எனது கம்பெனியில் கேரள மலப்புரத்தைச் சேர்நத முஹம்மது.... என்ற நபர் சேல்ஸ்மேனாக வேலை செய்து வந்தார். ஆடம்பர பிரியன். நாலு பேர் தன்னை மெச்ச வேண்டும் என்பதற்காக எதையும் செய்யக் கூடியவன். இஸ்லாமிய பற்று அந்த அளவு இல்லாதவன்.
ஒருமுறை எனது ஓனரிடம் புதுப்பிப்பதற்காக பாஸ்போர்ட்டைக் கேட்டான். அவனிடம் அவனது பாஸ்போர்ட்டைக் கொடுத்தார் எனது ஓனர். இந்த சம்பவத்தை பலரும் மறந்து விட்டோம். இதையே வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட அந்த மலையாளி 60000 ரியால்(கிட்டத்தட்ட 8 லட்ச ரூபாய்) கம்பெனி பணத்தில் கையாடல் செய்து விட்டு மறுநாளே கேரளாவும் சென்று விட்டான்.
வியாழன் இரவு டிக்கெட் புக் பண்ணியதால் வெள்ளிக்கிழமை விடுமுறை. எனவே யாருக்கும் சந்தேகம் வரவில்லை. அவன் கேரளா சென்று அவனது வீட்டில் சேரும் போதுதான் எங்களுக்கே விபரம் தெரிகிறது. சும்மா சொல்லப்படாது. திறமைசாலிதான். :-)
எனது ஓனரால் இதை நம்பவே முடியவில்லை. 'எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன்! இப்படி நம்பிக்கை மோசம் செய்து விட்டானே! அவசரம் என்று என்னிடம் கேட்டிருந்தால் நானே கடனாக கொடுத்திருப்பேனே' என்று ஆதங்கப்பட்டார். பிறகு என்னிடம் 'மும்பையில் எனது ஏஜண்டுகள் மூலமாக அவனது காலையோ கையையோ இங்கிருந்து கொண்டே என்னால் எடுக்க முடியும். இறைவன் குர்ஆனில் 'தீமையின் கூலி அது போன்ற தீமையே! சமாதானமாகச் செல்வோருக்கு அவரது கூலி இறைவனிடத்தில் உள்ளது'-(குர்ஆன் 42:40) என்று கூறுகிறான். எனவே அவனது மனைவிக்காகவும், அவனது குழந்தைகளுக்காகவும் அவனை அதுபோல் செய்யாமல் விடுகிறேன். மறுமையில் எனக்கு அந்த பணம் கிடைத்து விடும்' என்று கூறியவுடன் நானும் சற்று இந்தியன் என்ற முறையில் வெட்கப் பட்டேன்.
குர்ஆனும், முஹமது நபியின் வாழ்வும் இந்த அரபுகளை எந்த அளவு மாற்றியிருக்கிறது என்பதை நினைத்து ஆச்சரியப்பட்டேன். அவரிடம் 'நீங்கள் செய்வதுதான் சரி' என்று கூறி அவரை சமாதானப் படுத்தினோம்.
இந்த நேரத்தில் இஸ்லாம் வருவதற்கு முன்பு ஜனாதிபதி உமர் அவர்களின் வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்வு எனக்கு ஞாபகம் வந்தது. அதை பகிர்ந்து கொள்கிறேன்.
முகமது நபிக்குப் பிறகு இரண்டாவது கலீபாவாக பொறுப்பேற்ற உமரைப் பற்றி நாம் அறிவோம். அவர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. அன்றைய அரபியர்களின் மூட பழக்கத்தின் படி தன் குழந்தையை கொன்று விடுவது என்று உமர் முடிவு செய்கிறார். அதன்படி அந்தக் குழந்தையை அழைத்துக் கொண்டு ஆளரவமற்ற இடத்துக்கு வருகிறார். பிறகு அங்கு தன் குழந்தையை உயிரோடு புதைப்பதற்காக குழியைத் தோண்டுகிறார். அப்பொழுது அவரது தாடியில் மண் ஒட்டிக் கொள்கிறது. இதைப் பார்த்த அந்த குழந்தை தன் கையால் அந்த மண்ணைத் தட்டி விடுகிறாள். குழி வெட்டி முடிந்தவுடன் அந்த குழந்தையை குழியில் இறக்குகிறார் உமர். அப்பொழுது அந்த சிறுமி 'நீங்களும் வரவில்லையா?' என்று அப்பாவியாக கேட்டது. மனதைக் கல்லாக்கிக் கொண்ட உமர் மண்ணைத் தள்ளி அந்தக் குழந்தையை உயிரோடு சமாதியாக்குகிறார். எந்த அளவு அன்றைய சமூகம் கல் நெஞ்சம் படைத்ததாக இருந்திருந்தால் இத்தகைய கொடூரங்களை அரங்கேற்றியிருக்கும்.
பல வருடங்கள் கழித்து முகமது நபியின் பிரச்சாரத்தால் கவரப்பட்டு உமர் இஸ்லாத்தை ஏற்கிறார். ஒரு நாள் முகமது நபியிடம் தன் பெண் குழந்தையை தன் கையாலேயே கொன்றதை நினைவு கூர்ந்து தேம்பி அழ ஆரம்பித்து விட்டார். அவரைத் தேற்றிய முகமது நபி அறியாமைக் காலத்து பாவங்களை இறைவன் மன்னித்து விடுவதாக வாக்களித்துள்ளான் என்று சொல்லி அவரை அனுப்பி வைக்கிறார்.
பின்னால் முகமது நபி, அபுபக்கருக்குப் பிறகு இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் ஜனாதிபதியாக பொறுப்பேற்று திறம்பட ஆட்சியும் செய்கிறார் உமர். இவரது வரலாறைப் படித்த காந்தியடிகள் 'சுதந்திர இந்தியாவின் ஆட்சி முறை கலீபா உமருடைய ஆட்சியைப் போல் இருக்க வேண்டும்' என்று சொல்லும் அளவுக்கு சிறந்திருந்தது.
சரி. இனி பதிவுக்கு வருவோம். பணத்தை மோசடி செய்து அந்த மலையாளி சென்று கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகின்றது. தவறான வழியில் வந்த பணம் தவறாகவே ஆடம்பரமாக செலவு செய்து அனைத்தையும் இழக்கிறான். சில மாதங்களுக்கு முன்பு அவனது உறவினர் மூலமாக அவன் மிகவும் கஷ்டப்படுவதாகவும் அவனுக்கு மூளையில் கட்டி இருப்பதாகவும், ஆபரேஷன் செய்தால் பிழைப்பது கஷ்டம் என்றும், அந்த அளவு பணம் வசதியும் இல்லை என்றும் கேள்விப்பட்டோம். சில கேரள நண்பர்கள் மூலமாக செய்தியை உறுதி செய்து கொண்டோம். கம்பெனியில் உள்ளவர்களும் ஒரு சில மலையாளிகளும் சேர்ந்து பணம் வசூல் செய்து அவனது விலாசத்துக்கு அனுப்பி வைத்தோம்.
சில நாட்களுக்கு முன்பு அவனின் தற்போதய நிலையை எனது ஓனரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். பொறுமையாக கேட்டவர் 'தவறான வழியில் வந்த பணத்தினால் என்ன சுகத்தை அவன் அடைந்து விட்டான். இந்த உலகம் இந்த உலகில் உள்ள பொருட்கள் அனைத்தும் மண்ணினால் ஆனது. மக்கி மண்ணோடு மண்ணாகக் கூடியவை. இதன் அழகில் அவன் மயங்கியதால் கௌரமான வேலையும் போய் மறுமையிலும் எனக்கு கடன்காரனாகவும் ஆகி விட்டான். பணம் இழந்த நான் பல மடங்கு முன்பைவிட சிறப்பாகவே இருக்கிறேன். அவனது அக்கவுண்ட் நம்பரை வாங்கவும். அவனது மருத்துவ செலவுக்கு நான் பணம் அனுப்புகிறேன்' என்று சொன்னவுடன் இந்த அரபியை நினைத்து நெகிழ்ந்து விட்டேன். எப்படிப்பட்ட கல் நெஞ்சக்காரர்களாக இருந்த இவர்களின் மனதை இஸ்லாம் எந்த அளவு பண்படுத்தியிருக்கிறது என்று நினைத்துப் பார்கிறேன்.
மறுமை என்ற ஒரு வாழ்வை அந்த அரபி நம்பாமல் இருந்திருந்தால் இன்று அந்த மலையாளி உயிரோடு இருந்திருக்க முடியாது. எனது ஓனரின் பணம் அவனது வைத்திய செலவுக்கு பயன்படுகிறது என்ற செய்தியே அவனை சிறந்த மனிதனாக மாற்றும். செய்த தவறை எண்ணி வருந்தி எனது ஓனரிடம் மன்னிப்பும் கேட்டால் ஒருக்கால் இறைவன் அவனை மன்னிக்கலாம்.
இன்னா செய்தாரே ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.-குறள்
'உங்கள் பொருட் செல்வமும், மக்கட் செல்வமும் சோதனையே! இறைவனிடமே மகத்தான கூலி இருக்கிறது.'-குர்ஆன் 64:15
'தீமையின் கூலி அது போன்ற தீமையே! சமாதானமாகச் செல்வோருக்கு அவரது கூலி இறைவனிடத்தில் உள்ளது'-(குர்ஆன் 42:40)
'விபசாரி விபசாரம் புரியும்போது இறைவிசுவாசியாக இருந்து கொண்டு விபசாரம் புரிவதில்லை. ஒருவன் மது அருந்தும்போது இறை விசுவாசியாக இருந்து கொண்டு மது அருந்துவதில்லை. ஒருவன் பிறரது பொருளை திருடும்போது இறை விசுவாசியாக இருந்து கொண்டு திருடுவதில்லை.'-முகமது நபி
அறிவிப்பவர் : அபு ஹூரைரா ஆதாரம் புகாரி 2475
25 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மனதை பிசையும் நெகிழ்ச்சியான சம்பவங்கள், சகோ.சுவனப்பிரியன்.
அருமையான பதிவாக அதனை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
மறுமை பற்றிய பயமே ஒருவரை கெட்டவனாவதில் இருந்து தடுக்கிறது. 'இங்கே இழந்ததை மறுமையில் பெற்றுக்கொள்வோம்' என்ற நியாயத்தீர்ப்புநாளுக்கு பிந்திய மறுமை நம்பிக்கையே தமக்கு இன்னா செய்தாருக்கும் பழிவாங்காமல், நன்னயம் செய்யும்படி ஒருவரை, மன்னிக்கும் நல்லவனாக வாழச்செய்கிறது.
இஸ்லாம் - மனிதர்க்கான ஒரு மகத்தான வாழ்க்கை நெறி..!
வஅலைக்கும் சலாம்! சகோ.ஆஷிக்!
//மறுமை பற்றிய பயமே ஒருவரை கெட்டவனாவதில் இருந்து தடுக்கிறது. //
சரியாக சொன்னீர்கள். சில நாத்திக நண்பர்களிடம் முன்பு விவாதத்தில் ஈடுபட்டபோது 'நல்லவனாக வாழ கடவுள் நம்பிக்கை அவசியம் இல்லை' என்ற ரீதியில் கருத்தை வைத்தார்கள். இந்த சம்பவத்தில் எனது ஓனருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்திருந்தால் அந்த கேரள நபர் இந்நேரம் இறப்பையோ, அல்லது கால் கைகளையோ இழந்திருப்பார். பணம் இருந்தால் எதையும் செய்யலாம். இங்கு இறை விசுவாசம், மறுமை வாழ்வு முற்படுத்தப் பட்டதால் ஒரு கொலை தடுக்கப்பட்டது. அந்த நபர் திருந்துவதற்கும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
கடவுளின் பெயரால் சிலர் தவறு செய்யும்போது, மூடப்பழக்கங்களில் ஈடுபடும்போது அந்த தவறுகளை தண்டிக்க வேண்டுமே யொழிய இதனால் கடவுளே இல்லை என்ற முடிவுக்கு வருவது எந்த அளவு பகுத்தறிவு என்பது நமக்கு விளங்கவில்லை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
பதிவு மிக அருமை நல்ல பதிவுகளை கொடுத்து சிந்திக்க வைத்துள்ளீர்கள் நல்ல பதிவுகள் மீண்டும் வர வாழ்த்துக்கள்.
ஆஷிக் அன்வர்!
//பதிவு மிக அருமை நல்ல பதிவுகளை கொடுத்து சிந்திக்க வைத்துள்ளீர்கள் நல்ல பதிவுகள் மீண்டும் வர வாழ்த்துக்கள். //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
அவனது அக்கவுண்ட் நம்பரை வாங்கவும். அவனது மருத்துவ செலவுக்கு நான் பணம் அனுப்புகிறேன்' என்று சொன்னவுடன் இந்த அரபியை நினைத்து நெகிழ்ந்து விட்டேன்.//
நாமும் நெகிழ்ந்தோம்.. நல்ல மனசு..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ அருமையான பதிவு.
"மன் தரக்க ஷய்அன் லில்லாஹ்"
அல்லாஹ்வுக்காக எதை விடுகிறோமோ அதை விடச் சிறந்ததை
அல்லாஹ் அருளுவான்.
இவர் போன்று எல்லோரும் ஆகி விட்டால்
எத்துணை சிறப்பாய் மாறும் இவ்வுலகம்
அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ.ஆஷிக்!
//தினமும் ஏறத்தாழ 1 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெக்கும் மேலே தினமும் ஏற்றுமதி செய்யும் லிபியாவின் எண்ணெய் வளத்தின் மீதுதான் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு நாட்டமெல்லாம். அதையே வாலை ஆட்டிக்கொண்டு சுற்றி சுற்றி வருகின்றன. அதற்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது. அதுதான் அவர்களின் லட்சியம். மாறாக, லிபிய உள்நாட்டு ஜனநாயகமோ, மக்களுக்கு சுதந்திரமோ நோக்கமே அல்ல. இதைவிட கொடூரமாக ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த ராஜபக்சேயை ஏன் கண்டுகொள்ளவில்லை?//
சரியாக சொன்னீர்கள். இவர்களின் நோக்கமெல்லாம் எந்த வகையிலாவது பணம் பண்ண வேண்டும். ஆனால் எவ்வளவு பணம் வந்தாலும் இன்னும் அமெரிக்காவில் வறுமை ஒழிந்த பாடில்லை. பல மக்களின் குறுதியிலே வந்த பணமல்லவா?
மேலும் அமெரிக்காவின் அருகில் இருக்கும் வெனிசூலாவிலும் எண்ணெய் வளம் இருக்கிறது. அதன் அதிபரும் அமெரிக்க எதிர்ப்பாளர். அங்கு தனது குள்ளநரித் தனத்தை அமெரிக்கா ஏன் காட்டுவதில்லை? ஏனெனில் அது ஒரு இஸ்லாமிய நாடு அல்ல.
சிறந்த பதிவை தந்திருக்கிறீர்கள்.
சரியாக சொன்னீர்கள்.
பதிவிற்கு நன்றி..
http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_624.html
//நாமும் நெகிழ்ந்தோம்.. நல்ல மனசு..//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு எண்ணங்கள்.
வ அலைக்கும் சலாம்! சகோ.அரபுத்தமிழன்!
//அல்லாஹ்வுக்காக எதை விடுகிறோமோ அதை விடச் சிறந்ததை
அல்லாஹ் அருளுவான்.
இவர் போன்று எல்லோரும் ஆகி விட்டால்
எத்துணை சிறப்பாய் மாறும் இவ்வுலகம்//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அருமையான பதிவு.
இதுபோன்ற தீய காரியங்களில் ஈடுபடுவதைவிட்டும். பிறரின் பொருளுக்கு ஆசைப்படுவதைவிட்டும் அல்லாஹ் எல்லாரையும் காப்பாற்றவேண்டும்.
திருச்சிக்காரன்!
//இந்தக் கட்டுரைக்கு பதிலோ விளக்கமோ அளித்தால் நன்றாக இருக்கும். இந்து மதத்தில் உள்ள நம்பிக்கை விநாயகர், வாராக அவாதாரம் இவற்றால் சமூகத்துக்கு என்ன பிரச்சினை?//
//, இயெசுவோ, சாக்ரடீசொ, சங்கராச்சாரியரோ, அல்லது “கடவுளோ”, யார் சொன்னதாக எங்களிடம் ஒரு கருத்து வந்தாலும்,அதை ஆராய்ந்து பார்ப்பதுதான் எங்கள் வழி!//
இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை.’ -அதர்வண வேதம் 32:3
‘அந்த ஆதி பகவானின் வடிவத்தை தேவர்களும் உணர்ந்தவர்களில்லை. அசுரர்களும் உணர்ந்தவர்கள் அல்ல.’- பகவத் கீதை 10:14
‘யார் அசம்பூதியை(இயற்கையை) வணங்குகின்றார்களோ அவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள்’-அதர்வண வேதம் 40:9
விநாயக வராக அவதாரங்கள் இந்து மத வேத கருத்துக்களின் படி தவறல்லவா! எப்படி இஸ்லாத்தில் இல்லாத தர்ஹாக்கள் சில இஸ்லாமியரிடத்தில் வணக்கமாக குடி கொண்டிருக்கிறதோ அதே போன்று தான் இந்து மத சிலை வணக்கங்களும், கிறித்தவர்களின் ஏசு, மேரி, பரிசுத்த ஆவி வணக்கங்களும். இந்து, கிறித்தவம், இஸ்லாம் மூன்று மத வேதங்களுமே இறைவனுக்கு இணையாக படைப்புகளை வணங்குவதை தடை செய்கின்றன. இது பற்றி உங்கள் கருத்தென்ன?
-----------------------------
• thiruchchikkaaran says:
March 22, 2011 at 12:34 pm
சுவனப் பிரியன் அவர்களே, வருக, அஸ்ஸலாமு அலைக்கும்!
இந்து மதத்தில் யார் எந்தக் கடவுளை வேண்டுமானாலும் கும்பிட்டுக் கொள்ளலாம். உருவம் இல்லாத நிலையையும் வழிபட்டுக் கொள்ளலாம். உருவத்திலும் வழி பட்டுக் கொள்ளலாம். யாரயும் வழி படாமலும் இருக்கலாம். எந்தக் கடவுளையும் கும்பிடாமல் இருந்தால் அது தப்பு என்றோ, தண்டிக்கப் படவே என்றோ இந்து மதம் சொல்லவில்லை. இந்து மதம் சிலை வணக்கத்தை செய்யக் கூடாது என்று கண்டிக்கவில்லை. சிலை வணக்கம் செய்வதை தடுக்கவும் இல்லை!
புத்த மதம் கடவுள் பற்றி எல்லாம் கவலைப் படவில்லை. புத்த மதம் இந்த உலகில் முக்கிய மதம் என்பதைப் பலரும் மறந்து விடுகின்றனர். சீன அரசு தடை இல்லா மத வழிப்பாட்டை அனுமதித்தால் உலகில் அதிகம் பேரால் பின்பற்றப் படும் மதமாக பவுத்தமாக இருந்தால் அதில் ஆச்சரியமில்லை.
கிறிஸ்துவத்தின் கடவுள் கோட்பாடு பற்றி நான் சொல்ல விருமபவில்லை. நம்முடைய அன்புக்குரிய நண்பர்கள் சிலர் அது பற்றி பெரிய விவாதத்தில் ஈடுபட்டு, ஜெஹோவா தான் ஒரே தேவனா, திரித்துவம் சரியா, இயேசு தொழப்ப படவேண்டிய தேவனா என்று எல்லாம் பெரிய சர்ச்சையில் ஈடபட்டு இப்போதுதான் ஓய்ந்திருக்கின்றன. நான் வெந்த புண்ணில் வேல பாய்ச்ச விரும்பவில்லை.
இஸ்லாம் ஓரிறைக் கொள்கை உடையது என்பது தெரிந்ததே.
சிலை வணக்கத்தில் உங்களுக்கு அப்படி என்ன வெறுப்போ எனக்கு தெரியவில்லை. நீங்கள் முகமது (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் கோட்பாட்டை சரியாகப் புரிந்து கொண்டீர்களா என்றே சந்தேகமாக இருக்கிறது. அவர் காலத்திலேயே பெரும்பாலனா அரேபியர்கள் பண்பற்ற நிலையில், முரட்டுத் தனமாகவும், கட்டுப்பாடற்ற போக்கையும் கடைப் பிடித்து வந்தனர். முகமது (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களுக்கு கட்டுப்பாட்டை தரும் வகையிலே ஒரு மார்க்கத்தை உருவாக்கினார். அந்த மார்க்கத்தில் சேராதவர்கள் பண்பற்ற நிலையிலே தொடர்ந்து இருந்ததால் சிலை வணக்கம் செய்பவர்கள் ஹராமி என்று கருதப் பட்டு விட்டனர். நீங்கள் இந்தியர் தானே. இந்தியாவிலே உங்களை சுற்றி வாழ்வோர் , சிலை வணக்கம் செய்பவர்கள் பண்பற்ற வர்களா, நீங்களே சொல்லுங்கள், உலகில் உள்ள மக்களிலே இந்தியர்கள் எந்த அளவுக்கு நியாமாகவும் பண்புடனும் வாழ்கின்றனர். அரசியலை விடுங்கள், சாதாரண மக்களைப் பாருங்கள். அவர்கள் சிலை வணக்கம் செய்வதால் என்ன கெட்டுவிட்டது?
நாம் உங்களிடம் கேட்க விரும்பும் முக்கிய விடயம், நீங்கள் சக இஸ்லாமியரையும் நல்லிணக்கப் பாதைக்கு கொண்டு வருவதில் ஈடுபட விருப்பம் உள்ளவரா, அல்லது எங்கள் மார்க்கம் மட்டுமே இந்த உலகில் இருக்க வேண்டும் என்று மத சகிப்புத் தன்மை அழிப்பில் பங்கெடுக்கப் போகிறீர்களா என்பதுதான்.
//சரியாக சொன்னீர்கள்.
பதிவிற்கு நன்றி..//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கருன். புதிய பிளாக்குக்கு வாழ்த்துக்கள்.
வஅலைக்கும் சலாம் அன்புடன் மலிக்கா!
//இதுபோன்ற தீய காரியங்களில் ஈடுபடுவதைவிட்டும். பிறரின் பொருளுக்கு ஆசைப்படுவதைவிட்டும் அல்லாஹ் எல்லாரையும் காப்பாற்றவேண்டும்.//
உங்கள் பிரார்த்தனையில் நானும் கலந்து கொள்கிறேன்! முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
அலைக்கும் சலாம்! திருச்சிக்காரன்!
//இந்து மதம் சிலை வணக்கத்தை செய்யக் கூடாது என்று கண்டிக்கவில்லை. சிலை வணக்கம் செய்வதை தடுக்கவும் இல்லை!//
வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவன்தான்.
-ரிக் வேதம் 6:45:16
இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுவதில்லை
-அதர்வண வேதம் 32 : 3
தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.
-யொவான் (1 : 18)
புகழ் அனைத்தும் வல்லமை கொண்ட கடவுள் ஒருவனுக்கே
-ரிக் வேதம் 8 : 1
கண்ணால் காண முடியாதது யாரோ அவனே படைத்த இறைவன் அவனே கண்களுக்கு பார்வை சக்தியைத் தருகிறான். அவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் கண் கொண்டு பார்க்கும் பொருட்கள் யாவும் கடவுள் இல்லை.
-கேனோ உபநிஷத் (1 : 6)
தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?
-எசையா (40:18-25)
யாதொரு மனிதக் கடவுளையும் வணங்குவதற்கு கட்டளை இட்டதில்லை.
-ரிக் வேதம் (10:82,3)
மனிதன் இறைவனுக்கு உதாரணம் கூறுகிறான். அந்த மனிதனை நாம்(இறைவன்) படைத்திருப்பதை ஏனோ மறந்து விட்டான்.
-குர்ஆன் 36:78
அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன். நன்கறிந்தவன்.
-குர்அன் 6:103
ஓரிறையை மட்டும் வணங்க வேண்டும் என்பதற்கு வேத புத்தகத்திலிருந்தே ஆதாரங்களைக் கொடுத்துள்ளேன். இதை மறுத்தால் சிலை வணக்கம் புரிவதற்கு அதே வேத புத்தகங்களிலிருந்து ஆதாரத்தைத் தாருங்கள்.
//நாம் உங்களிடம் கேட்க விரும்பும் முக்கிய விடயம், நீங்கள் சக இஸ்லாமியரையும் நல்லிணக்கப் பாதைக்கு கொண்டு வருவதில் ஈடுபட விருப்பம் உள்ளவரா, அல்லது எங்கள் மார்க்கம் மட்டுமே இந்த உலகில் இருக்க வேண்டும் என்று மத சகிப்புத் தன்மை அழிப்பில் பங்கெடுக்கப் போகிறீர்களா என்பதுதான்.//
மேலே சுட்டிக் காட்டியிருக்கும் அனைத்து மதங்களின் கருத்துக்களும் பல தெய்வங்களை வணங்குவதை விட்டும் தடுக்கிறது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் நமது முன்னோர்களின் பண்பாடு. எனவே அனைத்து மதத்தினரும் தங்கள் மத வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த ஏக இறைவனை மட்டும் வணங்க வேண்டும் என்று அன்போடு விளக்குவது ஒரு இந்திய சகோதரனின் எதிர்பார்ப்பு. அதற்கு இறைவன், கடவுள்,பிரம்மா, கர்த்தர்,பிதா, அல்லாஹ் என்று எந்த பெயரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுவதே!
அரபியர்கள் என்றாலே கொடூரர்கள் என்று சித்தரிக்கும் சிலர் இதைப் படிக்க வேண்டும்.
ஹூசைனம்மா!
//அரபியர்கள் என்றாலே கொடூரர்கள் என்று சித்தரிக்கும் சிலர் இதைப் படிக்க வேண்டும்.//
அரபியர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள். கெட்டவர்களும் இருக்கிறார்கள். நம் நாட்டை விட மிகக் கொடூரமான குணம் கொண்ட மனிதர்கள்தான் இஸ்லாம் வருவதற்கு முன்பு அரபுலகில் மிகைத்திருந்தது. பெண் குழந்தை பிறந்தால் வெட்கப்பட்டுக் கொண்டு ஊரை விட்டே ஓடி விடுவார்களாம். அத்தகைய மௌட்டீக அன்றைய அரபு நாட்டையும் தற்போது உள்ள இன்றைய அரபுகளையும் ஒப்பிட்டால் இஸ்லாம் என்ற மார்க்கம் அவர்களின் வாழ்வினில் எத்தகைய மாற்றத்தை உண்டுபண்ணியிருக்கிறது என்பதை நாம் உணரலாம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
மாஷா அல்லாஹ். எப்பொழுதும் போலவே நெஞ்சை தொடும் இடுகை. ஓனருக்கு அல்லாஹு த ஆலா ஈருலகின் நன்மையையும் வாரி வழங்குவானாக. உண்மையிலேயே எனக்கு இரு தடவை படிக்க வேண்டி இருந்தது. ஓனர் அரபிதானா என்ற சந்தேகத்தில். மாஷா அல்லாஹ் படித்ததும் நெகிழ வைத்தது. :)
வ ஸலாம்.
சகோ. அன்னு!
//உண்மையிலேயே எனக்கு இரு தடவை படிக்க வேண்டி இருந்தது. ஓனர் அரபிதானா என்ற சந்தேகத்தில். மாஷா அல்லாஹ் படித்ததும் நெகிழ வைத்தது. :)//
அரபுகளைப் பற்றி மீடியாக்கள் அளவுக்கதிகமான ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளன. ஒருவனுக்கு மறு உலக வாழ்வைப் பற்றிய உண்மையான பயம் இருந்தால் உலகில் பிரச்னைகளுக்கு இடமேது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
திருச்சிக்காரன்!
//முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளதாக உள்ளது இந்து மதத்திலே. முந்தி முந்தி வினாயகரே , முப்பத்து முக்கோடி தேவர்களே, வந்து வந்தென்னைக் காருமையா என்ற கரகாட்டக் காரன் படப் பாடலைக் கேட்டு இருப்பீர்கள்.//
//சிம்பிளாக சொல்வதென்றால் பாஷா என்றோ, படையப்பா என்றோ, சிவாஜி என்றோ யாருமே இல்லை. ஆனால் பாஷாவாக , படையப்பாவாக , சிவாஜியாக … எல்லாமுமாக இருப்பது ரஜினி ஒன்றுதான். ரஜினி தான் உண்மை. ஆனால் பாஷாவும் ரஜினிதான், படையப்பாவும் ரஜினிதான்… . படையப்பா, பாஷா இவை எல்லாம் இல்லை என்றால் ரஜினி வெறும் கண்டெக்டர் மாத்திரமே என்கிறதும் மறுக்க முடியாத உண்மையே. முன்பெல்லாம் இதயக்கனி எம்.ஜி. ஆர் ரசிகர் மன்றம், உரிமைக் குரல் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் என்றெல்லாம் இருந்ததாம். எல்லாமே எம்.ஜி. ஆர் தான். ஆனால் எங்கக் வீட்டுப் பிள்ளை எம். ஜி. ஆரை சிலர் அதிகமாக ரசிக்கிறார்கள். அதைப் போலதான் இந்து மதமும்.//
இறைவனை எந்த முறையில் வணங்க வேண்டும் என்று கேட்டால் ரஜினி என்ற கூத்தாடியைக் கொண்டு வருகிறீர்கள். இது நிழல் நான் கேட்பது நிஜத்தை. உங்கள் வாதப்படியே வருவோம் பாட்சாவாகவும் படையப்பாவாகவும் ரஜினி எப்படி உருவாகிறார்? படத்தின் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா சொன்னதால் பாட்சாவாக மாறினார். கே.எஸ் ரவிக்குமார் சொன்னதால் படையப்பாவாக மாறினார். அதே போல் இந்த உலகையும் உங்களையும் என்னையும் படைத்த டைரக்டரான இறைவன் என்ன சொல்கிறானோ எப்படி வணங்க வேண்டும் என்று சொல்கிறானோ அதன்படிதானே நம் வணக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்? சிலை வணக்கத்துக்கு இன்னும் நீங்கள் வேதங்களிலிருந்து பதில் தரவில்லை.
தேவர்கள் எனப்படுவோர் முகமது நபிக்கு குர்ஆனை கொண்டு வந்ததாக நம்பப்படும் ஜிப்ரயீல் என்ற வானவரை ஒத்தவர்கள். இவர்களை நாம் எப்படி கடவுளாக வணங்க முடியும? பரிசுத்த ஆவி என்று கிறித்தவர்கள் இவரையும் விட்டு வைக்காமல் கடவுள் அந்தஸ்தை கொடுத்து விட்டனர்.
//இப்போது முக்கிய விடயம் என்னவென்றால் நீங்கள் பிற மதங்களுடன் சகிப்புத் தன்மையைக் கடைப் பிடிக்க தயாராக இருக்கிறீர்களா என்பதுதான்.//
• "எவர் (முஸ்லிமல்லாத) உடன்படிக்கை செய்து கொண்டிருக்கின்ற ஒருவருக்கு அநீதியிழைக்கின்றாரோ அல்லது அவரின் உரிமையை குறைக்கின்றாரோ அலலது அவரது சக்திக்கு மேல் அவருக்கு பொறுப்புக்களை சுமத்துகின்றாரோ அல்லது அவரின் மனவிருப்பின்றி அவரிடம் இருந்து ஏதேனுமொன்றை பெறுகின்றாரோ அவருக்கு எதிராக மறுமையில் நான் வாதிடுபவனாக இருப்பேன்". (ஆதாரம்: அபூதாவூத்)
• "எவர் உடன்படிக்கை செய்து வாழும் ஒரு முஸ்லிமல்லாத ஒருவரைக் கொலை செய்கிறாரோ அவர் சுவனத்தின் வாடையைக் கூட நுகரமாட்டார்". (ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி)
• "எவர் முஸ்லிமல்லாத சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை இம்சிக்கின்றாரோ நான் அவரது எதிரியாவேன். நான் எவரது எதிரியாக இருக்கின்றேனோ மறுமையில் அவருக்கெதிராக வாதிடுபவனாக இருப்பேன்". (ஆதாரம்: தாரீகு பக்தாத் – அல்கதீபுல் பக்தாதி)
ஒரு இஸ்லாமியனுக்கு மற்ற சமயத்தவரோடு சகிப்புத் தன்மையோடு நடந்து கொள்ள இஸ்லாமே வழி வகுக்கிறது. இந்த கேள்விகளை மோடி வகையறாக்களிடம் சென்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்.
திருச்சிக்காரன்!
//அவரவர் விரும்பும் முறையில் வணங்கிக் கொள்ளலாம். இந்துக்கள் பூ , கனி, நீர் , இலை ஆகியவற்றை படைத்து வழிபடுகின்றனர். கத்தோலிக்கர் மெழுகு வர்த்தி ஏற்றுகின்றனர். புத்தர்கள் சில வகையான வழிபாடுகளையும் , தியானங்களையும் செய்கின்றனர். இஸ்லாமியரின் வழிபாட்டு முறை உங்களுக்கு தெரிந்ததே. அவரவர்கள் அவரவர் விரும்பும் வழியில் வணங்கிக் கொள்ளுகின்றனர். //
கண்ணால் காண முடியாதது யாரோ அவனே படைத்த இறைவன் அவனே கண்களுக்கு பார்வை சக்தியைத் தருகிறான். அவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் கண் கொண்டு பார்க்கும் பொருட்கள் யாவும் கடவுள் இல்லை.
-கேனோ உபநிஷத் (1 : 6)
‘யார் அசம்பூதியை(இயற்கையை) வணங்குகின்றார்களோ அவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள்’-அதர்வண வேதம் 40:9
இவ்வளவு தெளிவாக இந்து மதம் சொல்லும் போது 'ஏன் சிலைகளை வணங்கக் கூடாது என்று கேட்கிறீர்கள். ஒன்று இந்த வேதங்களை நாங்கள் நம்பவில்லை என்று நீங்கள் அறிவிக்க வேண்டும். அல்லது நாங்கள் பின் பற்றும் இந்த சிலை வணக்கம் எங்களின் சொந்த கண்டு பிடிப்பே. இதற்கும் இந்து மதத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவிக்க வெண்டும்.
//இதிலே மற்றவருக்கு என்ன கோராமை? இன்னொருவரின் மென்னியைப் பிடித்து அப்படி வணங்கக் கூடாது, இப்படித்தான் வணக்க வேண்டும் என கட்டளைகள் போட்டு நிர்ப்பந்தப் படுத்த வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்!//
இஸ்லாமிய கிறித்தவ யூத நம்பிக்கையின்படியும், அறிவியல் அறிஞர்களின் கூற்றுபடியும் ஆதியில் இருவர் உருவாகி(ஆதாம், ஏவாள்) பின்னர் பல்கி பெருகியவர்களே நீங்களும் நானும். அந்த வகையில் நாம் அனைவரும் சகோதரர்கள் ஆகிறோம். இவற்றில் ஒரு சாரார் சிறந்த வழிபாட்டில் திளைத்திருக்க மற்றொரு சாரார் சிலைகளை வணங்கிக் கொண்டு தீண்டாமையையும் கற்பித்துக் கொண்டு இருந்தால் அந்த சகோதரனுக்கு எடுத்து சொல்ல வேண்டியது மற்றொரு சகோதரனின் கடமையல்லவா? இந்து மதம் இதை எல்லாம் தடை செய்துள்ளது என்பதை விளக்குவதும் ஒரு சகோதரனின் கடமை அல்லவா?
எனது அரபி நண்பர் ஒரு நாள் என்னிடம் அரபு தினசரி ஒன்றை கொண்டு வந்து காண்பித்தார். அதில் ஒரு இந்து நண்பர் எலியின் சிலையை மிகவும் பய பக்தியோடு வணங்கிக் கொண்டிருந்ததை காண்பித்து 'உங்கள் நாட்டை காப்பாற்றும் கடவுள் இவர்தானா?' என்று கேட்டவுடன் ஏதேதோ சொல்லி அவனை சமாளிக்க வேண்டியதாகி விட்டது. அறிவியலில் நமது நாடு எவ்வளவோ முன்னேற்றம் அடைந்து விட்டது. வல்லரசாக மாறவும் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் நமக்கு இறைக் கொள்கையில் மாத்திரம் ஏன் இந்த பின்னடைவு? என்று நான் ஆதங்கப்படக் கூடாதா?
திருச்சிக்காரன்!
//சிலை வணக்கம் செய்யக் கூடாது என்று எந்த வேதத்திலாவது போட்டிருக்கிறதா?
சிலை வணக்கம் செய்வது தவறு என்று எந்த வேதத்திலாவது புரோஹிபிட் செய்து இருப்பதாக உங்களால் காட்ட முடியுமா?
சிலை வணக்கம் செய்தால் நரகத்துக்க்ப் போவாய் என்று எந்த வேதத்திலாவது சொல்லி இருக்கிறதா? சரியாக மேற்கோள் காட்டி சொல்லுங்கள். //
'நீங்கள் வணங்கும் இந்த சிலைகள் என்ன?' என்று ஆபிரஹாம் தமது தந்தையிடமும் தமது சமுதாயத்திடமும் கேட்டபோது 'எங்கள் முன்னொர்கள் இவற்றை வணங்கக் கண்டோம' என்று அவர்கள் கூறினர். 'நீங்களும் உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்' என்று அவர் கூறினார்.-குர்ஆன் 21:54
தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை- யோவான் 1:18
'யா இக் இத் முஸ்திஇ'-'வணக்கத்துக்கு உரியவன் இறைவன் ஒருவனே'
'ஏகம் ஏவம் அத்விதியம்' 'அவன் ஒருவனே! அவனுக்கு யாதொரு இணையுமில்லை'
-ரிக் வேதம் 6:45:16
'அவன் ஆதி தேவன்: பிறவாதவன்'
-பகவத் கீதை,10:12
'அவன் மஹாத்மா. காணுதற்க்கறியவன்'
-பகவத் கீதை 7:19
'அர்ஜூனா! சென்று விட்டனவும் நிகழ்வனவும்இனி வருவனவும் ஆகிய பொருள்களை நான் அறிவேன். ஆனால் என்னை எவனும் அறியான்'
-பகவத் கீதை 7:24,25,26
'யார் பெரும்பாவியாக, பொய்யனாக, நம்பிக்கையற்றவனாக இருந்தானோ அவன் நரகத்தில் இருப்பான்'
-ரிக் வேதம் 4:5:5
இறைவன் ஒருவன்தான்: அவனுக்கு இணையாக யாரையும் வணங்கக் கூடாது. அப்படி இந்த கட்டளைக்கு மாற்றமாக வேறெதனையும் வணங்கினால் நரகில் கொண்ட செல்லப்படுவான் என்று அனைத்து வேதங்களுமே சொல்வதை ஆதாரத்தோடு சொல்லியிருக்கிறேன்.
இதற்கு மாற்றாக சிலையை வணங்கும் நீங்கள் அதற்கான ஆதாரத்தை இந்து மத வேதங்களிலிருந்து எடுத்துத் தாருங்கள்.
நண்பர் சிவனடியான்!
//ஐயா சுவன பிரியன் அவர்களே,
நீங்கள் மேற்கோளில் கொடுத்திருக்கும் கீதையில் கீதையின் ஆசிரியன் கிருஷ்ணனே தான் கடவுள் என்பதை தெளிவாகவே கூறிகொள்கிறான்//
உங்கள் வாதப்படி கிருஷ்ணன்தான் அந்த ஏக இறைவன் என்று வைத்துக் கொண்டாலும் சிலை வணக்கத்திற்கு இங்கு எங்கு ஆதாரம் இருக்கிறது?
கிருஷ்ணனைத் தவிர்த்து ஏன் இத்தனைக் கடவுள்கள் பல வடிவங்களில் தோன்றின? இது எந்த ஆதாரத்தின் அடிப்படையில்?.
///ஏகம் ஏவம் அத்விதியம்’ ‘அவன் ஒருவனே! அவனுக்கு யாதொரு இணையுமில்லை’
-ரிக் வேதம் 6:45:16 //////
அவன் ஒருவன் என்உள்ளதே ஒழிய உருவம் இல்லாதவன் என்று இல்லையே..//
இறைவன் ஒருவன்தான் என்பதை நீங்கள் ஒத்துக் கொண்டால் நமது நாட்டில் சாதிக்கு ஒரு கடவுள் என்றும் ஊருக்கு ஒரு கடவுள் என்றும் உருவானதை எப்படி பார்க்கிறீர்கள்?
அடுத்து இறைவன் ஒருவன்தான் என்பதை ஒத்துக் கொண்டால் முருகன்,பிள்ளையார்,சரஸ்வதி, வெங்கடாஜலபதி, ...... என்று பல உருவங்களை எப்படிக் கொடுக்கலாம்? இறைவன் இப்படிப் பட்ட உருவங்களில்தான் இருந்தான் என்று எந்த வேதத்தின் மூலம் தெரிந்து கொண்டீர்கள்?
/////யார் பெரும்பாவியாக, பொய்யனாக, நம்பிக்கையற்றவனாக இருந்தானோ அவன் நரகத்தில் இருப்பான்’
-ரிக் வேதம் 4:5:5 //////
இதில் எங்கே சிலைவழிபாடு கூடாது என்று உள்ளது//
இறைவன் தான் ஒருவன்தான் என்றும் தனக்கு இணையாக யாரையும் வணங்கக் கூடாது என்றும் இயற்கைப் பொருட்களுக்கும் இறை அந்தஸ்தைக் கொடுக்கக் கூடாது என்றும் இந்து மத வேதங்களில் சொல்லியிருக்க அதில் நம்பிக்கையற்றவனாக பல தெய்வங்களை வணங்க ஆரம்பித்தால் அது இறைவனின் கட்டளைக்கு மாறு செய்ததாகாதா?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
சகோ நல்ல படிப்பினை பெறக்கூடிய பதிவு
பகிர்வுக்கு நன்றி
வஅலைக்கும் சலாம்!
வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி சகோ.ஹைதர் அலி.
Post a Comment