Followers

Wednesday, June 30, 2021

மேல் சாதி இளைஞனை காதலித்ததால் 5 தலித்கள் கொலை!

 

மேல் சாதி இளைஞனை காதலித்ததால் 5 தலித்கள் கொலை!

 

பிஜேபி ஆளும் மத்திய பிரதேசத்தில் தலித்களுக்கு நியாயம் கிடைக்குமா?

 

மத்திய பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த எலும்புக்கூடுகள் மே 13 முதல் காணாமல் போன ஒரு பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்தவை என்று போலீசார் தெரிவித்தனர். சடலங்கள் 8 முதல் 10 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டன. அவர்களின் ஆடைகள் அகற்றப்பட்டு யூரியா மற்றும் உப்பு கூட சேர்க்கப்பட்டன. இறந்த உடலைச் சுற்றி வெற்று பாக்கெட் உப்பு காணப்பட்டது.

 

ஆதாரங்களின்படி, இந்த குடும்பத்தைச் சேர்ந்த 21 வயது மகள் கிராமத்திலிருந்த தாக்கூர் மேல் சாதி இளைஞரை காதலித்துள்ளார்.  சில நாட்களுக்குப் பிறகு திருமணம் செய்து கொள்ளவிருந்தார். சிறுமி அவனை திருமணத்திற்கு அழுத்தம் கொடுத்தாள்.  தாக்கூர் சாதியினர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களின் காதலை பிரிக்க குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கொன்று தங்களின் பண்ணை வீட்டின் பின்புறம் புதைத்துள்ளனர்.

 

இறந்தவர்கள் மம்தா பாய், கணவர் மோகன்லால் கஸ்தே (45), மகள்கள் ரூபாலி (21), திவ்யா (14) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். நேமாவாரில் வசிப்பவர்கள். மேலும், இரண்டு சடலங்கள் பூஜாவின் தந்தை ரவி ஓஸ்வால் காஸ்ட் (15) மற்றும் மம்தாவின் தங்கையின் குழந்தையான பவன் ரவி ஓஸ்வால் கஸ்தே (14) ஆகியோரின் உடல்கள். மே 13 இரவு முதல் அவர்கள் அனைவரும் தகவல் தெரிவிக்காமல் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தனர். செவ்வாய்க்கிழமை, மேலா சாலையில் உள்ள சுரேந்திர தாகூரின் பண்ணையில் இருந்து அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

 

இந்த விவகாரத்தில் இன்னும் பலவற்றை வெளியிட போலீசார் மறுத்து வருகின்றனர். ஆனால் பிரதான குற்றம் சாட்டப்பட்டவர் காவல்துறையின் காவலில் இருப்பதாக நம்பப்படுகிறது, மேலும் அவர் இந்த சம்பவம் குறித்த உண்மையை பரப்பிய பின்னரே, இந்த இறந்த உடல்களை காவல்துறையினரால் அடைய முடிந்தது.

 

தகவல் உதவி

தலித் வாய்ஸ்

30-06-2021

 

மனிதர்களே! உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

(அல்குர்ஆன் 49:13)

மனித இனம் அனைவரும் ஆதம், ஹவ்வா என்ற ஒரே ஜோடியிலிருந்து தான் படைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மத்தியில் இனம், நிறம், நாடு, மொழி, கலாச்சார அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது என்று திருக்குர்ஆன் பிரகடனம் செய்கின்றது.

ஒரு மனிதனுக்கு மரியாதை, அந்தஸ்து, தகுதி அனைத்தும் அவன் தன்னைப் படைத்த இறைவனை எந்த அளவுக்கு அஞ்சுகின்றானோ அதைப் பொறுத்து தான். பிறப்பால், பணத்தால், நிறத்தால், இனத்தால் உயர்வு, தாழ்வு ஏற்படுவதில்லை என்று திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.

"உங்களுக்கு முன் சென்றவர்கள் தங்களில் உயர்ந்தவர் திருடினால் அவரை விட்டு விடுவார்கள். பலவீனர் திருடினால் அவருக்குத் தண்டனையை நிறைவேற்றுவார்கள். அதனால் தான் அவர்கள் நாசமாயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நான் வெட்டுவேன்என்று பிரகடனம் செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 3475







 

Tuesday, June 29, 2021

எனக்கு 29 வயதாகிறது

 

'எனக்கு 29 வயதாகிறது. இஸ்லாமிய மதத்தின் கொள்கைகளால் கவரப்பட்டு 2012 ல் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறினேன். 2014 ல் ஒரு இஸ்லாமியரை மணமுடித்தேன். நான் மதம் மாறிய விபரத்தையும் திருமணம் முடித்த விபரத்தையும் வீட்டில் சொல்லி விட்டு வெளியேறி விட்டேன். தற்போது எனது கணவரை கைது செய்துள்ளார்கள்.'

 

'நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் காவல் துறை என்னை எனது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் என்னை ஜம்முவுக்கு அழைத்துச் சென்றனர். பிறகு அங்கிருந்து பஞ்சாபுக்கு என்னை கொண்டு சென்றனர். பல இந்து அமைப்புகள் வந்து என்னை மன மாற்றம் அடைய முயற்சிக்கின்றன. நான் அவர்களிடம் 'நான் சிறு குழந்தை அல்ல. 29 வயதாகிறது. இஸ்லாமிய மார்க்கம் பிடித்திருந்ததால்தான் மாறியுள்ளேன். யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை' என்றும் பல முறை சொல்லி விட்டேன். '

 

'ஆனால் எனது கணவருக்கு எதிராக சாட்சி சொல்லிம்படியும் கட்டாயமாக மத மாற்றம் செய்யப்பட்டதாக சொல்ல வேண்டும் என்றும் வற்புறுத்தப்படுகிறேன்'

 

விரும்பி ஒரு மார்க்கத்தை ஏற்றதால் அந்த பெண் படும் துன்பம் கொஞ்சநஞ்சமல்ல.

 

- இஸ்லாமிய தாய் தந்தையருக்கு பிறந்து விட்டதால் எங்களுக்கெல்லாம் இஸ்லாம் சுலபமாக கிடைத்து விட்டது. இது போன்று விளங்கி இஸ்லாத்தை ஏற்பவர்களுக்கு ஒவ்வொரு நாளும் கடினமாக கழிகிறது. சொந்த வீட்டில் எதிர்ப்பு, அரசு மிரட்டல், இந்துத்வாவாதிகளின் மிரட்டல் என்று அவர்கள் தினம் தினம் செத்து பிழைக்கின்றனர். எங்களை எல்லாம் விட புதிதாக விளங்கி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இறைவன் மிகச் சிறந்த அந்தஸ்தை வழங்குவான்.




 

 

 

Monday, June 28, 2021

எவ்வளவு தூரம் எதிர்க்கிறார்களோ அவ்வளவு எளிதில் இஸ்லாம் பற்றிக் கொள்ளும்!

 



கடந்த சில நாட்களில், பிரிட்டன் சமூக வலைத்தள வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்ட செய்திகளில் ஒன்றாக பின்வரும் சம்பவம் இருப்பதாக குறிப்பிடுகிறது இங்கிலாந்தின் அதிகம் விற்பனையாகும் பத்திரிக்கையான மெட்ரோ.

 

"நள்ளிரவுகளில் என் தந்தையிடம் இருந்து குறுந்தகவல்கள் வரும். சிரியா, ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது என்று பார்த்தாயா என அதில் கேட்டிருப்பார். முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வும் அவரிடம் அதிகரித்திருந்தது" என்று கூறும் 28 வயதான பைத் அபே, ஒன்பது வருடங்களுக்கு முன்பு இஸ்லாமை தழுவியவர்.

தற்போது அமீரா என அறியப்படும் அபே-வின் மனமாற்றத்தை அவருடைய தாய் ஏற்றுக்கொண்டாலும் தந்தை தீவிரமாக எதிர்த்தார். நாளடைவில் இங்கிலாந்தின் தீவிர வலதுசாரி அமைப்பான EDL-லில் (English Defense League) இணைந்தார் அமீராவின் தந்தை. இஸ்லாம் மீதான வெறுப்புணர்வு பொறுக்க முடியாத நிலைக்கு செல்ல, தான் மிகுந்த அன்பு வைத்திருந்த தந்தையை விட்டு விலகினார் சகோதரி அமீரா.

 

கடந்த ஐந்து வருடங்களாக எவ்விதமான தொடர்பும் இல்லை. தன் தந்தையுடன் அமீரா பேச முயற்சித்த தருணங்கள் தோல்வியிலேயே முடிந்தன. சில வாரங்களுக்கு முன்பாக தந்தையிடம் இருந்து இமெயில். அமீராவை சந்திக்க விரும்புவதாக அதில் தெரிவித்திருந்தார். சந்திப்பின் போது தன் தந்தையிடம் மிகப்பெரிய மாற்றத்தை கண்டார் அமீரா.

 

இத்தனை வருடங்களாக தான் கேட்டு வந்த பிரார்த்தனைக்கு பலன் கிடைத்தது. இஸ்லாம் குறித்து தனக்கு போதிக்கப்பட்டவை தவறு என்பதை உணர்ந்துக்கொண்டதாகவும், தன் கடின காலங்களில் முஸ்லிம்கள் தனக்கு உறுதுணையாக இருந்ததாகவும், EDL அமைப்பில் இருந்து விலகி விட்டதாகவும் தந்தை தெரிவிக்க அமீரா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தன் வாழ்நாளின் சிறந்த நாட்களில் இதுவும் ஒன்று என வர்ணித்திருக்கிறார் சகோதரி அமீரா.

இந்த நெகிழ்ச்சியான ஒன்றுகூடல் நிகழ்வு குறித்து அமீரா சமூக வலைத்தளங்களில் பதிய, செய்தி வைரலானது.

 

வாழ்த்துக்கள் குவிந்தன. இறைவன், அமீராவிற்கு மூன்று பெண் குழந்தைகளை கொடுத்து அருள் செய்திருக்கிறான். இதில் மூத்தவர், தன் ஏழு வயதில் குர்ஆனை மனனம் செய்தவராவார். அமீராவின் சகோதரர் மற்றும் அவருடைய மனைவியும் இஸ்லாமை தழுவியிருக்கின்றனர்.

 

படம் 1: ஒன்றுகூடலின் போது தன் தந்தையுடன் அமீரா எடுத்துக்கொண்ட படம். இருவரின் முகத்தையும் அமீரா மறைத்திருக்கிறார்.

படம் 2: தன் சகோதரர், அவருடைய மனைவி மற்றும் பாட்டியுடன் அமீரா (இடது ஓரம் முகத்திரை அணிந்திருப்பவர்).

 

செய்திக்கான ஆதாரங்கள்:

1. Metro. பார்க்க இங்கே https://bit.ly/3y1xZg4

2. சகோ.அமீராவின் இன்ஸ்டாக்ராம் பக்கம். பார்க்க இங்கே https://bit.ly/3x6YS1W

 


 

அர்த்தமுள்ள இந்து மதம்....

 அர்த்தமுள்ள இந்து மதம்....

அர்ஜூன் சம்பத் 'ஐயோ பாவம்'



மலையாளிகளின் மன இறுக்கத்தைப் போக்கும் நம் இசையமைப்பாளர்கள்!

 

மலையாளிகளின் மன இறுக்கத்தைப் போக்கும் நம் இசையமைப்பாளர்கள்!

 

நான் பணிபுரியும் கம்பெனியில் சேல்ஸ் செக்ஷன் தனியாகவும் அலுவலகம் தனியாகவும்  அமைக்கப்பட்டிருக்கும்.. இரண்டுக்கும் இடையில் ஒரு மரக்கதவு.

 

நான் மும்முரமாக அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று சேல்ஸில் உள்ள மலையாளி அலுவலகத்தில்  புகுந்து கதவை சாத்திக் கொண்டு அருமையாக  'அடி என்னடி ராக்கம்மா  பல்லாக்கு' 'சொடக்கு மேலே சொடக்கு' என்ற பாடல்களை பாடிக் கொண்டு குத்தாட்டம் போட்டு விட்டு செல்வார்.

 

'என்ன.... திடீர் திடீரென்று அதிர்ச்சி கொடுக்கிறீர்கள்?' என்றால் 'என்ன செய்வது நஜீர் பாய்! கஸ்டமர் டென்ஷன், நமது நாட்டு அரசியல் டென்ஷன், வீட்டு டென்ஷன், கொரோனாவால் இரண்டு வருடமாக ஊருக்கு போகாத டென்ஷன் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து ஏக டென்ஷன். இது போல் ஜாலியாக ஒரு குத்தாட்டம் போட்டால் கொஞ்சம் டென்ஷன் குறைகிறது' என்கிறார்.

 

'ஐந்து வேளை தொழுகையில் நமக்கு தேவையான நிவாரணி இருக்கிறதே' என்றேன்.

 

'ஐந்து வேளையும் தொழுகிறேன். இடையிடையே இந்த குத்தாட்டமும்' என்கிறார் சிரித்துக் கொண்டே...

 

ஆகவே விஸ்வநாதனும், இளையராஜாவும், ரஹ்மானும் பலரது மன இறுக்கங்களை குறைத்து வருகிறார்கள் ஒரு மருத்துவரைப் போல... :-)

 

என்னதான் வெளியில் ஜாலியாக சுற்றித் திரிந்தாலும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சிறியதாக சோகம் இழையோடிக் கொண்டுதான் இருக்கிறது. எந்த நேரமும் சந்தோஷமாகவே இருந்தாலும் வாழ்க்கை சுகிக்காது அல்லவா!