உயிரை விட்டாலும் விடுவோமே தவிர அமெரிக்காவுக்கு தலை வணங்க மாட்டோம். - ஈரானிய சிறுவனின் பேச்சு
--------------------------------------------------------------------------
சிறுநீர் கழித்து சுற்றுப் பறத்தை மாசுபடுத்துபவர்கள் மீது தண்ணீர்
பீய்ச்சி அடிக்கிறது அரசு நிர்வாகம்.
மல ஜலம் கழிப்பது பற்றி நபிகள் நாயகம் என்ன சொல்கிறார்கள்?
1)“உங்களில் எவரும் சுவர்களிலோ, பூமியிலோ உள்ள பொந்துகளில்
சிறுநீர் கழிக்கவேண்டாம்.” என்று நபிகள் நாயகம் கூறினார்கள். (அறிவிப்பாளர்:
ஹள்ரத் அப்துல்லாஹிப்னு ஸர்ஜஸ் (ரலி), நூல்: அபூதாவூது)
பொந்துகள், பூச்சிகள் மற்றும் பாம்பு, தேள் போன்ற விஷ
ஜந்துக்களின் வீடுகள். அதில் சிறுநீர் கழிப்பதால் அவைகளுக்கு தீங்கு நேரிடுகிறது.
சில சமயம் விஷ ஜந்துக்கள் வெளியே வந்தால் சிறுநீர் கழிப்பவருக்கு தீங்கு நேரிட
வாய்ப்புள்ளது. எனவே தான் நபிகள் நாயகம் அவர்கள் இதை விட்டும் தடுத்துள்ளார்கள்.
2) “சாபத்தை பெற்றுத்
தரக்கூடிய இரண்டு விஷயங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் கூற, அவை எவை? என்று தோழர்கள்
வினவினார்கள்” (1) நடமாடும் பாதையில் மலம், ஜலம் கழிப்பது, (2) மக்கள் ஓய்வெடுக்கும் மர
நிழலில் மலம், ஜலம் கழிப்பது” என்று நபிகள் நாயகம் அவர்கள்
பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
ஈரானில் இஸ்லாமிய
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் பெண்கள் பின்தங்கியுள்ளனர் -ட்ரம்ப்
அமெரிக்க பெண்கள்
ஈரானிய பெண்கள் ஒப்பீட்டளவில் அறிக்கைகள் கூறுவதென்ன?
No comments:
Post a Comment