Followers

Wednesday, February 01, 2012

ஒரு கழிவறை தனது சோகத்தைப் பகிர்கிறது!

'வாங்க! எல்லாரும் சௌக்கியமா? ஏன் இப்படி எல்லோரும் சேர்ந்து என்னை ஒதுக்குறீங்க.....பல நாளும் என்னை வஞசகமில்லாமல் உபயோகபடுத்தி விட்டு வெளியில் பேச மட்டும் கூச்சப்படுகிறீர்களே! இரண்டு நாள் என்னிடம் நீங்கள் வராமல் போனால் உங்களை பார்த்து மற்றவர்கள் முகம் சுழிக்கும் நிலை உண்டாகுமே! இதை ஏன் நீங்கள் உணருவதில்லை.

சில நேரங்களில் என்னை உபயோகப்படுத்தி விட்டு சரியாக தண்ணீர் கூட விடுவதில்லை. ரெண்டாம் நம்பர் போகும் போது தண்ணீர் விட்டு கழுவும் நீங்கள் ஒண்ணாம் நம்பர் போகும் போது மட்டும் தண்ணீர் விட மறுப்பது ஏன்? இரண்டும் உங்கள் உடலில் இருந்து வெளியேறும் அசுத்தம் அல்லவா? நீங்கள் தண்ணீர் விட்டு கழுவாதலால் என்னென்ன நோய்கள் வருகிறது என்பதை சற்று மருத்துவரிடம் கலந்து ஆலோசியுங்கள். தண்ணீர் விட்டு கழுவாதலால் பஸ் ஸ்டாண்டிலோ மற்றும் மக்கள் கூடும் இடங்களிலோ மூக்கைப் பிடித்து கொண்டுதான் என்னிடம் பலரும் வருகின்றனர். இதற்கு காரணம் தண்ணீர் விடாத நீங்கள்தானே!



மும்பை மாடல் கழிப்பறை

மேலும் புதருக்குப் பின்னாலும், மரத்துக்குப் பின்னாலும், ஆற்றோரங்களிலும் ரயில்வே லைனை ஒட்டியும் நீங்கள் காலைக் கடனை கழிப்பது சரியா? ஒரு சில வசதியில்லாதவர்கள் அப்படி போனாலும் போன இடத்தை மண் போட்டு மூடி விடலாமே! இதை ஏன் உங்களில் பலர் செய்வதில்லை. மண் போட்டு மூடுவதால் அசிங்கங்கள் மக்கி மண்ணாகி விடுகிறதே! பூனை கூட தான் கழித்த இடத்தை மண் போட்டு மூடுகிறதே! சிலர் இந்த பூனையின் நல்ல செயலைப் பார்த்து மயங்கி கடவுளாக பூஜிக்கக் கூட தொடங்கி விட்டனரே! விலங்குக்கு உள்ள அறிவு கூட மனிதனுக்கு இல்லாததை எங்கு சொல்லி அழுவது?



இந்த காணொளியைப் பார்த்த பிறகாவது உங்களில் வசதி படைத்தவர்கள் ஊருக்கு 5 நவீன கழிப்பிடங்களை கட்டி சுகாதாரத்தைப் பேணுவீர்களா? உதய சூரியனோ அல்லது இரட்டை இலையோ எந்த மாற்றத்தையும் கொண்டு வரப் போவதில்லை. உங்களைப் பாதுகாத்து கொள்ள உங்களிலிருந்தே சிலர் முன் வந்து என்னைப் போன்ற கழிவறைகளை தெருவுக்கு தெரு கட்ட முயற்ச்சிப்பீர்களா? உங்கள் மனித இனத்தைச் சார்ந்த ஒரு பெண் இந்த வேலை செய்யும் நிர்பந்தத்தை நீங்கள் உண்டாக்கலாமா? இந்த காணொளிபை காணும் உங்கள் முகம் இந்த போக்கு போகிறதே இதை தினமும் தனது தொழிலாக செய்யும் உங்கள் இனத்து மக்களை என்றாவது நினைத்துப் பார்த்தீர்களா? தமிழ்நாட்டின் முதல்வர் ஒரு பெண். இந் நாட்டை ஆள்வதும் ஒரு பெண். இந்த நிலையில் ஒரு பெண் இது போன்ற ஒரு இழி வாழ்வு வாழ நீங்கள் அனுமதிக்கலாமா?



ஃபரெஞ்ச் மாடல் கழிப்பறை

இன்னும் சிலர் மண்ணில் கூட போகாமல் வாழை இலையில் போவதாக எனது தோழி ஃபிரெஞச் டாய்லட் சொன்னாள். மண்ணில் போனால் மண் இழுத்து விடும். வாழை இலையில் போனால் இந்த மாற்றம் ஏற்படாதே. இது சுகாதார குறைவு அல்லவா? இதை எல்லாம் உங்கள் தோழர்களுக்கு நீங்கள் எடுத்துச் சொல்லக் கூடாதா?

மனிதர்களில் கூட சாதி வித்தியாசம் பார்க்கிறீர்களாமே! உயரந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடெல்லாம் உங்களிடம் உண்டாமே! ஆனால் நாங்கள் மதம் மொழி இனம் எதையும் பார்ப்பதில்லை. எல்லாம் ஒரே ரகம் என்பதால் யார் வேண்டுமானாலும் எங்களை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். எங்களைப்போல் மனிதர்களிடம் வேற்றுமை பார்க்காமல் உங்களால் இருக்க முடியாதா?

தலித் இளைஞரின் வாயில் மனித மலத்தை வைத்து திணித்ததாக தேவர் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் மேலக்கோயில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் சடையாண்டி (24) போலீசில் அளித்துள்ள புகாரில், 'கடந்த 7ம் தேதியன்று மேலக்கோயில்பட்டி கிராமத்தில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது சாதி கிறிஸ்தவர்கள் நான்கைந்து பேர் ஒன்றாக சேர்ந்துகொண்டு என்னை வழிமறித்தனர். இந்த தெருவில் செருப்பு போட்டுக்கொண்டு போகக்கூடாது என சொல்லியும் திமிறாக செருப்புக்காலுடன் நடக்கிறாயா எனக் கேட்டனர்.

நான் அவர்களுக்கு பதில் சொல்லாமல் சென்றதால் ஆத்திரப்பட்டு ஜாதிப்பேர் சொல்லி திட்டி என்னை மடக்கினர். அந்த கும்பலில் இருந்த ஆரோக்கியசாமி, டேவிட், செல்வேந்திரன், கென்னடி, கண்ணதாசன், பீட்டர், அன்பு ஆகியோர் என்னை அடித்தனர்.இரண்டுபேர் என்னை வலுக்கட்டாயமாக பிடித்துக்கொண்டு, வாயைத் திறந்து மனித மலத்தை திணித்தனர். என் முகத்திலும் அசிங்கப்படுத்தினர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

http://arunthathiyan.blogspot.com/2011/07/blog-post_921.html


இதுவும் சமீபத்தில் இணையத்தில் வந்த செய்தி. மனிதர்களுக்குள் ஏன் இப்படி சாதி வித்தியாசம் பார்க்கிறீர்கள்?




கொஞ்சம் மெலிதான தேகம் உடையவர்கள் என்மேல் உட்காரும் போது இருக்கையின் அகலத்தை பார்த்து கவனமாக உட்காரவும். கவனக்குறைவாக இருந்து விட்டால் இந்த கார்ட்டூனில் உள்ளவரின் நிலையை நீங்களும் அடையலாம். உங்களின் பாதுகாப்புக்காகவே இந்த யோசனை.


செம்மொழி மாநாட்டுக்காக 33 கோடி ரூபாயில் வாங்கப்பட்ட 60 நடமாடும் நவீனக் கழிவறைகள் குப்பைமேட்டில் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள் கோவை மக்கள்.

இதில் 8 கழிவறைகள் மிகவும் நவீனமயமான கழிவறைகள். ஒன்றின் மதிப்பு 9 லட்சத்து 19 ஆயிரத்து 800 ரூபாய். இவை அனைத்தும் மாநாட்டு வளாகத்தில் மிக முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டன.



‘இதன் உண்மையான விலை இவ்வளவு அதிகமாக இருக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. இதில் பல கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக சந்தேகப்படுகிறோம்.’ என்று பேரூர் எம்.எல்.ஏ வேலுமணி குறைபட்டுக் கொண்டாராம். மேலும் இந்த கழிவறைகள் அனைத்தும் எவரது உபயோகத்துக்கும் பயன் படாமல் கோவை மாநகராட்சி குப்பை தொட்டிகளில் தூங்குகிறதாம்.
-பததிரிக்கை செய்தி


இந்த செய்தியை படித்ததிலிருந்து கழிவறையான எனக்கு மனது மிகவும் கனத்தது. ஏழைகள் அதிகம் நிறைந்த தமிழகத்துக்கு எங்களுக்கு இததனை கோடிகளா? இந்த பணததில் தமிழகம் முழுவதும் எங்களை கட்டியிருந்தால் பொது மக்கள் பயன்பெற்றிருப்பார்களே! இதை எல்லாம் நீங்கள் ஆட்சியாளர்களுக்கு எடுத்து சொல்லக் கூடாதா?



புகை வண்டியில் பயணம் செய்யும் எவரும் என்னை மறந்திருக்க மாட்டார். தாலாட்டிக் கொண்டே உங்களை சுகமாக உங்கள் காரியத்தை முடித்துக் கொள்ள நான் உதவ வில்லையா? இன்னுமா என்னை இகழ்ச்சியாகப் பார்க்கிறீர்கள். இது நீதியா? இது நியாயமா?

மேலும் இணையத்தில் கூட யாராவது அடிக்கடி எங்கள் வார்த்தையை உபயோகித்தால் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்வதாக எனது மற்றொரு தோழியான மண் கழிப்பறை சொன்னாள். இது உண்மையா? உங்களுக்கு தினமும் சேவை செய்து வரும் எங்களை இளக்காரமாக பார்ப்பதை இனியேனும் நிறுத்துவீர்களா? இவ்வளவு செய்திகளையும் படித்தவுடன் இனி கழிவறைகளை மட்டமாக நினைக்க மாட்டோம் என்றும் திறந்த வெளிகளில் மலம் கழிக்க மாட்டோம் என்றும் உறுதி கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

கழிவறைகளான நாங்கள் நினைத்தது சரிதான் என்பதை உங்களின் பின்னூட்டத்தின் மூலமும் ஓட்டளிப்பதின் மூலமும் நாங்கள் தெரிந்து கொள்கிறோம். இவ்வளவு தூரம் பொறுமையாக எனது கதையை கேட்ட உங்களுக்கு கோட்டான கோட்டி நன்றிகளை எங்கள் சங்கத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு

தங்களை என்றும் எதிர் நோக்கியிருக்கும்

மண்கழிப்பறை, ஃபிரெஞச் மாடல் கழிப்பறை, பம்பாய் மாடல் கழிப்பறை.

39 comments:

கோவி.கண்ணன் said...

உங்க கழிவறை பதிவுக்கு வாக்குப் போட்டாச்சு, மகுடம் ஏறுதா பார்ப்போம், ஏறினால் கழிவறையை உயர்த்தியவர் என்ற பெருமை உங்களுக்கு கிடைக்கலாம்.

*****

//சில நேரங்களில் என்னை உபயோகப்படுத்தி விட்டு சரியாக தண்ணீர் கூட விடுவதில்லை//

சிங்கபூரில் தானியங்கி தான், தானாகவே அலசிக் கொள்ளும். தானாகவே குண்டி அளம்பிவடும் மாடல் கூட இப்ப பிரபலம் ஆகிக் கொண்டு வருகிறது

suvanappiriyan said...

திரு கோவி கண்ணன்!

//உங்க கழிவறை பதிவுக்கு வாக்குப் போட்டாச்சு, மகுடம் ஏறுதா பார்ப்போம், ஏறினால் கழிவறையை உயர்த்தியவர் என்ற பெருமை உங்களுக்கு கிடைக்கலாம்.//

பதிவிட்ட ஐந்து நிமிடத்துக்குள் பின்னூட்டமும் இட்டு ஓட்டும் அளித்ததற்கு நன்றி! மகுடத்தில் ஏறினாலும் அந்த பெருமை என்னைச் சாராது. முதல் ஓட்டு போட்டு துவக்கி வைத்த உங்களையே சாரும். மேலும் இணையத்தில் எனக்கு முன்பே பலரும் பிரபல்யப் படுத்தியுள்ளதால் அந்த பெருமை என்னைச் சாராது. உரியவர்களுக்கே கொடுத்து விடுகிறேன். :-)

//சிங்கபூரில் தானியங்கி தான், தானாகவே அலசிக் கொள்ளும். தானாகவே குண்டி அளம்பிவடும் மாடல் கூட இப்ப பிரபலம் ஆகிக் கொண்டு வருகிறது//

தமிழகத்திலும் இந்த முறையை அறிமுகப்படுத்தினால் சுகாதாரம் மேம்படும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

UNMAIKAL said...
This comment has been removed by a blog administrator.
suvanappiriyan said...
This comment has been removed by the author.
கோவி.கண்ணன் said...
This comment has been removed by a blog administrator.
சிராஜ் said...

/* ஒரு கழிவறை தனது சோகத்தைப் பகிர்கிறது! */

தலைப்பை பார்த்தவுடன் நானும் யாரையோ தாக்கி இருக்கிறீர்கள் என்று தான் நினைத்து படித்தேன். ஆனால் படித்தவுடன் தான் தெரிந்தது இது உண்மையிலே கக்கூஸ பத்தி பேசும் பதிவுன்னு.

இருந்தாலும் இந்த பதிவை நீங்கள் வெளியிட்டிருக்க வேண்டுமா? வேண்டாமா என்று எனக்கு கருத்து சொல்ல தெரியவில்லை சகோ.

சிராஜ் said...

/* சிங்கபூரில் தானியங்கி தான், தானாகவே அலசிக் கொள்ளும். தானாகவே குண்டி அளம்பிவடும் மாடல் கூட இப்ப பிரபலம் ஆகிக் கொண்டு வருகிறது */

இந்த விசயத்தில உங்களைவிட சிறந்த UPDATE யார் தர முடியும்? உங்கள நம்புறோம் கோவி கண்ணன். அந்த மாடல் முன்னாடியும் கழுவி விடுமா???? இல்ல வீட்டுக்கு ஒன்னு வாங்கணும் அதான் தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன்.

பேசாம நீங்களே ஒரு மாடல சிபாரிசு செய்யுங்களேன்??? ப்ளீஸ்.....

suvanappiriyan said...

சகோ சிராஜ்!

//இருந்தாலும் இந்த பதிவை நீங்கள் வெளியிட்டிருக்க வேண்டுமா? வேண்டாமா என்று எனக்கு கருத்து சொல்ல தெரியவில்லை சகோ.//

பதிவு நகைச்சுவையாக எழுதப்பட்டது. இது யாரையும் தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டவும் இல்லை. அடுத்து சுகாதாரத்தைப் பேணுவதில் பெரும்பாலோர் அலட்சியமாக இருக்கின்றனர். பொது இடங்களில் இது போன்று அசிங்கப்படுத்துவதால் பல வியாதிகள் பரவுகின்றன. இதையும் சுட்டிக் காட்டவே இந்த பதிவு.

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

அடுத்து பின்னூட்டம் இடுபவர்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் புன்படுத்தும் வகையில் உங்களின் கருத்துகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

புரிதலுக்கு நன்றி!

சிராஜ் said...

சகோ,

என்னோட முதல் பின்னூட்டத்தை வெளியிட வில்லையே? மட்டுறுத்தி விட்டீர்களா??? சும்மா தெரிந்து கொள்ளத்தான் கேட்டேன்.

NKS.ஹாஜா மைதீன் said...

சலாம் சகோ.....

பகிர்வுக்கு நன்றி....

suvanappiriyan said...

சலாம்! சகோ சிராஜ்!

//என்னோட முதல் பின்னூட்டத்தை வெளியிட வில்லையே? மட்டுறுத்தி விட்டீர்களா??? சும்மா தெரிந்து கொள்ளத்தான் கேட்டேன்.//

ஆம் சகோ! காரணம் உங்களுக்கு விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்.

பதிவில் சொல்லப்பட்டிருக்கும் மற்ற விஷயங்களான மனிதர்களை இந்த தொழிலில் ஈடுபடுத்துவது பற்றியோ மற்றும் திறந்த வெளிகளில் அசுத்தம் செய்வது எவ்வளவு சுகாதாரத்துக்கு கேடு என்பது பற்றியோ பேசலாமே!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ ஹாஜா மைதீன்!

//சலாம் சகோ.....

பகிர்வுக்கு நன்றி....//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ஷர்புதீன் said...

hm!

சிராஜ் said...

ஹ்ம்ம்... அப்ப, சண்டை போட விட மாட்டீங்க ???? கடும் கண்டனங்கள்.

ஹி.. ஹி. ஹி... முதல் பின்னூட்டம் அப்படி வந்ததால் தான் நானும் அந்த ஏரியாவிற்குள் நுழைந்தேன். நிற்க.

பதிவ பத்தி சொல்லனும்னா. நம்ம மக்களுக்கு பொது கக்கூஸ எப்படி பயன்படுத்துவதுன்னு தெரியல அல்லது தான் விஷயம் முடிந்தால் போதும் அடுத்து வர்றவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன அப்படிங்கிற மனநிலைதான் இருக்கு.இது முதல்ல மாறனும்.

suvanappiriyan said...

//ஹ்ம்ம்... அப்ப, சண்டை போட விட மாட்டீங்க ???? கடும் கண்டனங்கள்.//

ஏற்கெனவே விஜயகாந்த் ஜெயலலிதா சண்டை இணையத்தை விறுவிறுப்பாக்கி வருகிறது. இடையில் உங்கள் சண்டை வேறு ஆரம்பித்தால் அவ்வளவுதான். எனவேதான் மட்டுறுத்தி விட்டேன். :-)

//பதிவ பத்தி சொல்லனும்னா. நம்ம மக்களுக்கு பொது கக்கூஸ எப்படி பயன்படுத்துவதுன்னு தெரியல அல்லது தான் விஷயம் முடிந்தால் போதும் அடுத்து வர்றவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன அப்படிங்கிற மனநிலைதான் இருக்கு.இது முதல்ல மாறனும்.//

உண்மைதான் சகோ. மற்றவர்களுக்கு சிரமம் கொடுக்கிறோமே என்ற கவலை கொஞ்சம் கூட இவர்களிடம் கிடையாது.

suvanappiriyan said...

//hm!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷர்புதீன்!

Nizam said...

அருமையான பதிவு சகோதரே. நம்ம குழந்தைகளின் மலத்தை எடுக்கவே முகத்தை சுழிக்கும் நாம். ஊரில்யுள்ள அனைவரை உடையா கழிவை எடுக்கும் இவர்களை போன்றோரின் நிலையை நினைத்தாலே கண்ணீர் வருகிறது.

suvanappiriyan said...

சகோ நிஜாம்!

//அருமையான பதிவு சகோதரே. நம்ம குழந்தைகளின் மலத்தை எடுக்கவே முகத்தை சுழிக்கும் நாம். ஊரில்யுள்ள அனைவரை உடையா கழிவை எடுக்கும் இவர்களை போன்றோரின் நிலையை நினைத்தாலே கண்ணீர் வருகிறது.//

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி.

baleno said...

இனி கழிவறைகளை மட்டமாக நினைக்க மாட்டோம் என்றும் திறந்த வெளிகளில் மலம் கழிக்க மாட்டோம் என்றும் உறுதி கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

மொபைல் தொலைபேசி வைத்திருக்க வேண்டும் என்பதில் இந்தியர்கள் காட்டும் அக்கறையை கழிவறைகள் இருக்க வேண்டும் என்பதில் காட்டுவதில்லை என்று ஒரு அறிக்கை படித்ததாக நினைவு இருக்கிறது.

கோவி.கண்ணன் said...

//பிற சந்தர்ப்பங்களிலும் அவர்களின் (குழந்தைகள் உட்பட) இடுப்புக்கு கீழேயே நோட்டமிட்டுக் கொண்டிருபவர் //

திரு சுவனப்பிரியன்,

இது போன்ற எண்ணங்கள் என்னைப் பற்றி உங்கள் மனதிலும் இல்லாவிட்டால் இதை அனுமதித்திருக்கமாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்,

இது மிகவும் கேவலமான தனிமனிதல் தாக்குதல் உத்தி, நான் உங்களைப் பற்றிய செய்த விமர்சனங்கள் அனைத்தும் கருத்தியல் அடிப்படையில் ஆனது, மாறாக உங்களை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது இல்லை, அது போன்று பிறர் பின்னூட்டம் இட்டாலும் அனுமதிப்பது கிடையாது.

உங்களைப் பற்றிக் கூட இது போன்று கேவலமாக யாரேனும் ஏன் நானே எழுதினால் ரசீப்பீர்களா ? தான் விரும்பாத ஒன்றை பிறருக்கு செய்வதும் அல்லது அனுமதிப்பது உங்களுக்கு உங்கள் மதமே சொல்லிக் கொடுக்கவில்லை என்றாலும் கூட இது போன்ற கேவலங்களை உங்கள் மதம் தடுக்கவில்லை என்பதால் அனுமதிக்கிறீர்கள் என்று கொள்ளலாமா ?

உங்களை எனது பதிவுகளுக்கு கருத்து சொல்ல நானும் அழைப்பதில்லை, நீங்களாகவே வந்து சொல்லுகிறீர்கள், நானும் அது போல் நீங்கள் அழைத்து நான் இங்குவருவதில்லை, ஒருவேளை பிறர் என்னைக் கேவலப்படுத்தும் சந்தர்பங்களுக்காக நீங்கள் காத்திருந்தால் அன்றி இது போன்று நடந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன், பிறமதவாதிகளின் பதிவுகளில் மாற்றுக் கருத்து இருந்தாலும் அதைச் சொல்லும் போது பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில் தனிமனிதத் தாக்குதல் நடத்துவார்கள் என்பதனால் நான் அங்கு பின்னூட்டம் இடுவது கிடையாது, நீங்கள் கடந்த ஆறு வருடங்களாக பதிவு எழுதுவதுடன் முன்பு உங்கள் புரைபைல் படம் கூட போட்டு இருந்தீர்கள் என்பதால் தெரிந்த பதிவர் என்ற முறையில் மட்டும் உங்கள் பதிவுகளுக்கு நான் பின்னூட்டம் இடுவது உண்டு.

இனிமேல் அன்பு நண்பர் என்றெல்லாம் எழுதி நட்புச் சொல்லை களங்கப்படுத்தாதீர்கள், எனது பதிவுகளுக்கு உங்களின் கருத்துகளை நான் எதிர்பார்க்கப் போவதில்லை. முடிந்தளவில் தாங்கள் என் பதிவுகளை புறக்கணிப்பது நலம். நானும் இனிமேல் இங்கு வரமாட்டேன்.

Seeni said...

vithiyaasamaana sinthanai!

suvanappiriyan said...

திரு உண்மைகளின் பின்னூட்டம் சில திருத்தங்களுடன்...

//கழிப்பறையே புனிதம் என பறை சாட்டிக்கொண்டிருப்பதுடன் ,

கழிப்பறைகளில் தான் சாராத பிற மார்க்கத்தை சேர்ந்தவர்கள் கழிப்பறைகளில் எவ்வாறு நடந்து கொள்ளுகிறார்கள் என்பதையே ஊன்றி கவனிப்பதையே வழக்கமாக கொண்டு


தன் மனம் (வினை)தன்னை சுட,

பதிவின் தலைப்பை பார்த்தவுடன் பதறி அடித்துக்கொண்டு வந்து பதிவைப் படித்துவிட்டு அடைந்த நிம்மதி சொல்லி மாளாது……..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு உண்மைகள்.

suvanappiriyan said...

திரு கோவி கண்ணன்!

//உங்களை எனது பதிவுகளுக்கு கருத்து சொல்ல நானும் அழைப்பதில்லை, நீங்களாகவே வந்து சொல்லுகிறீர்கள், நானும் அது போல் நீங்கள் அழைத்து நான் இங்குவருவதில்லை, ஒருவேளை பிறர் என்னைக் கேவலப்படுத்தும் சந்தர்பங்களுக்காக நீங்கள் காத்திருந்தால் அன்றி இது போன்று நடந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன்,//

கண்டிப்பாக அப்படி ஒரு எண்ணம் என் மனதில் இல்லை. இது பற்றி முதல் பின்னூட்டத்திலேயே விளக்கியிருந்தால் அந்த வாக்கியத்தை எடிட் செய்து வெளியிட்டிருப்பேன். உங்கள் மனம் சங்கடப்படக் கூடாது என்பதற்காகத்தான் மேலும் இரண்டு பின்னூட்டங்களை வெளியிடவில்லை.

ஒருவர் தளத்துக்கு வந்து பின்னூட்டம் இடுவது என்பது வருபவரின் விருப்பத்தைப் பொருத்தது. நீங்கள் வரா விட்டாவிலும் உங்கள் பதிவுக்கு நான் வருவேன். வெளியிடுவதும் வெளியிடாமல் இருப்பதும் உங்கள் விருப்பம்.

//இனிமேல் அன்பு நண்பர் என்றெல்லாம் எழுதி நட்புச் சொல்லை களங்கப்படுத்தாதீர்கள்,//

நீங்கள் விரும்பாவிட்டாலும் எனக்கு நீங்கள் அன்பு நண்பர்தான். எனது எண்ணத்தில் மாற்றம் இல்லை.

suvanappiriyan said...

திரு கோவிக் கண்ணனின் பின்னூட்டம் சிறிய திருத்தங்களுடன்....

// எங்க ஆளுங்க இப்படியெல்லாம் நடந்து கொள்ளமாட்டார்கள் என்று சொல்லும் மானஸ்தர்கள் பார்க்க பின்னூட்டத்தை அப்படியே வெளி இட்டு இருக்கலாமே சுவனப்பிரியன்.//

R.Puratchimani said...

நல்ல பதிவு

//மனிதர்களுக்குள் ஏன் இப்படி சாதி வித்தியாசம் பார்க்கிறீர்கள்?//
இதேபோல் மத வித்தியாசம் பார்க்காமல் வாழ வேண்டும் என்ற கருத்தையும் நீங்கள் (நாம் அனைவரும்) முன் மொழிவீர்கள் என நம்புகிறேன்.
நன்றி

suvanappiriyan said...

திரு புரட்சி மணி!

//இதேபோல் மத வித்தியாசம் பார்க்காமல் வாழ வேண்டும் என்ற கருத்தையும் நீங்கள் (நாம் அனைவரும்) முன் மொழிவீர்கள் என நம்புகிறேன்.
நன்றி//

கண்டிப்பாக! மத வித்தியாசம் பார்க்கமால் ஒருவரையொருவர் அன்போடும் பாசத்தோடும் பழக வேண்டும் என்பதே எனது விருப்பமும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

UNMAIKAL said...

//கோவி.கண்ணன் said...

இது போன்ற எண்ணங்கள் என்னைப் பற்றி உங்கள் மனதிலும் இல்லாவிட்டால் இதை அனுமதித்திருக்கமாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்,//

மற்றவர்களும் இந்த கேள்வியை நூறு முறையாவது கோவிக்கண்ணனிடமே கேட்க வேண்டிய சூழ்நிலையில் கோவிக்கண்ணனே உள்ளார் என்பதை அவர் மனச்சாட்சியே உறுத்தட்டும்.

UNMAIKAL said...

திரு சுவனப்பிரியன் ,

கோவிகண்ணன் தன்னிச்சையாக தனது பதிவுகளின் மூலமாகவும் தன் பதிவுகளில் வரும் கருத்துரைகளுக்கு கோவிகண்ணன் அளித்த பதில்கள் மூலமாகவும் கோவிகண்ணன் பிறருடைய பதிவுகளில் தான் இட்ட கருத்துரைகள் மூலமாகவும் கோவிகண்ணன் தன்னுடைய‌ "மனநிலை" யை அப்பட்டமாக வாசகர்கள் மனதில் தெளிவுபடுத்தி பதிய செய்துவிட்டதை யாராலும் மாற்றமுடியாது.

இது கோவிக்கண்ணன் விதைத்தது. யாரும் திணித்தது இல்லை.

யார் யர் என்னென்ன விதைத்தார்களோ அதை அவரவர்தான் அறுவடை செய்வார்கள்.

தாங்கள் என்னதான் என் கருத்துரையை எடிட் செய்தாலும், நீக்கினாலும் உங்களால் கோவிக்கண்ணனை தூக்கிபிடித்து நிறுத்தமுடியாது.

திரு சுவனப்பிரியன், தாங்களின் நற்பண்பு குறைவற்று இருக்கிறது.

வாழ்த்துக்கள்.

Anonymous said...

சகோ சுவனப்பிரியன்

நபிகளாருக்கு டெம்போரல் வலிப்பு இல்லை. அவருக்கு உண்மையிலேயே ஜிப்ரீல் வந்து சொன்னார் என்பத்ற்கு ஆதாரத்துடன் எழுதுகிறேன் என்று சொன்னீர்களே?

ஒரு வீணாப்போன வீடியோவை போட்டுவிட்டு போனால் என்ன பயன்?

ஆதாரத்துடன் ஜிப்ரீல் வந்து நபிகளாரிடம் சொன்னதை நிரூபியுங்கள்.

suvanappiriyan said...

//ஒரு வீணாப்போன வீடியோவை போட்டுவிட்டு போனால் என்ன பயன்?

ஆதாரத்துடன் ஜிப்ரீல் வந்து நபிகளாரிடம் சொன்னதை நிரூபியுங்கள்.//

குர்ஆனே மிகப் பெரிய ஆதாரம் இல்லையா? அதைத்தானே இதற்கு முன்னால் பல பதிவுகளில் சொல்லியும் வருகிறேன். வலிப்பு நோய் வந்தவர் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தக் கூடிய எல்லா அறிவியல் உண்மைகளையும் உள்ளடக்கிய ஒரு வேதத்தை தர முடியுமா? என்பதை சிந்தித்து பாருங்கள். குர்ஆன் ஒன்றே முகமது நபிக்கு வலிப்பு நோய் இல்லை என்பதை பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.

Anonymous said...

”எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தக் கூடிய எல்லா அறிவியல் உண்மைகளையும் உள்ளடக்கிய ஒரு வேதத்தை தர முடியுமா? .”

என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

முன்னுக்கு பின் முரணான வசனங்களும், அறிவியலுக்கு பொருந்தாத வசனங்களும் இருக்கின்றன என்று காட்டினால்கூட அது உங்கள் அறிவுக்கு தெரிந்தாலும் உணர்ச்சிக்கு தெரியாது.

இருக்கும் பல முரண்பாடுகளை எத்தனையோ முறை நாத்திகர்கள் காட்டியிருக்கிறார்கள்.

அதனை எப்படி சமாளித்து பதில் கொடுப்பது என்றுதானே சிந்திப்பீர்கள்?

நாஸிக் மன்ஸூக் என்ற வசனங்கள் முன்னுக்கு பின் முரணான வசனங்களை சமாளிக்கத்தானே உருவாயின?

அறிவுக்கு முரணான பல கருத்துக்களும் இருக்கின்றன. தேன் பழத்தை சாப்பிடுவது, ஜுல்கர்னைன் உலகத்தின் கிழக்கையும் மேற்கையும் பார்த்தது, ஜோடிகளாக எல்லா உயிரினங்களையும் படைத்ததாக சொன்னாலும் பால் இல்லாத (sexless) உயிரினங்கள் இருப்பது இப்படி எத்தனையோ.
அவற்றை உங்களால் அறிவுக்கு முரணான கருத்துக்கள் என்று எடுத்துகொள்வீர்களா அல்லது எப்படி சமாளிப்பது என்று சிந்திப்பீர்களா?

இன்னும் அடிமையை கொன்றதற்கு அடிமையை கொல் என்ற வசனத்துக்கு ஒரு பதிலை சொல்லமுடியவில்லை உங்களால். இது எக்காலத்துக்கு பொருந்தக்கூடிய, எல்லா நாட்டுக்கும் பொருந்தக்கூடிய வசனம் என்று சொல்கிறீர்கள்.

எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியது என்று சொல்லிவிட்டு, காபிர் கழுத்தை வெட்டு என்பதை மட்டும் அந்த காலத்துக்கு சொன்னது என்று ஏன் சொல்கிறீர்கள்? நபிகளார் தன் பொண்டாட்டிகளை மிரட்ட சொன்ன வசனங்கள் இப்போது எதற்கு? அதன் மூலம் என்ன அறிவுரையை அலாஸ்கா வாழ் மக்களுக்கு சொல்கிறார் மொஹம்மது?

எப்படி சமாளிப்பது என்று சிந்திக்க தொடங்கும்போதே அது குரானில் 1) தெளிவாக இல்லை, 2) அது பகுத்தறிவுக்கு முரணானது என்பதை ஆழ்மனத்தில் ஒப்புகொள்வதன் விளைவுதான் என்று உணர்வீர்களா?

சகீர் என்ன காமெடியாக எழுதினாலும், அவர் முன்வைக்கும் வாதங்களுக்கு உங்களிடம் பதில் இல்லை

சகீரின் பதிவில் பின்னூட்டத்தில் நரேன் எழுதியிருக்கும் ஹதீஸ்களை கவனியுங்கள். அன்றைக்கு அவருக்கு இருந்த வியாதியை அவராலோ அல்லது அந்த காலத்து மருத்துவர்களாலோ அறிந்திருக்க முடியாது. அந்த தெளிவான ஹதீஸ்கள் அவருக்கு டெம்போரல் லோப் வலிப்பு இருந்ததை உறுதி செய்கின்றன. அது மட்டுமல்ல, இந்த காலத்தில் டெம்போரல் வலிப்பு இருந்த டாஸ்டவஸ்கி, பஹாவுல்லா போன்றோரும் அதே போல ஆன்மீக கருத்துக்களை அழகான உரைநடையில் தெளிவாகவே எழுதியிருக்கிறார்கள். ஜிப்ரீல் மொஹம்மதுவிடம் வந்து உரையாடினார் என்று ஒத்துகொண்டால், ஜோஸப் ஸ்மித்திடம் மரோனி தூதரும், பஹாவுல்லாவிடம் சுவன தேவதையும் வந்து பெசியதாகவும் ஒப்புகொள்ள வேண்டும். ஏனெனில் இந்த தேவதைகளும் அவர்களுக்கு மட்டுமே காட்சியளித்தன. அவர்களுக்கு மட்டுமே கேட்டன. ராமசந்திரனின் வீடியோவில் பேசிய ஜான் என்பவரிடமும் இதே போல கடவுள் வந்து சொல்லியிருக்க வேண்டும்.
இவர்கள் அனைவருக்கும் பொதுவானவை அவர்களுக்கு மட்டுமே தெரியும் காட்சிகள், அவர்களுக்கு மட்டுமே தெரியும் இறைதூதர்கள், அவர்களுக்கு மட்டுமே கேட்கும் ஒலிகள். இவற்றில் நபிகளாருக்கு மட்டும் ஏன்விதிவிலக்கு அளிக்கிறீர்கள்? நீங்கள் அந்த மதத்தில் இருப்பதாலா? இஸ்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்ற உங்கள் விருப்பம் உங்கள் கண்களை மறைக்கிறதா?

suvanappiriyan said...

//அன்றைக்கு அவருக்கு இருந்த வியாதியை அவராலோ அல்லது அந்த காலத்து மருத்துவர்களாலோ அறிந்திருக்க முடியாது. அந்த தெளிவான ஹதீஸ்கள் அவருக்கு டெம்போரல் லோப் வலிப்பு இருந்ததை உறுதி செய்கின்றன. அது மட்டுமல்ல, இந்த காலத்தில் டெம்போரல் வலிப்பு இருந்த டாஸ்டவஸ்கி, பஹாவுல்லா போன்றோரும் அதே போல ஆன்மீக கருத்துக்களை அழகான உரைநடையில் தெளிவாகவே எழுதியிருக்கிறார்கள்.//

உங்கள் வாதப்படி அவருக்கு வலிப்பு நோய் இருந்தது என்கிறீர்கள். முஸ்லிம்கள் நம்பிக்கைபடி அவருக்கு வந்தது இறைச்செய்தி என்று நம்புகின்றனர். அவரவர் நம்பிக்கையை அங்கேயே வைத்து விட்டு அதனால் உலகுக்கு கிடைத்த நன்மைகள் முஸ்லிம்களுக்கு கிடைத்த நன்மைகளை பாருங்களேன்.

இத்தனை ஆண்டுகளானாலும் எவ்வளவு படித்திருந்தாலும் தமிழகத்தில் உங்களால் தீண்டாமையை ஒழிக்க முடிந்ததா? கோவில்களில் அனைத்து சாதியினரும் சென்று வழிபட முடிகிறதா? எதுவும் நடந்த பாடில்லை. ஆனால் அதே தமிழன் இஸ்லாத்தை ஏற்றவுடன் அவனிடம் இருந்த இழிவு நீங்கி புது மனிதனாகி விடுகிறானே! அவனை பள்ளியிலும் வேலையில் அமர்த்துகிறார்களே! ஏதோ ஒரு மூலையில் இருக்கும் சவுதியில் பிறந்த முகமது நபி கொடுத்த சட்டம் இங்குள்ள குப்பனுக்கும் சுப்பனுக்கும் மறு வாழ்வு அளிக்கிறதே!

அதே போல் அன்றைய அரபுலகம் சூது, விபசாரம், மது, வட்டி, பல தெய்வ வணக்கம் என்று மௌட்டீகத்தை அதிகம் கொண்ட சமூகமாக இருந்தது. முகமது நபி இறைவனிடமிருந்து கொண்டு வந்த சட்டம் சில ஆண்டுகளிலேயே அரபுலகம் முழுவதையுமே இஸ்லாத்தின் காலடியில் கொண்டு வந்து நிறுத்தியது எந்த சட்டம். இன்று நாகரிகத்தில் சிறந்த சமூகமாக தலை நிமிர்ந்து நிற்பதும் இதே அரபு சமூகம்தான்.

உங்கள் வாதப்படி அவர் இறைத் தூதராக இல்லாவிட்டாலும் அதனால் மனித குலம் சீர் அடைந்ததை உங்களாலும் மறுக்க முடியாது. எனவேதான் மதங்களே கூடாது என்ற பெரியார் கூட 'இன இழிவு நீங்க இஸ்லாமே சிறந்த மருந்து' என்றார்.

//இவர்கள் அனைவருக்கும் பொதுவானவை அவர்களுக்கு மட்டுமே தெரியும் காட்சிகள், அவர்களுக்கு மட்டுமே தெரியும் இறைதூதர்கள், அவர்களுக்கு மட்டுமே கேட்கும் ஒலிகள். இவற்றில் நபிகளாருக்கு மட்டும் ஏன்விதிவிலக்கு அளிக்கிறீர்கள்? நீங்கள் அந்த மதத்தில் இருப்பதாலா? இஸ்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்ற உங்கள் விருப்பம் உங்கள் கண்களை மறைக்கிறதா?//

அவர்களும் முகமது நபியும் எவ்வாறு வேறுபடுகிறார்கள் என்பதை விளக்கி முன்பு பதிவுகளே இட்டுருக்கிறேன். இனி வரும் காலங்களில் மேலும் சில ஆதாரங்களை வைக்கவுள்ளேன்.

காபிர்கள் வசனம், அடிமைகள் வசனம் குறித்து முன்பு ஏற்கெனவே பதிவுகளில் விளக்கியுமிருக்கிறேன். புதிதாக ஏதும் குற்றச்சாட்டுகள் இருந்தால் வசன எண்களை குறிப்பிட்டு சொல்லுங்கள். பதில் தர முயற்ச்சிக்கிறேன்.

Anonymous said...

சுவனப்பிரியன்
நீங்கள் சொல்வதில் நிறைய தவறுகள் இருக்கின்றன.
உங்களுடைய அதீத இஸ்லாமிய மத ஆர்வத்தால் உங்களது தவறுகள் உங்களுக்கே தெரியவில்லை.
//உங்கள் வாதப்படி அவருக்கு வலிப்பு நோய் இருந்தது என்கிறீர்கள். முஸ்லிம்கள் நம்பிக்கைபடி அவருக்கு வந்தது இறைச்செய்தி என்று நம்புகின்றனர். //

ஆக மற்றவர்கள் அறிவியல்ரீதியாக அவருக்கு வலிப்பு நோயால் தனக்கு ஜிப்ரீல் வந்து பேசியது என்று நிரூபிக்கிறார்கள். நீங்கள் மத நம்பிக்கையால் அது இறைசெய்தி என்று “நம்புகிறீர்கள்” இதுதான் நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு ஆதாரம் எதுவும் இல்லை. உலகம் தட்டை என்று ஒரு சாரார் நம்பலாம். உலகம் உருண்டை என்று ஒரு சாரார் அறிவியல் மூலமாகவும் நிரூபணத்தை கொண்டு அறியலாம். இரண்டும் ஒரே தட்டில் வைக்க முடியாது.

அவர்கள் நம்புகிறார்கள். நம்பிவிட்டு போகட்டும். உலகம் தட்டை என்பதால்தான் சில நன்மைகள் விளைந்தன, அதனால், உலகம் தட்டை என்றே நம்பலாமே என்று கேட்கிறீர்கள்.

இந்த கேள்வியின் முட்டாள்த்தனத்தை நீங்கள் உணர்வீர்களா என்று தெரியவில்லை.

//நாகரிகத்தில் சிறந்த சமூகமாக தலை நிமிர்ந்து நிற்பதும் இதே அரபு சமூகம்தான். //
சிரிபப்தா அழுவதா என்று தெரியவில்லை. பணம் மட்டுமே நாகரிகத்தை கொண்டுவராது என்பதற்கு அரபு சமூகம் ஒரு உதாரணம். உலகத்து நாகரிகங்களை எல்லாம் அழித்து மண்மேடாக ஆக்கியது இஸ்லாமிய அரபு சமூகம். இஸ்லாம் ஒரு விபத்து. அதற்கு முன்னால் அது அருமையான சமூகமாகவே இருந்தது. நீங்கள் சொல்லும் விபச்சாரம், மது, வட்டி எல்லாமே அரபு நாடுகளில் இருக்கின்றன. அது உங்கள் இஸ்லாமிய கண்ணாடி வழியாக பார்க்கும் கண்ணுக்கு தெரியாமலிருப்பது புரிந்துகொள்ளக்கூடியது.

//அவர்களும் முகமது நபியும் எவ்வாறு வேறுபடுகிறார்கள் என்பதை விளக்கி முன்பு பதிவுகளே இட்டுருக்கிறேன்
//
அந்த இணைப்புக்களை தாருங்கள்

//காபிர்கள் வசனம், அடிமைகள் வசனம் குறித்து முன்பு ஏற்கெனவே பதிவுகளில் விளக்கியுமிருக்கிறேன்.//

இல்லை. தேடிப்பாருங்கள். அது விளக்கமே இல்லை. அந்த வசனத்துக்கு எல்லோருமே மென்று விழுங்குகிறார்கள். அதனைத்தான் நீங்கள் மென்று விழுங்கி அப்படி புரிந்துகொள்லக்கூடாது என்றீர்கள். பிறகு எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்ற கேள்விக்குபதிலில்லை

Nasar said...

சகோ சுவனப்பிரியன் , இந்த பதிவிட நீங்கள் சரியான நபர் கிடையாது மேலும் தகுதியும் கிடையாது .
முதன் முதலாய் பின்னுட்டமிட்டவர்தான் சரியான நபர் SO எல்லாப் பெருமையும் அவருக்கே உரியது ....

suvanappiriyan said...

சகோ நாசர்!

//சகோ சுவனப்பிரியன் , இந்த பதிவிட நீங்கள் சரியான நபர் கிடையாது மேலும் தகுதியும் கிடையாது .
முதன் முதலாய் பின்னுட்டமிட்டவர்தான் சரியான நபர் SO எல்லாப் பெருமையும் அவருக்கே உரியது ....//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Nellai Premkumar said...

//மனிதர்களுக்குள் ஏன் இப்படி சாதி வித்தியாசம் பார்க்கிறீர்கள்?//
சுவனபிரியன்..
முஸ்லிம்கள் குடி இருக்கும் பகுதிகளுக்குள் பிற மதத்தவர் யாரும் குடி இருக்க முடியாது. முஸ்லிம்கள் வசிக்கும் தெருக்களுக்குள் பிற மத அடையாளங்களுடன் அதாவது விபூதி அணிந்து கொண்டோ அல்லது சிலுவை போட்டுகொண்டோ ஒருவர் சென்றால் கொலைவெறி பார்வைகளையும் சில நேரம் மிரட்டல்களையும் எதிர் கொள்ள நேரிடும். ஒரு சிறிய ஸ்டுடியோவில் உதவியாளனாக நான் வேலை பார்க்கும்போது ஒரு இஸ்லாமியர் வீட்டு திருமணத்திற்கு வீடியோ கவரேஜ் செய்ய உதவிக்கு சென்றிருந்தேன். நான் நெற்றியில் அணிந்திருந்த விபூதி பட்டையை அங்கிருந்தவர்கள் அழிக்க சொன்னார்கள். அதை அளித்துவிட்டுத்தான் வீட்டின் உள்ளே வர வேண்டும் இல்லை என்றால் வீடியோ தேவை இல்லை என்று உள்ளே விட மறுத்தனர். எனது ஸ்டுடியோ உரிமையாளர் சொன்ன பிறகு நான் அதை அழித்தேன் அதன் பிறகே என்னை திருமண வீட்டின் உள்ளே அனுமதித்தனர். அகத்தின் அழகு முகத்தில் தெரிவது போல் உங்கள் அழகான மார்கத்தின் அழகு எனக்கு அன்று தெரிந்தது. அப்படி அவர்கள் செய்ததற்கு காரணம் அவர்களுக்கு அவர்கள் மதத்தின் மீது இருந்தவெறி. மேலும் இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலங்களிலும் பிற மதத்தவருக்கு அனுமதி இல்லை. இப்படி மத ரீதியாக பிறரை பாகுபடுத்தி பார்க்கும் நீங்கள் சாதி வெறியை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. மத வெறிக்கும் ஜாதி வெறிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. உங்கள் மதம் உங்களுக்கு உயர்வாகவும் உண்மையானதாகவும் தெரிவதால் நீங்கள் பிற மதங்களை ஏற்று கொள்வதில்லை. இது போன்ற ஊத்தை நியாயத்தை தான் ஜாதி வெறியர்களும் சொல்வார்கள். அவர்களும் அவர்கள் ஜாதி உயர்ந்தது என்ற எண்ணம். இதில் மத வெறியர்களான நீங்கள் ஜாதி வெறியர்களை குற்றம் சாட்டுவது எந்த விதத்தில் சரி என்று புரியவில்லை. நான் சொன்னவற்றை நீங்கள் இல்லை என்று மறுக்கலாம். ஆனால் ஒரு வேற்று மதத்தை சேர்ந்தவனுக்கு நீங்கள் உங்கள் பள்ளிவாசலுக்கு நுழைய அனுமதி கொடுக்க வேண்டியதில்லை,மாறாக முஸ்லிம்கள் குடி இருக்கும் இடத்தில் அவனுக்கு வாடகைக்கு ஒரு வீடு எடுத்து கொடுக்க முடியுமா? அதற்கு அவர்கள் சம்மதிப்பார்களா?
ஜாதி வேற்றுமை, ஜாதி வேற்றுமை என்று இந்துக்களை நோக்கி கூச்சலிட்டு அந்த சத்தத்தில் உங்கள் மத வெறியை மறைக்க வேண்டாம்.


ஒரே கடவுளின் படைப்புகள் தானே மனிதர்கள், ஏன் இப்படி மத வித்தியாசம் பார்கிறீர்கள் ............

suvanappiriyan said...

திரு நெல்லை பிரேம்குமார்!

//மேலும் இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலங்களிலும் பிற மதத்தவருக்கு அனுமதி இல்லை. இப்படி மத ரீதியாக பிறரை பாகுபடுத்தி பார்க்கும் நீங்கள் சாதி வெறியை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.//

முகமது நபி காலத்தில் கிருத்தவர்களை பள்ளிவாசலிலேயே தங்க அனுமதித்திருக்கிறார்கள். பிரார்த்தனை புரியவும் அனுமதித்த வரலாறு உண்டு. ஜனாதிபதி உமருடைய காலத்திலும் இதே போன்று பாதிரிகள் பள்ளியில் தொழுததை பார்க்கிறோம். ஒரு சில முஸ்லிம்கள் சறறு அதிகப்படியாக நடந்தால் அதற்கு இஸ்லாம் பொறுப்பாகாது.

//அதாவது விபூதி அணிந்து கொண்டோ அல்லது சிலுவை போட்டுகொண்டோ ஒருவர் சென்றால் கொலைவெறி பார்வைகளையும் சில நேரம் மிரட்டல்களையும் எதிர் கொள்ள நேரிடும். ஒரு சிறிய ஸ்டுடியோவில் உதவியாளனாக நான் வேலை பார்க்கும்போது ஒரு இஸ்லாமியர் வீட்டு திருமணத்திற்கு வீடியோ கவரேஜ் செய்ய உதவிக்கு சென்றிருந்தேன். நான் நெற்றியில் அணிந்திருந்த விபூதி பட்டையை அங்கிருந்தவர்கள் அழிக்க சொன்னார்கள்.//

இது தவறு. இஸ்லாத்தை உண்மையாக விளங்கிய முஸ்லிம்கள் இதுபோல் செய்ய மாட்டார்கள். குர்ஆனை முழுமையாக அவர்கள் விளங்காததே காரணம்.

//ஆனால் ஒரு வேற்று மதத்தை சேர்ந்தவனுக்கு நீங்கள் உங்கள் பள்ளிவாசலுக்கு நுழைய அனுமதி கொடுக்க வேண்டியதில்லை,மாறாக முஸ்லிம்கள் குடி இருக்கும் இடத்தில் அவனுக்கு வாடகைக்கு ஒரு வீடு எடுத்து கொடுக்க முடியுமா? அதற்கு அவர்கள் சம்மதிப்பார்களா?//

நான் தமிழகம் வரும் போது எங்கள் ஊருக்கு அழைத்து செல்கிறேன். 5000க்கு மேற்பட்ட வீடுகளைக் கொண்ட எங்கள் ஊரில் வெறும் 6 குடும்பங்களே இந்து குடும்பங்கள். அவர்கள் வீடுகளில் மாத்திரம் கோலம் போடுவர். இது நாள் வரை எந்த பிரச்னையும் இல்லாமல் எங்களுடன் சகோதர பாசத்துடனே பழகி வருகின்றனர். பெரும்பாலும் இதுதான் நிலைமை. நீங்கள் சொல்வது ஆச்சரியமாக உள்ளது.

Nellai Premkumar said...

//முகமது நபி காலத்தில் கிருத்தவர்களை பள்ளிவாசலிலேயே தங்க அனுமதித்திருக்கிறார்கள். பிரார்த்தனை புரியவும் அனுமதித்த வரலாறு உண்டு. ஜனாதிபதி உமருடைய காலத்திலும் இதே போன்று பாதிரிகள் பள்ளியில் தொழுததை பார்க்கிறோம். ஒரு சில முஸ்லிம்கள் சறறு அதிகப்படியாக நடந்தால் அதற்கு இஸ்லாம் பொறுப்பாகாது.//
இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள், இஸ்லாம் இதனை அனுமதிக்கிறது, ஒரு சில இஸ்லாமியர்கள் தான் அனுமதிப்பதில்லை என்றால் ஒரு கிறிஸ்தவனை, கிறிஸ்தவனாக நீங்கள் உங்கள் காபாவிற்கு அழைத்து செல்ல தயாரா. அங்கு இல்லாவிட்டாலும் சவுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு அழைத்து செல்ல தயாரா? அதே சவுதியில் தானே முகமதுவும் கிறிஸ்தவர்களை பள்ளிவாசலில் அனுமதித்திருக்கிறார். தயவு செய்து அவன் இஸ்லாமியனாக மாறினால் அழைத்து செல்கிறேன் என்று பதில் கூறாதீர்கள்.
//இது தவறு. இஸ்லாத்தை உண்மையாக விளங்கிய முஸ்லிம்கள் இதுபோல் செய்ய மாட்டார்கள். குர்ஆனை முழுமையாக அவர்கள் விளங்காததே காரணம்.//
உங்கள் பதிவுகள் பலவற்றில் இந்த பதிலை பார்த்திருக்கிறேன். தயவு செய்து இந்த பாட்டை கொஞ்சம் மாற்றலாமே. ஒரு இஸ்லாமியனுக்கு இஸ்லாமை உணர வைக்க முடியாத உங்கள் மதம் எப்படி பிறருக்கு தன்னை முழுமையாக உணர வைக்க போகிறது
//நான் தமிழகம் வரும் போது எங்கள் ஊருக்கு அழைத்து செல்கிறேன். 5000க்கு மேற்பட்ட வீடுகளைக் கொண்ட எங்கள் ஊரில் வெறும் 6 குடும்பங்களே இந்து குடும்பங்கள். அவர்கள் வீடுகளில் மாத்திரம் கோலம் போடுவர். இது நாள் வரை எந்த பிரச்னையும் இல்லாமல் எங்களுடன் சகோதர பாசத்துடனே பழகி வருகின்றனர். பெரும்பாலும் இதுதான் நிலைமை. நீங்கள் சொல்வது ஆச்சரியமாக உள்ளது.//
நீங்கள் சொல்லும் அந்த ஆறு குடும்பங்களும் தனியாக ஒரு மூலையில் வசிப்பார்களே தவிர உங்கள் ஐயாயிரம் குடும்பங்களுக்கு மத்தியில் இருக்க மாட்டார்கள்.
நான் கேட்பது முஸ்லிம்கள் மட்டும் வசிக்கும் தெருவில் உங்களால் ஒரு வெற்று மதத்தவரை குடி வைக்க முடியுமா என்பதே. தமிழ் நாட்டில் அப்படி வேற்று மதத்தவரை அனுமதிக்காத முஸ்லிம்களின் குடியிருப்புகள் நிறய உள்ளன சுவனப்ரியன். ஏன் உங்கள் ஊரில் முஸ்லிம்கள் மட்டும் குடி இருக்கும் தெருவில் வேறு மதத்தவரை அனுமதிப்பார்களா

suvanappiriyan said...

திரு நெல்லை பிரேம்குமார்!

//நான் கேட்பது முஸ்லிம்கள் மட்டும் வசிக்கும் தெருவில் உங்களால் ஒரு வெற்று மதத்தவரை குடி வைக்க முடியுமா என்பதே. தமிழ் நாட்டில் அப்படி வேற்று மதத்தவரை அனுமதிக்காத முஸ்லிம்களின் குடியிருப்புகள் நிறய உள்ளன சுவனப்ரியன். ஏன் உங்கள் ஊரில் முஸ்லிம்கள் மட்டும் குடி இருக்கும் தெருவில் வேறு மதத்தவரை அனுமதிப்பார்களா//

அவர்கள் வசிப்பது முஸ்லிம் தெருவில் முஸ்லிம்களுக்கு மத்தியில். நீங்கள் சொல்வது போல் ஒரு ஓரமாக அல்ல.

//உங்கள் பதிவுகள் பலவற்றில் இந்த பதிலை பார்த்திருக்கிறேன். தயவு செய்து இந்த பாட்டை கொஞ்சம் மாற்றலாமே. ஒரு இஸ்லாமியனுக்கு இஸ்லாமை உணர வைக்க முடியாத உங்கள் மதம் எப்படி பிறருக்கு தன்னை முழுமையாக உணர வைக்க போகிறது//

மனிதன் பலகீனமாகவே படைக்கப்பட்டுள்ளான். எவ்வளவு பெரிய ஞானியும் சில நெரங்களில் தவறிழைத்து விடுவர். முகமது நபியே சில நேரங்களில் தவறிழைத்து பிறகு அத இறைவனால் சுட்டிக் காட்டப்பட்டது. எனவெ முழு குர்அனையும் அப்படியே ஒருவனால் பின்பற்றுவது என்பது மிக சிரமாக இருக்கும் இன்றைய காலத்தில். எனவே முக்கிய கடமைகளை சரிவர செய்து நம்மால் முயன்ற செயல்களை குர்ஆன்படி அமைத்துக் கொள்ள முயற்ச்சிக்க வேண்டும்.

//அங்கு இல்லாவிட்டாலும் சவுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு அழைத்து செல்ல தயாரா? அதே சவுதியில் தானே முகமதுவும் கிறிஸ்தவர்களை பள்ளிவாசலில் அனுமதித்திருக்கிறார். தயவு செய்து அவன் இஸ்லாமியனாக மாறினால் அழைத்து செல்கிறேன் என்று பதில் கூறாதீர்கள்.//

கண்டிப்பாக நான் அழைத்து செல்கிறேன். உங்கள் நண்பரை என்னை தொடர்பு கொள்ள சொல்லுங்கள்.