையாகவும் ஹமீத்கானின் ஆராய்ச்சி தவறாகவும் இருக்கலாம். ஒருக்கால் நான் புரிந்து கொண்டதும் தவறாக இருக்கலாம். ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இது பற்றி மேலும் விபரங்கள் கிடைத்தால் பகிரவும்.

இந்த இடத்தில் எனக்கும் குழப்பமே ஏற்படுகிறது. நாம் விதைகளை பார்க்கிறோம் அல்லவா? அந்த விதைகள் பல ஆண்டுகள் கழித்தும் பூமியில் போட்டவுடன் உயிர் வந்து முளைக்க ஆரம்பித்து விடுகிறதே! இதற்கு முன் அந்த விதை இறந்திருந்ததாக சொல்ல முடியுமா? அப்படி இல்லை என்றால் அந்த விதையின் முந்தய நிலை என்ன?

suvanappiriyan said...

சலாம்! சகோ ஹாஜா மைதீன்!

//சிந்தனையை தூண்டும் அருமயான பதிவு....நன்றி//

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

வதோதரா, பிப் 13- ஹிட்லர் கூடத்தான் நலத்திட்டங்களைச் செய்தார். அதற்காக அவரை சிறந்தவர் என்று ஏற்க முடியுமா? அது போலத்தான் குஜராத் முதல் அமைச்சர் நரேந் திரமோடி என்றார் . ஹாலிவுட் பிரபல நடி கையும், படத் தயாரிப் பாளருமான நந்திதாதாஸ்.

இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநில மாக கொண்டாடப் படும் குஜராத்தை ஆட்சி செய்யும் மோடிக்கும், ஜெர்மன் அதிபர் ஹிட் லருக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்று நடிகை நந்திதா தாஸ் கூறியுள்ளார்.

பாலிவுட்டின் துணிச்சலான நடிகை என்று பெயரெடுத்தவர் நந்திதா தாஸ், இவர் படத்தயாரிப்பாளரும் ஆவார். தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட் டால் உள்ளிட்ட சினி மாக்களில் நடித்துள் ளார். இவர் 2002 -இல் குஜராத்தில் நடந்த முஸ் லீம்களுக்கு எதிரான அரசு பயங்கரவாதத்தை அடிப்படையாக வைத்து பிராக் எனும் படம் எடுத்துள்ளார். வதோதராவில் நடை பெற்ற ஒரு கருந் தரங் குக்கு வந்த நந்திதா தாஸிடம் 2002ன் குஜ ராத்திற்கும் 2012இன் குஜராத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

"ஹிட்லரின் ஆட்சி காலத்தில் தான் ஜெர் மனியின் மிகச் சிறந்த சாலைகள் அமைக்கப் பட்டன. அது போல் ஜெர்மனியின் மிகச் சிறந்த மருத்துவமனை களும் அப்போது தான் கட்டப்பட்டன. ஹிட் லர் ஒரு இசைப் பிரிய ராகவும், சைவ உணவு உண்பவராகவும் மது குடிக்காமலும் இருந் தார். அக்காரணங்களுக் காக ஜெர்மனியார்கள் யாரும் கூட ஹிட்லரை உயர்வாக நினைப்ப தில்லை. மாறாக அவர் செய்த அநீதிகளாலேயே அவர் நினைக்கப்படு கிறார் என்று பத்திரிகை யாளர்களிடம் நந்திதா தாஸ் கூறினார்.

மேலும் பத்து வரு டங்களுக்கு முன்னும் பிற மாநிலங்களை விட குஜராத் நன்றாகவே இருந்தது என்றும் வெறும் அகமதாபாத் தையும் வதோதராவை யும் வைத்து ஒட்டு மொத்த குஜராத்தின் வளர்ச்சியையும் எடை போடக் கூடாது என் றும் பின் தங்கிய சவு ராஷ்டிரா பகுதிகளை யும் உள்ளடக்கி எடை போட வேண்டும் என் றும் கூறினார்.

கலவரத்தை மறக்க முடியுமா?

2002ன் கலவரத்தை மறந்து விட வேண்டும் என்று தம்மிடம் சிலர் அறிவுரை கூறியதாக சொன்ன நந்திதா தாஸ் இன்னும் சிலர் முஹம் மது கஜினியை குறித்து பேசுகின்றனர். இன்னும் சிலர் ஒரு சமூகத்தை அவுரங்கசீப்பின் ரத்த மாக நினைத்து வெறுப்பை உமிழ்கின்ற னர். அப்படியிருக்கும் போது தங்கள் உடை மையையும் உறவு களையும் இழந்து நிற் கும் ஒரு சமூகத்தை, இச்சம்பவங்களை பத்து வருடங்களுக்குள் மறந்து மன்னிக்க சொல் வது சரியானது அல்ல என்றும் நந்திதா தாஸ் கூறினார்.

-Thanks viduthalai
13-02-2012

suvanappiriyan said...

திரு டோண்டு ராகவன்!

//நன்றி. ஹாஜியார் நலமா?//

தாத்தா நலமாக இருக்கிறார். கொஞ்சம் கண் பார்வைதான் மங்கலாகி வருகிறது. வயதாகி விட்டதல்லவா!

//அதாவது,
எனக்கும்...
சுவனப்பிரியனுக்கும்...
இன்னும் ஒரு கோடி தமிழர்களுக்கும்...
இன்னும் இருபது கோடி இந்தியர்களுக்கும்...
தங்கள் சாதி தெரியாமல் போனது மாதிரி..!//

இந்த பதிவின் சாரத்துக்கு இந்த பின்னூட்டம் ஒரு சரியான தீர்வை சொல்கிறது. ஒரு தலைமுறைக்கு அவர்கள் கொஞ்சம் சிரமத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும். இரண்டு தலைமுறை சென்று விட்டால் பழைய முஸ்லிம்களின் நிலையை அவர்களும் அடைந்து விடுகின்றார்கள்.

//பெட்ரோடாலர் (அரபு நாடுகளின் பணம்) இம்மதமாற்றத்தின் பின்புலமாக இருந்ததாகப் பேசப்பட்டது. மத்திய உள்துறையின் அமைச்சர் ‘மக்வானா’ இக்கிராமத்திற்கு வந்து ஆராய்ந்து இக்கருத்தை மறுத்ததுடன், தமிழகக் காவல்துறையின் அத்துமீறலே இதற்குத் தூண்டுகோலாக அமைந்தது என்பதைக் கண்டறிந்தார்.

பாராளுமன்றத்திலும் தாம் கண்டறிந்த உண்மையை முன்மொழிந்தார். இதன்பின்னர் சாதிய உணர்வுடன் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் சிலர் இடமாறுதல் செய்யப்பட்டனர்,//

அவர்களின் மதமாற்றத்தக்கு உண்மையான காரணத்தையும் அந்த பதிவு தொட்டு செல்கிறது. மேலும் ஒரு கதையை அதன் ஆசிரியர் தனது கற்பனை திறமையால் எப்படி வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். அந்த கதையில் வரும் கதாபாத்திங்கள் அனைத்தும் இன்றும் நடந்து வருவதற்கு ஆதாரங்களும் இல்லை.

புதிய தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வந்த முஸ்லிம்கள் இன்று கொஞ்சம் சிரமப்பட்டாலும் அவர்களின் வாரிசுகள் நெஞ்சை நிமிர்த்தி வாழ முடியும். பலர் வாழ்ந்து வருகிறார்கள்.

suvanappiriyan said...

• மயில் வாகனன் on February 12, 2012 at 4:03 pm

அன்புள்ள சுவனப்ரியன்…

‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்…’ என்பதும் ‘என்னுடையதைத் தவிர மற்றெல்லாம் பொய்’ என்பதும் ஒன்றா?

‘அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர்; லா இலாஹா இல் அல்லாஹ்’ என்றால், ‘இறைவனே ஆண்டவன்/ஆள்பவன்; வேறு எவரும் அல்லர்’ என்றுதான் பொருள் என்று நான் கருதுகிறேன்.
‘இறைவனே சக்ரவர்த்தி; அந்த இறைவன் ஒருவனே (அந்தச் சக்ரவர்த்தி ஒருவனே)’.
இப்படிச் சொல்வதில் திருமூலரின் திருவாக்குக்கும் திருமறை என நீங்கள் போற்றும் குர்-ஆனுக்கும் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.

இவை இரண்டுமே ‘இறைவன் ஒருவனே’ என்னும் கருத்திலிருந்து பிறழவில்லை.
பின் எங்கு சிக்கல் எழுகிறது?
‘அல்லாஹ்’ என்பதை, ‘இறைவன்’ என்றோ அல்லது வேறு சொல்லாலோ அல்லது வேறு மொழிச் சொல்லாலோ குறிப்பதைப் ‘பள்ளிவாசல்கள்’ ஏற்காது என்பதில்தான் இந்தச் சிக்கல் எழுகிறது.

‘இறைவனை இன்ன பெயரிட்டு அழைத்தால் அது தவறு’ என்று இந்தியச் சமயம் கூறவில்லை.
‘இன்னின்ன குணம் குறிகளைச் சொன்னால், அது இறைவனுக்கு விரோதம்’ என்றும் இந்தியக் கலாச்சாரங்கள் கூறவில்லை.
இறைவனின் அளப்பரும் ஆற்றல்களைக் குறைத்து மதிப்பிட்டு, ‘அவர் கல்லில் இல்லை, பொன்னில் இல்லை, மண்ணில் இல்லை, மரத்தில் இல்லை, திருநாமங்களில் இல்லை…இல்லை,இல்லை,இல்லை…’ என்று அவரின் வசிப்பிடத்தை மிக மிகக் குறுக்கி, நம்மைப்போல் அவரையும் வரையறைக்கு உட்பட்டவராகக் காட்டும் அறிவுக்குப் புறம்பான கோட்பாடும்..! இந்தியச் சமயங்களில் இல்லை.
இறைவன் மிகப் பெரியவன்; வரம்பில்லாத ஆற்றல்களின் இருப்பிடம். வரம்பில்லாத ஆற்றல் உடையவன் ஒரு அணுவுக்குள் இல்லை என்று சொன்னால், அவன் ஆற்றல் வரம்புக்கு உட்பட்டதாகுமல்லவா?
இறைவன் ஒருவன் என்பதும் அவனுக்குத் திருநாமங்களும் திவுருவங்களும் அவனது ஆற்றலும் அளவிலடங்காதவை என்பதும் ஒன்றுக்கொன்று முரணானவை என்று கருதுவது சரியான அணுகுமுறை அல்ல.

• மயில் வாகனன் on February 12, 2012 at 4:27 pm

திரு சுவனப்ரியன்…

தங்களது மற்றொரு மறுமொழியில் தாங்கள் குறிப்பிட்டிருப்பது போல், ‘தமிழ் நீச மொழி; சமஸ்க்ரிதமே தேவ மொழி’ என்று சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை.
அப்படிச் சொல்பவர் எவராக இருந்தாலும் நாங்கள் ஏற்க மாட்டோம். அதே நேரம், இப்படி ஒரு கருத்தைச் சொன்னதற்காகவே ஒருவரை நாங்கள் ஒதுக்கவும் மாட்டோம்.

ஏனெனில் ‘இவ்வுலகில் கலப்பில்லாத நன்மை இல்லவே இல்லை (இறைவனைத் தவிர)’, என்று ஹிந்து சமயம் அடித்துச் சொல்கிறது. அதை நாங்கள் ஏற்கிறோம். ஏனெனில் மறுக்க முடியாத் உண்மை அது.
ஒரே ஒருவர் தான் இறைவனின் தூதர் என்பதும், அவருடைய சொற்களைத் தவிர மற்றவை ஏற்கத்தக்கவை அல்ல என்பதும், குறையுடைய கருத்தைச் சொல்பவர் நிராகரிக்கத் தக்கவர் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதவை.
இப்படி நிராகரிக்க ஆரம்பித்தால், ஒருவரிடமிருந்து வெளிப்படும் பல நல்ல விஷயங்களை நாம் இழந்துவிடுவோம்.

suvanappiriyan said...

அன்புள்ள மயில்வாகனன்!

//‘அல்லாஹ்’ என்பதை, ‘இறைவன்’ என்றோ அல்லது வேறு சொல்லாலோ அல்லது வேறு மொழிச் சொல்லாலோ குறிப்பதைப் ‘பள்ளிவாசல்கள்’ ஏற்காது என்பதில்தான் இந்தச் சிக்கல் எழுகிறது. //

யார் சொன்ன்து? இறைவன் என்றோ கடவுள் என்றோ பாதுகாப்பவன் என்றோ அவனது பண்புகளில் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். குர்ஆன் என்ன சொல்கிறது என்று பாருங்கள்.

'அல்லாஹ் என்று அழையுங்கள்: ரஹ்மான் என்று அழையுங்கள்: நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.'
-குர்ஆன் 17:110

இங்கு இறைவனை எப்படி வேண்டுமானாலும் அவனது பண்புகளை குறித்துக் கூட அழைக்கலாம் என்று குர்ஆன் கட்டளையிடுகிறது. இறைவனுக்கு காத்தல், படைத்தல், அழித்தல் என்ற மூன்று தன்மைகளையும் நாம் மூன்று தெய்வங்களாக ஆக்கி விட்டோம். இது போல் இறைவனின் தன்மைகளை பல இடங்களில் குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.

//‘இன்னின்ன குணம் குறிகளைச் சொன்னால், அது இறைவனுக்கு விரோதம்’ என்றும் இந்தியக் கலாச்சாரங்கள் கூறவில்லை. //

குணம் குறிகளைச் சொன்னதோடு நாம் நிற்கவில்லையே! படைப்புத் தொழிலுக்கு பிரம்மனையும், மற்றும் விஷ்ணு என்று பாகுபடுத்தி அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட உருவத்தையும் கொடுத்தது யார்? அந்த உருவங்களை ரிக் யஜீர் சாம அதர்வண வேதங்களில் காணக்கிடைக்கிறதா?

மயில்வாகனனை யாரென்றே இதுவரை பார்த்திராமல் எனது கற்பனையில் உங்களை வரைந்தால் அது உங்களைப் போல் இல்லாதிருந்தால் நீங்கள் என் மீது கோபப்படுவீர்கள் அல்லவா? ஒரு சாதாரண மனிதனே தனது உருவம் சிதைக்கப்படுவதை பொறுக்காத போது அகில உலகையும் கட்டி ஆளும் சர்வ சக்தனை பல விலங்குகள் ரூபத்தில் நாம் வரைந்தால் பற்களை கொடூரமாக வெளியே தள்ளி வழிபாடு செய்தால் அவனுக்கு கோபம் வராதா?

//இறைவன் ஒருவன் என்பதும் அவனுக்குத் திருநாமங்களும் திவுருவங்களும் அவனது ஆற்றலும் அளவிலடங்காதவை என்பதும் ஒன்றுக்கொன்று முரணானவை என்று கருதுவது சரியான அணுகுமுறை அல்ல.//

இதற்கு ஆதாரத்தைத்தான் நான் இந்து மத வேதங்களிலிருந்து கேட்கிறேன்.

//ஒரே ஒருவர் தான் இறைவனின் தூதர் என்பதும், அவருடைய சொற்களைத் தவிர மற்றவை ஏற்கத்தக்கவை அல்ல என்பதும், குறையுடைய கருத்தைச் சொல்பவர் நிராகரிக்கத் தக்கவர் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதவை. //

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்துக்கு விளக்கிக் கூறுவதற்க்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்'
-குர்ஆன் 14:4

இந்த வசனத்தின் மூலம் நம் தமிழ் மொழிக்கும் ஒரு தூதர் வந்திருப்பதாக குர்ஆன் கூறுகிறது. அவர் திருவள்ளுவராகக் கூட இருக்கலாம், கிருஷ்ணனாகக் கூட இருக்கலாம் திருமூலராகக் கூட இருக்கலாம். ஆனால் அவர்களின் வரலாறு நம்மிடம் பாதுகாக்கப்படவில்லை.

இறைவனே யாவற்றையும் அறிந்தவன்.

suvanappiriyan said...

திரு பைந்தமிழன்!

//திரு.சுவனபிரியன்,
பைபிள் படைப்பு பற்றியும் இஸ்ரேல் ஆப்ர ஹாம் பற்றி சொன்னதையே அப்படியே குரான் சொகிறது. பைபிள் உள்ளவை வெறும் ஊகக் கதைகள்- புனையப்பட்டவையே என பைபிளியலாளர்கள் ஏற்கின்றனர்.//

பைபிளுக்கும் குர்ஆனுக்கும் பெயர்களிலும் இடங்களிலும் பல ஒற்றுமைகள் உள்ளதை நான் ஒத்துக் கொள்ளுகிறேன். ஆனால் அதை ஒட்டி வரக் கூடிய சம்பவங்கள் அனைத்தும் இரு வெதங்களுக்கும் நிறைய மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. ஏசுவின் இறப்பிலேயே இரு வேதங்களுக்கும் நிறைய முரண்பாடு உள்ளது. இரு வேதங்களையும் நன்கு படித்தவர் இந்த வித்தியாசத்தை இலகுவில் உணர முடியும்.

//பைபிளில் இல்லாத ஒரு நபி(பிற மத) பெயர் கூட குரானில் உள்ளதாக தெரியவில்லை.//

திருத்தப்படாத பைபிளும் இறை வேதம்தானே! அவரது சீடர்களால் அந்த வேதம் திருத்தப்பட்டதால்தான் தற்போது அதன் பொலிவிழந்து காணப்படுகிறது.

ராவணன் said...

வெறும் கட்டுக்கதையை எத்தனை முறை கூறினாலும் அது கட்டுக்கதையே.

அயோத்தி ராமனானாலும், மெக்கா முகமதுவானாலும் கட்டுக்கதைகளே.

மூடர்கள் பின்பாட்டு பாடலாம்.

சிராஜ் said...

/* //பைபிளில் இல்லாத ஒரு நபி(பிற மத) பெயர் கூட குரானில் உள்ளதாக தெரியவில்லை.// */

சகோ பைந்தமிழன்,

வேறு பாடு வேண்டும் என்பதற்காக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இரண்டு பெயரை சேர்த்து கூறி இருந்தாலும் நாங்கள் யாரும் மறுக்கப்போவது கிடையாது(நவூது பில்லாஹ் ). ஆனாலும் சேர்க்க வில்லை, ஏன்? இங்கு தான் நீங்கள் யோசிக்க வேண்டும் சகோ. அன்று நபி ஸல் அவர்களுடன் இருந்த அவரின் தோழர்களும் சரி, இன்று இருக்கும் முஸ்லிம்களாகிய நாங்களும் சரி, அவர் எது சொல்லி இருந்தாலும் எற்றுக்கொண்டிருப்போம் என்பதை நீங்களே ஏற்றுக்கொள்வீர்கள்(தானே????). அவ்வாறு இருக்கையில் அவர் மாற்றிக் கூறவில்லை.

ஏனெனில், அவர் முந்திய நபி மார்களை உண்மை படுத்தவே வந்தார்கள். அவர் புதிதாக எதையும் கூறிவிட வில்லை(சில விதிவிலக்குகளைத் தவிர). முஹம்மது அவர்கள் கூறிய அனைத்தும் ஏற்கனவே வந்த நபிமார்கள் கூறியது தான். என்ன, அந்த நபிமார்களின் சமுதாய மக்கள் அவற்றில் பெரும் மாறுதல்களை செய்து விட்டார்கள். எல்லா இறைத்தூதர்களும் அந்த ஒரே இறைவனையே வழிபடச் சொன்னார்கள் சகோ . அதன் பின் வந்த மக்கள் தான் அந்த நபிமார்களையே இறைவனாக ஆக்கிக்கொண்டார்கள். இது நபிமார்களின் தவறு அல்ல. அந்த சமுதாய மக்களின் தவறு.

சிராஜ் said...

/* //பைபிளில் இல்லாத ஒரு நபி(பிற மத) பெயர் கூட குரானில் உள்ளதாக தெரியவில்லை.// */

சகோ பைந்தமிழன்,

பெயர்கள் தான் ஒன்றாக வருமே ஒழிய. வரலாற்றுச் சம்பவங்களில் பெருத்த மாறுதல்கள் உள்ளன. நீங்கள் இரண்டையும் படித்தால், அவற்றை கண்டுபிடிப்பது ஒன்றும் பரம பத விளையாட்டாக இருக்காது. உங்களுக்கு உண்மை விளங்கி விடும். அடுத்தவர்களை நம்ப வேண்டாம், நீங்களே படித்து விடுங்கள் சகோ. எத்தனையோ புத்தகங்கள் படிக்கிறோம். கூட ஒரு புத்தகம் அவ்வளவு தானே????

suvanappiriyan said...

ஊழலுக்கு எதிரான சொற்பொழிவாற்ற அன்னா ஹசாரேவின் பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடாகி இருந்தது. அதில் பல அதிரடி அறிக்கைகளை, குஜராத்தில் உண்மை நிலைகளை நேரில் கண்டு மனம் வெதும்பி மக்களுக்குச் சமர்ப்பிப்பதாக அறிவித்தார்.
• மகாத்மா காந்தி எதை ஒழிக்கப் பாடுபட்டோரா அந்த மது விற்பனை காட்டாற்று வெள்ளம்போல் குஜராத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுவா காந்தி பிறந்த மண்?
• ஓரு நாளைக்கு குஜராத்தில் நாலரைக் கோடி ரூபாய்க்குப் பால் விற்பனை. ஆனால் 6 கோடி ரூபாய்க்கு மது விற்பனை! குஜராத்தில் பால் விற்பனையைவிட மது விற்பனைதான் அதிகமாக உள்ளது.
• அகமதாபாத் நகரில் மட்டுமே ஒவ்வொரு நாளும் 3 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு மதுவகை கொண்டுவரப்படுகிறது.
• குஜராத் மாநிலம் என்றாலே பாலுக்கும் பால் பொருளுக்கும் பிரபலம். ஆனால், பூரண மதுவிலக்கு (!) அமலில் (?) உள்ள மோடி ஆட்சியிலோ அது அயல்நாட்டு மதுவுக்கும் கள்ளச் சாராயத்திற்கும் பிரபலம் ஆகிவிட்டது!
• லோக்பால் மசோதா தயாராக்குவதற்காக குஜராத்திற்கு வந்து பொதுமக்களிடம் கையெழுத்துகள் சேகரித்தபோதுதான் நரேந்திர மோடியைக் குறித்தும் குஜராத் மாநிலத்தைக் குறித்தும் அறிய முடிந்தது.
• இவரைப் பற்றியா நான் சென்ற மாதம் பாராட்டினேன்?
• முதலில் இந்த முதல்வர் மோடி தன் மாநிலத்தில் லோகாயுக்தாவை அமல்படுத்த வேண்டும்.
• பின்னர் இவர் நேர்மையானவராய் கிராம சபைக்கு அதிகாரம் தரவேண்டும்.
• நாட்டில் குஜராத்தில்தான் ஊழல் அதிகம் என்று நான் இங்கே வந்தபிறகுதான் - நேரில் பார்த்தபிறகுதான் தெரிகிறது.

மகாத்மா மண்ணில் ஊழல்...!
• என்னுடைய ஊழலுக்கு எதிரான இந்தப் போராட்டம் வெற்றி கண்டவுடன் எனது போராட்டம் குஜராத்தை நோக்கியேதான் அமைந்து இருக்கும் என்று பொரிந்து தள்ளிவிட்டாரே, ஹசாரே!
-Viduthalai 13-02-2012

Anonymous said...

தெரியமாதான் கேக்குறேன் உங்க கோஷ்டிக்கு யாராச்சும் பணம் கொடுத்து எழுத சொல்றாங்களா. சிறு கூட்டம் தின்மும் வேற வேலையே இல்லாம அல்லா ரசல் இஸ்லாம்ன்னு அரச்ச மாவையே அரச்சுகிட்டு இருக்கீங்களே

Unknown said...

உயிர் என்பது நிச்சயம் ஒரு அதிசயம் தான்,அதை பற்றி யோசிக்கும் பொழுதே தலை சுற்றுகிறது.

நன்றாக விளக்கி உள்ளீகள்.இருப்பினும் சில minar மிஸ்டேக்கள் உள்ளன.

உதாரணமாக inorganic என்பது மரம், செடி கொடி அல்ல, கார்பன் மூலக்கொருகளை கொண்டவை organic கார்பன் இல்லாத மூலக்கொருகள் inorganic.

சரி பார்க்கவும்.

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோ@ சுவனப்பிரியன்

மாஷா அல்லாஹ் கருத்தாழமிக்க பதிவு
பகிர்ந்த கருத்திற்கு
ஜஸாகல்லாஹ் கைரன்.

G u l a m said...

அன்பு சகோ @ அனானி

//அல்லா ரசல் இஸ்லாம்ன்னு அரச்ச மாவையே அரச்சுகிட்டு இருக்கீங்களே//
அம்புலன்ஸ் வேனும், பயர் எஞ்சின் வண்டியும் எப்போ தேவையோ அப்போது நிச்சயமாக பயன்படுத்த பட வேண்டும். அப்போது தான் ஏனையொருக்கு அதனால் பயன். அதைப்போல தான் இஸ்லாமும். எப்போது தேவையோ அப்போது பயன்படுத்திக்கொள்ள சொல்கிறது. ஆனால் பாருங்கள் டைம் டேபிள் ஏதும் கொடுக்காமல் வாழ் நாள் முழுவதும் அதை பின்பற்ற சொல்கிறது. அதனால் எப்போதும் இஸ்லாத்தை பற்றி பேசுகிறோம். அத்தோடு இஸ்லாத்தின் மையக்கருத்தான நன்மையை ஏவீ-தீமையே தடுக்க சொல்கிறது. அதை வாய்ப்புகிடைக்கும் போதெல்லாம் செய்கிறோம். அதற்கு இணையத்தையும் பயன்படுத்திக்கொள்கிறோம்.
இதில் என்ன உங்களுக்கு பிரச்சனை சகோ...?
இஸ்லாத்தை பத்தி எழுத வேண்டாம் சரி.,
பின் எதை குறித்து எழுதுவது சொல்வீர்களா...?

//உங்க கோஷ்டிக்கு யாராச்சும் பணம் கொடுத்து எழுத சொல்றாங்களா//
எனக்கு தெரிந்து யாரும் கொடுப்பதில்லை. உங்களுக்கு தெரிந்தால் எனது பெயரை சிபாரிசு செய்யவும். ஏன்னா... நான் லாஸ் ஆப் பே -தான் எழுதிகிட்டு இருக்கேன்

//தெரியமாதான் கேக்குறேன்//
இனி எதையும் தெரிஞ்சி கேளுங்கள்

சிராஜ் said...

/* தெரியமாதான் கேக்குறேன் உங்க கோஷ்டிக்கு யாராச்சும் பணம் கொடுத்து எழுத சொல்றாங்களா. சிறு கூட்டம் தின்மும் வேற வேலையே இல்லாம அல்லா ரசல் இஸ்லாம்ன்னு அரச்ச மாவையே அரச்சுகிட்டு இருக்கீங்களே */

ஹ்ம்ம்ம்.. எங்க அனானி... நாங்களும் மாஞ்சு மாஞ்சு எழுதிகிட்டு இருக்கோம், ஒரு பய பணம் தர மாட்டேங்கிறானுவ. பணம் கொடுக்கிற யாராவது தெரிஞ்சா நம்ம க்ரூப்ப பத்தி எடுத்து சொல்லி ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க சகோ. ரொம்ப கஷ்டத்தில இருக்கம்.

சிராஜ் said...

அப்பா technical டீம்,

இந்த அனானி யாருன்னு கண்டிபிச்சு கொஞ்சம் எனக்கு மெயில் அனுப்புங்கப்பா. பணம் கெடைக்கும் போல இருக்கு.

Anonymous said...

///தின்மும் வேற வேலையே இல்லாம அல்லா ரசல் இஸ்லாம்ன்னு அரச்ச மாவையே அரச்சுகிட்டு இருக்கீங்களே///anonymous


எந்தக் கொள்கையையோ அல்லது எந்த மதத்தையோ பின்பற்றுபவன்கூட, அரைத்த மாவைத்தான் எடுத்து அரைச்சிக்கொண்டு, தன் வாழ்வை ஏதோ ஒரு வழியில் நெறிப்படுத்திக் கொள்கிறான்.

நீங்களும் அதில் விதி விலக்கில்லை என நினைக்கிறேன்.

- Ismath

Anonymous said...

//எந்தக் கொள்கையையோ அல்லது எந்த மதத்தையோ பின்பற்றுபவன்கூட, அரைத்த மாவைத்தான் எடுத்து அரைச்சிக்கொண்டு, தன் வாழ்வை ஏதோ ஒரு வழியில் நெறிப்படுத்திக் கொள்கிறான்.

//
நன்றி சகோ
நான் ரின் போட்டு சுத்தம் செய்கிறேன் நான் மட்டும் தான் சுத்தம் என்று கூவும் ஆட்கள் என்றேமே அபாயமானவர்கள்தான்.

நிறை குடம் தளும்பாது குறை குடம்??

suvanappiriyan said...

சகோ சிராஜ்!

//ஹ்ம்ம்ம்.. எங்க அனானி... நாங்களும் மாஞ்சு மாஞ்சு எழுதிகிட்டு இருக்கோம், ஒரு பய பணம் தர மாட்டேங்கிறானுவ. பணம் கொடுக்கிற யாராவது தெரிஞ்சா நம்ம க்ரூப்ப பத்தி எடுத்து சொல்லி ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க சகோ. ரொம்ப கஷ்டத்தில இருக்கம்.//

அப்படியே என் பெயரையும் அந்த அனானிக்கிட்டே ஞாபகப்படுத்துங்க. :-)

suvanappiriyan said...

சகோ கார்பன் கூட்டாளி!

//உதாரணமாக inorganic என்பது மரம், செடி கொடி அல்ல, கார்பன் மூலக்கொருகளை கொண்டவை organic கார்பன் இல்லாத மூலக்கொருகள் inorganic.//

உயிர் இல்லாமல் சும்மா கிடக்கும் பொருளைக் கிடைபொருள் Inorganism என்கிறோம். இதுதான் மெய். இதனைத் தமிழர் சிவம் என்றனர்.-wiki pedia

Inorganic - இயற்கையான உள் வளர்ச்சி அற்ற பொருள்கள் என்று கூகுள் மொழி பெயர்ப்பு கூறுகிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ குலாம்!

//அம்புலன்ஸ் வேனும், பயர் எஞ்சின் வண்டியும் எப்போ தேவையோ அப்போது நிச்சயமாக பயன்படுத்த பட வேண்டும். அப்போது தான் ஏனையொருக்கு அதனால் பயன். அதைப்போல தான் இஸ்லாமும். எப்போது தேவையோ அப்போது பயன்படுத்திக்கொள்ள சொல்கிறது. ஆனால் பாருங்கள் டைம் டேபிள் ஏதும் கொடுக்காமல் வாழ் நாள் முழுவதும் அதை பின்பற்ற சொல்கிறது. அதனால் எப்போதும் இஸ்லாத்தை பற்றி பேசுகிறோம்//

அனானிக்கு உதாரணத்தோடு விளக்கியமைக்கு நன்றி!

சிராஜ் said...

/* பணம் கொடுக்கிற யாராவது தெரிஞ்சா நம்ம க்ரூப்ப பத்தி எடுத்து சொல்லி ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க சகோ. ரொம்ப கஷ்டத்தில இருக்கம் */

குரூப் என்று சொல்லி இருக்கிறேன் சகோ. அதில் நீங்களும் வந்து விடுவீர்கள். ஹி..ஹி..ஹி..

வி காட் ஹிம்.

suvanappiriyan said...

அனானி!

//நன்றி சகோ
நான் ரின் போட்டு சுத்தம் செய்கிறேன் நான் மட்டும் தான் சுத்தம் என்று கூவும் ஆட்கள் என்றேமே அபாயமானவர்கள்தான்.

நிறை குடம் தளும்பாது குறை குடம்??//

ரின் போட்டு சுததம் செய்யப்பட்டது என்பதற்கு பல ஆதாரங்களை வரிசையாக வைத்து வரகிறோம். அதற்கு இந்த பதிவும் ஒரு சாட்சி!

மற்றவை ஏன் ரின் போடப்படவில்லை. பல போலிகள் ரின் இததான் என்று மக்களை ஏமாற்றி ரின்னின் பவரையே குறைத்து விட்டனர். ஆய்வுகளில் அது எந்த வகையான போலி என்று ஆதாரங்களையும் கொடுத்துள்ளோமே!

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கை போய் இத்தனை தெய்வங்கள் எவ்வாறு வந்தது என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். பல உண்மைகள் உங்களுக்கு விளங்கும். நிறை குடம் எது? குறை குடம் எது என்பது தானாக தெளிவாகும்.

suvanappiriyan said...

மயில் வாகனன் on February 14, 2012 at 8:48 pm

அன்புள்ள சுவனப்ரியன் அவர்களே..!

தங்களுக்கு மறுமொழி மீண்டும் எழுதும் வாய்ப்பு அமைந்துள்ளதில் மகிழ்ச்சி.

“இறைவன், கடவுள், பாதுகாப்பவன்… என்றெல்லாம் ‘அல்லாஹ்’வை அழைக்கலாம்” என்கிறீர்கள். நானும் மறுக்கவில்லை. ஆனால், பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அழைக்கும்போது ‘அல்லாஹ்’வை’, ‘இறைவா..’ என்று எங்கும் அழைப்பதாகத் தெரியவில்லையே.

‘குணம்’ உண்டு என்றாலே ‘குணி’யும் உண்டு (குணி=குணத்தினை உடையவன்/ர்/து). இறைவனுக்கு எந்த ஒரு குறிப்பிட்ட உருவத்தையும் வேதங்கள் கொடுத்ததாக நாங்கள் சொல்லவில்லை. எல்லா உருவங்களுமே அவனுடையவை என்கிறோம். குணம், குறிகளும் திரு நாமங்களும் அதற்கேற்ப உருவங்களும் எடுப்பது இறைவனால் ஆகாத கடினமான காரியமா?

ரிக், யஜுஸ், சாம வேதங்களில் இறைவனைப் பற்றிய வடிவ வர்ணனைகள் நிறையவே இருக்கின்றன. முழுமையாக வேதங்களை அறிந்தவர்கள் யார் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. குறைந்த பக்ஷம் ருத்ரம் (யஜுர்) மற்றும் புருஷ சூக்தம் (ரிக்) ஆகியவற்றில் இறைவனின் குண/உருவ வர்ணனைகள் வருகின்றன. அந்த வர்ணனைகளையெல்லாம் வைத்துச் சமைக்கப்பட்டதுதானா இறை வடிவங்கள் என்று எனக்கு உறுதியாகத் தெரியாது. சில காயத்ரிகளும் வேதத்திலிருந்து வந்தவைதாம். அவையும் பிரத்யேகமாக மூர்த்திகளைப் பற்றிப் பேசுகின்றன.

இன்னொன்று. வெளியில் விகாரமாக நீண்டு உள்ள பற்கள், கோரமான தோற்றமுள்ள முகம் ஆகியவையெல்லாம் மட்டும் இறைவனையன்றி வேறானவை என்று கருதுகிறீர்களா? எவை எவை நம் பார்வைக்கும் மனதுக்கும் அழகாகத் தோன்றுகின்ற்னவோ அவை மட்டுமே இறை அம்சம் என்று கொள்வதா? மற்றவைஎல்லாம் இறைவனின் இருப்புக்கும் படைப்புக்கும் அப்பாற்பட்டவையா? இறைவனுக்கு அப்பாற்பட்ட ஒன்று (இல்லை) இருக்கும் என்றால், பின்பு இறைவனில் என்ன முழுமை இருக்கிறது?

அவரவர் மொழியிலேயே தூதரை இறைவன் அனுப்பியிருக்கிறார் என்றால், இந்தியாவில் நபிகள் பெருமானுக்கும் ஜீசஸ் க்ரைஸ்ட்டுக்கும் வேலை இருக்காதே..!

பின், தமிழ் அல்லது இந்திய மொழிகளுள் ஏதோ ஒன்றைத் தன் மொழியாகக் கொண்டு தோன்றியவர் தானே உங்களுக்கும் தூதராக் இருக்க முடியும்? நிச்சயமாக அவர் நபிகள் பெருமான் அல்லவே?

சிந்திக்கத் துணியும் ஒரு இஸ்லாமிய சகோதரரை இத்தளத்தின் மூலமாகச் சந்திக்கும் வாய்ப்பளித்துள்ள இறைவனுக்கு நன்றி..!

Anonymous said...

///நான் ரின் போட்டு சுத்தம் செய்கிறேன் நான் மட்டும் தான் சுத்தம் என்று கூவும் ஆட்கள் என்றேமே அபாயமானவர்கள்தான்.

நிறை குடம் தளும்பாது குறை குடம்??///Anonymous


தாங்கள் சொல்லும் அபாயமானவர்கள், என்றுமே தங்களை சுத்தம் என்று கூவுவதில்லை.

தாங்கள் எப்படி தங்களின் கொள்கைகளை வெளிப்படுத்துகிறீர்களோ, அதேபோல் தங்களின் பார்வைக்கு தெரியும் அபாயமானவர்களும் வெளிப்படுத்துகிறார்கள்.

தங்களின் கொள்கையையும் அபாயமானவர்களின் கொள்கையையும் சிறிது உரசிப் பார்த்து, தளும்பாத நிறைகுடமாகலாமே!

- Ismath