Followers

Saturday, December 20, 2008

'கடவுள்' தோனிக்கு கோவில்: ராஞ்சி ரசிகர்கள் முடிவு!



ராஞ்சி: கிரிக்கெட்டில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு ராஞ்சி ரசிகர்கள் சேர்ந்து கோவில் கட்ட முடிவு செய்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி தலைமையில், "டுவென்டி-20' உலககோப்பை, ஆஸ்திரேலியா ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி, தற்போது இங்கிலாந்து தொடரிலும் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

ஐந்தரை அடி சிலை: இந்நிலையில் தோனியை கவுரவிக்கும் விதத்தில் தோனி ரசிகர்கள் கிளப், ராஞ்சியில் கோவில் கட்ட முடிவு செய்துள்ளனர். 1,650 சதுர அடியில், அடுத்த ஆண்டில் கோவில் கட்டி, ஐந்தரை அடி உயரத்தில் தோனிக்கு சிலை வைக்கப்பட இருக்கிறது. இதுதவிர தோனியின் சிறுவயது, இளைஞர் மற்றும் இந்திய அணியில் அறிமுக புகைப்படங்கள் மற்றும் தற்போதைய புகைப்படங்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இந்த கோவிலில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட இருக்கிறது.

கிரிக்கெட் கடவுள்: இதுகுறித்து, தோனி ரசிகர்கள் கிளப்பின் தலைவர் ஜிதேந்திர குமார் சிங் தெரிவித்தது: அமிதாப்பச்சன், ஷாருக்கானுக்கு லண்டன் மியூசியத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிரபலமான தோனிக்கு ஏன் கோவில் கட்டக்கூடாது. ஜார்க்கண்ட் மற்றும் ராஞ்சியை கிரிக்கெட் உலக வரை படத்தில் இடம்பெற செய்தவர் தோனி. இதனால் தோனி ரசிகர்கள் கிளப்பின் சார்பில் "கிரிக்கெட் கடவுள்' தோனிக்கு கோவில் கட்ட முடிவு செய்துள்ளோம். இதுதான் அவருக்கு நாம் செய்யும் மரியாதை.

கோவில் திறப்பு: கோவில் கட்டுவதற்கு, பல்வேறு தரப்பில் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கோவிலை திறந்து வைக்க தோனியை சம்மதிக்க வைக்க உள்ளோம். இவ்வாறு ஜிதேந்திர குமார் சிங் தெரிவித்தார்.

-Dina Malar

9 comments:

ஸ்ரீதர்கண்ணன் said...

எப்படா நீங்கெல்லாம் திருந்துவீங்க?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கடவுள் தோனியின் கோவில் கட்டிமுடிந்து திறப்புவிழா காணும் முன் ,தோனி தோல்வியைச் சந்திக்காதிருக்க,
எல்லாம் வல்ல கடவுளை வேண்டி,
இந்தப் புத்தி பேதலித்த கூட்டத்துக்கு
கடவுள் என்பது யார் என்ற புத்தியைக் கொடுக்க வேண்டுகிறேன்.
ராஞ்சி மன நோயின் கூடாரமாகிவிட்டதோ?

suvanappiriyan said...

Sridhar Narayanan!

//எப்படா நீங்கெல்லாம் திருந்துவீங்க?//

ரொம்பவும் கோபத்தில் பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள். ஏற்கெனவே குஷ்புவுக்கு கோவில் கட்டி மந்திரங்களெல்லாம் குமுதத்தில் படித்தோம். இறைவனக்குரிய இலக்கணத்தை விளங்காததால் வரும் விபரீதம் இது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வாங்க யோகன் பாரிஸ்!

கிரிக்கெட்டில் மோகம் இருக்க வேண்டியதுதான். அது வெறியாக மாறி அவருக்கு கோவில் கட்டுவது மடத்தனம் இல்லையா!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு அவரின் ரசிகர்கள் கோவில் கட்டுகிறார்கள். அதற்க்கு நீங்கள் ஏங்க ஆத்திரப்படுறீங்க? நீங்களும் கடவுளுக்கு இன்னொரு கோயில் கட்டி தேங்காய் உடையுங்க.

ஸ்ரீதர்கண்ணன் said...

ரொம்பவும் கோபத்தில் பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள். ஏற்கெனவே குஷ்புவுக்கு கோவில் கட்டி மந்திரங்களெல்லாம் குமுதத்தில் படித்தோம். இறைவனக்குரிய இலக்கணத்தை விளங்காததால் வரும் விபரீதம் இது.


நான் இதை பற்றி ஒரு பதிவு போடலாம் என்று நினைத்தபோது உங்கள் பதிவை பார்த்தேன்.
ஆதலால் நான் சொல்ல வந்ததை பின்னூடமாக பதிந்து விட்டேன்.

ஸ்ரீதர்கண்ணன் said...

Dear Anonymous,

சரி நீங்க சொன்னபடியே செஞ்சுடலாம். உங்கள் மேலான ஆலோசனைக்கு மிக்க நன்றி :-)

ஸ்ரீதர்கண்ணன் said...

இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு அவரின் ரசிகர்கள் கோவில் கட்டுகிறார்கள். அதற்க்கு நீங்கள் ஏங்க ஆத்திரப்படுறீங்க? நீங்களும் கடவுளுக்கு இன்னொரு கோயில் கட்டி தேங்காய் உடையுங்க.


Dear Anonymous,

சரி நீங்க சொன்னபடியே செஞ்சுடலாம். உங்கள் மேலான ஆலோசனைக்கு மிக்க நன்றி :-)

suvanappiriyan said...

ஸ்ரீதர் கண்ணன்!

இவர்களை ஆதரிக்கவும் ஒரு கூட்டம் இருப்பதால் இது போன்ற கூத்துக்கள் அன்றாடம் நடைபெற்றே வரும். இது போல் இஸ்லாத்திலும் பல கூத்துக்கள் ஆங்காங்கே நடைபெறும். நாகூர் தர்கா, அஜ்மீர் தர்கா மற்றும் பல கிராமங்களில் ஊர் பெரியவர்களின் இறப்புக்குப் பின்னால் கட்டிய தர்காக்கள் என்றும் அதன் பேரில் நடைபெறும் அனாச்சாரங்களும் இஸ்லாத்துக்கு கொஞசமும் சம்பந்தம் இல்லாதவைகள்.

முகமது நபி 'என் மரணத்திற்குப் பிறகு எனது அடக்கஸ்தலத்தை யாரும் விழாக் கொண்டாடும் இடமாக மாற்றி விடாதீர்கள். எனது அடக்கஸ்தலத்தின் மேல் கட்டிடம் எதையும் கட்டக் கூடாது' என்று இறந்து போவதற்கு இரண்டொரு நாள் முன்பாக தனது தோழர்களிடம் சொல்லி விட்டு சென்றார். முகமது நபியின் அடக்கஸ்தலத்தில் யாரும் கை ஏந்தி பிரார்த்தித்தால் அங்கு காவலர்கள் நின்று உங்களை 'மசூதியில் சென்று பிரார்த்திக்கவும். இங்கு பிரார்த்தனை செய்ய அனுமதி இல்லை' என்று கூறுவதையும் பார்க்கிறோம். முகமது நபியை அடக்கம் பண்ணியிருப்பது வெறும் மண் தரையில்தான். சிமெண்டால் கூட பூசப்படவில்லை. முகமது நபியை கடவுள் நிலைக்கு உயர்த்திவிடக் கூடாது என்பதில் சவூதி அரசு மிகவும் விழிப்புடன் உள்ளது.

நமது நாட்டில் மீலாது நபிக்கு (நபி பிறந்த தினம்) விடுமுறை. முகமது நபி பிறந்த சவூதியில் அப்படி ஒரு நாள் வருவதும் தெரியாது. போவதும் தெரியாது. இங்கு அந்த நாளில் விடுமுறையும் கிடையாது. பல கடவுள் கொள்கை இஸ்லாத்தில் இன்று வரை புகாமல் இருப்பதற்கு இது போன்ற கடுமையான சட்டங்களே ஆகும்.

மீண்டும் வருகை புரிந்து கருத்தைப் பதிந்தமைக்கு நன்றி!