Followers

Monday, August 23, 2021

செசன்யா - ஷாலி

 

செசன்யா - ஷாலி

 

புதிதாக திறக்கப்பட்ட பள்ளிவாசல். 20000 பேர் ஒரே நேரத்தில் தொழ முடியும். ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. 63 மீட்டர் நீளமுள்ள நான்கு மினாராக்கள். 200 விருந்தினர் நாற்பது நாடுகளிலிருந்து வருகை புரிந்து திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

 

ஒரு காலத்தில் கம்யூனிஷ சித்தாந்தத்தை புகுத்த எண்ணி ரஷ்யா செசன்யாவில் போர் தொடுத்தது. அங்குள்ள மக்களின் தீவிர எதிர்ப்பால் தனது படைகளை திருப்பிக் கொண்டது. இதற்கு முன்னால் ஆப்கானிஸ்தானத்திலும் இவ்வாறு மூக்கை நுழைத்து பிறகு தோல்வி கண்டு பின் வாங்கியது. தற்போது அமெரிக்காவும் தாலிபான்களிடம் 20 வருடம் போராடி தோல்வி கண்டு 'எங்கள் வீரர்களை ஒன்றும் செய்யாமல் உயிரோடு விட்டு விடுங்கள்' என்று கெஞ்சும் அளவுக்கு நிலைமை போனது.

 

ஐரோப்பாவில் புதிதாக ஒரு முஸ்லிம் நாடு உருவாவதை ஒருக்காலும் அனுமதிக்க மாட்டோம் என்று போஸ்னியாவோடு போர் தொடுத்தனர் பாஸிஸ்டுகள். அத்தனை இன்னல்களையும் தாங்கிக் கொண்ட அந்த மக்கள்  இஸ்லாமிய நடவடிக்கைகளை சிறிதும் குறைத்துக் கொள்ளவில்லை. அங்கும் பாசிசவாதிகளுக்கு தோல்விதான்.

 

இதெல்லாம் எப்படி சாத்தியப்படுகிறது? அமெரிக்காவும், ரஷ்யாவும் உலக வல்லரசுகள். அவர்களிடம் கணக்கின்றி நவீன ஆயுதங்கள் உள்ளது. தாலிபான்களோ காய்ந்த ரொட்டித் துண்டுகளை சாப்பிட்டுக் கொண்டு வாழ்வை ஓட்டுபவர்கள். எவ்வாறு வெல்ல முடிந்தது. 'நம்மோடு இறைவன் இருக்கிறான்' என்ற நம்பிக்கையே அவர்களுக்கு இன்று வெற்றியை கொடுத்துள்ளது.

 

நமது இந்தியாவிலும் முஸ்லிம்களை பொருளாதார ரீதியாக முடக்கி விட்டால் அவர்களை இந்துத்வா கொள்கைக்குள் கொண்டு வந்து விடலாம் 'ஜெய் ஸ்ரீராம்' சொல்ல வைத்து விடலாம என்று மனப்பால் குடித்துக் கொண்டுள்ளனர். இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் எங்கள் சொத்து சுகங்களை இழந்தாலும் 'இறைவன் ஒருவனே... நபிகள் நாயகம் அவனின் தூதர்' என்ற எங்களின் எண்ணத்தில் ஒரு சிறு மாற்றமும் வந்து விடாது என்று மட்டும் சொல்லிக் கொள்கிறோம்.




 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1 comment:

Dr.Anburaj said...

சாதனைகள் வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.

தேவையில்லாமல் ஹிந்து்க்களை வசை பாடுவதை நிறுத்துங்கள்.

இந்துக்களை காபீா்கள் இறைமறுப்பாளா்கள் என்று கொன்ற குவித்ததை மறக்க முடியுமா?

பாக்கிஸ்தானிலும் ஆப்கனிலும் பங்களாதேஷயிலு் இந்துக்கள் கண்ணியமாக வாழ்கின்றார்கள் என்று அண்டப்புளுகை அவி்ழ்த்து விடுவது பச்சை சாத்தான் குணம்.