Followers

Wednesday, December 02, 2020

எளியவரின் நேர்மை

 #எளியவரின்_நேர்மை

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலை பிடிக்க ஒருவர் ஓடி வருகிறார் அந்த நேரத்தில் இடம் பிடிப்பதற்காக பையை ரயிலில் வீசிவிட்டு அவர் ரயிலின் சக்கரங்களில் சிக்கி மரணமடைந்து விடுகிறார்

அதே ரயிலில் அந்த‌பெட்டியில் ஏறிய பல்லாவரம் காதர் பாஷா அவர்கள் அந்த பையை பத்திரமாக எடுத்து அவரும் ஒரு முக்கிய வேலையாக திருச்சிக்கு சென்று விட்டு மறுபடியும் சென்னை வந்து அந்த பையை பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கின்றார் அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் நான்கு லட்ச ரூபாய் மதிப்புள்ள காசோலைகள் இருந்திருக்கின்றது அதை சம்பந்தப்பட்டவர்களிடம் உரிய முறையில் வரவழைத்து ஒப்படைத்திருக்கிறார்
அதன்பிறகு கொரனா காலத்தில்‌ முக்கியமான ஐடி கார்டுகள் மற்றும் 3 ஆயிரத்து 500 ரூபாய் பணத்துடன் ஒரு மணிபர்ஸ் அவருக்கு கிடைத்திருக்கின்றது அதையும் அவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரியவரிடம் சேர்த்து இருக்கின்றார்

மற்றொரு சம்பவத்தில் ஒரு பெண் முக்கியமான கல்வி சான்றிதழ்கள் மற்றும் தனது மகளின் சான்றிதழ்கள் ஆகியவற்றை விட்டுச் சென்றிருக்கிறார் அதையும் அவர் போலீசாரிடம் ஒப்படைத்து அவரை வரவழைத்து தந்துள்ளார்

மேலும் இதுபோன்ற பல்வேறு சேவைகள் கொரனா காலத்தில் மரணித்தவர்களை அடக்கம் செய்யும் சேவைகள் இன்னும் பல்வேறு சேவைகள் செய்ததை பாராட்டும் வகையில் தனியார் நிறுவனம் இவருக்கு கௌரவ சமூக சேவைக்கான டாக்டர் பட்டம் வழங்கியது அதை காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பெறும் காட்சியை நீங்கள் காண்கிறீர்கள்

இவர் மிகவும் வசதியான வரும் அல்ல சாதாரண ஆட்டோ டிரைவர் தான் பணத்தேவைகள் நிறைய உள்ளவர் தான் இருந்தாலும் இறைவனுக்கு அஞ்சி நேர்மையான முறையில் நடந்து கொண்டது. மிகவும் பாராட்டுக்குரியது



1 comment:

Dr.Anburaj said...

அவரை ஒரு முஸ்லீம் ஆக முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.சிறந்த பண்புகள் கொண்டவர்களை எல்லா சமூகத்திலும் காணலாம்.சிறந்த பண்புகள் முஸ்லீமகளின் ஏகபோக குத்தகை அல்ல.இதே காாியத்தை ஒரு இந்து செய்திருந்தால் அரேபிய அடிமை .... சு..ன் கண்டு கொள்ள மாட்டாா்.