Followers

Wednesday, December 10, 2008

'சந்திர மோகன்' --'சாந்த் முகம்மதாக' மாறியது ஏன்?




'சந்திர மோகன்' 'சாந்த் முகம்மதாக' மாறியது ஏன்?

ஹரியானா முதலமைச்சர் பஜன்லாலின் மகன் சந்திர மோகன். எல்லா மாநிலத்திலும் 'முதலமைச்சரின் மகனே அடுத்த வாரிசு' என்ற எழுதப்படாத விதிக்கொப்ப தன் மகனை உப முதல்வராகவும் ஆக்கி அழகு பார்த்தார் முதல்வர் பஜன்லால். நான்கு முறை எம் எல் ஏ வாகவும் இருந்துள்ளார் சந்திர மோகன். திருமணமாகி குழந்தைகளும் உள்ளது. இஸ்லாமிய நூல்களை நண்பர்கள் மூலமாக பல ஆண்டுகளாக படித்து வந்துள்ளார். இஸ்லாமிய மார்க்கத்தில் சந்திர மோகனுக்கு ஒரு பிரியம் வந்துள்ளது.

அதோடு அல்லாமல் அனுராதா பாலி என்ற பெண்மணியுடன் சந்திர மோகனுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு அது பின்பு காதலாகவும் மாறியுள்ளது. திடீரென்று வீட்டை விட்டு வெளியேறிய சந்திர மோகன் ஒரு மாதம் தலைமறைவாக இருந்து இன்று சண்டீகரில் நிருபர்கள் முன் தன் காதலியோடு தோன்றி 'நானும் என் மனைவியும் திருமணம் செய்து கொண்டு விட்டோம். இன்று முதல் என் பெயர் சாந்த் முகம்மது' என்று அறிவித்தவுடன் நிருபர்களே சிறிது ஆடிவிட்டனர்.

நிருபர்: இதனால் உங்களின் முதல் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் துரோகம் இழைப்பதாக நினைக்கவில்லையா?

சாந்த் முகம்மது: என் பெயரில் எந்த சொத்தும் இல்லை. அனைத்தும் என் முன்னால் மனைவி பெயரிலும் என் குழந்தைகளின் பெயரிலும் மாற்றி விட்டுத்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். எனவே இதனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. இதனால் பாதிக்கப் பட்டது நான்தான்.

நிருபர்: உப முதல்மந்திரி, அடுத்த முதல்வர் என்று வர்ணிக்கப்பட்டவர். இன்று முதல் மந்திரியால் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டுள்ளீர்கள். அனைத்து சொத்துக்களையெல்லாம் இழந்துள்ளீர்கள். இவை எல்லாம் உங்களை பாதிக்கவில்லையா?

சாந்த் முகம்மது: இந்த பாதிப்புகள் எல்லாம் வரும் என்று தெரிந்துதானே இந்த முடிவை எடுத்துள்ளேன். இதை விட இன்னும் பாதிப்புகள் வந்தாலும் அதையும் தாங்கக் கூடிய நிலையில்தான் நானும் என் மனைவியும் உள்ளோம். மேலும் முன்பை விட சந்தோஷமாக இருப்பதாகவே நாங்கள் உணர்கிறோம்.

நிருபர்: சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பிப்பதற்காகவே நீங்கள் இஸ்லாத்தில் இணைந்ததாக சொல்லப்படுகிறதே?

சாந்த் முகம்மது: என்னோடு நெருங்கி பழகும் என் நண்பர்களிடம் இது சம்மந்தமாக கேட்டுப் பாருங்கள். பல இஃப்தார் விருந்துகளை நானே ஏற்பாடு செய்துள்ளேன். பல காலம் நான் குர்ஆனை படித்து வந்துள்ளேன். இது நான் நீண்ட நாள் சிந்தித்து எடுத்த முடிவு. குறை சொல்பவர்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை. என் மனதில் உள்ளதை நானே அறிவேன்.

இவர் உண்மையில் இஸ்லாத்தினால் ஈர்க்கப்பட்டுத்தான் முஸ்லிமாக மாறினாரா? அல்லது சட்டத்துக்கு பயந்து முஸ்லிமாக மாறினாரா என்பது அவருக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை. ஆனால் இது சம்பந்தமாக சில காலம் ஊடகத்துறைக்கு நிறைய செய்திகள் கிடைத்த வண்ணம் இருக்கும். முதல்வர் பஜன்லால் வேறு 'என்னை அவமானப் படுத்திய அவர்களை நான் விடப் போவதில்லை' என்று கர்ஜித்துக் கொண்டிருக்கிறார். இந்த இருவரின் எதிர்காலமும் தற்போது கேள்விக் குறியாகவே உள்ளது.

'பியார் கியா து டர்னாகியா?'

7 comments:

suvanappiriyan said...

Mohan went missing from public view over a month ago and was not seen either in the state party headquarter here or in his parent's residence in Hissar. He had not attended the cabinet meetings held in the past few days.

His removal has come shortly after media reports that he had converted to Islam and married a woman, who was a former Deputy Advocate General in Punjab. The woman has also reportedly converted to Islam.

Mohan's whereabouts were not known even to his close aides, his staff in the office of Deputy Chief Minister and at his residence in Panchkula near here. He had not been attending his office here for the past over two weeks.

His younger brother Kuldeep Bishnoi had recently told reporters that his brother was fine and he had talked to him over phone some time back.

Mohan, who is already married and has two children, surfaced on Sunday with a woman. They told a private news channel that they embraced Islam and entered into wedlock recently.

The girl, Anuradha, told the channel that the two had been meeting since past five years. She has become Fiza while Mohan has changed his name to Chand Mohammad.

-Times of India

Anonymous said...

இஸ்லாத்தின் மேல் காதலெல்லாம் இல்லை அண்ணாச்சி! சட்டத்தின் பிடியிலேருந்து தப்பிக்கனும். அம்புட்டுதேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//நிருபர்: இதனால் உங்களின் முதல் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் துரோகம் இழைப்பதாக நினைக்கவில்லையா?

சாந்த் முகம்மது: என் பெயரில் எந்த சொத்தும் இல்லை. அனைத்தும் என் முன்னால் மனைவி பெயரிலும் என் குழந்தைகளின் பெயரிலும் மாற்றி விட்டுத்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். எனவே இதனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. இதனால் பாதிக்கப் பட்டது நான்தான்.//

கணவன்; மனைவி; குழந்தைகளுடன் சொத்தை ஒப்பிடும் இவர் அறியாமையை எண்ணி வருந்துகிறேன்.

இந்த புது மனைவியையும் ;புதுச் சொத்துச் சேர்த்ததும் விட்டு விட்டு; இன்னுமொரு புது மனைவியுடன் ஓடாமல் இருந்தால் சரி...
இப்படியான சபலப் புத்தி படைத்தவர்களால் இருந்த மதத்துடன் சென்ற மதத்துக்குமே இழுக்கு.
இவர்களை ஊக்கப்படுத்தாமல் இருப்பதே நன்று.
தான் இஸ்லாத்தில் கண்ட நல்விடயங்களை தன் முதல் மனைவிக்குப் புரிய வைத்து குடும்பமாகவே மாறி இருந்தால் வேறு விடயம்...
இது ஏதோ உள்ளது அதுவும் அரசியல்(வாதி)வியாதி....யோசிக்க வேண்டும்.

suvanappiriyan said...

யோகன் பாரிஸ்!

நான் இந்த பதிவை இட்டதன் நோக்கம் சேய்தி மற்றவர்களுக்கு சென்று அடைய வேண்டும் என்ற நோக்கில்தான். உண்மையில் இஸ்லாத்தின் மேல் உள்ள பற்றினால்தான் வந்தாரா அல்லது சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பதற்க்காக மாறினாரா என்பதை அவரும் இறைவனும் மட்டுமே அறிய முடியும். நீங்கள் சொல்வது போல் நாளை வேறொரு பெண்ணைப் பார்த்து சபலத்தில் வேறொரு முடிவையும் எடுக்கலாம். எனவே பல செய்திகளைப் படிப்பது போன்று 'பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று' என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். :-)

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

Anonymous said...

முஸ்லீமாய் மாறிவிட்டார், ஆகவே இன்னும் மூன்று பெண்களிடம் சபலம் கொண்டு இன்னும் மூன்று திருமணங்கள் செய்து கொள்ளலாம்.

suvanappiriyan said...

//முஸ்லீமாய் மாறிவிட்டார், ஆகவே இன்னும் மூன்று பெண்களிடம் சபலம் கொண்டு இன்னும் மூன்று திருமணங்கள் செய்து கொள்ளலாம்.//

பொருளாதார வசதியும் உடல் ஆரோக்கியமும் இருந்தால் இன்னும் மூன்று மனைவி வரை கட்டிக் கொள்ளட்டுமே! எந்த சட்டமும் நடைமுறைக்கு ஒத்து வருவதாக இருக்க வேண்டும். 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற சித்தாந்தப்படி உடலவிலும் மனதளவிலும் ஏக பத்தினி விரதனாக எத்தனை பேரால் இருந்து விட முடியும். ஏன் நம் முதல்வருக்கு கூட மூன்று மனைவிகளை கட்டிக் கொண்டு இந்துவாகவும் இருக்க முடிகிறதே! ராமனின் தந்தை தசரதனுக்கு எத்தனை மனைவிகள்? முருகனுக்கு வள்ளி தெய்வானை என்று இரண்டு மனைவிகள் இல்லையா? எனவே பலதார மணம் என்பது குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இஸ்லாத்தில் அது ஒரு அனுமதிதான். கட்டாயம் அல்ல.

suvanappiriyan said...

15-12-2008

இன்று சாந்த் முகம்மது சோனியா காந்தியை சந்திக்க டெல்லி வந்தார். அப்பொழுது பத்திரிக்கையாளர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிருபர்: சாந்த் முகம்மது! நீங்கள் முஸ்லிமாக மாறிவிட்டீர்கள் அல்லவா? குர்ஆனிலிருந்து சில வசனங்களை ஓதுங்களேன் பார்ப்போம்?

அனுராதா: (நிருபரைப் பார்த்து) நீங்கள் இந்து தானே! வேதத்திலிருந்து சில வசனங்களை நீங்கள் ஓதுங்கள். அதன் பிறகு நாங்கள் குர்ஆனிலிருந்து வசனங்களை ஓதுகிறோம்.

நிருபர்: நான் கேட்டது சாந்த் முகம்மதிடம். அனுராதாவிடம் அல்ல.

சாந்த் முகம்மது: எனக்கு குர்ஆனின் வசனங்களும் தெரியும். அதன் விளக்கமும் தெரியும். பள்ளிவாசலுக்கு சென்றால் அங்கு நான் குர்ஆன் வசனங்களை ஓதி தொழுது கொள்வேன்.