Followers

Thursday, December 24, 2020

இந்துத்வாக்கள் இந்த சம்பவத்தை நினைவு கூறட்டும்!

முஸ்லிம்களை கொன்று குவிக்க தினமும் திட்டமிடும் இந்துத்வாக்கள் இந்த சம்பவத்தை நினைவு கூறட்டும்!


 தமிழகத்தை சேர்ந்த ஆதி முத்துவும், கேரளாவை சேர்ந்த அப்துல் வாஜிதும் குவைத்தில் ஒரே கம்பெனியில் பணியாற்றினர்.


அப்துல் வாஜிதை ஆதி முத்து கொலை செய்து விட்டார்.


இதனால் ஆதி முத்துவுக்கு குவைத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.


இஸ்லாமிய சட்டப்படி மரண தண்டனையிலிருந்து ஒருவரை காக்க வேண்டுமென்றால் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னித்தால் மரண தண்டனையிலிருந்து விடுவிக்க முடியும்.


இதன் அடிப்படையில் அப்துல் வாஜித் குடும்பத்தினருடன் ஆதி முத்து குடும்பத்தினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட விரும்பினர்.


இதனால் ஆதி முத்துவின் மனைவி மாலதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் உதவியை நாடினார்.


மாலதி தமது மகளுக்கு 15 வயது ஆவதாகவும், தம்முடைய குடும்பத்தை காப்பாற்ற தம்முடைய கணவர் விடுதலை பெற வேண்டும் என்றும் கண்ணீரோடு கூறினார்.


நிர்கதியாக நிற்கும் மாலதி, 15 வயது மகளின் வாழ்வு ஆகியவற்றை மனிதாபிமான அடிப்படையில் கவனத்தில் கொண்ட காதர் மொகிதீன் மாலதிக்கு  உதவும் பொருட்டு கேரளா மாநில முஸ்லிம் லீக்கை நாடினார்.


அப்துல் வாஜித் குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆதி முத்துவின் குடும்ப சூழலை விளக்கப்பட்டது. இஸ்லாத்தின்படி மரண தண்டனை கொடுப்பதற்கும் அனுமதி உள்ளது, மன்னிப்பது அதை விட சிறந்தது என்ற குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டப்பட்டது.


அப்துல் வாஜித் குடும்பத்தினர் மிகவும் ஏழ்மையான நிலையில் அப்துல் வாஜிதை பறிகொடுத்துள்ளதால் ஆதி முத்துவை மன்னிக்க ரூ. 30 லட்சம்  இழப்பீடு கோரினர்.  


ஆதி முத்துவின் குடும்பத்தினரும் ஏழ்மை நிலையில் உள்ளதால் அவர்களால் இந்த தொகையை கொடுக்க முடியவில்லை. 


என்ன செய்வதென்று பார்த்த முஸ்லிம் லீக்கினர் தாங்களே ரூ 30 லட்சத்தை திரட்டி இப்பிரச்சினைக்கு முடிவு கண்டுள்ளனர்.


கொலை செய்தவர் இந்து. கொல்லப்பட்டவர் முஸ்லிம். அப்படியிருந்தும் அப்துல் வாஜித் குடும்பத்தினர் மன்னித்தனர். இந்துவுக்கு மனிதாபிமான அடிப்படையில் ரூ 30 லட்சம் நிதி திரட்டி உதவி செய்தது முஸ்லிம் அமைப்பு.


இதுதான் இஸ்லாம் கற்றுத்தந்த வாழ்வியல் முறை..! எல்லாப் புகழும் ஏக இறைவன் ஒருவனுக்கே..!


நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன், அடிமைக்காக (கொலை செய்த) அடிமை, பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப் பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் (நஷ்ட ஈடு) அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

அறிவுடையோரே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள்.

அல்குர்ஆன் 2:178, 179


படித்ததில் நெகிழ்ந்தது.

1 comment:

Dr.Anburaj said...

பொருளாதார நன்மை அடைந்தது அப்துல் லாஜித் குடும்பம்தான்.
உயிா் ஒன்று காப்பாற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை மலினபடுத்துதால் ஆகாது.
உத்தமமான காரியம்.

ஆனாலும் பல நல்ல காரியங்களை அனைவரும் செய்யத்தான் செய்கிறோம். அதற்குஊடே பல குளறுபடிகளையும் செய்கிறோம்.

இந்துக்களை மத வெறி புகட்டும் கருத்து அமைப்பு ஏதும் இல்லை. ஆனால் அரேபி ய இலக்கியங்கள் பிற நாகரீக மக்களை வெறுக்க கொல்ல தூண்டுகிறது என்பது உண்மை.