Followers

Wednesday, December 02, 2020

ராவுத்தர் குமாரசாமி கோயில்

 ராவுத்தர் குமாரசாமி கோயில்


செய்நன்றி என்பது அரிதாகிப்போன இந்த உலகத்தில் நூற்றாண்டுகளுக்கு முன்பு செய்த உதவிக்காக, முஸ்லிம் மக்களுக்கு நன்றி சொல்லும் விதமாய் கோயில் கட்டி கும்பிட்டுவருகிறது கொங்குச் சமூகம்.

கொங்கு நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி வட்டத்தில் சிவகிரி அருகே இருக்கிறது காகம் என்ற கிராமம். இந்தக் கிராமத்தில் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தினர் இன்றளவும் வழிபட்டுவரும் தெய்வத்தின் பெயர் ராவுத்தர் குமாரசாமி. மசூதியா, கோயிலா என்று பிரச்சினை நடந்துவரும் நமது நாட்டில்தான் இப்படியோர் இணக்கத் தலம் காகம் கிராமத்தில் உள்ளது. எப்போதோ தங்களது மூதாதையர் பட்ட நன்றிக் கடனுக்காக இப்போதும் முஸ்லிம்களைத் தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள் கொங்குச் சமூகத்தினர்.

திருமுருகன்பூண்டி சிற்பங்கள், மருதமலை முருகன், திருமூர்த்திமலை சிவன் எனக் கொங்கு மண்டலத்தின் பெருமையை நினைவுகூரும் வகையில் பல ஆன்மிகத் தலங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம்விட ஒருபடி மேலாகத்தான் தெரிகிறது மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக விளங்கும் ராவுத்தர் குமாரசாமி கோயில்.

பொதுவாகத் தமிழகக் கோயில்களில் முக்கியமாகக் கருப்பையா, சுடலை மாடன், அய்யனார் போன்ற சிறு தெய்வக் கோயில்களில் வண்ணமயமான குதிரைகள் மீது தெய்வங்கள் காவலுக்குச் செல்லும் வகையிலான சிற்பங்கள் அமைந்திருக்கும். குதிரைகள் மீது அமர்ந்திருப்பது அய்யனார் உள்ளிட்ட தெய்வங்கள் மட்டுமே. ஆனால் காகம் என்னுமிடத்தில் அமைந்துள்ள ராவுத்தர் குமாரசாமி கோயிலில் உள்ள குதிரையின் மீது முஸ்லிம் ராவுத்தர் கத்தியை ஏந்தியவாறு அமர்ந்திருப்பது மத நல்லிணக்கத் தன்மையை வெளிப்படுத்துகிறது.

காகம் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயம், கொங்கு வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தின் கண்ணன் கூடத்தைச் சேர்ந்த ஒரு பகுதி. இந்தக் கோயிலில் சிறு சிறு தூண்களும் ஒரு கோபுரமும் விமானமும் இருக்கின்றன. நுழைவாயிலில் தொடங்கிக் கோயில் முழுவதும் ராவுத்தர்களின் சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோயிலில் கருவறையின் வாயிற்கதவு மீது லுங்கி உடுத்திய ராவுத்தர் சிலை ஒன்று புகைபிடிப்பது போல் உள்ளதைக் காண முடியும். கருவறையில் உள்ள குமாரசாமி சிலைக்கு அருகே ராவுத்தர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்க கோயிலில் துலுக்க நாச்சியார், ஐயப்பன் கோயிலில் வாவர் சாமி, மேலச்சூர் திரௌபதி அம்மன் கோயிலில் முத்தல ராவுத்தர் எனத் தொன்மை காலம் தொட்டே இந்துக் கடவுள் ஸ்தலங்களில் முஸ்லிம் காவல் தெய்வங்களைக் கொண்டாடும் கலாச்சாரம் உள்ளது.

தமிழ் முஸ்லிம்களான குதிரை வியாபாரம் செய்துவரும் ராவுத்தர்கள், கொங்கு வெள்ளாள கவுண்டர் சமுகத்தின் காவல் தெய்வமாக எப்படி ஆனார்கள் என்று காகம் கிராமத்திலேயே சில பெரியவர்களிடம் விசாரித்தோம்.

“முந்நூறு, நானூறு ஆண்டுகளுக்கும் முன்னாடி எங்க மூதாதையர் கூட்டம் அரவக்குறிச்சி பக்கத்துல இருக்குற கன்னிவாடியில வாழ்ந்துக்கிட்டிருந்தாங்க. இப்ப அது கரூர்ல இருக்குங்க. அப்ப அங்கே ஏதோ பெரிய சண்டை வந்து எங்க மூதாதையரெல்லாம் ஆபத்துல இருந்தாங்களாம். அங்க இருந்த முஸ்லிம் ராவுத்தர்களாம் சேர்ந்து எங்க மூதாதயர்களை உசுரைக் காப்பாத்தி வெளியூருக்கு அனுப்பி வெச்சாங்களாம். அப்போ கன்னிவாடியிலேர்ந்து கிளம்பினவங்க ஈரோடு பக்கம் சிவகிரி வந்து செட்டிலாயிட்டாங்க. உசிரைக் காப்பாத்தி வாழ்க்கை கொடுத்த நன்றிக் கடனுக்காகத்தான் இங்க குலதெய்வக் கோயிலோடயே ராவுத்தருக்கும் சிலை வெச்சிருக்காங்க.

எங்க மூதாதையர்களோட உசிரைக் காப்பாத்தினாலதான் இன்னிக்கும் நாங்க தலைமுறை தலைமுறையாக இங்க வாழ முடியுது. அப்படிப்பட்ட நல்ல காரியத்தை செஞ்ச ராவுத்தர்களுக்கு நாங்க நன்றி செலுத்தணும் இல்லீங்களா? அதனாலதான் பரம்பரை பரம்பரையா நானூறு, ஐந்நூறு வருசமா இந்த ராவுத்தர் வழிபாட்டை விட்டுடாம வெச்சிருக்கோமுங்க’’ என்று சொல்லி நம்மை ஆச்சரியப்படுத்தினார்கள்.

வெள்ளையம்மாள் காவியத்தில் கவிஞர் கண்ணாடி பெருமாள் இந்தத் தகவலை குறிப்பிட்டுள்ளார் என்பதையும் அவர்கள் பெருமையோடு நினைவுகூர்கிறார்கள்.

“15ஆம் நூற்றாண்டில் தமிழ் புலவர் அருணகிரி நாதர் முருகனை ராவுத்தர் முருகன் என்று வர்ணிக்கிறார். ராவுத்தராக மாறிய முருகன் சுறா என்ற அசுரரைக் கொன்றதாகக் கூறப்படுகிறது, அசுரரைக் கொன்ற ராவுத்தர் என்றும் அழைக்கப்படுகிறார். அதன் பின்னர் அவர் மயில் ஏறிச் செல்வதால் மாமயிலேறும் ராவுத்தர் என்றும் அழைக்கப்படுகிறார்.

கண்ணன் கூட்டத்தினர் முருகனை அபிஷேக மூர்த்தி என்று அழைக்கின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவருக்காகப் பாரம்பரிய முறையில் கோயில் கட்டப்பட்டது. கோயில் கட்டுவதற்கு முன்பு ராவுத்தர் குமாரசாமி ஒரு கூரையின் அடியில் வைக்கப்பட்டிருந்தார். அங்கு வைக்கப்பட்ட ராவுத்தர் சிலைகள் வேங்கை மரத்தால் செதுக்கப்பட்டவை.. வேங்கை போர்க்குணம் மிக்க வன விலங்காகும். அபிஷேக மூர்த்தியின் கோபத்தைக் குளிர்விக்க வேண்டும் என்பது அவசியமாக இருந்தது. எனவே வேங்கை மரத்தால் சிலைகள் வடிவமைக்கப்பட்டன” என்று கண்ணன் கூட்டத்தைச் சேர்ந்தவரும் கோயிலின் பூசாரியுமான மகாலிங்கம் தெரிவித்தார்.

இந்தக் கோயிலின் வழிபாட்டு முறைகளைப் பற்றி விசாரித்தபோது மேலும் சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.

“திங்கட்கிழமை வெள்ளிக்கிழமைன்னு வாரத்துக்கு ரெண்டு நாள் பூசைங்க. அமாவாசையான பூசை விசேஷமா இருக்கும். மூணு வருசத்துக்கு ஒருமுறை திருவிழா வரும். அப்ப ராவுத்தருக்குப் பொங்க வெச்சு குறைஞ்சது 500 கிடா வெட்டுவோமுங்க. இப்பல்லாம் அப்பப்ப எங்க கூட்டத்துலேர்ந்து வெளியூர்ல செட்டிலானவங்க வந்து ஆடு வெட்டி பூசை நடத்திட்டும் போறாங்க’’ என்கிறார்கள் ஊர்க்காரர்கள்.

கோயில் சந்நிதியில் பொதுவாகப் பழங்களும் மலர்களும் மட்டுமே தெய்வங்களுக்குப் படைத்துவந்த நிலையில், ஆடு வெட்டி, மது வகைகளை வைத்துப் படைப்பது கிராமிய சிறுதெய்வ வழிபாட்டு முறையின் தாக்கமாகவே கருதப்படுகிறது.

காகம் கோயிலைப் பற்றி அலைபேசியில் விசாரித்த நம்மிடம், “ஈரோடு பக்கம் வந்தீங்கன்னா சொல்லுங்க. நாங்களே வந்து உங்களை அழைச்சு வர்றோம். நம்ம கோயிலுக்கு நீங்கள் வாரோணுமுங்க’’ என்று அன்பைக் கொட்டுகிறார்கள் கிராமத்தினர்.

ஒருமுறை விசாரித்ததற்கே இப்படி அன்புகாட்டும் இவர்கள், மூதாதையர்களின் உயிர்களைக் காப்பாற்றிய ராவுத்தர்களுக்குக் கோயில் கட்டிக் கும்பிடுவதில் ஆச்சரியம் இல்லைதான்.

இந்து ஆங்கில நாளிதழில் வந்த கட்டுரையை மொழி பெயர்த்தவர் ஃபைசல் பின் முஹம்மத்!

https://www.thehindu.com/society/history-and-culture/a-secular-temple-in-the-heart-of-kongu-nadu/article24103046.ece?fbclid=IwAR2K0d8qG82MNs6Dg7ZBRLKEfjdLnFKfM7OhDs-hmCfonIMvppCwGVKlQIs





3 comments:

Dr.Anburaj said...

தஜ்ஜால்...
உலகம் ஒருநாள் அழியும் என்று நம்புவது முஸ்லிமான அனைவரின் மீதும் கடமை என்பதை விட
யுக முடிவு நாளை நம்பினால் தான் அவர் முஸ்லிம் என கொள்ளலாம் .,நிற்க அத்தைகைய முடிவு நாள் பற்றி எண்ணற்ற வேத வரிகளும் ,தூதர் மொழிகளும் உள்ளன ., அந்நாளுக்கு முன்பாக ஏற்படக்கூடிய செயல் பாடுகள் பலவற்றை அண்ணல் அவர்கள் பட்டியலிட்டுள்ளார்கள். அவைகளை குறித்து இனி காண்போம்,.
தஜ்ஜால் கீழ்திசை நாடுகளில் ஒன்றிலிருந்து புறப்படுவான். வலக் கண்குருடாயிருக்கும். இரு கண்களுக்கிடையே காஃபிர் - இறைமறுப்பாளன் என்றுஎழுதப்பட்டிருக்கும்.தஜ்ஜால் என்பவன் மகா பொய்யன். இவன் உலக அழிவுக்குமுன் தோன்றுவான்.இவனுக்கு மஸீஹுத் தஜ்ஜால் என்று மற்றொரு பெயரும் உண்டு.தஜ்ஜால் தன்னை இறைவன் என்று சொல்லிக்கொள்வான். அவன் செய்து காட்டும் அற்புதங்களைக் கண்டு ஏமாந்து, மக்கள் பலர் அவன் வலையில் சிக்கிவிடுவார்கள். உலக நாடுகளையெல்லாம் சுற்றிவிட்டு, பைத்துல் முக்தஸை (ஜெருசலேம்) நோக்கி அவன் செல்லும்போது, இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்கள் வானிலிருந்து இறங்கி வந்து அவனைக் கொல்வார்கள்.
தஜ்ஜாலின் வருகையும், அவனது செயல்களும் ஈமானை இழக்கச் செய்யும் மிக ஆபத்தான விஷயம் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.
இறைவனால் அனுப்பி வைக்கப்பெற்ற எந்த ஓர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாரை பெரும் பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்துகொள்ளுங்கள்: அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். (ஆனால்,) நிச்சயமாக,உங்களுடைய இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனுடைய இரண்டு கண்களுக்கிடையே ‘காஃபிர்’ (இறை மறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 7131 அனஸ் (ரலி).
உக்பா இப்னு ஆமிர் (ரலி) ஹுதைஃபா (ரலி) அவர்களிடம், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டதை எங்களுக்கு அறிவிக்கமாட்டீர்களா?’ என்று கேட்டார். ஹுதைஃபா (ரலி), ‘தஜ்ஜால் வெளியே வரும்போது அவனுடன் தண்ணீரும் நெருப்பும் இருக்கும். மக்கள் எதை ‘இது நெருப்பு’ என்று கருதுகிறார்களோ அது (உண்மையில்) குளிர்ந்த நீராக இருக்கும். மக்கள் எதை ‘இது குளிர்ந்த நீர்’ என்று கருதுகிறார்களோ, அது (உண்மையில்) எரித்துக் கரித்துவிடும் நெருப்பாக இருக்கும். அவனை உங்களில் சந்திக்கிறவர், தான் நெருப்பாகக் கருதுவதில் விழட்டும். ஏனெனில், அது குளிர்ந்த சுவையான நீராகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள்.
புஹாரி : 3450
ரபிஉ பின் ஹிராஸ் (ரலி).
நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப் போகிறேன் வேறெந்த இறைத்தூதரும் அதைத் தன் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம் நகரம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் எதை சொர்க்கம் என்று கூறுகிறானோ அதுதான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்து தன் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3338 அபூஹுரைரா (ரலி).
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காப்பார்கள். பின்னர் மதீனா, தன் குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறைமறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றி விடுவான்!"
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். புஹாரி :1881
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஜ்ஜால் (மதீனாவை நோக்கி) வருவான்; மதீனாவின் வாசல்களில் நுழைவது அவனுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது; எனவே, (மதீனாவுக்கு வெளியே), மதீனாவின் உவர் நிலத்தில் அவன் தங்குவான்; அவனை நோக்கி மக்களில் சிறந்த ஒருவர் அன்று புறப்படுவார்; அவர் அவனிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அடையாளம்) சொல்லிய தஜ்ஜால் நீதான் என்று உறுதியாகக் கூறுகிறேன்!" என்பார். அப்போது தஜ்ஜால் (மக்களை நோக்கி), 'நான் இவனைக் கொன்று, பிறகு உயிர்ப்பித்தால் (என்) விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொள்வீர்களா?' என்று கேட்பான். மக்கள் 'கொள்ள மாட்டோம்!" என்பார்கள். உடனே, அவன் அவரைக் கொன்று, பின்னர் உயிர்ப்பிப்பான். அப்போது, அந்த நல்ல மனிதர் உயிர்ப்பிக்கப்பட்டதும், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இன்றைய தினத்தை விடத் தெளிவாக உன்னைப் பற்றி நான் (இதற்கு முன்) ஒருபோதும் அறிந்திருக்கவில்லை!" என்று கூறுவார். தஜ்ஜால் 'நான் இவரைக் கொல்வேன்!" என்பான். ஆனால், அவனால் அவரைக் கொல்ல முடியாது!"
என அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். தஜ்ஜால் பற்றி நபி(ஸல்) அவர்கள் நீண்ட விளக்கம் தரும்போது இதைக் கூறினார்கள் என்றும் அறிவித்தார். புஹாரி :1882

Dr.Anburaj said...

2
அவனை பற்றி சுருக்கமாய் ...
அவன் குழந்தை இல்லாத மலடன்.
ஒரு கண் ஊனமுற்று மற்றொரு கண் நிலைகுத்திய நிலையில் பச்சை நிறக் கண்ணாடி போன்று பார்வை உடையவன்.
குட்டையானவன், குண்டானவன்.
அதிக இடைவெளி உள்ள கால்களைக் கொண்டவன்.
மழை பொழிய வைப்பான்,
மலை போன்ற உணவுக்குவியல்களை வைத்திருப்பான்.
பிறவிக் குருடு மற்றும் வெண் குஷ்டம் போன்ற நோய்களை குணப்படுத்துவான்.
ஒரு இறைநம்பிக்கையாளரைக் கொன்றுவிட்டு மீண்டும் அவரை உயிர்ப்பிப்பான்.உயிர்ப்பித்த அவரை மறுமுறையும் அவனால் கொல்ல இயலாது.
மேயச் செல்லும் கால்நடைகளை ஒரே பகலில் கொழுக்க வைப்பான். பூமியில் புதையல் உள்ள இடங்களை அறிந்திருப்பான்.
தானே இறைவன் என வாதிட்டு மக்களை ஈமான் - நம்பிக்கை கொள்ளச்செய்வான்.
பைத்துல் முகத்தஸின் லுத்து எனும் நகரத்தின் தலைவாயிலருகே வைத்து நபி ஈஸா (அலை) அவர்கள் அவனைக் கொல்வார்கள்.
தஜ்ஜால் கொடுமை தலைவிரித்தாடும் போது தான் ஈஸா (அலை) இறங்குவார்கள்...
தஜ்ஜாலின் நிலை இவ்வாறு இருக்கும்போது மர்யமின் மகன் மஸீஹை அல்லாஹ் அனுப்புவான். டமாஸ்கஸ் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள வெள்ளை மினாரா (கோபுரம்) அருகில் அவர் இறங்குவார். இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது தம் கைகளை வைத்தவராக இறங்குவார். அவர் தலை குனிந்தால் தலையில் நீர் கொட்டும். தலையை உயர்த்தினால் முத்துப் போல் தண்ணீர் சிதறும்! அவரது மூச்சுக்காற்று அவரது பார்வை எட்டும் தூரம் வரை செல்லும். அவரது மூச்சுக்காற்று படுகின்ற எந்த காஃபிரும் சாகாமல் இருப்பதில்லை. பின்னர் தஜ்ஜாலைத் தேடுவார்கள். லுத்' (பைத்துல் முகத்தஸின் அருகிலுள்ள ஊர்) எனும் வாசலில் வைத்து அவனைக் கொல்வார்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன்(ரலி),
நூல்: திர்மிதீ
ஒவ்வொரு தொழுகையிலும் தஜ்ஜாலிடமிருந்து பாதுகாப்புபெற வேண்டிய பிரார்த்தனைகளயும் நபி (ஸல்) அவர்கள் நமக்குக்கற்றுத்தந்திருக்கிறார்கள்...
''உங்களில் ஒருவர் தமது (தொழுகையில்) இரண்டாவது அமர்வை முடிக்கும்போது
''அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக்க மின் அதாபில் கப்ரி, வ அவூதுபிக்க மின் ஃபித்னதில் மஸீஹுத் தஜ்ஜாலி, வ அவூதுபிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாதி, அல்லஹும்ம இன்னீ அவூதுபிக்க மினல் மஃஸமி வல் மஃஹ்ரமி'' என்ற துஆவைநபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் ஓதுபராக இருந்தார்கள். (முஸ்லிம் 1030)
பொருள்: இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன், தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழ்வு, மரணம் ஆகியவற்றின் சோதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! பாவங்கள் புரிவது, கடன் தொல்லை ஆகியவற்றை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.
தஜ்ஜாலின் அனைத்துத் தீங்குகளிலிருந்தும் இறைவன் பாதுகாப்பானாக.

Dr.Anburaj said...


தஜ்லால்என்பது கட்டுக்தை.

அரேபிய மன நோயாளிகளின் கற்பனை.