Followers

Saturday, December 13, 2008

மஹாத்மா காந்தியும் ராதா கிருஷ்ணனும்!

மஹாத்மா காந்தியும் ராதா கிருஷ்ணனும்!

காந்தியைப் பார்ப்பதற்கு ஜனாதிபதி ராதா கிருஷ்ணன் வந்தார். அவருக்கு மட்டும் ஒரு குவளை பசும்பால் கொண்டு வரும்படி காந்தி பணித்தார். 'ஏன் நீங்கள் பசும்பால் குடிப்பதில்லையா?' என்று ராதா கிருஷ்ணன் கேட்டார். உடனே காந்தி 'பசும்பால் என்பது பசுவின் மாமிசம்தான் திரவ நிலையில் உள்ளது. அதனால் நான் பசும்பால் குடிப்பதில்லை' என்று காந்தி கூறினார். அதனைக் கேட்ட ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் 'நாம் குழந்தையாக இருந்தபோது தாயிடம் குடித்தது தாயின் மாமிசம்தானே? குழந்தைப்பருவத்தில் நாம் தாயின் பாலைத் தவிர எதனைச் சாப்பிடுவது?' என்ற வினாவை எழுப்பினார். அதன் பிறகு காந்தி பசும்பால் சாப்பிட ஆரம்பித்தாராம்.

சிங்கம் புலி சிறுத்தை நாய் பூனை முதலிய மிருகங்கள் கூர்மையான பற்களை மட்டும் கொண்டுள்ளன. இந்தக் கூரிய பற்கள் மாமிசத்தைக் கிழித்து தின்பதற்குப் பயன்படுகின்றன. அதனால்தான் மேற்கண்ட மிருகங்கள் அசைவமாகவே இருக்கின்றன. இதே போல ஆடு மாடு குதிரை யானை போன்ற மிருகங்கள் தட்டையான பற்களைக் கொண்டுள்ளன. இதனால் இவைகள் இலை தழை கிழங்குகள் அதாவது சைவ உணவுகளையே சாப்பிடுகின்றன.

ஆனால் மனிதனுக்கு கூரிய பற்களும் தட்டையான பற்களும் உள்ளன. மனிதன் சைவ உணவுகளையும் அசைவ உணவுகளையும் சாப்பிடும் விதத்தில் பற்களை இறைவன் அமைத்துள்ளான். எனவே மனிதன் சைவ உணவுகளையும் அசைவ உணவுகளையும் சாப்பிட வேண்டும் என்பது வல்ல இறைவனின் விருப்பமாக இருப்பது சிந்திக்க வேண்டிய உண்மை.

-உணர்வு வார இதழ்

அடடே.... அசைவ பிரியர்கள் ஓ போட்டுக் கொள்ளலாம்.

2 comments:

Unknown said...

அசைவ விலங்குகளுக்கு அசைவ உணவைக் கிழித்துத் தின்பதற்கான கோரைப்பற்கள் உண்டு. அவை எவ்வளவுதான் பசித்தாலும் சைவ உணவை உட்கொள்வதில்லை. அதன் வாயில் சைவ உணவுகள் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டாலும் அவற்றின் செரிமான உறுப்புகளால் அவற்றை செரிக்க வைக்க முடியாமல் அப்படியே வெளியேறும்.

அது போலவே சைவ உணவு விலங்குகளுக்கு தட்டைப் பற்கள் மட்டுமே உண்டு. அவை எவ்வளவுதான் பசித்தாலும் அசைவ உணவை உட்கொள்வதில்லை. அதன் வாயில் அசைவ உணவுகள் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டாலும் அவற்றின் செரிமான உறுப்புகளால் அவற்றை செரிக்க வைக்க முடியாமல் அப்படியே வெளியேறும்.

மனிதன் சைவம் அசைவம் இரண்டையும் உண்ணுதற்கேற்ப பற்களையும் செரிமான உறுப்புகளையும் இறைவன் படைத்துள்ளது இரண்டு வகையான உணவுகளையும் உட்கொள்ளத்தான் என்று டாக்டர். ஜாகீர் நாயக் பதில்களில் பல ஆண்டுகளுக்கு முன் கேட்டுள்ளேன்.

suvanappiriyan said...

திரு சுல்தான்!

//மனிதன் சைவம் அசைவம் இரண்டையும் உண்ணுதற்கேற்ப பற்களையும் செரிமான உறுப்புகளையும் இறைவன் படைத்துள்ளது இரண்டு வகையான உணவுகளையும் உட்கொள்ளத்தான் என்று டாக்டர். ஜாகீர் நாயக் பதில்களில் பல ஆண்டுகளுக்கு முன் கேட்டுள்ளேன்.//

உண்மைதான்! 'பற்களோடு செறிமான உறுப்புகளும் அசைவத்தையும் சைவத்தையும் செறிக்கும் வகையில் உள்ளதால்தான்' என்று இருக்க வேண்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.