Followers

Saturday, April 11, 2026

பக்தர்கள் 11,000 லிட்டர் பாலை டேங்கர் லாரி மூலம் நர்மதை ஆற்றில் கொட்டியுள்ளனர்

 




பக்தர்கள் 11,000 லிட்டர் பாலை டேங்கர் லாரி மூலம் நர்மதை ஆற்றில் கொட்டியுள்ளனர்

 

பாலை ஆற்றில் கொட்டுவதால் ஆக்சிஜன் குறைந்து மீன்கள் பெரும் அளவில் இறக்க வாய்ப்புள்ளது

 

மத்திய பிரதேசத்தில் ஆன்மீகம் என்ற பெயரில் அரங்கேறிய ஒரு செயல் தற்போது இணையதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காகவும், ஆற்றில் உள்ள மீன்களுக்கு “பால் புகட்டும்” விசித்திரமான நேர்த்திக்கடனுக்காகவும் பக்தர்கள் 11,000 லிட்டர் பாலை டேங்கர் லாரி மூலம் நர்மதை ஆற்றில் கொட்டியுள்ளனர்

 

ஆற்றில் வெண்ணிற அலைகள் எழும்பி ஓடிய இந்தத் துயரக் காட்சி, பார்ப்பவர்களை ஒருபுறம் வியக்க வைத்தாலும், மறுபுறம் இயற்கை ஆர்வலர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.

 

நன்னீர் நிலையில் இவ்வளவு பெரிய அளவில் பால் கலப்பது, ஆற்றில் உள்ள ஆக்சிஜன் அளவை முற்றிலுமாகக் குறைத்து, அங்குள்ள மீன் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களை மூச்சுத்திணறச் செய்து ஒட்டுமொத்தமாக அழிக்கும் “சுற்றுச்சூழல் பேரழிவை” ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

 

இதைச் சொன்னால் நம்மை தேச துரோகி என்பர் சங்கிகள்.

 

உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில்  இறைவன் அளவு கடந்து வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.

குர்ஆன் 7:31

 

 

ஈரானில் 50000 நபர்கள் தொழக் கூடிய பிரம்மாண்டமான சன்னி பள்ளிவாசல்

 

 

அரசு தண்ணீர் தொட்டியில் தலித்களை தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவிக்கும் பிராமணர்கள்.

 

இந்தியாவில் இஸ்லாம் இந்த அளவு வளர்ந்ததற்காகன காரணத்தை தெரிந்து கொண்டீர்களா?

 

No comments: