Followers

Thursday, December 06, 2018

பாலஸ்தீன பள்ளி இஸ்ரேலியரால் இடிக்கப்பட்டுள்ளது!

பாலஸ்தீன பள்ளி இஸ்ரேலியரால் இடிக்கப்பட்டுள்ளது!
பாலஸ்தீன் ஹெப்ரானில் உள்ள சிமியா கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு இன்னும் சில தினங்களில் மாணவர்கள் வருகை தரும் நேரம் பார்த்து இஸ்ரேலிய ராணுவம் இடித்து தரை மட்டமாக்கியுள்ளது. 40000 டாலர் செலவில் கட்டப்பட்ட இப்பள்ளி 7 வகுப்பறைகளை கொண்டது. 50 மாணவர்கள் பாடம் படிக்கும் வகையில் கட்டப்பட்டிருந்தது. பாலஸ்தீனர்கள் கல்வியறிவு பெற்று விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக உள்ளது இஸ்ரேலிய பாசிச அரசு.
தகவல் உதவி
மில்லிகெஜட்
06-12-2018

தாங்கள் மட்டும் அறிவு பெற வேண்டும் மற்றவர்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்ற பாசிச மனப்பான்மை நம் நாட்டிலும் அரங்கேறுவதைக் காண்கிறோம். நீட் தேர்வு போன்றவற்றை புகுத்தி மற்ற இனத்தவர் மருத்துவம் போன்ற சிறந்த படிப்புகளில் நுழைந்து விடக் கூடாது என்பதில் இங்கும் உள் அடி வேலை நடப்பதை பார்க்கிறோம். பாசிசவாதிகளின் எண்ண ஓட்டம் எப்போதுமே ஒரே திசையிலேயே பயணிக்கும் என்பதற்கு இதெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு.



1 comment:

Dr.Anburaj said...

இஸ்ரவேல் நாட்டில் 17சதம் அரேபியா்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் யுதர்களைப்போல் வழங்கப்பட்டு வருகின்றது. கல்வி மருத்துவம் போன்ற அனைத்துவசதிகளும் செய்யப்பட்டு வருகின்றது.

இஸ்ரவேல் உச்சநீதி மன்ற நீதிபதியாக
ஒரு அரேபியா் பணியாற்றி வருகின்றாா்.

சம்பவத்தின் உண்மையான கருத்து வேறுவிதமாக இருக்க வேண்டும். பாலஸ்தீனர்கள் கல்வி பெற அனுமதிக்கக் கூடாது என்ற கெட்ட புத்தி யுதர்களுக்கம் இஸ்ரவேல் அரசுக்கும் நிச்சயம் கிடையாது. சுவனப்பிரியன் பொய் சொல்லுவதில் வல்லவா்.