ஏமனிலிருந்து அகதியாக மலேசியாவிற்கு தனது தாயோடு வருகிறார் புகாரி. மிகவும் ஏழ்மையில் இருந்த அவர் காலணிகளை விற்கத் தொடங்குகிறார். சிறிது பணம் சேர்ந்தவுடன் தனது தாயாரிடம் கொண்டு கொடுக்கிறார். அவரது தாயோ 'புஹாரி... உனது வருமானத்தில் பாதியை ஏழைகளுக்கு கொடுத்து விடு' என்கிறார். புகாரியோ 'அம்மா... சிறிது காலம் கழித்து இன்னும் பணம் சேரட்டும். அப்போது கொடுக்கலாம்' என்கிறார்.
ஆனால் அவரது தாயாரோ 'புஹாரி... இது இறைவன் நமக்கு அளித்த கொடை. தாமதிக்காது பாதியை தர்மம் செய்து விடு' என்கிறார். தாயாரின் வார்த்தைக்கு மதிப்பளித்து தனக்கு கிடைக்கும் லாபத்தில் பாதியை தர்மமாக செலவிடுகிறார். தற்போது இவருக்கு வயது 52. மலேசியாவின் உயரிய விருதான டான்ஸ்ரீ பட்டத்தையும் பெற்று 70 பில்லியன் டாலருக்கு சொந்தக்காரராகவும் உள்ளார். மலேசிய பணக்காரர்களில் ஒருவராகவும் இடம் பிடித்துள்ளார். தர்மம் கொடுக்க கொடுக்க குறையாது. அது பல்கிப் பெருகும் என்பதற்கு புஹாரியின் வாழ்வு ஒரு உதாரணம்.
-----------------------------------------------
1 comment:
குறளட வழி நடந்த உத்தமார்களில் இவரும் ஒருவா்.வாழ்க.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை-திருக்குறள்.
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
குறள் விளக்கம்:
வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.
மேலே செல்ல
குறள்:222
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
குறள் விளக்கம்:
மற்றவரிடமிருந்து பொருளைப் பெறுதல் நல்லதாயினும் இரத்தல் தீது; மேலுலகம் இல்லை என்றாலும் பிறர்க்குக் கொடுப்பதே சிறந்தது.
மேலே செல்ல
குறள்:223
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள.
குறள் விளக்கம்:
யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடிப்பிறப்பு உடையவனிடம் உண்டு.
மேலே செல்ல
குறள்:224
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.
குறள் விளக்கம்:
பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.
மேலே செல்ல
குறள்:225
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
குறள் விளக்கம்:
தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப்பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.
மேலே செல்ல
குறள்:226
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
குறள் விளக்கம்:
வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.
மேலே செல்ல
குறள்:227
பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
குறள் விளக்கம்:
தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.
மேலே செல்ல
குறள்:228
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
குறள் விளக்கம்:
தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் சுயநலமிகள், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ?
மேலே செல்ல
குறள்:229
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
குறள் விளக்கம்:
பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.
மேலே செல்ல
குறள்:230
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.
குறள் விளக்கம்:
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.
Post a Comment