Followers

Thursday, March 10, 2011

மருதநாயகம்(முகமது யூசுப் கான்)-1



இவரைப் பற்றி இன்று வரை பல வதந்திகள் உலவுகின்றன. இவர் நல்லவரா! கெட்டவரா! இவர் வெள்ளையனை எதிர்த்ததால் சுதந்திரப் போராட்ட வீரரா? கமலஹாஸன் எப்படி இவருடைய வாழ்க்கையை படமாக எடுக்கலாம்? மதுரையைச் சுற்றி பல போர்கள் புரிந்தவரல்லவா? சில காலம் வெள்ளையர்களோடு நட்பாகக் கூட இருந்தாரே! பூலித்தேவனோடு மல்லுக்கு நின்றாரே! என்றெல்லாம் பல கேள்விகள் இவரைப் பற்றி வந்து கொண்டே இருக்கிறது.. இவருடைய வாழ்க்கையில் அப்படி என்னதான் மர்மம் இருக்கிறது என்பதை பல தளங்களில் சேகரித்த செய்தியை கோர்வையாக(பலருக்கும் தெரிந்த செய்திகள்தான்) உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். தகவல்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன்.

பாடல்களிலும் சில ஊர்களிலும் மருதநாயகம்:

மகுட முடிடால் விருதிலங்க

மதயானை வளர்த்தெடுத்த வரிவேங்கைக் குட்டி

விகடமிடுவோர்கள் குல காலன்

விசையாலீம் குலம் விளங்க வரு தீரன்

சிறந்த வெள்ளைக் காரனிடத்தில்

சீராய் மூன்றரை வருஷம் பிள்ளையாய் வளர்ந்தான்

அவனை மோசஞ் செய்ய நினைத்தான்

அப்போதே துரத்தி விட்டான் முசலாலி(பிரெஞ்சு அதிகாரி)

என்று மருதநாயகதின் புகழ்பாடும் பாடல்கள் பல காணக்கிடைக்கிறது. -நன்றி செ.திவான்

திருவில்லிப்புத்தூர் அருகே மகமதுகான்சாகிப்புரம் என்று அழைக்கப்பட்ட ஊரே தற்போது மம்சாபுரம் என்றழைக்கப்படுகிறது.-ந.ராசையா,மாமன்னன் பூலித்தேவன்,1992,பக்கம்116

தெற்கட்டான் செவ்வலுக்குத் தென்புறம் ஒரு பெரிய மேடு இருக்கிறது. இப்போது அந்த இடத்தை 'கான்சாமேடு' என்று அழைத்து வருகின்றனர்.-ந.ராசையா,இந்திய விடுதலைப் போரின் முதல் முழக்கம்,சென்னை,1985,பக்கம் 42.

முகமது யூசுப்கான் மக்களால் கான்சாகிப் என்று அழைக்கப்பட்டார். மதுரையில் சில தெருக்கள் அவரது பெயரால் அமைந்தன.- ஹுசைனி,பாண்டியர்களின் வரலாறு,காரைக்குடி, 1962,பக்கம் 178.

மதுரை தெற்கு மாசி வீதிக்கும், தெற்கு வெளி வீதிக்கும் இடையில் உள்ள கான்சா மேட்டுத்தெரு இவரின் பெயரை சொல்லிக் கொண்டிருக்கிறது. மதுரை கீழவெளி வீதிக்கும் இராமநாதபுரம் சாலைக்கும் மூன்று சாலைக்கும் இடையில் உள்ள இடம் இவர் பெயரால் 'கான்பாளையம்' என்றழைக்கப்படுகிறது. - மஹதி, மாவீரர் கான்சாகிப், சென்னை 1161,பக்கம் 77.

வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்காக வெட்டப்பட்ட இடம் இவர் பெயரால் 'கான்சாகிப் வாய்க்கால்' என்று அழைக்கப்பட்டது.- எஸ்.பாலசுப்ரமணியம்,தேவி வார இதழ்.

இப்படி பல சிறப்புகளையுடைய மருதநாயகம் தொடர் தேவி இதழிலும் முன்பு வந்தது. ஆனால் அதன் ஆசிரியர் தொடர் சுவையாக இருக்க வேண்டும் என்பதற்க்காக ஒன்றிரண்டு மிகைப்படுத்தலும் சேர்க்கப்பட்டதாக முன்பு படித்திருககிறேன்.

இனி இந்த வரலாற்று நாயகனைப் பற்றி விக்கிபீடியா என்ன சொல்கிறது என்று முதலில் பார்த்து விடுவோம்.

சிவகங்கை அருகே உள்ள பனையூர் என்ற கிராமத்தில் 1725ம் ஆண்டு மருதநாயகம் வெள்ளாளர் இனத்தில் பிறந்தார்.இளமை கல்வி அறிவு இல்லாத யாருக்கும் அடங்காத மருதநாயகம் சிறுவயதில் பாண்டிச்சேரி சென்றார். இஸ்லாமிய சமயத்தைத் தழுவியதன் காரணமாக முகமது யூசுப் கான் என்று அறியப்பட்டார். பாண்டிச்சேரியில் அவர் மாஷா என்ற போர்த்துகீசியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

1752ல் கான் சாஹிப் ஆங்கிலக் கிழ்க்கிந்தியக் கம்பெனியில் சுபேதரராகப் பணியாற்றினார். வரலாற்றுச் சிறப்புமிக்க ராபர்ட் கிளைவின் ஆற்காடு முற்றுகையின் போது கிளைவ் பெற்ற மகத்தான வெற்றிக்கு கான் சாஹிப் முக்கிய காரணமாக இருந்தார். பிரஞ்சுக்காரர்களுடன் நடந்த பல்வேறு போர்களில் ஆங்கிலேயர்களின் வெற்றிக்கு கான் சாஹிபின் பங்கு மகத்தானது. அதனால் ஆங்கிலத் தளபதி மேஜர் லாரன்ஸ் கான் சாஹிபை சிப்பாய் படைகளுக்கு தளபதி [ கமாண்டர் ] ஆக்கி தங்கப் பதக்கம் பரிசு வழங்கினார். அது முதல் அவர் கம்மாந்தன் கான் சாஹிப் என அழைக்கப்பட்டார் கவர்னர் ஆதல் கான் சாஹிப் 1757ல் மதுரை கவர்னர் ஆக ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் நியமிக்கப்பட்டார்.அவர் வரிவசூலை மிகச் சிறப்பாகச் செய்ததால் திருநெல்வேலிக்கும் கவர்னராகப் பதவி உயர்வு பெற்றார்.

இது சமயம் தெற்கத்திப் பாளையக்காரர்களை அடக்கி கப்பம் பெற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியர்க்கும் ஆற்காடு நவாபுவுக்கும் பேரருதவி புரிந்தார். பொறாமை கொண்ட ஆற்காடு நவாபு முகமது அலி., கான் சாஹிப் வசூலிக்கும் கிஸ்தித்தொகையை தன்னிடமே செலுத்த வேண்டுமென கம்பெனியரிடம் வாதாடினார். அனுமதியும் பெற்றார். இதனை ஏற்றுக்கொள்ளாத கான் சாஹிப் ஆற்காடு நவாபிற்கும் கம்பெனிக்கும் எதிராகப் போர்க் கொடி தூக்கி அவர்களது பகைமையினைப் பெற்றார். கான் சாஹிப் தன்னிச்சையாக மதுரை சுல்தானாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். கான் சாஹிபின் இறுதி நாட்கள் 1764ம் ஆண்டில் கான் சாஹிபின் மதுரைக் கோட்டைமீது கம்பெனிப் படைகளும் நவாபின் படைகளும் முற்றுகையிட்டன. கான் சாஹிபின் நண்பர் சீனிவாச ராவ் மருத்துவர் பாபா சாஹிப் மற்றும் ராணுவ ஆலோசகர் மார்ச்சன்ட் ஆகியோரது சதிச் செயலால் கான் சாஹிப் கைது செய்யப்பட்டு மதுரையில் உள்ள கம்பெனியாரின் ராணுவ முகாம் முன்பு 15-10-1764ல் ஆற்காட்டு நவாபால் தூக்கிலிடப்பட்டார். அவரது உடல் சம்மட்டிபுரத்தில் புதைக்கப்பட்டது. இன்றும் கூட இவரின் சமாதியை அங்கு செல்பவர்கள் காணலாம்.

· Yusuf khan the rebel commander by S.Charles Hill

· எம்.எஸ்.சுப்பிரமணிய அய்யர் எழுதிய வீர விலாசம் எனும் நூல்.

-நன்றி விக்கி பீடியா

He was born a Hindu, acquired knowledge from a Christian and died as a Muslim and buried at Sammatipuram, Madurai. History has many stories about this remarkable man, popularly known as Khansa, an abbreviation of Khan Sahib. As it is said and believed that the fall of a great man is always great and tragic, so it was with this soldier-cum-warrior and a ruler who was hanged as a rebel.

Birth

Khan Sahib was born at Panaiyur in Ramanthapuram Country to a Hindu couple as Marudhanayagam. He ran away from home and took service under a European for three years. Captain Brunton, an European, helped him to gain knowledge through education following which he served the Nawabs and rose to the level of subedhar. In 1748, he embraced Islam, according to D. Devaraj, postgraduate teacher in Tamil of Pasumalai Boys Higher Secondary School, who has authored 16 books on Madurai's history.

Quoting from the `History of Tamil Nadu' authored by R. Aalalasundaram, Mr. Devaraj said Muhammed Yusuf Khan was a sepoy under Robert Clive and Lawrence and was soon promoted as the commandant by the East India Company given his loyalty.

However, there is apparently a controversy as to whether Yusuf Khan was raised to the level of Commandant in Nawab's army or in the East India Company.

In 1735, Nayak dynasty came to an end when Nawab Muhammed Ali captured Madurai with the help of Col. Heron, who later went on to become the Madurai Governor and collected taxes.

Col. Heron's work was dissatisfactory and he was soon replaced by Muhammed Yusuf Khan. In Mr. Devaraj's opinion, though Yusuf Khan ruled for a brief stint, he was one of the best rulers believing in social harmony. He provided aid to Meenakshi Amman Temple and supported the weaving trade of Sourashtra community.

Yusuf Khan's executive ability is indicated in the report from Colonel Fullarton - dated March 1785 and entitled `A view of the English interests in India' published in Madras in 1867. It says: "In Tinnevelly (now Tirunelveli) and Madura, his whole administration denoted vigour and effect. His justice was unquestioned, his word unalterable; his measures were happily combined and firmly executed, the guilty had no escape from punishment."

Yusuf Khan had the audacity to wage a war against the King of Travancore without the consent of the company. Consequently, he was asked to pay a lease amount of Rs. five lakh to the Nawab. But he refused and joined hands with the French and also hoisted the French flag on the Madura Fort.

When Governor Pigot of Chennai called Khan Sahib for a meeting, he refused evoking the wrath of the East India Company. Captains Monson and Breston waged a battle against Yusuf Khan in 1762 but failed miserably.

Captain Compell hatched a treacherous plot and captured the fort on October 13, 1764. Khan Sahib was hanged on October 16 following an order.

He was ignominiously hanged near the camp about two miles to the west of Madura and his body was buried at Samattipuram. A small square mosque was erected over the tomb that was later known as `Khan Sahib's pallivasal.'

Magic or divine

Even death did not come to him easily. When he was hanged neither the body came down nor the rope went up. He was alive and fell down two times. And finally the besiegers succeeded in the third attempt.

It was believed that Yusuf Khan had a magic golden ball under his arm that saved him from the first two attempts. Others say it was his yoga-training that saved him twice. Few others believed that some divine power was at work, Mr. Devaraj said and added that the dargah in his memory was built in 1808 by Sahiah Imam.

K. Johnny, whose family has been taking care of the dargah for seven generations, said fearing that Yusuf Khan would again come alive, the hangmen chopped his body into four pieces and buried them at various places -- his head in Tiruchi, legs in Periyakulam, hands in Palayamkottai and body in Madurai.

In remembrance of Yusuf Khan, few places are named after him. Like Khan Palayam in Tirunelveli, Kansapuram in Kadayanallur and Mamsapuram in Srivilliputhur. In Madurai, Kansa Mettu Theru was formed when British damaged the palace of Yusuf Khan.

S.S.KAVITHA – thanks the hindu daily.

-தொடரும்

13 comments:

Anonymous said...

சிறந்த பதிவு! பல தகவல்களை தெரிந்து கொண்டேன். எடுத்து போட்ட படம் நன்றாக உள்ளது.-அன்வர்.

suvanappiriyan said...

அன்வர்!

அந்த படம் மருத நாயகம் என்ற திரைப்படத்துக்காக எடுக்கப்பட்ட ஸ்டில. படத்தில் இருப்பது கமலஹாசன.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

ஜப்பானில் நிகழ்ந்த சுனாமியால் மிகவும் சிக்கலில் சிக்கியிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அனைவருக்கும் நம்மால் முடிந்த சிறிய உதவியான பிரார்த்தனையையாவது இறைவனிடம் சேர்ப்பிப்போம்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... நல்ல தொடர். அறியாத தகவல்கள். மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.

//ஜப்பானில் நிகழ்ந்த சுனாமியால் மிகவும் சிக்கலில் சிக்கியிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அனைவருக்கும் நம்மால் முடிந்த சிறிய உதவியான பிரார்த்தனையையாவது இறைவனிடம் சேர்ப்பிப்போம்.//---நிச்சயமாக, துவா செய்வோம். ஆமீன்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ. ஆஷிக்!

சுனாமியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 10000 தையும் தாண்டிவிட்டது. காட்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கும் போது நிலைமையின் விபரீதத்தை நம்மால் உணர முடிகிறது. இறைவன்தான் அவர்களுக்கு மன தைரியத்தை கொடுத்து முன்பு போல் முன்னேற்ற பாதையில் செல்ல வழி காட்ட வேண்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Unknown said...

சுவனப்பிரியன்!

மருதநாயகம் பிறவியிலேயே இஸ்லாமியர் என்று முன்பு படித்திருக்கிறேன். அது பற்றி ஏதும் குறிப்புகள் இருக்கிறதா? நன்றி.

suvanappiriyan said...

அன்வர்பாய்!

'யூசுப்கான் ஒரு பிறவி முஸ்லிம். மதுரை ஆளுநராக இருந்ததால் மருதநாயகம் என அழைக்கப்பட்டார். இவரது வாழ்க்கைக் காவியத்தை நாடெங்கிலும் நாடகமாக கருணாகரன் மேடைகளில் நடித்தார்'
-வேங்கட சுப்ரமணியம், முன்னால் துணைசேந்தர், பாண்டிச்சேரி பல்கலைக் கழகம்,யூசுப்கான், தினமணி,14-11-1997,பக்கம் 10.

“khan shahib is by birth a Moor(Muslim), and is descended from he ancient seed of that nation”
-S.C.HILL, THE SCOTS MAGAZINE,1965,PAGE 264.

போன்ற ஆதாரங்கள் கான்சாஹிப் ஒரு பிறவி முஸ்லிம் என்கின்றன். சிலர் இந்து மதத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்றவர் என்கின்றனர். ஏதோ ஒரு வகையில் அவர் முஸ்லிம். அடுத்து நமது தமிழகத்தின் பல பகுதிகளை சிறப்பாக ஆட்சி செய்தவர். இதனாலேயே தமிழக வரலாறுகளிலும் பல இடங்களில் பின்னுக்கு தள்ளப்படுகிறார்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Madhu said...

வெள்ளைக்காரனுக்கு கல்லா காட்டின நாய் முஸ்லிமா இருந்தா போதுமே தூக்கி வச்சி ஆடுவிங்களே..!

suvanappiriyan said...

ஆங்கிலேயரிடம் சேவை செய்து படிப்படியாக பதவி உயர்வு பெற்று மதுரையின் ஆளுநராகவும் ஆகிறார் மருத நாயகம். தனக்கு அதிகாரம் வந்தவுடன் அதே வெள்ளையர்களுக்கு கப்பம் கட்ட மறுத்துதான் வெள்ளையரின் எதிர்ப்பையே சம்பாதிக்கிறார். அதுதான் அவரின் அகால முடிவுக்கும் காரணமாகிறது.

வெள்ளையரிடம் வேலை செய்தவர்களெல்லாம் நாய்கள் என்றால் தமிழகத்தில் எண்ணிலடங்காத நாய்களை பார்க்க முடியும். இதற்கு காரணம் நம் குறு நில மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையே. பிரெஞ்சுக்காரனுக்கும் ஆங்கிலேயனுக்கும் மாறி மாறி சேவை செய்தவர்கள்தான் நம் முன்னோர்கள்.

Unknown said...

வெள்ளாளர் குலத்தின் மாவீரன் மருதநாயகம்பிள்ளை புகழ் வாழ்க!!

Anonymous said...

வெள்ளாளர் குலத்தின் மாவீரன் மருதநாயகம்பிள்ளை புகழ் வாழ்க!!

Unknown said...

வெள்ளாளர் குலத்தின் மாவீரன் மருதநாயகம்பிள்ளை புகழ் வாழ்க!!

kannan s said...

கான்சாஹிப் மருதநாயகம் மதமாச்சரியம்களுக்கு அப்பால்பட்டவர். பிறந்தது ஹிந்துவாக தழுவியது இஸ்லாமியமார்க்கத்தை மணந்தது கிருத்துவ பெண்.