Followers

Wednesday, December 17, 2008

எறும்புகளைப் பற்றி என்றாவது எண்ணியதுண்டா?






எறும்புகளைப் பற்றி என்றாவது எண்ணியதுண்டா?

நாம் அன்றாடம் சந்திக்கும் பல உயிரினங்களில் எறும்பும் ஒன்று. இந்த எறும்பினத்தைப் பற்றி நாம் என்றாவது சிந்தித்திருக்கிறோமா? இந்த பதிவில் எறும்புகளைப் பற்றி சில ருசிகர தகவல்களை பரிமாறிக் கொள்வோமே!

எறும்புகளின் அறிவாற்றல்:

ஒரு வகை எறும்பு இனத்தில் தொழிலாளி எறும்புகள் குளிர் காலங்களில் பிற எறும்புகளின் உணவுக்காகச் சின்ன சின்ன வித்துக்களை இழுத்து வந்து புற்றுக்களில் சேர்க்கின்றன. புற்றுக்கள் தானியங்கள், வித்துக்கள் போன்றவற்றை அரைப்பதற்க்கென்றே ஒரு கிடங்கை அந்த எறும்புகள் உருவாக்குகின்றன.

அங்கே குடியிருக்கும் எறும்புகளுக்கு தானியங்களை அரைத்து உண்ணுவதற்க்கேற்ற வகையில் முன்னேற்ப்பாடுகள் செய்து தருவதற்க்கான பொறுப்பை பெரிய தாடைகளையுடைய சில எறும்புகள் ஏற்றுக் கொள்கின்றன. அது ஒன்று தான் அந்த எறும்புகளின் வேலை. இலையுதிர் காலம் வரும்போது அந்தக் கிடங்கிலுள்ள எல்லா தானியங்களும் அரைத்து முடிக்கப்பட்டு விடுகின்றன. இப்போது பெரிய எண்ணிக்கையுடைய அந்த எறும்புகளின் தலை சிறந்த பணி முன்னேற்பாடாக ஒதுக்கப்பட்டுள்ள அந்த உணவைப் பாதுகாப்பது ஒன்றுதான்.



இன்னும் சில வகை எறும்புகளை அவற்றின் உள்ளுணர்வோஅல்லது அறிவுத்திறனோ எதுவோ ஒன்று அவற்றின் உணவுக்காகவும் வசிப்பதற்க்காகவும் புல் வீடுகளை வளர்க்கச் சொல்லித் தூண்டுகிறது. புல்லால் ஆன அந்தக் குடில்களே அவற்றிற்கு உணவாகவும் பயன்படுவதால் அவற்றைத் தோட்ட வீடுகள் என்றும் சொல்லலாம்.

சில எறும்புகள் தேன் கூடுகளுக்கு இடர் விளைவிக்கும் சில குறிப்பிட்ட கம்பளிப் புழுக்களையும் பூச்சிகளையும் வேட்டையாடி உண்ணுகின்றன. அந்த புழுக்களும் பூச்சிகளும்தான் அவற்றுக்கு மாமிசம் வழங்கும் ஆடு மாடுகளாகும். அந்தப் புழுக்களிலிருந்து தேனைப் போல வடியும் ஒரு திரவத்தையும் அந்த எறும்புகள் உணவாகக் கொள்கின்றன.

சில எறும்புகள் அவற்றிலேயே சிலவற்றைப் பிடித்துத் தமக்கு அடிமைகளாக்கிக் கொள்கின்றன. வேறு சில எறும்புகள் தமக்குக் குடில் அமைத்துக் கொள்ளும் போது இலை தழைகளை தமக்குத் தேவையான பருமனுக்கு ஏற்ப வெட்டிக் கொள்கின்றன.

சில தொழிலாளி எறும்புகள் ஓய்வாகத் தமது கை கால்களை ஓரிடத்தில் கிடத்திக் கொண்டு படுத்து விடும்போது பட்டுப் புழுக்களைப்போல் நூல் நூற்க்கவும் அவற்றால் நெய்யவும் தெரிந்த கூடுகளில் வாழும் ஒரு வகைச் சிற்றெறும்புகளை வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றன. சில குட்டி எறும்புகளுக்கு அவற்றுக்கான கூடுகளை உருவாக்கிக் கொள்ளத் தெரியாத போது அதன் சமுதாயம் பாடுபட்டு அதற்காக ஒரு கூட்டை உருவாக்கித் தருகின்றது.

-'அறிவு இறை நம்பிக்கையைத் தூண்டுகிறது'
பேராசியர் மஹ்மூத் ஸாலிஹ்

பேராசியரின் இந்த கட்டுரையைப் பார்த்து நாம் பிரமித்து போகிறோம். சின்னஞ்சிறிய எறும்பு அதற்கும் கண் வாய் மூக்கு வயிறு குடல் மலப்பாதை என்று ஒன்று விடாமல் அதனுள் வைத்து அதற்கு உயிரையும் கொடுத்தது எந்த சக்தி?

எந்த உயிரணுக்களிலிருந்து எறும்புகள் உருவாகின்றனவோ அவற்றிடம் இந்த சிக்கல் நிறைந்த பணிகள் எல்லாம் எவ்வாறு ஒப்படைக்கப்படுகின்றன?

நிச்சயம் அங்கே அவற்றுக்கெல்லாம் இந்தப் பணிகளை நிறைவேற்றுதற்க்குரிய வழிகாட்டும் படைப்பாளன் ஒருவன் இருக்கின்றான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

'அவனே படைத்தான். ஒழுங்குற அமைத்தான். அவனே நிர்ணயித்தான். வழி காட்டினான்' - குர்ஆன் 87:1-2-3

1 comment:

Anonymous said...

நல்ல பதிவு.