ஒட்டகப் பால்
ஹஜ்ஜூப் பெருநாள் விடுமுறை தினம் ஒன்றில் ஒட்டகப் பால் குடிக்க
70 கிலோ மீட்டர்
பயணித்தோம். அல்கர்ஜ் செக் போஸ்ட்டுக்கு சமீபமாக
அந்த இடத்தை விசாரித்து தெரிந்து கொண்டு இடத்தை அடைந்தோம். எங்களுக்கு முன்பாகவே பல
குடும்பங்கள் அங்கு வந்து ஒட்டகப் பால் குடிக்க முகாமிட்டிருந்தன. ஒட்டகப் பாலை காய்ச்சினால்
திரிந்து விடும். எனவே ஒட்டகத்திடம் இருந்து கறந்து அந்த நிமிடமே சூடாக தருகிறார்கள்.
ஒரு முறை குடித்தவுடன் ஏதோ பிரியாணி சாப்பிட்டது போன்று வயிறு நிறைந்து விட்டது. சிறிது
நேரம் ஒட்டகக் குட்டிகளிடம் நேரத்தைப் போக்கி விட்டு கொஞ்சம் ஒட்டகப் பாலும் வாங்கிக்
கொண்டு திரும்பினோம்.
“ஒட்டகம் எவ்வாறு
படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?”
குர்ஆன் (88:17)
ஒட்டகப் பாலின் நன்மைகளை இனி காண்போம்.
ஒட்டகத்தின் பாலில் தனித்தன்மை வாய்ந்த இன்சுலின் உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. பசும்பாலை விட குணமளிக்கும் ஆற்றல் அதிகம் உள்ளது ஒட்டக பாலில் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
ஆம்! பசும்பால் மற்றும் எருமை பாலை விட அதிக நன்மைகள் அடங்கியது ஒட்டக பால். பலவித ஆய்வுகளும் பசும்பாலைவிட ஆரோக்கியமானது ஒட்டக பால் என்று கூறியிருக்கின்றன. தாய்ப்பாலுக்கு நிகரான தன்மை ஒட்டக பாலில் உள்ளதாகவும் , குடிப்பதற்கும் , செரிமானம் ஆவதற்கும் எளிமையானது என்று கூறப்படுகிறது.
விட்டமின் பீ, சி சத்துக்களை நிறையக் கொண்ட ஒட்டகப் பாலில், பசுப் பாலில் இருப்பதைவிட பத்து மடங்கு அதிகமான இரும்புச் சத்து இருப்பதாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. பசும்பாலை விட இனிப்புக் குறைவான ஒட்டகப் பால்,
வளைகுடா நாடுகளெங்கும் அபரிதமாக அருந்தி வருகின்றார்கள்.
பசும்பாலுக்கும் ஒட்டக பாலுக்கும் அடிப்படை வித்தியாசங்கள் உண்டு. ஒட்டகப் பாலில் அதிக அளவு இரும்பு, ஜின்க், பொட்டாசியம் , காப்பர் , சோடியம், மக்னீசியம் போன்றவை உள்ளன. பசும்பாலை விட அதிக புரத சத்து உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் பி2 அதிகமாக உள்ளது. பசும்பாலை விட கொலெஸ்ட்ரால் குறைவாக உள்ளது. ஒட்டகப் பாலில் லாக்டோஸ் குறைவாக இருக்கும். ஆகவே லாக்டோஸ் அதிகம் எடுத்துக்கொள்ள முடியாதவர்களும் பருகும் விதத்தில் இருக்கும். ஆன்டிபாக்டீரியால் மற்றும் அன்டிவைரல் தன்மை பசும்பாலை விட அதிகம் உள்ளது.
ஆண்மையின்மை சமீப காலங்களில் அதிகரித்து வருவதால் பல இடங்களில் இந்தியாவில் ஒட்டகப்பால் உற்பத்தியை முக்கியப் படுத்தியிருக்கிறார்கள்.
ஒட்டகப்பால்ஆண்மையின்மையை போக்கும் ஆற்றல் கொண்டது.
ஒட்டகப் பாலில் நோய் எதிர்ப்பு புரதம் அதிகமாக உள்ளதால், நோயெதிர்ப்பு மண்டலத்தை தாக்கும் கிருமிகளை உள்ளே வரவிடாமல் செய்கிறது. மல்டிபிள் செலெரோசிஸ், க்ரோன் போன்ற வியாதிகள் வராமல் தடுக்கிறது.
ஆட்டிசத்துக்கான அறிகுறியை குறைக்கிறது. சில நேரங்களில் ஆட்டிசம் பாதிக்கப்பட்டவரை முற்றிலும் குணப்படுத்துகிறது. ஒட்டக பாலில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்ட் தன்மை தான் ஆட்டிஸத்தின் அறிகுறியை குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆட்டிசம் நோயாளிகள் ஒட்டக பாலை எடுத்துக் கொள்வதன் மூலம் சாந்தமான மன நிலையுடன்,
குறைந்த வெறித்தன்மையுடன் , தன்னை தானே அழித்துக்கொள்ளும் தன்மை குறைந்தும் காணப்படுவதாக கூறுகின்றனர்.
ஆல்பா ஹைட்ராக்சில் என்று ஒரு கூறு ஓட்டக பாலில் இருக்கிறது. அது மென்மையான கோடுகள் மற்றும் சுருக்கங்கள் சருமத்தில் தோன்றாமல் தடுக்கிறது. இதனால் வயது முதிர்வு தடுக்கப்படுகிறது.
1 comment:
பசும்பாலையும் ஒட்டகப்பாலையும் ஒப்பிடுவது அரேபிய அடிமைத்தனம் காரணமாகவா?
ஒட்டகப்பாலுக்கு இத்தனை சிறப்புக்கள் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வோம்.
யானைப்பாலிலும் அதிக சத்துக்கள் சிறப்புக்ள் இருக்கும் .
சிங்கத்தின்
புலியின்
சிறுத்தையின்
பாலிலும் சிறப்புகள் நிறைய இருக்கும்.
தாராளமாக கிடைக்குமா?
ஒட்டகபால் தமிழ்நாட்டில் கிடைத்தால் பயன்படுத்த தயாா்.
எங்கே கிடைக்கும்.
திருநெல்வேலியில் எங்கு கிடைக்கும்.
Post a Comment