Followers

Saturday, March 19, 2011

விக்கி லீக்ஸும் பி.ஜே.பியும்!




புதுதில்லி, மார்ச் 19- இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பாஜக இரட்டை நிலையை கடைபிடித்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

இத்தகவலை பிடிஐ செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் சுலபமாக அரசியல் லாபம் பெறலாம் என்பதால் அதை பகிரங்கமாக எதிர்ப்பதாகவும், ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்தால் எந்தவகையிலும் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு பாதிப்பு வராது என்றும் அக்கட்சி மேலிடம் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.

ஆனால், இத்தகவலை பாஜக உறுதியாக மறுத்துள்ளது. "பாஜகவின் கடும் எதிர்ப்பு காரணமாக தான், காங்கிரஸ் அரசு அணுசக்தி பொறுப்பு மசோதாவில் 16 திருத்தங்களை செய்தது." என்று பாஜக தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சேஷாத்ரி சாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் பிராகாஷ் ஜாவெத்கர் கூறுகையில், "இந்திய-அமெரிக்க உறவால் பாஜக கவலைப்படவில்லை. ஆனால், அணுசக்தி கொள்கையில் இருநாட்டு அரசுகளும் மேலும் நெருங்கிவர வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்பினோம்" என்றார்.

இதனிடையே, விக்கிலீக்ஸ் தகவல் குறித்து பாஜக விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.


-நன்றி தினமணி 19-03-2011

10 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோ.சுவனப்பிரியன்,
கார்ட்டூன் கருத்து சூடு.
ஆனால், இப்படி பேன்ட் சட்டை எல்லாம் போட்டு பண்பாடுள்ள நாகரிக மனிதனாக காட்டியுள்ளீர்களே..! ஹிந்துத்வா தீவிரவாதியினருக்கே உரிய "டிரேட் மார்க் அடையாளங்கள்" மிஸ்ஸிங்...

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
நன்றி தோழரே

கார்ட்டூன் அருமை

கார்ட்டூன் என்பது மொத்த கருத்தையும் ஒரே படத்தில் சொல்லக்கூடிய சிறந்த ஊடக ஆயுதம் இத்துறையில் இன்னும் கூர்மையடையுங்கள்

எனக்கு தெரிந்து கார்ட்ட்டூன் வரையக்கூடிய இன்னொரு நண்பரும் இருக்கிறார் உங்களுக்கும் தெரியுமேன்று நினைக்கிறேன்

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ.ஆஷிக்!

//கார்ட்டூன் கருத்து சூடு.
ஆனால், இப்படி பேன்ட் சட்டை எல்லாம் போட்டு பண்பாடுள்ள நாகரிக மனிதனாக காட்டியுள்ளீர்களே..! //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

அலைக்கும் சலாம்!சகோ. ஹைதர் அலி

//கார்ட்டூன் என்பது மொத்த கருத்தையும் ஒரே படத்தில் சொல்லக்கூடிய சிறந்த ஊடக ஆயுதம் இத்துறையில் இன்னும் கூர்மையடையுங்கள்//

மதனுடைய கார்ட்டூன்களைப் பார்த்துதான் கார்ட்டூன் வரையும் ஆர்வமே வந்தது. இன்னும் சிறப்பாக தர முயற்ச்சிக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சக்தி கல்வி மையம் said...

எல்லாரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தானே?

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், நீங்கள் கீழே கொடுத்திருக்கும் செய்தியினை விடக் கார்ட்டூன் நிறையக் கதைகளைப் பேசுகிறது.

suvanappiriyan said...

//எல்லாரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தானே?//

நூற்றுக்கு நூறு உண்மை! இந்து மதத்தில் ஆன்மீகத்தை வளர்ப்பவர்கள் குன்றக்குடி அடிகளார், கிருபானந்த வாரியார் போன்ற பெரியவர்களை இன்றும் நான் மதிக்கிறேன். ஆனால் ஆட்சியில் அமர வேண்டும் என்ற பதவி சுகத்துக்காக மதப் போர்வை போர்த்திக் கொண்டு சூழ்ச்சிகள் செய்து வரும் பி.ஜே.பி போன்ற மட்டைகள் வளருவது இந்தியாவின் ஒற்றுமைக்கே ஆபத்து. இதை பெரும்பான்மையான இந்து நண்பர்கள் நன்றாக புரிந்தே வைத்திருக்கிறார்கள்.

வருகைக்கும் கருத்தக்கும் நன்றி திரு கருன்!

suvanappiriyan said...

வாங்க நிரூபன்!

//வணக்கம் சகோதரம், நீங்கள் கீழே கொடுத்திருக்கும் செய்தியினை விடக் கார்ட்டூன் நிறையக் கதைகளைப் பேசுகிறது.//

நன்றி சகோதரரே! ஈழம் சம்பந்தமான உங்கள் பதிவை படித்து மிகவும் வேதனைப்பட்டேன். இனியாவது உங்கள் அனைவரின் வாழ்விலும் வசந்தம் வீசட்டும்.

அடுத்து வயிறு சரியாகிவிட்டதா? :-) நண்பர்கள் கொடுத்த மருத்துவ முறைகளை செயல்படுத்தியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

//பி.ஜே.பி போன்ற மட்டைகள் வளருவது இந்தியாவின் ஒற்றுமைக்கே ஆபத்து.//

முஸ்லிம் லீக் என்ற மட்டையையும் சேர்த்திருக்கலாம்.

suvanappiriyan said...

//முஸ்லிம் லீக் என்ற மட்டையையும் சேர்த்திருக்கலாம்.//

முஸ்லிம் லீக்கும் தேர்தலில் நிற்பதால் பல மட்டைகளோடு சேரும் என்றாலும் பி.ஜே.பி யோடு ஒப்பிட முடியாது. ஏனெனில் முஸ்லீக் இந்து கிறித்தவ மக்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்ததாகவோ, கலவரங்களை உண்டு பண்ணியதாகவோ நாம் எங்குமே பார்க்க முடியாது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் கொடுக்கும் மூன்று சீட்டுகளுக்காக அவர்களை வாழ்த்தி பேசி விசுவாசத்தை காட்டிக் கொண்டு தேர்தலுக்குப் பிறகு அவரவர் வேலையைப் பார்க்க சென்று விடுவார்கள்.

ஆனால் பி.ஜே.பி யோ இந்து முஸ்லிம் கலவரங்களை திட்டம் போட்டு உருவாக்கி அதனால் அரசியல் லாபம் அடைய பார்க்கிறது. மாலேகான், கோத்ரா, மக்கா மஸ்ஜித், ரயிலில் குண்டு வைத்தது, பாராளுமன்ற தாக்குதல் என்று திட்டம் போட்டு சூழ்ச்சி செய்து முஸ்லிம்களை சிக்கவைக்கிறது. முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் என்ற எண்ணத்தை தினமலர் போன்ற பி.ஜே.பி ஆதரவு பத்திரிக்கைகள் திட்டம் போட்டு பரப்பி வருகின்றன.

சிறுபான்மை மக்களை கலவரத்தில் தாக்கி விட்டு அதை சிறுபான்மையினரே செய்தார்கள் என்று முஸ்லிம்களையே கைது செய்தது நமது காவல்துறை. கர்கரே டெஹல்கா போன்ற நியாயவான்களால் இன்று உண்மை ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக்கிறது.

முஸ்லிம்களுக்கு எதிராக இந்துத்வாவாதிகள் செய்யும் இது போன்ற சூழ்ச்சிகள் இந்துத்வாவாதிகளுக்கு எந்த வெற்றியும் தரப் போவதில்லை என்பது வேறு விஷயம்.