பிராமணர்களை பிராமணர் என்று சொன்னாலோ, சத்திரியர்களை சத்திரியர்கள் என்று சொன்னாலோ, வைசியர்களை வைசியர் என்று சொன்னாலோ அவர்கள் தவறாக எடுத்துக்கொள்வது இல்லை. ஆனால் சூத்திரர்களை சூத்திரர் என்று சொன்னால் அவர்களுக்கும் கோபம் வருகிறது!!
- பாஜக எம்பி பிரக்யா தாக்கூர்
| Kshatriya ko kshatriya keh do, bura nahi lagta. Brahmin ko brahmin keh do, bura nahi laga. Vaishya ko vaishya keh do, bura nahi lagta. Shudra ko shudra keh do, bura lag jata hai. Kaaran kya hai? Kyunki samajh nahi paate: BJP MP Pragya Singh Thakur in Sehore, MP
5 comments:
வாய்கொழுப்பு.பொிய மேதை போல் தங்களைக் காட்ட வேண்டும் என்று இப்படி எதையாவது முட்டாள்தனமாகப் பேசி குழப்பம் விளைவிப்பபதை தங்களை அறியாமல் செய்து வருகின்றார்கள். இந்த அம்மணி பெரிய முட்டாள். இவள் பேசுவதற்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன் ?சுத்திரா் எனறால் கீதைபடி unskilled labour - சிறப்பு தகுதியில்லாத சொன்னைச் செய்யும் பணியாள் என்பதுதான் அா்த்தம்.அப்படிப்பட்ட பெற்றோருக்கு பிறாமண பிள்ளை பிறக்கலாம்.சத்திரிய வைசிய பிள்ளை பிறக்கலாம். இவளுக்கு எதற்கு இந்த வாய். உலகில் அனைவரும் ஒரே தகுதி ஆளுமை பெற்றவர்கள் இல்லை என்பதைத் தவிர மக்களை பிறாமணா் சத்திரியா் வைசியா் என்று பிரிப்பது கடினம்.தேவையும் இல்லை.
இரும்பு பெண்மணி' எனப் பாராட்டப்படுபவர், முனிபா மஸாரி.
தாய்மை அடைதலில் சிக்கல், விவாகரத்து, உடல் உறுப்பு செயலிழப்பு, புறக்கணிப்புகள் என எல்லாவற்றையும் எதிர்கொண்டவர் முனிபா. பாகிஸ்தானின் ரஹிம்யர் கான் மாவட்டத்தில் 1987 மார்ச் 3-ம் தேதி பிறந்தவர். கலைத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவருக்கு 18 வயதிலேயே திருமணமானது. 2007-ம் ஆண்டு கணவருடன் தன் சொந்த ஊருக்கு வரும்போதுதான், அந்தப் பயங்கர விபத்து நிகழ்ந்தது. ஓட்டுநர் எதிர்பாராத விதமாகத் தூங்கிவிட, அவர்களின் கார் கால்வாயில் வீழ்ந்தது.
முனிபாவின் கணவர் அந்த விபத்திலிருந்து தப்பிவிட்டார்.
ஆனால், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த முனிபாவை
அங்கேயே விட்டுவிட்டுப் போய்விட்டார்.
நீண்ட நேரமாக உதவிக்கு யாருமின்றி காருக்குள் கிடந்தார் முனிபா. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ஆட்கள் வந்தார்கள். ஆனால், அந்த நகரில் அம்புலன்ஸ் கிடைக்காததால் ஜீப்பிலேயே மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
சென்ற மருத்துவமனையிலோ முதலுதவி வசதிகள்கூட இல்லை. வேறு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லுங்கள் என்றார்கள். மீண்டும் பயணம். அடுத்த மருத்துவமனையில் முனிபாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், ''இவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் இறந்துவிடுவார். சிகிச்சை அளிப்பதில் பயனில்லை'' என்றார்கள். மூன்றாவதாக, கராச்சியில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார் முனிபா. ஒருவழியாக அங்கே சிகிச்சை ஆரம்பித்தது.
இதுகுறித்து ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசிய முனிபா, ''விபத்து நிகழ்ந்தபோது எனக்குக் கால்கள் இருப்பதையே என்னால் உணரமுடியவில்லை. எலும்புகள் எல்லாம் நொறுங்கிப்போனதாக நினைத்தேன். அதைவிட எனக்கு எல்லாமே என நம்பியிருந்த உறவு என்னை விட்டுப்போனது மிகுந்த வலியைத் தந்தது. நான் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவள். எனது திருமணம் பெற்றோரின் ஆசைப்படி நடந்தது. பொதுவாகவே பெண்கள், தங்கள் திருமணம் பற்றிய கருத்துகளைப் பகிரும் சுதந்திரம் இங்கில்லை. ஆகையால், நானும் திருமணத்துக்கு மறுப்பு தெரிவிக்காமல் சம்மதித்தேன். எனது திருமண வாழ்க்கை சந்தோஷமாக இல்லை. திருமணமான இரண்டு வருடத்தில் அந்த விபத்து நடந்தது.
விபத்தில் தப்பிய கணவர், என்னைக் காப்பாற்றாமல்
சென்றதற்காக இப்போது சந்தோஷப்படுகிறேன்.
தினமும் அவர் நலனுக்காகக் கடவுளை வேண்டுகிறேன்.
விபத்து நடந்த சில நாள்களிலேயே அவர் வேறு ஒரு பெண்ணைத்
திருமணம் செய்துகொண்டார். இந்தச் செய்தியைக் கேட்டதும் அவருக்கு
எனது வாழ்த்துகளைக் குறுஞ்செய்தியாக அனுப்பினேன்"
( இசுலாம் இனிய மார்க்கம்- மறுமணம் செய்ய அனுமதி காரணமாக மனைவியின் அருமை தெரிவதில்லை)
என்றபோது அந்தத் தன்னம்பிக்கை மனுசியின் கண்களில் சில துளி கண்ணீர்.
முனிபா மஸாரிஇரண்டு ஆண்டு தீவிர சிகிச்சை, மூன்று பெரிய அறுவை சிகிச்சை, இரண்டு சிறிய அறுவை சிகிச்சைகளைத் தாண்டி, இன்றைக்குப் பலருக்குத் தன்னம்பிக்கை உதாரணமாக முனிபா இருக்கக் காரணம், அவரின் தாயார். அவர்தான் முனிபாவை ஊக்குவித்துக்கொண்டே இருந்தார். முனிபாவால் இனி நடக்கவே முடியாது, குழந்தையும் பெற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லிவிட, அவருக்குக் கால்களாகச் செயல்பட்டவர் தாயார்தான்.
தண்டுவடத்தில் ஏற்பட்ட பிரச்னையால் தான் தாயாக முடியாது என்று மருத்துவர்கள் கூறியதுதான் முனிபாவின் மிகப்பெரிய கவலை. 'இந்த உலகில் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோர் இல்லாமல் இருக்கிறார்களே. அவர்களில் ஒரு பிள்ளை என்னை அம்மா என்று அழைக்கலாமே' என்று நினைத்தார். ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவுசெய்து அதற்கான பதிவுகளையும் செய்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து அவருக்கு அழைப்பு வந்தது. 'பாகிஸ்தானில் பிறந்து இரண்டே நாள்களான ஆண் குழந்தை ஒன்றுள்ளது. நீங்கள் விரும்பினால் அந்தப் பிள்ளையைத் தத்தெடுக்கலாம்' என்றார்கள். உடனடியாகச் சம்மதம் தெரிவித்து அந்தக் குழந்தையைத் தத்தெடுத்தார் முனிபா. எல்லா வசதிகளும் உள்ளவர்களே தத்தெடுப்புக்குத் தயங்கும்போது, உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சிக்கல்களை எதிர்கொள்ளும் முனிபா, ஒரு குழந்தையைத் தத்தெடுத்தது அவரின் தன்னம்பிக்கைக்கும் தாய்மை உணர்வுக்கும் சிறந்த உதாரணம்.
இன்று, 'முனிபாஸ் கேன்வாஸ் - உங்கள் சுவர்கள் வண்ணங்களை உடுத்தட்டும்' (Muniba's Canvas - Let your wall wear colors) என்கிற அறிவிப்புடன் இணையதளத்தில் அவருடைய ஓவியங்கள் விற்பனையில் சாதனை படைக்கின்றன. பல கண்காட்சிகளில் இவரின் ஓவியங்கள் விற்றுத் தீர்கின்றன. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில முன்னாள் ஆளுநர் சல்மான் தசீர், முனிபாவின் ஆரம்ப காலத்து ஓவியங்கள் அனைத்தையும் வாங்கிக்கொண்டார்.
உணவுச் சுகாதாரம், ஏழை மாணவர்களின் ஆரோக்கியம், கல்வி, பெண்களின் சுதந்திரம், மாடலிங், டிவி ஆங்கரிங், பாடகர் எனப் பல துறைகளில் கால் பதித்துள்ளார் முனிபா மஸாரி. ஐக்கிய நாடுகளின் அமைப்பு, 2015- ம் ஆண்டு அதிகாரம் மற்றும் பாலின சமத்துவத்துக்கான நல்லெண்ணத் தூதராக முனிபாவை நியமித்தது. 2015-ம் ஆண்டு பிபிசி வெளியிட்ட சிறந்த 100 பெண்கள் பட்டியலில் முனிபா மஸாரி இடம்பிடித்தார். போர்ப்ஸ் பத்திரிகையின் '30 அன்டர் 30' என்ற பட்டியலில் 2016-ம் ஆண்டு மீடியா மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் இடம்பிடித்தார்.
உலகப் பெண்களுக்கு உதாரணமாக வலம்வருகிறார் முனிபா மஸாரி!இவா் பாக்கிஸ்தான் என்ற அரேபிய மத அடிமைகளின் நாட்டைச் சோ்ந்தவா்.
நம் தாய்யை தினமும் மண்டியிட்டு வணங்க வேண்டாம் மரியாதை கொடுத்து வந்தாலே போதும்
சாதாரணமாக பெண்ணின் பிறப்புறுப்பு 3 1/2 இஞ்ச் அளவு தான் இருக்கும் குழந்தையை பிரசவிக்கும் அந்த கணத்தில் குழந்தையின் தலையின் சுற்றளவு கிட்டத்தட்ட 15 இஞ்ச் ( 38cm) இருக்கும் அப்படி என்றால் பிறப்பு உறுப்பு 5 மடங்கு விரிந்தாக வேண்டும் வெறும் சதை மட்டும் விரிவது கிடையாது இரண்டு இடுப்பு எலும்புகளும் பல இஞ்சுகள் விலகினால் தான் குழந்தையின் தலையும் மார்பும் வெளியே வர முடியும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் இடுப்பின் இரண்டு எலும்புகளை விலக்கி கொண்டு குழந்தை வெளியே வரும் போது எவ்வளவு கொடூரமான வலி வரும் என்று குழந்தையின் தலை பிக்ஸ் ஆகி கொஞ்சம் கொஞ்சமாக எலும்புகள் விலக விலக வலி கூடிக்கொண்டே போகும் குழந்தை பிறக்கும் வரை வலி அதிகரித்து கொண்டே தான் இருக்கும்.
இந்த நேரத்தில் வலி ஊசி போடவே கூடாது போட்டால் பிரசவத்தில் தடை ஏற்பட்டு வயிற்றில் இருக்கும் குழந்தை மூச்சு திணறி இறந்து போகும். அந்த காலத்தில் இந்த வலியின் கொடுமை தாங்க முடியாமலே பெயின் ஷாக் வந்து இறந்து போன பெண்களின் எண்ணிக்கை அதிகம்.
அடுத்தது #
20 வருடங்களுக்கு முன் ஜன்னி பற்றி தெரியாத பெண்களும் ஆண்களும் கிடையாது.பிரசவ காலத்தில் சரியான தடுப்பூசி போடாமல் இருந்து பிரசவத்தின் போது தொப்புள் கொடியை அறுக்க சாதாரண கத்தியை கொண்டு அறுத்து அகற்றுவார்கள், அதனால் இன்ஃபன்ஷன் ஆகி டெட்டனஸ் எனும் இரண ஜன்னி வந்து செத்துப் போவார்கள் குழந்தையோ அல்லது தாயோ எனக்கு தெரிந்து கடந்த 20 வருடங்களில் ஒரு பெண்ணோ,குழந்தையோ ஜன்னி வந்து செத்ததாக கேள்விப்படவே இல்லை.
கடைசியாக, குழந்தை தாயின் கருப்பையிலிருந்து வெளி வருவதை முடிவு செய்வது மருத்துவரோ தாயோ அல்ல.
அது இறைவனின் முடிவு...
உங்களை வாரிசாக தந்த தாயையும் உங்களுக்கு வாரிசை தந்த மனைவியையும் ஒரு நாளும் மனதளவில் நோகடிச்சிறாதீங்க....❤
மதம், மொழி, மாநிலங்களை தாண்டி நிகழ்ந்த இந்து திருமணம்... கேரளாவை திரும்பி பார்க்க வைத்த தமிழ்ப் பெண்!
கேரளாவில் சமீபத்தில் ஒரு திருமணம் நடந்தது. கவிதா என்ற மணமகளுக்கு தந்தை ஸ்தானத்திலிருந்து ரசாக் என்பவர் முன்னின்று அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த இடத்தில், ரசாக்குக்கு கவிதா என்ற பெயரில் மகளா என்கிற கேள்வி எழுகிறது அல்லவா... இதற்கு விடை கிடைக்கவேண்டுமென்றால் 14 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்திலுள்ள த்ருப்ரயார் நகரை சேர்ந்தவர் ரசாக். விமானப்படையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு த்ருப்ரையாரில் சாலையில் அழுக்கு உடைகளுடன் திரிந்த கவிதா என்ற 8 வயது சிறுமியை ரசாக் மீட்டு வீட்டுக்கு கொண்டு வந்தார். ஏற்கெனவே ரசாக்குக்கு 3 மகள்கள் இருந்த நிலையில், கவிதாவையும் நான்காவது மகளாக ஏற்றுக் கொண்டு ரசாக் மற்றும் அவரின் மனைவி நூர்ஜகான் வளர்க்கத் தொடங்கினர்.
கேப்டன் பிரபாகரன் படத்தில் பிரபாகரன் என்ற பெயரிலேயே விஜயகாந்த் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் வளர்வார். அதே போலவே, ரசாக் வீட்டில் கவிதாவும் கவிதாவாகவே வளர்க்கப்பட்டார். ஒரு கட்டத்தில் கவிதாவின் பெற்றோரையும் ரசாக் கண்டுபிடித்து விட்டார். கவிதாவின் பெற்றோர் சேலத்தில் வசித்து வந்தனர். தொடர்ந்து, கவிதாவின் பெற்றோரும் ஆண்டுக்கு ஒரு முறை த்ருப்ரையார் சென்று மகளை பார்த்து வருவார்கள். தன் சொந்த ஊரான சேலத்துக்கும் கவிதா வந்து பெற்றோரை பார்த்து செல்வதும் உண்டு.ஆனாலும், கவிதாவை ரசாக்கின் குடும்பத்திடமிருந்து பிரிக்க அவரின் பயலாஜிக்கல் பெற்றோர் விரும்பில்லை. தன் மகள் ரசாக் வீட்டிலேயே நல்லபடியாக வாழட்டும் என்று முடிவு செய்து கொண்டார்கள்.
இந்த நிலையில், திருமண வயதை எட்டிய வளர்ப்பு மகளான கவிதாவுக்கு ரசாக் வரன் பார்க்க தொடங்கினார். நட்டிகா என்ற பகுதியை சேர்ந்த போட்டோ கிராபர் ஸ்ரீஜித்தை தன் மகள் கவிதாவுக்கு நிச்சயமும் செய்தார்.
ஸ்ரீஜித் அலங்கார மீன் பண்ணையும் நடத்தி வந்தார். கடந்த டிசம்பர் 6 -ஆம் தேதி ரசாக்கின் வீட்டில் வைத்தே னமுற்றிலும் இந்து முறைப்படி கவிதா - ஸ்ரீஜித் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருமணத்தில் கவிதாவின் பயலாஜிக்கல் பெற்றோர் இரு சகோதரிகளும் மன மகிழ்வுடன் திருமணத்தில் பங்கேற்றனர்.
கவிதாவுக்கு தன் வீட்டை ஒட்டியுள்ள 4 சென்ட் நிலத்தை ராசக் திருமணப் பரிசாக எழுதி வைத்தார். இந்த திருமணத்தில் கலந்து கொண்ட ரசாக்கின் மகள்கள் 12 பவுன் நகைகளை தங்கள் சகோதரிக்கு பரிசாக வழங்கி வாழ்த்தினர். மதம், மொழி, மாநிலங்களை தாண்டி நபெற்ற இந்த திருமணம்தான் தற்போது கேரளத்தின் ஹாட் டாபிக். கேரளாவில் திருமணம் நடைபெற்று 10 நாள்கள் ஆகி விட்டாலும், தற்போதும் கவிதாவின் திருமணப் புகைப்படங்களை இணையத்தில் பலரும் பரப்பி வருகின்றனர்.
Post a Comment