Followers

Saturday, February 18, 2012

'இந்தியர்களிடம் சொல்லி பலனில்லை' - சவுதி முனிசிபாலிடி!

சவுதி தலைநகர் ரியாத்தில் பத்ஹா என்ற சிட்டியை வெளிநாட்டவர் யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இது பற்றி முன்பே ஒரு பதிவில் குறிப்பிட்டு உள்ளேன். விடுமுறை நாட்களில் இங்கு வந்து நேரத்தை கழிப்பது பலருக்கு தொடர்கதை. அவ்வாறு வாராவாரம் வரும் போது ஒரு முக்கியமான சந்திப்பில் அனைவரும் கலந்துரையாடுவது வழக்கம். இதில் தமிழர்கள் சீகோ பில்டிங் என்ற காம்ப்ளக்ஸீக்கு அருகில் ஒன்று கூடுவர். மதியம் 3 மணிக்கு கூடும் கூட்டம் கலைவதற்கு இரவு 11 மணி கூட ஆகும்.
தங்களது குடும்ப கவலைகள் கம்பெனி பிரச்னை என்று பல விஷயங்களும் இங்கு அலசப்படும். இவ்வாறு பேச்சு தொடர்ந்தால் அது 2 மணி 3 மணி நேரம் வரை கூட தொடரும். இடையில் சிறு நீர் கழிக்க என்ன செய்வது?

பக்கத்தில் மசூதி இருக்கிறது. மாற்று மதத்தவரும் பயன்படுத்த வேண்டி கழிவறைக்கான வழியை மசூதியின் மறுபக்கம் வைத்துள்ளார்கள். கிட்டத்தட்ட 50 க்கு மேற்பட்ட கழிவறைகள் இலவசமாக பயன்படுத்த அரசால் கட்டப்பட்டிருக்கிறது. அனால் நம் உடன் பிறப்புகள் ரத்தத்தின் ரத்தங்கள் அதனை உபயோகப்படுத்த மாட்டார்கள். வேறு என்ன செய்வார்கள்.?

சீகோ பில்டிங்குக்கு எதிர்ப்புறம் மேம்பாலத்துக்குக் கீழ் மிகப் பெரிய காலியான இடம் உண்டு. நம் மக்கள் அந்த இடத்தையே பப்ளிக் டாய்லெட்டாக உபயோகப்படுத்த ஆரம்பித்தனர். நான் சில நேரம் அந்த வழியாக போனால் நம் ஊர் பேருந்து நிலையங்கள்தான் ஞாபகத்துக்கு வரும். அந்த அளவு சிறுநீர் நாற்றம் அந்த ஏரியாவையே அசிங்கப்படுத்தும்.

சவுதி காவல் துறை இவ்வாறு சிறுநீர் கழிப்பவர்களை தடுத்து சில நேரங்களில் விரட்டவும் செய்வார்கள். ஆனால் நம் மக்கள் காவல்துறைக்கு போக்கு காட்டி விட்டு அவர்கள் கொஞ்சம நகர்ந்தவுடன் திரும்பவும் தங்கள் வேலையை ஆரம்பித்து விடுவர்.ரியாத் முனிசிபாலிடியில் இது பற்றி ஆலோசித்தனர். இதற்கு என்ன தீர்வு? போலீசார் எவ்வளவுதான் கடுமையாக நடந்து கொண்டாலும் சிறுநீர் கழிப்பதை தடுக்க முடியவில்லை. 'இந்தியர்களிடம் சொல்லி ஒரு பயனுமில்லை. இதற்கு நாம் தான் ஒரு முடிவு கட்ட வேண்டும்' என்று கூடி பேசினர். கடைசியில் ஒரு முடிவெடுத்தனர். பாலத்துக்கு கீழ் வெற்று இடங்களை இரும்பு வேலி அமைத்து சிறுநீர் கழிப்போரை தடுக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அந்த பாலத்தின் இரு மருங்கிலும் படத்தில் உள்ளது போல் இரும்பினால் ஆன வேலியை அமைத்து விட்டனர். தற்போது நமது உடன் பிறப்புகள் மசூதிக்கு அருகில் உள்ள பொது கழிவறையை நோக்கி மிகவும் மன சோர்வுடன் சென்று தங்கள் இயற்கை தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர். :-)

தற்போது அந்த இடம் மிகவும் சுகாதாரமாகவும் சுத்தமாகவும் உள்ளது. இப்பொழுது கழிவறையை நாடும் இந்த மக்கள் முன்பு ஏன் செல்லவில்லை? என்பது எனக்கு புரியவில்லை. எப்படியோ அந்த இடம் சுகாதாரமானது கண்டு மகிழ்ச்சி!

239. 'ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :4

இங்கு இரண்டு கட்டளை சொல்லப்படுகிறது. தேங்கிய தண்ணீரில் சிறுநீர் கழிக்கக் கூடாது என்றும் அது போன்ற அசுத்தமான குட்டைகளில் குளிக்கக் கூடாது என்றும் விளங்குகிறோம். அடுத்து வேறொரு அறிவிப்பில் மேட்டுப் பகுதியில் சென்று சிறுநீர் கழிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

6128. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒரு கிராமவாசி மஸ்ஜிது(ந் நபவீ பள்ளி வாசலு)க்குள் சிறுநீர் கழித்துவிட்டார். அவரைத் தாக்குவதற்காக அவரை நோக்கி மக்கள் குதித்தெழுந்தனர். அப்போது மக்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவரைவிட்டுவிடுங்கள்; அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுங்கள். (எப்போதும்) நளினமாக நடந்து கொள்ளவே நீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக நடந்து கொள்ள நீங்கள் அனுப்பப்படவில்லை' என்று கூறினார்கள்.
Volume :6 Book :78

6322. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் கழிவறைக்குள் நுழையும்போது 'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் குப்ஸி வல் கபாயிஸி' என்று கூறுவார்கள்.
(பொருள்: இறைவா! ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்கிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)

_____________________________________________________________


நம் நாட்டு மக்களை நமது மத்திய அமைச்சர் எந்த அளவு புரிந்து வைத்துள்ளார் என்பதற்கு இந்த செய்தி ஒரு உதாரணம்.புதுடில்லி: ""பெண்களை பொறுத்தவரை, தங்களுக்கு மொபைல் போன் வேண்டும் என கேட்கின்றனரே தவிர, கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென கேட்பதில்லை. நம் நாட்டில் பொது சுகாதாரம் என்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது,'' என, மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசியிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்த நிகழ்ச்சி, டில்லியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது: பொது சுகாதாரம் என்பது, நம் நாட்டில் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. தற்போது, நமது வாழ்வியல் அணுகுமுறை மாற்றம் குறித்து அதிகம் பேசுகிறோம். அதே நேரத்தில், மற்றொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்களை பொறுத்தவரை, தங்களுக்கு மொபைல் போன் வேண்டும் என, கேட்கின்றனரே தவிர, கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, யாரும் கேட்பதில்லை. இது போன்ற அணுகுமுறை தான், தற்போது நம்மிடையே உள்ளது.
-தினமலர்
17-02-2012'ஹலோ...சார்....இவ்வளவு சொல்லியும் திரும்பவும் பப்ளிக் டாய்லடடா! திருந்துங்க உடன் பிறப்புக்களே!....' :-)

டிஸ்கி: 'பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தவிர்ப்போம்'

32 comments:

NKS.ஹாஜா மைதீன் said...

சலாம் சகோ...

ஆனால் சிலர் என்ன சொன்னாலும் திருந்துவது இல்லை...பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை பலர் தங்களது பிறப்புரிமையாக எண்ணுவது வேதனை அளிக்கும் செயல்...

Abdul Basith said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

நல்ல விழிப்புணர்வு பதிவு.

சாதிக் said...

அஸ்ஸலாமு அலைக்கும் ..
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை..

சுவனப்பிரியன் said...

சலாம் சகோ ஹாஜாமைதீன்!

//ஆனால் சிலர் என்ன சொன்னாலும் திருந்துவது இல்லை...பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை பலர் தங்களது பிறப்புரிமையாக எண்ணுவது வேதனை அளிக்கும் செயல்...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Seeni said...

sir !
saudi mattuma namma aalunga
vellai maalikaiyila vittaalum
naaradichiduvaanga!

சுவனப்பிரியன் said...

சலாம் சகோ அப்துல் பாசித்!

//நல்ல விழிப்புணர்வு பதிவு.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ஹுஸைனம்மா said...

வசதி இருந்தும் பொது இடத்தை அழுக்காக்குவது வருத்தமானது.

நெல்லையிலும் இதுபோல சில மாவட்ட கலெக்டர்கள் தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி ’அந்த’ இடங்களில் பூங்காக்கள் போன்றவற்றை ஏற்படுத்துகிறார்கள். சிலவை நீடிக்கின்றன. சில, பழைய குருடி... கதையாகின்றன.

சுவனப்பிரியன் said...

சலாம் சகோ சாதிக்!

//தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை..//

காவல்துறையினர் எவ்வளவோ முயற்சி பண்ணியும் நம்மவர்கள் பொது இடங்களை அசிங்கப்படுத்துவதை தடுக்க முடியவில்லை. முடிவில் காலியான இடங்களை அடைத்தவுடன்தான் பிரச்னை ஒரு முடிவுக்கு வந்தது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சுவனப்பிரியன் said...

சகோ ஹூசைனம்மா!

//நெல்லையிலும் இதுபோல சில மாவட்ட கலெக்டர்கள் தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி ’அந்த’ இடங்களில் பூங்காக்கள் போன்றவற்றை ஏற்படுத்துகிறார்கள். சிலவை நீடிக்கின்றன. சில, பழைய குருடி... கதையாகின்றன.//

ஒரு சினிமாவுக்கு மூன்று மணி நேரத்தை செலவழிக்கும் பலர் இது போன்ற காரியங்களுக்கு சோம்பல் பட்டு மற்றவர்களையும் ஏன் சிரமத்துக்குள்ளாக்குகிறாரகளோ தெரியவில்லை. பிரசாரத்தின் மூலமே இது போன்ற செயல்களை தடுக்க முடியும். நெல்லை கலெக்டரின் முடிவு பாராட்டத்தக்கது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சுவனப்பிரியன் said...

சகோ சீனி!

//saudi mattuma namma aalunga
vellai maalikaiyila vittaalum
naaradichiduvaanga!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

khaleel said...

சலாம். இதே இந்தியர்கள் தான் துபையிலும் இருகிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் இது போல பொது இடத்தில சிறுநீர் கழிப்பதை பார்க்க முடியாது. ஏன் என்றால் அங்கு பொது கழிப்பறைகள் சுத்தமாகவும் சுகாடரமகவும் பேனபடும். ஆனால் சௌதி அரேபியாவில் பள்ளி வாசலில் இருக்கும் ஒழு செய்யும் இடமே மிகவும் அசுத்தமாகவும் சீர்கேடகும் இருக்கும. மசூதி கழிப்பறைகள் பற்றி கேட்கவே வேண்டாம். பொது கழிப்பறைகள் அதை விட மோசம். பொது கழிப்பறைகளை சுத்தமா வைத்து கொள்ள வேண்டிய கடமை அதை உபயோக படுதுபவர்களுகும் உண்டு. முனிச்பலிட்டிகும் வுண்டு. சவுதியில் இரண்டு இடத்திலும் அது இல்லை.
இன்னொரு விஷயம். இதை இந்தியர்கள் மட்டும் தான் அப்படி செய்கிறார்கள் என்று இல்லை. பாகிஸ்தான், பங்களாதேஷ் மக்களும் ஏன் சௌதிகளும் விதிவிலக்கு இல்லை. நகரத்திn முக்கிய பகுதியான ஓலையாவில் குட ஒரு திறந்த வெளியில் சவுதி நாட்டை செர்தன்வர்கள் அநாகரிகமாga சிறுநீர் கழிப்பதை பார்க்க முடியும்.

சிராஜ் said...

/* நகரத்திn முக்கிய பகுதியான ஓலையாவில் குட ஒரு திறந்த வெளியில் சவுதி நாட்டை செர்தன்வர்கள் அநாகரிகமாga சிறுநீர் கழிப்பதை பார்க்க முடியும்.

*/

நம்ம ஆளுக(அதான் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்) சவூதி காரங்களையும் கெடுத்துட்டாங்களா??? கதை கெட்டுச்சு போங்க.

சுவனப்பிரியன் said...

சலாம்! சகோ கலீல்!

//இதே இந்தியர்கள் தான் துபையிலும் இருகிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் இது போல பொது இடத்தில சிறுநீர் கழிப்பதை பார்க்க முடியாது.//

நமது அத்திய அமைச்சருடைய பேட்டியை கீழே பார்த்தீர்கள் தானே!

//இன்னொரு விஷயம். இதை இந்தியர்கள் மட்டும் தான் அப்படி செய்கிறார்கள் என்று இல்லை. பாகிஸ்தான், பங்களாதேஷ் மக்களும் ஏன் சௌதிகளும் விதிவிலக்கு இல்லை.//

பாகிஸ்தான் பங்களா தேசிகளும் இது போன்று அநாகரிகமாக நடக்கிறார்கள் என்பதை ஒத்துக் கொள்ளுகிறேன். ஆனால் நான் குறிப்பிடும் இடம் இந்தியர்கள் குழுமும் இடம். நம்மவர்களில் அதிகம் பேர் இந்த ஒழுங்கு முறையை கடைபிடிப்பதில்லை.

ஐந்து வேளை தொழக் கூடிய ஒரு முஸ்லிமிடம் இப்படி ஒரு பழக்கம் பெரும்பாலும் இருக்காது. ஏனெனில் சிறு நீரின் ஒரு துளி துணியில் பட்டாலும் அவனது தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. எனவே ஒரு தொழுகையாளி தான் சிறுநீர் கழிக்க பாதுகாப்பான இடத்தை தேடுவான். தொழுகாத முஸ்லிம் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. சவுதிகளிலும் ஒரு சிலர் இருந்தாலும் பெரும்பான்மையோர் கழிவறைக்கே செல்வர்.

ஒரு சில பள்ளிகளில் சுகாதார குறைபாடு இருக்கலாம். நான் பார்த்த பெரும்பான்மையான மசூதிகளில் கழிவறை சுத்தமாகவே இருக்கும்.

சிராஜ் said...

சலாம் சகோ சுவனப்பிரியன்,

இந்த பதிவு கோவி கண்ணனுக்கு ரொம்ப பிடிக்கும்.... ஹி ..ஹி...ஹி...

ஏன்னா சுகாதாரம் சம்பந்தமா வருதில்ல அதான்.....

சுவனப்பிரியன் said...

//களிமிகு கணபதி on February 19, 2012 at 11:39 am
முஹம்மத் அவர்கள்தான் இறுதித் தூதர். அவர் மூலம் வெளியாகிய அல் குர்ஆனே இதை சொல்லும்போது வேறு ஆதாரங்கள் தேவை இல்லை. ஏனெனில், அல் குர்ஆனே இறுதி ஆதாரம் என்று முஹமத் அவர்களே சொல்லி விட்டார்.//தொல்காப்பியம் புறத்திணையின் சூத்திரம்…

கொடிநிலை கந்தழி வள்ளியென்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன
முன்றுங் கடவுள் வாழ்த்தொடு
கண்ணியமே வருமே

இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கிணியர், கொடிநிலை வெங்கதிர் சூரியன் எனவும், வள்ளி இடை நின்ற கந்தழி ஒரு பற்றுக் கோடுமின்றி, அருவாகித் தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள் ஆகும்! என விவரித்துள்ளார்.
ஆதித் தமிழர் இறைவனை உருவமற்ற அருவமாகவே வழுபட்டுத் தொழுதனர். இதை கா.சு. பிள்ளை, முழு முதற்கடவுளின் உண்மையும் – தன்மையும் உணர்ந்து, அவரை அருவமாக வழிபடக் கருதிய தமிழர், அவருடைய குணங்களையும் நினைத்து அவரைத் தொழுதனர். அந்நெறியே தமிழர் செந்நெறியாகும் என விவரித்துள்ளார். (தமிழர் சமயம்.)

பவிஸ்ய புராணம்

'இந்த வேற்று நாட்டுத் தூதர் அரபுலகம் அனைத்தையும் தமது ஆளுகையின் கீழ்க் கொண்டு வருவார். ஆரிய தர்மம் அவரது நாட்டில் காணப்படாது.பல தெய்வ வணக்கம் ஒழிக்கப்படும்அவருக்கு பல எதிரிகள் உண்டாவார்கள்.அனைவரையும் வெற்றிக் கொண்டு உண்மையை நிலை நாட்டுவார்.அவர்கள் தாடி வைத்திருப்பார்கள்.மாமிசத்தை சாப்பிடுவார்கள்.பன்றிக் கறியை சாப்பிட மாட்டார்கள். வேதம் அனுமதித்த அனைத்தையும் சாப்பிடுவார்கள். பிரார்த்தனைக்காக அழைப்பும்(பாஙகு) கொடுப்பார்கள். அவர்கள் முசல்மான் என்று அழைக்கப் படுவார்கள்.

பவிஸ்ய புராணா - பிரதி சரக் பர்வ் - காண்டம் 3 - அத்தியாயம் 3 - ஸ்லோகம் பத்திலிருந்து இருபத்தி ஏழுவரை.

-----------------------------------
'அஹமத் இறைவனிடமிருந்து மனிதர்கள் பின் பற்றக் கூடிய சட்டத்தைக் கொண்டு வருவார். நான் அவரிடமிருந்து சூரியன் தரும் ஒளியைப் போன்ற ஞானத்தைப் பெறுவேன்.'

- சாம வேதம் - இந்திரா அதிகாரம் 2 - மந்த்ரா 152 - புத்தகம் 2 - செய்யுள் ஒன்றிலிருந்து எட்டு வரை

-----------------------------------

அல்லோ ஜியேஸ்டம் பரமம் பூர்ணம் பிரஷ்மாண்டம் அல்லாம் அல்லோ அல்லாம் ஆதல்லா பூக மேகம் அல்லா பூகணி வாதகம் அல்லா பஞ்ஞென ஹுதா ஹிறுத்தவா அல்லா சூரிய சந்திர ஸர்வ திவ்வியாம இந்திராய பூர்வம் மாயா பரமந்த ரிஷா அல்லா பித்ததிவ்விய அந்தரிஷம் விசுவரூபம் இல்லாம் கபர இல்லாம் இல்லல்தீ இல்லல்லா ஓம் அல்லா இல்லல்லா அனாகிஸ் வரூபா அத்தர் வணா சியாமா ஹும் ஹிரிம் ஜனான பகன ஸித்தான ஜலசாரன் அதிர்டம் குருகுரு புடஸபரஸட ஸமஹாரனீ ஹூம் ஹிரீம் அல்லா ரசூல மஹமத சுபரஸ் அல்லா அல்லா இல்லல்லலேதி இல்லல்லா

- அல்லோப நிஷத் (அதர்வன வேதம்) 1:10

தமிழில் : அல்லா முழுமையானவர், எல்லா பிரபஞ்சமுமவனுடையது. சிவனின் ஸ்தானத்தை அல்ங்கரிக்கும் மஹாமத் அல்லாவுடைய தூதராய் இருக்கின்றார். அல்லா எல்லாஎல்லா பூமியையும் இயக்குகின்ற இறைவன். பூமியின் பரிபாலனும் அவனே! இறைவன் ஒருவனேயன்றி வேறு இல்லை. அரூபியான இறைவனின் ஓங்கார நாதத்தைப் பாருங்கள். ஓம் ஹரீம் மந்திரங்கள் அடங்கிய அதர்வண வேதத்தை இறக்கிய இறைவனே மக்களையும், பசுக்களையும் ஏனைய எல்லாவற்றையும் படைத்தான். அரூபியான அந்த ஆண்டவனையே துதி செய்யுங்கள்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,

நல்ல விஷயத்தை அருமையா படம் போட்டு சொல்லியுள்ளீர்கள். நன்றி.

சவூதியில் இந்தியர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயத்தில் இதுவும் ஒன்று. நீண்ட நாள் இங்கே வாழ்ந்து வந்தவர் நம் ஊரில் அந்த பழக்கத்தை தவிர்க்கிறார்.

நான் இங்கிருக்கும் இந்த ஏழு வருஷத்தில் ஒரு சவூதி சிறுவன் கூட வெளியில் இதுபோல அசிங்கம் செய்து பார்த்ததே இல்லை..!

ஆனால், இந்த உலகம் சவூதி/இஸ்லாம்/முஸ்லிம் இவற்றில் நல்ல விஷயங்களை மட்டும் மிக கவனமாக அதை எழுதவும் பேசவும் ஏன் கண்டுகொள்ளவே கூட மறுப்பது கவலைக்குரியது.

சுவனப்பிரியன் said...

சலாம்! சகோ ஆஷிக்!

//நல்ல விஷயத்தை அருமையா படம் போட்டு சொல்லியுள்ளீர்கள். நன்றி.//

ஆஹா...நான் படம் போட்டதை யாருமே தொடவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். பாராட்டுக்கு நன்றி சகோ....

//நான் இங்கிருக்கும் இந்த ஏழு வருஷத்தில் ஒரு சவூதி சிறுவன் கூட வெளியில் இதுபோல அசிங்கம் செய்து பார்த்ததே இல்லை..!//

உணமைதான். சகோ கலீல் சொல்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சிறுவர்கள் கூட தெருவில் அசிங்கம் செய்வதை நான் பார்த்ததில்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

ஷர்புதீன் said...

நன்கு விஷய ஞானம் அறிந்த நண்பர் ஒருவர் அவரது சிறிய மகளுடன் பைக்கில் வரும் போது , நானும் அவருடன் பின் தொடர்ந்து அவரது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது சிக்னல் விசயங்களை அவர் மதிக்காமல் வீடு சென்று சேர்ந்தார்.
பல்வேறு பேச்சுக்களை பேசி கொண்டிருந்தோம்,

திடிரென்று அவரிடம் கேட்டேன் " உங்கள் மகள் நாளை சிக்னல்களை மதிப்பாள் என்று நினைக்கிறீர்களா?"

சுவனப்பிரியன் said...

சலாம் சகோ சிராஜ்!

//இந்த பதிவு கோவி கண்ணனுக்கு ரொம்ப பிடிக்கும்.... ஹி ..ஹி...ஹி...

ஏன்னா சுகாதாரம் சம்பந்தமா வருதில்ல அதான்.....//

அவர் ஏற்கெனவே என் மேல் கோபமாக இருக்கிறார். ஸோ...நோ கமெண்ட்ஸ்... :-(

//நம்ம ஆளுக(அதான் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்) சவூதி காரங்களையும் கெடுத்துட்டாங்களா??? கதை கெட்டுச்சு போங்க.//

:-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ சிராஜ்!

சுவனப்பிரியன் said...

சகோ ஷர்புதீன்.!

//நன்கு விஷய ஞானம் அறிந்த நண்பர் ஒருவர் அவரது சிறிய மகளுடன் பைக்கில் வரும் போது , நானும் அவருடன் பின் தொடர்ந்து அவரது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது சிக்னல் விசயங்களை அவர் மதிக்காமல் வீடு சென்று சேர்ந்தார்.
பல்வேறு பேச்சுக்களை பேசி கொண்டிருந்தோம்,

திடிரென்று அவரிடம் கேட்டேன் " உங்கள் மகள் நாளை சிக்னல்களை மதிப்பாள் என்று நினைக்கிறீர்களா?"//

நிறைய படிக்கிறீர்கள். நிறைய சிந்திக்கிறீர்கள் என்பது உங்கள் பின்னூட்டங்களில் இருந்து தெரிகிறது. வாழ்த்துக்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

மாஷா அல்லாஹ்

அவசரமானதும்
அவசியமானதுமான

பதிவு!

!!!

சுவனப்பிரியன் said...

வஅலைக்கும் சலாம்! சகோ குலாம்!

//மாஷா அல்லாஹ்

அவசரமானதும்
அவசியமானதுமான

பதிவு!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

R.Puratchimani said...

சகோ இந்த பவிஸ்ய புராணம உண்மையா?
http://bhavishyapuran.blogspot.in/

(மன்னிக்கவும்)இது நபியை அரக்கனுக்கு ஒப்பானவன் என்கிறதே........மேலும் நீங்கள் அனைவரும் சிவபக்தர்கள் என்றும் கூறுகிறதே. இதை நீங்கள் ஏற்க்கிறீர்களா?

இது பற்றிய முழுமையான சுட்டி தாருங்கள்.மற்ற வேதங்கள் பற்றியும்.

நன்றி

சுவனப்பிரியன் said...

சகோ புரட்சி மணி!

//சகோ இந்த பவிஸ்ய புராணம உண்மையா?
இது பற்றிய முழுமையான சுட்டி தாருங்கள்.மற்ற வேதங்கள் பற்றியும்.//

http://www.nouralislam.org/tamil/islamkalvi/religions/islam_hindu_comparision_03.htm
-----------------------------------
“ஆதமோ நாம புருஷ:
பத்னீ ஹவ்யவ தீஸ்மிர் தா|
விஷ்ணுகர் தமதோஜாதௌ
ம்லேச்சவம் பிரவர்த்தநௌ||
இந்த்ரியாணி தமித்வாயோ
ஆத்மஞானபராயண:|
தஸ்மாத்ஆத்மநாமாஸௌ
பத்னீ ஹவ்யவ திஸ்மிர்தா”||

இஸ்லாமியர் சொல்லும் ஆதாம் ஏவாள் வரலாறைச் சொல்லும் பவிஸ்ய புரான வரிகள்.
http://www.brahmintoday.org/magazine/2010_issues/bt80-1009_truth.php

http://saif_w.tripod.com/interfaith/hinduism/kalki_avatar.htm

அலகாபாத் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக வேலை செய்த பண்டிட் வேத பிரகாஷ் எழுதிய புத்தகத்தின் குறிப்புகள் ஆங்கிலத்தில்; இவர் முஸலிம் அல்ல: இவர் ஒரு வேதம் படித்த பிராமணர்.
-----------------------------------

http://www.youtube.com/watch?v=Iawxl8RVYv0

இந்த யுடியூபில் சென்று அந்த புத்தகத்தின் பக்கங்களை பார்த்துக் கொள்ளுங்கள்.
-----------------------------------
http://www.milligazette.com/Archives/2005/01-15Mar05-Print-Edition/011503200567.htm
இந்த ஆசிரியரின் முழு வரலாறையும் இங்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

-----------------------------------

http://www.scribd.com/doc/60177296/%DA%A9%D8%A7%D9%84%DA%A9%DB%8C-%D8%A7%D9%88%D8%AA%D8%A7%D8%B1-%D8%A7%D9%88%D8%B1-%D9%85%D8%AD%D9%85%D8%AF-%D8%B5%D8%A7%D8%AD%D8%A8-Kalki-Autar-Aur-Muhammad-Sahib
உருது மொழி தெரிந்தவர்கள் இங்கு சென்று அந்த புத்தகத்தை முழுவதும் படிக்கலாம்.

http://www.4shared.com/document/K67zxhD0/kalki-avtar-aur-muhammad-S.htm?aff=7637829
ஹிந்தி மொழி தெரிந்தவர்கள் இங்கு சென்று புத்தகத்தை தரவிறக்கிக் கொள்ளலாம்.

http://www.dl4all.com/n5z/tag/kalki+autar+aur+muhammad+sahib.html
ஆங்கிலத்தில் தரவிறக்கிக் கொள்ள

R.Puratchimani said...

சகோ சுட்டிகளுக்கு மிக்க நன்றி,
கொஞ்சம் படித்தேன் ...
இந்த பவிஷ்ய புராணம் இந்தியாவை பிரிடிஷார் ஆட்சி செய்தது பற்றியும் விக்டோரியா மகாராணி பற்றியும் குறிப்பிடுகிறது. ஆகவே இது பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொகுக்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே பல அறிஞர்களின் கருத்தாக உள்ளது.

அப்படியே இது நபிகள் பற்றி கூறினாலும் இது நபியை திரிபுரசுரனின் (அரக்கன்) மறுபிறவி என்றும் இவர் உருவாக்குவது பேய் மதம் என்றும், இவர்கள் மதங்களை கெடுப்பர் என்றும் குறிக்கிறது.
இது பற்றி நீங்களே சிந்திக்கவும்....நானும் சிந்திக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம் நன்றி

சுவனப்பிரியன் said...

திரு புரட்சி மணி!

//இவர்கள் மதங்களை கெடுப்பர் என்றும் குறிக்கிறது.
இது பற்றி நீங்களே சிந்திக்கவும்....நானும் சிந்திக்கிறேன்.//

மார்க்கங்கள் மதங்களாக உருமாறும் போதுதான் பிரச்னையே! எனவே உலகில் உள்ள மதங்களின் தவறான புரிதலை விளங்க வைக்கவேஇறைவன் முகமது நபி மூலம் இஸ்லாமிய மார்க்கத்தை தந்தான். இதுபோல் பல நபிமார்களை நமது நாடு உட்பட பல நாடுகளுக்கும் முகமது நபிக்கு முன்பே அனுப்பியுமிருக்கிறான். நன்றாக சிந்தியுங்கள். பல உண்மைகள் தெரிய வரும்.

சுவனப்பிரியன் said...

திரு சாரங்க்!

//அல்லா உருவமற்றவர் என்று எங்கே உள்ளது. அவரது உருவத்தை பார்க்க முடியாது என்று தானே நீங்கள் சொல்கிறீர்கள் (ரெம்ப பயன்கரமானவராத்தான் இருக்கணும்). உருவம் இல்லாது ஒரு ஆசாமி ஏழு சுவர்க்கத்தின் மேல் அரசில் எப்படி அமர்ந்திருக்க முடியும்?//

உருவமற்றவர் என்று நானும் சொல்லவில்லையே! இறைவனுக்கு உருவம் இதுதான் என்று நீங்களாக ஒரு உருவத்தை எப்படி கொடுக்கப் போயிற்று? எந்த நூலின் ஆதாரத்தில் சிவன் இந்த உருவம் என்று கண்டு கொண்டீர்கள்? இதை விளக்குவீர்களா?

//பவிஷ்யத் புராணம் வேதமல்ல. நீங்கள் எடுத்து விடுவது பரங்கியன் விட்ட சரடு பவிஷ்யத் புராணம்//

ஆத்தாடி......ஆரியன் என்ற சொல்லைக் கொடுத்தது கால்டுவெல் என்ற பரங்கியன். பவிஷ்ய புராணம் தந்ததும் பரங்கியன் அதாவது வெள்ளைக்காரன். அப்போ இந்து மதத்துக்காக சாரங்கன் எதையும் செய்யவில்லையா? அப்படியே பவிஷ்ய புராணத்தில் இடைச்செருகலை வெள்ளைக்காரன் கொண்டு வந்திருந்தால் ஏசுவையும் கன்னி மேரியையும் அல்லவா கொண்டு வந்திருக்க வேண்டும். இஸ்லாத்தை தூக்கிப் பிடிக்க வெள்ளையனுக்கு என்ன அவசியம் வந்தது?

அடுத்து உங்கள் வாதம் உண்மையாக இருந்தால் வெள்ளையன் வந்து கை வைத்து வேதங்களிலும் புராணங்களிலும் இஷ்டத்துக்கு விளையாட நீங்கள் அனுமதி கொடுத்துள்ளீர்கள் என்றுதானே ஆகிறது. இது போல்தான் வேதங்களிலும் பல தெய்வ வணக்க வசனங்கள் ஊடுருவியிருக்க வேண்டும்.

//அல்லா உபநிஷத்? எழுதினது யாரு வேத வ்யாசரா
நான் கூட ஒரு உபநிஷத் (சுவப்ரியோபநிஷத்) என்று எழுதி சாம வேதஹ்தில் சேற்று விட விடமுடியும். இது என்னமோ வடிவேலை வைத்து பாச மலர் பார்ட் டு எடுக்குற மாதிரி தான். //

இப்படித்தான் வேதங்களும் புராணங்களும் பாதுகாக்ப்பட்டு வந்துள்ளன என்று அழகாக கூறியமைக்கு நன்றி!


இன்னும் இதுபோல் எத்தனை இடங்களில் வேதங்களிலும் புராணங்களிலும் வெள்ளையன் கை வைத்துள்ளான் என்ற லிஸ்டையும் கொஞசம் கொடுங்களேன்.

சாரங்கன் உண்மையை இப்படி எல்லோர் முன்னிலையிலும் போட்டு உடைத்திருக்க வேண்டாம். :-)

R.Puratchimani said...

//வெள்ளைக்காரன் கொண்டு வந்திருந்தால் ஏசுவையும் கன்னி மேரியையும் அல்லவா கொண்டு வந்திருக்க வேண்டும்//

சகோ நீங்கள் அறியாமல் பேசுகிறீர்கள் என நினைக்கின்றேன். ஏசுவை பற்றியும் இது பேசுகிறது. அது மட்டுமல்ல புத்தர்,அசோகா, ஹிட்லர், பிரிட்டிஷ், மக்ஸ் முல்லர் பற்றியும் தெள்ள தெளிவாக கூறுகிறது.
அதலால் தான் இது நடந்து முடிந்ததிற்கு பிறகு பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

மேலும் அரக்கனின் மறுபிறப்பு தான் நபி எனும் பொழுது. மறுபிறப்பும் உண்மை என்றாகிறதே. இசுலாம் மறுபிறப்பை ஏற்றுக்கொள்கிறதா? அல்லது இனிமேல் ஏற்றுக்கொள்ள தயாராகிறதா?

சுவனப்பிரியன் said...

திரு புரட்சி மணி!

//சகோ நீங்கள் அறியாமல் பேசுகிறீர்கள் என நினைக்கின்றேன். ஏசுவை பற்றியும் இது பேசுகிறது. அது மட்டுமல்ல புத்தர்,அசோகா, ஹிட்லர், பிரிட்டிஷ், மக்ஸ் முல்லர் பற்றியும் தெள்ள தெளிவாக கூறுகிறது.
அதலால் தான் இது நடந்து முடிந்ததிற்கு பிறகு பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.//

வேதத்துக்கு விளக்கவுரையாக அமைந்த புராணங்களிலும் இதிகாசங்களிலும் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுத முடியுமா? அப்படி என்றால் அவற்றை புராணங்கள் என்றோ இதிகாசங்கள் என்றோ எப்படி சொல்ல முடியும்?

//மேலும் அரக்கனின் மறுபிறப்பு தான் நபி எனும் பொழுது. மறுபிறப்பும் உண்மை என்றாகிறதே. இசுலாம் மறுபிறப்பை ஏற்றுக்கொள்கிறதா? அல்லது இனிமேல் ஏற்றுக்கொள்ள தயாராகிறதா?//

அரக்கனின் மறுபிறப்பு என்று எந்த இடத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதை வசன எண்ணோடு தாருங்கள். சரிபார்க்கிறேன்.

மேலும் மறு பிறவி என்பது நடைமுறை சாத்தியமில்லாதது என்று விஞ்ஞானமும் கூறி விட்டது. இஸ்லாமும் மறு பிறவியை மறுக்கிறது.

R.Puratchimani said...

// வேதத்துக்கு விளக்கவுரையாக அமைந்த புராணங்களிலும் இதிகாசங்களிலும் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுத முடியுமா? அப்படி என்றால் அவற்றை புராணங்கள் என்றோ இதிகாசங்கள் என்றோ எப்படி சொல்ல முடியும்?//
சகோ ,
புராணங்கள் என்பது நடந்து முடிந்த ஒன்று. அந்த விதத்தில் இது யாவும் உண்மை என்றே தெரிகிறது. இந்த பவிஷய புராணத்தை நடந்து முடிந்த பிறகு எழுதியது என்று பார்க்கும் பொழுது எந்த ஒரு குழப்பமும் இல்லை. ஆனால் இது நடக்கும் முன்பே எழுதப்பட்டது என்பதை நம்பமுடியவில்லை.


//அரக்கனின் மறுபிறப்பு என்று எந்த இடத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதை வசன எண்ணோடு தாருங்கள். சரிபார்க்கிறேன்.//

Lord Shiva said: O king Bhojaraja, you should go to the place called Mahakakshvara, that land is called Vahika and now is being contaminated by the mlecchas. In that terriblecountry there no longer exists dharma. There was a mystic demon named Tripura(Tripurasur), whom I have already burnt to ashes, he has come again by the order of Bali. He has no origin but he achieved a benediction from me. His name is Mahamada(Muhammad) and his deeds are like that of a ghost.

According to Bhavishya Purana Muhammad was the rebirth of Tripurasura the Demon.

Tripurasura was killed by Shiva in his(Tripurasura’s) past life.

http://bhavishyapuran.blogspot.in/

சுவனப்பிரியன் said...

திரு குமரன்!

//சுவனப்பிரியன்,

தொல்காப்பியரின் அகத்திணைப் பாடல்,

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலென
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே

இதற்கான விளக்கமும் கொடுங்கள்..//


' மாயோன் ஆகிய திருமால் பொருந்திய காட்டு உலகமும் சேயோன் ஆகிய முருகன் பொருந்திய மேகங்களை எல்லையாகக் கொண்ட உலகமும் வேந்தன் ஆகிய இந்திரன் பொருந்திய இனிய புனலை உடைய உலகமும் வருணன் பொருந்திய பெருமணலைக் கொண்ட உலகமும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று சொல்லிய முறையால் சொல்லப் படும்.'

இறைவனின் ஆற்றலை விளக்க இந்த பாடல் பயன்படுகிறது. உதாரணமாக ரிக் வேதத்தில் வரும் ஒரு வரியை பார்ப்போம்.

'ஏக இறைவனையே ஞானிகள் பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர்'
-ரிக் வேதம் (1:164:46)

இறைவனை பலர் 'பிரம்மா' அதாவது 'படைப்பாளன்' என்று கூறுகின்றனர். அதேபோல் இறைவனை 'விஷ்னு' அதாவது 'பரிபாலிப்பவன்' என்றும் கூறுகிறோம். இது போல் இறைவனுடைய ஆற்றலை நாம் தவறாக ஒவ்வொரு ஆற்றலுக்கும் ஒரு உருவத்தை கொடுத்து அதை தனி கடவுளாக்கி விட்டோம்.
'முருகன்' என்ற சொல்லுக்கு 'அழகிய தோற்றமுடையவன்' என்ற பொருள் வரும். நம்மை படைத்த இறைவனும் அழகிய தோற்றம் உடையவனே! இந்த பண்புகளைத்தான் இங்கு தொல்காப்பியர் உதாரணமாக விளக்குகிறார்.

ஆனால் வழக்கில் நாம் விஷ்ணுவுக்கு நான்கு கைகளையும் கைகளில் சக்கரமும், பிரம்மனுக்கு நான்கு தலைகளையும், முருகனுக்கு நாமாக ஒரு அழகிய உருவத்தையும் கையில் வேலையும் கொடுத்து விட்டோம். இறைவன் ஒருவன்தான்: அவனுக்குரிய பண்புகள் தான் இவை என்று நாம் புரிந்து கொண்டால் குழப்பம் இருக்காது. இந்து மத வேதங்களும், இஸ்லாமிய கிறித்தவ மத வேதங்களும் இதைத்தான் கூறுகின்றன.

'அவன் வடிவத்தை காண முடியாது. எவர் கண்ணுக்கும் புலப்படாதவன். எவர்கள் மனதாலும் இதயத்தாலும் அவனை அறிந்திருக்கின்றார்களோ அவர்களின் இதயத்தில் நிலையாக இருப்பவன்.'

-ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 4:20

Anonymous said...

check this sir. women are protesting for their rights for 50% equal toilet provision.

http://www.hindustantimes.com/world-news/China/China-s-occupy-toilet-protests-spread/Article1-815807.aspx

khaleel