Followers

Tuesday, April 28, 2026

ஈரானின் மழையை திருடியதா அமெரிக்கா?


 


ஈரானின் மழையை திருடியதா அமெரிக்கா?

 

போருக்குப் பின் வளைகுடா முழுக்க காலநிலை மாற்றம் இதனை உறுதி செய்கிறது.

 

ஏப்ரலில் பனிப்பொழிவு

 

2011-ல், முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத், “அவர்கள் நமது மழையைத் திருடுகிறார்கள்” என்று கூறினார். அவரை யாரும் நம்பவில்லை.

 

ஈரான் அப்பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்திய பிறகு, நமது காலநிலை மாறியது: பல பத்தாண்டுகால வறட்சி முடிவுக்கு வந்தது, மேலும் ஏப்ரல் மாதத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டது.

 

மழையை திருடிய அமெரிக்கா!

 

ஈரான் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் திணறியது ஈரான்.

 

இந்த நிலை தொடர்ந்தால் நாங்கள் Tehran -யை காலி செய்து கொண்டு வெளியேற வேண்டியது வரும் என்று அதிபர் Pezeshkian கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

 

ஆனால்,

இந்த 40 நாட்கள் போருக்கு பிறகு வாரத்தில் குறைந்தது 3 நாட்கள் தொடர்ந்து மழை பெய்வதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் Tehran 🇮🇷 மக்கள்!

 

குறிப்பாக நாடு முழுவதும் உள்ள 17 அணைக்கட்டுகளில் 07 அணைக்கட்டுகள் பல வருடங்களுக்கு பிறகு 99% நீர் கொள்ளளவை எட்டி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

போருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம்!

 

சில வருடங்களுக்கு முன்பு ஐ.நாவில்‌ எங்களின் மழையை அமெரிக்க கூட்டணி நாடுகள் திருடுகின்றன என்று குற்றச்சாட்டு வைத்தது ஈரான்.

 

அப்போது அதை யாரும் கண்டுகொள்ளவில்லை!

 

ஆனால்,

இந்த போர் துவங்கிய 2 மணி நேரத்தில் உடனடியாக தெற்கு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் கண்காணிப்பு ரேடார் கருவிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியது IRGC 🇮🇷

 

அதில் முக்கியமாக ஈரான் குறி வைத்த அனைவரும் 1 பில்லியன் 2 பில்லியன் என விலை உயர்ந்த Radar மற்றும் Satellite 📡 Systems தான்.

 

இவற்றை 2006 -க்கு பிறகு தான் அமெரிக்கா பல அரபு நாடுகளில் பொருத்தியது!

 

இந்த 2003 - 2023 இந்த 20 வருடங்களில் ஈரான் 67% மழையை இழந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

2017 மற்றும் 2018 மிகவும் வறட்சியான வருடம் ஈரானுக்கு!

அந்த கால கட்டத்தில் தான் அமெரிக்க Sanctions அதிகரித்து ஈரான் மீது!

 

நிற்க !

 

இப்போது ஒரு சின்ன Flash Back:-

 

 2018 உலககோப்பை கால்பந்து போட்டியில் ரொனால்டோ அடித்து Penalty Kick -யை‌ ஈரான் 🇮🇷 Goal Keeper தடுத்து விட்டார்.

 

அன்றை தினத்தில் அது கால்பந்து உலகமே வியந்து பார்த்த நிகழ்வு!

 

அந்த நேரத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் நேத்தன்யாகு..,

ரொனால்டோ-வை தடுக்க முடிந்த உங்களால் தண்ணீர் பற்றாக்குறையை தடுக்க முடியவில்லை என்று ஈரானை கிண்டல் செய்ய..,

ஒட்டுமொத்த ஈரான் மக்களும் பொங்கி எழுந்து நேத்தன்யாகு-வை வசை பாடினார்கள்.

 

அந்த அளவுக்கு உலக பிரசித்தி பெற்றது ஈரான் தண்ணீர் வறட்சி!

 

ஈரான் பல குளிர் பிரதேசங்கள் மற்றும் மலைகள் நிறைந்த நாடு ஆனால் எப்படி தண்ணீர் வறட்சி என்ற கேள்வி எழுந்த போது தான்..,

 

இந்த தண்ணீர் வறட்சி செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று!

 

என்று கூறினார்கள் ஈரான் வானிலை ஆராய்ச்சியாளர்கள்.

 

அரபு நாடுகளில் வைக்கப்பட்ட ரேடார் கருவிகள் வெறும் ஏவுகணை தடுப்பு மற்றும் வான் கண்காணிப்பு சாதனமாக இல்லாமல் Weather Manipulation செய்கிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளது பல இடங்களில் ஈரான்.

 

இதெல்லாம் சாத்தியமா என்று உங்களுக்கு கேள்வி எழலாம்!

 

 வெறும் முட்டை வடிவில் உள்ள Satellite Communication கருவியை 2 பில்லியன் டாலர் செலவு செய்து துபாயிலும்

கத்தாரிலும் வைக்க அமெரிக்கர்கள் என்ன முட்டாள்களா?

 

அல்லது அத்தனை செலவு ஏன் என்று இஸ்ரேல் லாபி தான் அமெரிக்காவை நோண்டி இருக்காதா?

 

இது 100% Weather War Fare தான் என்பதை வரலாற்று தரவுகளுடன் நாம் அறிய முடியும்!

 

Vietnam போரின் போது அமெரிக்கா தோல்வி அடைந்து கொண்டிருந்த பகுதியில் எல்லாம் அடுத்த சில வாரங்களில் 30% அதிக மழை பெய்தது!

 

10 வருடங்களுக்கு பிறகு அதற்கு காரணம் அமெரிக்கா மறைமுகமாக செய்த வானியல் முறைகேடு என High Confidential ஆவணங்கள் வெளி வந்தன.

 

அதற்கு Weather Warfare என பெயர் வைத்திருந்தது அமெரிக்கா!

 

அதன் பிறகு தான் வானிலையை போருக்கு ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்று ஐ.நா தடை கொண்டு வந்தது!

 

1970-களில் மழை பெய்ய வைக்க முடிந்த அமெரிக்காவால் 2005-ல் மழைய நிறுத்த முடியாது என்று யாராவது சொன்னால் நான் நம்ப தயாரில்லை!

 

இவர்களின் Manipulation -யை ஈரான் அடித்து உடைத்ததும் ஈராக் 🇮🇶 -ல் 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை ஒரே வாரத்தில் வெப்பநிலை குறைந்துள்ளது!

 

Oman 🇴🇲 -ல் மூன்று வருடங்களில் இல்லாத அளவுக்கு தொடர்ந்து ஒரு வாரம் மழை!

 

ஈரான் உலக மக்களுக்கான போரை நடத்திக் கொண்டு இருக்கிறது என்பதை காலம் நிரூபித்துக் கொண்டு இருக்கிறது!

No comments: