ஆஸ்திரேலியா - மெல்போர்ன்
இந்துத்வாவிற்கும் சீக்கியர்களுக்கும் மோதல். இந்துத்வா எங்கு சென்றாலும் பிரச்னைதான்.
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
ஆஸ்திரேலியா - மெல்போர்ன்
இந்துத்வாவிற்கும் சீக்கியர்களுக்கும் மோதல். இந்துத்வா எங்கு சென்றாலும் பிரச்னைதான்.
ஹரியானா - மேவாட்
வாரிஸ் என்ற இளைஞர் பஜ்ரங்தள் தேச விரோதிகளால் முஸ்லிம் என்ற காரணத்தினாலேயே கொல்லப்பட்டுள்ளார்.
இறைவன் இந்த இளைஞனை சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வானாக!
தேச விரோதிகளுக்கு இன்னும் எத்தனை இஸ்லாமிய இளைஞர்களின் ரத்தம் தேவைப்படுமோ தெரியவில்லை. எத்தனை கொலைகள் செய்தாலும் நாங்கள் எந்த காலத்திலும் சனாதனத்தை ஏற்கப் போவதில்லை காட்டு மிராண்டிகளே...
சவுதி அரேபியா - ரியாத்
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த குளத்தூர் ஊரிலுள்ள சகோதரர் திவாகர் இஸ்லாம் மார்க்கத்தை வாழ்வியலாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை யூசுஃப் என்று மாற்றிக்கொண்டார்.
அவர் அந்த சாதி...
இவர் இந்த சாதி.... நான் உயர்ந்தவன்.... நீ தாழ்ந்தவன்... குளத்தில் குளிக்கக் கூடாது...
தனி டம்ளர், கோவிலுக்குள் வரக் கூடாது... என்று தினம் தினம்
இனி இவர் பிரச்னைகளை சந்திக்கவே வாய்ப்பிருக்காது. உலக முஸ்லிம்களில் ஒருவராகி விட்டார்.
எல்லா புகழும் இறைவனுக்கே...
2013 ஆம் ஆண்டு
ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது மோடி பிபிசி பற்றி சொன்னது...
'நமது நாட்டு மக்கள் தூர்தர்ஷனையோ, ஆகாஷ்வாணியின் செய்திகளையோ அதிகம் பார்க்கதில்லை: கேட்பதில்லை. அந்த அளவு நம்பகத்தன்மை இல்லை. ஆனால் அதே மக்கள் பிபிசியை விரும்பி கேட்கிறார்கள். பிபிசி உண்மையை சொல்வதாக நமது மக்கள் நினைப்பதாலேயே இது சாத்தியமாகிறது.'
2023 ஆம் ஆண்டு
இருபது வருடங்களுக்குப் பிறகு அதே பிபிசி மோடி தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு கலவரத்தை தூண்டி 2000 முஸ்லிம்களின் உயிரை குடித்துள்ளார் என்று ஆதாரங்களோடு செய்தி வெளியிட்டது. உடனே அதே பிபிசியின் ஆவணப் படத்தை திரையிட இந்தியாவில் தடை விதித்துள்ளார் மோடி...
ஆட்சி அதிகாரத்தை வைத்து இன்று நீ நல்லவனாக வேஷம் போடலாம். ஆனால் நீ செய்த கர்மா உன் இறப்புக்குப் பின்னும் உன்னை தொடரும் என்பதற்கு மோடியே சாட்சி.
ராஜஸ்தான்...
ராஜஸ்தான் பல்கலைக் கழக மாணவர் தலைவர் நிர்மல் சவுத்ரி. இவரின் முன்னேற்றத்தைப் பிடிக்காத ஆர்எஸ்எஸின் மாணவர் பிரிவான ஏபிவிபி குண்டர்கள் பொது மேடையில் எவ்வாறு நிர்மல் சவுத்ரியை தாக்குகிறார்கள் பாருங்கள்.
கல்வித் துறையில் காவி சிந்தனையை கொண்டு வந்து நாட்டை படு குழியில் தள்ளிக் கொண்டுள்ளது இந்துத்வா.
'என்ன இழவு வேலைடா இது? இவ்வளவு கஷ்டப்பட்டு நான் பொருள் ஈட்டத்தான் வேண்டுமா? என்று அங்கலாய்ப்பவர்கள், மன சோர்வு அடைபவர்கள் சற்று இந்த வீடியோவை பாருங்கள். உங்கள் மனத்தின் பாரம் கொஞ்சம் குறையும்.
மத்திய பிரதேசம்...
இஸ்லாமியர்கள் வசிக்கும் காலனிகளுக்குள் இந்துத்வா குண்டர்கள் புகுந்து முஸ்லிம்களை பயமுறுத்துகின்றனர். 'ராமனை கும்பிடுபவர்கள் இந்தியாவில் இருக்கலாம்' என்ற கூப்பாடு போட்டு இந்து மதத்தை வளர்க்கிறார்களாம். அட அற்ப பதர்களா? இதனால் இஸ்லாம் வீழ்ந்து விடுமா? இந்து மதம்தான் தழைத்து விடுமா? இந்து மதத்தை அழிக்க பிறந்த கோடாரிகள் இந்துத்வாக்கள்.
இனி இந்த இளைஞர்கள் போதைக்கு அடிமையாவார்கள். அரிவாள், கத்தி என்று இவர்களின் வாழ்வு நகரும். வேலைக்கும் செல்ல மாட்டார்கள். மிரட்டி மாமூல் வசூலிப்பார்கள்.
'போலோ பாரத் மாதாகீ ஜே....'
காஷ்மீர்...
சுஹைல் அஹமது, ஹீமா, இஃப்ரா இவர்கள் மூவரும் ஜம்மு காஷ்மீர் சிவில் சர்வீஸ் Civil Services Examination (JKCSE) தேர்வில் கடுமையாக முயன்று பாஸ் ஆகி உள்ளனர். முஸ்லிம்கள் கடுமையாக படித்து இது போன்ற தேர்வுகளில் தேர்வாகி சமூகத்துக்கு நல்லதைச் செய்வோம்.
உபி
இந்த பெண்கள் சவுத் கொரியாவிலிருந்து கல்வி கற்க டெல்லி வந்துள்ளனர். உபி மாநிலத்தை சுற்றிப் பார்க்க கிளம்பியுள்ளனர். அவர்களை சூழ்ந்து கொண்ட சங்கிகள் 'நீங்கள் கிருத்தவ மிஷினரிகளா?' 'இங்கு ஏன் வந்தீர்கள்?' 'ராமர்தான் உண்மையான கடவுள்' 'ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்' என்று அந்த பெண்களை கட்டாயப்படுத்தியுள்ளனர். அந்த பெண்களோ மிரண்டு போய் சுற்றுலாவை பாதியில் முடித்துக் கொண்டு டெல்லி கிளம்பியுள்ளனர்.
சங்கிகளால் நமது நாட்டுக்கு விளைந்த நன்மைகள் இவை.
நாடு திவாலான பிறகு யோசிக்கிறாரோ....
மோடிக்கும் அமித்ஷாவுக்கும் இந்த அறிவுரையை கூறினால் இந்தியா தப்பும்.
பட்டபின்னாலே வருகின்ற ஞானம் ..
யாருக்கும் உதவாது.
இங்கு நடப்பது ஜல்லிக்கட்டு இல்ல ஜாதிகட்டு .. காளை அடக்கினால் வீரம் எல்லாம் இல்லை ஒரு தரப்பு ஜாதி பெருமையாக காளைகளை வைத்திருக்கிறது என்று புரிகிறது
கோவிலில் பாங்கு சொல்லப்படுகிறது …
‘’ அல்லாஹுஅக்பர்’’ என்று
வரும் பாங்கு பொதுவாக பள்ளிவாசலில்தான் சொல்ல
கேட்டிருப்போம். ஆனால் கோவிலில் பாங்கு
… பாங்கு சொல்பவர்கள் முஸ்லிம்களும் அல்ல.
கேரளா காசர்கோடு பகுதியில் ஸ்ரீ கோமராய கோவிலில்
பாங்கு சொல்லி கடவுளை வணங்குவதை ஒரு சடங்காக வைத்திருக்கிறார்கள். இது சரியா தவறா என்பது ஒரு புறமிருந்தாலும் இந்த சம்பவத்தின் மூலம் மதசார்பின்மை மற்ற மதத்தை மதிக்கக்கூடிய தன்மை அந்த
மக்களிடம் அதிகம் உள்ளதை காண முடிகிறது (சங்கிகளை
தவிற).
இந்துக்களை பொறுத்தவரை மற்ற மத கடவுள்களை மதிப்பார்கள். ஆனால் தங்களின் கடவுள் இருக்கக்கூடிய கோவிலிலேயே
பாங்கு சொல்கிறார்கள் என்றால் வியப்பாகத்தான்
இருக்கிறது.
அல்லாஹுஅக்பர் (இறைவன் மிகப் பெரியவன்)
மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்பட்டவைகளை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். புதிதாக உருவாக்கப்பட்டவை அனைத்தும் பித்அத் (எனும் அனாச்சாரம்) ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: நஸாயீ 1560
இன்று நமது ஊர்களில்
ஒரு முஸ்லிம் இறந்தவுடன் அதன் பெயரில் பல புதிய சடங்குகள் நடத்தப்படுகின்றன. இவை எல்லாம்
மார்க்கம் அனுமதித்ததுதானா என்று சீர்தூக்கி பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.
ஜஃபர் பின்
அபீதாலிப் (ரலி) அவர்கள் மரணித்த செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவித்துவிட்டு ஜஃபரின் குடும்பத்தினருக்காக நீங்கள் உணவு தயாரியுங்கள், அவர்களைப்
பாதிக்கும் செய்தி வந்துள்ளது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்:
அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 2725, அஹ்மத் 1660, திர்மிதி 919, இப்னுமாஜா 1599
இதன்
அடிப்படையில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு மற்றவர்கள் தான் உணவு அளிக்க வேண்டுமே தவிர அவர்கள் வீட்டில் சாப்பிடக் கூடாது என்று அறியலாம். சாப்பிட்டதோடு அல்லாமல் அங்கு புதிய முறையில் ஃபாத்திஹாக்கள் ஓதுவதும் கூடாது
என்பதை அறிக.
இறந்தவருக்காக
மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்தக் கூடாது என்று நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களால் நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம். கணவரைத் தவிர. கணவர் இறந்தால் நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்தலாம்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)
நூல்: புகாரி 313, 5341, 5343
ஏழாம் நாள், பத்தாம் நாள், நாற்பதாம் நாள், வருஷத்து ஃபாத்திஹா ஓதி பணத்தை விரயமாக்குபவர்கள்
கவனிக்க...
அபூ தல்ஹாவின் மகன்
உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களின் பின்னால் அபூ தல்ஹா (ரலி) நின்றார்கள். (அவரது மனைவி) உம்மு ஸுலைம் அபூ தல்ஹாவின் பின்னே நின்றார். அவர்களுடன் வேறு யாரும் இருக்கவில்லை.
அறிவிப்பவர்: அபூ தல்ஹாவின் மகன் அப்துல்லாஹ்
நூல்: ஹாகிம்
ஒருவர் இறந்து விட்டால்
அவரது உடலைப் பள்ளிவாசலுக்கோ, அல்லது ஜனாஸா தொழுகைக்காக நிர்ணயிக்கப்பட்ட இடத்துக்கோ கொண்டு சென்று தான் தொழுகை
நடத்த வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.
எந்த மனிதரின்
குடும்பத்தினர் விஷயத்திலும், அவரது அதிகாரத்திலும் அவருக்கு நீ இமாமாக - தலைவனாக ஆகாதே! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ
மஸ்வூத் (ரலி)
நூல்: முஸ்லிம்
நபிகள்
நாயகத்தின் இந்தப் பொதுவான அறிவுரையில் திருமணம் நடத்தி வைத்தல், ஜனாஸா தொழுகை
நடத்துதல் உள்ளிட்ட அனைத்துமே அடங்கும் என்பதால் இறந்தவரின் குடும்பத்தினரே ஜனாஸா தொழுவிக்க உரிமை படைத்தவர்கள் என்பதை அறியலாம். இதற்கும் பள்ளிவாசல்
இமாமைக் கொண்டுதான் தொழ வைப்போம் என்று அடம் பிடிப்பவர்கள் நபிகள் நாயகத்தின் அறிவுரைகளை
புறம் தள்ளுகிறார்கள். வாரிசுகள் அனுமதி கொடுத்தால் யார் வேண்டுமானாலும் தொழ வைக்கலாம்.
இதனை மார்க்கம் அறிந்த இமாம்கள்தான் நிர்வாகிகளுக்கு
சொல்லி புரிய வைக்க வேண்டும்.